15 May 2010

விஜய்யும், ரசிகனொருவனின் நாகரிகமும்

வணக்கம் மக்களே...

முன் குறிப்பு: திரு.விஜய் அவர்களது ரசிகர்களுள் எத்தனையோ நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள். அத்தகைய அன்பர்கள் இந்தப் பதிவை படிக்கும்போது தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

திரும்பத் திரும்ப விஜய்யை விமர்சனம் செய்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. நான் ஒன்றும் விஜய்யை எதிர்ப்பவனும் இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை மறுபடியும் விஜய் பற்றிய பதிவொன்றினை வெளியிட செய்திருக்கிறது.

கடந்த வாரம் "பட்டாப்பட்டி" அண்ணன் "அனானியும், பிரபல பதிவர்களும்" என்ற பெயரில் அனானிகளின் அநாகரிகங்களை அரங்கேற்றியிருந்தார். மேற்படி பதிவை படித்த பின்பும் கூட எனது வலைப்பூவில் நான் அனானி ஆப்ஷனை எடுக்கவில்லை. ஏன்...? "comments visible after blogger approval" ஆப்ஷனை கூட வைக்கவில்லை. எனது பதிவையும் மதித்து படித்து பின்னூட்டம் போடுபவர்களை பெயர் என்ன...? ஐடி என்ன...? என்றெல்லாம் கேட்டு அலைக்கழிக்க நான் விரும்பவில்லை. ஆனால் இதற்கான பலனை நான் சில நாட்களுக்கு முன்பு அனுபவித்தேன்.

வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை எந்தவொரு பின்னூட்டத்தையும் நீக்கியதில்லை. என்னை கண்டபடி திட்டி எழுதிய அனானிகளுக்குக் கூட பதிலளித்துள்ளேன். ஆனால் முதல் முறையாக ஒரு அநாகரிக அனானியின் பின்னூட்டத்தை நீக்க வேண்டிய நிலைக்கு ஆளானதை நினைத்து வருந்துகிறேன்.

"சுறா - புட்டு புட்டு வச்சிருக்கேன்...!" என்ற பெயரில் "இளைய தளபதி" நடிப்பில் (!!!) வெளிவந்த சுறா படத்தினை பற்றி எனது கருத்துக்களை எழுதியிருந்தேன். எதிர்க்கருத்து எழுத எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. விண்ணரசன் கூட மாற்றுக்கருத்து கூறியிருந்தார். அவரது கருத்தில் ஒரு நியாயம் இருந்தது, அவர் சொன்ன விதத்தில் நாகரிகம் இருந்தது. மற்றவர்களின் கருத்தை நான் மனமார மதிக்கிறேன். ஆனால் பதினான்காவதாக ஒருவன் அனானியாக பின்னூட்டம் இட்டிருந்தான். கண்டிப்பாக விஜய்யின் ரசிகனாகவே இருக்கக் கூடும். அவன் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாமே படு மட்டமான வார்த்தைகள், பிரசுரிக்க முடியாத வார்த்தைகள். என் குடும்பத்து பெண்களை எல்லாம் நடுத்தெருவுக்கு இழுத்திருந்தார். ஒரு வகையில் இது எனது எழுத்துகளுக்கு கிடைத்த வெற்றி என்று எடுத்துக்கொண்டாலும் அன்னார் பயன்படுத்திய வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. இனியாவது அனானிகள் திருந்துங்கள். திட்ட நினைத்தால் பதிவைப் பற்றி மட்டும் திட்டுங்கள், பந்தங்களை பற்றியெல்லாம் திட்ட வேண்டாமென தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

அஜித்தை பற்றி கூட சிலமுறை இதே வலைப்பூவில் விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதுகூட சிலர் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் அனானிகள் பெயரில் எதிர்த்ததில்லை, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை, முதுகில் குத்தியதில்லை. ஒருவேளை இதுதான் உங்கள் இளையதளபதி உங்களுக்கு கற்றுக்கொடுத்த நாகரிகமோ...? என்னவோ...?

கடைசியாக நான் சுறா விமர்சனத்தில் குறிப்பிட்ட சில வரிகளை மீண்டும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். எல்லோரும் சரியாக கதை கேட்பதில்லை என்று விஜய்க்கு அட்வைஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கவலை, அட்வைஸ் எல்லாமே விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அறியாமைக்கூட்டத்திற்குத்தான். உங்கள் தறுதளபதியின் போதைக்கு நீங்கள் ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறீர்கள். உங்களை உசுப்பேற்றி அந்த உஷ்ணத்தில் உங்கள் தலைவர் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். இதை நீங்களெல்லாம் உணர்ந்துக்கொள்ளும் வரை உங்கள் தலைவன் திரையில் சொன்னது போல தமிழன் சுயமரியாதை இல்லாமல்தான் இருப்பான்.

பின் குறிப்பு: இதற்கும் அனானியாகத் தான் பின்னோட்டம் போடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு கதவு திறந்துதான் இருக்கிறது வாருங்கள். தயாராக இருக்கிறேன்.
 என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

சரவெடி சதீஷின் ஆலோசனைப்படி இந்தப் பதிவிற்கு அவரிட்ட பின்னூட்டத்தினையும் அதற்கு நானளித்த பதிலையும் கீழ் குறிப்பாக இணைத்திருக்கிறேன்...

அண்ணே உங்கள் இரண்டு பதிவையும் படித்தேன் என் கருத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன். முதலில் நானும் ஒரு விஜய் ரசிகன்தான். நீங்கள் சொன்ன விமர்சனத்தை ஏற்கின்றேன் காரணம் விஜயின் அண்மைய சொதப்பல் படங்கள் ரசிகர்கள் ங்களை தலை குனிய வைத்துள்ளன. ஆனால் இதில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எல்லோருக்கும் எந்த துறையிலும் சறுக்கல் வருவது இயல்பு, திரைக்கதியிலும் கதையிலும் கவனம் செலுத்தினாலே விஜய்க்கு போதும். உங்கள் வழியிலேயே வந்தால் நீங்கள் அந்த பதிவில் குறிப்பிட்டது போல // ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.// இதில் தான் எனக்கு நீங்கள் எல்லை மீறி விட்டீர்களோ என தோன்றுகின்றது. அவர்களை நீங்கள் ஏன் அப்படி அழைத்தீர்கள். விஜய் ரசிகர்கள் என்ற காரணத்திலா? அல்லது வேறு ஏதும் தவறாக நடந்தார்களா என நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் நண்பரே. இன்னுமொருவரை பற்றி இப்படி பேச உங்களுக்கு உரிமை இருக்கென்றால் உங்கள் கருத்தை அவர் எதிர்த்தது தப்பில்லை. அதற்காக நான் வக்காலத்து வாங்குகின்றேன் என நினைக்காதீர்கள். மற்றது இன்னொரு விடயம் அவர் விஜய் ரசிகர் தானா என்பது கூட உங்களுக்கு தெரியாது அதை அவரும் குறிப்பிட்டாரா என்றும் நீங்கள் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் உங்கள் தலைப்பின் அர்த்தம் என்ன. விஜய் என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணமா? எனக்கு இது சரியென்று தோன்றவில்லை. //அஜித்தை பற்றி கூட சிலமுறை இதே வலைப்பூவில் விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போதுகூட சிலர் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் அனானிகள் பெயரில் எதிர்த்ததில்லை, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை, முதுகில் குத்தியதில்லை. ஒருவேளை இதுதான் உங்கள் இளையதளபதி உங்களுக்கு கற்றுக்கொடுத்த நாகரிகமோ...? என்னவோ...?// இப்படிப்பட்ட என்னத்தை நீங்கள் மாற்ற வேண்டும் அப்படி என்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் எல்லாம் நடத்தை சரியிலாதவர்கள் விஜய் கூட அப்படி என்று நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அஜித் ரச்கர்கள் என்றால் அப்படி செய்ய மாட்டார்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அப்படித்தான் என்பது போல இருக்கின்றது உங்கள் கருத்து ஐயா சாமி ரஜினியாக இருக்கட்டும் கமலாக இருக்க்கட்டும் விசாக இருக்கட்டும் விக்ரமாக இருக்கட்டும் இல்லை வையாபுரியின் ரசிகனாக இருக்கட்டும் யாராக இருப்பினும் அவர் அவராக திருந்தி நடந்தாலே ஒழிய எந்த ஒரு நடிகனாலும் ஒருவனை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது. நடிகன் என்பவன் நாங்கள் ரசிக்கவே. நான் அனானியாக வரவில்லை என் சொந்த பெயரில் வந்துள்ளேன். என் கருத்தை சொல்ல நான் தயங்கமாட்டேன். உங்கள் கருத்தோடு ஒன்றிப் போகாவிட்டாலும் உங்களை காயப்படுத்தி இருந்தாலும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். கடைசியாக ஒரு விடயம் உங்களுக்கு அனானியாக பிநூடமிட்ட அந்த நபர் வேறு ஒரு நடிகரின் ரசிகராக கூட இருக்கலாம் யாரறிவார்?

முதலில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. பிரபல பதிவரான தாங்கள் என் எழுத்துக்களை படித்து பின்னோட்டம் இட்டதிலிருந்தே உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்குமென உணர்ந்துக்கொள்ள முடிகிறது. // ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.// இந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் என்று குறிப்பிட்டேன். விஜய் ரசிகர்கள் என்ற கழிசடைகள் என்று குறிப்பிடவில்லை. பதின்வயது பாலிடெக்னிக் மாணவர்களான அவர்கள் தொடர்ந்து "த்தா... ங்கொம்மால..." என்று தவறான மொழி பேசி வந்ததால் மட்டுமே அப்படி குறிப்பிட்டேன். // அவர் விஜய் ரசிகர் தானா என்பது கூட உங்களுக்கு தெரியாது அதை அவரும் குறிப்பிட்டாரா என்றும் நீங்கள் சொல்லவில்லை // எழுதியவர் நான் விஜய் ரசிகர் என்று சொல்லிவிட்டு எழுதவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர் எழுதியிருந்த ஒரு அரைப்பக்க கடுகுதாளிப்பில் ஆங்காங்கே விஜய்யை உயர்வாக குறிப்பிட முனைந்ததால் அவர் விஜய் ரசிகாராக இருக்கவேண்டுமென கணித்துக்கொண்டேன். // விஜய் என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணமா? // ஹிட்டடிக்கும் எண்ணமில்லை. உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் இந்தப் பதிவை படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான். // இப்படிப்பட்ட என்னத்தை நீங்கள் மாற்ற வேண்டும் அப்படி என்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் எல்லாம் நடத்தை சரியிலாதவர்கள் விஜய் கூட அப்படி என்று நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?// இந்த இடத்தில் நீங்கள் சொன்னதுபோல நான் தவறு செய்துவிட்டேன் என்றே தோன்றுகிறது. ஆனால் என் மனதில் உள்ள கருத்து இல்லை, வரிவடிவம் கொடுக்கும்போது அர்த்தம் பிசகிவிட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். அவர் அனானியாக வந்ததெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. எதிர்க்கருத்து குறிப்பிட்டதையும் வரவேற்கிறேன். முற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் என்னை காயப்படுத்திவிட்டது அண்ணா. 

Post Comment

14 comments:

SShathiesh-சதீஷ். said...

Philosophy Prabhakaran said...

நான் பிரபல பதிவரெல்லாம் இல்லை நண்பா. நீங்கள் சொன்ன காரணங்களை உங்கள் பதிவின் கீழ் குறிப்பு என்று சேர்த்துக்கொண்டால் நல்லம் என நினைக்கின்றேன். காரணம் உங்கள் வரியில் உள்ள பொருள் மயக்கம் நான் கேட்டது போல சில இடங்கழலில் தெளிவின்மையால் மேலும் அனானி தாக்குதல் அதிகரிக்கலாம். அடுத்து மீண்டும் சொல்கின்றேன் விஜயை தூக்கி பேசுபவர்கள் எல்லாம் அவர் ரசிகரும் இல்லை. விஜயை விமர்சிப்பார்கள் எல்லாம் விஜய் எதிரிகளும் இல்லை. எனவே இதை கொஞ்சம் கவனத்தில் டுப்பீர்கள் என நம்புகின்றேன். அண்ணே பிரபல பதிவர் என்ரின்களே ஒரு பதிவுக்கு வாக்கு விளைவே ரொம்ப கச்டப்படிரன் இதில நீங்கள் வேற நக்கல் பண்றீர்களா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ் முடியல சாமி. உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன இப்படி சர்ச்சைகளை முடியுமானவரை தவிர்த்து நல்ல இடுகைகளை இடுங்கள் எல்லோர் ஆர்ஹவும் கிடைக்கும்.

Unknown said...

நடக்கட்டும் நடக்கட்டும்

Unknown said...

பாஸ், ஒரு நண்பனா ஆலோசனை. உங்க ப்ளாக்ல எதோ ஒரு விட்ஜெட்னால பாப்-அப்ஸ் வருது.. எந்த விட்ஜெட்னு பாத்து தூக்குங்க..

(அனேகமா நான் வேல்டு பூரா ஃபேமஸ்க்குக் கீழ இருக்கிற ரெண்டில் ஒன்று)

Philosophy Prabhakaran said...

நீங்கள் சொன்னபடி உங்களது பின்னூட்டத்தையும் அதற்கான எனது பதிலையும் கீழ் குறிப்பாக இணைத்துவிட்டேன்...

/* நான் பிரபல பதிவரெல்லாம் இல்லை நண்பா. */
உங்க தன்னடக்கம் எனக்கு பிடிச்சிருக்கு...

Philosophy Prabhakaran said...

@ முகிலன்
வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி... எந்த விட்ஜெட் என்று தற்போது கண்டுபிடிக்க இயலவில்லை. கண்டுபிடித்ததும் தூக்கிவிடுகிறேன்.

Anonymous said...

" அவரைப் பத்தி கொறையா சொல்லலாமா?அவரு தான் ///லைசென்சு!.சீ..சீ சைலேன்ஸு!!!பேசிட்டிருக்கமில்ல????

settaikkaran said...

இதுக்கெல்லாம் அலட்டிக்கப் படாது! அந்த விஜய் ரசிகருங்க அவங்க தலீவரை முதல்லே ஒழுங்கா நல்ல படமாப் பார்த்து நடிக்கச் சொல்லுங்க! கெட்ட வார்த்தை எழுதுறவனைப் பத்தியெல்லாம் குறிப்பிட்டு பதிவு போடாதீங்கோ! வேஸ்ட் ஆஃப் டைம்! காசு கொடுத்துப் படம் பார்க்கிறவன் நாலு வார்த்தை சொல்லத் தான் செய்வான்! கூடாதுன்னா, விஜயைப் பொத்திக்கிட்டு வூட்டுலே படுத்துத் தூங்கச் சொல்லுங்க! :-)

ஜெய்லானி said...

இந்த விசயத்தில நா பட்டாபட்டியின் தீவிர ரசிகன். அனானி ஆப்ஷன் தேவையில்லாத ஒன்னு. திருந்துங்க பிரபாகர் .

Akilan said...

Ela Yar athu?????.........Sollu Thookiduvom........solli vai Avanda.....

Ponmahes said...

yaaru la athu.....oo.... theethurovom...i like your way of answering....i think you wasted your time to write this blog.....try to do innovative thing.....take care

Ponmahes said...

u didnt send any message about this blog... dont forget to send message whenever u publish blog.....

Anonymous said...

sry ungalai thavarana vaarthikalal vimarsithar entru sollkiringal sari aanal neengal ilayathalapathy vj neengal tharuthalapathi entru vimarsipathu sariya?
iyarana vaarthaikalai neenga use pannal naangalum thavaraka pesalam.

nantri
vj fan