28 May 2018

பிரபா ஒயின்ஷாப் – 28052018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வார ஒயின்ஷாப்பானது ஒரு மாதிரியான தப்பு சமாச்சாரம் பற்றியது. கொஞ்சம் இளகிய மனம் படைத்தோர், சமர்த்தர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள் தவிர்த்துவிடலாம்.

பொதுவாக நீங்கள் பார்ன் வீடியோ பார்ப்பவர் என்றால் இருக்கிற வகைகள் எல்லாம் பார்த்து முடித்து கடைசியாக அனிமல் பார்ன் அல்லது பெஸ்டியாலிட்டி என்று ஒன்று இருப்பதை கவனித்திருப்பீர்கள். விலங்குகளுடன் மனிதர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கத்தைத் தான் பெஸ்டியாலிட்டி என்கிறார்கள். நீங்கள் ஏற்கனவே ஸோவோஃபிலியா என்றொரு பதத்தை கேள்விப்பட்டிருக்கலாம். பெஸ்டியாலிட்டிக்கும் ஸோவோஃபிலியாவுக்கும் வித்தியாசம் உண்டு. ஸோவோஃபிலியா என்பது விலங்குகள் மீது செக்ஸ் ஆசை கொள்வது - சொல். பெஸ்டியாலிட்டி என்பது நிஜமாகவே செய்வது – செயல். பெஸ்டியாலிட்டி பழக்கம் கொண்டோர் அனைவரும் ஸோவோஃபிலியாக்களே. ஆனால் ஸோவோஃபிலியாக்கள் அனைவரும் பெஸ்டியல்ஸ் கிடையாது. புரியும்படி சொல்வதென்றால் ஸோவோஃபிலியாக்கள் கதைகளில், கற்பனைகளில் மட்டும் விலங்குகள் மீது காமம் கொள்வர். 

பொதுவாக பெஸ்டியாலிட்டியில் அதிகமாக ஈடுபடுத்தப்படும் விலங்கு நாய். அதற்கடுத்து, குதிரைகள். இவை தவிர்த்து கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவையும் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றன. குறிப்பாக விலங்கு பண்ணையில் அவற்றுடனேயே வசிப்பவர்கள் இதுபோன்ற பழக்கங்களில் எளிதாக தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள்.

ஸோவோஃபிலியாவை பத்து உட்பிரிவுகளாக பிரித்து 2011ல் மரு.அனில் அகர்வால் ஒரு ஆராய்ச்சி தாளை சமர்ப்பித்திருக்கிறார். அவற்றில் ஆறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக விலங்குகளுடன் புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை. அந்த பத்து உட்பிரிவுகள் – 

- தங்கள் துணையை விலங்காக பாவித்து செக்ஸ் வைத்து இன்பம் கொள்வோர்.

- விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து, அதன்மூலம் மனதளவில் (உடல்ரீதியாக எந்தவித தொடர்பும் இல்லாமல்) செக்ஸ் கிளர்ச்சி அடைவோர்.

- விலங்குடன் செக்ஸ் வைத்துக்கொள்வதாக கற்பனை (மட்டும்) செய்து அதில் இன்பம் கொள்வோர். 

- விலங்குகளின் செக்ஸ் உறுப்புகளை தொடுதல், தடவுதல் (அல்லது வைஸ் வெர்சா) போன்ற நடவடிக்கைகள் மூலமாக இன்பம் கொள்வோர்.

- விலங்குகளின் உடல் பாகங்கள் குறிப்பாக அவற்றின் மயிரை கிளர்ச்சியூட்டும் காரணியாக பயன்படுத்தி இன்பம் கொள்வோர்.

- விலங்குகளை துன்புறுத்தி இன்பம் கொள்வோர்.

- நேர் செக்ஸில் ஈடுபாடு கொண்டோர். சூழ்நிலையின் காரணமாக விலங்குகளுடன் உறவு வைத்துக் கொள்பவர்கள்.

- விலங்குகளுடன் செக்ஸ் மற்றும் அதே சமயத்தில் மனிதர்களுடனும் செக்ஸ் ஈடுபாடு கொண்டோர்.

- இறந்த விலங்குகளுடன் உறவு கொள்ள விரும்புபவர்கள். இதற்காக விலங்குகளை கொடூரமாக கொலை செய்வதும் இவர்களது வழக்கம்.

- இவர்களுக்கு செக்ஸில் மனித வாடையே ஆகாது. வைத்துக்கொண்டால் விலங்குகளுடன் மட்டும்தான் !

கூபா, சீலே, அர்ஹென்தினா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஃபின்லாந்து, ரோமானியா போன்ற நாடுகளில் விலங்குகளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை. அமெரிக்காவின் பல மாகாணங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெஸ்டியாலிட்டிக்கு தடை கிடையாது. கடந்த வருட ஜூலையில் நிகழ்ந்த சட்டத்திருத்தத்தில் பெஸ்டியாலிட்டி சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டது. இப்போதும் கூட கொலம்பியா மாகாணத்தில் நீங்கள் விலங்குகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள சட்டப்பூர்வமாக தடையேதும் இல்லை, நீங்கள் அந்த விலங்கை துன்புறுத்தாமல் உடலுறவு வைத்துக்கொள்ளும் வரை. என்னதான் இத்தனை நாடுகளில் விலங்குகளுடனான செக்ஸ் சட்டப்பூர்வம் என்றாலும் உலகின் எல்லா சமூகத்திலும் அது ஒரு ஒப்புக்கொள்ள முடியாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 

இன்னொரு புறம் வெளிப்படையாக பெஸ்டியாலிட்டி பழக்கம் கொண்டோருக்கென பிரத்யேகமாக ஃபோரம் எல்லாம் இருக்கிறது. எக்ஸ்பி என்கிற பிரபல செக்ஸ் ஃபோரத்தில் என்னென்ன படங்கள், கதைகள், அனுபவங்கள் பகிரப்படுகிறதோ அதே போன்ற எல்லாமே பீஷ்ட் ஃபோரத்தில் பதியப்படுகின்றன. ஒரேயொரு வித்தியாசம் இங்கே பதியப்படுபவை எல்லாம் விலங்குகளுடன். ஜெர்மனியில் சில வருடங்களுக்கு முன்பு வரை விலங்குகளுடன் உறவு வைத்துக்கொள்வதற்கான சிகப்பு விளக்கு பகுதிகள் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உடலளவில் பெஸ்டியாலிட்டியால் கடுமையான எதிர் விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக ஆண்களுக்கு குறியில் புற்றுநோய் (Penile Cancer) வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ப்ரெசிலில் ஆண்குறி புற்றுநோயாளிகள் மத்தியில் நடத்திய கணக்கெடுப்பில் அவர்களில் நாற்பத்தி ஐந்து சதவிகிதம் பேர் விலங்குகளுடன் செக்ஸ் வைத்திருந்தார்கள் என்று தெரிய வந்துள்ளது. விலங்குகளின் செக்ஸ் உறுப்புகளின் வழியாகவும் அவற்றின் எச்சில் மற்றும் கழிவுகள் வழியாகவும் நிறைய நோய்கள் பரவுகின்றன. அவை பல சமயங்களில் உயிர்கொல்லியாக அமைகின்றன. உதாரணமாக எக்கைனோகொக்கோஸிஸ் என்கிற நோய் பூனை மற்றும் நாய்களின் கழிவுகளில் உள்ள ஒருவித புழுக்களால் மனிதர்களுக்கு தொற்றுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துவக்க காலத்தில் அறிகுறிகள் அதிகம் இருக்காது. நோய் தாக்கி சில மாதங்கள் கழித்து கல்லீரல், நுரையீரல், மூளை போன்ற பகுதிகளில் நீர்க்கட்டிகள் வளரத்துவங்கும். அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டால் கூட நோயிலிருந்து மீள்வது மிகவும் கடினம். 

இவை தவிர்த்து வெளிக்காயங்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் அதிகம் உண்டு. இதுகுறித்து புகழ் பெற்ற வழக்கு ஒன்று உண்டு. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த கென்னத் என்கிற விமானப் பொறியாளர் பற்றியது. 

கென்னத்
கென்னத்துக்கு மனைவி, குழந்தைகள் என்று வாழ்க்கையில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை கென்னத் இரு சக்கர வாகன விபத்தொன்றில் காயமடைந்தார். அதன்பிறகு அவரது செக்ஸ் நடவடிக்கைகளில் அபார மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. தன்னுடைய மலத்துவாரத்தில் பெரியப் பெரிய டில்டோக்கள் பயன்படுத்துவது, கைகளை நுழைப்பது, குதிரைகளின் ஆணுறுப்பை நுழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் துவங்கினார். பின்னர் ஒருநாள் கென்னத் இணையத்தில் தன்னைப்போலவே குதிரை ஈடுபாடு கொண்ட சிலரை கண்டுபிடித்தார். அவர்கள் அவ்வப்போது வாஷிங்டனில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஒரு விலங்குப் பண்ணையில் சந்திக்க ஆரம்பித்தனர். அங்குள்ள குதிரைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவதும் அவர்களது பொழுபோக்கு. ஒருநாள் கென்னத்தும் விலங்குப் பண்ணையில் வசிக்கும் அவரது நண்பர் ஜேம்ஸும் தங்கள் வழக்கமான விளையாட்டை செயல்படுத்துவதற்கு பண்ணைக்குள் நுழைந்தனர். அங்குள்ள குதிரை ஒன்றின் ஆண்குறியை கென்னத் அவரது மலத்துவாரத்தில் நுழைத்துக்கொண்டு இயங்க, ஜேம்ஸ் அதனை படம் பிடிக்க ஆரம்பித்தார். அப்போது வழக்கத்தை மீறி குதிரை ஆவேசமாக இயங்கியதால் கென்னத்தின் பெருங்குடலின் ஒரு பாகத்தில் துளை ஏற்பட்டுவிட்டது. கென்னத் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்த ஜேம்ஸ் (அல்லது வேறு யாரோ) உடனடியாக அங்கிருந்து தலைமறைவானார். கென்னத் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். கென்னத்தை அவரது ஓட்டுநர் உரிமத்தை வைத்து அமெரிக்க போலீஸ் அடையாளம் கண்டுகொண்டது. ஆனால் அவரது இறப்பு ஒரு மர்மமாகவே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நூல் பிடித்துக்கொண்டு போன காவல்துறையினர் வாஷிங்டனில் உள்ள அந்த விலங்குப் பண்ணையை சென்றடைந்தனர். அங்கே சுமார் நூறு மணிநேரம் ஓடக்கூடிய அளவில் விலங்குகளுடனான செக்ஸ் வீடியோக்களை கைப்பற்றினார்கள். அந்த வீடியோக்களில் கென்னத் கடைசியாக குதிரையுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட வீடியோவும் ஒன்று. இந்நிகழ்வு வாஷிங்டனில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டே வாஷிங்டனில் பெஸ்டியாலிட்டி சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டது. கென்னத் பங்கேற்ற அந்த சர்ச்சைக்குரிய வீடியோ இணையத்தில் மிஸ்டர்.ஹேண்ட்ஸ் என்ற பெயரிலும் 2 கய்ஸ் 1 ஹார்ஸ் என்ற பெயரிலும் சில காலம் பரவியதாக தகவல்கள் உண்டு. 

கென்னத்தின் இந்த விசித்திர மரணத்தைப் பற்றி 2007ல் Zoo என்று ஒரு செய்திப்படம் வெளியாகியிருக்கிறது.

செக்ஸ் ஜோக்குகளை பொறுத்தவரையில் பெஸ்டியாலிட்டியை வைத்து சர்வசாதாரணமாக ஏராளமான ஜோக்குகள் புழங்குகின்றன. அவற்றில் பல நகைச்சுவைகள் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டது. உதாரணத்திற்கு கரடி வேட்டை ஜோக். இந்த ஜோக்கின் ஆபாசமில்லாத வடிவத்தை இம்சை அரசன் திரைப்படத்திலும், ஒரிஜினல் ஜோக்கை ஹர ஹர மகாதேவகியின் குரலிலும் அறிந்திருக்கிறோம்.

இன்னொரு ஜோக். இதையும் கூட நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருமுறை ராணுவ முகாம் ஒன்றிற்கு புதிதாக ஒரு கமாண்டர் வந்து சேர்ந்தார். முகாமிற்கு வெளியே ஒரு ஒட்டகம் மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்தது. அதைக் கண்ட கமாண்டருக்கு ஆர்வம் தாங்கவில்லை. எதற்காக ஒட்டகத்தை இங்கே கட்டி வைத்திருக்கிறீர்கள் என்று ராணுவ வீரர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ராணுவ முகாமில் பெண்கள் இல்லாத காரணத்தினால் வீரர்களுக்கு செக்ஸ் இச்சை ஏற்படும் சமயங்களில் ஒட்டகத்தை பயன்படுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்தனர். சில வாரங்களுக்குப் பிறகு ஒரு இரவில் கமாண்டருக்கு கடுமையான விரக தாபம் ஏற்பட்டுவிட்டது. வீரர்களை கூப்பிட்டு ஒட்டகத்தை கொண்டு வரச்சொன்னார். அவர்களும் அதிகாரியின் கட்டளையை மீறாமல் ஒட்டகத்தை கொண்டு வந்து கமாண்டரின் கூடாரத்திற்குள் விட்டுவிட்டு அவர்களது வேலையை பார்க்கப் போய்விட்டனர். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு தன்னுடைய பாண்ட் ஜிப்பை போட்டபடி வெளியே வந்த கமாண்டர் இங்கே எல்லாரும் இப்படித்தான் செய்வீர்களா ? என்று ஒரு ராணுவ வீரனைப் பார்த்து சந்தேகமாகக் கேட்டார். அதற்கு ராணுவ வீரன் சொன்ன பதில் – இல்லை, நாங்கள் ஒட்டகத்தில் ஏறி அருகிலுள்ள சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்வோம் !

இவ்வளவு ஏன், சுஜாதா கடைசி வரை சொல்லாமல் விட்ட மெக்ஸிக்கோ சலவைக்காரி ஜோக்கே பெஸ்டியாலிட்டி தானே !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 May 2018

பிரபா ஒயின்ஷாப் – 14052018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வாரங்களுக்கு முன்பு திருடா திருடா படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் நீட்சியாக நடிகர் பிரசாந்த் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் (மற்றும் விஜயகாந்த்) கோலோச்சிய காலகட்டத்திற்கு பிறகு தொண்ணூறுகளில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வரத்துவங்கினர். அவர்களில் ஒருவர்தான் நம்ம ஹீரோ ! ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் தியாகராஜனின் மகன்தான் பிரசாந்த். முதல் படத்திலேயே (வைகாசி பொறந்தாச்சு) ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார் (சிறந்த அறிமுக நடிகர்). அடுத்து ரோஜாவுடன் நடித்து வெளிவந்த செம்பருத்தி சூப்பர்ஹிட். பிரசாந்துக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. முக்கியமாக மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பிரசாந்துக்கு ஏறுமுகம் தான் !

98ல் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அப்போது மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்களில் நடித்திருந்த ஒரு சிலருள் பிரசாந்தும் ஒருவர். அது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் வேண்டும், வேண்டுமென சிலரெல்லாம் தவமாய் தவமிருந்து பின் சலித்துப் போனபின் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரசாந்துக்கு பெரிய சிரமமெல்லாம் இல்லாமல் எளிதாகவே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக கிடைத்தார். அதுவும் இரட்டை வேடம்.

ரஜினி கமல் இணைக்குப் பிறகு விஜய் அஜித் அந்த இடங்களை பிடித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு கட்டத்தில் அஜித்தின் இடத்தில் பிரசாந்த் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி வாசல் வெளிவந்திருந்த சமயம். அத்திரைப்படத்தில் பிரசாந்த் அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அப்போது ஒரு கடை திறப்பு விழாவுக்கு இருவரையும் அழைத்திருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் மத்தியில் பிரசாந்துக்கு மிகுந்த ஆரவாரம். அதே சமயம், அஜித்தை அதிகம் பேர் கண்டுகொள்ளவில்லை.

கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி என்று அடுத்தடுத்து ஹிட் படங்கள். அந்த ஸ்ட்ரீமில் இருந்து பிரசாந்துக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த படம் ஹலோ என்று நினைக்கிறேன். அதற்கடுத்து, குட் லக். இந்த காலகட்டத்தில் தான் வாலி, அமர்க்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று அஜித்தின் கிராஃப் விறுவிறுவென்று ஏறுகிறது. கவனிக்க: முதலில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸ் நடிக்க வேண்டிய வேடத்தில் அஜித்தும், அஜித்தின் வேடத்தில் பிரசாந்தும் நடிக்க வேண்டியது. சில காரணங்களுக்காக பிரசாந்த் விலகிக்கொண்டார். (தபுவுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக்க வேண்டும் என்று கேட்டதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் உண்டு). பிரசாந்த் விலகியபின் அஜித்துக்கு அவ்வேடம் கிடைத்தது. இதுதான் மேஜை எதிரெதிர் பக்கம் திரும்பிய தருணம் என்று நினைக்கிறேன்.

அதன்பிறகு தீனா வெளிவந்தது. அஜித் தலையானார். பின்னர் வெற்றியோ, தோல்வியோ அஜித்துக்கென ஒரு ராணுவம் உருவானது. அதே சமயம், பார்த்தேன் ரசித்தேன், ஸ்டார், சாக்லேட், தமிழ் என்று ஓரளவுக்கு சுமாரான படங்கள் கொடுத்தாலும் பிரஷாந்தால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை. பிரசாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய சிக்கல்களுக்கு ஆளானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். திவ்யா பரமேஸ்வரன் என்கிற டார்லிங்குக்காக அப்போது நானும், ஹோட்டல் பதிவரும் அப்படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்தோம். படம் அட்டர் ஃப்ளாப். மம்பட்டியான், புலன் விசாரணை, சாஹசம் என்று பிரசாந்தின் மீள்வருகை முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடிந்தன. தற்போது பிரசாந்த் மனம் தளராமல் தன்னுடைய அடுத்த மீள்வருகையான ஜானியை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். ஜானி 2007ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஜானி கட்டார் என்கிற படத்தின் ரீ-மேக்.

பிரசாந்தின் கேரியரில் குறிப்படப்பட வேண்டிய அம்சம் மலேசியாவில் அவருக்கு இப்போதும் இருக்கும் கிரேஸ். ஒரு கட்டத்தில் தமிழக ரசிகர்கள் பிரசாந்தை கைவிட்டனர். ஆனால் மலேசிய ரசிகர்கள் விடவில்லை. தமிழகத்தில் படுதோல்வி அடைந்த படங்கள் கூட மலேசியாவில் ஓரளவுக்கு வசூலைத் தந்தன. அப்போதைய பிரபல ஏழு கதாநாயகிகளுடன் பிரசாந்த் மலேசியாவில் நடத்திய கன்சர்ட் நினைவிருக்கிறதா ? இப்போதும் கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. பார்ப்பதற்கு இளமையாக இருக்கும் பிரசாந்த் நல்ல கதைகளை (மாதவனின் இறுதிச்சுற்று மாதிரியான) தேர்ந்தெடுத்து நடித்தால், அல்லது பிரபல ஹீரோக்களுக்கு வில்லனாக (என்னை அறிந்தால் அருண் விஜய் போல) நடித்தால் சரிவிலிருந்து மீண்டு வரலாம்.

**********

திருமண வாழ்க்கையை சைக்காலஜியில் செவன் இயர் இட்ச் என்கிறார்கள். தமிழில் மொழிபெயர்த்தால் நாராசமாக இருக்கிறது. பாலின பேதமில்லாமல் பெரும்பாலானவர்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு, அநேகமாக இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகு திருமண வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. இதைத்தான் செவன் இயர் இட்ச் என்கிறார்கள்.

பொதுவாக திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது அதனை கணக்கு பாடத்தோடு ஒப்பிடுவார்கள். புரிந்துகொண்டால் வெகு சுலபம், புரியவில்லை என்றால் மிகவும் கடினம். இந்திய ஆண்கள் பெரும்பாலும் கணக்கில் வீக் ! நம் இந்திய ஆண்கள் பொதுவாக திருமண விஷயத்தில் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்

திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சரணாகதி அடைவது: பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் (வேறு வழி ?!). இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் தலைகால் புரியாமல் இஷ்டத்துக்கு தங்களை முழுமையாக வருங்கால மனைவியிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தங்களுடைய ஈமெயில், ஃபேஸ்புக் கணக்குகளை ஒப்படைக்கும் அளவிற்கு. சில பேர் சினிமா பார்த்தால் மனைவியுடன் மட்டும்தான், ட்ரிப் போனால் மனைவியுடன் மட்டும்தான். அப்புறம் தினசரி இருவரும் ஒரே நிற உடை அணிவது, CUG போட்டுக்கொண்டு 24 மணிநேரமும் தொடர்பில் இருப்பது என்று இவர்கள் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லை. இவ்வளவு அன்னியோன்யமாக இருப்பது ரொம்ப நல்ல விஷயம், உங்களால் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுமைக்கும் இதே சரணாகதியை கடைபிடிக்க முடியும் என்றால் மட்டும் !

ஹனிமூன் காலத்திலேயே தங்கிவிடுவது: ஐ.டி. துறையில் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்து முதல் சில நாட்களை / வாரங்களை ஹனிமூன் காலம் என்பார்கள். அந்த காலகட்டத்தில் வேலை அதிகம் இருக்காது, யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், வெட்டியாய் உட்கார்ந்து ப்ரளஸ் செய்துகொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ நிம்மதியாக இருக்கலாம். அதுபோல திருமண ஹனிமூனில் என்பது பணம், நேரம் போன்றவை பொருட்டில்லாத தருணம். புது மனைவிக்கு கார் கதவு திறந்து விடுவது, ஷாப்பிங் போகும்போது என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, கொஞ்சம் கால் வலிக்கிறது என்றால் பிடித்து விடுவது’ (ஹவ் ஸ்வீட் யூ நோ !) என்று எல்லாமே மிக மிக நல்ல விஷயங்கள். மறுபடியும் கடந்த பத்தியின் கடைசி வாசகத்தை படித்துக்கொள்ளுங்கள்.

ஆண் பெண் வேறுபாடை அறிந்துகொள்ளாதது: ஆணும் பெண்ணும் சமம் என்பது சரிதான். ஆனால் உளவியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உள்ளன. (எக்ஸப்ஷன்ஸ் இருக்கிறார்கள். குறிப்பாக ஃபேஸ்புக் போன்ற இடங்களில் உளவியல் ரீதியாக ஆணைப் போலவே நடந்துகொள்ளும் பெண்கள் நிறைய). பொதுவான சராசரியான ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குள் நிறைய வேறுபாடுகள். ஆண் சாதாரணமாக சொல்லும் விஷயத்தை பெண் வேறு விதமாக இன்டர்ப்ரெட் செய்துகொள்கிறாள் என்பது போன்ற வார இதழ் ஜோக்குகள் ஏராளம் படித்திருக்கிறோம். ஆனால் அவற்றை ஏன் என்று புரிந்துக்கொள்ள முயல்வதில்லை. இவ்வேறுபாடை புரிந்துகொள்ள இதுவரை ஆயிரம் பேராவது உங்களுக்கு பரிந்துரைத்த அந்த பச்சை நிற நூலை கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாசித்தல் நலம்.

குழந்தை: தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான பிரச்சனைகள் குழந்தை வந்தபிறகுதான் ஆரம்பமாகிறது. குழந்தையின் வருகை பெரும்பாலும் கணவர்களை பாதிப்பதில்லை. ஆனால் மனைவியின் வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக எடுத்துக்கொள்கிறது. குறைந்தது ஆறு மாதத்திற்காவது அவள் அவசரத்துக்கு பாத்ரூம் போவதென்றால் கூட குழந்தையைப் பற்றி நினைத்துக்கொண்டே தான் போக வேண்டும். நம்ம ஹீரோக்களோ இந்த சமயத்தில் ஃபேஸ்புக்கில் ஜனகராஜ் படத்தை பதிந்துவிட்டு (என்னவோ மனைவி இவரை டார்ச்சர் செய்வது மாதிரி) ஜாலியாக கூத்தடித்துக் கொண்டிருப்பார். இந்த சமயத்தில் மனைவிக்கு உளவியல் ரீதியாக கணவனின் சப்போர்ட் தேவை. உடலுழைப்பு சார்ந்த வேலைகள் செய்ய முடியாவிட்டாலும் ஆதரவாக அருகிலிருப்பது அவசியம்.

மனைவியை கிண்டலடிப்பது: இதை கேட்கும்போது மிகவும் சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். குறிப்பாக வாட்ஸப் குரூப்புகளில் கணவன் மனைவி பற்றிய ஜோக்குகளை பரிமாறிக்கொள்வது, உறவினர்கள் கூடியிருக்கும் சமயத்தில் மனைவியை மட்டம் தட்டிப் பேசுவது, மனைவியின் குடும்பத்தினரை கேவலமாகப் பேசுவது போன்றவை மனைவியின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடும். பெண்கள் இதுபோன்ற விஷயங்களை எந்த அளவிற்கு நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இவையெல்லாம் சும்மா சாம்பிள்கள் தான். இவை தவிர்த்து ஆண்கள் காலம் காலமாக செய்து வரும் சந்தேகப்படுவது, வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டுவது, செக்ஸில் வன்முறையை புகுத்திப் பார்ப்பது என்று பட்டியல் நீள்கிறது.

சரி இப்படியெல்லாம் இருக்கக்கூடாதா ஃபேஸ்புக் பாஸ்வேர்டை மனைவியிடம் தரக்கூடாதா, சும்மா ஒரு ஃபன்னுக்காக மாமனாரை கிண்டலடிக்கக் கூடாதா என்றால் பண்ணலாம் தான். திருமண வாழ்க்கைக்கு என்று ப்ளு பிரிண்ட் எதுவும் கிடையாது. அது கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு லாவகமான விளையாட்டு, எல்லைக்கு அப்படியும் போகாமல் இப்படியும் போகாமல் பேலன்ஸ் செய்ய வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் ஒரு நகைச்சுவை காட்சியில் கவுண்டமணி சொல்வது போல திருமணம் என்பது ஈயம் பூசியது மாதிரியும் இருக்க வேண்டும், பூசாதது மாதிரியும் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 May 2018

பிரபா ஒயின்ஷாப் – 07052018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதனின் கி.மு. கி.பி. ஒரு டகால்டி என்று எழுதுவதற்கு போன வாரமே விரல் நுனி வரை வந்துவிட்டது. எதற்கும் முழுவதும் படித்துவிடலாம் என்று நினைத்தேன். 

புத்தகத்தின் உரையில் உலக வரலாற்றின் சுருக்கப்பட்ட வடிவம் என்பது போல பாவ்லா காட்டுகிறார்கள். முதல் சில அத்தியாயங்கள் வரை உலகம், மனிதன், நாகரிகம் தோன்றியது எப்படி என்று போகிறது. அதன்பிறகு மதன் அவருடைய ஆஸ்தான விஷயங்களான ஆண் ராணி, புரட்சி மன்னன், கிறுக்கு ராஜா போன்றவற்றில் புகுந்து கொள்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம், ரோம், பாரசீகம் தான். கடைசியாக போனால் போகட்டும் என்று கொஞ்சூண்டு இந்தியா பக்கம் வருகிறார்.

இது குறித்து வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். சொல்லி வைத்தாற்போல எல்லோரும் வேறொரு உலகத்திற்கு போய் வந்தது போல இருக்கிறது, டைம் டிராவலுக்கு அழைத்துச் செல்கிறார் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் மதன் படிக்கும் வரலாறெல்லாம் இந்தியாவுக்கு வெளியே தான் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்று சாடியிருக்கிறார். அது தவறு. அலெக்ஸாந்தரின் வரலாற்றை சொல்லும்பொருட்டு இந்தியாவுக்குள் வருகிறார் மதன். வந்தவர் மெளரிய சக்கிரவர்த்தியான சந்திரகுப்தர் பற்றி சொல்கிறார். சாணக்கியரின் சாதுர்ய குணம் பற்றி குறிப்பிடுகிறார். அதன்பிறகு அசோகருக்கு தாவிவிடுகிறார். இந்த சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாம் இடை இடையே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் வரலாற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர்களை பத்தோடு பதினொன்றாக ட்ரீட் செய்திருக்கிறார். நேரடியாக சொல்வதென்றால் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்திருக்கிறார்.

மேலும் மொத்த புத்தகத்திலும் கி.மு. மட்டும்தான் வருகிறது. இயேசுவின் பிறப்போடு புத்தகம் நிறைவடைந்துவிடுகிறது. ஒருவேளை இரண்டாவது பாகம் இருக்கிறதா ?

கில்காமெஷ்
இப்புத்தகத்தில் நல்ல விஷயங்களே இல்லையா என்றால் ஆம், இருக்கிறது. உலகின் முதல் புனைவான கில்காமேஷ் என்கிற காப்பியத்தைப் பற்றி சொல்கிறார். உலகின் முதல் மருத்துவ நூலான (எட்வின் ஸ்மித்) பாபிரஸ் என்கிற நூலைக் குறித்து சொல்கிறார். தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டால் எப்படி சிகிச்சை தர வேண்டும் என்பது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் பாபிரஸில் இடம் பெற்றிருப்பதாக சொல்கிறார். கில்காமேஷ் காப்பியம் பெங்குயின் கிளாசிக்ஸ் பதிப்பாக இப்போதும் கூட கிடைக்கிறது. தமிழில் க.நா.சு. எழுதிய வெர்ஷன் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் லிலித் என்கிற கதாபாத்திரத்தைப் பற்றி பார்த்தோம். இதிலும் லிலித் வருகிறாள். லிலித்தை மெஸபொடமிய இலக்கியங்களில் வரும் செக்ஸ் தேவதை என்கிறார். இச்சை மிகுந்த லிலித் இரவில் ஊர் மீது வட்டமடித்து தூங்கும் ஆண்களை உசுப்பி உடலுறவு கொள்வாள் (சொப்பன ஸ்கலிதம் !) என்கிறார். இப்போதும் கூட ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது அவர்களது கண்களுக்கு தெரியாமல் அருகே அமர்ந்து ஆணின் உயிரணுக்கள் ஏதேனும் தெறித்து விழுந்தால் அதைக் கொண்டு செயற்கை கருத்தரிப்பு செய்து பூதங்களை உருவாக்குவது அவளது ஹாபி என்று கூறப்படுகிறது. அடுத்த முறை உறவு வைத்துக்கொள்ளும்போதோ அல்லது கூழ் ஊற்றும்போதோ அருகே லிலித் இருக்கிறாளா என்று கவனமாக பார்க்கவும் !

இன்னொரு பக்கத்தில் சாக்ரட்டீஸின் கடைசி நாளை விவரிக்கிறார். இது ‘க்ரேட் டயலாக்ஸ்’ என்கிற புத்தகத்தில் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ எழுதியது. சாக்ரடீஸ் விஷக்கோப்பையை வாங்கி அருந்தியபிறகு அவரது சீடர்கள் கதறி அழுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கும் சாக்ரடீஸ் சொல்லும் கடைசி வாசகம் – மரணத்தின் போது அமைதி நிலவுவது எவ்வளவு அழகாக இருக்கும் ?

அக்கால கிரேக்கத்தில் ஆண்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை சகஜமாக புழங்கியதாகவும், சரியாக சொல்வதென்றால் ஹோமோ செக்ஸ் இல்லாத ஆண்களை கிரேக்க சமுதாயம் இளக்காரமாக பார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சமயம் கிரேக்கத்தில் வாழ்ந்த பேச்சுக்கலையின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட டெமஸ்தினீஸ் “மகிழ்ச்சிக்கு விலை மாதர்கள், காதலுக்கு நண்பன், குழந்தைக்காக மனைவி !” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி ஆங்காங்கே சுவாரஸ்யமான விஷயங்கள் வருகின்றன. மற்றபடி இதனை உலக வரலாற்றின் சுருக்க வடிவம் என்றெல்லாம் சொல்வது அபத்தம் !

**********

ரெஜோவாசனின் அவள் – சில அழகிய குறிப்புகள் என்கிற கவிதைத்தொகுப்பை கிண்டிலில் ராயபுரத்திலிருந்து பேருந்து பாரிஸ் கார்னர் அடைவதற்குள்ளாக வாசித்து முடித்தேன். பழைய வலைப்பதிவர்களுக்கு ரெஜோவாசனை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விற்பவன் என்கிற வலைப்பூவின் உரிமையாளர் !

இக்கவிதை தொகுப்பைப் பற்றி நெகட்டிவாக குறிப்பிட நான் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. நூறு குறுங்கவிதைகள் அடங்கிய இப்புத்தகத்தில் பெரும்பாலும் காதலிக்கத் துவங்கும் காலத்தில் எழுதப்படும் ஆர்வக்கோளாறு கவிதைகள். சில உதாரணங்களை கவனியுங்கள் –

உன் நினைவுகள் தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்...

இன்னொன்று – 

உன்னுடன் பேச
ஒத்திகை எடுக்கும் போதுதான்
உணர்கிறேன்
இத்தனை சிறிய மொழியா
தமிழ்...

வலைப்பூ வந்தபிறகு எழுத்தின் தரம் குறைந்துவிட்டது என்பார்கள். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அனுப்பி நிராகரிக்கப்படும் நிலையெல்லாம் இல்லாமல் தாமே எழுதி தாமே பப்ளிஷ் செய்துகொள்வதால் ஏற்பட்ட வினை. அதே நிலை இப்போது புத்தகங்களை வெளியிடுவதிலும் வந்துவிட்டதாக தோன்றுகிறது. வாசகர்கள் பாவம் !

ரெஜோவாசனின் வலைப்பூவை இடையிடையே கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். கவிதைகளை விட உரைநடை நன்றாக வருகிறது. நேரமிருந்தால் முகவரி தொலைத்த கடிதங்கள் என்கிற தலைப்பில் ரெஜோ எழுதியிருப்பதை படியுங்கள்.

*********

ஐ.பி.எல். போட்டிகளுக்கிடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் இரண்டு விளம்பரங்கள் தனிப்பட்ட முறையில் விரும்பத்தக்கதாக இருக்கின்றன.

முதலாவது, ஃப்ரூட்டி !

முதல் முதலாக வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கியபோது விண்டோஸ் எக்ஸ்.பி. ஹோம் பேஜில் வருகின்ற நிலப்பரப்பில் வாழ வேண்டும் என்று கனவு காண்பேன். ஃப்ரூட்டி விளம்பரத்தில் வரும் நிலமும் அதைப் போலவே இருக்கிறது. மேலும் இவ்விளம்பரத்தில் வரும் பின்னணி இசை, அனிமேஷன் இரண்டும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. இதன் தேசிய வெர்ஷனில் ஆலியா பட் வருகிறார்.

இரண்டாவது விளம்பரம், ஜியோ.

தீபிகா படுகோனின் நேர்த்தியான அழகு ! மறுபடியும் பின்னணி இசை மற்றும் ப்ளேயர்ஸின் க்வெர்கியான நடன அசைவுகள். முதலில் ஒருநாள் ஜியோ விளம்பரம் பார்த்துவிட்டு, பாரேன் இன்னைக்கு விளையாடுகிற இரண்டு டீமுக்கும் ஜியோதான் ஸ்பான்சராம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்து இன்னொரு நாள் வேறு இரு அணிகளுக்கு ஒளிபரப்பினார்கள். அதன்பிறகுதான் ஜியோ எல்லா டீமுக்கும் ஸ்பான்சர் என்று தெரிந்தது. இதிலே கொடுமை என்னவென்றால் கிரிக்கெட் ப்ளேயர்கள் அனைவரையும் க்ரீன் மேட்டில் தனியாக ஆட வைத்து பின் தீபிகாவுடன் ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

மற்ற சில விளம்பரங்கள் –

ஆமிர் கான் தோன்றும் விவோ வி9 சீரிஸ் விளம்பரங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கூர்ந்து கவனித்தாலொழிய புரிய மாட்டேன் என்கிறது.

ஸ்விகி விளம்பரம் கான்செப்ட் சுமாராக இருந்தாலும் இந்திய தாயை காண்பிக்காமல் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆயாவைக் காட்டுவதால் பிடிக்கவில்லை.

டாக்டர்.ஃபிக்ஸிட் விளம்பரம் கண்டிப்பா தாறுமாறா தாறுமாறா ஆக்கிட்டாங்க !

பாலிகேப் போட்டால் மின்சாரம் சேமிக்கலாம், ஏசியன் பெயிண்ட்ஸ் வீட்டுக்கு மூன்று வருட வாரண்டி போன்றவை மொக்கைகள்.

கோ ஐபிபோவில் (மறுபடியும் தீபிகா டார்லிங்) மும்பை இந்தியன்ஸ் அடிக்கும் ரன்களுக்கு தகுந்தபடி கேஷ்பேக் தருகிறார்களாம். ஒருவர் ஹோட்டல் புக் செய்வேன் என்கிறார், இன்னொருவர் கோவாக்கு போவேன் என்கிறார். இவர்களைப் பார்த்து ரோஹித்தும் மற்ற இரண்டு வீரர்களும் நக்கலாக சிரிக்கிறார்கள். சுயபகடி !

**********

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஏழரை சனி என்பார்களே. அது நம் மாநிலத்திற்கு பிடித்திருக்கிறது. மத்தியில் பி.ஜே.பி, மாநிலத்தில் அ.தி.மு.க. (தற்போதைய அ.தி.மு.க.வை நியாயமாக பி.ஜே.பி. என்றுதான் அழைக்க வேண்டும் - ப்ளோ ஜாப் பார்ட்டி). நிறைய பேர் முன்னாள் முதல்வர் ஜெ. இருந்திருந்தால் என்று துவங்கி எழுதுகிறார்கள். என்னைக்கேட்டால் சசிகலா முதல்வராகியிருந்தால் கூட இவ்வளவு கேவலமாக ஆட்சி நடத்தியிருக்க மாட்டார். கொஞ்சம் கூட வெ.மா.சூ.சொ. இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ப்ளோ ஜாப் பார்ட்டியின் அமைச்சர்கள். அநேகமாக இவர்களுடைய ஆட்சி முழுமையாக நிறைவடையும்போது நாம் எல்லா உரிமைகளையும் மொத்தமாக இழந்திருப்போம்.

இவ்வளவு களேபரத்தில் நடக்கும் ஒரே நல்ல விஷயம் – சில இழிபிறவிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதுதான். முன்பெல்லாம் இணையத்தில் பார்ப்பனர்கள் என்று துவங்கினாலே நடுநிலையாளர்கள் சொன்னவர் மீது பாயத்துவங்குவார்கள். அவர்களுக்கெல்லாம் பார்ப்பனர்களைப் பற்றி சரிவர தெரிந்துகொள்ள வரலாறு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பார்ப்பனர்களின் பேட்டர்னை கவனியுங்கள். தமிழர்கள் நீட் தேர்வை எதிர்த்தபோது அவர்கள் ஆதரவாக பேசினார்கள். ஆல்ரைட் ! அதில் ஒரு சுயநலம் இருந்தது. விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது தமிழர்களின் ஏதோவொரு பிரச்சனையில் இவர்களுடைய நிலைப்பாடு என்ன என்று கவனியுங்கள். போராட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கூட கட்டாயமில்லை. ஆனால் இவர்கள் ஒரு படி கீழே இறங்கி எல்லா போராட்டங்களையும் கொச்சைப் படுத்திக்கொண்டும் ஆபாசமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுடைய அஜெண்டா தமிழர்கள் ஒரு விஷயத்தை ஆதரித்தால் அதனை எதிர்ப்பது, எதிர்த்தால் ஆதரிப்பது. சுருங்கச் சொல்வதென்றால் தமிழர்களை எதிர்ப்பது !

பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று சொல்லியிருந்தால் கூட தவறில்லை !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 May 2018

கோவா – அட்வெஞ்சர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கோவா கட்டுரைகளின் அடுத்த பகுதியாக டிட்டோஸ் லேன் பற்றி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஒரு சிறிய மாற்றம். டிட்டோஸ் லேனுக்கு முன்பாக கோவாவில் உள்ள அட்வெஞ்சர் ஆக்டிவிட்டீஸ் (சாகஸ விளையாட்டுகள்) பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். கோவாவில் சாகசங்கள் என்றால் முக்கியமாக வாட்டர் ஸ்போர்ட்ஸ் ! அஃதில்லாமல் ஒன்றிரண்டு விளையாட்டுகளும் உண்டு. 

சாகசங்களின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் –

* சீஸனில்லா சமயங்களில் கோவாவில் பெரும்பாலும் அட்வெஞ்சரின் தடயங்களே இருப்பதில்லை. சீஸன் என்பது நவம்பர் முதல் மே வரை. இதில் இடையில் பிப்ரவரி, மார்ச் சமயத்தில் போனால் கூட்டமும் இவற்றின் விலைவாசியும் குறைவாக இருக்கும்.

* நிறைய கடற்கரைகள் இருந்தாலும் சில கடற்கரைகளில் மட்டும்தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளன. நாங்கள் ஒரு பகல் முழுக்க லிட்டில் ரஷ்யா பகுதியில் சுற்றிவிட்டு வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்ற ஒன்று இருப்பதையே மறந்துபோனோம். அதன்பிறகு திடீரென நினைவுக்கு வந்து வகேட்டர் பீச்சுக்கு விரைந்தோம்.

பொதுவான வாட்டர் ஸ்போர்ட்ஸ் (பாரா செய்லிங், வாட்டர் ஸ்கூட்டர், பம்ப் ரைட், பனானா ரைட் போன்றவை) அமைந்துள்ள சில கடற்கரைகள் –

- வகேட்டர் (வடக்கு)
- அஞ்சுனா (வடக்கு)
- பாகா / கேலங்குட்டே (வடக்கு)
- கேண்டோலிம் (வடக்கு)
- மிராமர் (மத்தி)
- கோல்வா (தெற்கு)
- பலோலம் (தெற்கு)

இவை தவிர்த்து ஸ்கூபா, பாரா கிளைடிங், ஸ்னார்கலிங், ஹாட் பலூன் போன்ற சில பிரத்யேக அம்சங்களும் உண்டு. 

பாராசெய்லிங் - ஏரியல் வியூ
1. பாராசெய்லிங்: கோவாவில் தனிப்பட்ட முறையில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய மூன்று விஷயங்களில் ஒன்று இந்த பாராசெய்லிங். நபர் ஒருவருக்கு 800ரூ என்று நினைக்கிறேன். படகில் குழுவாக மக்களை கடலுக்குள் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அதிலிருந்து இன்னொரு பெரிய படகு. அங்கிருந்து காற்றாடிக்கு நூல் விடுவது போல உயரத்தில் பறக்க விடுகிறார்கள். கரையிலிருந்து வெகு தூரத்திற்கு வந்தபிறகு இப்படி பறப்பதால் கீழே முழுக்க அரபிக்கடல் மட்டும்தான் தெரிகிறது. கீழே இருக்கும் ஆபரேட்டர் உச்சபட்ச அளவிற்கு கயிறை விட்டு முடித்ததும் கப்பென வயிற்றைக்கவ்வ சில நொடிகள் கடலை கழுகுப்பார்வை பார்க்கிறோம். பின்னர் மீண்டும் கீழே இறக்குகிறார்கள். கூடுதலாக முன்னூறு ரூபாய் கொடுத்தால் கீழே இறக்குகையில் ஒருமுறை கடல்நீரில் நம்மை முக்கி எடுக்கிறார்கள் !

2. பம்(ப்) ரைட்: ஸ்பீட் போட்டின் பின்னால் இருவர் அமரக்கூடிய குழிகள் கொண்ட ரப்பர் டியூப் இணைக்கப்படுகிறது. குழியில் உங்கள் அடிப்பகுதியை அலேக்காக வைத்து உட்கார்ந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் ! ஸ்பீட் போட் உங்களை தரதரவென்று இழுத்துச்செல்லும் அலைகள் தொப்பு தொப்பென்று பின்புறம் வெளுக்கும். இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு சுற்று முடிந்ததும் ஸ்பீட் போட் ஓட்டுநர் கூடுதல் காசு கொடுத்தால் இன்னொரு சுற்று அழைத்துச் செல்வதாக கேட்பார். பின்புறம் பழுத்திருந்தால் கூட அப்போது இன்னொரு சுற்று போக வேண்டும் போலிருக்கும் !

3. பனானா ரைட்: இதுவும் கிட்டத்தட்ட பம் ரைட் பாணிதான். ஆனால் காயங்கள் கிடையாது. வாழைப்பழ வடிவில் உள்ள டியூபில் நான்கைந்து பேரை அமர்த்தி ஸ்பீட் போட்டின் பின்புறம் கட்டி இழுத்துச் செல்வார்கள். கொஞ்ச தூரம் கடலில் சென்றபிறகு வாழைப்பழம் கவிழ்ந்து மொத்த பேரும் தண்ணீரில் விழுவீர்கள்.

4. வாட்டர் ஸ்கூட்டர் & ஸ்பீட் போட்: மிதவாதிகளுக்கான வாகனங்கள். அனுபவம் / பயிற்சி உள்ளவர்களுக்கு வாட்டர் ஸ்கூட்டரை தனியாக ஆபரேட் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.

5. டால்பின் ட்ரிப்: விலங்கு ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களுக்கானது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை படகில் குழுவாக அழைத்துச் செல்கிறார்கள். டால்பின்கள் புழங்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று அவை துள்ளி விளையாடுவதை காண்பிக்கிறார்கள்.

இனி பிரத்யேகமான சில சாகசங்களை கவனிக்கலாம்.

6. பாராகிளைடிங்: பொதுவாக பள்ளத்தாக்குகளில் நடத்தப்படும் விளையாட்டு. மணாலியின் சோலாங் பள்ளத்தாக்கில் இது பிரபலம். கோவாவில் அரம்போல் கடற்கரையில் மட்டும் பாராகிளைடிங் உள்ளது. விலை நபர் ஒருவருக்கு 3000ரூ. கடலருகே பறப்பதால் பாரா செய்லிங்கில் கிடைக்கும் அதே பரவச உணர்வு கிடைக்கும்.

7. ஸ்கூபா டைவிங்: கோவா கடற்கரையிலிருந்து சுமார் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராண்ட் தீவில் ஸ்கூபா டைவிங் நடைபெறுகிறது. கோவாவில் ஸ்கூபா செய்ய வேண்டுமென்றால் காலை ஏழு மணிக்கே குழுவினருடன் தீவுக்கு சென்று, பயிற்சி எடுத்து செய்துவிட்டு மாலை திரும்பவேண்டும். விலை மதிய உணவுடன் சேர்த்து ஒருவருக்கு 3000ரூ. ஒரு முழுநாளை விழுங்கி விடுவதால் கோவாவில் பெரும்பாலானாவர்கள் ஸ்கூபா செய்வதில்லை.

8. ஸ்னார்கலிங்: ஸ்கூபாவின் சகோதரன். ஸ்கூபாவில் வாயு சிலிண்டரைக் முதுகில் கட்டிக்கொண்டு மீன்களோடு சேர்ந்து நீந்தலாம். ஸ்னார்கலிங்கில் கடல் நீரின் மேற்பரப்பில் குப்புறப்படுத்தபடி மிதக்க வேண்டும். பிளாஸ்டிக் சுவாசக்குழாய் மேற்பரப்புக்கு வெளியே நீண்டு சுவாசிக்க உதவும். இப்படி மிதந்தபடி மீன்களையும், கடல் பாசிகளையும் பார்த்து பரவசமடையலாம். விலை மதிய உணவுடன் சேர்த்து ஒருவருக்கு 1500ரூ.

9. வாட்டர் ஸ்கியிங்: கேலங்குட்டே, மொபோர் உள்ளிட்ட சில கடற்கரைகளில் மட்டும் அமைந்துள்ள கொஞ்சம் எலைட் விளையாட்டான வாட்டர் ஸ்கியிங் சுமார் பத்து நிமிடங்களுக்கு 1800ரூ. கால்களில் பிரத்யேக ஸ்கேட்டிங் டிவைஸ் கட்டப்பட்டு படகின் பின்னால் வேகமாக இழுத்துச் செல்வார்கள்.

10. கோ கார்ட்: கடற்கரை அல்லாத சாகசம். கோவாவில் வடக்கில் அஞ்சுனாவிலும், தெற்கில் நுவெமிலும் கோ கார்ட் அமைந்துள்ளது. திங்கட்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இயங்கும் கோ கார்ட் பத்து சுற்றுகளுக்கு 350 ரூ வசூலிக்கப்படுகிறது.

11. ஹாட் பலூன்: தெற்கு கோவாவில் சந்தோர் என்னும் இடத்தில் மட்டும் செயல்படுகிறது. தினசரி காலை மற்றும் மாலை தலா இரண்டு மணிநேரங்கள். ஹாட் பலூனில் பயணம் செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டியது அவசியம். விலை சிறுவர்களுக்கு 8000 – 10000ரூ. பெரியவர்களுக்கு 12000ரூ.

இவற்றைத் தவிர்த்து விண்ட் சர்ஃபிங், கயாகிங், யாட், ராஃப்டிங், ஸோர்பிங் போன்றவையும் உள்ளன. பொதுவான பயணிகள் இவற்றை தவிர்த்துவிடலாம். உதாரணத்திற்கு, விண்ட் சர்ஃபிங் செய்ய வேண்டுமென்றால் போதிய பயிற்சி தேவை. ராஃப்டிங் செய்யும் நதிக்கு நகர்ப்புறத்திலிருந்து நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

படங்கள் - இணையம்

அடுத்து வருவது: கோவா – டிட்டோஸ் லேன்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment