அன்புள்ள வலைப்பூவிற்கு,
வசீகரமாய் ஒரு தலைப்பு, ட்ரைலர் பார்க்கும் முன்பு வரை புஷ்கர் - காயத்ரி, வெங்கட் பிரபு ஸ்டைலில் கலாட்டா படமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். ட்ரைலர் பார்த்தபிறகு ஏதோ க்ரைம் த்ரில்லரோ, சைக்கோ த்ரில்லரோ கிடைக்கப்போகிறது என்று இன்னும் ஆர்வமானேன். தேவி கலா திரையரங்கம், முதல் வரிசை. படம் தொடங்குவதற்கு முன்பு ஏனோ பொல்லாங்கு நினைவுக்கு வந்தது.
வழக்கமாக திரைக்கதை முழுவதையும் எழுதிவிடும் பதிவர்கள் கூட பீட்சாவிற்கு ஸ்பாய்லர் எழுதி விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பதே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நானும் அதையே பின்பற்ற விரும்புகிறேன். படம் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பிட்ஸ் அண்ட் பீசஸாக பதிவு செய்கிறேன்.
விஜய் சேதுபதியை சுந்தர பாண்டியனில் பார்த்துவிட்டு ஏதோ ஹீரோ நண்பர், அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு வைத்திருந்தேன். அவரோ படு இயல்பான நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். நிறைய காட்சிகளில் அவருடைய இடத்தில் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறார்.
கண்ணுக்கு அழகாக ரம்யா நம்பீசனும், எஸ்.எஸ்.மியூசிக் செல்லக்குட்டி பூஜாவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ரசிப்பதற்கு கூட நேரம் தராமல் திகில் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.
ஆரம்ப நிமிடங்களில் விஜய்யும் ரம்யாவும் ரொமாண்டிக்கான காதல் ஜோடியை எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலித்திருக்கிறார்கள்.
விஜய், ஸ்மிதா பங்களாவுக்குள் நுழைந்த பிறகு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ரோலர் கோஸ்டரில் ஏறியது போல ஜிவ்வென்று இருக்கிறது.
எப்படா, இடைவேளை விடுவாங்க'ன்னு வாட்சை பார்க்கவைக்கும் படங்களுக்கு மத்தியில் இப்ப ஏண்டா இடைவேளை விட்டாங்க'ன்னு யோசிக்க வைக்கிறது பீட்சா.
கடைசி பத்து நிமிடம் வரை சஸ்பென்ஸை மெயின்டெயின் செய்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். ரம்யா லெட்டர் எழுதி வைப்பதில் ஆரம்பித்து இறுதியில் விஜய் நெற்றியிலிருக்கும் சோட்டானிகரை அம்மன் குங்குமத்தை அழிப்பது வரை, “ஒங்க அடுத்த சீனு இதானே ராசா...!” என்று நினைக்க வைத்து நினைக்க வைத்து ஏமாற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். “அந்த பொண்ணே ஒரு கற்பனையாக இருக்கலாம்...” என்று ஒரு கேரக்டர் சொல்லும்போது நான் இதுவரை பார்த்த சைக்கோ த்ரில்லர் படங்களை நினைத்து தலை சொறிந்தேன். ஒரு கட்டத்தில் சிசு கொலை பற்றி ஏதோ கருத்து சொல்ல முனைகிறார்களோ என்று யோசித்து மறுபடியும் ஏமாந்தேன். ஆனால் அந்த ஏமாற்றம் மிகவும் பிடித்திருந்தது.
ஹீரோ, ஹீரோயினுடைய அப்பா அம்மா, குடும்பம், காதல் கல்யாண சிக்கல் என்று வழக்கம்போல அரைமணிநேர ஃப்ளாஷ்பேக் எதுவும் வைக்காமல் ஒரேயொரு புகைப்படத்தில் சுருக்கென்று முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியத்தில் ஒரு சோறு.
கோபியும் சந்தோஷும் இணைந்து படத்தை நம் கண்களுக்கும் காதுகளுக்கும் பிடித்த மாதிரி கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் லியோ புண்ணியத்தில் படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவும் தென்படவில்லை. முழுதாக வந்த ஒரு பாடல்காட்சி கூட விஷுவல் கவிதையாக இருந்ததே ஒழிய வேகத்தடையாக தோன்றவில்லை.
கார்த்திக் சுப்புராஜ் இதுவரை பத்து குறும்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறாராம். இனி ஒவ்வொன்றையும் தேடிப்பார்க்க வேண்டும். கார்த்திக், பாலாஜி மோகன், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் தான் “நான் தமிழ் படமெல்லாம் பாக்குறதில்லை...” என்று திசை மாறும் இளைஞர்களை கவனஈர்ப்பு செய்கிறார்கள்.
ரம்யா நம்பீசனுடைய முகப்பரு மாதிரி படத்தில் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவை நம்மை உறுத்தவில்லை.
மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு எரிச்சலில் யாரும் படத்தை பார்த்துடாதீங்க’ன்னு பத்து நண்பர்களுக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடுவோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு யாரும் மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைத்திருக்கிறது பீட்சா...!
Paranormal Activity மூன்று பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் நெருங்க முடியாது...!

என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|