14 May 2011

தேர்தல் முடிவன்று ஆப்பு வைத்த பிளாக்கர்...!!!

கிட்டத்தட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திரட்டிகளில் அரசியல் குறித்த இடுகைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் செய்திகளை உடனுக்குடன் தருவதில் சில வலைப்பூக்கள் சிறந்து விளங்கி வந்தன. காப்பி - பேஸ்ட் என்றாலும் செய்திதானே முக்கியம்.


நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்ததும் ப்ளாக்கரை திறந்து நம்ம பங்காளிகள் ஏதாவது எழுதியிருப்பாங்க படிக்கலாம் என்று பார்த்தால் அதிர்ச்சி. பிளாக்கர் தளம் இயங்கவில்லை. ஒருவேளை நமக்கு மட்டும் தான் இப்படியோ என்று பயந்து நண்பருக்கு கால் செய்து அவரிடம் கேட்க அங்கேயும் சேம் பிளட்.

என்னவென்று கூகிளாத்தாவிடம் விசாரித்தேன். அதாவது புதன்கிழமை இரவு ப்ளாக்கர் தளத்தில் சில திட்டமிட்ட பராமரிப்பு வேலைகள் நடந்துள்ளன. அப்போது ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகளால் நேற்று முழுவதும் கிட்டத்தட்ட இருபதரை மணி நேரத்துக்கு பிளாக்கர் தளம் இயங்காமல் இருந்திருக்கிறது.

மற்றபடி இதற்கும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கலைஞரின் வழுக்கை மீது சத்தியம் செய்து சொல்கிறார் ப்ளாக்கர் நிர்வாகி எடி கெஸ்லர். "நாங்களும் எங்கள் சொந்த வலைப்பூக்களுக்கு ப்ளாக்கரையே பயன்படுத்துகிறோம். அதனால் எங்களுக்கும் அதன் வலி புரியும். இனி இதுபோன்ற கோளாறு ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்" கெஸ்லர்.

ஒரிஜினல் செய்தி லிங்க்

ப்ளாக்கர் தளங்களில் மட்டும் இடுகை வெளியிட முடியாமல் இருக்க அரசியல் செய்திகளை தெரிந்துக்கொள்ள இணையதளங்களையும், வேர்ட் பிரஸ் தளங்களையும் நாடினேன். அவற்றுள் ஒற்றன், விறுவிறுப்பு, என் வழி போன்ற தளங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

Post Comment

12 comments:

Speed Master said...

உங்கள் கடமை உணர்ச்சிக்கு கைதட்டுக்கள்


கல்கத்தா
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html

மதுரை சரவணன் said...

இது தான் காரணமா.. இதில் எந்த அரசியலும் இல்லை என்பதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்

NKS.ஹாஜா மைதீன் said...

ஹ்ம்ம்ம்....சேம் பிளட்....

ரஹீம் கஸ்ஸாலி said...

ஹேக் செய்யப்பட்டதாக கூட சொல்லப்பட்டது.

Anonymous said...

ம்ம என்ற Template முற்றாகவே செயலிழந்துவிட்டது...

தமிழ்வாசி பிரகாஷ் said...

en blog'il recent post delete seiyappattu, meendum inru show aanathu. but old comment ellaame poye pochchu

அணில் said...

ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் இரண்டு நாட்கள் முன்பு ஓரிரு மாற்றம் செய்திருந்தேன். இன்று அந்த மாற்றங்கள் எங்கே சென்றன எனதி தெரியவில்லை. அன்று நான் இட்ட மறுமொழியையும் காணவில்லை. ஏதோ சூனியம் ஆகிவிட்டதென நினைத்தேன், தங்கள் பதிவை படித்ததும் ஐயம் தெளிவுற்றது. வாழ்க ப்ளாக்கர் சமுதாயம்.

Unknown said...

பல இடுகைகளையும் காணல நண்பா.....அவை கல்வெட்டுகளா பொறிக்கறதா இருந்தேன் ஹூம்!

சி.பி.செந்தில்குமார் said...

புலனாய்வு.. குட்

எம் அப்துல் காதர் said...

நானும் இதை அனுபவத்தில் உணர்ந்தேன்.

ம.தி.சுதா said...

எல்லாம் பிளான் பண்ணித் தான் செய்யுறாய்ங்க போல இருக்கு பி.பி...

கார்த்தி said...

என்ன பதிவுபோட பிந்துது?