பொங்கல் படங்களின் ரிசல்ட்
சிறுத்தையும், ஆடுகளமும் இன்றே பொங்கல் ஆடுகளத்தில் நுழைந்துவிட்ட நிலையில் நாளை கலைஞரின் இளைஞன் வர இருக்கிறது. (காவலன் வந்தால் வரலாம்). இந்நிலையில் கடந்த ஒருவாரமாக நமது வலைப்பூவில் கடந்த ஒருவாரமாக நடைபெற்ற “பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...?” கருத்துக்கணிப்பில் மொத்தம் 234 வாக்குகள் (தொகுதி நிலவரமோ...?) பதிவாகி இருக்கின்றன. அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள்...
ஆடுகளம் 106 (45%)
காவலன் 78 (33%)
சிறுத்தை 50 (21%)
யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கலை. சில வாசகர்கள் ஏன் இளைஞன் படத்தை கருத்துக்கணிப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்காக வருந்துகிறேன்.
ஆரண்ய காண்டமும் நடுநிசி நாய்களும்
இந்தப் பொங்கலுக்கு வந்ததெல்லாம் முழுநீள கமர்ஷியல் படங்களாக வந்திருக்கிறது. எனக்கென்னவோ எந்தப் படத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. நம்ம பதிவர்களோட விமர்சனங்களை படித்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். தெலுங்கில் சுருதி நடித்த... அது என்னவோ ஒரு படம் பேர் விளங்கலை விட்டுத் தொலைங்க (பேரா முக்கியம்) அந்தப் படம் வந்திருக்கிறது. இருந்தாலும் பக்கத்தில் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் ஆகாததால் அதையும் பார்க்க முடியவில்லை. அடுத்து என்ன படம் பார்க்கலாம் என்று சிந்தித்தால் ஆரண்ய காண்டம் படமும் நடுநிசி நாய்களும் கூடிய விரைவில் வெளிவர இருக்கும் எனது எதிர்பார்ப்பு படங்கள். ம்ம்ம்... காத்திருப்போம்.
செல்வராகவன் – மீண்டும் ஒரு காதல் கதை
ரஜினியின் அடுத்த படம் எப்போது என்று கேட்பது போல திரையுலகினரை பொறுத்தவரையில் அடுத்த மனைவி யார் என்று கேட்கலாம் போல. சரி விட்டுத்தள்ளுங்கள், அது அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். சோனியா அகர்வாலுடன் விவாகரத்து பெற்ற நிலையில் திரையுலகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு பெண்ணை விரும்புவதாக செல்வா தனது சமீப பேட்டிகளில் கூறி வந்தார். இப்போது அவரது காதலி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவரது பெயர் கீதாஞ்சலி. லண்டனில் திரைப்பட தயாரிப்பு பற்றி படித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் திருமணம் என்று சொல்லப்படுகிறது. பிரபுதேவா – நயன் திருமணம் கூட ஜூன் மாதம் தானே...?
காவலன் பொங்கல் பொங்குமா...?
காவலன் படம் பற்றிய செய்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்துக் கொண்டிருக்கிறது. பதினைந்து கோடி பணம் கொடுத்தால் ரிலீஸ் செய்யலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கடைசி செய்தி அறிந்தேன். இந்நிலையில் படம் நாளைக்கு வெளிவரலாம், வராமலும் போகலாம் என்பதே இப்போதைய நிலவரம். விஜயகாந்த் ஒருபக்கம் விஜயிடம் வலிய வந்து நான் உதவட்டுமா என்று கேட்டாராம். ஏற்கனவே இருக்குற அரசியல் சிக்கல் போதாதுன்னு இது வேறயா. அதெல்லாம் வேண்டாம்ங்கன்னு மறுத்துட்டாராம் டாக்டர்.
மங்காத்தா – புதிய தகவல்கள்
தகவல் 1: மங்காத்தாவின் கதை கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றிய கதையாம். கேட்கவே புதுமையாக இருக்குல்ல.
தகவல் 2: மங்காத்தா படத்தில் “அங்காடித் தெரு” அஞ்சலியும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார். சிறிய வேடம் என்றாலும் தல படம் என்று ஒப்புக்கொண்டாராம்.
|
|



