வணக்கம் மக்களே...
ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
**************************************************
ஒரு கடைக்கோடி கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா வெற்றியடைந்ததும், ங்கொய்யால மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடலாமா என்றென்னுமளவிற்கு குறுந்தகவல்கள் குவிந்துக்கொண்டிருந்தன. சில குறுந்தகவல்கள் என்னையும் ரசிக்க வைத்தன. இன்னொருத்தன் அனுப்பியிருந்தான், 1983ம் ஆண்டு ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாம் (இந்தியா உலககோப்பை வென்றது). 1996ம் ஆண்டு ராவணன் சீதையை லவட்டிக்கொண்டு போனானாம் (இலங்கை கோப்பையை வென்றது). 14 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். தக்காளி... யாருடா உங்களுக்கு இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கத்துக்கொடுக்குறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த ராமன் - ராவணன் புராணத்தையே பாடுவீங்க. அந்த குறுந்தகவலை உருவாக்கியவன் மட்டும் என் கையில் கிடைத்தால் @#$%^&*
ஏற்கனவே ஒரு ஒயின்ஷாப் இடுகையில் ஓவியர் இளையராஜா பற்றி சிலாகித்திருந்தேன். மேலும், ஒரு குறிப்பிட்ட ஓவியம் இணையத்தில் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தேன். இப்போது கூகிள் பஸ் பயணிகள் சிலரது உதவியால் அவரது இணையப்பக்கம், மெயில் ஐடி, அலைபேசி எண் என்று சகலமும் கிடைத்திருக்கிறது.
இணையப்பக்கம்: http://www.elayarajaartgallery.com
மெயில் ஐடி: artistilayaraja@gmail.com
அலைபேசி எண்கள்: 98411 70866, 94882 21569
வீட்டு, அலுவலக முகவரி கூட கிடைத்தது. யாருக்காவது அவசியமாக தேவைப்பட்டால் தெரிவிக்கவும், மெயிலுகிறேன்.
**************************************************
இந்த உலகக்கோப்பையின் போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களில் High Definition தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ரொம்பவே டூ மச். அதுவும் கிட்டத்தட்ட எல்லா விளம்பரங்களும் ஒரே தீமில். எது டிவியில காட்டுறாங்க, எது நிஜத்துல நடக்குதுன்னு வித்தியாசமே தெரியாதாமாம். அதிலும் கிரிக்கெட் பந்தில் இருந்து வைரங்கள் தெறிப்பது போல சித்தரிக்கப்பட்ட தோனி தோன்றும் சோனி பிராவியா (என்ன பிராவோ...?) விளம்பரம் ஏகத்தும் எரிச்சலூட்டியது. (ம்ம்ம்... நம்ம வீட்டுல தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி தான்).**************************************************
தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். என்னையும் மதித்து மெயில் அனுப்பிய Syed Mustafa, மனம் திறந்து... (மதி), LK, Yuva, மாப்ள ஹரிஸ், Jayadev Das, prakash kumar, Pari T Moorthy, பிரகாசு, Rathnavel Natarajan, venkat kumar, modi rizi ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அழகியுடன் பழகிக்கொண்டிருக்கிறேன். மறுபடியும் குறில் - நெடில், வல்லினம் - மெல்லினம் - இடையினம் என சில சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் இதைவிடவும் சிறப்பானதொரு தட்டச்சு மென்பொருள் கிடைக்காதென்றே எண்ணுகிறேன்.
**************************************************
இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். 35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)
**************************************************
ட்வீட் எடு கொண்டாடு:
araathu
உலகக்கோப்பையை இந்தியா வென்ற செய்தியை மட்டும்தான் ஜெயா டிவியும், கலைஞர் டீவியும் ஒரே மாதிரி தெரிவித்தன.
உலகக்கோப்பையை இந்தியா வென்ற செய்தியை மட்டும்தான் ஜெயா டிவியும், கலைஞர் டீவியும் ஒரே மாதிரி தெரிவித்தன.
VaanathiNadanam
மின்னலே படமும் துள்ளுவதோ இளமை பாடல்களும் பிடிக்காது என சொல்லும் ஆண் நண்பர்களை இன்னும் சந்திக்கவில்லை., #டிபால்ட் ரசனை போல ;)
மின்னலே படமும் துள்ளுவதோ இளமை பாடல்களும் பிடிக்காது என சொல்லும் ஆண் நண்பர்களை இன்னும் சந்திக்கவில்லை., #டிபால்ட் ரசனை போல ;)
**************************************************
பதிவுலகில் புதியவர்:
உரைகல் - ஐ.ரா.ரமேஷ்பாபு
பதிவுலகின் பன்னிரண்டு நாள் குழந்தை. நம்மை சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது இந்தக்குழந்தை. இவருடைய மிஸ்டர்.எக்ஸ் ஜோக்ஸ் படித்து கொஞ்சம் சிரியுங்கள், ஊழல் குறித்த இடுகையை படித்து கொஞ்சம் சிந்தியுங்கள். ஜாக்கியைப் போல உங்களுக்கும் பெண்குழந்தை வேண்டுமென்றால் இதைப் படியுங்கள்.
**************************************************
குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தில் "விழிகளிலே விழிகளிலே..." என்றொரு பாடல். ட்ரைலரில் கேட்டபோது கொஞ்சமாக வசீகரித்தது. இப்போது காணொளியாக பார்க்கும்போது ரொம்பவும் பிடித்திருக்கிறது. காதலிக்கும் எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும். ஆனாலும் ரம்யா நம்பீசனை சைட் அடிக்காமல் இருக்க முடியவில்லை. செம ஹோம்லிப்பா...!!!
**************************************************
கோடைகாலத்திற்கு இதமாக உங்களுக்காக ஒரு தர்பூசணி...!!!
**************************************************
இந்த வார காணொளி:
சென்ற வாரத்தில் ஒருநாள் தெரியாத்தனமாக இந்த காணொளியைப் பார்த்துவிட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நீங்களும் அத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக விரும்பவில்லை. எனினும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் கீழுள்ள இணைப்பை சொடுக்கிப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=f9vty62P2hE
**************************************************
இந்த வார எஸ்.எம்.எஸ்:
"கறை நல்லது..." - கவுதம் கம்பீர்
**************************************************
ஒரு புதிர்க்கேள்வி:
5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????
(விடை சொல்பவருக்கு மட்டும் வடை வழங்கப்படும்...)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN







வெல்கம் பேக் நண்பா... கடை களை கட்டுது... வாழ்த்துக்கள்
ReplyDeleteசெம கலக்கல்
ReplyDelete>>35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார்
ReplyDeleteநாட்டுக்கு ரொம்ப முக்கியம்.. ஹா ஹா
7+2+5=143547
ReplyDeleteகடை ரொம்ப நாலு கழிச்சி தெறந்து இருக்கீங்க நண்பா!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
@ தமிழ்மகன்
ReplyDeleteஉங்கள் விடை சரியானது... எனவே பின்னூட்டத்தை பின்னர் வெளியிடுகிறேன்...
1435?? பாதி வடை...
ReplyDeleteசிறிது நேரத்திற்கு பிறகு முழு வடை வாங்குகிறேன்..
http://thamizha.com/news/ekalappai-30-released
ReplyDeleteதமிழ் தட்டச்சிற்கு இதை பயன்படுத்தி பாருங்கள். phonetic keyboard உள்ளது.
7+2+5=143547
ReplyDeleteஉங்கள் கேள்விக்கான விடை
ReplyDelete7+2+5=143547
வாப்பா ஓனரே வேலை கெடச்சுடுச்சா?
ReplyDelete7+2+5= 143547.......வடையோ சாத்தூர் சீவலோ(வறுவல்) கிடைக்குமா?
ReplyDelete143545
ReplyDelete7*2
7*5
7*2+7*5-2(middle)
rgds/Surya
சப்ப மேட்டரு.. 143547..
ReplyDeleteமத்தபடி பதிவு அருமை பிரபா.. அந்த குழந்தைய நானும் போய் பாக்குறன்.. குழந்தை தாக்கு பிடிக்கிதா இல்ல அப்பீட் ஆகுதான்னு பாக்கலாம்..
ReplyDelete7+2+5=143547
ReplyDelete///////ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.////////
ReplyDeleteகடை ஏன் ஒன்றரை மாசம் அடைச்சு கெடந்துச்சுன்னு இன்னும் சொல்லவே இல்ல......!
இந்த வார புகைப்படமும், இளையராஜாவின் ஓவிய gallery வெப்சைட் பகிர்வும், டாப்!!! பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete////////ஏற்கனவே ஒரு ஒயின்ஷாப் இடுகையில் ஓவியர் இளையராஜா பற்றி சிலாகித்திருந்தேன்.////////
ReplyDeleteஉண்மையிலேயே வெகு அற்புதமான ஓவியம்............!
//////அதிலும் கிரிக்கெட் பந்தில் இருந்து வைரங்கள் தெறிப்பது போல சித்தரிக்கப்பட்ட தோனி தோன்றும் சோனி பிராவியா (என்ன பிராவோ...?) விளம்பரம் ஏகத்தும் எரிச்சலூட்டியது.////////
ReplyDeleteதோனியோட அந்த ஹெலிக்காப்டர் ஷாட் விளம்பரத்த விடவா....?
/////தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். ///////
ReplyDeleteரொம்பத்தாமதமாத்தான் அந்த மெயிலைப் பார்த்தேன், நானும் அழகியைத்தான் பரிந்துரைத்திருப்பேன்.....!
\\answer is 143547
ReplyDeleteVadai enakuthan enakuthan.
karunukku pathi vada kuda ila.mulu vadaiyum enakke.
//////இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். ///////
ReplyDeleteஇப்ப்டியெல்லாம் அசால்ட்டா இருந்துடாதீங்கப்பு, திடீர்னு எங்கேயாவது வீடியோ கிளிப்பு ரிலீஸ் பண்ணுவாங்க....... அதைத் தடை பண்றதுக்குள்ள கேட்ச் பண்ணிடனும்.....!
/////35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)//////
ReplyDeleteயோவ் நானே சிம்ரனுக்கு 35 வயசு ஆயிடுச்சேன்னு கவலைல இருக்கேன்..... !
//////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார்
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.. ஹா ஹா////////
வரவர சிபிக்கு நமீதாவ தவிர வேற யாரும் புடிக்க மாட்டேங்கிது, வேப்பெல தான் அடிச்சுப் பாக்கோனும்.....!
எனக்கு வடையே வேண்டாம் ...............
ReplyDeletehmm welcome back
ReplyDeleteஎனக்கு வடை வேண்டாம்
ReplyDeleteநாங்களும் கவிதை எழுதுவோம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html
நடக்கட்டும்....நடக்கட்டும்
ReplyDelete143547
ReplyDelete/ஒரு கடைக்கோடி கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்//
ReplyDeleteஇந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும்... அது என்ன கடைக்கோடி???
welcome back the owner
ReplyDelete143539- கரெக்டா..
ReplyDeleteஇப்பதான் எனக்கு கிளாஸ் முடிந்தது..அதனாலதான் லேட்டு ஆன்சர்..
ReplyDeleteகரெக்டா தேர்தல் டைமில பார்த்து கடைய திறந்துட்டீங்க! :-)
ReplyDeleteநல்ல சரக்கு...
ReplyDelete\\ஒரு புதிர்க்கேள்வி:
ReplyDelete5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????\\
143547
the answer is 143547
ReplyDelete\\சென்ற வாரத்தில் ஒருநாள் தெரியாத்தனமாக இந்த காணொளியைப் பார்த்துவிட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.\\ How can I open it after reading this Prabha?
ReplyDelete\இப்போது காணொளியாக பார்க்கும்போது ரொம்பவும் பிடித்திருக்கிறது.\\ What is the Link?
ReplyDelete\\உலகக்கோப்பையை இந்தியா வென்ற செய்தியை மட்டும்தான் ஜெயா டிவியும், கலைஞர் டீவியும் ஒரே மாதிரி தெரிவித்தன.\\ Haa...Ha..Ha.. Super.
ReplyDelete\\35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். \\ Very talented actress of this generation, acting comes very naturally for Simran and she never makes the mistake of overacting. Her slim hips, dance movements and smile in her lips are un chanllenged + points.
ReplyDelete\\இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். \\ Ippadiyellaam vera aasaiyaa ungalukku!! Don't take it literally Prabha! To make it a point that she do anything for her country she told like that.
ReplyDelete\\தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். \\ Are you familiar with the conventional Tamil keyboard?? If yes, let me search out.
ReplyDelete\\14 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். \\ Tomato, in between Australian captured four times, what is it compared with, Tomato??
ReplyDeleteHai பிரபா, எப்படியிருக்கிங்க? என்னை ஆச்சி? ரொம்ப நாளா ஆளையே காணோம்? Enyway. Welcome Back நண்பரே.
ReplyDelete7+2+5=143547
ReplyDeleteவாங்க...வாங்க! என்ன இருந்தாலும் நீங்க படு புத்திசாலிங்க! சரியான நேரத்திலே மதுக் கடையை மீண்டும் திறந்திருக்கீங்க பாருங்க! அரசியல் கட்சிங்களே மொத்தத்தையும் அள்ளிட்டுப் போய்டுமே, சில்லறையில் விக்கறதுக்கு சரக்கு ஏதாவது மீறுதா? எதுக்கும் முன்னாடி ஷட்டரைக் கொஞ்சம் மூடி வச்சே யாவாரம் பண்ணுங்க! இந்த போலீசு, தேர்தல் அதிகாரிங்க தொல்லை கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது! பின்னாடிக் கதவைத் தொறந்து வச்சாலே போதுமே! யாவாரம் பிச்சிகிட்டு போவுமே!
ReplyDelete143547
ReplyDeleteயோவ் எங்கையா என் பதில
ReplyDeleteANS = 143547 !!!
ReplyDeleteVADAI
நல்ல பகிர்வுகள். இளையராஜா ஓவியங்கள் சான்ஸே இல்லை. வசீகரிக்கிறார் மனிதர்.
ReplyDelete/////////ஒரு புதிர்க்கேள்வி:
ReplyDelete5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????////
விடை - 143547 ......எப்பூடி )))
103543
ReplyDeleteசரக்கு சூப்பரா இருக்கு மாமே.:-)
ReplyDelete143547
ReplyDelete//35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார்.//
ReplyDeleteஇதை முதல்லயே போட்டிருந்திருக்கலாம்...
143547 -eppudi??
ReplyDeleteஇளையராஜாவின் கேலரிக்கு வழிகாட்டியதற்கு நன்றி!
ReplyDelete@ Sukumar Swaminathan, சி.பி.செந்தில்குமார், தமிழ் மகன், விக்கி உலகம், !* வேடந்தாங்கல் - கருன் *!, முத்துசிவா, தோழி பிரஷா, கே.ஆர்.பி.செந்தில், செங்கோவி, தம்பி கூர்மதியன், பன்னிக்குட்டி ராம்சாமி, Chitra, Arun Kumar, அஞ்சா சிங்கம், சமுத்ரா, Speed Master, ரஹீம் கஸாலி, நா.மணிவண்ணன், ! சிவகுமார் !, ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி, ஜீ..., யோவ், Jayadev Das, Thenappan Udaiyappan, N.H.பிரசாத், vadivel, மனம் திறந்து... (மதி), Busy, செ.சரவணக்குமார், கந்தசாமி., இரவு வானம், prabhakaran, அன்பரசன், கோவை ஆவி, எல் போர்ட்.. பீ சீரியஸ்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...
@ தமிழ் மகன், முத்துசிவா, தோழி பிரஷா, செங்கோவி, தம்பி கூர்மதியன், பன்னிக்குட்டி ராம்சாமி, Arun Kumar, நா.மணிவண்ணன், Jayadev Das, Thenappan Udaiyappan, vadivel, Busy, கந்தசாமி., prabhakaran, கோவை ஆவி
ReplyDelete143547 என்ற உங்கள் விடை சரியானது... ரொம்பவும் சுலபமான கேள்வியைக் கேட்டுவிட்டேனோ...??? இருக்கட்டும்... விடை சொன்ன பதினைந்து பேருக்கும் ஏதாவதொரு மின் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்...
@ Arun Kumar, vadivel, Busy, கந்தசாமி., கோவை ஆவி
ReplyDeleteமின் புத்தக பரிசைப் பெற உங்கள் மெயில் ஐடியை தெரியப்படுத்தவும்...
@ !* வேடந்தாங்கல் - கருன் *!, Surya
ReplyDeleteமன்னிக்கவும் உங்கள் விடை தவறானது...
@ தமிழ் மகன்
ReplyDelete// தமிழ் தட்டச்சிற்கு இதை பயன்படுத்தி பாருங்கள். phonetic keyboard உள்ளது. //
ஏற்கனவே ஈ-கலப்பையை முயற்சித்துப் பார்த்தேன்... எனது கணினியில் உள்ள சில சிக்கல்களால் அதைப் பயன்படுத்த முடியவில்லை...
@ கே.ஆர்.பி.செந்தில்
ReplyDelete// வாப்பா ஓனரே வேலை கெடச்சுடுச்சா? //
கிட்டத்தட்ட...
@ தம்பி கூர்மதியன்
ReplyDelete// அந்த குழந்தைய நானும் போய் பாக்குறன்.. குழந்தை தாக்கு பிடிக்கிதா இல்ல அப்பீட் ஆகுதான்னு பாக்கலாம்.. //
அந்தக்குழந்தையை பத்தியும் பதிவு போட்டுறாதீங்க... கொஞ்ச நாளாவது விட்டு வைப்போமே...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete// கடை ஏன் ஒன்றரை மாசம் அடைச்சு கெடந்துச்சுன்னு இன்னும் சொல்லவே இல்ல......! //
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்... அது வந்ததும் சொல்கிறேன்...
// தோனியோட அந்த ஹெலிக்காப்டர் ஷாட் விளம்பரத்த விடவா....? //
அதென்னவோ அடிக்கடி போட்டது போல தெரியல...
// இப்ப்டியெல்லாம் அசால்ட்டா இருந்துடாதீங்கப்பு, திடீர்னு எங்கேயாவது வீடியோ கிளிப்பு ரிலீஸ் பண்ணுவாங்க....... அதைத் தடை பண்றதுக்குள்ள கேட்ச் பண்ணிடனும்.....! //
நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை... ஒரு தகவல் சொல்லிவிடுங்க பறந்து வந்துடுவேன்...
// யோவ் நானே சிம்ரனுக்கு 35 வயசு ஆயிடுச்சேன்னு கவலைல இருக்கேன்..... ! //
அண்ணே... சிம்ரனுக்கு 45 வயசு ஆனாலும் நல்லா தான் இருந்திருப்பாங்க... இப்போ அது மேட்டர் இல்லை... அவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டதால தான் இப்படி டேமேஜ் ஆயிட்டாங்க...
@ ! சிவகுமார் !
ReplyDelete// இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும்... அது என்ன கடைக்கோடி??? //
சொல்லிட்டாப்போச்சு... முகத்தில் மூவர்ணத்தை பூசிக்கொண்டு, கொடியசைத்து, கடுங்கூச்சல் எழுப்பி ஆரவாரங்கள் எல்லாம் செய்யாமல் இந்தியா ஜெயித்தால் நல்லா இருக்குமே என்று மனதின் ஓரத்தில் கொஞ்சூண்டு ஆசையை தேக்கி வைத்திருப்பவனே இந்த கடைக்கோடி ரசிகன்...
@ ஜீ...
ReplyDelete// கரெக்டா தேர்தல் டைமில பார்த்து கடைய திறந்துட்டீங்க! :-) //
ஆனாலும் நம்ம கடையில அரசியல் மேட்டர் அதிகம் வராது...
@ Jayadev Das
ReplyDelete// How can I open it after reading this Prabha? //
புரியுது சார்... நான் வீடியோவை பார்த்த பின்பு இரண்டு நாட்களுக்கு யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தேன்... அதன்பின்னர் சில நண்பர்களிடம் பகிர்ந்துக்கொண்டபோது என் மனபாரம் குறைந்தது போல இருந்தது... பதிவில் பகிர்ந்தால் அந்த பாரம் மேலும் குறையும் என்றொரு நம்பிக்கை... அவ்வளவே... அனால் பாருங்க, உங்க நிலைமையை புரிந்துக்கொண்டு யூடியூபே அந்த வீடியோவை நீக்கிவிட்டனர்...
// What is the Link? //
லிங்க் இல்லை... இசையருவியில் மணிக்கொரு முறை ஒளிபரப்புவார்கள் பாருங்கள்...
// Very talented actress of this generation, acting comes very naturally for Simran and she never makes the mistake of overacting. Her slim hips, dance movements and smile in her lips are un chanllenged + points. //
அநியாயத்துக்கு சிலாக்கிறீர்களே... இருங்க தங்கமணி மேடத்திடம் போட்டு கொடுக்கிறேன்...
// Ippadiyellaam vera aasaiyaa ungalukku!! Don't take it literally Prabha! To make it a point that she do anything for her country she told like that. //
ம்ம்ம்... ரஜினிகாந்த் மைனா படத்துல நடிக்கிறேன்னு சொன்ன கதையா இருக்கு...
// Are you familiar with the conventional Tamil keyboard?? If yes, let me search out. //
பரிச்சயம் இல்லை...
// Tomato, in between Australian captured four times, what is it compared with, Tomato?? //
ஒருவேளை ஆஸ்திரேலியாக்காரன் சீதையை ஒரு பன்னிரண்டு வருஷம் வச்சிருந்திருப்பான் போல...
என்ன இந்தமுறை ஒரே ஆங்கில பின்னூட்டங்கள்...
@ நா.மணிவண்ணன்
ReplyDelete// யோவ் எங்கையா என் பதில //
யோவ் புதிருக்கான விடையெல்லாம் கடைசியா தான் வெளியிடப்படும்... புரிஞ்சதா...
Preethi:
ReplyDeleteans fr ur puzzle: 143547
Nice
ReplyDelete\\@ Arun Kumar, vadivel, Busy, கந்தசாமி., கோவை ஆவி
ReplyDeleteமின் புத்தக பரிசைப் பெற உங்கள் மெயில் ஐடியை தெரியப்படுத்தவும்...\\
மெயில் ஐடி:arunkumar.rbr@gmail.com
கலக்கல்ல்ஸ்ஸ்!!! ராமர் எஸ்.எம்ஸ் எனக்கும் வந்தது... இடையில் மூன்று தடவை ஆஸி தட்டியபொழுது எங்க போச்சாம் என்று ரிப்ளை அனுப்பினேன்... பதில் வரவில்லை!!
ReplyDeleteட்வீட்ஸ் கலக்கல்!!!
ஓவியமும் மிக அருமை!!
Ans 143547
ReplyDeleteAns 143547
ReplyDeleteஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.//
ReplyDeleteவணக்கம் சகோதரம், ஏனுங்க உங்க கடையினை வருமான வரித்துறை சீல் வைச்சு மூடிக்கிட்டாங்களா?
4 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். தக்காளி... யாருடா உங்களுக்கு இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கத்துக்கொடுக்குறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த ராமன் - ராவணன் புராணத்தையே பாடுவீங்க. அந்த குறுந்தகவலை உருவாக்கியவன் மட்டும் என் கையில் கிடைத்தால் @#$%^&*//
ReplyDeleteஎப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க, பார்த்தீங்களா?
ஓவியரின் கை வண்ணம், அழகாக அந்தப் பெண்ணினூடாக வெளிப்பட்டிருக்கிறது சகோ
ReplyDeleteம்ம்ம்... நம்ம வீட்டுல தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி தான்).//
ReplyDeleteஇலவசமா கொடுக்கும் போது யாராச்சு, இமய மலை றேஞ்சிலை உள்ள விலையிலை டீவி வாங்குவாங்களா?
இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்//
ReplyDeleteஅடடா, அடடா, எல்லோரும் ஒரு எதிர்பார்ப்போடு தான் இருக்கிறீங்க போல இருக்கு.
35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)//
ReplyDeleteபாட்டு றெடியா இல்லை பார்ட் டூ றெடியா.......செமையாகத் தான் பட்டையைக் கிளப்புறீங்க.
ஸ்ரீலங்கா அணியில்மட்டும் 22 ஃபீல்டர்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறார் என் மனைவியார் #எல்லாப்பக்கமும் நிக்கறாங்களே//
ReplyDeleteஇது செம கிண்டல்
This video has been removed as a violation of YouTube's policy on shocking and disgusting content.
ReplyDeleteSorry about that//
வீடியோவை கிளிக் பண்ணினால் படதிற்கு பதிலாக, வீடியோ நீக்கி விட்டார்கள் என்று மெசேஜ் வருகிறது.
பிரபா வயின் ஷாப், ஓவியம், சினிமா, கிறிக்கற், இசை, வீடியோ, புதிர் என்ப பல சுவைகளையும் ஒருங்கு சேர வெளிப்படுத்தி நிற்கிறது. வையின் செம டேஸ்டு சகோ.
ReplyDeleteanswer is 143549
ReplyDeleteமாப்பு, முன்ன ராகினிஸ்ரீ ன்னு AirTel Super siger ல பாடினாள் என்று சொன்னேனே, [நீ கூட தெரியாதுன்னு சொன்னியே, அதே ராகினிஸ்ரீ தான்!!] அவ போட்டி கிடைச்சிருக்கு. மாமி எப்படின்னு பாரு. [சும்மா பாரு!!].
ReplyDeletehttp://3.bp.blogspot.com/_WDGPARU8qt8/Sb1MXVQOMpI/AAAAAAAAAls/V7SL9DVN24E/s1600-h/Rahini+Sri.bmp
Mappu Enjoy pannu:
ReplyDeleteRahinisri:
http://www.youtube.com/watch?v=b65scEbql3M&feature=related
http://www.youtube.com/watch?v=VeEvCu9kvlo
http://www.youtube.com/watch?v=UXMRE9a_q84&feature=related
http://www.youtube.com/watch?v=u9hgo9bxk6o&feature=related
http://www.youtube.com/watch?v=XDaLksavGOM&feature=related
My Faviurite of mami Rahinisri.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=9kuGPQHWKcY&feature=related
பிரபா பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்... அந்த ஓவியம் என்னை கட்டிப் போட்டு விட்டது...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது
பிரபாகரன், மார்ச் 30 தேதியிட்ட ஆனந்தவிகடன்ல ஒரு சிறுகதைக்கு இளையராஜா ஓவியம் போட்டிருக்காங்க,அது ஓவியம்னு என்னால இதுவரை நம்ப் முடிய்ல, போட்டோவ விட நல்லாருக்கு....!
ReplyDeleteதமிழ் தட்டச்சு செய்ய சில எளிய வழிமுறைகள் உண்டு. மைக்ரோ சாப்ட்- ன் "Indic பசகஜ்" டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் பண்ணிக்குங்க. language bar - ல தமிழ்/இங்கிலீஷ் ரெண்டும் தெரியும் எங்கே தமிழ் வேணுமோ அங்கே தமிழ் செலக்ட் பண்ணிகோங்க. இல்லாட்டி எபிக் ப்ரௌசெர் இன்ஸ்டால் பண்ணிக்குங்க, அங்கே indic language சைடு பார்-ல வரும். அங்கே தமிழ் மட்டுமில்ல 19 language -ல டைப் பண்ணலாம். இப்ப கூட நான் EPIC -ல இருந்து தான் இந்த கமெண்ட் போடுறேன்.
ReplyDeleteஎன்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணே.
ReplyDeleteஓவியர் இளையராஜாவின் ரசிகை....அவரை பற்றின தகவலுக்கு நன்றிங்க...
ReplyDeleteஹாஹஹஹா....ராமன் - சீதா...:இந்தியா-இலங்கை...அருமை...!