அன்புள்ள வலைப்பூவிற்கு,
சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசிக்கு ஒரு
குறுந்தகவல் வந்தது. கிட்டத்தட்ட என்னுடைய குருநாதருக்கு எழுதப்படும் வாசகர்
கடிதம் போலவே இருந்தது. நெல்லையிலிருந்து செந்தில் என்பவர் அனுப்பியிருந்தார்.
அவர் என்னுடைய வாசகர் என்றும், கடையேழு வள்ளல்களை பற்றியும் அவர்கள் ஏன் வள்ளல்கள்
ஆனார்கள் என்றும் எழுதும்படி பணித்திருந்தார். அதாவது மயிலுக்கு போர்வை தந்த
பேகன், அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் மாதிரி ஒவ்வொரு வள்ளலுக்கும்
பின் உள்ள வரலாற்று சம்பவத்தை குறித்து கேட்டிருக்கிறார். “அது ஏன்டா என்னைப்
பார்த்து அந்த கேள்விய கேட்ட !” என்று செந்திலை பளார் விடும் கவுண்டமணி
நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வாட் எ கோ-இன்ஸிடென்ஸ், நம்முடைய
வாசகர் பெயரும் செந்தில் தான் ! இருப்பினும் என்னையும் நம்பி ஒரு ஜீவன் ஒரு
வாசகர் விருப்பத்தை முன் வைத்திருப்பதால் தாமதமானாலும் கூட அதனை முடிந்த வரைக்கும்
நிறைவேற்றலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் படித்து இன்புற அன்னார்
அனுப்பிய குறுந்தகவல்.
முதலேழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன்,
விராடன்
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான்,
சிசுபாலன், வக்கிரன், சந்தன்
சரி, கடையேழு வள்ளல்கள் ? பாரி, அதியமான், பேகன்.... அப்புறம்...
அப்புறம்... ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ? கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி,
ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன். ஏன் பாரி, அதியமான், பேகன் - மூவரை
மட்டும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது ? ஏன் கடையேழு வள்ளல்களில் மற்றவர்கள்
அவ்வளவு ஃபேமஸ் இல்லை. எனக்குத் தெரிந்த முக்கியமான காரணம், நம்முடைய
பாடத்திட்டம். பள்ளிக்கூட கல்வித்தமிழில் பாரி, அதியமான், பேகன் பற்றி
படித்திருக்கிறோம். மற்றவர்களை பற்றி அதிகம் படித்ததில்லை. அப்படியே
படித்திருந்தாலும் அவை பதினாறு மதிப்பெண் கேள்விகளில் கேட்கப்படுவதில்லை.
மறுபுறம், முன்னரே குறிப்பிட்டது போல இவர்கள் மூவருக்கும் இருப்பதைப் போல ஸ்பெஷல்
வரலாற்றுச் சம்பவம் மற்றவர்களுக்கு பதியப்படவில்லை / முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் அவர்கள் எதன் அடிப்படையில் வள்ளல்களாக தெரிவு
செய்யப்பட்டனர் ? யார் இதையெல்லாம் தெரிவு செய்தார்கள் ? போலவே கோர்வையாக நிறைய
கேள்விகள் ஏழத் துவங்கிவிட்டன. இதுகுறித்து சில புத்தகங்கள், இணையத்தரவுகளை
படித்து / சேகரித்து வருகிறேன். பெரிய ஆய்வு, ஆராய்ச்சி அளவில் இல்லையென்றாலும்
கூட செந்தில் அவர்களுடைய கேள்விக்கு விடை சொல்லும் வகையில் அடுத்த சில
வாரங்களுக்கு போதிய இடைவெளியில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகள் தொடராக
வெளிவரும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிக்குறிப்பு 1: தமிழ் மீதுகொண்ட
பற்று காரணமாகவும், வள்ளல்களின் வரலாற்றின் மீதான ஆர்வம் காரணமாகவும் வாசகர்
செந்தில் அவர்கள் தன்னுடைய மகனுக்கு பேகன் பெயர் சூட்டியுள்ளார்.
அடிக்குறிப்பு 2: இதுகுறித்த தகவல்களை
இணையத்தில் தேடியபோது பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டங்களில் நிறைய தகவல்கள்
கிடைத்தன. எனவே, இதனை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில்
பகிர்ந்துக்கொள்ளலாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
19 comments:
ஓரியை வல்-வில்- ஓரி என்று (வில்வித்தையில் சிறந்தவனோ என்னவோ) அழைப்பார்கள் என்று எங்கோ வாசித்த ஞாபகம். அதுபோல பாரியின் குதிரைக்குப் பெயர் ஓரி. ஓரியின் குதிரைக்குப் பெயர் பாரி.
முக்கியமான விஷயம் பாரியின் மகள்கள்தான் அங்கவை, சங்கவை!
அம்புட்டுதேன் ஞாபகமிருக்கு! :-)
//தமிழ் மீதுகொண்ட பற்று காரணமாகவும், வள்ளல்களின் வரலாற்றின் மீதான ஆர்வம் காரணமாகவும் வாசகர் செந்தில் அவர்கள் தன்னுடைய மகனுக்கு பேகன் பெயர் சூட்டியுள்ளார்.//
இன்னும் 20 புள்ள பெத்து அதுக்கும் பேரு வைக்க வாழ்த்ஹ்டுக்கள்
அந்த காலத்தில் புலவர்கள் புளுகி விட்டு போனது தான் வரலாறு .. யார் புலவர்களுக்கும் அந்தணர்களுக்கும் அதிகமா செலவு செய்கிறார்களோ அவர்களை வள்ளல் என்று புகழ்ந்து தள்ளி கவிதை வடித்து காசு பாப்பாங்க.
சிக்கனமா இருந்து மக்களுக்கு நன்மை செய்யும் அரசனை இவர்கள் புகழ்ந்து வள்ளல் என்று சொல்ல மாட்டார்கள் .. கல்லணை கட்டிய கரிகாலன் வள்ளல் கிடையாது ...இதில் காரி ஓரி எல்லாம் பெரிய அரசர்களே கிடையாது கொல்லிமலை சுற்றி ஒரு ஏழு மலைகளை ஆட்சி செய்தவன் ஓரி .. அவனை போரில் கொன்றவன் காரி . ஒருத்தர் பஞ்சாயத்து தலைவரு ஒருத்தர் வார்டு மெம்பரு அவ்ளோதான் இவங்க செல்வாக்கு . என்ன கருமம் அம்மாவை போல் தற்புகழ்ச்சி பிடிக்கும் இவர்கள் வீக்னஸ் நான்றாக புரிந்து கொண்ட புளுவர்கள் முடிந்த வரை புளுகி காசு பார்த்தார்கள் .. முல்லைக்கு தேரையும் மயிலுக்கு போர்வையையும் யாராவது குடுத்தா ஒன்னு அவன் லூசா இருக்கணும் இல்லைனா புல் மப்புல இருக்கணும். இவர்களின் வரலாறு என்று செய்யுளில் தேடி பார்த்தால் புனைவுகளை தவிர வேறு ஒன்றும் உருப்படியாக கிடைக்காது ..
அருமை அஞ்சா சிங்கம்
அஞ்சா சிங்கம் கருத்தை முழுதாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. யார் யாரெல்லாம் தன் நலனை எதிர்ப்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்தார்களோ அவர்கள் தான் வள்ளல்கள் என்று கூறுவார்கள், மேலும் அவர்கள் தன்னிடம் உள்ளவற்றை யாரேனும் கேட்டால் அவர்களிடம் இல்லை என்றே கூற மாட்டார்கள், மேலும் பேகனை எடுத்துக்கொள்ளுங்கள் மயிலுக்குப் போர்வை தந்தான், அவன் மற்றவர்களின் போர்வையை எடுத்துக் கொடுக்க வில்லை. தான் அணிந்திருந்த அங்கியை எடுத்து போர்த்தினான், நீங்கள் செய்வீர்களா இப்படி?
அடுத்து பாரியை எடுத்துக்கொள்ளுங்கள், தன தேரை முல்லைக்கு கொடுத்து விட்டு தான் நடந்து சென்றான். அதியமானை எடுத்துக்கொள்ளுங்கள், அவன் பல நாள் வாழும் நெல்லிக்கனியை அவ்வை பாட்டிக்கு அளித்தான். யாரும் எளிதில் செய்ய இயலாத காரியத்தை அவர்கள் செய்தனர். நம்மிடம் கோடி ரூபாய் இருந்து அதில் சில ஆயிரங்களை அளித்தால் அவன் வள்ளல் அல்ல. அடுத்த வேலை உணவிற்கு வழியில்லாத போது இருக்கும் சிறு பழத்தை இரவல் கேட்பவனுக்கு கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடக்கிறானே, அவன் தான் வள்ளல்...
@ இரவின் புன்னகை said...//
இந்த கதைகள் எல்லாம் உண்மை என்று நம்பும் அளவிற்கு அப்பாவியா நீங்கள் ?.. அது எல்லாம் புலர்வர்களின் புனைவு பாஸ் .. சரி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க முல்லைக்கு தேர் குடுத்தவன் வள்ளலா அல்லது முட்டாளா ? பின்னாடி நானே வந்தால் கூட ஒரு தேர் அனாதையாக நிக்கிறதே என்று அந்த கொடியை வெட்டி போட்டு விட்டு தேரை ஒட்டி போய்விடுவேன் .. இது முல்லைக்கு பாதுகாப்பா அல்லது ஆபத்தா ?ஒரு மூங்கில் கழி பொதும். மழை நேரம் மயில்கள் தொகை விரித்து சிலிர்த்து ஆடும் என்பது படிக்காத விவசாயிக்கு கூட நன்றாக தெரியும் அதற்க்கு குளிர்கிறது என்று போர்வையை கொண்டு போயி ஒரு மன்னன் போர்த்தினான் என்று பாடல் இருக்கிறது என்றால் . மன்னனின் அறிவை கேலி செய்வது போல் இல்லையா ? அப்படியே போர்த்தினாலும் மயிலால் அந்த போர்வையை போர்த்திக்கொண்டு எவ்வளவு தூரம் நடக்க முடியும் .? நெல்லிக்காய் எல்லாம் பசிக்கு எந்த கொம்பனும் சாப்பிட முடியாது. அதுவும் அதை சாப்பிட்டால் மூப்பு இல்லாத நீண்ட ஆயுள் என்று இருக்கிறது இதேல்லாத்தையுமா நம்புவீங்க ?
புறாவிற்கு தொடையை அறுத்து குடுத்த சிபி (செந்தில் கிடையாது ) .உங்க வாழ்க்கையில் ஒரு காக்காவாவது வந்து கேட்டிருக்கா ஏண்டா எனக்கு வச்ச வடையை எடுத்து தின்ன என்று ? பருந்து வந்து கேட்டுச்சாம் இவரு தொடையை அறுத்து குடுத்தாராம் .. அப்புறம் மனு ...மாடு வந்து பெல் அடிச்சி நீதி கேட்டுது உடனே இவரு பையனை தேர் காலில் போட்டு நசுக்கிடாறு .. எது உண்மை எது புனைவு என்று பிரித்து பார்க்கும் பகுத்தறிவை வளர்த்து கொள்ளவும் ..
கி.மு.450 களில் சோழ வம்ச காலத்தில் சின்ன சின்ன பாத்திர, தங்க நாணய, முந்திரிக்கடைகளில் அமராமல் ஓடியாடி வேலை செய்து செல்வந்தராகி அப்பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்த 7 பேரை கடை'யெழு' வள்ளல்கள் என்று சீத்தலை சாத்தனார் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடை கடை வள்ளல்கள் பெயர்களை அறிந்து கொள்ள முடிந்தது! நீங்கள் சொன்னது மாதிரி முதல் இடை வள்ளல்களை பற்றி தகவல்கள் கிடைப்பது அரிது தான்! தொடருக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!
@ இரவின் புன்னகை
இயற்கையில் எந்த ஒரு பிரதேசத்திலும் வாழும் உயிரினத்துக்கும் எல்லாவித சூழ்நிலைகளையும் தாங்கிக் கொள்ளும் வண்ணம் உடலமைப்பு இருக்கும். காட்டில் வாழும் சிங்கம், புலி, குரங்கு போன்றவை மழை பெய்தாலும் நனைதாவரே தான் இருக்கும், அவற்றுக்கு வீடோ, போர்வையோ எதுவும் தேவைப் படாது. பறவைகளைப் பொருத்தவரை அவற்றின் சிறகுகளே அனைத்து environmental challenges களில் இருந்தும் காக்கின்றன. போர்வை தேவையில்லை. இது கூடத் தெரியாமல் எப்படி ஒருத்தர் நாட்டை கட்டியாண்டு இருக்க முடியும் என்பது வியப்பாக இருக்கிறது.
அதே மாதிரி பாரி தனியாக தேரில் சென்றிக்க மாட்டார், நிச்சயம் பரிவாரங்கள் உடன் வந்திருப்பார்கள், ஒரு கொடி கீழே கிடக்கிறது என்றால், தன்னுடன் வந்த வீரர்கள் ஒருத்தரிடம், அந்த கொடி படர்ந்து வளர ஒரு பந்தலைப் போடச் சொல்லிவிட்டு போயிருக்கலாம். தேரை நிறுத்தி விட்டுச் செல்வதெல்லாம் ஓவர். அப்படியெல்லாம் பார்த்தால், பூனை, நாய், ஈ கொசு என்று எல்லாத்துக்கும் பரிதாபப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். வாழ்க்கை நகராது.
ஒருத்தர் பஞ்சாயத்து தலைவரு ஒருத்தர் வார்டு மெம்பரு அவ்ளோதான் இவங்க செல்வாக்கு //
சத்தியமா இவிங்கெல்லாம் இப்போ உயிரோட இருந்தா அஞ்சாசிங்கம் கமெண்ட்ஸ் பார்த்து அந்த மலையிலேயே நாண்டுகிட்டு நின்னு செத்துருப்பாணுக அவ்வ்வ்வ்....
பிரபா,
ஆஹா பிராபல்யப்பதிவர்னா இப்புடித்தான் வாசகர் கடிதமெல்லாம் வருமா அவ்வ்!
நல்ல முயற்சி.
முன்னர் குமரன் என்ற மூத்தப்பதிவர் பாரிவேள் வரலாற்றினை விரிவாக எழுதியுள்ளார், மொத்தம் 17 பாகங்கள். அவரது பதிவில் மேலும் தமிழ் இலக்கியம்,பக்தி என படிக்க நிறைய கிடைக்கும்.
http://koodal1.blogspot.in/2009/07/blog-post.html
ஹி..ஹி அப்படியே ஒரு சுயவிளம்பரம் அடியேனும் பாரிவேளின் வரலாற்றினை சுருக்கமாக எழுதி இருக்கிறேன் ,நேரம் இருப்பின் காணவும்,
http://vovalpaarvai.blogspot.in/2008/02/blog-post_08.html
---------------
அஞ்சா ஸிங்க,
பகுத்தறிவு ஸிங்கம்யா :-))
வள்ளல்கள் பற்றி புலவர்கள் எல்லாம்ம் பாடியாது மிகையான்ன கற்பனை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
பேரரசர்களான சேர,சோழ,பாண்டியர்களை விட சிற்றரசர்களான கடை ஏழு வள்ளல்கள் புகழ்ப்பெறக்காரணம், என்ன பாடினாலும் அள்ளிக்கொடுத்தாங்க, சொற்குற்றம் ,பொருட்குற்றம்னு நோண்டியதில்லை, மேலும் புலவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அரண்மனையில் உட்கார்ந்து வரச்சொல் என ஆணையிடாமல் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்புக்கொடுப்பார்கள், ஆனால் மூவேந்தர்களோ வரச்சொல்லி வரிசையில் நிக்க வைத்து பாட சொல்லிவிட்டு பரிசு கொடுப்பார்கள், இதெல்லாம் ஓரளவுக்கு சங்கப்ப்பாடல்களை படிக்கும் போது யூகித்தது தான்,நாம என்ன நேராவா போய்ப்பார்த்தோம்.
முல்லைக்கு தேர்க்கொடுத்தான் பாரி என்பது , நிஜமான முல்லை மலர் கொடியா இருக்காது என நினைக்கிறேன், முல்லை என்ற பெயர்க்கொண்ட பெண்ணாக கூட இருக்கலாம், பொண்ணு அழகா இருக்குனு தேர் கொடுத்து "கரெக்ட்" செய்திருக்கலாம் :-))
அதே போல பேகனும் 16 வயதினிலே மயிலு போல ஒரு "இளமயிலுக்கு" குளிருக்கு இதமா இருக்கட்டுமேனு போர்வைப்போர்த்தி ஹீரோயிசம் செய்திருப்பாரு போல பேகன், வீட்டுல பொண்டாட்டி எங்கேயா புது சால்வை காணோம், எங்கப்பா வாங்கிக்கொடுத்ததுனு கேட்டிருக்கலாம், சமாளிக்க மயிலு ,குளிருனு கதை கூட சொல்லி இருக்கலாம் யாரு கண்டா :-))
பாரதியாரு கூட இதே போல தானம் பண்னியிருக்காரு, அவரோட முன்டாசு 16 முழம் பட்டு வேட்டியாகும் அக்காலத்தில் அதன் விலை ரொம்ப அதிகமாம், ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டுக்கு சவாரி சென்றுள்ளார், கடைசியில பையில கைய விட்டுப்பார்த்தா காசு இல்லையாம், அப்போலாம் ஓரு அணா அளவுல தான் ரிக்ஷா கூலி,உடனே முண்டாசாக கட்டியிருந்த பட்டுவெட்டியை உருவி கொடுத்துட்டு வச்சுக்கோனு சொல்லிட்டு வீட்டுக்கு போனால் ,ஓரணா ரிக்ஷாக்கூலிக்கு 2 ரூபா (அல்லது விலைஉயர்ந்த)பட்டுவேட்டியவா கொடுக்கிறது,கேட்டிருந்தால் நான் ஓரணா கொடுத்திருப்பேனே என அவர் மனைவி செம பாட்டுக்கொடுத்தாங்களாம் :-))
இதையே சிலப்பேர் ஏழை ரிக்ஷா தொழிலாளியின் வேட்டி அழுக்கா இருப்பதை பார்த்து பட்டு வேட்டி தானமா கொடுத்தார்னும் சொல்றதுண்டு.
@வவ்வால்
கரக்டா மேட்டர புடிச்சிட்டீங்க ..
//முல்லைக்கு தேர்க்கொடுத்தான் பாரி என்பது , நிஜமான முல்லை மலர் கொடியா இருக்காது என நினைக்கிறேன்//
அப்படியும் இருக்கலாம் , இப்படியும் இருக்கலாம் டூப்ளிகட் சரக்க அடிச்சிட்டு குப்புன்னு போதையில் வண்டிய எங்க பார்க் பண்ணினோம் என்கிறது மறந்திருப்பாரு . இந்த குடிகாரனுக்கு வாக்கபட்டு என் வாழ்கை வீணாபோச்சே என்று மிசஸ் பாரி ஒப்பாரி வைக்கும் என்ற பயத்தில் முல்லைக்கு தேர் குடுத்தேன் என்று கப்சா விட்டிருப்பாரு ...
//உணவிற்கு வழியில்லாத போது இருக்கும் சிறு பழத்தை இரவல் கேட்பவனுக்கு கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடக்கிறானே, அவன் தான் வள்ளல்...// good one இரவின் புன்னகை.
//உணவிற்கு வழியில்லாத போது இருக்கும் சிறு பழத்தை இரவல் கேட்பவனுக்கு கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடக்கிறானே, அவன் தான் வள்ளல்...// good one இரவின் புன்னகை.
கொடுப்பது என்றால் சிறிதேனும் நமக்கு வலிக்கணும். அரசனுக்கு எப்படி அள்ளிகோடுத்தாலும் வலிக்காது...அப்புறம் எங்கே இருந்து இந்த வள்ளல் concept??
ஜெயலலிதாவும் ஒரு வள்ளலே...:) ஊரான் பணத்த நமக்கு புடிச்சவங்களுக்கு கொடுகிறது...:)
Ravi Paraman
புதிய தகவல்கள் , தொடருட்டும் உங்கள் பணி
வவ்வால், அடிக்குறிப்பு 2 உங்கள் பதிவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியது தான் :)
new information thanks for sharing
முதல், இடை, கடை ஏழு வள்ளல்கள் பற்றி தேடல் பாராட்டத்தக்கது
Please. English
Post a Comment