அன்புள்ள வலைப்பூவிற்கு,
வீராணம் குழாய் மாதிரி ஆரம்பிக்கும் ஒரு துளைக்குள் பதுங்கியிருந்த கடாஃபி கடந்த வாரம் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். அவர் நல்லவரா கெட்டவரான்னுற விவாதம் இப்ப வேணாம். ஆனால் அவரை இப்படி சித்தரவதை செய்தி சாகடித்திருப்பதை பார்க்கும்போது கலங்குகிறது. சில நாட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கடாஃபியின் உடலை ஒரு பாலைவனத்தில் ரகசியமாக புதைத்திருக்கிறார்களாம். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்.
ஒலக லெவல் ஜொள்ளு:
![]() |
| ப்ளேபாய் அழகி கெல்லி ப்ரூக் |
ஜிம்பாப்வே நாட்டில் ஒருவர் செக்ஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டர் என்னன்னா அவர் மேற்படி சமாச்சாரத்தை செய்தது ஒரு கழுதையுடன். சனிக்கிழமை சாயுங்காலம் சரக்கடித்தேன். இருபத்தைந்து டாலர்களை வேசியிடம் கொடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து பார்த்தால் கழுதையுடன் படுத்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த கழுதையை நான் கன்னாபின்னாவென்று காதலிக்கிறேன். ஒருவேளை நானும் கழுதையா என்று சந்தேகமாக இருக்கிறது. இப்படியெல்லாம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மனுஷன்.
மலைக்க வைத்த புகைப்படம்:
![]() |
| 453 Piercings...! |
வாராவாரம் அரசகுடும்பத்து மேட்டர் ஒன்னு சிக்கிடுது. அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலியாகும்ன்னு காத்திருந்த கதையா இளவரசர் ஹாரி புதுசா ஒரு பொண்ணை லவ்வ ஆரம்பிச்சிருக்காராம். பொண்ணு பேரு ஜெஸ்ஸி. பாருக்கு சரக்கடிக்க போன இளவரசர் அங்கே ஊற்றிக்கொடுக்கும் பணியாளான ஜெஸ்ஸியை பார்த்ததும் மயங்கிவிட்டார். (ஓ இதான் அழகுல மயங்குறதா) அடுத்த ஒரு வாரத்தில் ஹோட்டல் அறைக்கதவுகள் இரண்டு முறை மூடித்திறக்க இவள்தான் அவளென்று முடிவு செய்துவிட்டாராம் இளவரசர். இதான் சாக்குன்னு ஜெஸ்ஸியும் அண்ணி கேட்’டும் ஒரே சாயலில் இருப்பதாக எழுதி சில மேலைநாட்டு பத்திரிகைகள் குளிர் காய்கின்றன.
ஜப்பானிய பாடல்:
இவ்வளவு அழகான பாடலை இன்னும் தமிழில் சுடாதது ஆச்சர்யம். பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடிப் படித்தேன். காதல் தோல்வியடைந்த பெண் ஃபீல் பண்ணி பாடுகிறாள். வரிகள் இப்படி போகிறது – “உன்னைப் பளாரென்று அறையனும் போல இருக்கு... ஆனா உன்னை நேர்ல பார்த்தா அழுதுடுவேன்...”
குவாட்டர் கட்டிங் படத்தில் டூ-வீலர்களை தேடித்தேடி எரிக்கும் கேரக்டர் ஒன்றை காட்டுவார்கள். அதுபோல ஜெர்மனில் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களில் 67 சொகுசு கார்களை ஜஸ்ட் லைக் தட் எரித்து தள்ளியிருக்கிறார். கைது செய்யப்பட இளைஞர் வேலையில்லாத விரக்தியில் காரில் செல்பவர்களைப் பார்த்து வெறியேறி இப்படி செய்ய ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார். இப்போது எனக்கு குவாட்டர் கட்டிங் இல்லை, கற்றது தமிழ் படம் நினைவுக்கு வருகிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|














