அன்புள்ள வலைப்பூவிற்கு,
1. பதிவர் சந்திப்பை நடத்திய பொறுக்கிகள்
பதிவர் சந்திப்பு குழுவினரைப் பற்றி ஒருத்தருக்கு ஒரு பத்தி என்ற
விகிதத்தில் மொக்கை போட வேண்டும். இறுதியாக பதிவர் சந்திப்பு முடிந்ததும்
விருந்தினர்கள் பயன்படுத்திய பேப்பர் கப், ப்ளேட் போன்ற வஸ்துக்களை
விழாக்குழுவினர் “பொறுக்கி” கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டார்கள் என்று
முடிக்க வேண்டும்.
2. பதிவர் சந்திப்பையும் மதுவையும் பிரிக்க முடியுமா ???
பதிவர் சந்திப்பை பற்றி இரண்டு பத்திகள் மொக்கை, பதிவர் மதுமதியை
பற்றி இரண்டு மொக்கை பத்திகள். பின்னர் பதிவர் மதுமதியை நாங்கள் செல்லமாக மது
என்றுதான் அழைப்போம். அவரையும் பதிவர் சந்திப்பையும் பிரிக்க முடியுமா என்று
கேள்விக்குறியோடு முடிக்க வேண்டும்.
ஒளியூடுருவும் உற்சாக பானத்தை வாட்டர் பாட்டிலில் ஒளித்துவைத்து அருந்தும் மெட்ராஸ் பவனார்...! |
3. உற்சாக பானம் அருந்திய மெட்ராஸ் பவனார்...!
முதலில் சிவகுமார் பற்றி இரண்டு பத்திகள். பின்னர் அவருடைய குணத்தைப்
பற்றி, அன்னார் ரொம்ப நல்லவர், வல்லவர், பொதுவுடமைவாதி, சீரிய பேச்சாளர், ஒழுக்க
சீலர், எச்சச்ச கச்சச்ச. அப்புறம் பதிவர் சந்திப்பன்று காலையிலிருந்து ஓடியாடி
உழைத்து சிவகுமார் அயர்வானார். சில மில்லி உற்சாக பானம் குடித்ததும் மீண்டும்
தெம்பானார். அந்த உற்சாக பானத்தின் பெயர் H20 என்று முடிக்க வேண்டும்.
4. பதிவர் சந்திப்பிற்கு ஊறுகாயான இஸ்லாமிய பதிவர்கள்...!
பதிவர் சந்திப்பை பற்றியும், மது சர்ச்சைகள் பற்றியும் சில பத்திகள். பின்னர்
விழிப்புணர்வு, நடுநிலை, மதநல்லிணக்க (!!!) ஜல்லிகள். அப்புறம் பதிவர்
சந்திப்பிற்கு இஸ்லாமிய சகோக்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மதிய உணவின் போது
அன்போடு உணவு பரிமாறினார்கள். சகோ. மனிதாபிமானி தான் நண்பர்கள் அனைவர் இலையிலும்
ஊறுகாய் வைத்தார் என்று முடிக்க வேண்டும்.
5. தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி யார்...?
முதலில் உங்களுக்கு தெரிந்த பிரபல / பிராப்ள பதிவர்களான கேபிள்,
ஜாக்கி, லக்கி, கே.ஆர்.பி பற்றி எழுதி மொக்கை போட வேண்டும். பின்னர் கூகுள்காரன்
தான் நமக்கு ஓசியில் வலைப்பூ கொடுக்கிறான், அதனால் அவன்தான் தமிழ் பதிவர்களின்
அத்தாரிட்டி என்று கோல் போட வேண்டும். பின்னூட்டத்தில் யாராவது வந்து, “வாத்தா...
எவன்டா அது என்னைப்பத்தி எழுதினது...” ன்னு கேட்டா, “அண்ணே... ஆக்குசன் நடிகர்
ஜாக்கி சான் என்னுடைய வசாகார்... அவரைப்பற்றி தான் சொன்னேன்... நீங்கங்கங்க
யாருன்னே எனக்கு தெரியாது...” என்று பல்டியடிக்க வேண்டும்.
மொட்டைமாடியில் கொட்டை அடிக்கப்பட்ட ஜோடிபுட்டிகள்...! |
6. பதிவர் சந்திப்பில் ஆபாசம் காட்டிய பதிவர்...!
முதலில் விழாக்குழுவில் உள்ள “அந்த” சம்பந்தப்பட்ட பதிவரைப் பற்றி சில
பத்திகள். அப்புறம் பதிவர் சந்திப்பின் கண்ணியம் பற்றியும், இந்திய இறையான்மை
பற்றியும் சில பத்திகள். பின்னர் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த விருந்தினர்கள் “ஆ...!”
என்று ஆச்சர்யப்படும் வகையில் நண்பர் “பாசம்” காட்டினார். அதைத்தான் ஆ...பாசம்
என்று சொன்னேன் என்று முடிக்க வேண்டும்.
7. தேசிய கீதத்தை அவமதித்த தமிழ்ப்பதிவர்கள் மாநாடு...!
மறுபடியும் இந்திய இறையான்மை, மகாத்மா (!!!) காந்தி பற்றி சில
பத்திகள். முடிந்தால் ராபிந்திரநாத் தாகூர் பற்றியும், அவரது புலமை பற்றியும் சில
மொக்கைகள். அப்புறம் தமிழ் பதிவர்கள் தேசிய கீதத்தை தமிழில் தானே பாடியிருக்க
வேண்டும். ஏன் வங்காள மொழியில் பாடினார்கள் ??? என்ற வரலாற்று சிறப்புமிக்க
கேள்வியை முன்வைக்க வேண்டும்.
8. உனா தானா அண்ணாச்சியை அவமதித்த பதிவர் குழுமம்...!
உண்மைத் தமிழன் அண்ணாச்சி உண்மையிலேயே எம்புட்டு நல்லவர் என்று
விளக்கிச் சொல்லி சில பத்திகள். நடுநடுவே முருகா, செந்திலாண்டவா இதெல்லாம்
போட்டுக்கணும். அப்புறம் அறுபது வயதை கடந்த பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பில்
பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு தந்து மரியாதை செய்தார்கள். ஆனால் பல
வருடங்களுக்கு முன்பே அறுபதைக் கடந்த எங்கள் சித்தப்பு உனா.தானாவை
மறந்துவிட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.
பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது) |
9. தமிழை மறந்த தமிழ்பதிவர்கள்...!
முதலில் தமிழனின் ஒரிஜினல் பெருமை, போதி தருமர், திருவள்ளுவர்,
கான்ஸ்டான்டியுஸ் ஜோசப் பெஸ்கி பற்றியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டும். பின்னர்
பதிவர் சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது மேடையில் வீற்றிருந்த பதிவர்
பாடலை மறந்துவிட்டதாகவும், அதை சமாளிக்க கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் கொடுத்ததாகவும்
அடித்துவிட வேண்டும். நான் பார்த்தேனே... அப்படியெல்லாம் நடக்கலையே...” என்று
மடக்கும் பின்னூட்டவாதிகளுக்கு போலி தமிழ் தேசியவாதிகள், நட்ட நடு சென்டர்கள்
போன்ற பட்டங்களை தரவேண்டும்.
10. பதிவர்களில் யார் யார் எந்தெந்த க்ரூப்....? ஒரு நடுநிலை ஆய்(வு)...!
மறுபடியும் பதிவுலகில் மூத்த / பீத்த பதிவர்கள் பற்றி சில பத்திகள்.
பதிவுலகை நாங்கள் தான் கண்காணித்து, கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறோம் என்பது
போன்ற வார்த்தைகள் கொண்ட பத்தி. பின்னர் பதிவர் சந்திப்பின் போது யார் யார்
எந்தெந்த ப்ளட் க்ரூப் என்று பேசிக்கொண்டிருந்தோம். கேபிள் ஓ பாசிடிவ் க்ரூப்,
ஜாக்கி ஓத்தா நெகடிவ் க்ரூப் என்று அடித்துவிட வேண்டும்.
மேற்படி பதிவுகள் போடும்போது பின்னூட்ட மட்டறுத்தல் வைத்துக்கொண்டால்
மற்றவர்கள் / உற்றவர்கள் காறி உமிழும்போது உங்கள் முகத்தில் படாமல் தப்பிக்கலாம்.
முடிந்தால் பின்னூட்டப்பெட்டியை மூடிக்கொண்டு இருக்கலாம்.
யாராவது வந்து இப்படி கெட்டவார்த்தையெல்லாம் போட்டு பதிவு
எழுதியிருக்கீங்களே தம்பின்னு கேள்வி கேட்டா, யார் சொன்னது இது பெண்களெல்லாம்
படிக்கும் கண்ணியமான வலைப்பூ...! அதனால் “ம” வில் ஆரம்பித்து “ரு” வில் முடியும்,
நடுவில் “யி” அல்லது “சு” வரக்கூடிய, தலைமுடியை குறிக்கக்கூடிய “அந்த”
கெட்டவார்த்தையை எங்கம்மா சத்தியமா நான் பயன்படுத்தவே மாட்டேன் என்று அடித்துக்கூற
வேண்டும்.
திருவள்ளூர் “வாசி”கள் மட்டும் தங்களுடைய பதிவின் தலைப்பில், ”அந்த”, “அது”,
அதேதான்” போன்ற சங்கேத வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்ள பெசல் அனுமதி உண்டு...!
தொடர்புடைய சுட்டி: ஈரோட்டு
சங்கமத்தை திட்டி எழுத பத்து தலைப்புக்கள்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|