வணக்கம் மக்களே...
பலத்த எதிர்(பார்)ப்புகளுக்கு மத்தியில் பிரபா ஒயின்ஷாப் தனது பயணத்தை துவங்குகிறது.
டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்கான குரல் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆளாளுக்கு தங்கள் பங்குக்கு டுவீட்டுகளை பொழிந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவற்றில் நான் ரசித்த டுவீட்டுக்கள் சில...
ஐந்து இலட்சமும் வேலையும் தர நாங்க தயார்.கடலில் மீன் பிடிக்க அரசியல்வாதிகள் தயாரா.? #TNfisherman
>>> ஆஸ்திரேலியாவில் மேல்தட்டு மாணவன் அடிபட்டால் அலறும் அரசே, ஆங்கில செய்தி சேனல்களே!! மீனவன் மடிகையில் எதை புடுங்கி கொண்டு இருந்தீர்கள்!!
"பொறுத்தது போதும்! பொங்கி எழு!" இது யார் எழுதிய வசனம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? #tnfisherman
ஸ்பெக்ட்ரம் மறந்துவிட்டது # இப்ப தெரியுதா எதுக்கு இவனுகள எதுக்கு கொல்லச் சொன்னேன்னு - கருணாநிதி # ஐடியா உபயம் நீரா ராடியா #tnfisherman
கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் நுங்கம்பாக்கம் விஜய் டிவி அலுவலகம் முன்பு ஒரு சாலை விபத்து. சைக்கிளில் வந்த ஒரு நடுத்தர வயது ஆண், வேகமாக வந்த ஒரு லாரி டயரின் அடியில் சிக்கினார். பலத்த காயத்தோடும், வழியும் ரத்ததோடும் அடிபட்ட நபர் எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் சொன்ன வாக்கியம், “ஆள் அவுட்டா...”. அரை மயக்க நிலையில், அடிபட்ட நிலையில் உள்ள ஒருவரின் காதில் இது போன்ற வார்த்தைகள் தான் விழ வேண்டுமா...? இப்படி ஒரு வார்த்தையை கேட்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா...? உதவ முடியவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமே...
ரசிக்க வைத்த புகைப்படம்:
தீபாவளி இரவில் சாட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட இந்தியாவின் புகைப்படம்...
வலைப்பூ அறிமுகம்: கொக்கரக்கோ...
மயிலாடுதுறையை சேர்ந்த பதிவர். இந்த மாதம் தான் பதிவுலகிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது வரை பன்னிரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார். அரசியலை நையாண்டி செய்து பதிவெழுதுவதில் வல்லவர். சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும் என்று நக்கலடித்து அருமையாக ஒரு பதிவு எழுதியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் சென்று பாருங்கள்.
எனக்குப் பிடித்த பாடல்:
போன வாரம் முழுவதும் முனுமுனக்க வைத்த பாடல் ஆடுகளம் படத்திலிருந்து “ஒத்தச் சொல்லால...” எனும் பாடல். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் ஹிட் என்பது தெரிந்த விஷயமே. இப்போது பாடலை படமாக்கிய விதத்திற்காக மேலும் ரசிக்கப்படுகிறது. கும்மாங்குத்தையும் நாட்டுப்புற இசையையும் கலந்த ஒரு பாடல். எப்பேற்பட்ட மனிதனாக இருந்தாலும் ஒரு ஆட்டு ஆட்டிவைக்கும் இசை. எனது வகுப்பில் படிக்கும் நவநாகரிக இளைஞர்கள் இருவர் இந்தப்பாடலை பார்த்தபிறகு லுங்கி (கைலி) வாங்க முன்வந்திருக்கிறார்கள். எதற்கா...? வரிந்துகட்டிக்கொண்டு ஆடத்தான்...
இந்த வார பிலாசபி:
“Take lot of time to improve yourself… Then, obviously there will be no time to criticize others…”
- Kamalhasan
இந்த வார எஸ்.எம்.எஸ்.:
ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் வருதுன்னு தெரியுமா...?
:
:
:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை ஜப்பான் சென்றிருந்தபோது தனது மொபைலை வைப்ரேஷனில் வைத்தபடி அங்கேயே விட்டுட்டு வந்துட்டாராம்...
நீதி: ச்சும்மா அதிருதுல்ல....
இந்த வார காணொளி:
கட்டழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையை பற்றி பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைகழக மாணவர்கள் செய்த ஒரு சிறிய நகைச்சுவையான ஆராய்ச்சி...
18+
தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா உட்பட மற்றும் பல சகோதரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|