28 July 2013

நஷா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தியாவில் காந்திக்கு பிறகு அரை ஆடை மனிதர் என்று குறிப்பிடக்கூடிய தகுதி உள்ள ஒரே ஆள் – பூனம் பாண்டே ! இந்தியா கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றால் நிர்வாண நடை போடுவேன் என்று அறிக்கை விட்டு பலரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியவர். சொன்னபடி நடக்கவில்லை என்பது வேறு விஷயம், எனினும் அப்படிச் சொல்வதற்கே ஒரு ‘பெரிய மனது’ வேண்டும். (யாருப்பா அது ? இரண்டு வேண்டுமென்று கூட்டத்திலிருந்து சத்தம் போடுவது). அதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தா அடுத்த பதினஞ்சு நிமிஷத்துல குளிக்கப் போறேன்’, ‘இதோ இன்னொரு அரை மணி நேரத்தில் டவுசரை கழட்டப் போறேன்’ என்று சொல்லிச் சொல்லி போட்டோக்களை போட்டுத்தள்ளிய ஸ்ட்ரிப்டீஸிங் ராட்சசி. நிறைய இளைஞர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கியதே அம்மணியை பின்தொடரத்தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பூனம் பாண்டே குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிடப்போவதாக ட்வீட் போட்டால் போதும். டைம்லைனில் இருப்பவர்களுக்கெல்லாம் கை தேயத்தேய வேலை பார்ப்பார்கள் – வேறென்ன, கைகடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதற்கு தான் ! அப்படியெல்லாம் சமகால இளைஞர்களின் மத்தியில் ‘எழுச்சி சிந்தனையை’ தூண்டிய பூனம் பாண்டேயின் முதல் (மற்றும் கடைசி ?) முழுநீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – நஷா !

நஷாவை பார்க்க முற்பட்டபோது முதலில் எனக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமே மிஞ்சியது. ஆதாகப்பட்ட சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்கில் மட்டுமே நஷா வெளியாகியிருக்கிறது என்றால் கோபம் வராதா என்ன ? அதுவும் ஒவ்வொரு காட்சி மட்டும் ! என்ன மாதிரியான சம்முவத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ? வெளியிட்ட திரையரங்குகளில் ஒன்று AGS, மற்றொன்று PVR. ஏஜிஎஸ்ஸில் சமயங்களில் ஆள் சேரவில்லை என்றால் காட்சியை ரத்து செய்துவிடுவார்கள். அதாவது நாம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வில்லிவாக்கம் வரை லொங்கு லொங்கென்று ஓடவேண்டும். அவர்கள் சுலபமாக காட்சியை ரத்து செய்துவிட்டு புக்கிங் சார்ஜ் போக டிக்கெட் விலையை மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். எனவே அமிஞ்சிக்கரைக்கு பயணித்தேன். டிக்கெட் கிடைப்பதில் பெரிய தள்ளு முல்லு எல்லாம் கிடையாது. அரங்கம் முழுக்க ஹிந்திவாலாக்கள். பாலின பேதமின்றி கூட்டம் சேர்ந்திருந்தது. இனி நஷா !

பூனம் பாண்டே சோப்பு நுரைகளை மட்டும் அணிந்தபடி குளிக்கும் காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. ஒருவேளை செண்டிமெண்டாக இருக்கலாம். கதை என்றால் பல்லாண்டுகளாக சீன் படங்களுக்கே உரித்தான ரதி நிர்வேத கதைதான். மேனிலை பள்ளியில் பயிலும் சில பதின்பருவ மாணவ / மாணவியரைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவன் தான் நம் நாயகன். அவருக்கு ஏற்கனவே ஒரு காதலியும் இருக்கிறாள். அச்சமயம் மாணவர்களை எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸில் ஈடுபடுத்தும் பொருட்டு பணியேற்கிறார் பூ.பா. பூ.பா.வைக் கண்டதும் மாணவர்கள் ஜொள்ளு வடிக்கின்றனர். மாணவிகள் பொறமை கொள்கின்றனர். நாயகன் மட்டும் இரவில் பூ.பா.வை நினைத்து சுயமைதுனம் செய்கிறார். கள்ளங்கபடமில்லாத பூ.பா மாணவர்களிடம் வெகு இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்றனர். இது எல்லா பயல்களுக்குள்ளும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாயகன் மட்டும் ஒருபடி மேலே போய் பூ.பா.வை காதலிப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

படத்தில் ட்விஸ்ட் என்பதால் புதிய பத்தியில் எழுதுகிறேன். பூ.பாவின் அஜானபாகுவான காதலர் கதையிலும் பூ.பாவின் சதையிலும் என்ட்ரி கொடுக்கிறார். சூடு பிடிக்கிறது ! பூ.பாவின் காதலருக்கும் நம்ம ஹீரோ பயலுக்கும் அடிக்கடி பனிப்போர் நடக்கிறது. ஒருநாள் இரவில் பூ.பாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து கட்டிலறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நாயகன். உள்ளே பூ.பா. அவருடைய காதலருடன் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருக்கிறார். வெளியில் சத்தம் கேட்டதும் உடலில் துணியை சுற்றிக்கொண்டு கையில் விளக்குடன் வருகிறார். துணி அருகிலிருக்கும் டேபிளில் சிக்கி அவிழ்ந்துக்கொள்ள நாயகன் முன்பு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறார். உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு புறமுதுகு தரிசனம் மட்டும் தான் ! இடைவேளை.

அடுத்தடுத்த டுவிஸ்டுகள். பூ.பாவின் காதலர் மாணவியர்களுள் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பூ.பாவிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். ப்ரேக் அப். அதேபோல நாயகனும் தன்னுடைய காதலிக்கு முன்பு ‘பழைய’ என்ற முன்வையை சேர்த்துவிடுகிறார். ஏற்கனவே தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால் நாயகன் மீது கோபமாக இருக்கிறார் பூ.பா. இருப்பினும் காதலரை பிரிந்துவாடும் அவருக்கு ஆறுதல் தேவை இல்லையா ? நாயகன் தோள் கொடுக்கிறார். முன்பைவிட நெருக்கமாக பழக துவங்குகின்றனர் – இருவரும் ஒன்றிணைந்து சரக்கடிக்கும் அளவிற்கு. நிற்க. பூ.பா இன்னமும் கள்ளங்கபடமில்லாமல் தான் பழகுகிறார். நாயகன் தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் பூ.பா வேலையை துறந்துவிட்டு ஊருக்கு செல்லத் தயாராகுகிறார். எஸ், நீங்கள் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பிட்டு வருகிறது – பூ.பாவின் வீட்டுக்குச் சென்று போக வேண்டாமென இறைந்து மன்றாடுகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் பூ.பாவுக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துவிடுகிறது. எனினும் இது தவறு என்றுணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் அடுத்த கட்டத்திலேயே உடைந்து உருகிவிடுகிறார். உதடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. உடல்கள் பினைந்துக்கொள்கின்றன. நாயகன் பூ.பாவுக்குள் ஊடுருவுகிறார். அடுத்த காட்சியில் பூ.பாவின் வீட்டு வாசலில் பூட்டு தொங்குகிறது. அவருடைய குரலில் ஒரு நீண்ட வாய்ஸ் ஓவர். ஹிந்தியில் என்பதால் எனக்கு புரியவில்லை. நாயகன் தன் பழைய நண்பர்களுடனும், காதலியுடனும் இணைவதுடன் திரை இருள்கிறது.

பூனம் பாண்டே படத்தையே “தூக்கி நிறுத்தியிருக்கிறார்” என்றுதான் சொல்லவேண்டும். சர்வசாதாரணமாக உள்ளாடை மட்டும் அணிந்து ஜாக்கிங் போகிறார். காதலருடன் நிமிடத்திற்கு நான்குமுறை உதட்டுமுத்தம் பரிமாறிக்கொள்கிறார். போதாத குறைக்கு நாயகனின் கனவில் வேறு அடிக்கடி வந்து தொலைக்கிறார். என்ன ஒன்று, கடைசி வரைக்கும் பெரிதாக எதையும் காட்டவில்லை என்பதுதான் வருத்தம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 July 2013

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளத்திற்கு எதிர்வினை !

அன்புள்ள வலைப்பூவிற்கு,


நான் பிழைப்பிற்காக தகவல் தொழில்நுட்ப துறையை அண்டியிருந்தாலும் கூட, இன்னமும் கலாசார ரீதியாக என்னுடைய சக பணியாளர்களுடன் ஒன்ற முடியாத நடுத்தர வர்க்க சாதாரணனாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் ரூபாய்க்கு கூலர்ஸ் வாங்குவது, இரண்டாயிரம் ரூபாய்க்கு சென்ட் பாட்டில் வாங்குவது என சில த.தொ பணியாளர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்து கடுகடுப்பானாலும் கூட இணையவெளியில் அதனை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவ்வாறு வெளிக்காட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு உமிழ்ந்துக் கொள்வதற்கு சமம் அல்லது நம்முடைய பதிவை தெரியாத்தனமாக மேனேஜர் படித்துவிட்டு “வொர்க் கல்ச்சருன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு ?” என்று லெக்ச்சர் எடுக்கக்கூடும் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

அதையும் தாண்டி வா.மணிகண்டனுடைய சமீபத்திய பதிவை படித்ததும் ஒரு வயிற்றுக்கடுப்பு கிளம்பியது. கூடை வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் லைட்டு கொடுக்குறதில்லை என்பது போல பின்னூட்டப்பெட்டியை மூடி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கருத்து / எதிர்வினை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் வா.மணியின் பதிவை படிக்கும் பொது தரப்பு ஆட்கள், த.தொ பணியாளர்களை பார்த்து அய்யோ பாவம் என்று உச்சு கொட்டுவதற்குள் என்னுடைய கருத்தை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

வா.மணியின் பதிவை நான் முழுமையாக எதிர்க்கவில்லை. பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தலைவராக அவர் அவருடைய கவலைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில சால்ஜாப்பு காரணங்களை படிக்கும்போது தான் எதைக்கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை. தவிர, பிற துறைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் த.தொ ஆட்களை விட அதிகம் சம்பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். த.தொ பணியாளர்களும் எல்லோரைப் போலவும் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்ற வேலைகளோடு ஒப்பிடும்போது த.தொ பணியாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள இயலாது.

அவருடைய சாஃப்ட்வேர்க்காரன் பற்றிய பதிவு – “என்னத்த சம்பாதிக்கிறோம் ? வேன் ஹியூசனில் சட்டை வாங்குவதற்கும், கே.எப்.சியில் கோழிக்கறி சாப்பிடுவதற்கும், பிள்ளைக்குட்டிகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வதற்கே மொத்த பணமும் காலியாகிவிடுகிறது. ஆச்சு பார்த்தீங்களா ? மாசக்கடைசியில் நாங்களும் கடன் வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறோம். நாங்களும் உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகள் தான் !” என்கிற ரீதியில் செல்கிறது.

மணிகண்டனின் பதிவுடைய முதல் சில பத்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிந்தைய த.தொ பணியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி புலம்புகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் த.தொ ஆட்களின் சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால் திறமை உள்ளவர்கள் யாரும் தெருவுக்கு வந்துவிடுவதில்லை. “ஆடி” காரில் போய்க்கொண்டிருந்தவர்களை திடீரென அம்பாஸடருக்குள் அமர வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு, “என்னய்யா பெருசா காசை வாங்கிட்டோம் ? மிஞ்சி மிஞ்சிப்போனா பிச்சைக்காசு ஐம்பதாயிரம். அதை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா ?” என்று தொடர்கிறார்.

// ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். //

பெருநகரங்களில் சொந்தவீடு இல்லாமல் தங்கி பணிபுரிவது என்பது சிரமமான விஷயம் தான், அதிலும் குடும்பம் குட்டியோடு இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன் ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? நிச்சயமாக கிடைக்கும். ஆனால், பகட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட நம் ஆட்கள் கொஞ்சம் விசாலமாக, கார் பார்க்கிங்குடன் கூடிய, பால்கனி வசதி கொண்ட போன்ற சில சொகுசுக்களை எதிர்பார்ப்பதால் பன்னிரெண்டாயிரம் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வீட்டு வாடகையை பொறுத்தவரையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தய த.தொ சமுதாயம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்). அப்புறம் பெட்ரோல் செலவு, இன்டர்நெட் செலவு (!!!), பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்ற சில நியாயமான காரணங்களை சொல்லியிருக்கிறார்.

// இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ‘ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் ‘செமி ஃபார்மல்’, வெள்ளியன்று ‘கேசுவல்’ என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை. //

கவுண்டர் வாய்ஸ்: அவனவனுக்கு ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு இளநியில தண்ணி வரலையாம் !

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சென்னை / பெங்களுருவில் வேன் ஹியூசன், பீட்டர் இங்க்லேண்ட் தவிர வேற ஜவுளிக்கடைகளே இல்லையா ? ஒருவேளை பிராண்டட் சட்டை அணியாவிட்டால் உடலில் அரிப்பெடுக்குமா ? (ஃபிகர்களுக்காக புதுத்துணி எடுக்க வேண்டியிருக்கிறது என்பது நகைச்சுவைக்காக எழுதிய வரிகளாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்).

// இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. //

ஏதோ செய்யாத பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கும் தொனியில் எழுதியிருக்கிறார். நீ ஏன் மேன் லோன் வாங்குற ? எதுக்கு EMI கட்டுற ? பகட்டான வாழ்க்கையைத் தேடி வாங்கிய கடனைத்தானே ஓய் அடைக்கிறீர்கள் ?

// இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. //

கே.எப்.சி, பீட்சா கார்னரில் சாப்பிட்டுத் தொலைக்காமல் பெருநகரங்களில் வாழவே முடியாதா ? எனக்குத் தெரிந்து எல்லா மென்பொருள் நிறுவன வளாகங்களின் சுற்று வட்டாரங்களிலும் ஓரிரு தள்ளுவண்டிக்கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் நிச்சயமாக இருக்கும். நம்மவர்களும் கரட்டடிபாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதிதில் அந்த மாதிரி கடையில் எல்லாம் சாப்பிட்டிருப்பார். இப்பொழுது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அதுபோன்ற ரோட்டுக்கடைகளை பார்த்தால் முகம் சுழிப்பதும் ஸ்டோமக் அப்செட் ஆகிடும் என்று சொல்லி சீன் போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர்.

// அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில்  எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்? //

பிற துறையினர் எல்லாம் நோகாமல் நோம்பி கும்பிடுவது போல அல்லவா இருக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிறார்களாம். என்னடா இது சோதனை ? ஒருவேளை வயதை குறிப்பிடுகிறாரோ ? யாரும் வேலைக்குச் சேர்ந்ததும் போய் பேராசிரியராக அமர்ந்துவிட முடியாது. பேராசிரியராக முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் மணிகண்டனுக்கு தெரியாதா என்ன ? முனைவர் பட்டம் எல்லாம் ஒரு விஷயமா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வெகுசாதாரணமாக சொல்லிவிடலாம், த.தொ தொழிலாளர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதாக வெளியாட்கள் நினைக்கிறார்களே அது போல.

பொதுவாகவே மணிகண்டனின் வரவு செலவு கணக்கு தப்புக்கணக்காக தோன்றுகிறது. கணக்கு பாடத்தில் அவரு கொஞ்சம் வீக் போல. இருவரும் சம்பாதிக்கிறோம் என்றபடி ஆரம்பித்த அவருடைய பதிவு போகப் போக இருவருக்கும் பொதுவான செலவுகளை அவருடைய சம்பளத்திலிருந்து மட்டும் குறைத்துக்கொண்டு ஆச்சு பார்த்தீங்களா ? ஐம்பதாயிரம் காலி என்று கணக்கை முடித்துவிட்டார். தவிர, மணிகண்டன் போல பிள்ளைக்குட்டிகள் பெற்றெடுத்த த.தொ பணியாளர்கள் இந்நேரம் சொந்த வீடு, கார், சுவற்றில் மாட்டுகிற தொலைக்காட்சி என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.

// ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய். //

இதுதான் ஃபினிஷிங் டச். ஆக, ஒரு லட்சமில்லை எத்தனை லட்சங்கள் வாங்கினாலும் கூட எல்லாவற்றையும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ / பகட்டான வாழ்க்கைக்கோ செலவு செய்துவிட்டு மாசக்கடைசியில் எங்க பர்ஸும் காலியாத்தான் இருக்கு, நாங்களும் ஏழைங்க தான் என்று புலம்புவார்கள். மனிதர்கள் அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது இயல்புதான். ஆனால் புலம்பக்கூடாது. நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல த.தொ வேலை என்பது நாமாகவே வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட நாய் வேடம். குரைத்து தான் ஆகவேண்டும். விருப்பமில்லையென்றால் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிற பேராசிரியராக பணிபுரியலாமே ? பொறியியல், MCA முடித்தவர்களுக்கு நிச்சயமாக கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்துவிடும். அதுவும் இல்லையென்றால் த.தொ இளைஞர்கள் அடிக்கடி ஃபேஷனுக்கு சொல்வதைப் போல ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment