24 December 2010

எனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2

வணக்கம் மக்களே... 

எனக்குப் பிடித்த பாடல்களை இருபது பிரிவுகளாக பிரித்து அதில் முதல் பாதியை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன். மேலும் இதே தொடர்பதிவிற்கு அதிரடி ஹாஜாவும், குண்டு ராஜகோபாலும் அழைத்திருந்தார்கள். அவர்குளுக்கும் சேர்த்தே இந்தப் பதிவினை எழுதிக்கொள்கிறேன். பதிவின் முதல் பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்:-
எனக்குப் பிடித்த பாடல்கள் – I
இப்போது மீதமுள்ள பத்து பிரிவுகளில் எனக்குப் பிடித்த பாடல்களை தொகுத்திருக்கிறேன்.

11. ரொமான்ஸ்:
ரொமான்ஸ் என்றாலே கெளதம் மேனன் போல யாரும் யோசிக்க முடியாது. அருமையான கிரியேட்டிவிட்டியுடன் பாடலை வடிவமைத்திருப்பார்.
-          அன்பில் அவன் (விண்ணைத்தாண்டி வருவாயா)
-          ஒன்றா ரெண்டா (காக்க காக்க)
-          அனல் மேலே பனித்துளி (வாரணம் ஆயிரம்)
-          நீயேதான் எனக்கு மணவாட்டி (குடியிருந்த கோவில்)
-          இஞ்சி இடுப்பழகி (தேவர் மகன்)
-          ஓவியா உன் ஓரப்பார்வை (குறும்பு)
-          காதல் சடுகுடு (அலைபாயுதே)
-          தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் (பசும்பொன்)

12. தத்துவம்:
இது நம்ம ஏரியா. தத்துவம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எம்.ஆர்.ராதா மட்டுமே.
-          குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர்)
-          புத்தியுள்ள மனிதரெல்லாம் (அன்னை)
-          ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
-          ரா ரா ராமையா (பாட்ஷா)
-          ஒரு நாளில் வாழ்க்கை இங்கே (புதுப்பேட்டை)
-          மார்கழியில் குளிச்சு பாரு (ஒன்பது ரூபாய் நோட்டு)
-          காட்டுவழி கால்நடையா போற தம்பி (அது ஒரு கனாக்காலம்)
-          தாயும் யாரோ தந்தை யாரோ (பெரியார்)

13. கதாநாயகி – அறிமுகம்:
இசையை விட அதில் நடித்த நாயகிகளுக்காக ரசித்த பாடல்கள். முதலாவது பாடல் நடிகையே பாடியது.
-          சொந்தக் குரலில் பாட (அமர்க்களம்)
-          ஒரு ஊரில் அழகே உருவாய் (காக்க காக்க)
-          நன்னாரே (குரு)
-          ஷலாலா (கில்லி)

14. நட்பு:
பழைய கல்லூரி / பள்ளி நாட்களை நினைவூட்டும் பாடல்கள். முதலாவது பாடலை அடிக்கடி கேட்டு அழுதிருக்கிறேன்.
-          மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் (குளிர் 100 டிகிரி)
-          தேநீரில் சிநேகிதம் (சுப்ரமணியபுரம்)
-          முஸ்தபா முஸ்தபா (காதல் தேசம்)

15. குத்து:
வழக்கமாக க்ளைமாக்ஸுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வரக்கூடிய உற்சாகமூட்டும் பாடல்கள்.
-          கத்தாழ கண்ணால (அஞ்சாதே) [பிரசன்னா தலைமுடிக்காகவே]
-          சரோஜா சாமான் நிக்காலோ (சரோஜா)
-          நெருப்பு கூத்தடிக்குது (துள்ளுவதோ இளமை)
-          தொட்டா பவருடா (தொட்டி ஜெயா)

16. பக்தி
கடவுள் நம்பிக்கை இல்லை எனினும் சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும்.
-          ஜனனி ஜனனி (இளையராஜா)
-          ஹரிவராசனம் (கே.ஜே.யேசுதாஸ்)
-          நமச்சிவாய (எஸ்.பி.பாலசுப்பிரமணியம்)

17. திரைப்படம் சாராதவை
திரைப்படங்கள் அல்லாமல் ஆல்பமாக வெளிவந்த பாடல்களில் என் மணம் கவர்ந்த மூன்று பாடல்கள்.
-          ஏய் உன்னோட (டான்ஸ் பார்ட்டி – தேவி ஸ்ரீ பிரசாத்)
-          இசையே (S5)
-          போதை ஏறுதே (தடையப்பா)
-          வால்பாறை வட்டப்பாறை (என்ன பாரு – மால்குடி சுபா)

18. சோகம்
சில சமயங்களில் சோகப்பாடல்களை கேட்டால் நிம்மதியாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல்கள் சில.
-          பறவையே எங்கு இருக்கிறாய் (தமிழ் M.A)
-          உச்சி வகுந்தெடுத்து (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
-          காடு பொட்டக்காடு (கருத்தம்மா)
-          தாய் தின்ற மண்ணே (ஆயிரத்தில் ஒருவன்)

19. கொண்டாட்டம்
கொண்டாட்டப் பாடல்கள் என்றால் மணிரத்னத்தை யாரும் மிஞ்ச முடியாது. நான்கில் இரண்டு அவரது படப்பாடல்கள் தான்.
-          அந்திமழை மேகம் (நாயகன்)
-          காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி)
-          நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)
-          Celebration of Life (ஆயிரத்தில் ஒருவன்)

20. காமத்துப்பால்:
தமிழ் சினிமாவின் சூடேற்றும் பாடல்களில் எனக்கு பிடித்தவை.
-          மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
-          சிவராத்திரி தூக்கமேது (மைக்கேல் மதன காம ராஜன்)
-          பள்ளிக்கூடம் போகலாமா (கோவில்காளை)
-          அடிக்குது குளிரு (மன்னன்)

மொத்தம் தொண்ணூறு பாடல்களை தொகுத்து முடிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டேன். இப்போது அந்த சிரமத்தை நான் தொடர அழைப்பது:-

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 December 2010

ஏகாதசி இரவில் நடந்தவை...!

வணக்கம் மக்களே...

முன்பே மார்கழி மாத மயக்கம் பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வைகுண்ட ஏகாதசி இரவில் சினிமா பார்ப்பது என்று முடிவு செய்தோம். சென்ற ஆண்டு ஏகாதசி பின்னிரவில் சிவகாசி படத்தைப் பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்ததை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. வழக்கமாக ஏரியாவில் இருக்கும் ரெண்டு மூன்று திரையரங்குகளில் படம் போடுவார்கள். நாங்களும் எந்த தியேட்டரில் பயங்கரமான மொக்கை படங்கள் வருகிறதோ அந்த தியேட்டருக்கு கிளம்புவோம். இந்த முறை சாய்சே இல்லை ஒரே திரையரங்குதான்.

சிவாஜி, சிங்கம், வேட்டைக்காரன் மூன்று படங்கள் போடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மயிரிழையில் விருதை இழந்த வேட்டைக்காரன் படத்தை கடைசியாக போட்டால் இறுதி வரை சூடு குறையாமல் இருக்குமென்று அந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மனதார வேண்டிக்கொண்டேன். ஒரு வழியாக தள்ளுமுள்ளுகளை எல்லாம் கடந்து டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம். உள்ளே மாவா மண்டையர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இந்த இடத்தில் சீரியசாக ஒரு பத்தியை எழுதியாக வேண்டும். அய்யப்ப பக்தர்களில் சிலர் செய்யும் அளப்பறைகளைத் தான் சொல்ல வந்தேன். மாலையையும் போட்டுக்கொண்டு மாவாவையும் போடுகிறார்கள். தியேட்டர் சுவர்களில் காவி பெயின்ட் அடிக்கும் காண்ட்ராக்ட் இவர்களிடம் ஒப்படைக்க பட்டிருந்தது போல. இவர்கள் எல்லாம் பக்தகோடிகளா பக்தகேடிகளா என்று விளங்கவில்லை. கடுபேத்துறாங்க மை லார்ட்.

பத்து மணிக்கு படம் போட்டாங்க. என்னுடைய எதிர்பார்ப்புகளை தகர்த்தெறியும் வண்ணம் முதலில் நம்ம டாகுடர் விஜய் “நடிப்பில்” (அவ்வ்வ்வ்...) வெளிவந்த வேட்டைக்காரனை ஒளிபரப்பினார்கள். ஒப்பனிங் சாங்கில் விஜய் கான்க்ரீட் கல்லொன்றை முரட்டுத்தனமாக குத்தி உடைப்பாரே, அந்த காட்சியிலேயே டிக்கெட் எடுத்த அறுபது ரூபாய் தாராளமாக கழிந்தது. வேட்டைக்காரன் படத்தில் எனக்கு பிடித்த ஒரு விஷயம் வில்லன் ஜிந்தாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும். மனிதர் ஒவ்வொரு முறை “பயம்”ன்னு விஜய் காதுல வந்து சொல்லும்போதும் படம் பாக்குறவங்களுக்கு ரொம்ப பயமாக இருந்தது. இந்தமுறை வேட்டைக்காரன் படத்தில் இருந்து ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்துக்கொண்டேன். சரக்கடிச்ச அப்புறமா கொய்யாப்பழம் சாப்பிட்டா ஸ்மெல் வராதாம்.

அடுத்ததாக கஞ்சிசட்டை சிங்கம் படத்தை ஒளிபரப்பினார்கள். இந்தப் படத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனாலும் அரிவாள் இயக்குனர் ஹரி படம் என்றாலே ஒரு அலாதிப்பிரியம் உண்டு. “வேல்கம்பு, வீச்சரிவாள், முட்டிக்கிட்டு நிக்கும் ரெண்டு குடும்பம் இதை வச்சியே நான் எத்தனை படம் வேணும்னாலும் எடுப்பேன்”னு சொன்ன பேரறிஞர் தானே அவர். அடங்கப்பா படம் முழுவதும் சூர்யா பக்கம்பக்கமா வசனம் பேசி எகிறி எகிறி அடிக்கிறார். (ஹைட் பத்தலைப்பா...) விஜய்யை விட சூர்யா கொஞ்சம் ஓவராகவே பஞ்ச் டயலாக் பேசுகிறார். “பயந்து போகலை, ஒதுங்கி போகுறேன்”, “சாக்கடைல கல்லை தூக்கி போட்டா அது நம்ம மேலதான் படும்” அப்படி இப்படின்னு சூடா சூழ்நிலை வசனம் பேசி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

வேட்டைக்காரன் படத்தின் மூன்று பாடல்களிலும் சிங்கம் படத்தின் மூன்று பாடல்களிலும் கெளரவ தோற்றத்திலும் வந்து ஆடிவிட்டுப் போனார். ஒரு டவுட்டு, மேல ஒரு கர்சீப் கீழே ஒரு கர்சீப் போட்டுட்டு வந்தா அதுக்கு பேருதான் கெளரவ தோற்றமா...? (அப்பாடா... அனுஷ்கா ஸ்டில் போட மேட்டர் கிடைச்சாச்சு...)

ரெண்டு படம் முடிந்திருந்த வேளையில் முக்கால்வாசி கூட்டம் உறங்கிக்கொண்டிருந்தது. சிவாஜி படம் போட்டதும் பயபுள்ளைங்க எப்படி முழிச்சாங்கன்னு தெரியல ஒரே விசில் சத்தம். ஒரு வழியாக நயன்தாரா ஆட்டம் முடிந்ததும் கூட்டம் மறுபடியும் தூங்க ஆரம்பித்தது. எனக்கு மட்டும் தூக்கம் வரலை. ங்கொய்யால... அடுத்தடுத்து வேட்டைக்காரனையும் சிங்கத்தையும் பார்த்தால் எப்படி தூக்கம் வரும். சிவாஜி படத்தில் ஒரு சிறிய ஆராய்ச்சி (மறுபடியுமா...?). அதாவது நம்ம ஸ்ரேயாவுக்கு ஆரம்பத்துல ரஜினியைக் கண்டாலே பிடிக்காது பீரோ புல்லிங் என்றெல்லாம் சொல்லி கலாய்ப்பார். அப்புறம் ரஜினி பெரிய கோடீஸ்வரர்ன்னு தெரிஞ்சதும் டிங்குன்னு கண்ணை சிமிட்டி ஓகே சொல்லுவாங்க. பின்னர் ரஜினி கோர்ட் கேஸ்ன்னு போய் மொத்த சொத்தையும் இழந்து நிக்கும்போது இனிமே என்னை தேடி வராதீங்கன்னு சொல்லி படார்ன்னு கதவை சாத்துவார். மறுபடி சில காட்சிகள் தாண்டி ரஜினி வந்து இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப்போகிறதுன்னு சொல்ல ஸ்ரேயா தாவணி தலைப்பை தவறவிட்டு ரஜினியை கட்டிபிடித்துக் கொள்கிறார். இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க... (ஓட்டைச் சொன்னேன்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment