8 November 2011

Cannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

Cannibal என்றால் தம் இனத்தை தானே கொன்று உண்ணும் விலங்கினம் என்று அர்த்தம் சொல்கிறது இணையம். அதாவது, இங்கே சக மனிதர்களையே கொன்று தின்னும் மனிதர்கள். So called காட்டுவாசிகள். கூகுளில் Cannibal movies என்று டைப்படித்து தேடினால் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அந்த லிஸ்டில் அதிமுக்கியமான ஒரு படம்தான் இந்த Cannibal Holocaust.

- Title: Cannibal Holocaust
- Country: Italy
- Language: English, Spanish
- Year: 1980
- Genre: Horror, Adventure
- Cast: Robert Kerman, Carl Gabriel Yorke, Francesca Ciardi, Perry Pirkanen, Luca Barbareschi
- Director: Ruggero Deodato
- Cinematographer: Sergio D'Offizi
- Editor: Vincenzo Tomassi
- Music: Riz Ortolani
- Producer: Franco Palaggi
- Length: 96 Minutes

ஒரு இயக்குனர், அவனுடைய காதலி, இரண்டு கேமரா மேன்கள் ஆகிய நான்கு பேர் கொண்ட ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கும் குழு காட்டுவாசிகளைப் பற்றி படம் எடுப்பதற்காக அமேசான் காடுகளை நோக்கி பயணிக்கிறது. போனவர்கள் இரண்டு மாதங்களாகியும் திரும்பாததால், ஒரு பேராசிரியர் தலைமையிலான குழு அங்கே அனுப்பப்படுகிறது. பேராசிரியர் குழு, ஒரு காட்டுவாசியை பிணைக்கைதியாக பிடித்து அவன் உதவியுடன் காட்டுவாசிகள் வாழும் இடத்திற்கு செல்கின்றனர். ஆரம்பத்தில் இவர்களை நம்பாமல் பயந்து பயந்து பழகும் காட்டுவாசியினர், ஒரு எதிர்குழு காட்டுவாசிகளுடனான சண்டையில் பேராசிரியர் குழுவின் உதவி கிடைக்க, அவர்களை நம்பத்தொடங்குகின்றனர். காட்டுவாசிகள் இவர்களை விருந்தினர் போல உபசரிக்கும் அதே சமயத்தில் பேராசிரியர் இறந்துபோன படக்குழுவினரின் எலும்புக்கூடுகளை காண நேரிடுகிறது. அப்படியென்றால் அவர்களிடம் இருந்த கேமரா...??? அதிலிருந்த வீடியோ டேப்...???

ஆழ்ந்த யோசனைக்குப்பின் ஒரு முடிவெடுக்கும் பேராசிரியர் தன்னிடம் இருக்கும் ட்ரான்ஸிஸ்டரை காட்டுவாசிகளிடம் கொடுத்து அவர்களிடம் இருக்கும் படக்குழுவினரின் டேப்பை கைப்பற்றுகிறார். இனி அந்த வீடியோ டேப்பில்...

படக்குழுவினர் நால்வரும் ஒரு உதவியாளருடன் காட்டுக்குள் நுழைகின்றனர். சிறிது தூரம் கடந்ததுமே, பாம்பு கடித்து உதவியாளர் இறந்துவிட, நால்வர் மட்டும் வேறு வழியின்றி பயணத்தை தொடர்கின்றனர். ஒரு காட்டுவாசியை பின்தொடர்ந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு செல்பவர்கள், தங்களின் டாகுமென்டரியின் ரியாலிட்டிக்காக காட்டுவாசி மக்கள் பலரையும் தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்கின்றனர். இது மட்டுமில்லாமல், ஒரு காட்டுவாசி பெண்ணை குழுவாக வன்புணர்கின்றனர். இவர்களை பழி வாங்கும்பொருட்டு காட்டுவாசி கும்பல் இவர்களை விரட்டுகிறார்கள். இவர்களில் ஒருவன் காட்டுவாசி கும்பலிடம் சிக்கிக்கொள்ள அவனை காப்பாற்றுவதை விட்டுவிட்டு அவனைக் கொல்வதையும் படம் பிடிக்கிறார்கள். அடுத்து இயக்குனரின் காதலி, காட்டுவாசிகளிடம் சிக்க, வேறென்ன... கேங் ரேப்தான். அதையும் படம் பிடித்து தொலைக்கிறான் ஒருவன். கடைசியில் படம் பிடித்தவனும் காட்டுவாசிகளுக்கு இரையாக, அவர்களுடைய இந்த டாகுமென்டரி நிறைவடைகிறது.

மேலே குறிப்பிட்ட இரண்டு வன்புணர்வு காட்சிகள் தவிர இன்னொரு பாலுறவு காட்சியும் உண்டு. இதுதவிர காட்டுவாசி ஒருவன் தனக்கு துரோகம் செய்யும் மனைவியை அவர்களின் பாரம்பரிய முறைப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொள்ளும் காட்சி ஒன்றும் உண்டு. கர்ப்பிணி பெண் ஒருவரை நிற்க வைத்து பிரசவம் பார்த்து குழந்தை பிறந்த அடுத்த நொடியே அதை மண்ணில் போட்டு புதைக்கும் கொடூர காட்சியும் உண்டு. நிறைய மிருகங்களை கொலை செய்வதாக காட்டுகிறார்கள். அதிலும் ஆமை ஒன்றை துடிக்கத்துடிக்க கொள்ளும் காட்சி ரொம்ப மோசம். இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வன்முறைக்காட்சி, செங்குத்தாக நட்டுவைக்கப்பட்டிருக்கும் ஒரு ஈட்டியில் காட்டுவாசி பெண் ஒருத்தியின் ஆசன வாயை நுழைத்து ஈட்டியை வாய் வழியாக வெளியே எடுக்கிறார்கள். பார்க்க படம்.

ஒவ்வொரு முறை வன்முறை காட்சி நடக்கும்போதும் பேக்ரவுண்டில் கேட்கும் “உர்ர்ர்ர்ர்ர்... டூ.........ம்ம்ம்ம்... டூ...... டூ.... ம்ம்ம்ம்...” இசை செம.

நாகரிக மக்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் காட்டுவாசிகளை விட அநாகரிகமாக நடந்துக்கொள்கிறார்கள் என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்துகிறது. 1980ல் வெளியான இந்தப்படம், வெளிவந்த பத்து நாட்களில் தடை செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக சுமார் பத்து மடங்கு லாபம் பார்த்துவிட்டது. 

உபரித்தகவல்:
இந்தப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் யாரும் மீடியா முன் தோன்றக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார் இயக்குனர். அதாவது, அவர்கள் நிஜமாகவே இறந்துபோனதாக காட்டி படத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துவதே அவரது நோக்கம். ஆனால், விஷயம் போலீஸ், கேஸ், கைது என்று விவகாரமாகிவிட, வேறு வழியில்லாமல் நடிகர்களை மீடியா முன் தோன்ற வைத்திருக்கிறார்.

பதிவிறக்க லிங்குகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

படம் பார்த்ததில்லை, சாதாரமாக கணிபல் பற்றிய படங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை, ஆனால் உங்கள் விமர்சனம் பார்த்த பின் படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் வருகிறது.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

படம் அடிநாதமாக கூறும் கான்செப்ட் கவர்கிறது. ஹாலிவூட் படங்களின் சிறப்பியல்பு அவ்வப்போது வெளிவரும் அமெரிக்கர்கள் மீதான சுய விமர்சனங்களே, அவதார் படமும் அந்த வகையை சார்ந்ததே, (ஆஸ்கரில் பெரிதாக கண்டுகொள்ளப்படாது போனமைக்கு அதுவும் ஒரு காரணம்).

Anonymous said...

டைரக்டர் பாலாகிட்ட அசிஸ்டன்ட்டா சேர ஆசையா? எப்பப்பாரு ராத்திரில பேய்க்கதை சொல்லி எதுக்குயா பீதிய கெளப்புற..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா இருக்கிறீங்களா?

நானும் இந்தப் படம் பார்க்கிறேன்.

நான் பதிவெழுத வந்த ஆரம்ப காலத்தில் இப் படம் பற்றி எழுதியிருக்கிறேன்.

அத்தோடு இந்த கனிபல் மனிதர்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கேன்.

நேரம் இருந்தால் சும்மா பாருங்க்
http://www.thamilnattu.com/2011/03/18.html

நிரூபன் said...

விமர்சனம் கலக்கல் பாஸ்.

rajamelaiyur said...

விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகின்றது

Unknown said...

இது படமா இல்ல கொலைதாண்டவமா!

N.H. Narasimma Prasad said...

உண்மையில் இது போன்ற படங்களை நான் பார்ப்பதில்லை. இருந்தாலும் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

ஆக,டாகுமெண்டரி இல்லை இல்லையா?

டாகுமெண்டரி-ன்னு சொல்லி சினிமாக் காமிச்சிருக்காங்க...

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவமே வாசிக்கவே நெஞ்சம் பதறுதே இப்பிடியுமா...
??

Unknown said...

விமர்சனம் மிக அருமை.
கலக்கல்.

சென்னை பித்தன் said...

பயங்கரமா இருக்கே!

சென்னை பித்தன் said...

த.ம.8

Anonymous said...

எப்போதும் சாப்பிட உட்காரும்போது தான் இந்த படம் போடுவாங்க...
அவ்..

கலக்கல் விமர்சனம்...

இளம் பரிதி said...

padam partha athirvu 4 natkaluku vidathu....nalla nice review...

சி.பி.செந்தில்குமார் said...

பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Thooral said...

இந்த வார கடைசி இந்த படம் பாக்குறேன்

Thooral said...

texas chainsaw massacre 2001 newline cinema release பாரு..

பாலா said...

நண்பரே நான் இதுவரை பார்த்த படங்களிலேயே மிகவும் கொடூரமான படம் இதுதான். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அநியாயத்துக்கு பீதியை கிளப்பும். மிகுந்த நெஞ்சுரம் கொண்டவர்கள் மட்டுமே இதனை பார்க்க முடியும். இது குறித்து நான் எழுதிய பதிவு.
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_20.html

இதே மாதிரி தற்போது வந்துள்ள படம் Wrong Turn 4 பார்த்து விட்டீர்களா?