அன்புள்ள வலைப்பூவிற்கு,
சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். பட்டாளத்திலிருந்து முறைமாமன் வரும்போதே ராணுவ சீருடை அணிந்துக்கொண்டு தான் வருவார். சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி வரைக்கும் அப்படித்தான். நீங்க வேணும்ன்னா கிண்டலடித்து பொழுதை போக்கிக்கலாம். ஆனால் ராணுவ வீரர்கள் உண்மையிலேயே கப்பலில் ஏறும்போதும், கப்பலில் இருந்து இறங்கும்போதும் சீருடை அணிந்திருந்தார்கள். அதுதான் அவர்களுடைய விதிமுறை போல. சுமார் நூறு வீரர்கள், அந்தமானில் ட்யூட்டி போட்டுவிட்டதால் எங்களுடன் நன்கவுரியில் பயணிக்க வந்திருந்தார்கள்.
சம்பிரதாயங்களை கடந்துவந்து நன்கவுரியை கண்டபோது உண்மையில் நான் பிரமித்திருக்க வேண்டும். மாறாக, அதிர்ச்சியும் ஏமாற்றமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. காரணம், அதன் அருகிலேயே நின்றிருந்த Azamara Journey என்ற சொகுசுக்கப்பல். நன்கவுரியை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருந்திருக்கலாம்.
ராணுவ வீரர்கள், ஒருசில backpackக்குகள் தவிர்த்து என் சகபயணிகள் அனைவரும் சாமானியர்களாகவே இருந்தனர். அவர்களில் இருவர், ஸ்வராஜ்தீப், நன்கவுரி, அக்பர் என்று கப்பல்களைப் பற்றி டவுன் பஸ் போல பேசிக்கொண்டிருந்தனர். என்னுடைய எண்ணங்கள் தன் ஆதர்ச நடிகரின் படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் எடுத்துவிட்டு திரையரங்க வாயிலில் காத்திருக்கும் ரசிகனைப் போலவே இருந்தன. பெருமைக்காக சொல்லவில்லை, கப்பலில் பயணிகளை ஏற்றத் தொடங்கியதும் முதலில் நுழைந்தது அடியேன் தான். எனக்கான அறையில் மூன்று, இரண்டடுக்கு கட்டில்கள். சிறுபிள்ளை போல, மேலிருக்கும் கட்டிலை விருப்பமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்துவிட்டு நேரே, தலைமுடியை சிலுப்பிக்கொண்டு கப்பல் முக்குக்கு சென்று நின்று பார்த்தேன். அதற்குள் எங்கிருந்தோ ஒரு அதிகாரி வந்து விரட்டினார். கப்பலுக்குள் இருந்து கடலுக்குள் காறி உமிழ்ந்தேன். திருமண மண்டபங்களில் இங்குமங்கும் ஓடியாடும் குழந்தையின் பாங்கு எனக்குள் குடிபுகுந்திருந்தது.
நான்கு
மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல், துறைமுக சம்பிரதாயங்கள் முடிந்து ஏழு
மணிக்குதான் கிளம்பும் என்று முன்பே தெரிந்திருந்ததால் பதற்றமடையவில்லை.
மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததும், வேறு விதமான கலவரம் எனக்குள் பரவ
ஆரம்பித்தது. தமிழ் முகங்களை தேட வேண்டியதாகிவிட்டது. ஒரே குச் குச் ஹோத்தா
ஹை. காலக்கொடுமை. கப்பல் சென்னையில் நின்றுக்கொண்டிருக்கிறது. தமிழில்
பேசுபவர்கள் யாரேனும் தென்பட்டால், “ஓ... நீங்க தமிழா ?” என்று விளிக்க
வேண்டியிருக்கிறது.
கேண்டீனில் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கட்டிவிட்டால் மூன்று நாள் சாப்பாட்டுக்கு அட்டை கொடுத்துவிடுவார்கள். வேளாவேளைக்கு பணம் கட்டியும் சாப்பிடலாம். எப்படி செய்தாலும் அவர்கள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் சென்றால் மட்டுமே சாப்பாடு கிடைக்கும். இரவு ஏழு மணிக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கப்பலில் அசைவு தென்பட்டது. துரிதமாக அறைக்கு சென்று ஒரு Avomine-ஐ விழுங்கினேன். கடல் நோய்மை பற்றி இணையத்தில் படித்து, Avomine மாத்திரைகள், எழுமிச்சைப்பழம், ஊறுகாய் என்று சகல முன்னேற்பாடுகளுடன் சென்றிருந்தேன். கப்பலின் மேல் தளத்திற்கு வந்து பார்த்தேன். JESUS CALLS அலுவலகம் என் கண்களில் இருந்து மறைந்துக்கொண்டிருந்தது.
அடுத்த இரண்டரை நாட்களுக்கு திரும்பிய திசைகளிலெல்லாம் கடல், கடல், கடல், கடல் மட்டும்தான். செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டதும் தனிமையை உணர ஆரம்பித்துவிட்டேன். அறையில் நான்கு வட இந்தியர்கள் இந்தியில் கதைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னொருவர் லேப்டாப்பில் விண்ணைத் தாண்டி வருவாயா ஓடவிட்டு, கையில் குமுதம் வைத்து படித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இந்தியில் தான் பேசினார். ஜெயமோகனின் யானை டாக்டரை புரட்டியபடி உறங்கிவிட்டேன். எதிர்பார்த்தது போல கடல் நோய்மை என்னை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை. பங்க்கில் சில பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக அறிந்தேன்.
கப்பலில்
பயணிக்கும்போது சூர்யோதயம் ஒரு திவ்ய தரிசனம். முதல்நாள் அயர்ச்சியில்
எட்டு மணிவரைக்கும் தூங்கிவிட்டேன். மறுநாள் காலை ஐந்தே முக்காலுக்கெல்லாம்
விழித்துவிட்டேன். சூரியன் மேகக்கூட்டங்களுக்கு இடையே மறைந்திருந்தது.
நிறைய பேர் SLR கேமராவை தயாராக வைத்துக்கொண்டு சூரியனின் வருகைக்காக
காத்திருந்தனர். கேண்டீனில், ரொட்டி, அவித்த முட்டை, பால், திராட்சை பழரசம்
என்று ஆரோக்கியமான காலை உணவுகள் வழங்கப்படுகின்றன. மதிய, இரவு வேளைகளில்
மீன்குழம்பு, கோழிக்கறி, ஆட்டுக்கறி என்று ஏதாவது ஒரு அசைவ உணவை
படைத்துவிடுகிறார்கள்.
அடுத்தநாள்
அந்தமான்வாசிகள் உட்பட சில தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களிடம்
அந்தமான் குறித்த சந்தேகங்களை கேட்டு கேட்டு தெளிந்துக்கொண்டோம். தென்
தமிழகத்தில் இருந்து தேவர் பூஜை அசைன்மெண்டை முடித்து நேரே கப்பல்
ஏறியிருந்தான் குட்டி சாக்கு. கூட்டத்துல நம்ம ஆளுகளும் இருப்பாங்க
பார்த்து வெட்டுய்யா’ன்னு அரிவாளை கொடுத்து அனுப்பிய தன் தாயாரைப் பற்றி
பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு பிடித்த நடிகர் கார்த்திக்
என்று ஆரம்பத்தில் சொன்னபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும்.
இன்டர்நெட்டில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து, நிச்சயம் வரை சென்று
ஏமாந்திருந்த கண்ணன். சின்ன வயதிலிருந்தே மாவா போட்டு வாய் ஒடுங்கிப்போய்
விட்டது. தன்னால் வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்க முடியாது என்ற
ராஜூ. ம்ம்ம் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.
நன்கவுரியின்
மேல் தளத்தில் ஒருகாலத்தில் மதுக்கூடமும், நீச்சல் குளமும் இருந்ததற்கான
அறிகுறிகள் தென்படுகின்றன. யாரேனும் போதை அதிகமாகி கடலில் குதித்திருக்க
வேண்டும். இப்பொழுது மதுகூடத்தில் டீ, காபி மட்டும் விற்கப்படுகிறது.
நீச்சல் குளம் இருந்த இடம், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக பயன்படுகிறது.
ஆயினும், கப்பலில் உ.பா கிடைக்கவே செய்கிறது. மூன்றாம் தர சரக்கு, இரட்டை
விலையில். சிகரெட்டும் இரட்டை விலை தான். என் சகாக்கள் ஓயாமல்
ஊதிக்கொண்டிருக்க, சபை நாகரிகம் கருதி நானும் புகைக்க தொடங்கிவிட்டேன்.
தொலைக்காட்சி அறை ஒன்று உள்ளது. தினசரி ஒரு ஆங்கிலம், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு தமிழ்ப்படம் ஒளிபரப்பப்படும். முதல்நாள் பதினெட்டான் குடி என்ற சூரமொக்கை ஒளிபரப்பப்பட்டது. அதையும் ஒரு கும்பல் சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டிருந்தது. மறுநாள் ஜக்குபாய். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் தர்க்கத்துளைகளை கிண்டலடிப்பவர்களுக்கு, கவுண்டமணியை ஆஸ்திரேலிய அதிகாரியாக காட்டும்போது கிண்டலடிக்க தோன்றுவதில்லை.
நான் பயணித்த இரண்டாம் வகுப்பில் குளியலறைகள் சுமாராக இருந்தன. பங்க்கில் படுகேவலமாக இருந்திருக்கக்கூடும். கழிவறைக்கு சென்று குழாயை திருகினேன். தேகம் நாவலில் சாரு குறிப்பிடும் கரைசல் போலொரு திரவம் வெளிவந்தது. வெட்கக்கேடு. மூன்று நாட்கள் குளிக்கவும் இல்லை, கழிக்கவும் இல்லை. மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் டீலக்ஸ் அறையில் தங்கியிருந்த கண்ணனிடம் அனுமதிகேட்டு கழித்துவிட்டு வந்தேன்.
நண்பர்கள், புகை, அரட்டை, பலான கதைகள் - இப்படியே பொழுது போய்க்கொண்டிருந்தது. தனித்திருந்த நேரங்களில் புத்தகங்கள் உதவியது. ஜெயமோகனின் யானை டாக்டர், வாமு கோமுவின் கூப்பிடுவது எமனாக இருக்கலாம் - என்னுடைய புத்தக தேர்வுகள் மிக மோசமாக இருந்தன. எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்த காட்சிப்பிழை மட்டும் ஆறுதலூட்டியது. அதன் அட்டைப்படத்தில் புன்னகைத்த கன்றுக்குட்டியை பார்த்து வடஇந்தியர்கள் சிலாகித்துக்கொண்டிருந்தார்கள். நம்மாளு வேர்ல்டு பூரா பேமஸ்...!
கப்பலில் எங்களுடைய கடைசிநாள். சொல்லி வைத்தது போல சிகரெட் தீர்ந்திருந்தது. எங்களிடம் மட்டுமல்ல, யாரிடமும் இல்லை. கடல்லையே இல்லையாம்...! நண்பகல் தாண்டியதும் குட்டிக்குட்டியாய் ஆங்காங்கே தீவுகள் தெரியத்தொடங்கின. உள்ளூர்வாசிகள் முகத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க அவரவர் குடும்பங்களுக்கு போனில் பேசிக்கொண்டிருந்தனர். டால்பின் மீன்கள் துள்ளி குதித்து நம்மை வரவேற்கின்றன. அந்தா தெரியுது பாரு சிடியா டாப்பு, அதோ பாரு நார்த் பே என்று எதிர்ப்படும் தீவுகளை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். கப்பல் போர்ட் ப்ளேரை நெருங்கினாலும் மறுபடியும் துறைமுக சம்பிரதாயங்கள் முடிந்து, முறைப்படி கரையைத் தொட ஏழு மணியாகிவிட்டது. கதாநாயகர்களைப் போல இடமும் வலமும் ஒருமுறை பார்த்துவிட்டு அந்தமானில் கால் பதித்தேன்...!
முந்தய பதிவு: அந்தமான் பயணத்தொடர் ஆரம்பம்
சில கேள்விகளும் பதில்களும்:
1. கப்பலில் மது அனுமதி உண்டா ?
இல்லை. எனினும் white rum, vodka போன்றவற்றை வாட்டர் பாட்டிலில் அடைத்து எடுத்துச் செல்லலாம். கப்பலில் வெளிப்படையாக விற்க மாட்டார்கள். ஹாப், குவாட்டர் அளவுகளில் சரக்கு கிடைக்காது. கொள்ளை விலை இருக்கும். ஒரு FULL MC 750ரூ.
2. பாஸ்போர்ட் தேவையா ?
தேவையில்லை. நானும் கூட பாஸ்போர்ட் இல்லாமல் தான் சென்று வந்தேன். ஏதேனும் ஒரு புகைப்பட சான்று மட்டும் இருந்தால் போதுமானது.
3. கப்பலில் டிக்கெட் விலை ?
http://www.shipindia.com/services/passenger-services/andaman/andaman-fare-chart.aspx
4. அந்தமானை சுற்றிப்பார்க்க எவ்வளவு செலவாகும் ?
மிடில்கிளாஸ் மனப்பான்மையோடு சுற்றிப்பார்த்தால் ஒரு நபருக்கு 25,000ரூ வரை செலவில் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். இறுக்கிப்பிடித்தால் ஒரு நபருக்கு 15,000 ரூபாயில் கூட முடிக்கலாம்.
5. டிராவல் ஏஜெண்டுகள் தேவையா ?
முடிந்தவரை தவிர்க்கலாம். ஒருசில இடங்களுக்கு டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக செல்வதுதான் சிறந்தது. மற்றவைகளை நாமே நிர்வகிக்கலாம்.
6. அந்தமானில் அறை வாடகை எப்படி ?
என்னை தொடர்பு கொண்டால், நாளொன்றிற்கு 500ரூ வாடகைக்கு NON A/C அறை ஏற்பாடு செய்கிறேன். A/C அறைகள் குறைந்தபட்சம் நாளொன்றிற்கு 1000ரூபாயிலிருந்து தொடங்கும்.
மேலும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.
சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். பட்டாளத்திலிருந்து முறைமாமன் வரும்போதே ராணுவ சீருடை அணிந்துக்கொண்டு தான் வருவார். சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி வரைக்கும் அப்படித்தான். நீங்க வேணும்ன்னா கிண்டலடித்து பொழுதை போக்கிக்கலாம். ஆனால் ராணுவ வீரர்கள் உண்மையிலேயே கப்பலில் ஏறும்போதும், கப்பலில் இருந்து இறங்கும்போதும் சீருடை அணிந்திருந்தார்கள். அதுதான் அவர்களுடைய விதிமுறை போல. சுமார் நூறு வீரர்கள், அந்தமானில் ட்யூட்டி போட்டுவிட்டதால் எங்களுடன் நன்கவுரியில் பயணிக்க வந்திருந்தார்கள்.
சம்பிரதாயங்களை கடந்துவந்து நன்கவுரியை கண்டபோது உண்மையில் நான் பிரமித்திருக்க வேண்டும். மாறாக, அதிர்ச்சியும் ஏமாற்றமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. காரணம், அதன் அருகிலேயே நின்றிருந்த Azamara Journey என்ற சொகுசுக்கப்பல். நன்கவுரியை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருந்திருக்கலாம்.
ராணுவ வீரர்கள், ஒருசில backpackக்குகள் தவிர்த்து என் சகபயணிகள் அனைவரும் சாமானியர்களாகவே இருந்தனர். அவர்களில் இருவர், ஸ்வராஜ்தீப், நன்கவுரி, அக்பர் என்று கப்பல்களைப் பற்றி டவுன் பஸ் போல பேசிக்கொண்டிருந்தனர். என்னுடைய எண்ணங்கள் தன் ஆதர்ச நடிகரின் படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் எடுத்துவிட்டு திரையரங்க வாயிலில் காத்திருக்கும் ரசிகனைப் போலவே இருந்தன. பெருமைக்காக சொல்லவில்லை, கப்பலில் பயணிகளை ஏற்றத் தொடங்கியதும் முதலில் நுழைந்தது அடியேன் தான். எனக்கான அறையில் மூன்று, இரண்டடுக்கு கட்டில்கள். சிறுபிள்ளை போல, மேலிருக்கும் கட்டிலை விருப்பமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்துவிட்டு நேரே, தலைமுடியை சிலுப்பிக்கொண்டு கப்பல் முக்குக்கு சென்று நின்று பார்த்தேன். அதற்குள் எங்கிருந்தோ ஒரு அதிகாரி வந்து விரட்டினார். கப்பலுக்குள் இருந்து கடலுக்குள் காறி உமிழ்ந்தேன். திருமண மண்டபங்களில் இங்குமங்கும் ஓடியாடும் குழந்தையின் பாங்கு எனக்குள் குடிபுகுந்திருந்தது.
![]() |
இரண்டாம் வகுப்பு அறை |
கேண்டீனில் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கட்டிவிட்டால் மூன்று நாள் சாப்பாட்டுக்கு அட்டை கொடுத்துவிடுவார்கள். வேளாவேளைக்கு பணம் கட்டியும் சாப்பிடலாம். எப்படி செய்தாலும் அவர்கள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் சென்றால் மட்டுமே சாப்பாடு கிடைக்கும். இரவு ஏழு மணிக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கப்பலில் அசைவு தென்பட்டது. துரிதமாக அறைக்கு சென்று ஒரு Avomine-ஐ விழுங்கினேன். கடல் நோய்மை பற்றி இணையத்தில் படித்து, Avomine மாத்திரைகள், எழுமிச்சைப்பழம், ஊறுகாய் என்று சகல முன்னேற்பாடுகளுடன் சென்றிருந்தேன். கப்பலின் மேல் தளத்திற்கு வந்து பார்த்தேன். JESUS CALLS அலுவலகம் என் கண்களில் இருந்து மறைந்துக்கொண்டிருந்தது.
அடுத்த இரண்டரை நாட்களுக்கு திரும்பிய திசைகளிலெல்லாம் கடல், கடல், கடல், கடல் மட்டும்தான். செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டதும் தனிமையை உணர ஆரம்பித்துவிட்டேன். அறையில் நான்கு வட இந்தியர்கள் இந்தியில் கதைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னொருவர் லேப்டாப்பில் விண்ணைத் தாண்டி வருவாயா ஓடவிட்டு, கையில் குமுதம் வைத்து படித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இந்தியில் தான் பேசினார். ஜெயமோகனின் யானை டாக்டரை புரட்டியபடி உறங்கிவிட்டேன். எதிர்பார்த்தது போல கடல் நோய்மை என்னை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை. பங்க்கில் சில பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக அறிந்தேன்.
![]() |
சூர்யோதயம் |
![]() |
குட்டி சாக்கு |
![]() |
கப்பல் தோழர்களுடன் |
தொலைக்காட்சி அறை ஒன்று உள்ளது. தினசரி ஒரு ஆங்கிலம், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு தமிழ்ப்படம் ஒளிபரப்பப்படும். முதல்நாள் பதினெட்டான் குடி என்ற சூரமொக்கை ஒளிபரப்பப்பட்டது. அதையும் ஒரு கும்பல் சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டிருந்தது. மறுநாள் ஜக்குபாய். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் தர்க்கத்துளைகளை கிண்டலடிப்பவர்களுக்கு, கவுண்டமணியை ஆஸ்திரேலிய அதிகாரியாக காட்டும்போது கிண்டலடிக்க தோன்றுவதில்லை.
நான் பயணித்த இரண்டாம் வகுப்பில் குளியலறைகள் சுமாராக இருந்தன. பங்க்கில் படுகேவலமாக இருந்திருக்கக்கூடும். கழிவறைக்கு சென்று குழாயை திருகினேன். தேகம் நாவலில் சாரு குறிப்பிடும் கரைசல் போலொரு திரவம் வெளிவந்தது. வெட்கக்கேடு. மூன்று நாட்கள் குளிக்கவும் இல்லை, கழிக்கவும் இல்லை. மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் டீலக்ஸ் அறையில் தங்கியிருந்த கண்ணனிடம் அனுமதிகேட்டு கழித்துவிட்டு வந்தேன்.
நண்பர்கள், புகை, அரட்டை, பலான கதைகள் - இப்படியே பொழுது போய்க்கொண்டிருந்தது. தனித்திருந்த நேரங்களில் புத்தகங்கள் உதவியது. ஜெயமோகனின் யானை டாக்டர், வாமு கோமுவின் கூப்பிடுவது எமனாக இருக்கலாம் - என்னுடைய புத்தக தேர்வுகள் மிக மோசமாக இருந்தன. எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்த காட்சிப்பிழை மட்டும் ஆறுதலூட்டியது. அதன் அட்டைப்படத்தில் புன்னகைத்த கன்றுக்குட்டியை பார்த்து வடஇந்தியர்கள் சிலாகித்துக்கொண்டிருந்தார்கள். நம்மாளு வேர்ல்டு பூரா பேமஸ்...!
கப்பலில் எங்களுடைய கடைசிநாள். சொல்லி வைத்தது போல சிகரெட் தீர்ந்திருந்தது. எங்களிடம் மட்டுமல்ல, யாரிடமும் இல்லை. கடல்லையே இல்லையாம்...! நண்பகல் தாண்டியதும் குட்டிக்குட்டியாய் ஆங்காங்கே தீவுகள் தெரியத்தொடங்கின. உள்ளூர்வாசிகள் முகத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க அவரவர் குடும்பங்களுக்கு போனில் பேசிக்கொண்டிருந்தனர். டால்பின் மீன்கள் துள்ளி குதித்து நம்மை வரவேற்கின்றன. அந்தா தெரியுது பாரு சிடியா டாப்பு, அதோ பாரு நார்த் பே என்று எதிர்ப்படும் தீவுகளை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். கப்பல் போர்ட் ப்ளேரை நெருங்கினாலும் மறுபடியும் துறைமுக சம்பிரதாயங்கள் முடிந்து, முறைப்படி கரையைத் தொட ஏழு மணியாகிவிட்டது. கதாநாயகர்களைப் போல இடமும் வலமும் ஒருமுறை பார்த்துவிட்டு அந்தமானில் கால் பதித்தேன்...!
(தொடரும்)
முந்தய பதிவு: அந்தமான் பயணத்தொடர் ஆரம்பம்
சில கேள்விகளும் பதில்களும்:
1. கப்பலில் மது அனுமதி உண்டா ?
இல்லை. எனினும் white rum, vodka போன்றவற்றை வாட்டர் பாட்டிலில் அடைத்து எடுத்துச் செல்லலாம். கப்பலில் வெளிப்படையாக விற்க மாட்டார்கள். ஹாப், குவாட்டர் அளவுகளில் சரக்கு கிடைக்காது. கொள்ளை விலை இருக்கும். ஒரு FULL MC 750ரூ.
2. பாஸ்போர்ட் தேவையா ?
தேவையில்லை. நானும் கூட பாஸ்போர்ட் இல்லாமல் தான் சென்று வந்தேன். ஏதேனும் ஒரு புகைப்பட சான்று மட்டும் இருந்தால் போதுமானது.
3. கப்பலில் டிக்கெட் விலை ?
http://www.shipindia.com/services/passenger-services/andaman/andaman-fare-chart.aspx
4. அந்தமானை சுற்றிப்பார்க்க எவ்வளவு செலவாகும் ?
மிடில்கிளாஸ் மனப்பான்மையோடு சுற்றிப்பார்த்தால் ஒரு நபருக்கு 25,000ரூ வரை செலவில் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். இறுக்கிப்பிடித்தால் ஒரு நபருக்கு 15,000 ரூபாயில் கூட முடிக்கலாம்.
5. டிராவல் ஏஜெண்டுகள் தேவையா ?
முடிந்தவரை தவிர்க்கலாம். ஒருசில இடங்களுக்கு டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக செல்வதுதான் சிறந்தது. மற்றவைகளை நாமே நிர்வகிக்கலாம்.
6. அந்தமானில் அறை வாடகை எப்படி ?
என்னை தொடர்பு கொண்டால், நாளொன்றிற்கு 500ரூ வாடகைக்கு NON A/C அறை ஏற்பாடு செய்கிறேன். A/C அறைகள் குறைந்தபட்சம் நாளொன்றிற்கு 1000ரூபாயிலிருந்து தொடங்கும்.
மேலும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
32 comments:
பதிவு சற்றே நீளமாகி விட்டது போல... தேவை கருதி நிறைய புகைப்படங்களை இணைக்க வேண்டியதாகி விட்டது...
///பெருமைக்காக சொல்லவில்லை, கப்பலில் பயணிகளை ஏற்றத் தொடங்கியதும் முதலில் நுழைந்தது அடியேன் தான்.//
உங்க வேகம் தான் மேதை படம் பார்க்கும் போது யாம் அறிந்தது தானே ....அசுர வேகம் ...
அஞ்சாசிங்கம், ஏன் டாஸ்மாக் கவுன்ட்டர்களில் பார்த்ததில்லையா... அதற்கெல்லாம் மெலிதான உடல்வாகு வேண்டும்...
sutthi paatha story solluwinga thane ?
கண்டிப்பா சொல்லுவேன் ஹாஜாஸ்ரீ...
///மூன்று நாட்கள் குளிக்கவும் இல்லை, கழிக்கவும் இல்லை. மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் டீலக்ஸ் அறையில் தங்கியிருந்த கண்ணனிடம் அனுமதிகேட்டு கழித்துவிட்டு வந்தேன்.///
அடங்கப்பா சாமி இதை பெருமையாக வேறு சொல்கிறாய்
///மேலும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.///
அந்தமானில் 'மற்றதெல்லாம் ' எப்படி ?
கொலம்பஸ் கூட இது போன்று குறிப்புகள் எழுதியிருக்கமாட்டார்
//சிறுபிள்ளை போல, மேலிருக்கும் கட்டிலை விருப்பமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
ஏலே.. பிலாசபி உனக்கு தான் heightனாலே பயமாச்சே...
//கப்பலுக்குள் இருந்து கடலுக்குள் காறி உமிழ்ந்தேன்.
உன் மூஞ்சில என் ....கைய வைக்க
// மூன்று நாட்கள் குளிக்கவும் இல்லை, கழிக்கவும் இல்லை. மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் டீலக்ஸ் அறையில் தங்கியிருந்த கண்ணனிடம் அனுமதிகேட்டு கழித்துவிட்டு வந்தேன்.
ஐயோ அபச்சாரம் அபச்சாரம்.........
அருமையான பதிவு ..படிக்கும் போதே ...ஒரு முறை அந்தமான் கடல் பயணம் போக வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது....பிலாசபி..
பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் ..........
///மேலும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.///
அந்தமானில் கில்மா கிடைக்குமா, கிடைக்குமெனில் எல்லாம் இந்தியா சரக்கா, இல்லை பாரீன் சரக்கா.
உங்க கப்பல்ல தீ பிடிக்கலையா? -:)
உங்களைப்பார்த்து நிறைய பேர் அந்தமான் போவார்கள் என்பது உறுதி ...Nice job பிரபா...தொடருங்கள்...
அந்தமான் தொடருங்கள். வருகின்றோம்.
மணி & ஆரூர் மூனா, இந்த கேள்வியை எதிர்பார்த்தேன்... ஆனால் என்னிடம் பதில் இல்லை... அதுகுறித்த முயற்சிகள் எதையும் நான் மேற்கொள்ளவில்லை...
அது அங்கே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்... ஆனால் வெளிப்படையாக நான் கேள்விப்படவில்லை...
நல்லா தொகுத்து இருக்கீங்க பிரபா....எனக்கு ரெம்ப உதவியா இருக்கும்..அடுத்த முறை நானும் போவேன்...நன்றி...தொடர்கிறேன்..
Nice write-up.
I have questions.
//அந்தமானை சுற்றிப்பார்க்க எவ்வளவு செலவாகும் ?
மிடில்கிளாஸ் மனப்பான்மையோடு சுற்றிப்பார்த்தால் ஒரு நபருக்கு 25,000ரூ வரை செலவில் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். இறுக்கிப்பிடித்தால் ஒரு நபருக்கு 15,000 ரூபாயில் கூட முடிக்கலாம்.//
Is this inclusive of ship fare?
Is the fare indicated in shipindia website two way fare or for one way?
Thanks.
One more question :
How many days is the trip in Andaman, excluding travel time?
கப்பலுக்குள் இருந்து கடலுக்குள் காறி உமிழ்ந்தேன்//
நீண்ட கால ஆசையா?
தேவர் பூஜை அசைன்மெண்டை
:-)
நன்றி விக்கி மாம்ஸ்...
தமிழன், நான் சொன்ன தொகை பயணச்செலவு, தங்குமிடம், சுற்றிப்பார்க்க மூன்றையும் சேர்த்து தான்...
SCI தளத்திலிருக்கும் கட்டணம் ஒருவழி பயணத்திற்கு மட்டுமே...
6 நாட்கள் அந்தமானில் தங்குவது நலம்... நேரம் இல்லையென்றால் சில இடங்களை தவிர்த்துவிட்டு 4 நாட்கள் தங்கலாம்... நான் சொல்வது பயண நேரத்தை சேர்க்காமல்...
கப்பலில் பயணம் செய்தால் 4 நாட்கள் ஸ்வாஹா... நிறைய நாட்கள் கைவசம் வைத்திருப்பவர்கள் மட்டும் கப்பலில் பயணிக்கலாம்... மற்றவர்களுக்கு விமானம் தான் சரி...
சுவாரசியமான தொடர்! கார்த்தி பயணித்த கப்பலில் ஏறியாயிற்று! பிரபு தங்கிய ஜெயிலுக்கு சென்றீர்களா?! :)
//(தொடரும்) //
நன்றி பிரபாகரன், தகவல்களுக்கு. இந்த தொடரை வாசிக்க ஆவலாய் உள்ளேன்
What about azamara journey ships fares
அனானி, Azamara Journey உலகம் முழுக்க சுற்றிவரும் கப்பல்... அது சென்னைக்கு எப்போதாவது ஒருமுறை தான் வரும்...
அவ்வாறு சென்னைக்கு வரும்போது, அதன் பயணம் சென்னையில் துவங்கி அந்தமான், பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என்று பதினைந்து நாட்கள் சுற்றி வரும்... அவ்வாறான பதினைந்து நாள் பயணத்திற்கு டிக்கெட் விலை 3500 அமெரிக்க டாலர்களில் துவங்குகிறது...
nice post
கப்பல் பிரயாண ஆசையை உங்கள் பதிவு தூண்டி விட்டது உண்மை ...
நான் மற்றும் என் நண்பர்கள் இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளி 27.09.2013 அன்று விமானம் மூலம் அந்தமான் செல்கிறோம் ..
திரும்ப வரும் போது கப்பலில் வர வற்புறுத்துவேன்....
அந்தமானில் நிரந்தற குடியேற முடியுமா
தனி நபர் நோ மனைவி நோ புள்ளகுட்டி
அங்கயே எதாவது ஒரு வேல பார்த்து வாழ முடியுமா ?
6381087723 வாட்சாஃப்
Mgkr2307@gmail.com
தேனிஜிகேஆர் Facebook
நன்றி .
நாங்கள் போக வேண்டும் அதற்கு சரியான Travels இருந்தால் சொல்லுங்கள்
61420
614208
Post a Comment