29 December 2011

கனவுக்கன்னி 2011 – பாகம் 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவின் முதல் பாகத்தை படிக்க பார்க்க:

5. “தங்க தமிழச்சி” தன்ஷிகா (சென்ற ஆண்டு 1வது இடம்)
இந்த ஆண்டில் அம்மணியின் ஒருபடம் கூட வராதது ஏமாற்றமே. அரவான் படத்திற்கான காத்திருப்பு நீள்கிறது. ஆனாலும் தன்ஷிகா மீதுள்ள கிரேஸ் குறையவே இல்லை. விகடனின் தீபாவளி போட்டோ ஷூட், அரவான் ஆடியோ வெளியீட்டு விழா என்று அவ்வப்போது திவ்யதரிசனம் காட்டி குளிர்வித்துள்ளார்.

4. “வெண்ணைக்கட்டி” லக்ஷ்மி ராய்
இதுவரை தோல்விப்படங்களில் தோன்றியவர், காஞ்சனா, மங்காத்தா என்று வரலாற்றை திருப்பியிருக்கிறார். காஞ்சனா படத்தின் கருப்பு வெள்ளை பாடலையும், மங்காத்தா படத்தின் ரயில்வே ஸ்டேஷன் காட்சியையும் இந்த நூற்றாண்டில் மறந்துவிட முடியாது. ஆனால் பார்ட்டி மலையாள கரையோரம் ஒதுங்கிவிட்டது என்பது வருத்தமான செய்தி.

3. “அடுத்த வீட்டுப்பெண்” அஞ்சலி (சென்ற ஆண்டு 8வது இடம்)
ராஜமுந்திரியில் பிறந்த ராணிமுந்திரி. அவார்டு பட்டியலிலும் இடம் பிடிப்பார், ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தாலும் எங்கேயும் எப்போதும் எல்லோருடைய ஃபேவரிட். மங்காத்தா, கருங்காலி, த.வெ.சுந்தரம் படங்களில் செம ஹாட் மச்சி.

2. “கேரளத்து கப்பக்கிழங்கு” இனியா
வாகை சூட வா அறிமுகப்படம் போல தெரிந்தாலும் சென்ற ஆண்டே பாடகசாலை என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமாகி யுத்தம் செய் படத்தில் சேரனின் தங்கையாக தோன்றியவர். ஒரிஜினல் பெயர் ஸ்ருதி சவந்த். தமிழ் சினிமா ஹீரோயிங்களுக்கே உரித்தான வெட்கத்திலும், கஞ்சா இழுக்கும் ரியாக்ஷனிலும்* ஸ்பெஷலிஸ்ட். 

1. “புன்னகை பூச்செண்டு” காஜல் அகர்வால் (சென்ற ஆண்டு 2வது இடம்)
மாவீரர்களையும் மடிய வைக்கும் அழகுப்பதுமை. இந்த ஆண்டு நேரடி தமிழ்ப்படங்கள் எதிலும் தோன்றவில்லை என்றாலும் மாவீரன் படத்தின் மூலம் மகாராணியாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் காஜல் தோன்றிய சில விளம்பரப்படங்களை பார்த்த இளைஞர்கள் லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பதாகவும், காபி போட கற்றுக்கொள்வதாகவும் அழகுத்துறை தகவல் சொல்கிறது. அதே சமயம் பப்பி ஷேம் போஸ், "நான் தென்னிந்திய நடிகை அல்ல" போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார். பட்சி பாலிவுட் பக்கம் பறக்க பார்த்தாலும் மாற்றான், துப்பாக்கி என்று தன்வசம் வைத்திருக்கிறது தமிழ் சினிமா. காஜலின் அடுத்த படங்களில் ஒன்று கே.வி.ஆனந்த் படம், மற்றொன்று விஜய் படம் என்பது வேதனையான விஷயம்.

* கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் – ஹீரோ ஹீரோயினுக்கு முத்தமிட நெருங்கும்போதோ அல்லது அந்தமாதிரி நேரத்திலோ ஹீரோயின் காட்டும் முகபாவம்.

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 December 2011

கனவுக்கன்னி 2011 – பாகம் 1


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மயிரிழையில் லிஸ்டில் இருந்து தவறிப்போன கனவுக்கன்னிகள்:
கார்த்திகா (கோ), தமன்னா, திவ்யா (பொன்னர் சங்கர்), ரேஷ்மி (தேநீர் விடுதி)

10. “பெங்காலி ஸ்வீட்” ரிச்சா
தெலுங்கு தேசத்தில் கொடிகட்டி பறந்தவர். ஆண்டின் இறுதியில் இரண்டு தமிழ் படங்களில் தோன்றி ரசிகர்கள் மனதை இறுகப் பிடித்துக்கொண்டார். சிரித்தால் அழகாக இருப்பார் ஆனாலென்ன சிரிக்கவே மாட்டார். மாடர்ன் உடைகள் அணிய தயக்கம் காட்ட மாட்டார் என்ற போதிலும் சேலையில் சோலையாக காட்சியளிப்பார்.

9. “செவ்வாடை அழகி” அர்ச்சனா
யூடியூபையே கதிகலங்க வைத்தவர். பெரிய அழகியெல்லாம் இல்லை. ஆனால் காட்சியின் ஆரம்பத்தில் ‘வா’ என்று கண்ணால் ஜாடை காட்டுவார் பாருங்கள். அதுவே வருஷம் முழுவதற்கும் தாங்கும். நிறைய இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்திருப்பார். பாவம் நல்ல படவாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்படு(த்து)கிறார்.

8. “குட்டி அசின்” பூர்ணா
ஐந்தாறு லோ பட்ஜெட் மொக்கை படங்களில் தலை காட்டினாலும் வித்தகன் படத்தில்தான் கன்னாக மாறி மனதிற்குள் புல்லட் பாய்ச்சினார். அப்பாவி லுக் கொடுத்து அப்ளாசை அள்ளும் திறமைசாலி. வெறும் சக்கையாய் சாய்கிறேன்... நீ துப்பிடும் பார்வையால்...

7. “மஞ்சக்காட்டு மைனா” நீத்து
ஆண்டின் ஆரம்பத்தில் கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா என்று குத்தாட்டம் போட்டு கட்டிளம்காளைகள் மனதை கட்டிப்போட்டவர். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த கோதுமை அல்வா. அமீரின் அடுத்த படத்திற்காக வெயிட்டிங்.

6. “கேரளத்து மைனா” அமலா பால் (சென்ற ஆண்டு: 3வது இடம்)
சிந்து சமவெளி வழியாக தமிழ் ரசிகர்களின் இதயம் புகுந்தவர். இந்த ஆண்டு வெள்ளித்திரையில் அதிகம் தோன்றவில்லை என்றாலும் இதய இருக்கைகளை காலி செய்ய மறுக்கிறார். வரவிருக்கும் ஆண்டிலாவது வேட்டையாடுவார் என்று நம்புவோமாக.
முதல் ஐந்து இடம் பிடித்த கனவுக்கன்னிகள் அடுத்த பாகத்தில்... அதுவரைக்கும் Keep Guessing...!

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 December 2011

நான் பார்த்த தமிழ் சினிமா – 2011

அன்புள்ள வலைப்பூவிற்கு,




20. பொன்னர் சங்கர்
அய்யகோ...! கஸாலி என்னும் கயவனால் இந்த காவியத்தை காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன். திவ்யா பரமேஸ்வரனுக்காக மட்டும் லைட்டா ரசித்தேன்.

19. கோ
இது படமல்ல பாடம்...!

18. லத்திகா
எப்பேர்ப்பட்ட காமெடி படமாக இருந்தாலும் இந்த அளவிற்கு சிரித்திருக்க மாட்டேன். அல்டிமேட் ஃபன். வெயிட்டிங் ஃபார் ஆனந்த தொல்லை.

17. கருங்காலி
வித்தியாசம் ஆனால் வக்கிரம், பிடிச்சிருந்தது ஆனால் தப்பு, போன்ற வாக்கியங்களை உதாரணமாக கூறலாம். அஞ்சலியின் ஒரு ஜில்பான்ஸ் காட்சிக்காக லைக்கிங்.

16. நடுநிசி நாய்கள்
கருங்காலிக்கு எழுதிய அதே வாக்கியங்கள் இதற்கும் பொருந்தும். படம் முழுக்க தப்புதண்டா செய்துவிட்டு கடைசியில் இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு ஸ்லைடு போடுறது அயோக்கியத்தனம்.

15. பதினாறு
ஒரே புத்தகத்தில் இரண்டு ஃபீல் குட் நாவல்கள் படித்த திருப்தி. ஆனால் தியேட்டருக்கு போய் பார்க்கக் கூடிய அளவுக்கு வொர்த் இல்லை.

14. சாந்தி அப்புறம் நித்யா
குறும்படமாக எடுக்க வேண்டிய சமாச்சாரத்தை குறும்புப்படமாக எடுத்திருந்தார்கள். மற்ற சாப்ட் போர்ன் படங்களை விட ஒருபடி மேல். மார்கெட்டிங் ஜாலம் அபாரம்.

13. ஏழாம் அறிவு
எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருக்கும்போது ஏமாற்றம் வருவது சகஜம்தான். காசுக்காக தமிழுணர்வு ஜல்லியடிப்பது கண்டிக்கத்தக்கது. 

12. முரண்
ஆர்ப்பாட்டமில்லாத படம். ஆனால் ஒரிஜினல் வெர்ஷனோடு ஒப்பிடும்போது தோற்றுவிடும்.

11. அழகர்சாமியின் குதிரை
மூடநம்பிக்கைகளை சாடும் நறுக் வசனங்கள் ப்ளஸ் பாயிண்ட். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

10. குள்ளநரி கூட்டம்
நல்லதொரு பொழுதுபோக்கு படம். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தாமல் அதே சமயம் அழகாக மார்கெட்டிங் செய்தது படத்தின் மிகப்பெரிய பலம்.

9. வித்தகன்
பார்த்திபனின் மொக்கை காமெடி வசனங்களுக்காகவும், குட்டி அசின் பூர்ணாவிற்காகவும் ரசித்தேன். மற்றபடி ஒன்றும் புதுசில்லை.

8. காஞ்சனா
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி. (லத்திகாவுக்கு அப்புறம்) தமிழில் திகில் படமெடுப்பது சாதாரண விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும் செம காமெடியாகிவிடும். காஞ்சனா உண்மையாகவே பயம் காட்டிவிட்டாள்.

7. எங்கேயும் எப்போதும்
ரிலீசாகி ரொம்ப நாள் கழித்து தான் பார்த்தேன். ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை, நச்சுன்னு ஒரு கருத்து அதுக்காக ரசித்தேன்.

6. மயக்கம் என்ன
செய்கிற வேலையை ரசித்து செய்யச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதிக எதிர்பார்ப்போடு போகாமலிருந்தால் இன்னும் பிடித்திருக்கும். 

5. வாகை சூட வா
பழைய பாரதிராஜா டைப் படம். ஆனாலும் சலிப்பூட்டாமல் ரசிக்க முடிந்தது. நல்லதொரு கருத்து சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

4. மங்காத்தா
தல படம். வேறென்ன சொல்ல.

3. யுத்தம் செய்
புத்திசாலி போலீஸ் கதைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் ரசிக்க வைக்கின்றன. இதுதான் கதை என்று தெரியாமல் பார்த்ததால் இன்னும் ரசிக்க முடிந்தது.

2. 180
பொழுதுபோக்கு படம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் இதுதான். கவலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் இந்தப்படம். நிறைய காட்சிகள் போரடித்தாலும் கடைசியில் சொன்ன கருத்துக்காக லைக்கோ லைக்.

1. ஆரண்ய காண்டம்
அட்டகாசமான விளம்பர யுக்தி, கொடுக்காப்புலி, காளையன் கேரக்டர்களின் பிரமாதமான நடிப்பு, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள், அருமையான திரைக்கதை, பின்னணி இசை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தில் Strategy Management, Decision Making என்று பாடமெடுத்தது சூப்பர்.

தவறவிட்டு வருந்தியவை: ஆடுகளம், வானம், உயிரின் எடை 21 அயிரி, வேலாயுதம், வெங்காயம், போராளி, மெளனகுரு

தவறவிட்டு மகிழ்ந்தவை: சிறுத்தை, காவலன், அவன் இவன், தெய்வதிருமகள், வெடி, ஒஸ்தி, ராஜபாட்டை


பிளாஷ்பேக்: நான் பார்த்த தமிழ் சினிமா - 2010

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 December 2011

ஈரோட்டு சங்கமத்தை திட்டி எழுத பத்து தலைப்புக்கள்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ம்ம்ம்... எப்படியும் இன்னும் பத்து நாளைக்கு நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் பதிவர்கள் எழுத இருக்கும் ஈரோடு சங்கமம் குறித்த தொடர் இடுகைகளை படித்துதான் ஆகவேண்டும். எல்லோரும் போனோம்... ஆஃப் அடிச்சோம்... (ஆப்பு இல்லை) ஆட்டுக்கறி சாப்பிட்டோம்... வந்தோம்ன்னு போடுறதுக்கு பதிலா வித்தியாசமா ஏதாவது எழுதனும்ன்னு நினைச்சா கீழிருக்கும் பத்து தலைப்புகளில் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். (First Come First Serve. No Offence)

1. வேர்ட்பிரஸ் பதிவர்களை புறக்கணிக்கிறதா ஈரோடு...???
2. அக்கினிக்குஞ்சு ஆடத்தான் செய்யும்...!
3. தண்டோரா மணிஜி சாதனைப்பதிவர் இல்லையாமாம்...!
4. முட்டையில் பூரி எங்கே...? எங்கே...? எங்கே...?
5. சென்னை ஹோட்டல் பதிவருக்கும் ஈரோடு ஹோட்டல் பதிவருக்கும் லடாய்...!
6. எழுபது ரூவா சரக்கு...!
7. ஈரோடு சங்கமத்திற்கு “நல்ல நேரம்” இல்லையா...???
8. கில்மா பதிவரின் அளப்பறைகள்...!
9. புதிய பதிவர்களை கண்டுகொள்ளாத ஈரோடு சங்கமம்...!
10. மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்...!

பதிவர்களே... எந்த தலைப்பை தேர்ந்தெடுத்தாலும் சரி, தலைப்பை தொடர்ந்து வரும் மூன்று புள்ளிகள், ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற அயிட்டங்கள் அதிமுக்கியமானவை... அப்புறமென்ன என்சாய்...!

செய்தி: பொதிகை சேனல் டி.ஆர்.பி ரேட்டிங் அதிரடி முன்னேற்றம்...!
டிஸ்கி: மேலே உள்ள புகைப்படம் சார்பாக பின்னூட்டம் போடுபவர்கள் ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பின்னூட்டமிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 December 2011

புலியிடம் பால் கறந்த பிரபல பதிவர்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தய பாகங்கள்:
மதிய உணவை முடித்துக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் குகையை நோக்கி புறப்பட்டோம். யாருக்கும் வழி தெரியாத காரணத்தினால் ஒரு வழிப்போக்கரிடம் கேட்டோம். பன்னிரண்டு கிமீ கடக்கச் சொன்னார். அவர் சொன்னபடி கடந்துவிட்டு மறுபடியும் ஒருவரிடம் வழி கேட்டோம். சமணர் குகையா...? அது பத்து கிமீ முன்னாடியே போயிருக்குமே என்றார். ஒருவேளை முன்னர் வழி சொன்னவர் பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது புளியம்பட்டிக்கு வழி சொல்லியிருப்பாரோ. மறுபடியும் திரும்பிச்சென்றால் தாமதமாகி விடுமென சமணர் குகை திட்டம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக வியூ பாயிண்ட். எனக்கு ஹைட்டுன்னா ரொம்ப பயம். மொட்டை மாடியில இருந்து கீழே எட்டிப்பார்க்க கூட பயப்படுவேன். (அதுக்கு பின்னாடி ஒரு கருப்பு சரித்திரமே இருக்கு). இந்த லட்சணத்துல மலையுச்சியிலிருந்து கீழே பாக்குறதுன்னா சும்மாவா. தயங்கித் தயங்கி எட்ட நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன்.

செருப்பு அணிந்து நிற்பவர் (போலி) பகுத்தறிவாளர் செல்வின்...!
சமணர் குகை சமாச்சாரத்தில் ஏமாற்றம் அடைந்த நமக்கு ஆறுதல் தரும் விதமாக இன்னொரு பழமையான கோவில் அருகிலிருப்பதாக தகவல் கிடைத்தது. அமானுஷ்யமான அந்த வனப்பகுதியில் சில தூரம் நடந்து உள்ளே சென்றால் பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது அந்த கோவில். ரகசிய அறை ஏதாவது இருக்கிறது என்று தேடிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பினோம்.

கிட்டத்தட்ட எங்கள் பயணம் முடியும் தருவாயில் இருந்தது. மலை அடிவாரத்தை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தும். அதற்குள் எங்களிடம் இன்னும் கொஞ்சம் திரவ உணவு மீதமிருப்பது நினைவுக்கு வர, ஒரு கொண்டையூசி வளைவு தற்காலிக பாராக மாறியது. இந்த பயணத்திற்கு பிறகு எந்த சரக்கடித்தாலும் சரி, மிக்ஸிங் மட்டும் போவொண்டோ தவிர வேற எதுவும் கிடையாது என்று சபதமெடுத்துக்கொண்டேன்.

பதிவின் தலைப்பை படிக்கவும்...!
மறுபடி நாமக்கல் நகரத்திற்குள் நுழைந்தோம். மறுபடி டாஸ்மாக், மறுபடி புஷ்பா ஹோட்டல், மறுபடி எண்ணையில பொரிச்ச கோழி. மறுநாள் அதிகாலை செல்வினின் நண்பருக்கு திருமணம். ஏழு மணிவரைக்கும் எல்லோருமே மட்டை. அப்புறம் சாவகாசமாக எழுந்து சுதாரித்துக் கொண்டு திருமண மண்டபத்திற்கு விரைந்தோம். அங்கே ஒரு அழகான பெண். ஆமாங்க, பரந்துவிரிந்த அந்த மண்டபத்திலேயே அந்த ஒரு பொண்ணு தான் உருப்படி. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள், அதை பக்கத்திலிருந்த அவளுடைய அம்மாவும் நோக்கியதால் ஜகா வாங்கிக்கொண்டேன். பின்ன என்னவாம், நானே கெஸ்ட்டோட கெஸ்ட். ஏற்கனவே உள்ளூர்ல வாங்குனதெல்லாம் பத்தாதுன்னு வெளியூர் போயி வேற வாங்கணுமா...?

கடைசியாக நாமக்கல் கோட்டையிடமும், டாஸ்மாக்கிடமும் விடைபெற்றுக்கொண்டு மனதை கள்ளாக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

டிஸ்கி: அவர் பால் தான் கறக்கிறாரா அல்லது வேறு ஏதாவது செய்கிறாரா என்று யாராவது கேட்டு சொல்லுங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 December 2011

பிரபா ஒயின்ஷாப் – 12122011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நம்மூரில் மழை வேண்டி கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்வது போல ஜிம்பாப்வே நாட்டில் ஒரு சடங்கு. அதாவது ஆண்களின் விந்துவினை வைத்து சடங்கு செய்தால் வாழ்க்கையில் வெற்றி கிட்டுமென்றும் பணம் கொழிக்கும் என்றும் ஒரு நம்பிக்கை. கடந்த வாரம் காரில் சென்றுக்கொண்டிருந்த அப்பாவி இளைஞர் ஒருவரை மூன்று இளம்பெண்கள் மடக்கி அவருடன் வலுக்கட்டாயமாக உறவுகொண்டு அவரது விந்தினை ஆணுறையில் சேமித்துக்கொண்டு சென்றார்களாம். மேலே சொன்னது ஒரு சாம்பிள் சம்பவம்தான். ஜிம்பாப்வேயில் ஆங்காங்கே அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றதாம். உச்சக்கட்டமாக ஒருவர் தான் கற்பழிக்கப்பட்டதை தன் மனைவியிடம் சொல்ல, அவர் விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டாராம். ம்ஹூம் வெண்ணிற ஆடை மூர்த்தி தலைமையில் ஆ.பா.ச (ஆண்கள் பாதுகாப்பு சங்கம்) ஆரம்ப விழா ஒன்னு செய்யணும்.

கடந்த வாரத்தில் ஒருநாள் நைட்டு மிட்நைட் மசாலா பார்த்துவிட்டு மிகவும் தாமதமாக தூங்கியதன் விளைவாக காலையில் கண் எரிச்சல் அதிகமாக இருந்தது. அவ்வப்போது கைகளை கண்களில் வைத்து கலவரம் செய்ய அலுவலகத்திற்குள் நுழையும்போது கண்கள் கேப்டனாக மாறியிருந்தது. அவ்வளவுதான்... உள்ளே சென்றதும் ஆளாளுக்கு என்னை பார்க்காதே, என்கிட்ட வராதேன்னு தவிக்கிறார்கள். எனக்கு மெட்ராஸ் ஐ-யாம் அது அவங்களுக்கும் பரவிடுமாம். அடப்பதறுகளா, அம்பேத்கர் கூட இப்படியொரு தீண்டாமையை கடந்து வந்திருக்கமாட்டார். நான் சத்தியம் செய்யாத குறையாக எனக்கு மெட்ராஸ் ஐ இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை. மேனேஜர் தெய்வாதீனமாக, தம்பி நீங்க தயவு செய்து வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொன்னார். அதுக்கு மேல நம்ம என்ன செய்ய முடியும்... கேட்காமல் கிடைத்தது ஒருநாள் விடுமுறை...!

சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், மங்காத்தாடா, பரதேசித்தமிழன், நாய் சேகர் நீங்கள்லாம் யாருங்க...??? நீங்க யாரா வேணும்ன்னா இருந்துட்டு போங்க. நீங்க பெயர் போட்டு எழுதுறதும் போடாம எழுதுறதும் உங்களோட தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிடுவதற்கில்லை. ஆனால் யாருடன் சாட்டுக்கு போனாலும் “உண்மையைச் சொல்லு... நீ தானே மங்காத்தா... நீ தானே புரட்சிக்காரன்...” என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். யோவ் நான் இல்லைய்யா நம்புங்கன்னு சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை. அவனவன் பத்து பதினஞ்சு ப்ளாக் வச்சிட்டு சந்தோஷமா இருக்கான்... ஒரே ஒரு ப்ளாக்கை வச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... அய்யுய்யுய்யுய்யோ....!!!

இந்தியாவே ஆரவாரமாக இருந்திருக்கும். ஷேவாக் நூற்றியைம்பது ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். நிச்சயம் இருநூறை தாண்டி விடுவார் என்றே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கோ உள்ளூர ஒரு எண்ணம் சச்சின் சாதனை முறியடிக்கப் படக்கூடாதென்று. கடைசியில் அது நடந்தேவிட்டது. ப்ச்... வடை போச்சே...!

கொலவெறி பாடலின் கொலவெறித்தனமான வெற்றியை அடுத்து அந்த பாடலுக்கு எப்படி நடனமைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம் படக்குழுவினர். எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் ஜஸ்ட் லைக் தட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்லிடுவாங்க ரசிகர்கள். பாடலின் மீதுள்ள எதிர்பார்ப்பு. அநேகமாக ஏதோவொரு பண்பலையின் வாயிலாக கொலவெறி பாடலுக்கு நடனம் அமைக்கும் போட்டி நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்.

ஜொள்ளு:
கண்ணுல காதல் கேமரா...! கொண்டு வந்தாளே சூப்பரா...!!
ட்வீட் எடு கொண்டாடு:
sanakannan Sa.Na. Kannan
தமிழ் இன்னமும் வாழ்வது ஊடகங்களில்தான் என்று கொலைவெறி பாடல் விவாதத்தில் சொன்னார் புதிய தலைமுறையின் தொகுப்பாளர்.

gpradeesh Pradeesh
நல்லவன்னு பேர் எடுக்க 2 எளியவழிகள்! காமம் பிடிச்சாலும், பிடிக்காத மாதிரியும்,பக்தி பிடிக்கலைனாலும் பிடிச்ச மாதிரியும் நடிக்கணும்!

udanpirappe ரவி சங்கர்
தக்காளி சுட்டே புடுவேன் -சிம்பு .. பாவிப்பய சொன்னமாதிரியே செஞ்சுத் தொலைச்சிட்டானே #osthi

krpthiru தமிழ் திரு
நாம் சைட் அடிப்பது தெரிஞ்சதும் அழகான பொண்ணுங்க வெட்கப்படுது ...சுமாரான பொண்ணுங்க பந்தா காமிக்குது .. #கன்பீசிங் கேள்ஸ்

Dhevadhai Verified Account
சேவாக் டெஸ்ட்டுல 319, ஒன் டேல 219.. #இதுக்கு காரணம் சச்சின் 19 வயசுல மொதல் செஞ்சுரி அடிச்சது தான் #இன்னும் கெளப்பலயா?

அறிமுகப்பதிவர்: ருத்ரா
நுழைந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பதிவர். அதற்குள் உண்மைத்தமிழன் போன்ற சீனியர் பதிவரின் கடைக்கண் பார்வை கிடைத்திருப்பது இவருக்கு ஸ்பெஷல் பூச்செண்டு. தமிழ்நாட்டில் பிறந்து பணி நிமித்தமாக குஜாராத்தில் வசித்துவரும் இவருடைய சுய புராணத்தை படித்துவிட்டு தொடருங்கள். நல்லவேளை நாம குஜராத்ல பிறக்கல என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார். அடுத்ததாக அகமதாபாத்தில் தன்னுடைய சிலிர்ப்பான அனுபவங்களை தொடராகவும் எழுதி வருகிறார். 

கேட்ட பாடல்: கொலைகாரா...!
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கொலகாரா... கொலகாரி... என்று கொலவெறி ஏதுமில்லாத ஒரு ரம்மியமான பாடல் கடந்த ஒருவாரமாக என்னை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

பாடல்வரிகளில் மிகவும் நுட்பமாக காமத்துப்பால் கலக்கப்பட்டிருப்பது அருமை. “பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பிச்செல்லும் மூடா... முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா...”, “ஆச வச்ச பொம்பளைக்கு அஞ்சுநாளா தூக்கமில்ல... மீச வச்ச ஆம்பிளைக்கு மெத்த வாங்க நேரமில்லை...” போன்ற வரிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கா.பால் சாம்பிள்கள். வீடியோவுடன் பார்க்கும்போது அஞ்சலி இருப்பது இன்னும் ஸ்பெஷல். ஆனால் கரண் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ்... அடங்கப்பா மனசுக்குள்ள பலே பாண்டியா சிவாஜி கணேசன்னு நெனப்பு...!

பார்த்த காணொளி: 
திரும்பத் திரும்ப தலபுராணம் பாடுவது எனக்கே கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இந்த காணொளியை பார்த்த மாத்திரத்தில் நிச்சயம் இதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. BTW, காணொளியில் தோன்றும் விமர்சகர் யாரென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ரசித்த புகைப்படம்:
பசங்க வாழ்க்கையை காலி பண்ணும் அந்த ஒரு பார்வை...!
பொன்மொழி:
ஒருபோதும் தவறு செய்யாதவன், ஒன்றும் செய்ய லாயக்கில்லாதவன்.

தத்துபித்துவம்:
Rivers never go reverse...! – வாழ்க்கையைப் போலவே

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு ரஜினி ஜோக்:
ரஜினி ஏன் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் தெரியுமா...?
ஒருமுறை ரஜினிக்கும் அவருடைய மனைவிக்கும் சண்டை வந்ததாம். அதுலயே ரஜினி ஜெயிச்சிட்டாராம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment