9 April 2010

வேலு பிரபாகரனின் காதல் கதை சொன்ன தத்துவங்கள்

வணக்கம் மக்களே...

கடவுள், புரட்சிக்காரன் உட்பட சில பகுத்தறிவு திரைப்படங்களை இயக்கிய வேலு பிரபாகரன் "காதல் அரங்கம்" என்ற பெயரில் ஆரம்பித்த கலகம் அது. சிலபல வருடங்கள் கழித்து கழிந்தபிறகு, கருமாறி உருமாறி "வேலு பிரபாகரனின் காதல் கதை" என்ற பெயரில் வெளியானது. வெளியான முதல் நாளே உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் ஆஜராகிவிட்டேன், ஆனால் நான் அப்போது மேஜராகிவிட்டேனா என்று தெரியவில்லை.அரங்கம் நிரம்பிய கூட்டம். ஆனால் மொத்தக்கூட்டமும் கதையை நம்பி வராமல் சதையை நம்பியே வந்திருக்கிறது என்று உணர முடிந்தது. வழக்கமாக ஷகிலா படங்களில் கூட ரசிகர்களுக்கு ஏதாவது மெசேஜ் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட மெசேஜ் நிறைய இருக்கிறது. "பெண்களை நம் சமூகம் காமக்கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" என்ற கருத்தையும் சில உபகருத்துக்களையும் வலியுறுத்தியதோடு நில்லாமல் மூன்று பிட்டுக்கதைகளையும் படத்தில் சொருகியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

வே.பி இந்தப் படத்தை இரண்டு நோக்கத்தில் எடுத்திருக்கலாம். முதலாவது, வெறுமனே கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு டாக்குமெண்டரி எடுத்தால் ரீச் ஆகாது. சில ஜல்சா காட்சிகளை இணைத்தால் சொல்ல வந்த கருத்துக்கள் நிறைய பேரை சென்றடையும் என்று நினைத்திருக்கலாம். அல்லது, வெறுமனே ஆபாசக் காட்சிகளை வைத்து படமெடுத்தால் விமர்சனங்கள் எழும், சென்சாரில் சுக்குநூறாக்கி விடுவார்கள் அதனால் நடுநடுவே கருத்து என்ற பெயரில் எதையாவது பிதற்றிவிட்டுச் சென்றால் தேவலை என்று நினைத்திருக்கலாம். முதலாவது உண்மையாக இருந்திருந்தால் வே.பியை பாராட்டலாம். இல்லையெனில் ஷங்கர், மணிரத்னம் வகையறாக்களில் சேர்த்துவிட வேண்டியதுதான். வே.பி எதை மெயின் டிஷ்ஷாக வைத்து எதை ஊறுகாயாக்கினார் என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்து நான் வடிகட்டி எடுத்த சில தத்துவங்கள்:-

விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள் என்று கதை ஆரம்பிக்கிறது. மூன்று பிட்டுக்கதைகள் என்று சொன்னேன் அல்லவா. முதலாவதாக காதல் போதையில் தவறான பாதையில் செல்லும் ஒரு ஜோடி. பண்ணையார் மகன் - தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் இருவரும் காதலிக்கிறார்கள். பையன் பொண்ணை பார்க்கும் போதெல்லாம் ஹஸ்கி வாய்ஸில் காதல் வசனம் பேசி கவிழ்க்கிறான். பெண்ணோ, பையன் கை வைக்கும் போதெல்லாம் கண்களை மூடி போதையில் திளைத்துவிட்டு டைரக்டர் கட் சொன்னதும் "ச்சீ... போடா..." என்று சிலுப்பிக்கொண்டு ஓடுகிறார். கடைசியில் காதலர்கள் பலியாகவே செய்கிறார்கள். அவர்களும் இந்த சமூகமும் காதல் என்று நினைத்துக்கொண்டிருப்பது காதல் அல்ல, அதன் அடிப்படையே காமம் தான் என்று இயக்குனர் இறுதியில் விளக்கம் கொடுக்கிறார்.

இரண்டாவது, வேலைக்காரியிடம் வேலையைக் காட்டும் வாத்தியார். இவர் கணக்கு வாத்தியார் அல்ல, கணக்கு பண்ணும் வாத்தியார். ஏற்கனவே காதலனால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட அந்த வேலைக்காரியை பலவந்தப்படுத்தி, பின்னர் ஆசைக்காட்டி வேட்டையாடுகிறார். வேலைக்காரி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவே விரசம். தமிழ் சினிமாக்களிலும் ஜோக்குகளிலும் வேலைக்காரியை இப்படித்தானே காட்டுகிறார்கள். கடைசியில் தன் அம்மா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறிவிட்டு வேலைகாரி தங்கத்திடம் இருந்து விடைபெறுகிறார் வாத்தியார். இந்தக் காட்சி முடிந்ததும் தங்கம், சாமி சிலை என்று கூறப்படும் கல்லில் கட்டியிருக்கும் தாலி என்று கூறப்படும்  மஞ்சள் கையிற்றை அறுத்தெறிகிறார், கூடவே தாலி சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகளையும். அதன்பின்னரும் தங்கம் அந்த கல்லின் மீது மண்ணள்ளி தூற்றுவது, சிலையை சிதைப்பது என்று புரட்சிகள்.

மூன்றாவது, பண்ணையாரும் பண்ணையாள் மனைவிக்கும் நடக்கும் (கள்ளக்)காதல். பண்ணையாள் மனைவியாக பாபிலோனா. பாபிலோனா ஏற்கனவே இதுபோன்ற படங்களில் நடித்து பழக்கப்பட்டவர் என்பதால் நல்ல பெர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த பிட்டு சொல்லும் கருத்து கொஞ்சம் வித்தியாசமானது இதை வார்த்தைகளால் விவரிக்காமல் அந்தப்படத்தில் வரும் காட்சியாக விவரிக்கிறேன். பண்ணை வீட்டில் பண்ணையாரும் பாபியும் கூடுகின்றனர். கூடி முடித்து களைப்பாக படுத்திருக்கும்போது வரும் வசனம்:-
பாபி: ஏன்யா...? இதுதான் கள்ளக்காதலா...?
பண்ணை: காதல்ல ஏது டீ நல்லக்காதல்... கள்ளக்காதல்... எல்லாமே காமம் தான்...

இவைதான் வேலு பிரபாகரனின் காதல் கதை சொல்லும் முத்தான மூன்று தத்துவங்கள். அதுசரி படத்திற்கு ஏன் வேலு பிரபாகரனின் காதல் கதை என்று பெயர் வைத்தார்கள். படத்தின் பிற்பாதியில் வே.பி அவரது சொந்தக்கதையை புலம்பித் தள்ளியிருக்கிறார். முக்கியமாக "சில்க்" சுமிதாவுடனான அவரது உறவைப் பற்றி தைரியமாக சொல்லியிருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டியாக வேண்டும்.

இது தவிர்த்து படத்தில் ஆங்கங்கே வே.பி தோன்றி பிரச்சார வசனம் பேசியிருக்கிறார். இவற்றில் முக்கியமான ஒரு காட்சி, பெரியார் வேடமிட்டு வே.பி தோன்றும் காட்சி. இவர்கள் சந்தித்தால் பாணியில் பெரியாரும் ஆதி சங்கராச்சாரியும் சந்தித்தால் எப்படி இருக்குமென்று ஒரு சின்ன கற்பனை. பெரியார் சங்கிடம், "கடவுள் தான் இல்லைன்னு சொல்ல மாட்டீங்க... ஆனா ஜாதிகள் இல்லைன்னு சொல்லலாமே அய்யா..." என்று கேட்கிறார். அதற்கு சங்கு, "இது காலங்காலமா நமது பெரியவாளெல்லாம் கடைபிடிச்சு வர்ற ஆச்சார அனுஷ்டானங்கள்... இது பகவன் படச்சது... பாவாத்மாக்களுக்கு புரியாது... உணர்த்தவும் முடியாது..." என்று பிதற்றுகிறார்.

இப்படியெல்லாம் வே.பியின் காதல் கதை சொன்ன தத்துவங்களை விட ஒரே ஒரு பிரேமில் ஹைக்கூ கவிதை போல ஒரு மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்தியது. அந்த தத்துவம்: -


கடந்த படங்களில் கடவுள் இல்லை என்று உணர்த்திவந்த வே.பி இந்தப் படத்தில் காதலும் இல்லையென்று உணர்த்தியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டிய படம். டி.வி.டி வாங்கியாவது பாருங்கள்.
அனுபவமும் - பகிர்வும்,
NR PRABHAKARAN

Post Comment

1 comment:

சைவகொத்துப்பரோட்டா said...

இடியாப்ப கதையாக இருக்கும்போல.......:))
ரைட்டு பாத்திடலாம்.