19 February 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் – மயிரே இல்லாத வழுக்கை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ட்ரைலர் பார்த்தபோதே பாடாவதியான படம் என்று தெரிந்தபின்னும் இந்தப் படத்தை பார்க்க இரண்டு காரணங்கள் – ஒன்று “ஒருமுறை... ஒருமுறை...” பாடல், மற்றொன்று என் கன்னுக்குட்டி அமலா பால்.

ஹீரோ வார நாட்களில் ஒரு மிகப்பெரிய ஐ.டி நிறுவனத்தில் அப்பாட்டாக்கர். வார இறுதியானால் பெங்களூரில் இருக்கும் தன் காதலி சாருவுடன் ஐக்கியமாகி விடுவார். ஹீரோவின் கம்பெனிக்கு புது CEOவாக வரும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்யப்பட்ட லதாவும் சாருவும் ஒரே சாயலில் இருக்கிறார்கள். லதாவுக்கும் ஹீரோவுடன் ஏற்கனவே பழகியது போன்றதொரு உணர்வு. ஒரு விபத்தில் ஹீரோ படுகாயம் அடைகிறார். அப்போது ஹீரோவின் ஆழ்மனதை கிளறிப்பார்க்க, சாரு, லதா, சாருலதா, சைக்கலாஜிக்கல்லி, பேசிக்கல்லி, கெமிக்கல்லி அதர்வாவும் அமலா பாலும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை.

அதர்வா – அந்த ராம்ப் வாக் நடையழகும், சுந்தரத்தமிழ் வசன உச்சரிப்பும், ஆக்கக்க தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அஜித் குமார் தயார். அமலா பாலுடன் ரொமான்ஸ் செய்வதையும் சரி, அடிதடி ஆக்குசன் காட்சிகளையும் சரி, சத்தியமாக தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அமலா பால் – Very Beautiful. அதர்வாவிற்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்து அடிக்கடி கடுப்பை கிளப்புகிறார். நடிப்பை பொறுத்தவரையில் பாஸ்மார்க் போடலாம். ஒரிஜினலாக வெட்கப்படுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. ஒரு ஹீரோயினுக்கு இந்த அளவு நடிப்பே தாராளமானது.

சந்தானம், நிறைய காட்சிகளில் சலிப்பூட்டுகிறார் சில காட்சிகளில் மட்டும் சிரிப்பூட்டுகிறார். ஜெயபிரகாஷை அமலா பால் “அங்கிள்... அங்கிள்...” என்று கூப்பிடுகிறார். அந்த வேலையை அவர் கரெக்டாக செய்திருக்கிறார். அதர்வாவின் அம்மாவாக அனுபமா குமார். பாவம்யா அவங்க ஹீரோயினா நடிக்க வந்தவங்க. அவங்களுக்கு போய், மொட்டையடிச்சு அழ வச்சு வேடிக்கை பாக்குது பாழாப்போன கோலிவுட். மகன் முதல்முறையாக நடந்துவரும்போது பெருமையும், ஆனந்தக்கண்ணீரும் கலந்த ஒரு பார்வை அவருடைய நடிப்பிற்கு சாம்பிள். நல்லவேளை அந்த ரோலுக்கு மொதல்ல சிம்ரனை கூப்பிட்டாங்களாம். அப்புறம் நாசர், நாலஞ்சு சைக்கோ வில்லன்கள் எல்லாம் இருக்காங்க.

ஜிவி பிரகாஷ் இசையில் ஒருமுறை முதல்முறையே பச்சக். ஓ சுனந்தா பாடலும் க்ளைமாக்ஸ் அருகே வரும் ஒரு குத்துப்பாடலும் ஓகே ரகம். பின்னணி இசை படுரொமாண்டிக்.

கலை இயக்குனர் கிரணைபாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக பெங்களூரு ஃபிளாட்டில் Interior Decorationல் அசத்தியிருக்கிறார். 

இயக்குனர் எல்ரெட் குமார், காதலுங்கறது மரணமே இல்லாத இடம், மயிரே இல்லாத தலை இந்தமாதிரி படுமொக்கையான வசனங்களை வைத்து இந்தக்காலத்து பசங்களை ஏமாற்ற முடியாது. Try to think practical. அம்மாக்கிட்ட சொல்லி காம்ப்ளான் வாங்கிக்குடிங்க பாஸ்.

ஏகப்பட்ட தமிழ் சினிமா க்ளிஷேக்கள். ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை.

Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்) எனக்கு படம் கொஞ்சம் பிடித்திருந்தது என்பது உண்மை. But when it come to others, இந்தமாதிரி படத்தையெல்லாம் பார்த்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம். அதையும் மீறி பார்த்தே தீருவேன் என்று அடம் பிடித்தீர்களானால், உங்களுக்கு வந்திருக்குற வியாதியின் பெயர் மொக்கையோபிலியா. அதாவது இந்த வியாதி வந்திருக்குறவங்க மொக்கை படங்களை தியேட்டர் தியேட்டரா தேடிப்போய் பார்ப்பாங்களாம். படம் பயங்கர மொக்கையாக இருந்தாலும் சூப்பரா இருக்குறதா அவங்களாகவே கற்பனை பண்ணிப்பாங்களாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

65 comments:

  1. அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...

    ReplyDelete
  2. படம் அம்புட்டு மொக்கையாகவா இருக்கு...

    ReplyDelete
  3. அமலா பால பார்க்குற படங்களும் வெளங்கமாட்டுது பாஸ் .. என்னா கிக்கு!

    ReplyDelete
  4. ///அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...///

    எப்போதான் உனக்கு வெளங்கிச்சு...?

    ReplyDelete
  5. நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்)

    -ஐயய்யோ... அவனா நீயி! நான் ஓடிர்றேம்பா...

    ReplyDelete
  6. சரி விடுங்க, அமலாக்காக இன்னும் ஒரு தடம் பாக்கலாம் ..

    www.sathivenkat.blogspot.in
    www.sathyvenkat.blogspot.in

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம் ! படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது!

    ReplyDelete
  8. எதுக்கும் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். ஆனால் அமலாவுக்காக கட்டாயம் பார்ப்பேன்.

    ReplyDelete
  9. பால் குடிக்கிற புள்ளயா நீயி.....

    ReplyDelete
  10. ஏனப்பா தண்ணிய போட்டா இப்படித்தான் கலாய்ப்பதா, நானும் போட்டால் தானே அந்த இடத்தில் சமத்துவம் வரும். பதிலுக்கு பதில் கலாய்த்துக் கொள்ளலாம். ஏன்னா புள்ளைங்களோ போங்கப்பா.

    ReplyDelete
  11. #(பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்)#

    ஹி ஹி....நக்கல் தூக்கல் நண்பா..

    ReplyDelete
  12. உஷார் படுத்தியதற்கு நன்றிகள்.ரொம்ப பில்டப் குடுக்கும்போதே மைல்டா டவுட் வந்திச்சு.இந்த மாதிரியான கதையெல்லாம் மசாலால ஊறவச்சு,பொரிச்சு,தாளிச்சு எடுக்க ஷங்கராலதான் முடியும்...

    ReplyDelete
  13. மேதை படம் பார்த்ததுல இருந்தே தலைவர் ஒரு மாதிரியாத்தான் இருக்காரு போல.....

    ReplyDelete
  14. //// மற்றொன்று என் கன்னுக்குட்டி அமலா பால்.////

    வெளங்கிரும்......

    ReplyDelete
  15. /////வார இறுதியானால் பெங்களூரில் இருக்கும் தன் காதலி சாருவுடன் ஐக்கியமாகி விடுவார். /////

    ஆரம்பமே சரியில்லியே.....?

    ReplyDelete
  16. ///// அமலா பாலுடன் ரொமான்ஸ் செய்வதையும் சரி, அடிதடி ஆக்குசன் காட்சிகளையும் சரி, சத்தியமாக தாங்கிக்கொள்ள முடியவில்லை.//////

    ஹீரோன்னா அப்படித்தாண்ணே இருப்பாங்க, இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி?

    ReplyDelete
  17. ////ஒரிஜினலாக வெட்கப்படுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. ////

    ஏதோ அந்த புள்ள சிரிக்கிறது அப்படி அமைஞ்சு போச்சு, அத நம்பி இன்னும் எத்தன பேரு ஏமாறப் போறாங்களோ?

    ReplyDelete
  18. /////ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை./////

    இப்படியெல்லாம் காட்டலேன்னா யார் ஹீரோ யார் ஹீரோயின்னு படம் பார்க்கறவங்க மறந்துடுவாங்கப்பு.......

    ReplyDelete
  19. ////Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால்/////

    அப்போ ஆனந்த தொல்லை பாத்தவுடனே முழு சைக்கோவா ஆகிடுவீங்களாண்ணே?

    ReplyDelete
  20. ///எனக்கு படம் கொஞ்சம் பிடித்திருந்தது என்பது உண்மை.////

    பார்ரா........?

    ReplyDelete
  21. /////Philosophy Prabhakaran said...
    அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...//////

    படம் உங்களுக்கு வெளங்க மாட்டேங்குதா இல்ல படமே வெளங்கமாட்டேங்குதா?

    ReplyDelete
  22. why this kolai very????
    ithukkuthaan appave sonnom...METHAI
    pakkaatheengannu...
    parunga..ippa enna aachi...????
    yaru petha pullaiyo...ippadi polambuthu...

    ReplyDelete
  23. நேற்றே விமர்சனம் படித்துவிட்டேன்..இன்று ஒரு முறை படித்தேன்.
    அழகான விமர்சனம்..சிறப்பாக எழுத்துக்கள்..படம் இப்பொழுது பார்ப்பதாக இல்லை.காண கிடைத்தால்தான் படம்.நன்றி.

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  24. //சுந்தரத்தமிழ் வசன உச்சரிப்பும், ஆக்கக்க தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அஜித் குமார் //

    ஓ...அஜித் தமிழ்தான் பேசுறாப்டியா பிரபா? ஹிஹி!

    ReplyDelete
  25. //Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால்//

    சென்னை வந்தால் சந்திக்கலாம் என்று இருக்கிறேன் பயமுறுத்தாதிங்க!

    ReplyDelete
  26. அமலாபால் படம் போடாததை வருதத்துடன் கண்டிக்கிறேன்!படம் ஒர்த் ஆகுலையா? படு மொக்கையா? விமர்சனம் வழக்கம் போல் ராக்ஸ்! நச்!

    ReplyDelete
  27. @ கோவை நேரம்
    // படம் அம்புட்டு மொக்கையாகவா இருக்கு... //

    எம்புட்டு மொக்கைன்னு பதிவிலேயே சொல்லியிருக்கேனே...

    ReplyDelete
  28. @ ஜேகே
    // அமலா பால பார்க்குற படங்களும் வெளங்கமாட்டுது பாஸ் .. என்னா கிக்கு! //

    Watch காதலில் சொதப்புவது எப்படி...?

    ReplyDelete
  29. @ தங்கம் பழனி
    // எப்போதான் உனக்கு வெளங்கிச்சு...? //

    எனக்கு வெளங்குச்சு தல... படம்தான் வெளங்கலை...

    ReplyDelete
  30. @ கணேஷ்
    // ஐயய்யோ... அவனா நீயி! நான் ஓடிர்றேம்பா... //

    இதுக்கே இப்படியா...? இன்னும் சொல்லப்படாத பர்சனல் பக்கங்கள் நிறைய இருக்கின்றன...

    ReplyDelete
  31. @ Sathish
    // சரி விடுங்க, அமலாக்காக இன்னும் ஒரு தடம் பாக்கலாம் .. //

    என்னது இன்னும் வேற ஒரு தடவையா... சாமீ...

    ReplyDelete
  32. @ திண்டுக்கல் தனபாலன்
    // நல்ல விமர்சனம் ! படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது! //

    நன்றி தனபாலன்....

    ReplyDelete
  33. @ ஹாலிவுட்ரசிகன்
    // எதுக்கும் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். ஆனால் அமலாவுக்காக கட்டாயம் பார்ப்பேன். //

    அதுக்கு மேல உங்க இஷ்டம்...

    ReplyDelete
  34. @ மனசாட்சி
    // பால் குடிக்கிற புள்ளயா நீயி..... //

    அதை விடுங்க... பதிவுக்கு வாங்க தல...

    ReplyDelete
  35. @ ஆரூர் மூனா செந்தில்
    // ஏனப்பா தண்ணிய போட்டா இப்படித்தான் கலாய்ப்பதா, நானும் போட்டால் தானே அந்த இடத்தில் சமத்துவம் வரும். பதிலுக்கு பதில் கலாய்த்துக் கொள்ளலாம். ஏன்னா புள்ளைங்களோ போங்கப்பா. //

    பதறுகளா... எதுல எல்லாம் சமத்துவம்...?

    ReplyDelete
  36. @ NKS.ஹாஜா மைதீன்
    // ஹி ஹி....நக்கல் தூக்கல் நண்பா.. //

    நன்றி ஹாஜா...

    ReplyDelete
  37. @ மாயன்:அகமும் புறமும்
    // உஷார் படுத்தியதற்கு நன்றிகள்.ரொம்ப பில்டப் குடுக்கும்போதே மைல்டா டவுட் வந்திச்சு.இந்த மாதிரியான கதையெல்லாம் மசாலால ஊறவச்சு,பொரிச்சு,தாளிச்சு எடுக்க ஷங்கராலதான் முடியும்... //

    நல்லவேளை அந்த மாதிரி கொடுமை எதுவும் நடக்கலை...

    ReplyDelete
  38. @ பன்னிக்குட்டி ராம்சாமி
    // மேதை படம் பார்த்ததுல இருந்தே தலைவர் ஒரு மாதிரியாத்தான் இருக்காரு போல..... //

    நாங்கல்லாம் அப்பவே அப்படி...

    // ஹீரோன்னா அப்படித்தாண்ணே இருப்பாங்க, இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி? //

    ஓ அதர்வா தம்பிதான் ஹீரோவா... சொல்லவே இல்லை...

    // அப்போ ஆனந்த தொல்லை பாத்தவுடனே முழு சைக்கோவா ஆகிடுவீங்களாண்ணே? //

    இந்த மேட்டர் பற்றிய நான் சில நாட்கள் கழித்து எழுதப்போகும் பதிவில் சொல்கிறேன்...

    // படம் உங்களுக்கு வெளங்க மாட்டேங்குதா இல்ல படமே வெளங்கமாட்டேங்குதா? //

    படமே வெளங்கமாட்டேங்குது...

    ReplyDelete
  39. @ NAAI-NAKKS
    // why this kolai very????
    ithukkuthaan appave sonnom...METHAI
    pakkaatheengannu...
    parunga..ippa enna aachi...????
    yaru petha pullaiyo...ippadi polambuthu... //

    என்ன பண்றது நக்ஸ்... புலம்புறதே நம்ம ஃபுல் டைம் ஜாப் ஆயிடுச்சு...

    ReplyDelete
  40. @ Kumaran
    // நேற்றே விமர்சனம் படித்துவிட்டேன்..இன்று ஒரு முறை படித்தேன். //

    U r really great...

    // சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்.. //

    ரொம்ப காலமா இதே லிங்க்கையே தர்றீங்க... அடுத்த பதிவு எப்ப வரும்...

    ReplyDelete
  41. @ வீடு K.S.சுரேஸ்குமார்
    // ஓ...அஜித் தமிழ்தான் பேசுறாப்டியா பிரபா? ஹிஹி! //

    அப்படித்தான் சொல்றாங்க...

    // சென்னை வந்தால் சந்திக்கலாம் என்று இருக்கிறேன் பயமுறுத்தாதிங்க! //

    அடுத்த ஆடு ரெடி... Get ready guys...

    // அமலாபால் படம் போடாததை வருதத்துடன் கண்டிக்கிறேன்! //

    மூட் இல்லை...

    ReplyDelete
  42. //அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...//

    பயபுள்ளை தண்ணியடிக்கிறது வீட்டுக்கு தெரியாதுன்னு சொன்னுச்சு!, ஆனா தன்னோட பிளாக் படிக்கிறாங்கன்னும் சொன்னுச்சு!!...

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்)///
    .
    .
    ஹீ ஹீ ஹீ!ஹீரோயினுக்கு சாரு பேரை வெச்சதாலேயே படம் ஊத்திகிச்சோ?

    ReplyDelete
  45. //ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை.//பிரபாகரன் டச்சா ம்ம் எப்படி பாஸ் தலைப்புலாம் இப்படி (மயிரே இல்லாத வழுக்கை)

    ReplyDelete
  46. அக அக ஆகா ஒரே கொழப்பமா இருக்கு பாஸ் . ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் 250 பிரிண்ட்
    போடப்பட்டு இருக்காம் . என்னத்த சொல்ல . அது சரி elred குமார் யாரு ?

    ReplyDelete
  47. //என் கன்னுக்குட்டி அமலா பால்.//

    தமிழன் மலயாளிகளோட சண்டை பிடிச்சாலும் மலயாள பிகருகள விடமாட்டானுகளே,,

    தமிழேண்டா!

    ReplyDelete
  48. Dear Prabha,

    Like your cinima vimarsanam.....

    ReplyDelete
  49. @ கே.ஆர்.பி.செந்தில்
    // பயபுள்ளை தண்ணியடிக்கிறது வீட்டுக்கு தெரியாதுன்னு சொன்னுச்சு!, ஆனா தன்னோட பிளாக் படிக்கிறாங்கன்னும் சொன்னுச்சு!!... //

    அதெல்லாம் அப்படித்தான் தல... சில விஷயங்கள் தெரியும் ஆனா தெரியாது...

    ReplyDelete
  50. @ வடக்குபட்டி ராம்சாமி
    // இந்த படத்தில் சின்மயி அம்மையாரின் கட்டை ஆண் குரலை பற்றி ஒரு கருத்தும் இல்லையா //

    ஒருகாலத்தில் எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரே மாதிரி டெம்ப்ளேட் குரல் கொடுத்துக்கொண்டிருந்த சவிதா மேடமை விட சின்மயி எவ்வளவோ பரவாயில்லை...

    மீனவர் பிரச்சனையின் போது சின்மயி மீனவர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய மறுத்தது உங்களுடைய இந்த அளவு கடந்த வன்மத்திற்கு காரணம் என்று எண்ணுகிறேன்...

    ReplyDelete
  51. @ PREM.S
    // எப்படி பாஸ் தலைப்புலாம் இப்படி (மயிரே இல்லாத வழுக்கை) //

    நீங்க வேற... இப்பதான் ஒரு நண்பர் என்னோட அர்த்தம்கெட்ட தலைப்பை படிச்சிட்டு போனில் வசையருவி பொழியுறார்...

    ஒருத்தன் அர்த்தமே இல்லாம படம் எடுக்குறான்... ஒருத்தன் அர்த்தமே இல்லாம புத்தகம் எழுதுறான்... அவனையெல்லாம் விட்டுர்றானுங்க... Bloody buggers...

    ReplyDelete
  52. @ ஜி.ராஜ்மோகன்
    // அக அக ஆகா ஒரே கொழப்பமா இருக்கு பாஸ் . ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் 250 பிரிண்ட்
    போடப்பட்டு இருக்காம் . என்னத்த சொல்ல . அது சரி elred குமார் யாரு ? //

    சோக்கா ஒரு ட்ரைலர் ரெடி பண்ணாலே போதும் தல... போட்ட காசை தட்டிடுவாங்க...

    ReplyDelete
  53. @ Riyas
    // தமிழன் மலயாளிகளோட சண்டை பிடிச்சாலும் மலயாள பிகருகள விடமாட்டானுகளே,,

    தமிழேண்டா! //

    அது கற்பனைத்தமிழ்... இது விற்பனைத்தமிழ்...

    ReplyDelete
  54. @ Ramesh Mani
    // Dear Prabha,

    Like your cinima vimarsanam..... //

    நன்றி நண்பா...

    ReplyDelete
  55. அமலா பாலை பாத்தா காசுக்கு நான் தேங்காய் பால் இடியாப்பமாவது சாப்போட்டிருப்பேன்!மணி வேஸ்ட் எனேர்ஜி வேஸ்ட் டைம் வேஸ்ட்!

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. விமர்சனம் அருமை பிரபா. பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  59. சார், இது கெடக்குது கழுத, நீங்க காதலில் சொதப்புவது எப்படிக்கு இன்னும் விமர்சனம் போடலியா?

    ReplyDelete
  60. @ சொறியார், வடக்குபட்டி ராம்சாமி, விடுதலை கரடி, மனித புத்திரன்

    இந்த நாலு ப்ரோபைலும் ஒரே ஆளோடது தான்னு எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகம் இருந்தது... அது இன்னைக்கு கிளியர் ஆயிடுச்சு...

    நானும் ஒரே பதிலாவே சொல்லிடுறேன்...

    சுசித்ராவின் குரல் விசித்திரமான குரல் அது யாருக்கும் பொருந்தாது... ரொம்ப செயற்கையா இருக்கும்... அதனால ஊத்திக்கிச்சு....

    ஏக் தீவானா தா தோல்விக்கு காரணம் ஹீரோயினுடைய பின்னணி குரல் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது...

    அவாவா அவாவா குரல்ல பேசணும் என்பதே என்னுடைய அவா... ஆனா இப்பல்லாம் எந்த நடிகைக்கு தமிழ் தெரியுது...

    பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவிற்கு குரல் கொடுத்த ரதி என்னுடைய சாய்ஸ்...

    ReplyDelete
  61. @ N.H.பிரசாத்
    // விமர்சனம் அருமை பிரபா. பகிர்தலுக்கு நன்றி. //

    நன்றி பிரசாத்...

    ReplyDelete
  62. @ Dr. Butti Paul
    // சார், இது கெடக்குது கழுத, நீங்க காதலில் சொதப்புவது எப்படிக்கு இன்னும் விமர்சனம் போடலியா? //

    படம் பார்த்தாச்சு தல... டைப் அடிக்க நேரமில்லை...

    ReplyDelete
  63. கலக்கல் விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete