31 January 2011

பிரபா ஒயின்ஷாப் – 31012011


வணக்கம் மக்களே...

பலத்த எதிர்(பார்)ப்புகளுக்கு மத்தியில் பிரபா ஒயின்ஷாப் தனது பயணத்தை துவங்குகிறது.

டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்கான குரல் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆளாளுக்கு தங்கள் பங்குக்கு டுவீட்டுகளை பொழிந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவற்றில் நான் ரசித்த டுவீட்டுக்கள் சில...

ஐந்து இலட்சமும் வேலையும் தர நாங்க தயார்.கடலில் மீன் பிடிக்க அரசியல்வாதிகள் தயாரா.? #TNfisherman

>>> ஆஸ்திரேலியாவில் மேல்தட்டு மாணவன் அடிபட்டால் அலறும் அரசே, ஆங்கில செய்தி சேனல்களே!! மீனவன் மடிகையில் எதை புடுங்கி கொண்டு இருந்தீர்கள்!!

"பொறுத்தது போதும்! பொங்கி எழு!" இது யார் எழுதிய வசனம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? #tnfisherman

ஸ்பெக்ட்ரம் மறந்துவிட்டது # இப்ப தெரியுதா எதுக்கு இவனுகள எதுக்கு கொல்லச் சொன்னேன்னு - கருணாநிதி # ஐடியா உபயம் நீரா ராடியா #tnfisherman

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் நுங்கம்பாக்கம் விஜய் டிவி அலுவலகம் முன்பு ஒரு சாலை விபத்து. சைக்கிளில் வந்த ஒரு நடுத்தர வயது ஆண், வேகமாக வந்த ஒரு லாரி டயரின் அடியில் சிக்கினார். பலத்த காயத்தோடும், வழியும் ரத்ததோடும் அடிபட்ட நபர் எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் சொன்ன வாக்கியம், ஆள் அவுட்டா.... அரை மயக்க நிலையில், அடிபட்ட நிலையில் உள்ள ஒருவரின் காதில் இது போன்ற வார்த்தைகள் தான் விழ வேண்டுமா...? இப்படி ஒரு வார்த்தையை கேட்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா...? உதவ முடியவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமே...

ரசிக்க வைத்த புகைப்படம்:
தீபாவளி இரவில் சாட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட இந்தியாவின் புகைப்படம்...

வலைப்பூ அறிமுகம்: கொக்கரக்கோ...
மயிலாடுதுறையை சேர்ந்த பதிவர். இந்த மாதம் தான் பதிவுலகிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது வரை பன்னிரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார். அரசியலை நையாண்டி செய்து பதிவெழுதுவதில் வல்லவர். சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும் என்று நக்கலடித்து அருமையாக ஒரு பதிவு எழுதியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் சென்று பாருங்கள்.

எனக்குப் பிடித்த பாடல்:
போன வாரம் முழுவதும் முனுமுனக்க வைத்த பாடல் ஆடுகளம் படத்திலிருந்து ஒத்தச் சொல்லால... எனும் பாடல். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் ஹிட் என்பது தெரிந்த விஷயமே. இப்போது பாடலை படமாக்கிய விதத்திற்காக மேலும் ரசிக்கப்படுகிறது. கும்மாங்குத்தையும் நாட்டுப்புற இசையையும் கலந்த ஒரு பாடல். எப்பேற்பட்ட மனிதனாக இருந்தாலும் ஒரு ஆட்டு ஆட்டிவைக்கும் இசை. எனது வகுப்பில் படிக்கும் நவநாகரிக இளைஞர்கள் இருவர் இந்தப்பாடலை பார்த்தபிறகு லுங்கி (கைலி) வாங்க முன்வந்திருக்கிறார்கள். எதற்கா...? வரிந்துகட்டிக்கொண்டு ஆடத்தான்...

இந்த வார பிலாசபி:
“Take lot of time to improve yourself… Then, obviously there will be no time to criticize others…”
-          Kamalhasan

இந்த வார எஸ்.எம்.எஸ்.:
ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் வருதுன்னு தெரியுமா...?
:
:
:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை ஜப்பான் சென்றிருந்தபோது தனது மொபைலை வைப்ரேஷனில் வைத்தபடி அங்கேயே விட்டுட்டு வந்துட்டாராம்...

நீதி: ச்சும்மா அதிருதுல்ல....



இந்த வார காணொளி:
கட்டழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையை பற்றி பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைகழக மாணவர்கள் செய்த ஒரு சிறிய நகைச்சுவையான ஆராய்ச்சி...


18+
தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா உட்பட மற்றும் பல சகோதரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2011

மீனவர்களுக்காக குரல் கொடுப்போம்...!!!


எல்லாருக்கும் வரும் ஒரு சந்தேகம். ஒரு வலைப்பதிவனால் என்ன செய்துவிட முடியுமென்று. ஒரு வலைப்பதிவனால் முடியாததாக இருக்கலாம். பத்து பதிவர்கள், நூறு பதிவர்கள், ஆயிரம் பதிவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால்... முடியாதது எதுவுமில்லை. டுவிட்டர், பேஸ்புக், ஆர்குட் என்று இணையவெளி எங்கும் குரல் கொடுத்தால்... கோட்டை கதவுகளும் திறக்கும்.

டுவிட்டரில் ஒரு உணர்வுத்தீ...
இந்த இணைப்பை கிளிக்கி தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளுக்குப் பின்னால் #tnfisherman #indianfisherman #worldfisherman இவற்றை காப்பி பேஸ்ட் செய்து அனுப்புங்கள்.

உதாரணம்:
-          மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman
-          we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சில இணையதளங்கள்:

இது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான எழுதப்படும் தமிழ் இடுகைகள் http://savetnfisherman.blogspot.com என்ற வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு:
பேஸ்புக் பயனாளர்கள் உங்களுடைய ஆதரவை தெரிவிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்:-

உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலைதளத்தில் இணைக்க விரும்பினால் [இந்த வலைப்பூவின் வலதுபுறம் போல] Dashboard --> design --> page template --> add a gadget --> HTML/Java script என்ற விட்ஜெட்டில் கோடிங்கை சேர்த்து சேமிக்கவும்.

கோடிங்குக்கு:
http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html




ஒரு விண்ணப்பம்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்.

உணர்விருந்தும் என்னிடம் வலைப்பூவோ, டுவிட்டர் பேஸ்புக் கணக்குகளோ இல்லையே என்று வருந்துபவர்களுக்காக கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:-
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி
ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடுங்கள்.
இதை வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்போரும் செய்யலாம்.

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.
நீங்கள் உண்மையிலேயே தமிழுணர்வு கொண்ட பதிவராக இருந்தால், உங்கள் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் என்றால் தயவு செய்து தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக உங்கள் தளத்தில் ஒரு இடுகை எழுதுங்கள்.

எனக்கு சென்சிட்டிவான விஷயங்களைப் பற்றி எழுதத் தெரியாதே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் மற்றவர்கள் பதிவில் இருக்கும் நல்ல கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுங்கள்.

Post Comment

28 January 2011

விண்ணைத்தாண்டி வருவாயா – 500 Days of Summer


வணக்கம் மக்களே...

நீண்ட நாட்களுக்கு முன்பே பதிவிறக்கிய படம். கடந்த வாரக்கடைசியில்தான் முழுமையாக பார்க்க முடிந்தது. இந்த படத்தின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கோடைக்காலத்தில் ஒரு 500 நாட்கள் என்று நானே முட்டாள்த்தனமாக தமிழ்ப்படுத்தி வைத்திருந்தேன். அதெப்படி 500 நாட்கள் தொடர்ந்து கோடைக்காலம் வரும் என்றுகூட யோசிக்கவில்லை. படம் பார்த்தபிறகுதான் சம்மர் என்பது நாயகியின் கேரக்டர் பெயர் என்று புரிந்துக்கொண்டேன். இன்னொரு விஷயம், இந்தப்படம் நம்ம கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து உருவப்பட்ட கதை. அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க. நம்மாளுங்க தான் அங்க இருந்து சுட்டு தமிழ்ப்படுத்தி இருக்காங்க.

-          Title: (500) Days of Summer
-          TagLine: This is not a love story. This is a story about love.
-          Country: United States
-          Language: English
-          Year: 2009
-          Genre: Romance, Drama
-          Cast: Joseph Gordon-Levitt, Zooey Deschanel, Minka Kelly
-          Director: Marc Webb
-          Producer: Mason Novick, Jessica Tuchinsky, Mark Waters, Steven J. Wolfe
-          Music: Mychael Danna, Rob Simonsen
-          Cinematographer: Eric Steelberg
-          Editor: Alan Edward Bell
-          Length: 95 minutes

டாம் ஒரு ஆர்க்கிடக்ட், எனினும் வாழ்த்து அட்டைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அவனது அலுவலக பாஸின் பி.ஏவாக சேருகிறாள் சம்மர் எனும் இளம்பெண். டாமுக்கும் சம்மருக்கும் இடையே நடக்கும் 500 நாள் நிகழ்வுகளே கதை.

சந்தித்த சில நாட்களுக்குப் பின்பு ஒரு லிப்டுக்குள் முதல்முறையாக இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவளுக்கு பிடித்த அதே இசைக்கலைஞன் அவனுக்கும் பிடித்திருப்பதாக கூறுகிறாள். இரண்டு சந்திப்புகள் கடந்தபிறகு டாம், சம்மரை காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் அவளிடம் சொல்வதில் தயக்கம். பிறிதொரு நாளில் நடைபெறும் பாட்டுக்கச்சேரி பார்ட்டியில் டாமின் நண்பன் சம்மரிடம் அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் என்று போதையில் உளறிக் கொட்டுகிறான். அதன்பின் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது. அப்படி ஒருநாள் அவர்கள் நெருக்கமாக இருக்கும் வேளையில், தனக்கு காதல், கல்யாணம் போன்ற உறவுகளில் ஈடுபாடு இல்லையென்று சம்மர் கூறுகிறாள். தானொரு சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவதை குறிப்பிடுகிறார். அவர்கள் காதல் எனும் சொல்லை பரிமாறிக்கொள்ளவில்லை, இருப்பினும் காதலிக்கிறார்கள்.

நாட்கள் கடந்தபின்னர், அவர்களுக்குள் முதல்முறையாக வாக்குவாதம் ஏற்படுகிறது. சம்மர், காதல் சிறைக்குளிருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாகிறாள். கூடவே வேலையையும் துறக்கிறாள். அதன்பின்பு டாம் சந்திக்கும் மனப்போரட்டங்கள் சொல்லப்படுகிறது. மீண்டும் சம்மரை சந்திக்கும்போது அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது கண்டு டாம் துடிக்கிறான். அவனும் அவனது வாழ்த்து அட்டை நிறுவன வேலையை துறந்து ஆர்கிட்டக்டாக பணிபுரிய சில அலுவலகங்களில் விண்ணப்பிக்கிறான். 488வது நாளில் இருவரும் கடைசியாக அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். இருவரும் தத்தம் மீது தவறு இருப்பதை உணருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிந்துக்கொள்ளுணர்வு ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துவிட்டு இறுதியாக விடை பெறுகிறார்கள். 500வது நாளில் ஒரு நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள செல்லும் டாம், அங்கே அவளுக்கு போட்டியாக வந்திருக்கும் மற்றொரு பெண்ணை சந்திக்கிறான். அவளது பெயரை கேட்க, அவள் “Autumn” என்று சொல்வதுடன் படம் நிறைவடைகிறது. (அடுத்த சீசன் ஆரம்பிச்சிடுச்சாம்).

சாட்டிலைட் அவார்ட் உட்பட சில விருதுகளை வாங்கிய இந்த திரைப்படம் மேலும் பல விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. 2009 வெளிவந்த தலைசிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்று. அதே ஆண்டில் வெளிவந்த படத்தின் இசைத்தகடும் விற்பனையில் பல சாதனைகளை புரிந்தது.

உனக்கு எல்லாப்படத்திலும் செகன்ட் ஹீரோயின் தான் பிடிக்குமாடான்னு திட்டாதீங்க. அது என்னவோ தெரியல, இந்தப்படத்திலும் இறுதிக் காட்சியில் மட்டும் தலை காட்டும் மிங்கா கெல்லி எனும் நடிகை (தமிழில் சமந்தா நடித்தது போன்ற கேரக்டர்) அநியாயத்துக்கு மனதை கொள்ளையடித்தார். அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கலாம்.

படத்தின் சுவாரஸ்யங்கள் சில...
- டாமும் அவரது தங்கையும் வீடியோ கேமில் டென்னிஸ் விளையாடும்போது ஜாய்ஸ்டிக்கை டென்னிஸ் மட்டையைப் போல சுழற்றிக்கொண்டு விளையாடுவது.
- ஆங்காங்கே ஏற்ற இறக்கங்கள் காட்டும் கதாப்பாத்திரங்களின் டயலாக் டெலிவரி பிரமிக்க வைத்தது.
- நாயகன் பெண்களின் மட்டமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி கமென்ட்டடிக்கும் காட்சி.
- காதலிக்கும் போது காதலியிடம் பிடிப்பதாக நாயகன் கூறும் அதே விஷயங்களை அவளை விட்டு பிரிந்தபின்னர் வெறுக்க ஆரம்பிப்பது.
- எல்லாவற்றையும் விட முக்கியமாக, நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு நாயகியை நாயகன் சந்திக்கும்போது அவன் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருப்பது. (மேலே படம் பார்க்க...)

பதிவிறக்க லிங்குகள்:
டோரன்ட் லிங்க்: (500) Days of Summer DVD RIP
டைரக்ட் லிங்க்: (500) Days of Summer DVD RIP (400MB)
(இரண்டு பதிப்புகளிலும் சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுபோல மென்மையான காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கொண்ட உலகப்படங்கள் பார்க்கும்போது ஏனோ, மனதில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இத்தகைய படங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் சில இருக்கின்றன. மேலை நாட்டவர்கள் வாழ்க்கையை எவ்வளவு ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. காதலில் தோற்றால் வாழ்க்கையையே தொலைத்ததாக கருதுவது, தற்கொலை செய்து கொள்வது, ஏமாற்றிய காதலியை பழி வாங்குவது இதெல்லாம் நம்மூரிலும் நம்மூர் சினிமாக்களில் மட்டும்தான் போல...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2011

இனி, எனது சினி விமர்சனங்கள்...?


வணக்கம் மக்களே...

ஆரம்பித்த புதிதில் இருந்து இன்றுவரை எனது வலைப்பூவை அதிகம் ஆக்கிரமித்திருப்பது சினிமா சம்பந்தப்பட்ட இடுகைகள் தான். பார்த்த படங்களுக்கு விமர்சனம் எழுதிய காலம் கடந்து இப்போது விமர்சனங்கள் எழுதுவதற்காகவே கூட படங்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படி பார்த்ததுதான் சுறா, வ குவாட்டர் கட்டிங் போன்ற மொக்கைப்படங்கள். இந்நிலையில் பதிவுலகில் சினிமா விமர்சனங்கள் பற்றியும் அதை எழுதுபவர்கள் பற்றியும் நிறைய எதிர்வினைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இதை முன்னிலைப்படுத்தும் சிலரது வாதம் பெரும்பாலும் முட்டாள்த்தனமாகவே இருந்தாலும் அவர்களின் சில கருத்துக்களில் நியாயம் இருப்பதால் அவற்றையும் பரிசீலிக்க நினைக்கிறேன்.

எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றிவிழா கொண்டாடப்போவதோ அல்லது தோல்வியைத் தழுவப்போவதோ இல்லை. இருப்பினும் எந்தவொரு படத்தையும் இனி ஜஸ்ட் லைக் தட் குப்பை என்று சொல்லிவிட வேண்டாமென்று நினைக்கிறேன். படத்தின் நிறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு குறைகளை மேலோட்டமாக அல்லது நாசூக்காக குறிப்பிடலாம் என்பது என் எண்ணம்.

அடுத்ததாக, படத்தின் கதையை போட்டு உடைப்பது. இதுகுறித்து நிறைய பேர் என்னிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இனி படத்தின் கதைச்சுருக்கத்தை மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். அல்லது விரிவான கதையை வேறொரு கலர் எழுத்துக்களில் வெளியிட்டு கதையை படிக்க விரும்பாதவர்கள் அந்த குறிப்பிட்ட கலர் எழுத்துக்களை படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கலாம் என விரும்புகிறேன்.

சில பேர், ஏன் சினிமா பின்னாடியே ஓடுகிறீர்கள், நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு எதைப்பற்றி எழுதத்தெரியுமோ எதைப்பற்றி எழுத விருப்பமோ அதைப்பற்றி மட்டுமே என்னால் எழுத முடியும். அந்த சிலரின் பேச்சைக் கேட்டு அரசியல் பற்றி எழுதப்போக அப்புறம் உனக்கெல்லாம் என்ன தெரியும்னு எழுத வந்துட்ட...ன்னு அவங்களே அனானியா வந்து அசிங்கமா திட்டுவாங்க.

தவிர, நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல. அதை எழுதலாமே என்று ஆலோசனை தெரிவிக்க இங்கே அனானிக்கும் உரிமை உண்டு என்ற போதிலும் அதைப்பற்றி தான் எழுத வேண்டுமென்று அதிகாரம் பண்ண யாருக்கும் உரிமையில்லை.

சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டுமென்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் பதிவுகள் எழுத வேண்டுமா...? ஓட்டு போடும் அனைவருக்கும் அரசியல் பேச எப்படி உரிமை இருக்கிறதோ அதுபோல சினிமா பார்க்கும் அனைவருக்கும் சினிமா பற்றி எழுத உரிமையுண்டு.

சில படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது 18+ போடுவது அவசியமாகிப் போகிறது. அது, மனதிற்கு தவறாகவே தோன்றினாலும் எது எனது எல்லை என்று உணர்ந்து வைத்திருக்கிறேன். தவிர அத்தகைய பதிவுகள் எதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள் எதையும் பயன்படுத்தாமல் என்னால் முடிந்தவரை நாகரிகமான வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கிறேன் என்பது எனது முந்தய 18+ திரை விமர்சனங்களை படித்தவர்களுக்குத் தெரியும்.

ஸோ, இனி என்னுடைய திரை விமர்சனங்கள் கடந்த வருட விமர்சனங்களில் இருந்து கொஞ்சம் மாறுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்னூட்டவியாதிகள்

ஆக்சுவல்லி, இதை தனி இடுகையாக வெளியிட விரும்பினேன். ஆனால் தேவையில்லாமல் பிரச்சனைகளை வளர்க்க விரும்பவில்லை. ஒருசிலர் அவர்களுடைய தளத்தில் கமென்ட் மாடரேஷன் வைத்துக்கொண்டு அல்லது பின்னூட்டங்களை அவ்வப்போது டெலீட் செய்துக்கொண்டு அவர்களுக்கு குண்டி குளிரும் பின்னூட்டங்களை மட்டும் பிரசுரித்துவிட்டு மற்றவற்றை நீக்கி விடுகின்றனர். கடந்த வாரம் ஒரு வலைப்பூவின் பின்னூட்டத்தில் வாதம் செய்து ஒரு கட்டத்தில் அந்த பதிவர் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை. இப்போது அவரது தளத்திற்கு செல்லும் மூன்றாம் தரப்பினருக்கு, அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் ஏதோ பதில் சொல்ல முடியாமல் ஓடி வந்துவிட்டதாக ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஒருவேளை நான் அவருக்கு எதிர்பதிவு போட்டு பப்ளிகுட்டி கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறார் போல. அது நடக்காது பாஸ்...

அப்புறம், ஆமாம் சாமிகள். இங்கே 18+, இன்னபிற இளமை துள்ளும் பதிவுகளை வெளியிடும் போது சூப்பர், அருமை, நல்ல பதிவுன்னு சொல்ற ஒரு கூட்டம் யாராவது எதிர்வினை போட்டா அங்கபோய் நல்லா கேட்டீங்க, செருப்பால அடிச்சீங்க, நெத்தியடின்னு பின்னூட்டம் போடுறாங்க. மிகவும் கேவலமான ஒரு பண்பாடு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், உங்களுக்கு எனது பதிவுகள் பிடிக்கலை என்றால் இங்கேயே பின்னூட்டம் மூலமாக உங்கள் நிஜ எண்ணங்களை குறிப்பிடுங்கள். அடையாளம் காட்ட விருப்பமில்லை என்றால் அனானியாக பின்னூட்டமிடுங்கள்.
அதெல்லாம் நேர விரயம் என்று நினைத்தால் இனிமே என்னோட வலைப்பூவுக்கு வராதீங்க. நான் உங்க தளத்திற்கு வருகிறேன் என்று பதில் மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் இங்குவந்து போலியாக பின்னூட்டமிட வேண்டாம். அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ரெண்டுபக்கமும் சொம்பு அடிச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 January 2011

ப்ளாக்கர் vs வேர்ட்பிரஸ் – ஒரு ஒப்பீடு


வணக்கம் மக்களே...

இலவச வலைப்பூ சேவையில் முன்னணி வகிப்பது ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ். இந்த இரண்டில் எது சிறந்தது என்று அறிந்துக்கொள்ள ஒரு சிறிய தேடல். வேர்ட்பிரஸில் இலவச, மற்றும் கட்டண சேவை இரண்டும் இருந்தாலும் இலவச சேவையை மட்டுமே இங்கே ப்ளாக்கரோடு ஒப்பிட்டிருக்கிறேன்.

ஏன் பெரும்பாலானவர்கள் ப்ளாக்கர் சேவையில் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள்...?
·          இலவசம் + எளிமையானது.
·          கூகிள் என்ற மதிப்புமிக்க நிறுவனத்தின் சேவை.
·          ஆட் சென்ஸ், பிகாஸா, பிரண்ட் கனெக்ட், யூடியூப் போன்ற இணைந்த சேவைகள்.
·          எண்ணிலடங்கா இலவச விட்ஜெட்டுகள்.
·          எத்தனை வலைப்பூ வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள்ளலாம். இலவசமாக.
·          குறிச்சொற்களுக்கு ஏற்ப கூகிள் தேடுபொறியில் உங்கள் வலைப்பூ முன்னிலைப்படுத்துப்படும்.

ஏன் வேர்ட்பிரஸ்...?
·          இலவசம். எளிமையானது எனினும் ப்ளாக்கர் அளவிற்கு எளிமையானது அல்ல.
·          தனி வலைத்தளமாக மாற்றும் செய்முறை சுலபமானது.
·          பிற சேவையில் இருந்து வலைப்பூவை ஏற்றுமதி செய்வது எளிது.
·          ஏகப்பட்ட டெம்ப்ளேட்ஸ்.
·          சேவையைப் பற்றி விசாலமான உதவி வழங்க: en.forums.wordpress.com/

வேர்ட்பிரஸ் சேவையை பயன்படுத்துவது கடினமா...?
·          கொஞ்சம் கடினம்தான். ஆனால் பழகினால் இரண்டே நாட்களில் எளிமையாகிவிடும்.

புதிதாக வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறீர்களா...?
முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக வலைப்பூ ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள்.
·          பொழுதுபோக்கிற்காகவும், பர்சனல் விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காகவும் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ப்ளாக்கர் சேவையே போதுமானது. எளிமையானதும் கூட.
·          டெக்னிக்கலான விஷயங்களை எழுதுவும், தனி வலைத்தளமாக மாற்ற திட்டம் வைத்திருந்தாலும் வேர்ட்பிரஸ் சேவையை தேர்ந்தெடுக்கவும்.

ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறும் வசதி இருக்கிறதா...?
·          ப்ளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸ் சேவைக்கு மாறுவது சாத்தியம். ஆனால் வேர்ட்பிரஸ் சேவையில் இருந்து ப்ளாக்கருக்கு மாறுவது சாத்தியமில்லை.

பிற இலவச வலைப்பூ சேவைகள்...?
·          TypePad
·          Yahoo 360
·          Live Journal
·          BlogSome
இன்னும் ஏராளமான இலவச சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன.

இப்போதைக்கு இவ்வளவுதான். வேற ஏதாவது இருந்தால் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறேன்.

டிஸ்கி 1: இன்றைக்கு வேறொரு பதிவு போடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் இன்றைக்கு குடியரசு தினம் என்பது நினைவுக்கு வந்தது. எப்படியும் வழக்கம்போல எல்லாரும் டெம்ப்ளேட் வாழ்த்துக்களே கூறுவார்கள் என்பதால் அந்தப்பதிவை பதுக்கிவிட்டு அரைகுறையாக எழுதி வைத்திருந்த இந்தப்பதிவை வெளியிடுகிறேன். குறைகள் இருப்பின் மன்னிக்க...

டிஸ்கி 2: (குடியரசு தின சிறப்பு டிஸ்கி) யாராவது குடியரசு தின வாழ்துக்கள்ன்னு பின்னூட்டம் போட விரும்பினால் இந்தப்பதிவை படிச்சிட்டு அப்புறமா வந்து சந்தோஷமா சொல்லுங்க...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 January 2011

கோவில் நடித்தவருக்கு கோவில் கட்டலாமா...?


வணக்கம் மக்களே...

சென்ற வாரத்தில் ஒருநாள் இன்ட்லி புகைப்படங்கள் தளத்தில் மேயந்துக்கொன்டிருந்தேன். அடிக்கடி ஒரு அருமையாக முகம் தென்படவே யாரென்று ஆராய்ச்சியை ஆரம்பிக்கலானேன். அம்மணி பெயர், கார்த்திகா முன்னாள் கனவுக்கன்னி முதல் மரியாதை ராதாவோட மகளாம். செம அழகா இருக்காங்கல்ல... (பிரபா... வாய்ல இருந்து வர்ற வாட்டர்பால்ஸை க்ளோஸ் பண்ணு...)

கொஞ்சம் காதல் சந்தியா சாயல். அதுல அப்படியே ஜோதிகா மிக்சிங். ஆனா சந்தியா, ஜோதிகா ரெண்டு பேரை விட இவங்கதான் ரொம்ப க்யூட். (அப்படின்னா, ஜோதிகா இடம் காலியா...?)

கடந்த வருடம் ஜோஷ் என்ற படத்தின் மூலமாக தெலுங்கு பட உலகில் அறிமுகமாகி இருக்காங்க. அந்தப் படத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக நடிச்சிருக்காங்க. படம் சுமாரா தான் ஓடுச்சு என்றாலும் நாயகி செம ஹிட். (அடுத்த வருட கனவுக்கன்னி லிஸ்டுல துண்டை போட்டுட்டாங்க...)

இந்த வருடம் சந்தோஷ் சிவன் டைரக்ஷனில் மகர மஞ்சுன்னு ஒரு மலையாள சரித்திரப்படத்தில் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை பார்த்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் மேடமை ரொம்ப புகழ்ந்து தள்ளினாராம். (அப்படியே ஹாலிவுடுக்கு தள்ளிட்டு போயிடாம பாத்துக்கணும் :()

இப்போ, தமிழ்ல ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கோ படத்தில் இவங்க தான் ஹீரோயின். இந்தப்படம் ஏதோ பத்திரிக்கையாளர் பற்றிய கதை என்றும் State of Play என்ற படத்தின் உருவல் என்றும் பேசிக்கிறாங்க. (நமக்கு அதுவா முக்கியம்...?)

இப்படியாக வந்த வேகத்தில் மூன்று தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகமாகிட்டாங்க. அநேகமாக அடுத்த அட்டாக் மும்பைக்குத்தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மறுபடி ஒரு மும்பை தாக்குதல் வேண்டாம் மேடம்)

ஒரு வருடத்தில் கண்டபடி இருபது படங்களை நடித்து தள்ளுவதை விட ஒரே ஒரு நல்ல படத்தில் நடித்தாலே போதும் என்பது கார்த்திகாவின் கொள்கை. (அட, நீங்க நடிக்கவே தேவை இல்ல... நீங்க வந்தா மட்டும் போதும்... நீங்க வந்தா மட்டும் போதும்...)


இவங்கள பார்த்தா என்ன வயசு இருக்கும்னு தோணுது. +2 ரிசல்ட்டை பேப்பரில் பார்த்த கையோடு நேரா சினிமாவுல நடிக்க வந்துட்டாங்களாம். இப்போ 17 வயசு. Date of Birth: 27.6.1992. (information is wealth).

லண்டனில் எக்கனாமிக்ஸ் படிக்கலாமா...? சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனஜ்மென்ட் படிக்கலாமா...? என்று யோசித்துக் கொண்டவரை சினிமா சிகப்பு கம்பள வரவேற்பை கொடுத்திருக்கிறது. (குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பாயல போல...)


கார்த்திகா முறையாக நாட்டியம் பயின்றவராம். மேலும் பெயிண்டிங் இவங்களோட ஹாபியாம். (எனக்கு இனிமே உங்க படங்களை பாக்குறது தான் ஹாபியே...)

போகிற போக்கில், அம்மா ராதா பெரியம்மா அம்பிகாவை எல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஓவர்டேக் பண்ணிடுவாங்க போல. (அப்படின்னா இனி முதல் மரியாதை இவங்களுக்குத்தான்...)

டிஸ்கி 1: படங்களை பெரிதாக்கிப் பார்க்க தனி விண்டோவில் ஒப்பன் செய்யவும்.

டிஸ்கி 2: என்னடா இவன் நடிகையை பத்தியெல்லாம் சிலாகிச்சு எழுதுறானேன்னு யாரும் காரித்துப்பாதீங்க... யூத்துன்னா அப்படித்தான் இருக்கும்... பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க... அப்படி இல்லைன்னா யாராவது PhD வாங்கினவங்களோட வலைப்பூவை போய் படிங்க...
இப்படிக்கு,
இவருக்கு கோவில் கட்டலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்
அகில உலக கார்த்திகா ரசிகர் மன்றம்
(விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன)

Post Comment

24 January 2011

பிரபா ஒயின்ஷாப் – திறப்புவிழா

வணக்கம் மக்களே...

கடந்தவாரம், பிரபா ஒயின்ஷாப் விரைவில்ன்னு போட்டு ஒரு பில்டப் கொடுத்திருந்தேனே அதை உடைக்கிற நேரம் வந்தாச்சு. எஸ், நானும் பல்சுவைப்பதிவு எழுதப்போறேன். அவ்வப்போது, மனதில் தோன்றும் ட்விட்டர்த்தனமான கருத்துக்களை எல்லாம் தனிப்பதிவாக விவரிக்க முடியவில்லை. எனவே, இனி அவைகளை வெளிப்படுத்த இது ஒரு நல்ல தளமாக அமையும். இந்த முடிவை செய்தவுடன் பிரபல பதிவர்கள் பலரது பல்சுவைப் பதிவுகளை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களது வலைப்பூக்களில் வண்டாக மொய்த்து ஆங்காங்கே கொஞ்சம் சுட்டு எனக்கான டெம்ப்ளேட் ஒன்றினை உருவாக்க முயற்சித்தேன்.

அதுபற்றி, விரிவாக கூறுவதற்கு முன்பு நான் டைட்டில் பிடித்த கதையை சொல்லியாக வேண்டும். பல்சுவைப்பதிவுக்கு தலைப்பு சரக்கு, சரக்கு நிமித்தமாக இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம். இதற்காக ரொம்ப யோசித்து, காக்டெயில் பக்கங்கள் அல்லது காக்டெயில் தத்துபித்துவங்கள் என்ற ஒரு தலைப்பை நீண்ட நாட்களுக்கு முன்னரே (கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு) யோசித்து வைத்திருந்தேன். அதன்பின்புதான் பதிவர் கும்மாச்சி ஏற்கனவே காக்டெயில் தலைப்பை வைத்திருப்பதைக் கண்டேன். மனமொடிந்து அவரிடம் கூட கொஞ்சம் புலம்பினேன். மறுபடி, எனது சிந்தனை சிறகடிக்க, சில தலைப்புகள் எட்டிப்பார்த்தன. அவை சாராயக்கடை கேபிளின் சாப்பாட்டுக்கடை சாயலில், அப்புறம் காக்டெயில் அண்ட் மாக்டெயில் ஜாக்கியின் சான்ட்வேஜ் அண்ட் நான்வெஜ் ஸ்டைலில். சரி, இதையெல்லாம் கடைசி ஆப்ஷனாக வைத்துக்கொள்ளலாம் என்று நம்மகிட்ட கிளாஸ்மேட் (Glassmate) மாதிரி பழகும் விக்கி உலகம் வெங்கட்டிடம் கருத்து கேட்டேன். அவர் சரக்கு சந்தானம் என்ற உன்னதமான ஒரு தலைப்பை தந்தார். எனினும் அந்த தலைப்பு எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. காரணம், தலைப்பில் "இங்கே எல்லாம் கிடைக்கும்" என்ற ஒரு அர்த்தமே வரவில்லையே. மீண்டும் சிந்தனைக்கடலில் மூழ்கியபோது தான் வடிவேலு நடித்த காமெடி காட்சி மனதிற்கு வந்தது. என்ன காமெடியா...? அதாங்க அல்லோ... பிரபா ஒயின்ஷாப் ஓனரா...? கடை எப்ப சார் திறப்பீங்க...?. அப்படியே என்னோட பெயருக்கும் அது மேட்சிங்கா இருக்க அதையே தேர்வு செய்துவிட்டேன். எனிவே, ரொம்ப தேங்க்ஸ் வெங்கட்.

அடுத்ததா ஒரு லோகோ ரெடி பண்ணனும்னு ப்ரியமுடன் வசந்துக்கு ப்ரியமாக ஒரு மெயில் அனுப்பினேன். அவரும் பிரபா ஒயின்ஸ்ன்னு ரெண்டு லோகோ தயார் பண்ணி கொடுக்க, அவசர அவசரமாக அந்த வடிவேல் காமெடியை யூடியூபில் பார்த்து அது பிரபா ஒயின்ஸ் இல்லைங்க... பிரபா ஒயின்ஷாப் என்று அவருக்கு பதில் அனுப்பினேன். மேலும் லோகொவில் கண்டிப்பாக இந்த பாட்டில்தான் வேண்டுமென அடம்பிடித்து இந்த லோகோவை செய்து வாங்கினேன். வசந்த்ஜி, உங்களுக்கும் எனது நன்றிகள்.

இந்தக்கடையில் என்னென்ன சரக்கு வைக்கலாம் என்பது அடுத்தக்கட்ட திட்டம். முன்னாடி சொன்னமாதிரி பிரபலங்களின் வலைப்பூக்களை பார்த்து சில விஷயங்களை சேகரித்தேன்.
இந்த வார தத்துவம்: தத்துப்பித்துவங்கள்ன்னு பேர் வச்சிட்டு தத்துவம் சொல்லாமலா...? வாரம் ஏதாவதொரு வரலாற்று நாயகரின் மேற்கோள்கள், தத்துவங்கள் இங்கே கூறப்படும்.
எனக்குப் பிடித்த பாடல்: ஒரு பாடலை கேட்டால் அன்றைய தினம் முழுவதும் அந்தப் பாடலையே உதடுகள் முனுமுனுத்துக்கொண்டிருக்குமே. அந்த மாதிரி, அந்த வாரம் முழுவதிலும் முனுமுனுக்க வைத்த பாடலைப் பற்றி சில வரிகள்.
வலைப்பூ அறிமுகம்: நான் ஏராளமான வலைப்பூக்களை பின்தொடர்ந்து வரும் விஷயம் அறிந்ததே. சமயங்களில் பிரமாதமாக எழுதும் பதிவர்கள் கூட வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள். இங்கே அவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
புகைப்படம்: எங்கேயோ பார்த்து ரசித்து அடடா சொல்ல வைத்த புகைப்படங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். வாரம் ஒரு புகைப்படத்தினை இணைக்கிறேன்.
ஜோக்: எத்தனையோ எஸ்.எம்.எஸ்களை தாண்டிவந்தாலும் சில எஸ்.எம்.எஸ்கள் மட்டுமே எனது இன்பாக்ஸில் தாங்கும் பாக்கியத்தை பெறும். அத்தகைய குறுந்தகவல்களில் இருந்து ஏதாவதொரு ஜோக்.
18+ சமாச்சாரம்: நான் கண்டிப்பாக 18+ மேட்டர்களுக்கு எதிரானவன் அல்ல. இருப்பினும் அந்த மாதிரி ஜோக்குகளுக்கு எதை எல்லையாக எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. ஸோ, நோ ஏ ஜோக்ஸ். அதற்குப் பதிலாக ஜாக்கியின் ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட் ஸ்டைலில் நடிகையின் படத்தை இணைக்க விரும்புகிறேன், அதற்கான வரைமுறைகள் எனக்குத் தெரியும் என்பதால். இருப்பினும், முடிவு உங்கள் கையில்.
குறும்படம் / ட்ரெயிலர்: பொதுவாக வலைப்பூவில் வீடியோவை இணைப்பது எனக்குப் பிடிக்காது. எனினும், அதையும் ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பதால் அதுபற்றி பரிசீலிக்கிறேன்.

அப்படியே, ரோட்டோரம் பார்த்த குழாயடி சண்டை, பஸ்சில் சைட் அடித்த பிகர், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமான்னு நிறைய எட்டிப் பார்க்கும். எல்லாத்தையும் பொறுத்துக்கோங்க. நான் மேலே குறிப்பிட்டுள்ள உப-தலைப்புகளை தவிர்த்து வேறு என்னென்ன செய்திகளைத் தரலாம் என்று உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.


டிஸ்கி 1: புதிர்ப்போட்டியில் சரியான விடை சொன்னவர்களுக்கு இரண்டு மின்-புத்தகங்களை அனுப்பி வைத்திருக்கிறேன்... இன்னும் சிலர் அவர்களது மெயில் ஐடிக்களை குறிப்பிடவில்லை... குறிப்பிட்டால் பரிசு வந்து சேரும்...


டிஸ்கி 2: மற்றவர்கள் வலைப்பூக்களை படிக்க dashboard அவ்வளவு தோதாக இல்லை என்ற காரணத்தினால் எனது பர்சனல் பயன்பாட்டிற்காக இந்த பக்கத்தை உருவாக்கினேன்... உங்களுக்கும் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2011

நமீதாவும் மைக்கேல் க்ரைட்டனும் பின்னே நானும்...

வணக்கம் மக்களே...

எனது நண்பன் ஒருவன் அடிக்கடி தன்னிடம் அருமையான சினிமாக்கதை ஒன்று இருப்பதாகவும் ஒரு ப்ரொட்யூசர் மட்டும் கிடைத்துவிட்டால் தானொரு தமிழ்நாட்டு ஸ்பீல்ஸ்பெர்க் என்று பயங்கரமாக பீட்டர் விடுவான். (என் நண்பனாச்சே...). அப்படி என்னதான்டா கதை என்று அவனிடம் திருவாய் மலர்ந்தால் அது மைக்கேல் க்ரைட்டன் நாவல்களுக்கு இணையான ஒரு கதைடா தமிழ்நாட்டுல எவனாலும் அப்படி எல்லாம் யோசிக்க முடியாது என்று இஷ்டத்துக்கு அள்ளிவிடுவான். ஆனால் கதை என்னவென்று கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டான். பயபுள்ள அடிக்கடி மைக்கேல் க்ரைட்டன் பெயரை பயன்படுத்தவே, அவரது கதை ஏதோவொன்றை உருவியிருக்கிறான் என்று புரிந்துக்கொண்டு மைக்கேல் க்ரைட்டனை கூகிளினேன்.

சுருங்கச் சொல்லவேண்டுமென்றால் இவர் ஒரு அமெரிக்காவின் சுஜாதா. ஐசக் அசிமோ வகையறா. சயின்ஸ் பிக்ஷன் நாவல்களுக்கு பெயர் போனவர். த்ரில்லர் நாவல்கள் எழுதுவதிலும் கில்லாடி. இதையெல்லாம் விட எளிதாக புரியும் வண்ணம் சொல்லவேண்டுமென்றால் ஜுராசிக் பார்க் படமும் அதன் தொடர்ச்சியான எடுக்கப்பட்ட தி லாஸ்ட் வேர்ல்ட் படமும் இவரது நாவல்களை தழுவி எடுக்கப்பட்டதே. இது தவிர்த்து இவரது மேலும் சில நாவல்கள் கூட திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நாவல்கள் சிலவற்றின் கதைச்சுருக்கத்தை படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருந்தன. எனவே புத்தக சந்தையில் இவரது நாவல்களை வாங்க விரும்பியது பற்றி ஏற்கனவே எனது புத்தகக் காட்சி அறிமுகப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அப்படியே புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தபோது எங்கெங்கெல்லாம் ஆங்கில புத்தகக் கடைகள் தென்படுகின்றதோ அங்கெல்லாம் ஐசக் அசிமோவையும் மைக்கேல் க்ரைட்டனையும் தேடினேன். அப்புறம் கொஞ்சம் சேத்தன் பகத். சேத்தன் பகத் மட்டும் கொஞ்சம் மலிவாகவும் அதிக கடைகளிலும் கிடைத்தார். ஆனால் அசிமோவும் க்ரைட்டனும் ரொம்ப காஸ்ட்லி. மனதிற்கு பிடித்த புத்தகங்கள் கையில் கிடைத்தும் பணம் கொடுத்த வாங்க முடியாத நிலை. அந்தக் கடையை விட்டு நகரவும் முடியவில்லை. சிறிது நேரம் அங்கேயே க்ரைட்டனை வாசம் பிடித்தபடி நின்றிருந்தேன். பின்னர் வேறு வழியில்லாமல் கடை எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு திரும்பினேன். நண்பர் ஒருவர் பழைய புத்தகங்களை எல்லாம் வாங்க சரியான இடம் பிளாட்பாரம் மட்டும்தான் என்று ஆருடம் சொன்னார்.

மறுவாரம் தேவைகேற்ப காந்தி தாத்தாவை எடுத்துக்கொண்டு புத்தக சந்தைக்கு எதிரில் அமைந்திருந்த பழைய புத்தகக்கடை வரிசைக்கு சென்றேன். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பிளாட்பாரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். புத்தகங்களின் கண்டிஷனை பொறுத்து ரூ.10, 20, 30, 50 என்று ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலை. கூச்சப்படாமல் குப்புறப்படுத்து தேடியதில் 50ரூபாய் கடையில் தோண்டத் தோண்ட க்ரைட்டன் வந்துக்கொண்டே இருந்தார். 6 புத்தகங்கள் கிடைத்தன. அதிலிரண்டு ஏற்கனவே படமாக பார்த்த ஜுராசிக் பார்க் மற்றும் தி லாஸ்ட் வேர்ல்ட் என்பதால் அவற்றை தவிர்த்துவிட்டேன். மீதமுள்ள நான்கு புத்தகங்களையும் சேர்த்து 150 ரூபாய்க்கு கேட்டுப் பார்த்தேன். கடைக்காரன் பிடிக்கொடுக்காமல் பேசவே டிஸ்குளோஷரை தியாகம் செய்துவிட்டு Rising Sun, TimeLine மற்றும் Next ஆகிய பிற மூன்று புத்தகங்களையும் வாங்கினேன்.

Rising Sun (1992):
ஜப்பானிய நிறுவனமான நாகமோதோ கார்ப்பரேஷன் தனது அமெரிக்க தலைமை அலுவலகத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பல மாடிக்கட்டிடத்தின் 45வது மாடியில் நிறுவி திறப்புவிழா நடத்துகிறது. அதே சமயம் 46வது மாடியில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். அந்தக் கொலையை பற்றி துப்பறிவதே மீதிக்கதை. நாவல் முழுவதிலும் அமெரிக்க ஜப்பான் கலாச்சார வேறுபாடுகளைப் பற்றி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

TimeLine (1999):
இது ஒரு ஆயிரத்தில் ஒருவன் டைப் சயின்ஸ் பிக்ஷன் கம் பீரியட் நாவல். பதினான்காம் நூற்றாண்டில் தொலைந்து போன ஒருவனைத் தேடி சில இருபதாம் நூற்றாண்டு மனிதர்கள் டைம் ட்ராவல் செய்கிறார்கள். போன இடத்தில் அவர்களுக்கு கிடைக்கும் விசித்திர அனுபவங்களைப் பற்றிய கதை. இந்த நாவலில் டைம் ட்ராவல் ஒரு முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Next (2006):
இது ஒரு டெக்னோ த்ரில்லர் நாவல். க்ரைட்டன் உயிரோடிருக்கும்போது கடைசியாக வெளிவந்த நாவல் இதுதான். உயிரியல் ஆராய்ச்சியைப் பற்றிய கதை. அரசாங்கமும் பிற தனியார் நிறுவனங்களும் பல கோடி ரூபாய் செலவு செய்து அந்த உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளே மீதிக்கதை.

அப்பாடா, நான் வாங்கிய மூன்று நாவல்களைப் பற்றியும் சன் டிவி ஹாலிவுட் கொண்டாட்ட விளம்பரத்தில் விவரிப்பது போல விவரித்துவிட்டேன். என்னது, எதற்காக தலைப்பில் நமீதாவா...? கொஞ்சம் பொறுங்க சொல்கிறேன்...

நம்ம டாகுடர் நடிப்பில் வெளிவந்த அருமையான திரைப்படம் அழகிய தமிழ்மகன். அந்தப்படத்தில் ட்ரெயினில் டிக்கட் இல்லாமல் ஏறும் விஜய் நம்ம ஜாவா சுந்தரேசனை கொக்குமாக்காக மாட்டிவிட்டுவிட்டு நமீதாவுடன் பயணம் செய்வார். அப்போ, நடிகையர் திலகம் நமீதா கைகளில் ஒரு ஆங்கில நாவல் இருக்க, விஜய் அந்த நாவலின் 104வது பக்கத்தில் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் இருப்பதாகச் சொல்லி நமீதாவை உரச அப்படியே ஹம்மிங் எல்லாம் முடிஞ்சு பென்னி தயாள் குரலில் நீ மர்லின் மன்றோ க்ளோனிங்கா... என்ற பாடல் ஆரம்பிக்கும். அந்தக் காட்சியில் நமீதாவும் விஜய்யும் முட்டிக்கொண்டு படித்த அந்த புத்தகம்தான் மைக்கேல் க்ரைட்டனின் NEXT. (பேச்சு பேச்சா இருக்கணும்... கல்லை கீழே போடுங்க பாஸ்...)

ஆனா, சத்தியமா சொல்றேன். நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை. அட, நம்புங்கப்பா...

டிஸ்கி 1: புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய முதல் இடுகை இது. இதே வரிசையில் இன்னும் சில இடுகைகள் வர இருக்கிறது. உஷார்...

டிஸ்கி 2: ஒருவேளை வாங்கிய க்ரைட்டன் நாவல்களை முழுமையாக படித்து முடித்தால் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் தனித்தனி பதிவு போடுவேன். உஷார் X 3 TIMES...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment