20 June 2010

ராவணன் - தமிழனொருவன் பார்வையில்...

வணக்கம் மக்களே...

என் இனத்து ராவணன் பெருமைபெற்றவன் என்று எடுத்துரைத்ததற்காகவே பாராட்டலாம் பக்கம் பக்கமாக. ஈழத்து நிலவரம், இந்து - முஸ்லீம் கலவரம் என்று ஊரையே உலுக்கும் விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் படமாக எடுத்து பணம் பார்க்கும் பழக்கம் கொண்டவர் மணி சார். இந்தப் படத்திலும் ஊரே போற்றும் மணி சார் தனது சேட்டையை காட்டியிருப்பார் என்றே நினைத்தேன். கண்டிப்பாக நெகடிவ் விமர்சனம்தான் எழுதப் போகிறேன் என்ற எண்ணத்துடனே திரையரங்கிற்குள் நுழைந்தேன். இந்தப் படத்திலும் சில எதிர்மறை கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கடைசியில் சொல்கிறேன், இப்போது முதல் மரியாதை.

கதைச்சுருக்கம்
நான் ராமாயனமெல்லாம் படித்ததில்லை. எனவே கதையை எவற்றோடும் ஒப்பிடாமல் விவரிக்கிறேன். வீரய்யா, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். அவனது சுற்றத்திற்கும் நட்பிற்கும் அவன் தான் தலைவன். அவனது தங்கையின் கற்பை காவல்துறையினர் களவாடிவிட வெகுண்டெழும் வீரய்யா குழுவினர், காவல்துறை அதிகாரி தேவின் மனைவி ராகினியை கடத்தி காட்டிற்குள் சிறை வைக்கின்றனர். காவல் படையுடன் காட்டிற்குள் நுழையும் தேவ் பதினான்கு நாள் போராட்டத்திற்கு பின் ராகினியை மீட்கிறார். இந்த பதினான்கு நாட்களில் நடந்தது என்ன...? யார் நல்லவர்...? யார் கெட்டவர்...? யாருக்கு யார் மீது காதல் வந்தது...? என்பதெல்லாம் மீதிக்கதை.

படம் முழுக்க விக்ரமும் அவரது குழுவினரும் இனிக்க இனிக்க திருநெல்வேலி தமிழ் பேசியிருந்தது, குற்றாலச்சாரலாய் இதமளித்தது. படம் மொத்தம் இரண்டு மணிநேரம் பத்து நிமிடங்கள் தான். இடைவேளை வரை எதிர்மறையான கருத்துக்கள் ஆக்கிரமித்திருந்தன. இரண்டாம் பாதியில் "எங்கப்பன் மவ..." என்று பிரபு விவரிக்க ஆரம்பித்ததுமே கண்ணீர் கசிந்துவிட்டது. ப்ரியா மணி ப்ளாஷ்பேக் முடிந்ததும் ஐஸ் கண்களிலிருந்து தழும்பும் ஒருதுளி கண்ணீர் கவிதையைப்போல இருந்தது. மலை உச்சியில் இருக்கும் பாலத்தில் விக்ரமும் ப்ரித்வியும் ஒத்தைக்கு ஒத்தை மோதும் சண்டைக்காட்சி அருமையாக இருந்தது. அதுதான் ராமர் பாலமோ என்னவோ...?

"சீயான்" விக்ரம்
வீரய்யாவாக விக்ரம். தமிழ் சினிமாவில் வழக்கமாக காட்டப்படும் அதே முரட்டுத்தனமான பயம் என்றால் என்னவென்றே தெரியாதவன். ஆனாலும் சலிப்பூட்டவில்லை. "டுப் டுப் டுப் டுப்", "டன் டன் டன் டனக்கா..." என்று நடிப்பில் அதகளப்படுத்தியிருக்கிறார். விக்ரம் இஸ் பேக். படம் முழுக்க அழுக்காகவே வருகிறார். பாரபட்சம் பார்க்காமல் ரெளத்திரம் பழகியிருக்கிறார். ஐஸிடம் காதலாகுவது, காதலாகியும் கண்ணியமாக நடந்துக்கொள்வது என்று கவர்ந்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது உறுதியாகிவிட்டது ஆனால் அது விக்ரமுக்கா அபிஷேக்குக்கா என்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக விக்ரம் அளவுக்கு அபிஷேக் நடித்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

"உலக அழகி" ஐஸ்வர்யா பச்சன்
ராகினியாக ஐஸ். பட்டம் வாங்கி பதினாறு வருடங்கள் கடந்துபோனாலும் இன்றும் ஐஸ்வர்யா உலக அழகிதான். கோபமும் தைரியமுமாக ஆரம்பக்காட்சிகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆட்டம் பாட்டத்திற்கு அதிகம் வாய்ப்பில்லாமல் போனது ஏமாற்றமளித்தது. கடவுள் எனப்படும் சிலைமுன்பு நின்று வேண்டிக்கொள்ளும் காட்சியில் தேர்ந்த நடிப்பு. யார் பின்னணி குரல் கொடுத்தார் என்று தெரியவில்லை, பாத்திரத்திற்கு பொருந்துகிறது ஆனால் பாப்பாவிற்கு பொருந்தவில்லை. 

மற்றும் பலர்
- தேவ் எனும் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பிருதிவிராஜ். விக்ரமின் அனாயசமான நடிப்பிற்கு முன்னால் காணாமல் போய்விடுகிறார். "உன்னைப்போல் ஒருவன்" கணேஷ் வெங்கட்ராமன் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பார் என்று தோன்றியது.

- விக்ரமின் அண்ணனாக பிரபு, தம்பியாக முன்னா. பிரபுவுக்கு படத்துக்கு படம் இதே பாத்திரம்தான் கிடைக்கிறது. இவரது பாத்திரம் கடைசிவரை கொல்லப்படாமல் இருந்தது ஆச்சர்யம் அளித்தது. 

- விக்ரமின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி. ரொம்பவே எதிர்பார்த்து போனேன் ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றி ஏமாற்றிவிட்டார். பாவம்ங்க ப்ரியாமணி எல்லாப் படத்துலயும் கற்பழிச்சா என்னதான் பண்ணுவாங்க. நல்லவேளை, கற்பழிப்பு காட்சியை காட்டித் தொலைக்கவில்லை.

- காட்டிலாகா அதிகாரியாக கார்த்திக். இவர் அறிமுகமாகும் காட்சி ஆளவந்தான் படத்தில் வரும் நந்து கமலை நினைவூட்டியது. இதுபோன்ற பாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னுமொரு ரவுண்ட் வரலாம்.

- ராசாத்தி என்னும் அரவாணி கேரக்டரில் வையாபுரி நடிப்பின் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார். அவரை இன்னும் சில காட்சிகளில் காட்டியிருக்கலாம். ரஞ்சிதா சில காட்சிகளில் பிரபுவின் மனைவியாக தலையை காட்டினாலும் திரையரங்கில் ஆரவாரம்.

பாடல்கள்
பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட். புதிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. "வீரா வீரா..." என்று தொடங்கும் பாடல் டைட்டில் பாடலாக ஒலித்தது. "உசுரே போகுதே.." பாடல் படத்தின் ஆரம்பத்திலேயே வந்து உற்சாகம் கூட்டியது. "கொடு போட்டா..." என்று தொடங்கும் பாடலும் "கெடா கறி..." என்று தொடங்கும் பாடலும் வழக்கமாக மணிரத்னம் படத்தில் வரும் கொண்டாட்டப் பாடல்கள். "காட்டுச் சிறுக்கி..." பாடல் திரையில் வராதது மற்றுமொரு ஏமாற்றம். இது தவிர ஐஸ் - ப்ருத்வி நடனத்தினூடே ரொமான்ஸ் செய்யும் பாடல் பார்ப்பதற்கு இதமாக இருந்தது.

எனக்குப் பிடித்த காட்சி
தோனியில் குழந்தைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு விக்ரம் ஐஸிடம் பேசும் வசனக்காட்சி. இதுவரை காதலை யாருமே இப்படி வெளிப்படுத்தி இருக்கமாட்டார்கள். அதேபோல சிலைமுன்பு விக்ரம் பேசும் வசனமும் சிறப்பாக இருந்தது. இந்தக் காட்சிகளை எல்லாம் விவரித்தால் நன்றாக இருக்காது, பார்த்து உணருங்கள்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்
சிற்சில எதிர்மறை கருத்துக்கள் எட்டிப்பார்த்தன. வழக்கமாக சமூகப் பிரச்னையை காசாக்கும் மணி சார் இந்தமுறை ஐஸின் மார்பகத்தை காசாக்க முயன்றிருக்கிறார் என்றே சொல்லலாம். கதைக்கு கொஞ்சமும் தேவையில்லாத சதையை ஐஸ் காட்டியிருக்கிறார். ஐஸ், அவரது வீட்டில் இருக்கும்போது கூட க்ளீவேஜ் தெரிவதுபோல உடையணிந்து இருக்கிறார். மணி சார் வீட்டு பெண்களெல்லாம் அப்படித்தான் உடுத்துவார்கள் போல. ப்ரியாமணி தோன்றும் பாடலில் கூட கேமரா பின்பு நின்றுகொண்டு "கொஞ்சம் மாராப்பை விலக்கிவிட்டு ஆடும்மா..." என்று சொல்லியிருப்பார் போல. ராவணனைப் பற்றி சொன்னதெல்லாம் ஒ.கே தான். ஆனால் ப்ரியாமணி விவகாரத்தில் ப்ரித்விக்கு சம்மந்தமே இல்லாதது போல காட்டியும், ஐஸை ப்ரித்வி உண்மையில் சந்தேகப்படவில்லை என்பது போலவும் காட்டி ராமனையும் நல்லவனாக்க முயன்றிருக்கிறார். சரி, அந்தக் கதையை விட்டுதொலைப்போம்.

தீர்ப்பு
படம் ஓடுமா என்று கேட்டால் நிச்சயம் ஓடாது என்றே சொல்லுவேன். நம் தமிழர்களின் ரசனையைப் பற்றி நமக்குத்தான் நன்றாக தெரியுமே. ஆனால் கண்டிப்பாக விருதுகளை வாங்கிக் குவிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண படமாகக்கூட அமையலாம். ஆனால் வட இந்தியாவில் படம் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். கண்டனக்குரல்கள் கூட எழலாம். கண்டிப்பாக படத்தை ஒருமுறை ரசிக்கலாம். நீங்கள் மணி சாரின் விசுவாசியாக இருந்தால் பலமுறை ரசிக்கலாம்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

8 comments:

Chitra said...

உங்கள் விமர்சனம் தீர்ப்போட வந்துருக்கே! :-)

ஆட்டையாம்பட்டி அம்பி said...

===>>> இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

Dear Prabhakaran, நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

jillthanni said...

@ஆட்டையாம்பட்டி அம்பி

என்ன சார்
எல்லா விமர்சனத்திலும் இந்த மதத்தை புகுத்துகிறீர்கள்
இது திரைப்பட விமர்சனம் தான் நன்பரே
இங்கு மதம் வேண்டாமே

jillthanni said...

விமர்சனம் ஓ.கே பிரபா :)
படம் பாத்துட்டு சொல்றேன்
உங்க விமர்சனத்த பத்தி

பனித்துளி சங்கர் said...

உங்களின் பார்வையில் விமர்சனம் நல்ல இருக்கிறது .. இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்துவிட்டு மீண்டும் வருவேன்

Karthick Chidambaram said...

Nalla vimarsanam

A Simple Man said...

Its aish' own voice in tamil

Udhayakumar said...

It is a flop in Hindi! It has not created any impact...