25 March 2012

கண்கலங்க வைத்த வெங்காயம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏறிவந்த ஏனிப்படிகளை எட்டி உதைக்கும் சினிமாக்காரர்களுக்கு மத்தியில், தன்னைப்போலவே சிரமப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவொரு தோழரை கை கொடுத்து தூக்கியிருக்கும் சேரனுக்கு முதல் பொக்கே...!

ஏற்கனவே அரவான் படத்திற்கு அழைத்துச்சென்று பலி கொடுத்தமையால், சினிமாவுக்கு போகலாமா டாடி என்றவுடன் என் தந்தை பதறினார். வரவேமாட்டேன் என்று முரண்டு பிடித்தவரிடம் இயக்குனர் திராவிடர் கழக உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறாராம் என்று ஒரு பிட்டை போட்டதும் உற்சாகமாக கிளம்பினார். வழக்கமாக மாஸ் ஹீரோக்கள் படத்தை மட்டுமே திரையிடும் ஐட்ரீம்ஸ் திரையரங்கில் வெங்காயம் திரையிடப்பட்டிருந்தது ஆச்சர்யமான விஷயம்தான். டைட்டிலில் வீரத்தமிழன் சத்யராஜ், பாடல்கள் அறிவுமதி, சுப.வீரபாண்டியன் போன்றவற்றை பார்த்ததும் அப்பாவுக்கு இன்னும் நம்பிக்கை பிறந்திருக்கும்.

ஜோதிடர்கள், மந்திரவாதிகள், சாமியார்கள் செய்யும் அயோக்கியத்தனங்களால் சாமான்யர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே படத்தின் ஒன்லைன். அதையே கொஞ்சம் கமர்ஷியலாக தர விரும்பி காதல், கடத்தல் போன்ற மசாலாக்களை வெங்காயத்துடன் சேர்த்து வெங்காய சாம்பார் படைத்திருக்கிறார் இயக்குனர்.

இரு இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பி, ஜோதிடரிடம் செல்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றும் அவரை அண்டுபவர்கள் அழிந்துவிடுவார்கள் என்றும் ஜோதிடர் சொல்கிறார். நண்பர்களுக்குள் விரிசல் விழுந்து, விரக்தியடைந்த நேரம் சரியில்லாதவர் தற்கொலை செய்துகொள்கிறார். கூத்துக்கலைஞர் ஒருவர் தன்னுடைய தாயில்லாத மகனின் நோயை குணப்படுத்தும் பொருட்டு கடனை வாங்கி வெளியூருக்கு செல்கிறார். போன இடத்தில், அவருக்கு தெரியாமல் அவரது மகனை அழைத்துச்சென்று நரபலி கொடுத்துவிடுகிறார் ஒருவர். தன்னிடம் திருமண பொருத்தம் கேட்க வந்த பெண்ணை தோஷம் கழிக்கிறேன் என்று கற்பழிக்க முயற்சிக்கிறார் ஒரு மந்திரவாதி. இப்படியெல்லாம் எங்கேயாவது நடக்குமா என்று கேட்க முடியாதபடி, அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்கும் அபத்தமான செய்திகளை வைத்தே கதை பின்னப்பட்டிருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

நாயகன் – நாயகியாக அலெக்சாண்டர் – பவினா என்கிற புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் பகுத்தறிவே படத்தின் பிரதான நாயகனாக விளங்குகிறது. ஒரேயடியாக கடவுள் மறுப்பை கையில் எடுக்காமல் மூட நம்பிக்கைகளை மட்டும் சாடியிருப்பது இயக்குனருடைய சாமர்த்தியம்.

அலெக்சாண்டர் பவினா காதல் காட்சிகள் ஆரம்பத்தில் படத்திற்கு தேவையே இல்லாதது போல தெரிந்தாலும் பிற்பாதியில் அதுவே பிராதன கதையுடன் சென்று இணைந்துக்கொள்கிறது. ஹீரோயின் கூட அதே மாதிரி தான். பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் பார்க்க பார்க்க பிடிக்கிறது.

ஹீரோயினுடைய அம்மாவாக வருபவர், கூத்துக்கலைஞர், கூத்துக்கலைஞரின் மகள் போன்றவர்கள் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கூத்துக்கலைஞரின் மகளாக வருபவர் மனதில் தங்கையாகவே தோன்றி பரிதாபம் ஏற்படுத்துகிறார். கார் விபத்து காட்சி மைனா படத்தை நினைவூட்டினாலும் சில நிமிடங்கள் பதற வைக்கிறது. சத்யராஜ் தோன்றும் பாடலின் வரிகள் அறிவுமதி எழுதியதா, சுபவீ எழுதியதா என்று தெரியவில்லை. அற்புதம். 

கருத்து சொல்லும் / சொல்ல முனையும் படைப்புகள் மீது கல் வீசுவது என்னுடைய கொள்கையல்ல என்றாலும் ச்சே படத்தை வேறு மாதிரி இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை. தவிர, இயக்குனர் பதிவர்களின் நண்பர் என்பதால் சில தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். Take it as a constructive criticisation.

மிகப்பெரிய மைனஸ். படத்தில் மூடநம்பிக்கையை எதிர்க்கும் அனைவருமே ஏதோ ஒரு விரக்தியிலும் இழப்பின் காரணமாகவுமே எதிர்க்கிறார்கள், கடைசி காட்சியில் கதாநாயகன் உட்பட. குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் நடிப்பு பயங்கர மோசம். இதுபோன்ற படங்களில் வசனங்கள் ஷார்ப்பாக இருப்பது அவசியம். தேவடியா பசங்கன்னு திட்டுவதையெல்லாம் ரசிக்க முடியவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்துவதே பகுத்தறிவுக்கு புறம்பானது. கற்பழிப்பு முயற்சி காட்சியை தந்தைக்கு அருகிலிருந்து பார்க்க சிரமப்பட்டேன். மார்க்கெட்டிங்கை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் தினத்தந்தியிலாவது விளம்பரம் கொடுக்கவும். படம் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டால் கூட படம் எங்கே ஓடுகிறது என்று தெரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.

மற்றபடி உணர்ச்சிப்பூர்வமாக பார்த்தால் வெங்காயம் ஒரு காஸ்ட்லியான காவியமே...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

48 comments:

Anonymous said...

aaaaaaaaaaaa

Anonymous said...

meee the firstuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Anonymous said...

சுப்பரா இருந்துச்சி உங்க விமர்சனம் ...

உங்க டாடி திட்ட மாட்டாங்களா ...அடிக்கடி சினிமாக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னால்

Anonymous said...

நேரடியாக திட்ட விரும்புபவர்களுக்கு - mail id: nrflyingtaurus@gmail.com & phone number: +91-8015899828.////////////////////////////////////////



இந்த இடத்தில் பதினஞ்சு மார்க் கேள்வி க்கு விடை அளிக்குரமாறி அல்லோ இருந்தது ...

இப்போ ஏன் ரெண்டு மார்க் கேள்விக்கு விடை மாறி மாறிவிட்டது ....

Anonymous said...

/ஹீரோயின் கூட அதே மாதிரி தான். பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் பார்க்க பார்க்க பிடிக்கிறது.//

உங்க அப்பாவோட செல் நம்பர் என்ன தம்பி....

Philosophy Prabhakaran said...

@ கலை
// சுப்பரா இருந்துச்சி உங்க விமர்சனம் ... //

நன்றி கலை...

// உங்க டாடி திட்ட மாட்டாங்களா ...அடிக்கடி சினிமாக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னால் //

நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க... நான் அப்பாவை படத்துக்கு கூட்டிட்டு போக சொல்லலை... அவரைத்தான் நான் கூட்டிட்டு போனேன்...

Philosophy Prabhakaran said...

@ கலை
// இந்த இடத்தில் பதினஞ்சு மார்க் கேள்வி க்கு விடை அளிக்குரமாறி அல்லோ இருந்தது ...

இப்போ ஏன் ரெண்டு மார்க் கேள்விக்கு விடை மாறி மாறிவிட்டது .... //

எல்லாம் ஒரு தைரியம் தான்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// உங்க அப்பாவோட செல் நம்பர் என்ன தம்பி.... //

அடப்பதருகளா... போன் நம்பர் போட்டுட்டு எழுதுறது தான் வீரம்ன்னு சொன்னீங்க... போட்டேன்... இப்ப அப்பாவோட போன் நம்பரை போட்டுட்டு எழுதுறவன் தான் வீரன்னு சொல்லுவீங்க போல...

பால கணேஷ் said...

வெங்காயம் கண்ணில் நீரை வரவழைக்கும். இந்த வெங்காயம் சில குறைகள் இருந்தாலும் ரசிக்க வெச்சிடுச்சு போல... பாத்துடறேன்!

கோகுல் said...

குறைந்த பட்ச தினத்தந்தி விளம்பரம் ரொம்பவே அவசியம் தான்.

இப்படிப்பட்ட முயற்சிகள் செய்து பார்க்க துணிந்த படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

ஹாலிவுட்ரசிகன் said...

சேரன் மறுபடி ரீரிலீஸ் பண்றாருன்னு தெரிஞ்சப்பவே படத்துல ஏதாச்சு நல்லதா ஒரு விஷயம் சரி இருக்கணும்னு நினைச்சேன். டீவிடீ வந்துட்டா சீக்கிரம் பார்த்துடலாம்.

Anonymous said...

//Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// உங்க அப்பாவோட செல் நம்பர் என்ன தம்பி.... //

போன் நம்பர் போட்டுட்டு எழுதுறது தான் வீரம்ன்னு சொன்னீங்க... போட்டேன்... இப்ப அப்பாவோட போன் நம்பரை போட்டுட்டு எழுதுறவன் தான் வீரன்னு சொல்லுவீங்க போல...//

ஏன்யா இப்ப திடீர்னு டேக் ஆப் ஆகுற..?? அந்த பொண்ணோட நம்பர் நம்ம சேகுவரா கிட்ட இருக்காம். சம்மந்தம் பேச சொல்லலாம்னு பாத்தா.......

முத்தரசு said...

பார்கோணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹீரோயின் கூட அதே மாதிரி தான். பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் பார்க்க பார்க்க பிடிக்கிறது./////

ஏன் இந்த கொழப்படி? இன்னும் 2-3 ஸ்டில்லு போட்டிருந்தா நாங்களும் ட்ரை பண்ணி இருப்போம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
//Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// உங்க அப்பாவோட செல் நம்பர் என்ன தம்பி.... //

போன் நம்பர் போட்டுட்டு எழுதுறது தான் வீரம்ன்னு சொன்னீங்க... போட்டேன்... இப்ப அப்பாவோட போன் நம்பரை போட்டுட்டு எழுதுறவன் தான் வீரன்னு சொல்லுவீங்க போல...//

ஏன்யா இப்ப திடீர்னு டேக் ஆப் ஆகுற..?? அந்த பொண்ணோட நம்பர் நம்ம சேகுவரா கிட்ட இருக்காம். சம்மந்தம் பேச சொல்லலாம்னு பாத்தா.......//////////

கமிசன் எவ்வளவுங்கோ...... சீக்கிரம் உங்க டீட்டெயில்ஸ் கொடுங்கண்ணே, கஸ்டமர்ஸ் வெயிட்டிங்.......

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// வெங்காயம் கண்ணில் நீரை வரவழைக்கும். இந்த வெங்காயம் சில குறைகள் இருந்தாலும் ரசிக்க வெச்சிடுச்சு போல... பாத்துடறேன்! //

பாருங்க சார்... உங்க பின்னூட்டத்தை பார்த்ததும் தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது... இந்தா வர்றேன்...

Philosophy Prabhakaran said...

@ கோகுல்
// குறைந்த பட்ச தினத்தந்தி விளம்பரம் ரொம்பவே அவசியம் தான். //

இன்றைய செய்தித்தாளில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள்...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// சேரன் மறுபடி ரீரிலீஸ் பண்றாருன்னு தெரிஞ்சப்பவே படத்துல ஏதாச்சு நல்லதா ஒரு விஷயம் சரி இருக்கணும்னு நினைச்சேன். டீவிடீ வந்துட்டா சீக்கிரம் பார்த்துடலாம். //

டிவிடியில பாக்குறதுன்னு முடிவு பண்ண பிறகு ரிலீஸ், ரீ-ரிலீஸ் பத்தியெல்லாம் ஏன் கவலைப்படுறீங்க...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// ஏன்யா இப்ப திடீர்னு டேக் ஆப் ஆகுற..?? அந்த பொண்ணோட நம்பர் நம்ம சேகுவரா கிட்ட இருக்காம். சம்மந்தம் பேச சொல்லலாம்னு பாத்தா....... //

சேகுவேரா கிட்ட இருக்குதா... அப்ப வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// பார்கோணும் //

பாருங்க சார்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஏன் இந்த கொழப்படி? இன்னும் 2-3 ஸ்டில்லு போட்டிருந்தா நாங்களும் ட்ரை பண்ணி இருப்போம்ல? //

இது ஒண்ணுதான் உருப்படியான ஸ்டில்... வேற போட்டிருந்தா பயந்திருப்பீங்க...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// கமிசன் எவ்வளவுங்கோ...... சீக்கிரம் உங்க டீட்டெயில்ஸ் கொடுங்கண்ணே, கஸ்டமர்ஸ் வெயிட்டிங்....... //

அண்ணே... அப்ப திரிஷாவோட வாழ்க்கை...???

Unknown said...

விமர்சனத்தை ரொம்ப எதார்தமாகவும், அழகாகவும் தொடுத்திருக்கேங்க சகோ, சேரனின் பங்கு படத்தில் எப்படியாக இருந்தாலும் அவர் இருக்கும் படம் எதார்த்தமான படமாகவும், சினிமாவை தரமான பார்வைக்கு எடுத்துச்செல்லும் களமாகவும் இருக்கும் என்ற என் பார்வைக்கு சரியான தீனியாய் அமைந்தது உங்கள் விமர்சனம்...
சில இடங்களில் சறுக்கல்கள் புதியவர்களுக்கு ஏற்படுவது சகஜம் தானே...

நாய் நக்ஸ் said...

மிக கடுமையான கோபத்தில்....

:))))))))))))

துரைடேனியல் said...

படத்தை விட உங்க விமர்சனம் நல்லாருக்கு. உங்க வழக்கமான 'டச்' (என்ன பண்றது?!) வழி நெடுக...

துரைடேனியல் said...

தமஓ 5 (பழக்க தோஷம்...ஹி...ஹி)

Vadakkupatti Raamsami said...

இயக்குனர் திராவிடர் கழக உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறாராம் என்று ஒரு பிட்டை போட்டதும் உற்சாகமாக கிளம்பினார்///
.
.
ஒ அப்போ இயக்குனர் தமிழன் இல்லையா?சே!ஏதாவது தெலுங்கு கன்னடன் மலையாளியா இருக்கும்!ராமசாமி நாயக்கரே கன்னடருதானே!இவிங்க காமெடி தாங்கல!
*
*
சுப.வீரபாண்டியன் போன்றவற்றை பார்த்ததும் அப்பாவுக்கு இன்னும் நம்பிக்கை பிறந்திருக்கும்.
.
.
சுப வீயா?அப்போ காமெடிக்கு பஞ்சமே இருக்காதுன்னு சொல்லுங்க!
.
.
ஒரேயடியாக கடவுள் மறுப்பை கையில் எடுக்காமல் மூட நம்பிக்கைகளை மட்டும் சாடியிருப்பது இயக்குனருடைய சாமர்த்தியம்./
.
.
எந்த மூட நம்பிக்கைகள்?மூணாவது நாலு கடவுள் உசுரோட வந்ததை சாடியுள்ளனரா?சாத்தான் என்று சொல்லி வெறும் கல் தூணை கல்லால ரவுண்டு கட்டி அடிப்பதை கண்டிக்கின்றனரா?தனது மதம் சார்ந்த நடவடிக்கைகளை கண்டித்த ஒரு சிறுபான்மை கவிஞரை மத விளக்கம் செய்தனரே அதை கண்டித்தனரா?இருக்கவே இருக்காது(உண்மையா பிரபா?)
என்னா ஒரு காவி சாமி,ஜோசியம் ஜாதகம் வேப்பிலை இதோடு இவர்கள் பகுத்தறிவு என்ட்ஸ்!

Anonymous said...

நல்ல விமர்சனம்...

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் பகிர்ந்திடுங்கள்.

Jayadev Das said...

\\இப்படியெல்லாம் எங்கேயாவது நடக்குமா என்று கேட்க முடியாதபடி, அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்கும் அபத்தமான செய்திகளை வைத்தே கதை பின்னப்பட்டிருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.\\ அபத்தமான செய்தியா...?? என்ன சொல்றே மாப்பு? திருச்சி விராலிமலை சாமியார் பிரேமானந்தா, காஞ்சிபுரம் பூசாரி தேவநாதன், அப்புறம் ரீசண்டா திருவண்ணாமலை ராஜசேகர் [அதான்யா ரஞ்சிதானந்தா....ஹி...ஹி...ஹி...] இந்த மாதிரி நிஜமாவேதானே நடக்குது?

Jayadev Das said...

\\Take it as a constructive criticisation.\\ criticisation இந்த வார்த்தை எங்கேயிருந்து புடிசிகிட்டு வந்தே மாப்பு!! விவேக் மாதிரி அள்ளி உடிரியே மாப்பு.

vinhvishali said...
This comment has been removed by the author.
Unknown said...

நீங்க நடத்துங்க தம்பி!

Philosophy Prabhakaran said...

@ ரேவா

மிக்க நன்றி ரேவா...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// மிக கடுமையான கோபத்தில்.... //

ஏன் தல... நான்தான் அப்பவே மாப்பு கேட்டுட்டேனே...

Philosophy Prabhakaran said...

@ துரைடேனியல்
// படத்தை விட உங்க விமர்சனம் நல்லாருக்கு. உங்க வழக்கமான 'டச்' (என்ன பண்றது?!) வழி நெடுக... //

நன்றி து.டே...

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// எந்த மூட நம்பிக்கைகள்?மூணாவது நாலு கடவுள் உசுரோட வந்ததை சாடியுள்ளனரா?சாத்தான் என்று சொல்லி வெறும் கல் தூணை கல்லால ரவுண்டு கட்டி அடிப்பதை கண்டிக்கின்றனரா?தனது மதம் சார்ந்த நடவடிக்கைகளை கண்டித்த ஒரு சிறுபான்மை கவிஞரை மத விளக்கம் செய்தனரே அதை கண்டித்தனரா?இருக்கவே இருக்காது(உண்மையா பிரபா?)
என்னா ஒரு காவி சாமி,ஜோசியம் ஜாதகம் வேப்பிலை இதோடு இவர்கள் பகுத்தறிவு என்ட்ஸ்! //

ஆமாம்... எந்த மூடநம்பிக்கைகளால் சாமான்யர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதோ... எது தமிழகத்தில் பரவலாக நடக்கிறதோ அதை சாடியிருக்கிறார்கள்... கிறிஸ்தவ பாதிரிகள் செய்யும் மொள்ளமாரித்தனங்களையும் மோடி மஸ்தான் மந்திரவாதிகள் பற்றியும் எதுவும் சொல்லவில்லை...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// அபத்தமான செய்தியா...?? என்ன சொல்றே மாப்பு? திருச்சி விராலிமலை சாமியார் பிரேமானந்தா, காஞ்சிபுரம் பூசாரி தேவநாதன், அப்புறம் ரீசண்டா திருவண்ணாமலை ராஜசேகர் [அதான்யா ரஞ்சிதானந்தா....ஹி...ஹி...ஹி...] இந்த மாதிரி நிஜமாவேதானே நடக்குது? //

சாரி சார்... அபத்தம் என்ற வார்த்தைக்கு நான் தவறான அர்த்தத்தை தெரிந்து வைத்திருந்தேன்... இப்போது சரியான அர்த்தத்தை தெரிந்துக்கொண்டேன்...

// criticisation இந்த வார்த்தை எங்கேயிருந்து புடிசிகிட்டு வந்தே மாப்பு!! விவேக் மாதிரி அள்ளி உடிரியே மாப்பு. //

அடிக்கடி வருதோ... சீனியர் பதிவர்கள் சொல்லிக்கொடுத்த வார்த்தை தான்...

Philosophy Prabhakaran said...

@ vinhvishali
// This comment has been removed by the author. //

யோவ் விக்கி,... ஏகப்பட்ட போலி ஐடிக்களை வைத்துக்கொண்டு எதை பயன்படுத்தி பின்னூட்டம் போடுகிறீர் என்பதே தெரியாமல் இருக்கிறீர்களே... செம மப்பா...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// நீங்க நடத்துங்க தம்பி! //

ஏனுங்ணா எதுவும் தெய்வகுத்தம் ஆகிடுச்சா...

sankagiri rajkumar said...

நிறைகளையும் குறைகளையும் பார்த்தேன்.(படத்தில் குறைகளே இல்லை என நான் மழுப்ப போவதில்லை)விமர்சனத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நான் சரி செய்ய முயல்கிறேன்,படத்தில் நான் சுட்டிக்காட்டிய குறைகளை இந்த சமூகம் சரி செய்துகொண்டிப்பதால்.

டக்கால்டி said...

Long back this got released in internet. I think before 10 months.

I liked the "koothu" kalaignan sequences.

sirippusurendar said...

I dream la vengayam odrathu theriyama maharani la kazhugu poi sema gaandu aaiten thala climax la ellam mandaya pota than nalla padamnu yarachu sattam potangala goyala gaanda kithu pa.

Philosophy Prabhakaran said...

@ sankagiri rajkumar
// நிறைகளையும் குறைகளையும் பார்த்தேன்.(படத்தில் குறைகளே இல்லை என நான் மழுப்ப போவதில்லை)விமர்சனத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நான் சரி செய்ய முயல்கிறேன்,படத்தில் நான் சுட்டிக்காட்டிய குறைகளை இந்த சமூகம் சரி செய்துகொண்டிப்பதால். //

நன்றி சார்... சமூகம் சரி செய்துக்கொண்டிருக்கிறதா... இது எப்ப...

Philosophy Prabhakaran said...

@ டக்கால்டி
// Long back this got released in internet. I think before 10 months.

I liked the "koothu" kalaignan sequences. //

ஆமாம் தல... தற்போது இணையத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கேள்விப்பட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ sirippusurendar
// I dream la vengayam odrathu theriyama maharani la kazhugu poi sema gaandu aaiten thala climax la ellam mandaya pota than nalla padamnu yarachu sattam potangala goyala gaanda kithu pa. //

ஓ... நீங்க நம்ம ஏரியா தானா... விரைவில் சந்திப்போம்... ஐட்ரீம்ல கூட இரண்டு காட்சிகள் கழுகு தான் பறக்குது....

ரவி said...

வெங்காயம் இல்ல காயம் தான் பட பேரு!படத்த தயாரிச்சு சேரனுக்கு காயம் ஏற்பட்டுதா இல்லை வீரமணி அண்ட் கோ வெங்காயம் என்ற வார்த்தைக்கு வழக்கம் போல காப்பிரைட் கோரியதால் மாற்றப்பட்டதா?வாழ்க பகுத்தறிவு

யுவகிருஷ்ணா said...

நல்ல விமர்சனம். நன்றி பிரபா.

yuvan said...

aaranya kandam?????????????????