4 January 2011

நித்தியானந்தா – இரண்டாவது இன்னிங்ஸ்

வணக்கம் மக்களே...

எனது வலைப்பூவின் டெம்ப்ளேட் மாற்றும் பணியில் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் ஆரம்பகால இடுகைகளையும் அவற்றிற்கு வந்த பின்னூட்டங்களையும் காண நேர்ந்தது. எனது பழைய இடுகைகள் பலவற்றிற்கும் போதிய வரவேற்பு கிடைக்காததில் எனக்கு கொஞ்சம் வருத்தமே. ஆனால் மீள்பதிவுகள் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நித்தியானந்தா குறித்த தினகரன் நாளிதழின் செய்தியினை பதிவாக வெளியிட்டிருந்தேன். அப்போது ரஞ்சிதா மேட்டரில் நித்தி செம பேமஸ். எனது அந்தப் பதிவில் சக பதிவர் ஒருவர் கவிதை ஒன்றினை பின்னூட்டமாக இட்டிருந்தார். புரிந்தும் புரியாமலும் இருந்த அந்த கவிதையினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...

இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒரு மனிதனுக்குக்
காயடித்த பின்னரே - இனி
காவி அணிவிப்போம்...

தனியொரு மனிதனின் லீலையைப்
படம் பிடித்து
வினியோகிப்பவனைத்
தரணியில் துரோகி என்போம்...

காமத்தை உணராத் துறவி
முற்றும் அறிந்தவனும் இல்லை
முற்றும் துறக்காத துறவி
பரமஹம்சன் என்பதும் இல்லை

காமம் செய்யும் குரு என்பவன்
கெட்டவனுமில்லை...
தொலைக் காட்சியில்
ஒளிபரப்புவோன்
புனிதனுமில்லை...

ஊரான் சொத்து 90 ஏக்கரை
தன் குடும்பம் என்ற கலைக்
குடும்பத்திற்குக் கொள்ளை அடித்ததை
கவனச் சிதறல் செய்ய
அஜீத் டயலாக் எபிசோட்...

மாணவர்கள் கொலை,
ஸ்டாலின் புத்தக சுயபாராட்டு
கவனச் சிதறலுக்கு
பேரம் படியாத
நித்தியானந்தா - ரஞ்சிதா
பழைய வீடியோ
ஒளிபரப்பு...

வாழ்க தமிழகம்!

நித்தியானந்தா
தற்கொலை வேண்டாம்..
துறவைத் துறந்து
ரஞ்சிதாவை
அவர் விவகாரத்துப்
பெற்றபிறகு
முறைப்படி
மணந்து இன்புறுவாயாக...

பிறக்கும் குழந்தைக்கு
பரமானந்தன்
எனப் பெயர் சூடுக...
யார் யாரோ வாழ்கிறார்கள்
அட
நீங்களும்தான் வாழ்ந்துவிட்டுப்
போங்களேன்...

நடந்த அவமானமே
உங்களுக்குப்
போதிய தண்டனை!


இந்த கவிதையின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தன. உங்கள் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

டிஸ்கி: ஹி... ஹி... ஹி... படம் நம்மளோட கைவண்ணம்தான்... எப்பூடி...?
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 January 2011

நேற்று இல்லாத மாற்றம் என்னது...?

வணக்கம் மக்களே...

முதலில் அனைவருக்கும் கேப்பி நியூ இயர்...

புத்தாண்டு முதல்நாளில் பதிவெழுதாதை நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. எனினும் வலைப்பூவின் மேம்பாட்டுக்காக இரண்டு நாட்களாக கடுமையாக உழைத்திருக்கிறேன். புதுப்பொலிவுடன் மீண்டும் வந்திருக்கிறேன். அதற்காக எனக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

1. டெம்ப்ளேட் மாற்றம்
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக டெம்ப்ளேட் மாற்றம் குறித்து சிந்தித்து வருகிறேன். நான் கொஞ்சம் கலர்புல்லான ஆளு. என்னுடைய டெம்ப்ளேட்டும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்புவேன். அதிலும் கறுப்பு நிற பின்னணியில் கலர் கலரான எழுத்துக்களோடு அமைய வேண்டுமென்று கருதினேன். அங்க சுத்தி இங்க சுத்தி கடல் நீலம் – கறுப்பு காம்பினேஷனில் ஒரு அருமையான டெம்ப்ளேட்டை தேடிப்பிடித்து வைத்திருந்தேன். ஆனால் பதிவர்கள் ம.தி.சுதா உட்பட நிறைய பேர் கறுப்பு நிற பிண்ணனி வேண்டாம் என்று கூறியதாலும் மேலும் மூன்றாம் தரப்பு டெம்ப்ளேட்டுக்களை தவிர்த்து ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டையே பயன்படுத்தினால் சிறப்பாக இருக்குமென்று கருதியதாலும் இந்த டெம்ப்ளேட்டை தேர்ந்தேடுத்திருக்கிறேன்.

நம்முடைய டெம்ப்ளேட் நமக்கு பிடித்திருகிறதா என்பது முக்கியமில்லை. நம் வாசகர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதே முக்கியம்.

டெம்ப்ளேட் மாற்றம் குறித்து பதிவு ஒன்றினை எழுதி தெளிவுப்படுத்திய LK அவர்களுக்கும், புத்தாண்டன்று பின்னிரவு தாண்டியும் பின்னூட்டங்கள் மூலமாக தகவல் தந்த “கனவுகளே..,” SUREஷ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

2. பின்தொடர்பவர்கள் பட்டியல்
எனது வலையுலக வாழ்க்கைக்கு தூண்களாக விளங்கி வரும் பின்தொடர்பவர்களை முன்னிலை படுத்த விரும்பியே இந்த “followers widget” மாற்றம். இப்போது வைத்திருக்கும் அளவின படி பின்தொடர்பவர்கள் அத்தனை பேரும் முகப்பு பக்கத்தில் தெரிவார்கள். ஆனால் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்போது இதே மாதிரி வைக்க முடியுமா என்பது தெரியவில்லை. மேலும் இந்தமாதிரி வைப்பதன் மூலம் தளத்தின் வேகம் குறைவது போல தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

3. ப்ரோபைல் பக்கம்
சில மாதங்களுக்கு முன்பு அனானி அன்பர் ஒருவர் என் முகம் குரங்கு போல இருக்கிறது, பிஞ்ச செருப்பு மாதிரி இருக்கிறது என்று அவ்வப்போது பின்னூட்டத்தில் புகழ்ந்துவிட்டு செல்வார். அவருக்கு அதில் என்ன சந்தோசம் என்று தெரியவில்லை. மனப்பிறழ்வு ஏற்பட்ட சிலர் அடுத்தவரை தாக்கி குளிர் காய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். எனினும், அவரது வார்த்தைகளில் கொஞ்சம் உண்மையும் இருப்பதாகவே தோன்றியது. சரி, நம் வாசகர்களுக்கு ஏன் அப்படி ஒரு கஷ்டம் கொடுக்க வேண்டும் என்று ப்ரோபைல் படத்தை மாற்றிவிட்டேன். இப்போது என்னுடைய ரோல்மாடலாக நான் நினைப்பவர்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.

4. ஐகான் மாற்றம்
டெம்ப்ளேட் மாற்றுவதற்கு எப்படி சிரமப்பட்டேனோ அதே போல வலைப்பூவிற்கு பொருத்தமான ஐகான் தேடுவதற்கும் ரொம்ப சிரமப்பட்டேன். எப்படியோ கூகிள் பூரா அலசி ஆராய்ந்து இந்த ஆரஞ்சு நிற இதயத்தை கண்டுபிடித்தேன். இதை மாற்றுவதற்கு எனக்கு உதவியாய் இருந்த ஆங்கில வலைத்தளம் “Blogger Tricks” குழுமத்தினருக்கு எனது நன்றிகள்.

5. நண்பர்களுக்கு இணைப்பு
சைட் பாரில் நான் விரும்பி படிக்கும் நண்பர்களது வலைப்பூக்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். ஐம்பதிற்கும் மேற்பட்ட நண்பர்கள் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள் எனினும் லேட்டஸ்டாக பதிவு எழுதிய இருபத்தி ஐந்து நண்பர்கள் மட்டும் இங்கே தோன்றுவார்கள். மேலும் எனக்கு பிடித்த பிரபல பதிவர்கள் பத்து பேரின் பதிவுகளுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

இது தவிர்த்து ஷேர் பட்டன்ஸ் இணைப்பது, மொபைலுக்கு ஏற்ற வண்ணம் டெம்ப்ளேட் அமைப்பது, லிங்குகள் அனைத்தையும் புது விண்டோவில் திறக்க வைப்பது என்று நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் மேலும் பல மாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது.

ஒரு சந்தேகம்:
ப்ளாக்கர் பக்கத்தில் “ADD NEW PAGE” என்றொரு ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனின் பயன்பாடுகள் என்ன என்பது எனக்கு புலப்படவில்லை. அதை யாராவது தெளிவாக விளக்கிச் சொல்லவும்.

பொதுவாக இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் உதவியாக இருந்த தமிழ் வலைத்தளங்கள்:

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

டிஸ்கி:  பதிவுக்கு மேலொன்றும் கீழோன்றுமாக இரண்டுமுறை ஒட்டுப்பட்டைகளை நிறுவ சொல்லிக்கொடுத்த Starjan அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்... இப்போ பதிவை படிச்சிட்டும் ஓட்டு போடலாம்... ஓட்டு போட்டுட்டும் பதிவை படிக்கலாம்...

Post Comment