9 March 2010

மேல்மருவத்தூர் அபத்தங்கள்

வணக்கம் மக்களே...

செவ்வாடை தொண்டர்கள் சிலர் கட்டாயம் இந்த பதிவை படித்தே தீர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் இந்த பதிவை தேர்ந்தெடுத்தேன். இந்த சமூகத்தின் மீது நான் கொண்ட கோபத்தின் காரணமாக சில இடங்களில் முறையற்ற வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. தவறாக இருந்தால் மன்னித்தருளுங்கள்.
தலைப்பு கொண்ட கருத்துக்கு செல்வதற்கு முன்னால் சில உப கருத்துக்கள்...

தலையிலேயே குட்டுகிறார்கள்...
சரி நம்ம தல தானே என்று அவ்வப்போது நான் அஜித்தைப் பற்றி கிண்டலாகப் பேசி விமர்சிப்பது உண்டு. அவையனைத்தும் தல மீது நான் கொண்ட பாசத்திலும் உரிமையிலும் மட்டுமே. ஆனால் அஜித்தை மற்றவர்கள் தூற்றும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜாக்குவார் தங்கம், டங்குவார் தகரம் என்று ஆளாளுக்கு தலையை கலாயத்ததில் நான் ரொம்பவே அப்செட். அதிலும் "எனது பக்கங்கள்" என்ற பெயர்கொண்ட அந்த வலைப்பூவில் அஜித் மீது தொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. 
சம்பந்தப்பட்ட அந்த இடுகைகளுக்கான இணைப்புகள்:

குட்டியாய் ஒரு குட்டி விமர்சனம்
திரைக்கதை என்னவோ சினிமாத்தனமும் மசாலாத்தனமும் நிரம்பி வழிந்தாலும் கதை கொண்ட கரு மட்டும் என் மனதை கடுமையாக கவர்ந்துவிட்டது. ஒருதலைக்காதலின் மகத்துவத்தை படம் கவிதையாய் வாசித்தது. தனுஷின் நடிப்பில் யதார்த்தம் ரொம்ப குறைவு. ஆனாலும் தனுஷை மிகவும் ரசித்தேன். தனுஷின் மேனரிசங்களும் மவுத் ஆர்கன் வாசிக்கும் விதமும் நண்பன் பாண்டீஸ்வரனை நினைவுபடுத்தியது. தனுஷ் - ஆர்த்தி நட்பு புதுசாக இருந்தது. "குட்டிக்கு வார்னிங்" காட்சி சொன்ன கருத்துகள் அனைத்தும் அற்புதம். "feel my love" என்ற வார்த்தையே ஒரு புதுக்கவிதை. நேரம் கிடைத்தால் நீங்களும் பார்த்து feel பண்ணுங்க.

ஆட்டோ சங்கரின் அத்தியாயம்
சில வாரங்களுக்கு முன்பு தபூ சங்கரை புரட்டிய நான் இந்த வாரம் ஆட்டோ சங்கரை புரட்டினேன். படித்த பத்து பக்கங்களிலேயே தன் மொத்த கோபத்தையும் சமூகத்தின் மீது கொட்டியிருந்தான். உண்மைதான். "பிறக்கும்போது யாருமே நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பிறப்பதில்லை. எல்லோருமே குழந்தைகளாகத்தான் பிறக்கின்றனர்". ஆட்டோ சங்கருக்கு நல்ல பெற்றோர் கிடைத்திருந்தால் அவன் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டான். புத்தகத்தை முழுமையாய் முடித்தபின் இதுபற்றி தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.

வேதியியலா...? வேசியியலா...?
நீண்ட நாட்களாகவே தியான சாமியார்கள் பற்றி இருந்துவந்த மனக்குழப்பம் இப்போது தீர்ந்திருக்கிறது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்", "கதவைத் திற காற்று வரட்டும், மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்", அத்தனைக்கும் ஆசைப்படு", "ரஞ்சிதா ***க்கும் ஆசைப்படு" என்று மையமாக எதையாவது கூறி தியான வியாபாரம் செய்து வந்த கும்பலின் குட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. எப்படியோ என் தமிழ் மக்களுக்கு இதன் மூலமாக கொஞ்சமாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் "நித்தி சரியில்லை ஜக்கியிடம் போவோம்" என்று சென்றால் பிள்ளைவரம் வாங்கிக்கொண்டு திரும்பவேண்டியதுதான்.
இதுவரை தரிசனம் காணாத பக்தர்களுக்காக:

எப்படியோ தேடிக்கண்டுபிடித்து நித்யானந்தர் - ரஞ்சிதா உல்லாச லீலைகளை பார்த்து பாவ விமோட்சனம் அடைந்துவிட்டேன்.  காட்சிகளை விட நக்கீரனின் "நகிர்தனா... திரனனா..." பேக்ரவுண்ட் பாடல் மனதை மிகவும் கவர்ந்தது. என்னைப்போல நீங்களும் கவரப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை சொடுக்கி அந்த பாடலை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

நடுத்தர வயதினர் சிலர் பர்மா பஜாரில் திருட்டு முழியோடு சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. வீடியோவில் நித்யா துள்ளிக்குதித்து எழுந்தருளிய காட்சியை பார்த்தீர்களா...? ச்சே... சான்சே இல்லை... நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். பேசாமல் கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நித்தியானந்தரையும் ரஞ்சிதாவையும் வைத்து எடுத்திருக்கலாம்.  நித்தியாவது டைட்டிலில் "யங் சூப்பர் ஸ்டார்" என்று போட வேண்டுமென அடம் பிடித்திருக்க மாட்டார். நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் இடையில் இருப்பது வேதியியலா வேசியியலா என்று புரியவில்லை.

யார் அடுத்த நித்தியானந்தர்...?
பிரேமானந்தா, சதுர்வேதி, ஜெயந்திரர், தேவநாதன், நித்தியானந்தர் இவர்களது வரிசையில் அடுத்து வரப்போவது யார்...? (புட்டபர்த்தி சாய் பாபாவை ஏற்கனவே ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கி விட்டாலும் மக்கள் இன்னமும் திருந்திய பாடில்லை). ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சிவசங்கர் பாபா, அமிர்தானந்தமயி, என்று ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம பேவரிட் கங்காரு... ஸாரி பங்காரு அடிகளார் பற்றி பேசுவோம்.

இப்பொழுதே பங்காருவைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அம்மாவுக்கு இப்பொழுதே வயது எழுபதை கடந்துவிட்டது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் இறைவனடி சேர்ந்துவிடுவார். அதுமட்டும் நடந்துவிட்டால் இப்போது சாமியாராக திரிபவரை சாமியாக்கி விடுவார்கள். அந்தக் கொடுமை நடப்பதற்குள் விழித்துக்கொள்வோம்.

ஏற்கனவே ஜெயலலிதாவும் அமிர்தானந்தமயியும் அம்மா என்ற வார்த்தைக்கு பெருமை தேடித்தந்தது போதாதென்று பங்காருவும் தன் பங்குக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது 72வது பிறந்தநாளில் 100 கோடியை நலத்திட்டங்களுக்காக மட்டுமே செலவிட்டிருக்கிறார். (எல்லாம் நம்ம வீட்டு பணம்தான்). நலத்திட்டதிற்கே இவ்வளவு தொகை என்றால் அடிகளாரின் சொத்துமதிப்பு எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். (ஐயோ எண்ண முடியாதுங்க... நினைத்து பாருங்கள்) முன்பொரு காலத்தில் அருள்வாக்கு சொல்வதில் ஆரம்பித்தவர் இன்று ஒரு ஊரையே சொந்தமாக்கி இருக்கிறார்.

அம்மா பங்காருவின் காலைக் கழுவி விடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவரது காலைக் கழுவி விடுவதற்கு 25.000, 30,000 என்று நன்கொடை கட்ட வேண்டுமாம். காலைக் கழுவுவதற்கு ஐம்பதாயிரம் வாங்கினால் குண்டியைக் கழுவி விட எவ்வளவு வாங்குவார் என்று தெரியவில்லை. 
என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்

செவ்வாடை தொண்டர்கள் யாராவது வாதாட விரும்பினால் வாருங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

43 comments:

tsekar said...

செவ்வாடை தொண்டர்கள் யாராவது வாதாட/அடி வாங்க - விரும்பினால் வாருங்கள்

-Rouse

ts said...

செவ்வாடை தொண்டர்கள் யாராவது வாதாட /அடி வாங்க -விரும்பினால் வாருங்கள்.

Rouse

Anonymous said...

நல்ல பதிவு. உங்கள் பணி தொடரட்டும் - மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

Anonymous said...

சிவசங்கர் பாபாவையும் அம்மா பகவானையும் விட்டுடிங்களே

Anonymous said...

ஆமா... ஜெயெந்திர சரஸ்வதியோட அஸிஸ்டெண்டுகளை பத்தியெல்லாம் நியூஸே வரதில்லை, தல உள்ள போனதும் அலர்ட் ஆயிடாங்களோ?

Anonymous said...

"சிவசங்கர் பாபாவையும் அம்மா பகவானையும் விட்டுடிங்களே" இவங்க படத்தையும் சேத்துக்கங்க ஸார், பாவம், நம்மளை போட்டில சேத்துக்களையேன்னு ஏங்கிட போறாங்க

Anonymous said...

CLIK AND READ
சுவாமிகளும் தேவடியாள்களும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்//
இது சுப்பர்!
பணி தொடரட்டும்.

சுதர்ஷன் said...

விண்ணைத்தாண்டி வருவா போஸ்டர் நல்லா இருக்கோன்னோ

Anonymous said...

//சிவசங்கர் பாபாவையும் அம்மா பகவானையும் விட்டுடிங்களே//

அதெல்லாம் காமடி பீஸுங்க

Anonymous said...

“தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இருக்கும் கோயில் ஒன்றின் அடையாளம்தான் இந்த சக்திமிகு சாமியார். மாதத்தில் முப்பது நாளும் உற்சாக பானத்திலேயே மிதந்துக்கொண்டிருப்பாராம் இவர். ஆனால் காலில் விழுந்து ஆசிர் வாங்கும் பக்தர்களுக்கு ‘மருந்து’க்கு’கூட வாடை தெரியாதாம். சாமியார் அடிக்கும் சரக்கின் தரம் அப்படி. வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட காஸ்ட்லி சரக்கில்தான் தாகம் தீர்ப்பாராம் சாமி.

சரக்கு பழக்கம் அதிகமானதால் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்ட சாமி, சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டாராம். போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான மருத்து சிகிச்சையும், போதை மறுவாழ்விற்கான கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டதாம். விஷயம் வெளியே கசியாமல் இருக்க, மருத்துவமனையின் நான்காவது தளம் முழுவதுமே சாமியாருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டதாம்”

வேறு யார் நம்ம பங்காருதான்

Anonymous said...

super post ......avan sariyana fraud ...avana pathi innum niraya yeluthunga...

vim said...

என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்

supper you can sub divided these two by
போலீசிக்கும், சன், நக்கீரன் குரூப்பிர்ற்கு கப்பம் கட்டாதவர்
1. போலீசில் மாட்டிய சாமியார்


போலீசிக்கும், சன், நக்கீரன் குரூப்பிர்ற்கு கப்பம் கட்டியவர்
2. போலீசில் மாட்டாத சாமியார்
போலீசிக்கும், சன், நக்கீரன் குரூப்பிர்ற்கு கப்பம் கட்டியவர்

-
BY Ramesh

செந்தில் குமார் said...

//என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்//

நல்லா இருக்கு

dr.sivan said...

Dear Sir,

How come you don't touch (are you afraid or what?) Kanchi Periyavva and Chinnavaa IN SPITE of Ms. Anuradha Ramanan's open accusations of indecent sexual behavior and approaches. THEY are no different than Swami Nithyananda... All are in the same boat. The why you are NOT writing about them???

Leave the murder accusations as that is sub-judice. What about their sexual behavior and allegations??? That too accused by a noble lady, a mother, a devotee, a nice human being, and above all a honorable citizen of India: That is by none other than Ms. Anuradha Ramaman.

What prevents you from including in the list of NEXT the Periyavva and Chinnavaa?? Why Bangaru? Is it because he is from a lower caste? What paasam prevents you from writing about Periyavaa and Chinnavaa??

Be a man or woman and include Periyavaa and chinnavaa in the NEXT GO TO JAIL list..

Thanks
shiv

Philosophy Prabhakaran said...

@shiv

சிலபல comments வந்திருந்தாலும் திரு.shiv எழுதியிருந்த பின்னூட்டத்திற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை. இல்லையென்றால் அது ஒரு வரலாற்றுப்பிழையாகி விடும்.

முதலாவதாக நீங்கள் என்னை முற்றிலும் தவறாக புரிந்துக்கொண்டீர்கள். நான் ஒரு தீவிர பெரியார்த்தொண்டன். என்னை நீங்கள் இவ்வளவு மட்டமாக நினைத்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பெரியவாளையும் சின்னவாளையும் பற்றி பேசவில்லை. ஏனென்றால் நான் எடுத்த தலைப்பு அடுத்தது யார் என்று தான். அதனால் ஏற்கனவே மாட்டியவர்களை பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.

/*பிரேமானந்தா, சதுர்வேதி, ஜெயந்திரர், தேவநாதன், நித்தியானந்தர் இவர்களது வரிசையில் அடுத்து வரப்போவது யார்...?*/
இந்த சொற்றொடரில் இருந்து நீங்கள் அதனினை புரிந்துக்கொண்டிருக்க வேண்டாமா...?

/*(are you afraid...)*/
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை.

ஏற்கனவே "நானும் அவரும்" என்ற புத்தகத்தில் அவாள்களின் ஆட்டத்தை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் தற்சமயம் அந்த புத்தகத்தினை நண்பருக்கு இரவல் கொடுத்திருக்கிறேன். அது திரும்பி வந்ததும் ஒரு கிழி கிழித்து (புத்தகத்தை அல்ல) உங்கள் ஆதங்கத்தை தீர்த்து விடுகிறேன்.

எப்படியோ என்னுடைய கருத்துக்கும் மரியாதை கொடுத்து என் வலைப்பதிவை படித்து பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

முஹம்மது பிஸ்மில்லா said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். வாழ்த்துக்கள் நல்ல அற்புதமான பதிவு. நண்பர் ஷிவு சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் தன் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆதலால் அவர் மனதில் உள்ள ஆதங்கத்தை போக்க நீங்கள் அடுத்த பதிவுலே அந்த இருவரின் முக திரைகளை கிழிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மேலும் மக்கள் தான் முதலில் திருந்த வேண்டும். இதே போல் எங்கள் சமயத்தில் நிறைய பேர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரின் முகத்திரையையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிழித்துக்கொணடு வருகிறது. இறைவன் நாடினால் மிக விரைவிலே உலகில் உள்ள அனைத்து போலிகளையும் வேரருப்பான்.

மேலும் மக்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுக்கோள் என்னவென்றால் எங்கும் நி்றைந்துள்ள இறைவனை ஏன் இந்த மாதிரி போலிகளிடம் சென்று தேடுகிறீர்கள். பொறுமையாக சிந்தியுங்கள் உண்மை உங்களுக்கு நனறாக புரியும். இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

super dhamaka

பயமறியான் said...

எனக்கு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த பிடிக்கவில்லை. ஆனால் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமல் இவர்களை திட்ட பிடிக்கவில்லை.
உடலோடு உயிரை போல இந்த ஊளைச் சதையாக ஒட்டிக் கொண்டு இருக்கும் இந்த மதத்தினையும் சாதியையும் எப்போது அறுத்தெறிய போகிறார்கள் என்று தெரிய வில்லை. அழிக்க அழிக்க புதிதாய் அவதாரம் எடுத்துக்கொண்டு இருக்கும் இந்த அவதாரமாக அரிதாரம் பூசும் சாமியார்கள் இந்த அல்லக்கைகளை எப்போதும் என் இன மக்கள் அடையாளம் கானபோகிறர்களோ.

மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும், அதை யார் செய்தாலும் முதல் ஆதரவு என்றும் என்னுடதாய் இருக்கும். காசை கடவுளிடமும் பூசாரி எனும் கயவர்களிடம் ஒப்படைக்கும் என் இனம் இப்போதாவது விழித்து கொள்ள வேண்டும்.

பணி சிறக்க வாழ்த்துக்கள்

--
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**

http://payamaiyaan.webs.com
http://payamariyaan.blogspot.com
http://pilaigal.blogspot.com

Hope said...

Well Said. Really very sorry for brothers and Sisters in Tamil Nadu, India. You know I'm living in Moscow. F*****g these People(Poli Samiya) coming to Moscow and spoiling these people too. Don't know where the world is going. Save the people and Save the wolrd

Sivamjothi said...

I feel nothing wrong for saints to have assets and money. At least 90% money used for good cause.

But if it goes to politicians(now its family business) 90% money used for useless stuffs.

Bangaru adigal has built colleges,hospital temple which are good for people.

Saints never steal money but many corrupted policiticans stealing money of others.

politicians steal money from fund allocated to
various projects.

Now a days govt hospitals bribe is too much...


NO ONE IS READY TO PROTEST AGAINST THE REAL PROBLEM IN SOCIETY.. :)

Anonymous said...

g

Tamilnesan said...

good views

சைவகொத்துப்பரோட்டா said...

பின்னி எடுத்து இருக்கீங்க, கலக்கல் நண்பா, தொடருங்கள், வாழ்த்துக்கள்.

dr.sivan said...

My sincere apologies for writing in Tamizh. While I can read, write, and speak well in Tamizh, I find it extremely hard to 'TYPE' EVEN one sentence in Tamizh.

Thanks for replying to my post.

I have some questions that I prefer you to answer in your forum. Before asking those I would like to mention that I don't believe in god, caste, creed, nationality, gender bias, etc. Since I don't believe in god, I am NO WAY going to believe any god-man. That is for sure. All are frauds. With that in mind please read my questions.

My questions:

1. How is that in any forum people (mostly non-brahmins) prefer to attack only the non-brahmin god-man. 90% of them duck when it comes to attacking brahmin god-man. Why?

2. Even if they (non-brahmins) attack a brahmin god-man it is only a slap on the wrist. Why? There are some exceptions like Vinavu.

3. Have you seen any brahmin attack a brahmin god-man?

4. How is that people, especially, non-brahmins have taken a soft stand with these brahmin god-man. 99% of donations to them ARE from non-brahmins. Why?

5. Why no brahmin gives donation to Bangaru?

6. How they have excused these two god-man in spite of Ms. Anuradha Ramanan's accusations? Is she lying? Then why NOT they sue her for defamation?

7. When Periyavaa and Chinavaa were arrested Hindu editor and AVM Saravanan gave a petition to the Governor to stop the governments proceedings against these two. This is in spite of murder charges. Why?

8. Similarly, why these nuts did not give a petition to the Governor to stop the proceedings against Nithyananda?

9. Our CM talks against Nithi but he supported Periyavaa and Chinnavaa at that time. Why?

10. All brahmins were against JJ when she arrested these two but when it comes to election they voted ONLY to her? Why?

11. For example, Mylapore brahmins elected Sv. sekar. They elected Sekar for JJ ONLY. When he stood alone in an earlier election Sekar got 700 votes only; yet ALL brahmins voted to JJ. Why?

12. All these papers, particularly "Thina Malam" and Tamilzh magazines have special preference to attack non-brahmin god-man. Why? Why do you want to read those papers and allow them to propogate their ideas?

13. Just because there is no video it DOES NOT mean that Anuradha's accusations are false. VIDEO IS JUST another EVIDENCE. That's all.

14. All are innocent until proven guilty. Are we an expert in saying that video is true. THE COURT HAS TO DECIDE like deciding on Periyavaa and Chinnavaa's murder charges.

15. Why police did not the TV evidence of Anuradha's accusations were taken seriously by the police and pusued a case? They both said that they are Bramachari. So the police should have proceed against them also (for brecah of trust) as they are doing in the case of Nithi for breach of trust. Why a different yard stick to Nithi, Bangaru, etc.

16. Why not talk about Sri Sri and Sri to the power of 100? What prevents people form talking?

I can go on and on and on...Give the benefit of doubt to all. Let our non-brahmin god-man also earn and milk the people as brahmin god-man milks. If there are no non-brahmin god man we will be flocking the brahmin god-man. Our people are fools when it comes to god-man.

If Kanchi Madam constructs hospital it is charity. But if a non-brahmin swamiji does the same then the newspapers (so as many readers) write that it is PEOPLE money. This is hypocrisy at best.

Finally, since our people cannot change, and poor people cannot afford to pay in thousands to these fake god-man, please permit our local bottle-samiyar, beedi-samiyar, surttu-samiyar, saraya-samiyar, sadai-samiyar, azukku-samiyar, ammana-samiyar, etc...

PLEASE do not criticize them. Our people are NOT going to change.

And BTW, cheating is NOT limited to only one caste...all are equal in this world...

Ramarajan said...

கோயிலுக்கு போனா சாமிய கும்மிடுங்கடான்னா.
இவன் காலை எதுக்கு கழுவனும்.
சாமி மட்டும்தான் கும்பிடனும்.
ஓம் ஆதிபராசக்தி.

Ramarajan said...

கோயிலுக்கு போனா சாமிய கும்மிடுங்கடான்னா.

இவன் காலை எதுக்கு கழுவனும்.
சாமி மட்டும்தான் கும்பிடனும்.

ஓம் ஆதிபராசக்தி.

priyamudanprabu said...

சாமியார் மேட்டர் சூப்பர்

Philosophy Prabhakaran said...

@தமிழ் மைந்தன்

நீங்கள் எழுதிய தகவல் என் பதிவுக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக அமைந்தது... மிக்க நன்றி...

Philosophy Prabhakaran said...

@ balu

நீங்கள் சொல்வதும் உண்மைதான்... ஆனால் என் தமிழ் மக்கள் பணத்தை மட்டும் இவர்களிடம் வாரி இறைத்து ஏமாந்தால் தேவலையே... மானத்தை அல்லவா இழந்து நிற்கிறார்கள்...

Unknown said...

உண்மைதான்

pavi said...

Interesting post continue..but try to reduce bad words...

Sathisz said...

Hi Shiva,

I am totally against ur accuse of Brahmins/Non-Brahmin concepts. The article clearly speaks about who will be the next in line to be caught. but i dont understand why you choose to speak of these concepts. I am a brahmin, who believe in god and not god man. I never been to any god man till now. I have non brahmin friends who visit godmen frequently even after the nithyananda episode. but we never speak about brahmin and non brahmin. I studied in muslim institutions and have great respect for them and other religions as well. I believe in all are indians and then we belong to the caste. If u support anuradha ramanan,well that is up to you and u please need not spoil the forum by speaking of casteism. I also sincerely request prabhakaran to avoid such kind of comments which is caste based and uphold periyar principles.

Anonymous said...

இவனுங்க காலை கழுவ (பாத பூஜை) நாம பணம் கொடுக்கணுமாம். இல்லைனா கழுவ மாட்டான்க போலிருக்கு. நல்ல வேளை காலோடு விட்டான்களே. வேற எதையாவது சொல்லாம. அதுக்கும் நம்ம ஆளுங்க ரெடியாய் இருப்பான்க

Anonymous said...

To one Mr. Shiva in this comment section is full of hatred and brings in the old caste system and conveniently blame it on Bhramins!! Is he aware that so called Christian missionaries in india who run orphanages are involved in child sex racket and illegal adoption centre ??

The reality is in Tamil Nadu is, it is not Bhramins who are stopping from progressing, but the elected govt! Who long will he carry hate for Bhramins, uh ?? Is he aware that in 1969 so called Dravida porachi raped many Bharmain women and DK men married bhramin women with out the consent of these girls?? No one is willing to talk about it, perhaps none is aware of it!

Also one has to think here that the middle men are benefiting from this division... it is easier for them to convert the Hindus in to christians ... the rate of conversion in TN is higher when compared to other states. Now, Tell me from when did christianity become a part of dravidian culture ?? Honestly people like Shiva leaves in an illusion world and is full of hate for others!! He needs to change, but sure he wont!

Anonymous said...

உலக உத்தமர் பிரபாகரன் அவர்களே
தங்களது இந்த பதிவு உண்மைகளுக்கு
நடுவில் உங்கள் உணர்ச்சிவசத்தால்
சில நல்ல மனிதர்களையும் கிழித்து
இருக்கிறது. கொஞ்சம் நிதானம் தேவை.நாட்டையே பொரட்டி , புரட்சி பண்ணி சமுதாயத்திற்கு புது வெளிச்சம் பாய்சுட்டீங்க போங்க !
பங்காரு பத்தி பேசுனீங்க, நித்யானத்தாவை பத்தி
பேசுனீங்க சரி ! தேவை இல்லாம எல்லா குருமார்களையும்
இழுக்குறீங்க ! சாமியார் என்கிற வார்த்தையை விட குரு என்பதுதான் பொருத்தம். இது ஒரு சிம்பிள் லாஜிக். எந்த ஒரு விசயமும் ஒரு குரு இருந்தால் நம் படிப்பினை எளிதாக ஆழமாக இருக்கும்.
ஒரு தனி ஆளு Phd பண்ணுவதற்கு தனியா அவருக்கென்று ஒரு Guide இருப்பாங்க. அது போலதான்
யோகாவிற்கும் குரு இருப்பதில் தவறில்லை.

நம் நாட்டின் யோக பாரம்பரியம்
மிகவும் தொன்மையானது - தங்கள்
சொந்த அனுபவத்தில் பதஞ்சலி போன்ற மகத்தான குருமார்கள் உருவாக்கிய உடலுக்கும் மனதுக்கும் பயன் தரக் கூடிய யோக முறைகள் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் யோகாவிற்கு ஒரு குரு இருப்பது தவறில்லை !

ஒருத்தன் தப்பு பண்ணா அதுக்காக எல்லாரும் அப்படிதான் இருப்பாங்களா ? என்னடா ஒங்க லாஜிக்.உங்க நண்பன் ஒரு அயோக்கியன் என்றால்
உங்க லாஜிக் படி நீங்களும் அயோக்கியன் தானே !

பகுத்தறிவு என்றால் உடனே கடவுள் இல்லை தான் டா எல்லா பயல்களும் ஆரம்பிப்பீங்க !உடனே பாவம் பெரியாரையும் இழுத்துகுவிங்க !
அவர் அப்ப அந்த ஆயுதத்த எடுத்ததுல ஒரு நியாயம் இருந்தது. அவர் விடுதலை பத்திரிகை ஆரம்பிக்கும்
போது அவர் கடவுள் மறுப்பாளர் இல்லை. பிறகு சூழ்நிலை தேவை கருதி அதன் வேர்களை
ஆராய்ந்து பேசினார். அவர் சாடிய அதே புராணங்களை வாய் சமத்து இருந்தா வேற மாதிரி , எல்லோரும்
ஏத்துகிற மாதிரி பேச முடியும். கடவுள்/கடவுள் தன்மை னு ஒண்ணு
இருக்குன்னு எந்த மதமும் நிரூபிக்கவும் இல்லை.இல்லைன்னு அறிவியலும் நிரூபிக்கவும் இல்லை.
தெரியாது என்பதுதான் கடவுள் பற்றிய கேள்விக்கு இன்றைய விடை !

கொஞ்சம் பாத்து எழுதுங்க !
ரைமிங்கு வருதுன்னு உங்க அப்பன் ஆத்தாள் பேரை எவனாவது வேற எதாவது லிஸ்ட ல எழுதுனா
சும்மா இருப்பீங்களா ?

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... வாங்க அனானி...

// உலக உத்தமர் பிரபாகரன் அவர்களே //

முதல் வரியிலேயே நீ மட்டும் ரொம்ப யோக்கியமா என்றொரு எகத்தாளம் தெரிகிறது... இல்லைங்க நான் யோக்கியன் எல்லாம் கிடையாது... ஆனால் யாரையும் ஏமாற்றிப் பிழைப்பவன் அல்ல... உதாரணத்திற்கு, நித்தி ரஞ்சிதாவோடு ரொமான்ஸ் செய்வது, பங்காரு பாரின் சரக்கடித்து மட்டையாவது எதுவுமே தப்பில்லை... அட கருமாந்திரம் புடிச்சவனுங்க நாங்க இப்படிதான் இருப்போம்ன்னு சொல்லிட்டு பண்ண வேண்டியதுதானே... அதை விட்டுவிட்டு அருள், ஆன்மிகம்ன்னு ஏன் டக்கால்ட்டி விடுறானுங்க....

// பங்காரு பத்தி பேசுனீங்க, நித்யானத்தாவை பத்தி
பேசுனீங்க சரி ! //
// சில நல்ல மனிதர்களையும் //

அப்படின்னா, யார் அந்த சில நல்ல மனிதர்கள்....??? ஜெயேந்திரர்...??? அமிர்தானந்தமயி...??? அல்லது ஜெ...???

// தேவை இல்லாம எல்லா குருமார்களையும்
இழுக்குறீங்க ! சாமியார் என்கிற வார்த்தையை விட குரு என்பதுதான் பொருத்தம். //

சாமியார் = குருமார் என்று நீங்களாக ஒரு ஈக்குவேஷனை வகுத்துக்கொண்டு பக்கம் பக்கமாக பின்னூட்டம் போட்டால் எப்படி...? விட்டால் நான் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதினேன் என்று சொன்னாலும் சொல்வீர்கள்...

// நம் நாட்டின் யோக பாரம்பரியம்
மிகவும் தொன்மையானது - தங்கள்
சொந்த அனுபவத்தில் பதஞ்சலி போன்ற மகத்தான குருமார்கள் உருவாக்கிய உடலுக்கும் மனதுக்கும் பயன் தரக் கூடிய யோக முறைகள் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் யோகாவிற்கு ஒரு குரு இருப்பது தவறில்லை ! //

இது கொஞ்சம் லாஜிக்கான விஷயம்தான்... ஆனால் பாருங்க, அதிகமா கட்டணம் வசூல் பண்ணுற ஸ்கூல்கள் மீது கோபம் வருமே, அது மாதிரி தான் எனக்கும் கோபம் வருது... அதுமட்டுமில்லாமல் இதையெல்லாம் ஏன் இந்துமதம் என்ற போர்வையில் ஒளிந்துக்கொண்டு செய்கிறார்கள்... யோகா வாத்தியார் என்பவர் யோகா வாத்தியராக இருந்தால் மட்டும் எந்தப் பிரச்சனையும் இல்லையே...

// ஒருத்தன் தப்பு பண்ணா அதுக்காக எல்லாரும் அப்படிதான் இருப்பாங்களா ? என்னடா ஒங்க லாஜிக்.உங்க நண்பன் ஒரு அயோக்கியன் என்றால்
உங்க லாஜிக் படி நீங்களும் அயோக்கியன் தானே ! //

தப்பு பண்ணான், தப்பு பண்ணலை என்பதைவிட நான்தான் கடவுள்ன்னு சொல்லிட்டு திரியுற எல்லோருமே அயோக்கியர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

// பகுத்தறிவு என்றால் உடனே கடவுள் இல்லை தான் டா எல்லா பயல்களும் ஆரம்பிப்பீங்க !உடனே பாவம் பெரியாரையும் இழுத்துகுவிங்க ! //

பேஷனுக்காக கடவுள் மறுப்பையும், பெரியாரிசமும் பேசும் அந்தக் கூட்டத்தோடு என்னையும் சேர்த்துவிடாதீர்கள்... தவிர இடுகையின் உள்ளே எங்கேயும் கடவுள் மறுப்பை பற்றி நான் எழுதவில்லையே...

// ரைமிங்கு வருதுன்னு உங்க அப்பன் ஆத்தாள் பேரை எவனாவது வேற எதாவது லிஸ்ட ல எழுதுனா
சும்மா இருப்பீங்களா ? //

ஆரம்பிக்கும்போது நல்லா ஆரம்பிச்சீங்க... போகப்போக ஒருமைக்கு மாறி அப்பன் ஆத்தாள்ன்னு என்னென்னவோ பேசுறீங்க... முதலில் நீங்க நாகரிகத்தை கற்றுக்கொண்டு பின்னூட்டம் போடா வாருங்கள்... உங்களது கடைசி ஒரு வரிக்காக முழு பின்னூட்டத்தையும் மட்டறுக்க விருப்பமில்லை...

Anonymous said...

13 பொண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு,
போருக்குப் போனவன் மனைவைகளையும் பதம்பார்த்துக் கொண்டு, தன்மகனது பொண்டாட்டியையும் தன்பொண்டாட்டி ஆக்கிக் கொண்டு, எல்லாத்திற்கும் சிகரம் வைத்தால் போல 6, ஆறு வயதுச் சிறுமையோடு உடலுறவு வைத்துக் கொண்டு, அல்லா பெயரில் கொலைகளையும் கொள்ளைகளைகளையும், பொம்பளை பொறுக்குதல்களையும் வைத்துக் கொண்டு அதில் அல்லா என்ற சிறு தெய்வத்திற்கும் பங்கு கொடுத்துக் கொண்டு இருந்த முகம்மது பற்றி ஏண்டா உங்கள் விலுப்புவந்த நாவால் பேசமுடியவில்லை?
ஈவேரா போன தேவடியா வீடுகள் எத்தனை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே அதையும் ஏண்டா மறைக்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் தில்லில்லாத் கோழைகள்; சுயநலக் கோழைகள்!

Philosophy Prabhakaran said...

@ Anonymous
வாங்க அனானி அய்யாச்சாமி...

// 13 பொண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு,
போருக்குப் போனவன் மனைவைகளையும் பதம்பார்த்துக் கொண்டு, தன்மகனது பொண்டாட்டியையும் தன்பொண்டாட்டி ஆக்கிக் கொண்டு, எல்லாத்திற்கும் சிகரம் வைத்தால் போல 6, ஆறு வயதுச் சிறுமையோடு உடலுறவு வைத்துக் கொண்டு, அல்லா பெயரில் கொலைகளையும் கொள்ளைகளைகளையும், பொம்பளை பொறுக்குதல்களையும் வைத்துக் கொண்டு அதில் அல்லா என்ற சிறு தெய்வத்திற்கும் பங்கு கொடுத்துக் கொண்டு இருந்த முகம்மது பற்றி ஏண்டா உங்கள் விலுப்புவந்த நாவால் பேசமுடியவில்லை? //

ஆ ஊன்னா இப்படி ஒரு வாதத்தை ஆரம்பிச்சுட வேண்டியது... அதாவது உங்க டவுசர் கிழிஞ்சிருக்குன்னு நான் சொன்னா, ஒன்னு அது கிழியலைன்னு வாதம் பண்ணனும்... அதுக்கு வக்கில்லைன்னா ஊசி நூல் வாங்கி டவுசரை தைக்கணும்... அதுக்கும் வக்கில்லைன்னா கிழிஞ்ச டவுசரை கையால் பொத்திக்கொண்டு போகணும்... இதையெல்லாம் விட்டுவிட்டு என் டவுசர் மட்டுமா கிழிஞ்சிருக்கு அவன் டவுசரும் தானே கிழிஞ்சிருக்குன்னு நொண்டி சாக்கு சொல்கிறீர்கள்...

அப்புறம், இந்த அல்லாவின் பெயரில் குல்லா போட்ட வரலாறு பற்றியெல்லாம் எனக்கு தெரியாது... உங்களுக்கு ரொம்பத் தெரியும் என்றால் ஆதாரங்களோடு இணைப்புகள் கொடுங்கள்... நான் எழுதுகிறேன்... இதை எழுத எனக்கு பயமொன்ரும் இல்லை... நான் உங்களைப்போல அனானியாக வந்து பின்னூட்டம் போடும் கோழைப்பயல் அல்ல...

// ஈவேரா போன தேவடியா வீடுகள் எத்தனை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே அதையும் ஏண்டா மறைக்கிறீர்கள்? //

இதை நான் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை... ஆமாம் போனார் அதற்கென்ன...? அய்யா, என்னுடைய வாதம் என்னவென்றால் இந்த உலகத்துல கெட்டவனை நம்பலாம்... நல்லவனை நம்பலாம்... ஆனால் கெட்டவனாக இருந்துக்கொண்டு நல்லவன் போல வேடம் கட்டுபவர்களை மட்டும் நம்பக்கூடாது... நித்தியானந்தா நான் அப்படித்தான் ரஞ்சிதாவுடன் படுப்பேன் என்று சொல்லியிருந்தால் தவறேதும் இல்லையே... அதைவிட்டுவிட்டு நான் யோக்கியன், முற்றும் துறந்தவன், எனக்கு சுன்னி எழுந்திருக்காது என்றெல்லாம் ஏன் டக்கால்டி விடுகிறார்கள்... என்னுடைய முந்தய பின்னூட்டத்திலும் கூட இதையே தான் கூறினேன்...

// நீங்கள் எல்லாம் தில்லில்லாத் கோழைகள்; சுயநலக் கோழைகள்! //

அடுத்தமுறை உங்கள் சொந்தப்பெயரில் பின்னூட்டம் போடுங்கள் வீரரே...

ராகுல் said...

///அஜித்தை மற்றவர்கள் தூற்றும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜாக்குவார் தங்கம், டங்குவார் தகரம் என்று ஆளாளுக்கு தலையை கலாயத்ததில் நான் ரொம்பவே அப்செட்////

அண்ணே நீங்க மட்டும் விஜயை கிண்டல் செய்தால் விஜய் ரசிகர்கள் கவலைப்படமாட்டார்களா

இது என்ன புடலங்காய் நியாயம்

pragadeesh said...

prabhakar really ungaluku thil athikam pathil adi super motta kadithasi pottu kuthu vangunnavinkalam innaku anonumousa vandhu kuthu vangurange ungal pani thodara valthukkal pragadeesh

maniajith said...

ippothaan paarththen thalaiya paththina pathivai comment post panna mudiyalai block pannirukkaanga

Unknown said...

You have any proof.why do you write this if you like to do social work go and study ias or create political party then change the society.no one be a perfect in the world realize this.