26 December 2009

எனக்கான பரமனைத் தேடி...! - ஒரு முன்னோட்டம்

வணக்கம் மக்களே...

கடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் sujai narendar, sp vijay, ramalingam, raghavendar, eee karthi, c (??? - யாரென்றே கண்டுபிடிக்க இயலவில்லை), dinesh, pon magesh, pavithran, sweetline preethi ஆகியோருக்கு நன்றி. இதற்கும் ஒரு படி மேலே சென்று "மனோரஞ்சிதம்" என்ற கவிதைத்தொகுப்பை பரிசளித்த பட்டுகோட்டை பிரபாகரனுக்கும் நேரடி வார்த்தைகளில் என்னை புகழ்ந்து கூசிப்போக வைத்த அருள் குமரனுக்கும் ஒரு SPECIAL THANKS.

பட்டுகோட்டை பிரபாகரன் பரிசளித்த மனோரஞ்சிதம் கவிதைத்தொகுப்பில் இருந்து ஒரு சூழ்நிலைக் கவிதை... அதாங்க situation song... sorry poem...


என்
எண்ணத்தில்,
புதிய அலை தோன்றி,
என்னை அறியாமல்
எழுதத் தூண்டியது.
எதை எழுதுவது எழுது கோலால்,
எதையாவது எழுது என,
என் கரங்களுக்கு
எண்ணம் கட்டளை இட்டது.
எழுத நினைத்த நொடி முதல்,
எழுதுகிறேன், எழுதுவேன்.
எக்காளமிட்டு அவற்றை
எதிர்ப்போர் எதிர்க்கட்டும்.
ஏன் எனக்காகத் தான்
எழுதுகிறேன் நான்.
என் எழுத்துக்கு,
என்றும் முதல் வாசகன் நானே.
அனைத்தையும் படைத்தவன்
அவற்றை ஏன் படைத்தான்,
அனைத்தும் பார்த்து வியக்க.
அதனால் நானும் படைக்கிறேன்,
அறிவில் உதித்தவற்றை.

எது எப்படியோ... இதுவரைக்கும் எனது வலைப்பூவிற்கு ஒரு FOLLOWER கூட சேரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். உங்களது வசதிக்காகவும் எனது வாய்ப்பிற்காகவும் இந்த வலைப்பூவின் "be a follower" பகுதிக்கான நேரடி இணைப்பு இது:

விருப்பமுள்ளவர்கள் இணையலாம்.

மேலும் என்னுடைய பதிவுகளைப் பற்றிய உடனடியான தகவல்களையும் sms மூலமாக எனது கருத்துகுத்துக்களையும் பெற விரும்புவோர் கீழுள்ள படத்தை கிளிக்கி பதிவு செய்துக்கொள்ளலாம்.

கட்டுரைக்குள் குதிப்பதற்கு முன்னால் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பும் சில கருத்துத்துளிகள்...

எனது கடந்த இரண்டு பதிவுகளை படித்தவர்கள் சிலர், எனது நலம்விரும்பிகள் சிலர், சுற்றம், நட்பு, தாய் - தந்தை உட்பட பலரும் என்னிடம் கேட்கும் million dollar question: "BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்கிறாயே...?". கேள்வி கேட்பவர்களிடம் வறுமையின் நிறம் சிகப்பு கமல் ஸ்டைலில் "bio chemistry படிச்சிட்டு accounts officeல குமாஸ்தா வேலை பாக்குறானே, அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் சம்மந்தம் இருக்கா என்ன...?" என்று குதர்க்கம் பேசியதுண்டு. இருந்தாலும் இதுபற்றி கழிவறையில் அமர்ந்து கன நேரம் சிந்தித்தேன். BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்வது தவறா...? தவறுதான்... BPOவில் பணிபுரிவது அல்ல... BE படித்தது...

கடந்த வாரம் செய்தித்தாளை மேய்ந்துக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்ட ஒரு செய்தி, "கோவில் கருவறைக்குள் வைத்து என்னை கற்பழித்தார்; அர்ச்சகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்". சின்னச்சின்ன தப்புக்கெல்லாம் கூட கண்ணைக் குத்தும் சாமி இதற்கு என்ன செய்தது...?, எதை குத்தியது...? பக்தகேடிகள் யாரவது இதற்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.

சென்ற வாரமே எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. ஆனால் வேட்டைக்காரன் வெளியான அதே துயர நாளில் நமது பதிவையும் வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பலத்த உயிர்சேதம் ஏற்படும் எனக் கருதினேன்.

நண்பர்களைப் பற்றி எழுத முடிவு செய்துவிட்டேன். ஆனால் யாரைப் பற்றி எழுதுவது...? மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை எத்தனையோ நண்பர்களை கடந்திருக்கிறேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது இரட்டைக் குடுமி போட்டுவரும் நிர்மலா இன்னும் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையில் என்னருகில் அமரும் மோனிஷா இன்றளவும் என் நினைவில் இருக்கிறாள். அட பொண்ணுங்க மட்டும் இல்லைங்க பசங்களும்தான். ஓட்டைப்பல் அருண், u.satish, ganesh, raghavan, v.pradeep, c.harish, gopinath, murali rajan etc etc இவ்வாறாக எந்த ஒரு நண்பனையும் நான் மறந்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுத முடியுமா...? கண்டிப்பாக முடியும். ஆனால் அது ஓரிரவில் சாத்தியப்படாத ஒன்று.

எனவே, நண்பர்களுள் சிறந்த நண்பர்கள் சிலரைப் பற்றி மட்டும் எழுதலாமா என்று எண்ணினேன். அது என்ன "சிறந்த நண்பர்கள்" நண்பர்கள் என்றாலே சிறந்தவர்கள் தானே. எனினும் எனது மனத்தைக் கவர்ந்த நண்பர்கள், மனதை பாதித்த நண்பர்கள் பத்து பேரை மட்டும் தேர்வு செய்து TOP 10 பாணியில் கட்டுரை எழுதலாமென்ற எண்ணம் கொண்டு பத்து பேர் கொண்ட அந்த பட்டியலை தயார் செய்தேன்.

தற்போது எனது மனக்குழப்பம் என்னவென்றால் என்னுடைய வலைப்பதிவை படிக்கும், படித்துவிட்டு comments எழுதும் நண்பர்கள் பலரும் அந்த பட்டியலில் கிடையாது. அது மட்டுமில்லாமல் பட்டியலில் இருக்கும் நண்பர்களில் பலரும் எனது வலைப்பதிவை படித்தது கிடையாது.

இத்தகைய சூழ்நிலையில் அந்த பட்டியலை வெளியிட்டால் comments எழுதக்கூடிய அன்பு நண்பர்கள் மனம் புண்படுமே. எனவே அத்தகைய comments எழுதும் நண்பர்களிடம் இருந்து "no objection" கிடைத்தால் மட்டுமே இந்தப் பதிவை எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.

மீண்டும் ஓர் புத்தாண்டு பிறக்கப்போகிறது. வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் என்னென்ன resolutions எடுத்துக்கொள்ளலாம். நான் எடுத்துக்கொள்ளப்போகும் சில resolutions...
1. கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய் படங்களை திரையரங்குகளில் பார்க்கக்கூடாது.
2. யாருடைய பேச்சையுமே கண்மூடித்தனமாக கேட்க கூடாது. (குறிப்பாக பெண்களின் பேச்சை)
3. பெண்ணாசையை அறவே துறக்க வேண்டும்.
4. எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் கடிந்து பேசக்கூடாது, அழைப்பை துண்டிக்க கூடாது.

மேற்கண்ட resolutionகளில் மூன்றாவதை மட்டும் மனஉறுதி கொண்டவர்கள் யாராவது முயற்சி செய்து பாருங்கள். இப்படி உங்களுக்கு ஏதாவது resolutions இருந்தால் அதைப்பற்றி எழுதுங்களேன்.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

28 November 2009

நைட் ஷிப்டில் நாத்திகம்

வணக்கம் மக்களே...

தயவு செய்து என்னை மன்னிக்கவும். என்னுடைய அடுத்த கட்டுரை எனது நண்பர்களுக்காக நண்பர்களை பற்றியதாக இருக்க வேண்டுமெனக் கருதினேன். ஆனால் அதற்குள் எனக்குள் இருக்கும் night shift நினைவுகள் மறைந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாக அவசர அவசரமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.


கடந்த கட்டுரைக்கு தங்களது விலைமதிப்பற்ற கருத்துக்களை தந்த pon mahesh, tyagu மற்றும் சில நண்பர்களுக்கு கோடி நன்றிகள். இந்த முறையும்உங்கள் மேலான ஆதரவையும் பொன்னான கருத்துக்களையும் கொடுக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.
இனி உள்ளே...

september மாதம்... மார்கழி மாதத்தை மன்மத மாதம் என்று சொல்வதுபோல என்னைப்பொறுத்தவரையில் september மாதம் நாத்திக மாதம். இது தந்தைபெரியார் பிறந்த மாதம். இதே மாதத்தில் தான் நானும் பிறந்தேன். ஆனால் நானொரு சிறியார் தான். சில மாதங்கள் முன்பு வரை நான் சிலகாரணங்களுக்காக எனக்குள் நாத்திகத்தை (மன்னிக்கவும்... பகுத்தறிவை) மறைத்து வைத்துக்கொண்டு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திகோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்து வந்தது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது நான் மீண்டும் நானாக...

september 3 2009 - முதன்முறையாக night shift வேலைக்கு கிளம்பினேன். எங்களது batchல் உள்ள trouser boys சிலரும் seniors 8 பேர் மட்டுமே அணியில்இருந்ததால் நான் தனித்தீவாகவே இருந்தேன். சில நாட்கள் வரை seniors அந்நியர்களாகவும் team leader நண்பராகவும் தெரிந்தது. ஆனால் ஓரிருநாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. நானும் பாலும் தயங்கிதயங்கி seniors கூட்டணியில் இணைந்தோம். பின்னர் paul விஷனின் நக்கல்ஸ் தாங்க முடியாமல் கூட்டணியில் இருந்து விலகி மலையாளக்கரையோரம் ஒதுங்கினான்.
இனி நானும் சீனியர்சும்...

seniors என்பதால் சில காலம் வரை அணியில் ஊமையாக மட்டுமே இருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி டீக்கடையில் meeting போடுமளவிற்கு ஒன்றுகூடினோம். ஆனால் அவர்கள் முன்னிலையில் புகை நமக்கு பகை என்றே காட்டிக்கொண்டேன். தினமும் பின்னிரவில் யாருக்கும்தெரியாமல் smoking loungeல் ஒளிந்து ஒளிந்து புகைத்துவிட்டு வருவேன்.

night shift என்பதால் நாங்கள் தூங்கிக்கொண்டோ மந்தமாகவோஇருந்ததில்லை. எப்போதும் அரட்டை தான். இதில் wanted fellows - saravanan and vishan. sense of humourல் சரவணன் வடிவேலுவைப் போலவும் விஷன்விவேக்கை போலவும் செயல்படுவார்கள். சரவணன் அவ்வப்போது உள்ளே புகுந்து வடிவேலு வசனங்களை சொல்லி சிரிக்க வைப்பார். விஷனின் பேச்சு வித்தியாசமானது. அதில் நகைச்சுவையை விட சமூகக்கருத்துகள் அதிகம் அடங்கியிருக்கும்.

காலம் உருண்டோட அவர்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர். அவர்களுக்கருகில் login செய்வதையே விரும்புவேன். sunday அவர்கள்இருவருக்கும் OFF என்பதால் அன்று அலுவலகம் செல்வதையே வெறுப்பேன். குறிப்பாக விஷன் என்னை அதிகம் கவர்ந்தார். அவருக்குள் இருக்கும் நெருப்பை நான் சற்று தாமதமாகவே உணர்ந்தேன்.

vishan - அவரை vision என்று கூட சொல்லலாம். பெரியார்த்தொண்டர், அதற்கும் மேலாக கமல் பக்தர். விஷனின் பேச்சை கேட்பதற்காகவே தினமும் அலுவலகம் சென்றேன். கமல் படங்களின் வசனங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு அவ்வப்போது timing comedy அடிப்பார். (இந்த கட்டுரையை எழுதும் இந்த நாளில் vision பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதை மன மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்)

இப்படியாக அரட்டை அரங்கம் போல செயல்பட்டு வந்த night shift, team leader சுரேஷின் அக்கப்போரால் சலனமடைந்தது. இதன் காரணமாக
மாதக்கடைசியில் pilot batch உறுப்பினர்கள் சிலர் பணியை துறக்க முடிவு செய்தனர். இதை ஒரு பிரிவு உபசார தினமாக கடைபிடிக்க திட்டமிட்டோம். october 7 மாலை t.nagar eagle barல் farewell நடத்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த ஓராண்டுகாலமாக மதுவின் பிடியில் இருந்த நான் இப்போது மதுவை
நாட முடிவு செய்தேன் (பொருள் வேற்றுமையை உணர்ந்து கொள்க). நாங்கள் barல் cheers சொன்னபோது எனக்குள் இருந்த senior - junior வேற்றுமை தொலைந்தது. முதன்முறையாக அவர்கள் முன்னிலையில் புகை பிடித்தேன். உற்சாகம் பொங்கி 5 round தாண்டியபின் அங்கே என்ன நடந்ததென்றே நினைவில்லை. (இந்த இடத்தில் அன்றிரவு என்னை பாதுக்காப்பாக அழைத்துச் சென்ற நண்பர்கள் pon mahesh, ashokக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்).

சரிபாதி seniors கழண்டுகொள்ள vignesh, velan, vivek ஆகியோரை எங்கள்
கூட்டணியில் இணைத்துக்கொண்டோம். எப்படி கூட்டணி கலைந்து மாறினாலும் விஷன் தான் center of attraction. team leader சுரேஷ் அவ்வப்போது எங்கள் கூட்டணிக்கு அலப்பரைகள் கொடுத்ததால் team manager தலைமையில் பஞ்சாயத்தை கூட்டினோம். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சட்டம் அவரை தண்டிக்கவில்லை.

இத்தகைய கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் காரணமாக manager எங்களை day shift
க்கு மாற்ற திட்டம் வகுத்தார். november 1 முதல் day shift என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. night shiftஐ பிரிவதற்கு வருத்தமாக இருந்தாலும் day shiftல் பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று தெரிந்ததும், காய்ந்த மாடுகளாக கம்பங்கொல்லையை மேய தயாரானோம்.

அடுத்த கட்டுரை நிச்சயமாக கண்டிப்பாக எனது நெருங்கிய பள்ளி, கல்லூரி
நண்பர்களை பற்றியது. அதற்கான முன்னோட்டம் தான் தற்போதைய polls.

தலைப்பு: எனக்கான பரமனைத் தேடி...!


என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment