29 February 2012

ஹாய்... மதனா மன்மதனா... அஜால் குஜால் விமர்சனம்


சீன் படம் பாக்குற சிங்கக்குட்டிங்க எல்லாம் ஜோரா ஒருமுறை கை தட்டுங்க. முதல் பாவம் அபிலாஷாவில் இருந்து கடைசி புண்ணியம் ஜானகி ஷா வரை ஒரு கில்மா ஃபிகரையும் நான் விடாம பார்த்துடுவேன்னு ஊருக்கே தெரியும். ஆனாலும் நான் விமர்சனம்ன்னுற பேருல பதிவு ஒன்னு தேத்துற அல்பத்தனமான நோக்கத்துக்காக மட்டுமே இந்தப்படத்தை பார்க்கிறேன். மத்தபடி ரிச்சா கங்கோபாத்யாவோட ஆயாவை கிளாமரா பார்க்கணும்ன்னுற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. மீ நல்லவன்... அப்பாவி... ஹி... ஹி...

இந்த உலகத்துல மூணு வகையான ஆண்கள்தான் இருக்காங்க... 1. கில்மா படம் பாக்குறதை தில்லா, ஓப்பனா, வெளிப்படையா ஒத்துக்குறவங்க.. 2. கில்மா படம் பார்த்தாலும் டீசன்சி கருதியோ, நல்ல இமேஜை நல்ல இமேஜை மெயின்டெயின் பண்றதுக்காகவோ வெளீல சொல்லாதவங்க... 3. நாக்கை தொங்க போட்டுட்டு பிட்டுப்படம் பார்த்தாலும் நான் பிட்டுக்காக பார்க்கலைங்கோ மீ நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்துறவங்க... இதுல நான் மூணாவது வகைன்னு எல்லோருக்குமே தெரியும்.

தார்ரோடு தர்மஅடி தியேட்டரில் போஸ்டரை பார்த்ததும் இன்னைக்கு ஆபீஸ் மட்டம் போட்டுடனும்ன்னு தீர்மானிச்சிட்டேன்... காரணம் போஸ்டர்ல ஹீரோயின் மேல ஹீரோ எறும்பு ஊருறதை பார்த்ததும் எனக்குள்ள குறும்பு ஊற ஆரம்பிச்சிடுச்சு. ரிசப்ஷனிஷ்ட் சரசுக்கிட்ட லீவ் சொல்ல போனேன்... அந்தநேரம் பார்த்து சரசு மேல ஒரு காக்கா கக்கா போயிடுச்சு... பார்ட்டி கமுக்கமான சிரிப்போடு “எந்தா சாரே...?” ன்னு கேட்டுச்சு... நான் இது உன்தில்லைம்மா காக்காய்துன்னு சொன்னேன்... பாப்பா பேப்பர் வெயிட்டை எடுத்து நடுமண்டையிலே போட்டுருச்சு... நமக்கு அதுவா முக்கியம்... பாப்பாவோட வயசு 17 ¾, ஊர் கேரளா – பாலக்காடு #இம்பரமேஷன் இஸ் வெல்த்

படத்தோட சதை... ச்சே கதை என்னன்னா...

ஹீரோ ஒரு பெரிய கம்பெனியோட எம்.டி. (ஆனா ஆள் பயங்கர கேடி). அவர் பயங்கர டென்ஷன் பார்ட்டி... (என் குருநாதர் ஜாக்கியை விட டென்ஷன் பார்ட்டின்னா பார்த்துக்கோங்க...) அப்படி இருக்கும்போது ஹீரோவோட பி.ஏ குட்டைப்பாவாடை, லோ நெக் டிரஸ்செல்லாம் போட்டுட்டு வந்து ஹீரோவை உஷார் பண்ண பாக்குது... ஹீரோவுக்கும் பி.ஏ மேல ஒரு கண்ணுதான்... (அப்ப இன்னொரு கண்ணு பி.ஏவுக்கு கீழயான்னு கேட்கப்பிடாது... ஹி... ஹி...) ஆனா ஹீரோ தான் டென்ஷன் பார்ட்டியாச்சே... பி.ஏ சும்மா கிட்ட வந்தாலே (டிரஸ் போட்டுட்டு தான் வர்றாங்க...) ஹீரோ காத்து போன பலூன் மாதிரி ஆயிடுறாரு...

அந்த சமயத்துல ஹீரோவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்றாங்க... பொண்ணுதான் ஹீரோயின் இதுக்கு முன்னாடி தவம் படத்துல கண்ணதாசா கண்ணதாசா கம்மிங்கான்னு கண்ணதாசனையே கூப்பிட்டவங்க... ஹீரோ தான் காத்து போன பலூனாச்சே... முதலிரவில் ஜெயிப்பது எப்படின்னு ஃபிரென்ட் கிட்டபோய் ஐடியா கேக்குறாரு... ஃபிரென்டும் எக்ஸர்சைஸ் பண்ணு, ஜூஸ் குடின்னு ஐடியா தர்றாரு... (நானா இருந்தா விலாசம் கேட்டிருப்பேன்... ஹி... ஹி...) ஆனா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பு வலி வந்ததும், ஜூஸ் குடிச்சு வயித்தால போனதும்தான் மிச்சம்... (ஹீரோ ஃப்ரெண்டுக்கு மச்சம்...)

ஒருவழியா (ஈரோடு 2 சென்னிமலை போற வழியா இருக்குமோ??? #டவுட்) ஹீரோவுக்கு மேரேஜ் ஆயிடுது. ஹீரோவை உஷார் பண்ண ட்ரை பண்ண பி.ஏ பாப்பா ஹீரோவுடைய முதலிரவு நடக்காமல் இருக்க பல முயற்சிகள் செய்யுது... தன்னுடைய காத்து போன பலூன் பிரச்னையை ஹீரோ எப்படி சமாளிக்கிறான்...? ஹீரோயினுடன் குடும்பம் நடத்தினானா...? என்பதை திடீர் திருப்பங்களுடன், கவர்ச்சி கலந்து சொல்லியிருக்கிறார்கள்...

என்னை ஷட் டவுன் ஆக்கிய கில்மா வசனங்கள்
1. ஆயிரம் இருந்தாலும் பக்கத்து வீட்டு சாப்பாடு வருமா...???
(ஏன் எதுத்த வீட்டு சாப்பாடு நல்லாருக்காதுங்களா...??)

2. அப்பா (போனில்): அம்மாகிட்ட போனை கொடும்மா...
மகள்: அம்மா செத்துப்போய் பத்து வருஷம் ஆச்சு...
அப்பா: என்னம்மா சொல்ற...?
மகள்: நான் உங்க அம்மாவை சொன்னேன்...

3. மகள்: அம்மா போன்ல உங்க வீட்டுக்காரர் பேசுறார்...
அம்மா: ஏண்டி அப்பான்னு சொல்லக்கூடாதா....?
மகள்: அவர்தான் எங்கப்பான்னு எனக்கு எப்படி தெரியும்...!!!
(குடும்பத்துலயே குழப்பம் இருக்கு... #மீ கண்டுபுடிச்சிங்)

4. பி.ஏ: சார்... ஷட் டவுன் ஆயிடுச்சா சார்...
(கம்ப்யூட்டர் நஹி... ஹி... ஹி... ஹி...)

5. மாமா... உங்க பொண்ணை கேட்டதா சொல்லுங்க... அத்தைக்கு தேளசன்ட் கிஸ்சஸ்... உம்ம்ம்ம்ம்மா...
(ம்ஹூம்... நாடு வெளங்கிடும்...)

6. வழிப்போக்கர்: என் பொண்டாட்டிய பார்த்தியா...?
ஹோட்டல் ரூம்பாய்: இப்ப பார்க்கல... காலையில குளிக்கும்போது பார்த்தேன்...

7. ஹீரோயினின் தோழி: நான் அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கேன்...
ஹீரோயின்: உனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் தானே ஆச்சு...
ஹீரோயினின் தோழி: ஆனா நிச்சயம் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சே...!

இந்த படத்தின் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டிய நீதிகள்:
1. கல்யாணமான கணவனும் மனைவியும் ஒரே அறையில் தங்கக்கூடாது... பெற்றோர் கண்காணிப்பில் இருவரும் பத்து அடி தூரம் விட்டு படுக்கலாம்....

2. எதையுமே அளவுக்கு அதிகமா செஞ்சா பிரச்சனை தான்... (நான் எக்ஸர்சைஸ் செய்யுறதயும் ஜூஸ் குடிக்குறதையும் சொன்னேன்... ஹி... ஹி...)

3. தப்பு பண்ணுற லேடீஸ் பத்து, பதினைஞ்சு முறைகூட தப்பு பண்ணுவாங்க... நாம அப்பாவி ஆண்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்... (பிரபல பெண் டிவிட்டர்களே... நோ கும்மிஃபை... மீ ஆல்சோ அப்பாவி...)

இயக்குனர் பல்பு வாங்கிய இடங்கள்:
1. ஹீரோயின் அறிமுகமாகும் காட்சியில் போர்வையால் இழுத்து போர்த்தியபடி காட்டுகிறார்கள்... ஒரு பிட்டுப்படத்தில் ஹீரோயின் அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்ற இங்கிதம் கூடவா இயக்குனருக்கு தெரியாது...???

2. வழக்கமா பிட்டுப்படங்களில் ஆ... ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்... இப்படியெல்லாம் ஹீரோயின் தான் சவுண்டு கொடுப்பாங்க... இல்லைனா டப்பிங்ல மேட்ச் பண்ணிடுவாங்க... இந்தப்படத்தில் ஹீரோதான் சவுண்டு கொடுக்கிறார் அதுவும் படம் முழுக்க...

3. ஹீரோவுக்கும் பி.ஏவுக்கும் ரொமான்ஸ் நடக்கிற காட்சிகளில் குஷி படத்திற்காக தேவா போட்ட கட்டிப்புடி கட்டிப்புடிடா மியூசிக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்காக நன்றி: தேவான்னு டைட்டிலில் போடவே இல்லையே... அடுத்தவர் உழைப்பை திருடுவது தவறு என்று இயக்குனருக்கு தெரியாதா...???

4. ஹீரோவுக்கு முதலிரவு நடக்குது. ஆனா அடுத்தநாளே ஆபீஸுக்கு போகிறார். என்னதான் சின்சியர் சிகாமணி கேஷியர் கே.ஆர்.விஜயாவா இருந்தாலும் அடுத்தநாளேவா போவாங்க....

5. மருதம் எலக்ட்ரிகல்ஸ், 253, திரு.வி.க.ரோடு, முனிசிபல் காலணி, ஈரோடு.

படத்துல சீன் இருக்கா இல்லையா ? – படத்துல சீன் இருக்கு ஆனா நீங்க எதிர்பாக்குற சீன் இல்லை... (நான் சூசகமா தான் சொல்லுவேன்... சீன் இருக்குதா இல்லையா... படம் பார்க்கலாமா வேணாமான்னு எல்லாம் கேட்கப்பிடாது...? ஹி... ஹி... ஹி...)

டிஸ்கி 1: இந்தப்படத்துக்கும் ஆனந்த விகடன் ஹாய் மதனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... சும்மா ஹிட்ஸ் வாங்குறதுக்காக யூஸ் பண்ணிக்கிட்டேன்...


Post Comment

27 February 2012

பிரபா ஒயின்ஷாப் – 27022012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

2012 பாக்யராஜ்
பழைய பாக்யராஜ் படங்கள் மீது எனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு. தற்காலத்தில் பிரகாஷ் ராஜ் தயாரித்து வெளியிடும் படங்களைப் போலவே மெளனமாய் மனதிற்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக தாவணிக் கனவுகள், தூறல் நின்னு போச்சு போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இன்று போய் நாளை வா படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட குடும்பத்தோடு பார்ப்போம். சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் ஒரு பின்னணி இசை என்னை பல மாதங்களுக்கு படுத்தி எடுத்தது. அந்த வரிசையில் கடந்த வாரத்தில் ஒருநாள், டார்லிங்... டார்லிங்... டார்லிங்... படத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு தலைக்காதலின் சுகமான சுமையை மிகச்சரியாக சொன்ன ஒருசில படங்களுள் அதுவும் ஒன்று எனச் சொல்லலாம். க்ளைமாக்ஸில் பாக்யராஜும் பூர்ணிமாவும் இணைகிறார்கள் என்பதைக் காட்டிலும் படம்நெடுக காட்டிய ஒருதலைக்காதல் உணர்வுகள்தான் அதன் வெற்றி.

ஒரு சின்ன நெருடல், கடைசி சில நிமிடங்களில் சுமனின் தந்தை சுமனிடம் சொல்கிறார், “நானும் உங்கம்மாவும் கிட்டத்தட்ட 40 yearsக்கு மேல தாம்பத்தியம் நடத்தியிருக்கோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை. அந்த அளவுக்கு செக்ஸுக்கு ஒரு புனிதமான மரியாதை கொடுத்தோம்”. எனக்கு புரியல – லைட் ஆஃப் பண்றதுக்கும், புனிதமான மரியாதைக்கும் என்ன தொடர்பு. அப்ப, லைட் போட்டுட்டு பண்றவங்க எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களா...??? Come On Speak...! நம்ம செக்ஸ் வறட்சி மிகுந்த நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...!
பள்ளிப்பருவத்தில் எனக்கு சுத்தமாக பிடிக்காத பாடம் சமூக அறிவியல்தான். ஏன்தான் இப்படி ஒரு சப்ஜெக்ட் என்று அலுத்துக்கொள்வேன். அதற்கு தகுந்தாற்போல, எனக்கு சமூக அறிவியல் வகுப்பெடுத்த ஒருவர் கூட உருப்படி கிடையாது. யாராவது ஒரு மாணவனை எழுப்பி ஒவ்வொரு பத்தியாக படிக்கச்சொல்லி அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்வதே அவர்களின் தலையாய கடமையாக இருந்தது. தேர்வுகளின்போது சமூக அறிவியலை குறைந்தபட்சம் மனப்பாடம் கூட செய்யாமல் அப்போது வந்த புதிய படத்தின் கதையையோ அல்லது வரலாற்று பகடியாகவோ எழுதி வைப்பேன். முட்டாள் ஆசிரியர்கள் கையெழுத்தை மட்டும் பார்த்து மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள். இதையெல்லாம் இப்பொழுது நினைக்கும்போது நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று வருந்தத்தோன்றுகிறது. இந்த ப்ளாஷ்பேக்கின் காரணி, நேற்று மதனுடைய வந்தார்கள் வென்றார்கள் படிக்க ஆரம்பித்தேன். மீண்டும் பள்ளிக்கூட மாணவனாக மாறி வரலாறு படிக்க ஆசையாக இருக்கிறது.

சிங்கார சென்னை
நீண்ட நாட்களுக்குப் பிறகு பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றிருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் வெறும் டப்பாத்தண்ணிக்கும், கள்ளக்காதலுக்கும் மட்டுமே இடமாக இருந்த எலியட்ஸ் பீச். இப்போது திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. அப்பளம், பஜ்ஜி, சோளம், வேர்க்கடலை, குல்பி என ஒரு ரவுண்டு கட்டிவிட்டு, வகைதொகை இல்லாமல் சைட்டு அடித்துவிட்டு மனமகிழ்வோடு திரும்பினோம்.

லிட்டில் ராஸ்கல்ஸ்
தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் மிகவும் அரிதானவை. குழந்தைகள் படம் என்று சொல்லிக்கொண்டு வரும் சில படங்களில் கூட பக்கவாட்டில் ஹீரோ – ஹீரோயின் டூயட் பாடுவார்கள். சமீபத்தில் தமிழில் வெளியான குழந்தைகள் படமான வண்ணத்துப்பூச்சி கூட முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துக்கொண்டால் பசங்க திரைப்படத்தை குழந்தைகள் படமென்று சொல்லலாம். ஆனால் மேலைநாடுகளில் இதுபோன்ற படங்களுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் கடந்த வாரம் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பெயரில் The Little Rascals படம் பார்த்தேன். யாராவது உங்களை திட்டினாலோ, ஒருமையில் அழைத்தாலோ உங்களுக்கு கோபம் வரும். அதையே குழந்தை செய்தால் என்ன அழகா பேசுறான் பாருன்னு அள்ளியெடுத்து அணைத்துக்கொள்வோம். அதுதான் இந்தப்படத்தின் உயிர்நாடி. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு சேட்டையும் செம க்யூட்.

ஜொள்ளு:
தூங்காம நான் காணும் சொப்பனமே...! உனக்காக என் மேனி அர்ப்பணமே...!!
ட்வீட் எடு கொண்டாடு:
உலகின் அழகான ஒருவரை கட்டி தழுவ முற்படும் போதெல்லாம்... கண்ணாடியில் முட்டிக் கொள்கிறேன்! :)

மின்வெட்டைக் கண்டித்து இருவர் தீக்குளிப்பு: திரு. தீக்குச்சி சம்பவ இடத்திலேயே மரணம். திரு. மெழுகுவர்த்தியின் உயிர் ஊசல்.

யாருமில்லாத தனிமையிலும் கூட சுகம் பெருவதற்கு ஒரு வழியை உருவாக்கியது கடவுள்தான் என்கிறான் நண்பன் #கடவுள் மட்டும் இத கேட்டா செத்துருவார்.

இது வரை யாரையும் காதலிக்காதவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றூ அர்த்தம்

எங்கேயும் எப்போதும்
சுஜாதா, ஹாய் மதன், பாலகுமாரன், பாக்யராஜ், அரசு, அந்துமணி, குருவியார், ஆந்தையார், கழுகார் இன்னபிற ஆர்கள் வரிசையில் நம்ம சிபியாரும் இணைந்திருக்கிறார். சிபியுடைய லொள்ளு கம் ஜொள்ளு கேள்வி பதில்கள் செக்ஷன் தான் இந்த வலைப்பூவின் ஸ்பெஷாலிடி. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. நாளை புத்தகமாக உங்கள் மடியில் தவழும் அபாயமும் இருக்கிறது.

சில சாம்பிள்கள்...

பிகர், கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?
கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன-னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகளை என் பிளாக்ல ட்வீட்ஸ்ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும், அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை.

திவுகள் வெளியிட்டுருக்கிறீர்கள் தெரியும் ? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?
ஒரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ ரெடி; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி..

மீபத்துல பரபரப்பா பேசப்படுற பதிவுலக கோஷ்டிபிளவை பற்றி உங்கள் கருத்து என்ன.? பதிவர்கள் இரண்டு குருப்பா பிரிஞ்சு இருக்கறது உண்மையா.?
ய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட் போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும் வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா  கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...!
சின்ன வயதில் இருந்தே பெரிய இழப்புகள், வலிகள் எதுவுமில்லாமல் சுகமாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவன் நான். அதனால் சில வலிகள் புரிவதில்லை. சமீபத்தில் நண்பன் ஒருவன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் கண்கள் நீயே பாடலை பற்றி ஃபீலிங்காக பேசினான். நான் வழக்கம் போல யப்பா நாங்க பார்க்காத அம்மா சென்டிமென்ட்டா என்று நக்கலடித்து விட்டு வந்தேன்.

வீடு திரும்பியதும் அந்த பாடலை நண்பனோடு பொருத்தி மறுமுறை கேட்டேன், உருகினேன். நீங்களும் கேளுங்க, முடிஞ்சா வீடியோ இல்லாம, கண்களை மூடியபடி...!

பதிவர் புதிர் – 02

பதிவர் புதிர் ??? by Nr Prabhakaran
இந்த ஒலிப்பதிவில் கர்ஜிக்கும் ஒலக லெவல் பதிவர் யாரென்று கண்டுபிடிங்க பார்ப்போம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 February 2012

டிஸ்கவரி புக் பேலஸுக்கு ஒரு விசிட்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

புதுமண தம்பதிகளுக்கு பரிசளிக்க உகந்த புத்தகங்களை பரிந்துரைக்கும்படி கூகிள் கூட்டலிலும் முகமிலியிலும் கேட்டிருந்தேன். ம்ஹூம் ஒரே ஒருத்தரை தவிர யாரும் பதில் சொல்லவில்லை. ப்ளஸ்ஸிலும் ஃபேஸ்புக்கிலும் நமக்கு மருவாதையே இல்லை. (ப்ளாக்கர்ல மட்டும் என்ன வாழுதாம்...?). அதனால் நேரடியாக டிஸ்கவரி புக் பேலஸுக்கே போய் ஒருவழி பண்ணிடலாம் என்று கிளம்பினேன்.

நீண்ட நேர ஆராய்ச்சிக்குப் பிறகு தம்பதிகளுக்காக வாங்கிய புத்தகங்கள்:
1. அன்பு விதிகள் (கிழக்கு பதிப்பகம் – ரிச்சர்ட் டெம்ப்ளேர் தமிழாக்க சீரிஸ்)
அதே ரிச்சர்ட் டெம்ப்ளேருடைய காதல் விதிகள் வாங்க வேண்டும் என்பதே திட்டம் ஆனால் எவ்வளவு தேடியும் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. கடைலயே இல்லையாம்....!

2. இன்ப இல்லறம் (மருத்துவர் அல்போன்ஸ் – தாமரை பதிப்பகம்)

3. 30 நாள் 30 சமையல் (ரேவதி சண்முகம் – விகடன் பிரசுரம்)

4. Why men want sex and women need love (Allan & Barbara)
சுதன் சார், நீங்க சொன்ன Men are from mars and women are from venus புத்தகம் கிடைக்கவில்லை எனினும் இதுவும் அதே வகையறா தான்.

5. ஆளை அசத்தும் அறுபது கலைகள் (மருத்துவர் ஷாலினி – நக்கீரன் பதிப்பகம்)

இவற்றில் 1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பரிசுப்பொருள் தவிர்த்து எனது அறிவு விருத்திக்காக ஏதாவது புத்தகம் வாங்கலாமென்று தேடலானேன். அந்த புத்தகத்தின் மீதான தொடர் நெகடிவ் விமர்சனங்களே என்னை அந்த புத்தகத்தை வாங்க வைத்தது. ஆரம்பத்தில் அந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்குவது சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் ஏமாறுவதற்கு ஈடானது அதனால் யாராவது அப்பாடாக்கர்களிடம் கடன்வாங்கி படித்து சிரிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகம் நம்முடைய கலெக்ஷனில் கட்டாயம் இருக்க வேண்டுமென விரும்பி அந்த கருமத்தை வாங்கித்தொலைத்தேன். எஸ், நீங்க நினைக்கிற அதே புத்தகம்தான்...! (Mr. பிச்சைக்காரன், விமர்சனம் போடச்சொல்லி போன் பண்ணீங்கன்னா கைபர் கனவாய் வழியா லிபியாவுக்கு தப்பிச்சு போயிடுவேன்).

அதாவது இதெல்லாம் வேற ஒரு போதை...! யாருக்குமே புரியாத பின்நவீனத்துவ கவிதைகள், பவர் ஸ்டார் நடிக்கும் படுமொக்கை படங்கள், வில்பர் சற்குணராஜ் பாடல்கள், ஜெட்லி வலைப்பூ இதையெல்லாம் ட்ரை பண்ணிப்பாருங்க லைஃப் நல்லா இருக்கும்.

செம மேட்டர் ஒன்னு சொல்றேன் கேளுங்க,
“இன்று நான்
குடிக்கவில்லை
நிலவை உற்றுப் பார்த்தேன்...”

லூசுப்பய அறுபது ரூவா சரக்கை குடிச்சிட்டு எதையோ உளறுறான்னு நினைக்காதீங்க. இது மிஷ்கின் எழுதிய “நத்தை போன பாதையில்...” என்ற கவிதை தொகுப்பில் இருந்து உருவிய கவிதை. இது சாம்பிள்தான். புத்தகம் முழுவதும் இந்தமாதிரி “ஙே” கவிதைகள் தான். அங்கேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்து கழிந்தேன்.

எல்லாம் சேர்த்து பில் போட்டால் ஆயிரம் ரூபாய்க்கு கொஞ்சம் குறைவாக வந்தது. ரவுண்ட் அப் பண்ணுவதற்காக ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்றபோது அந்த புத்தகமா என்னுடைய கண்ணில் படவேண்டும். வாங்கியது – எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்.

இலியானா இடுப்பு சைஸை விட கொஞ்சமே பெரியதாக இருந்த அந்த புத்தகம் வீடு திரும்பியபின் சுமார் இரண்டு மணிநேரம் வரை தாக்குபிடித்தது. புத்தகத்தின் முதல் பாதியை கடந்தபோது எனக்கு ஒரு சினிமா நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்தது.

அதாவது என் பொண்டாட்டி எருமைநாயக்கன்பட்டியா... அவன் அண்ணன் பையனுக்கு பொண்ணு எடுத்தது நெய்க்காரன்பட்டியில... அந்த பொண்ணோட சின்னாத்தாளும் என் பொண்டாட்டியோட ஆத்தாளும் அக்கா தங்கச்சிங்க... அந்த சின்னாத்தாளோட மாமியா ஆயர்குடியிலதான் தான் பொண்ணை கட்டிக்கொடுத்திருக்கு... அதை கட்டிக்கிட்ட பையனுக்கு சேர்மேன் சித்தப்பன் முறை... (செத்தான்டா சேகர்).

தேகம் நாவல் படித்து முடித்தபோது நண்பர் ஒருவர் எப்படி இருந்தது என்று கேட்டார். இந்தமாதிரி இன்னும் இரண்டு நாவல் படித்தால் நான் முழு சைக்கோ ஆகிவிடுவேன் என்றேன். இப்போது இரண்டாவது நாவலை படித்துவிட்டேன், எக்சைலையும் வாங்கிவிட்டேன். கூடிய விரைவில் கீழ்பாக்கம்தான்.

நான் டிஸ்கவரிக்கு போனது காதலர் தினத்திற்கு மூன்று நாட்கள் முன்பு என்பதால் என்னவளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று தேடினேன். ம்ஹூம் அப்படியொரு புத்தகம் கிடைக்கவே இல்லை. வருத்தத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் வந்து, காதல் பற்றிய புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்குதே என்றபடியே அவர் எடுத்துக்காட்டிய புத்தகம் சங்கர நாராயணின் – மீண்டும் ஒரு காதல் கதை...!

யப்பா ஆள விடுங்கடா சாமீ...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment