2 April 2010

பையா - ஒரு பயணம்

வணக்கம் மக்களே...

பதிவைப் போட்டு உங்களிடமெல்லாம் பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே பார்த்த படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ள திரைப்படம். ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஸ்பீல்ஸ்பெர்க் படம் என்பதுபோல சிலர் லிங்குசாமி படம், லிங்குசாமி படம் என்று பிதற்றியதெல்லாம் ரொம்ப ஓவர். தியேட்டரில் டிக்கெட் எடுக்கப் போனபோதே நான் கார்த்தியின் மாஸைப் பார்த்து மலைத்துப் போனேன். 2011ல் என்ன நடக்கப் போகிறது என்று புரியவில்லை. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்று சொன்னதை எழுபது ரூபாய் என்று காதில் வாங்கிக்கொண்டு இருபது ரூபாயை ஏப்ரல் பூல் செய்தார் திரையரங்க ஊழியர். சென்னை ஐட்ரீம் திரையரங்கில் காலை எட்டு மணிக்காட்சியாக சுடச்சுட படத்தைப் பார்த்தேன். இனி படத்தைப் பற்றிய என்னுடைய தத்துபித்துவங்கள்...
படத்திற்கு பையா என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று சாலமன் பாப்பையா தான் விளக்கிச்சொல்ல வேண்டும். டைட்டில் போடும்போது இரண்டு குவாலிஸ் வண்டிகளை பிரித்து மேய்ந்துவிட்டு லேன்சர் வருவதுபோல காட்டி கதையை புரிய வைக்கிறாராம் இயக்குனர். 
கதைச்சுருக்கம்
வேலை வெட்டியில்லாமல் சுற்றிவரும் கார்த்தி தமனாவை பார்த்ததும் காதலாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் தமனாவை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஏற்கிறார். அவரை காப்பாற்றப்போன இவருக்கு ஏற்கனவே இருந்த ஒரு ஏழரை கூடிவர, இந்த இரண்டு எழரைகளையும் கழித்துவிட்டு கார்த்தி எப்படி தமனாவுடன் இணைகிறார் என்பதே கதை.

ஆறு வருடங்களுக்கு முன்பு, "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" என்று ஒரு படம் வந்தது. அந்த படத்தையும் "கில்லி" படத்தையும் கலந்துகட்டியது போல ஒரு கதை. பொறுப்பில்லாத ஹீரோ, பார்த்ததும் காதல் என்று ஏற்கனவே பார்த்து சலித்த காட்சிகளோடு படம் ஆரம்பித்தாலும் லேன்சரில் ஏறியபின் கதை வேகமேடுத்துவிட்டது.

முதல் பாதி முழுவதுமே கார்த்தியும் தமனாவும் தனிமையான பயணத்தில் இருப்பதால் ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. படத்தின் முதல்பாதி நான் எதிர்ப்பார்த்ததை விட நன்றாக இருந்ததால் இடைவேளை எனக்கு இன்பவேளையாக இருந்தது. ஆனால் அதன்பின்புதான் இம்சைவேளை ஆரம்பமானது. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் இயக்குனரிடம் நாம் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் கார்த்தியிடம் தமனா கேட்க, ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நல்லவேளையாக பெட்ரோல் போடும் நேரத்திற்குள் கதை திரும்பவும் காருக்கு வந்துவிடுகிறது.

தமனாவைத் துரத்தும் ஆந்திரா கும்பல், கார்த்தியை துரத்தும் மும்பை கும்பல் என்று படத்தில் வேற்றுமொழி நெடி கொஞ்சம் தூக்கல். அதிலும் இரண்டாம் பாதியில் அடிக்கடி பாஞ்ச் தபாயே, த்தீன் தபாயே... இத்தனை எதிர்ப்புகளை கடந்து தமனாவை உறவினர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறார் கார்த்தி. குடும்ப கும்பலோடு இணைந்த பின்னர் தமனா, கார்த்தியை திரும்பிக்கூட பார்க்காமல் போகும் காட்சி ரொம்பவே யதார்த்தம். அடுத்த காட்சியிலேயே, குடும்பத்தினர் தமனாவை விரட்டிவிட, வில்லன் கும்பல்களிடமிருந்து தமனாவை கார்த்தி காப்பாற்றி கைபிடிப்பதோடு படம் நிறைவடைகிறது.
கார்த்தி
கடந்த இரண்டு படங்களிலும் அழுக்கு ஆடைகளோடு வளம் வந்த கார்த்திக்கு இந்தப்படத்தில் இயக்குனர் நல்ல துணிமணிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கார்த்தி கடந்த படங்களில் காட்டிய அதே தெனாவட்டையே இந்தப்படத்திலும் காட்டுகிறார். "இன்னும் எத்தனை படங்களில் தான் கதாநாயகன் பெயரை ஷிவா என்று வைப்பார்களோ...?" என்று நான் அசல் படத்தின் விமர்சனத்தில் புலம்பியது நினைவிருக்கலாம். இந்த படத்திலும் கதாநாயகன் பெயர் ஷிவா தான். ஆரம்பத்தில் போக்கிரி விஜய் போல அசால்ட் மேனரிசம் காட்டுவது, தமனாவைப் பார்த்ததும் லூசுப்பையாவாக மாறுவது, வில்லன்களிடம் புலியாக உறுமுவது என்று விதவிதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். ஹாட்ரிக் என்றுக்கூட சொல்லிக்கொள்ளலாம்.
தமனா
சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே அப்படி ஒரு கலரழகி தமனா. (நீ சுண்டிப் பாத்தியா டா என்றெல்லாம் கேட்கக்கூடாது) சில பேர் மட்டும்தான் தூங்கும்போதும் அழுவும்போதும் அழகாக இருப்பார்கள். அப்படி ஒரு அழகிதான் தமனா. இப்படி ஒரு அழகியை சுறா படத்தில் டம்மி பீசாக்கப்போவதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. கடைசிவரை கதாநாயகனை விட்டுப்பிடிக்கும் தமனா கடைசியில் கொஞ்சமாக கட்டிப்பிடிக்கிறார்.

நண்பர்கள்
படத்தில் ஒரு போர்ஷனாகவே வந்தாலும் என்னை மிகவும் ஏங்க வைத்த காட்சிகள் கார்த்தியின் நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள். சில இடங்களில் எனக்கும் என் கசின்களுக்கும் இடையேயான நெருக்கத்தைக் காட்டினாலும் இதெல்லாம் டூ மச். யார் தாங்கிப் பிடிப்பார்கள் இப்படியெல்லாம்...? யாருக்கு கிடைக்கும் இப்படிப்பட்ட நண்பர்களெல்லாம்...? இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தால் தமனாவைக்கூட தியாகம் செய்யலாம்.

மற்றும் பலர்
கார்த்தியின் மும்பை வாலா நண்பனாக வரும் நண்டு ஜெகன் வரிக்கு வரி டைமிங் காமெடி அடித்து கலக்கியிருக்கிறார். ஆனாலும் அவரது நடிப்பில் அடிக்கடி சந்தான வாசம் வீசுகிறது. படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் கறுப்புக்கலர் லேன்சர். படத்திற்காக நிறையவே ஹோம்வொர்க் செய்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது தலையை காட்டும் அல்லக்கை வில்லன்களைப் பற்றியெல்லாம் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.

பாடல்கள்
பாடல்களெல்லாம் எப்படியென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் எப்படி பிக்சரைஸ் செய்திருக்கிறார்கள் என்று கொஞ்சமாக சொல்லுகிறேன்.

நாயகியைப் பார்த்ததும் காதலில் விழுவார் நாயகன். அப்போது சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் மறந்து காதல் போதையில் கதாநாயகன் ஆடுவாரே... அப்படி ஒரு பாடல்தான் "துளித்துளி..."

"பூங்காற்றே..." என்று ஆரம்பிக்கும் பாடல், காக்க காக்க படத்தில் வரும் "என்னைக்கொஞ்சம் மாற்றி..." கில்லி படத்தில் வரும் "அர்ஜுனரு வில்லு..." வரிசையில் ஒரு பயணப்பாடல்.
"அடடா மழைடா..." என்ற பாடலில் நாயகனும் நாயகியும் மழையில் நனைந்தபடி ஆடினாலும் நான் நனைந்தது என்னவோ தமனாவின் கவர்ச்சி மழையில்தான். பாடல் முடிவதற்குள் பத்து பதினைந்து முறை புல்லரித்துவிட்டது. அப்படி ஒரு பெர்பாமன்ஸ்.
"சுத்துதே... சுத்துதே..." என்ற பாடல் நாயகியின் நெருக்கம் கிடைத்ததற்காக நாயகன் பாடும் இறை வாழ்த்துப்பாடல். இந்தப்பாடல் என்னவோ என் மனதில் அதிகம் ஒட்டவில்லை.

இன்னும் மூன்று மாத காலத்துக்கு தொலைகாட்சிகளில் அதிகமாக டெடிகேட் செய்யப்படப்போகும் பாடல் "என் காதல் சொல்ல...". சாமர்த்தியமாக இரண்டாம் பாதியின் இறுதியில் பாடலை சொருகியிருக்கிறார்கள்.
தீர்ப்பு
நமக்குப் பிடித்த அத்தைப் பெண்ணுடன் லாங் டூரடித்துவிட்டு வந்த ஒரு பீலிங். படத்தை பார்த்து முடித்ததும் மனதில் பட்ட ஒரு மனக்கணக்கு,
பையா - சண்டைகாட்சிகள் = சுவாரஸ்யம்
கார்த்தி அடிக்கடி வில்லன்களோடு ஒண்டியாக ட்வென்டி ட்வென்டி ஆடியிருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில், மும்பையில், வில்லன் குருப்களை பின்னிப்பெடலெடுக்கும் கார்த்தி, பெங்களுருவிலேயே இதைச் செய்திருந்தால் தொலைதூர பயணத்தை தவிர்த்திருக்கலாம். ரோமிங் செலவாவது மிச்சமாகியிருக்கும்.
பையா - பைய பாத்துக்கலாம் 
எடு வண்டிய,
N R PRABHAKARAN

Post Comment

10 comments:

Selvamani said...

nice review.
But wat to do .
Ticket book panniyache boss.
Poi pathu thane aganum... :-)

Anonymous said...

நல்ல விமர்சனம்....ஒரு தடவை பார்க்கலாம்ல நண்பா...?

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

Anonymous said...

அங்காடித் தெரு படத்த பார்க்கல.......,
ஒரு அழகியை சுறா படத்தில் டம்மி பீசாக்கப்போவதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது..

sura song?????

ILLUMINATI said...

இடைவேளை,இன்பவேளை,இம்சைவேளை......
பாவம்,யாரு பெத்த புள்ளையோ..டி ஆர் படங்கள ரொம்ப பாக்கும் போல இருக்கு.சீக்கிரமே இவக வீட்டுல சொல்லி மந்திரிக்க சொல்லணும்....
// இப்படி ஒரு அழகியை சுறா படத்தில் டம்மி பீசாக்கப்போவதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.//
ஹா ஹா.....

துபாய் ராஜா said...

அருமையான விமர்சனம்.அங்கங்கே அழகான நகைச்சுவைத் துணுக்குகள்.படத்தை பார்ட், பார்ட்டா பிரித்து எழுதியிருப்பது நன்றாக உள்ளது.

யார் சார் இந்த பையன்... ஒரு ஸ்பார்க் இருக்கு. ஒழுங்கு புடிச்சு வந்தா ஒரு நிலைக்கு வரலாம்.

Philosophy Prabhakaran said...

@ selvamani & Anonymous
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... பயப்படாதீங்க பாஸ்... ஒரு முறை பார்க்கலாம்... நம்மல்லாம் வேட்டைக்கரனையே பாத்தவங்க இத பாக்க மாட்டோமா...

Philosophy Prabhakaran said...

@ thalaivan
வாங்க தலைவா...

@ sweet prabha
பார்க்கவேண்டிய படம் அங்காடித் தெரு... சுறா பாடல்கள் கேட்டேன், பலமுறை கேட்காமல் கருத்துக்கூற இயலாது...

Philosophy Prabhakaran said...

@ ILLUMINATI
ஏய் வாடா என் மச்சி... வாழக்கா பஜ்ஜி...

@ துபாய் ராஜா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... பாராட்டியதற்கு ரொம்ப நன்றி... கண்டிப்பா நீங்க எதிர்பார்த்த நிலைக்கு வருவான் சார் இந்தப் பையன்...

Philosophy Prabhakaran said...

@ துபாய் ராஜா
ராஜா சபையில் எங்கே இடம் இருக்கிறது என்று தேடித் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை...