அன்புள்ள வலைப்பூவிற்கு,
நம்மூரில் மழை வேண்டி கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்வது போல ஜிம்பாப்வே நாட்டில் ஒரு சடங்கு. அதாவது ஆண்களின் விந்துவினை வைத்து சடங்கு செய்தால் வாழ்க்கையில் வெற்றி கிட்டுமென்றும் பணம் கொழிக்கும் என்றும் ஒரு நம்பிக்கை. கடந்த வாரம் காரில் சென்றுக்கொண்டிருந்த அப்பாவி இளைஞர் ஒருவரை மூன்று இளம்பெண்கள் மடக்கி அவருடன் வலுக்கட்டாயமாக உறவுகொண்டு அவரது விந்தினை ஆணுறையில் சேமித்துக்கொண்டு சென்றார்களாம். மேலே சொன்னது ஒரு சாம்பிள் சம்பவம்தான். ஜிம்பாப்வேயில் ஆங்காங்கே அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றதாம். உச்சக்கட்டமாக ஒருவர் தான் கற்பழிக்கப்பட்டதை தன் மனைவியிடம் சொல்ல, அவர் விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டாராம். ம்ஹூம் வெண்ணிற ஆடை மூர்த்தி தலைமையில் ஆ.பா.ச (ஆண்கள் பாதுகாப்பு சங்கம்) ஆரம்ப விழா ஒன்னு செய்யணும்.
கடந்த வாரத்தில் ஒருநாள் நைட்டு மிட்நைட் மசாலா பார்த்துவிட்டு மிகவும் தாமதமாக தூங்கியதன் விளைவாக காலையில் கண் எரிச்சல் அதிகமாக இருந்தது. அவ்வப்போது கைகளை கண்களில் வைத்து கலவரம் செய்ய அலுவலகத்திற்குள் நுழையும்போது கண்கள் கேப்டனாக மாறியிருந்தது. அவ்வளவுதான்... உள்ளே சென்றதும் ஆளாளுக்கு என்னை பார்க்காதே, என்கிட்ட வராதேன்னு தவிக்கிறார்கள். எனக்கு மெட்ராஸ் ஐ-யாம் அது அவங்களுக்கும் பரவிடுமாம். அடப்பதறுகளா, அம்பேத்கர் கூட இப்படியொரு தீண்டாமையை கடந்து வந்திருக்கமாட்டார். நான் சத்தியம் செய்யாத குறையாக எனக்கு மெட்ராஸ் ஐ இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை. மேனேஜர் தெய்வாதீனமாக, தம்பி நீங்க தயவு செய்து வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொன்னார். அதுக்கு மேல நம்ம என்ன செய்ய முடியும்... கேட்காமல் கிடைத்தது ஒருநாள் விடுமுறை...!
சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், மங்காத்தாடா, பரதேசித்தமிழன், நாய் சேகர் நீங்கள்லாம் யாருங்க...??? நீங்க யாரா வேணும்ன்னா இருந்துட்டு போங்க. நீங்க பெயர் போட்டு எழுதுறதும் போடாம எழுதுறதும் உங்களோட தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிடுவதற்கில்லை. ஆனால் யாருடன் சாட்டுக்கு போனாலும் “உண்மையைச் சொல்லு... நீ தானே மங்காத்தா... நீ தானே புரட்சிக்காரன்...” என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். யோவ் நான் இல்லைய்யா நம்புங்கன்னு சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை. அவனவன் பத்து பதினஞ்சு ப்ளாக் வச்சிட்டு சந்தோஷமா இருக்கான்... ஒரே ஒரு ப்ளாக்கை வச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... அய்யுய்யுய்யுய்யோ....!!!
இந்தியாவே ஆரவாரமாக இருந்திருக்கும். ஷேவாக் நூற்றியைம்பது ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். நிச்சயம் இருநூறை தாண்டி விடுவார் என்றே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கோ உள்ளூர ஒரு எண்ணம் சச்சின் சாதனை முறியடிக்கப் படக்கூடாதென்று. கடைசியில் அது நடந்தேவிட்டது. ப்ச்... வடை போச்சே...!
கொலவெறி பாடலின் கொலவெறித்தனமான வெற்றியை அடுத்து அந்த பாடலுக்கு எப்படி நடனமைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம் படக்குழுவினர். எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் ஜஸ்ட் லைக் தட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்லிடுவாங்க ரசிகர்கள். பாடலின் மீதுள்ள எதிர்பார்ப்பு. அநேகமாக ஏதோவொரு பண்பலையின் வாயிலாக கொலவெறி பாடலுக்கு நடனம் அமைக்கும் போட்டி நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்.
ஜொள்ளு:
 |
கண்ணுல காதல் கேமரா...! கொண்டு வந்தாளே சூப்பரா...!! |
ட்வீட் எடு கொண்டாடு:
தமிழ் இன்னமும் வாழ்வது ஊடகங்களில்தான் என்று கொலைவெறி பாடல் விவாதத்தில் சொன்னார் புதிய தலைமுறையின் தொகுப்பாளர்.
நல்லவன்னு பேர் எடுக்க 2 எளியவழிகள்! காமம் பிடிச்சாலும், பிடிக்காத மாதிரியும்,பக்தி பிடிக்கலைனாலும் பிடிச்ச மாதிரியும் நடிக்கணும்!
தக்காளி சுட்டே புடுவேன் -சிம்பு .. பாவிப்பய சொன்னமாதிரியே செஞ்சுத் தொலைச்சிட்டானே #osthi
நாம் சைட் அடிப்பது தெரிஞ்சதும் அழகான பொண்ணுங்க வெட்கப்படுது ...சுமாரான பொண்ணுங்க பந்தா காமிக்குது .. #கன்பீசிங் கேள்ஸ்
சேவாக் டெஸ்ட்டுல 319, ஒன் டேல 219.. #இதுக்கு காரணம் சச்சின் 19 வயசுல மொதல் செஞ்சுரி அடிச்சது தான் #இன்னும் கெளப்பலயா?
நுழைந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பதிவர். அதற்குள் உண்மைத்தமிழன் போன்ற சீனியர் பதிவரின் கடைக்கண் பார்வை கிடைத்திருப்பது இவருக்கு ஸ்பெஷல் பூச்செண்டு. தமிழ்நாட்டில் பிறந்து பணி நிமித்தமாக குஜாராத்தில் வசித்துவரும் இவருடைய சுய புராணத்தை படித்துவிட்டு தொடருங்கள். நல்லவேளை நாம குஜராத்ல பிறக்கல என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார். அடுத்ததாக அகமதாபாத்தில் தன்னுடைய சிலிர்ப்பான அனுபவங்களை தொடராகவும் எழுதி வருகிறார்.
கேட்ட பாடல்: கொலைகாரா...!
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கொலகாரா... கொலகாரி... என்று கொலவெறி ஏதுமில்லாத ஒரு ரம்மியமான பாடல் கடந்த ஒருவாரமாக என்னை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
பாடல்வரிகளில் மிகவும் நுட்பமாக காமத்துப்பால் கலக்கப்பட்டிருப்பது அருமை. “பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பிச்செல்லும் மூடா... முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா...”, “ஆச வச்ச பொம்பளைக்கு அஞ்சுநாளா தூக்கமில்ல... மீச வச்ச ஆம்பிளைக்கு மெத்த வாங்க நேரமில்லை...” போன்ற வரிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கா.பால் சாம்பிள்கள். வீடியோவுடன் பார்க்கும்போது அஞ்சலி இருப்பது இன்னும் ஸ்பெஷல். ஆனால் கரண் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ்... அடங்கப்பா மனசுக்குள்ள பலே பாண்டியா சிவாஜி கணேசன்னு நெனப்பு...!
பார்த்த காணொளி:
திரும்பத் திரும்ப தலபுராணம் பாடுவது எனக்கே கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இந்த காணொளியை பார்த்த மாத்திரத்தில் நிச்சயம் இதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. BTW, காணொளியில் தோன்றும் விமர்சகர் யாரென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ரசித்த புகைப்படம்:
 |
| பசங்க வாழ்க்கையை காலி பண்ணும் அந்த ஒரு பார்வை...! |
பொன்மொழி:
ஒருபோதும் தவறு செய்யாதவன், ஒன்றும் செய்ய லாயக்கில்லாதவன்.
தத்துபித்துவம்:
Rivers never go reverse...! – வாழ்க்கையைப் போலவே
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு ரஜினி ஜோக்:
ரஜினி ஏன் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் தெரியுமா...?
ஒருமுறை ரஜினிக்கும் அவருடைய மனைவிக்கும் சண்டை வந்ததாம். அதுலயே ரஜினி ஜெயிச்சிட்டாராம்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment