27 January 2011

இனி, எனது சினி விமர்சனங்கள்...?


வணக்கம் மக்களே...

ஆரம்பித்த புதிதில் இருந்து இன்றுவரை எனது வலைப்பூவை அதிகம் ஆக்கிரமித்திருப்பது சினிமா சம்பந்தப்பட்ட இடுகைகள் தான். பார்த்த படங்களுக்கு விமர்சனம் எழுதிய காலம் கடந்து இப்போது விமர்சனங்கள் எழுதுவதற்காகவே கூட படங்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படி பார்த்ததுதான் சுறா, வ குவாட்டர் கட்டிங் போன்ற மொக்கைப்படங்கள். இந்நிலையில் பதிவுலகில் சினிமா விமர்சனங்கள் பற்றியும் அதை எழுதுபவர்கள் பற்றியும் நிறைய எதிர்வினைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இதை முன்னிலைப்படுத்தும் சிலரது வாதம் பெரும்பாலும் முட்டாள்த்தனமாகவே இருந்தாலும் அவர்களின் சில கருத்துக்களில் நியாயம் இருப்பதால் அவற்றையும் பரிசீலிக்க நினைக்கிறேன்.

எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றிவிழா கொண்டாடப்போவதோ அல்லது தோல்வியைத் தழுவப்போவதோ இல்லை. இருப்பினும் எந்தவொரு படத்தையும் இனி ஜஸ்ட் லைக் தட் குப்பை என்று சொல்லிவிட வேண்டாமென்று நினைக்கிறேன். படத்தின் நிறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு குறைகளை மேலோட்டமாக அல்லது நாசூக்காக குறிப்பிடலாம் என்பது என் எண்ணம்.

அடுத்ததாக, படத்தின் கதையை போட்டு உடைப்பது. இதுகுறித்து நிறைய பேர் என்னிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இனி படத்தின் கதைச்சுருக்கத்தை மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். அல்லது விரிவான கதையை வேறொரு கலர் எழுத்துக்களில் வெளியிட்டு கதையை படிக்க விரும்பாதவர்கள் அந்த குறிப்பிட்ட கலர் எழுத்துக்களை படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கலாம் என விரும்புகிறேன்.

சில பேர், ஏன் சினிமா பின்னாடியே ஓடுகிறீர்கள், நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு எதைப்பற்றி எழுதத்தெரியுமோ எதைப்பற்றி எழுத விருப்பமோ அதைப்பற்றி மட்டுமே என்னால் எழுத முடியும். அந்த சிலரின் பேச்சைக் கேட்டு அரசியல் பற்றி எழுதப்போக அப்புறம் உனக்கெல்லாம் என்ன தெரியும்னு எழுத வந்துட்ட...ன்னு அவங்களே அனானியா வந்து அசிங்கமா திட்டுவாங்க.

தவிர, நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல. அதை எழுதலாமே என்று ஆலோசனை தெரிவிக்க இங்கே அனானிக்கும் உரிமை உண்டு என்ற போதிலும் அதைப்பற்றி தான் எழுத வேண்டுமென்று அதிகாரம் பண்ண யாருக்கும் உரிமையில்லை.

சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டுமென்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் பதிவுகள் எழுத வேண்டுமா...? ஓட்டு போடும் அனைவருக்கும் அரசியல் பேச எப்படி உரிமை இருக்கிறதோ அதுபோல சினிமா பார்க்கும் அனைவருக்கும் சினிமா பற்றி எழுத உரிமையுண்டு.

சில படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது 18+ போடுவது அவசியமாகிப் போகிறது. அது, மனதிற்கு தவறாகவே தோன்றினாலும் எது எனது எல்லை என்று உணர்ந்து வைத்திருக்கிறேன். தவிர அத்தகைய பதிவுகள் எதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள் எதையும் பயன்படுத்தாமல் என்னால் முடிந்தவரை நாகரிகமான வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கிறேன் என்பது எனது முந்தய 18+ திரை விமர்சனங்களை படித்தவர்களுக்குத் தெரியும்.

ஸோ, இனி என்னுடைய திரை விமர்சனங்கள் கடந்த வருட விமர்சனங்களில் இருந்து கொஞ்சம் மாறுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்னூட்டவியாதிகள்

ஆக்சுவல்லி, இதை தனி இடுகையாக வெளியிட விரும்பினேன். ஆனால் தேவையில்லாமல் பிரச்சனைகளை வளர்க்க விரும்பவில்லை. ஒருசிலர் அவர்களுடைய தளத்தில் கமென்ட் மாடரேஷன் வைத்துக்கொண்டு அல்லது பின்னூட்டங்களை அவ்வப்போது டெலீட் செய்துக்கொண்டு அவர்களுக்கு குண்டி குளிரும் பின்னூட்டங்களை மட்டும் பிரசுரித்துவிட்டு மற்றவற்றை நீக்கி விடுகின்றனர். கடந்த வாரம் ஒரு வலைப்பூவின் பின்னூட்டத்தில் வாதம் செய்து ஒரு கட்டத்தில் அந்த பதிவர் என்னுடைய பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை. இப்போது அவரது தளத்திற்கு செல்லும் மூன்றாம் தரப்பினருக்கு, அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் ஏதோ பதில் சொல்ல முடியாமல் ஓடி வந்துவிட்டதாக ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஒருவேளை நான் அவருக்கு எதிர்பதிவு போட்டு பப்ளிகுட்டி கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறார் போல. அது நடக்காது பாஸ்...

அப்புறம், ஆமாம் சாமிகள். இங்கே 18+, இன்னபிற இளமை துள்ளும் பதிவுகளை வெளியிடும் போது சூப்பர், அருமை, நல்ல பதிவுன்னு சொல்ற ஒரு கூட்டம் யாராவது எதிர்வினை போட்டா அங்கபோய் நல்லா கேட்டீங்க, செருப்பால அடிச்சீங்க, நெத்தியடின்னு பின்னூட்டம் போடுறாங்க. மிகவும் கேவலமான ஒரு பண்பாடு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், உங்களுக்கு எனது பதிவுகள் பிடிக்கலை என்றால் இங்கேயே பின்னூட்டம் மூலமாக உங்கள் நிஜ எண்ணங்களை குறிப்பிடுங்கள். அடையாளம் காட்ட விருப்பமில்லை என்றால் அனானியாக பின்னூட்டமிடுங்கள்.
அதெல்லாம் நேர விரயம் என்று நினைத்தால் இனிமே என்னோட வலைப்பூவுக்கு வராதீங்க. நான் உங்க தளத்திற்கு வருகிறேன் என்று பதில் மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் இங்குவந்து போலியாக பின்னூட்டமிட வேண்டாம். அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ரெண்டுபக்கமும் சொம்பு அடிச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

87 comments:

pichaikaaran said...

me first

pichaikaaran said...

யார் மேல் இந்த கோபம் ?

எப்பூடி.. said...

//எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றிவிழா கொண்டாடப்போவதோ அல்லது தோல்வியைத் தழுவப்போவதோ இல்லை.//

இந்த கருத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, விமர்சனங்கள் நிச்சயமாக படத்தின் வசூலில் முக்கிய பங்களிப்பை செய்பவை என்பது எனது எண்ணம்.

எப்பூடி.. said...

//எந்தவொரு படத்தையும் இனி ஜஸ்ட் லைக் தட் குப்பை என்று சொல்லிவிட வேண்டாமென்று நினைக்கிறேன். படத்தின் நிறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு குறைகளை மேலோட்டமாக அல்லது நாசூக்காக குறிப்பிடலாம் என்பது என் எண்ணம்.//

இது நல்ல முடிவு

எப்பூடி.. said...

//அடுத்ததாக, படத்தின் கதையை போட்டு உடைப்பது. இதுகுறித்து நிறைய பேர் என்னிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இனி படத்தின் கதைச்சுருக்கத்தை மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.//

இதுவும் சரியான முடிவுதான்

எப்பூடி.. said...

//அல்லது விரிவான கதையை வேறொரு கலர் எழுத்துக்களில் வெளியிட்டு கதையை படிக்க விரும்பாதவர்கள் அந்த குறிப்பிட்ட கலர் எழுத்துக்களை படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கலாம் என விரும்புகிறேன்.//

இது தேவையில்லையோ என நினைக்கிறேன்

ம.தி.சுதா said...

பிபி சிலதை கணக்கிலெடுக்க் கூடாது காகம் திட்டி மாடு சாகாது...

எப்பூடி.. said...

//சில பேர், ஏன் சினிமா பின்னாடியே ஓடுகிறீர்கள், நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள் என்று கூறுகிறார்கள்.//

நீங்களே சொல்கிறீர்கள் 'சில'பேர் என்று; சிலபேரை விட்டுவிட்டு 'பல'பேருக்காக நீங்கள் விமர்சனம் எழுதுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

....>>>>தவிர, நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஹா ஹா ஹா கேபிள் சங்கர் சார் கூட இதையெதான் சொன்னார்..

எப்பூடி.. said...

//“உனக்கெல்லாம் என்ன தெரியும்னு எழுத வந்துட்ட...”//

மகாத்மா காந்திக்கு ஜே :-)))))

Unknown said...

////அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ரெண்டுபக்கமும் சொம்பு அடிச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.
//

இது நீங்கள் பேட்டி எடுத்த கி.பி.வெந்தகுமாருக்கு 100% பொருந்தும்

சி.பி.செந்தில்குமார் said...

>>>>அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ரெண்டுபக்கமும் சொம்பு அடிச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.


ஹா ஹா ஹா செம.. பெரிய பிரச்சனையை ஏற்படுத்தப்போகும் வரிகள்

Anonymous said...

பார்வையாளன் said...

யார் மேல் இந்த கோபம் ?
thoppi thoppi meethu thaan ayyaavukku kaandu

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

பிபி சிலதை கணக்கிலெடுக்க் கூடாது காகம் திட்டி மாடு சாகாது...

என்னை காக்கா என திட்டிய நண்பர் சுதாவை வன்மையாக பாராட்டுகிறேன்.. ஹா ஹா

நான் கருப்புத்தான்யா..

எப்பூடி.. said...

//நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல. அதை எழுதலாமே என்று ஆலோசனை தெரிவிக்க இங்கே அனானிக்கும் உரிமை உண்டு//

அனானியின்னா அவளவு கேவலமா? :-))))))

சி.பி.செந்தில்குமார் said...

Blogger talex said...

////அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ரெண்டுபக்கமும் சொம்பு அடிச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.
//

இது நீங்கள் பேட்டி எடுத்த கி.பி.வெந்தகுமாருக்கு 100% பொருந்தும்

January 27, 2011 8:00 AM

ஹா ஹா இப்போதான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நான் எப்போ அப்படி சொன்னேன்னு தெரியல..

எப்பூடி.. said...

உங்களை இந்த பதிவை எழுத தூண்டிய அந்த வலைப்பதிவர் / வலைப்பதிவு யார் சார்? (பப்ளிக்கில சொல்ல முடியாவிட்டாலும் மின்னஞ்சலில் ஆவது தெரிவியுங்கள், நாங்களும் அலேட்டா இருப்பமெல்ல!!! )

சி.பி.செந்தில்குமார் said...

Anonymous said...

பார்வையாளன் said...

யார் மேல் இந்த கோபம் ?
thoppi thoppi meethu thaan ayyaavukku kaandu

தொப்பி தொப்பி பொதுவாதான் பதிவு போட்டார். அதுல சமூக சீர்திருத்த எண்ணம் மட்டுமே இருந்தது.ஆனா நாம சினிமா விமர்சனம் எழுதறதால நம்மை பாதிக்குது. அவ்வளவுதான்.

சி.பி.செந்தில்குமார் said...

எப்பூடி.. said...

உங்களை இந்த பதிவை எழுத தூண்டிய அந்த வலைப்பதிவர் / வலைப்பதிவு யார் சார்? (பப்ளிக்கில சொல்ல முடியாவிட்டாலும் மின்னஞ்சலில் ஆவது தெரிவியுங்கள், நாங்களும் அலேட்டா இருப்பமெல்ல!!! )

ஹி ஹி ஹி அது நான் தான்

எப்பூடி.. said...

//குண்டி குளிரும்//

உங்கள் வலைத்தளத்திற்கு பெண்களும் வருவதால் இவ்வாறான சொற்பதங்களை பாவிக்காமல் தவிர்க்கலாமே (தவிருங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை, அதற்க்கு எனக்கு உரிமை இல்லை but அனானிக்கிருக்கும் அதே கருத்து கூறும் உரிமையில்தான் கூருகிறேன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர்,
அருமை,
நல்ல பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா கேட்டீங்க,
செருப்பால அடிச்சீங்க,
நெத்தியடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யயோ இப்படி கமெண்ட் போட்டா அடிப்பீங்கள்ல. அத எச்சி தொட்டு அழிச்சிடுங்க ப்ளீஸ்

எப்பூடி.. said...

சி.பி.செந்தில்குமார் said...

//ஹி ஹி ஹி அது நான் தான்//

இது நம்பிற மாதிரி இல்லையே :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எனக்கு எதைப்பற்றி எழுதத்தெரியுமோ எதைப்பற்றி எழுத விருப்பமோ அதைப்பற்றி மட்டுமே என்னால் எழுத முடியும். ///

....நமக்கு தெரிஞ்சதத்தான் எழுத முடியும். தெரியாத மேட்டர்-ல தலைய விட்டுட்டு.. யாரு அடி வாங்குறது..

ஆதவா said...

நண்பரே, சினிமா விமர்சனங்களைப் பொறுத்தவரையிலும் இறுதி காட்சியின் முடிச்சவிழ்க்காத எந்த விமர்சனமும் நல்ல விமர்சனமே... உங்கள் முடிவின் படி கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிட்டு படத்தின் டெக்னிகல் மற்றும் பாதித்த விஷயங்கள் போன்றவற்றை எழுதலாம். உங்களது சில விமர்சனங்கள் படித்தேன். நன்றாக இருந்தன.

நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன், பதிவைப் படிக்காமல் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு, “அருமை” என்று சொல்லிப் போகிறவர்களை!! அதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்!!

Unknown said...

//எனக்கு எதைப்பற்றி எழுதத்தெரியுமோ எதைப்பற்றி எழுத விருப்பமோ அதைப்பற்றி மட்டுமே என்னால் எழுத முடியும்//
அதே! :-)
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

Anonymous said...

இவரி கருத்து வரவேற்க பட வேண்டியது தான் என்றாலும்......பிரபாகரனுக்கு ஆதரவாக கருத்து சொல்வதும், மற்ற பதிவர்களை பகைத்து கொள்வதும் வீண். நாளைக்கே....தெரியாமல் இந்த பதிவை வெளியிட்டுவிட்டேன். இந்த பாலகனை மன்னித்து விடுங்கள் என்று இந்த பதிவையே தூக்கிவிட்டு நம் முகத்தில் கரி பூசுவார் இவர். இவர் விஷயத்தில் நான் பட்டு தெளிந்தவன்.

Unknown said...

ஆஹா ஜாலி இனி கொஞ்ச நாள் நல்ல பொழுது போகும்னு நெனைக்கிறேன்

அஞ்சா சிங்கம் said...

யோவ்................ அவரு ஒரு ஆளுன்னு அவருக்கு பதில் சொல்லி பதிவு எல்லாம் போட்டுக்கிட்டு ........
அவரு பெரிய மண்டையன்னு எல்லாரும் சொல்லணுமாம் ........
பின்னூட்டத்த எதிர்கொள்ள முடியாத கோழை . வேண்டாத பின்னூட்டத்த எல்லாம் ஸ்பாம் செய்துட்டு இருக்கிறவருக்கு போயி ஒரு பதிவ போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்களே .................

Kousalya Raj said...

என்ன இப்படி ஒரு கோபம் பிரபாகர்...? இப்ப என்ன கமெண்ட் போடுறதுன்னு யோசிக்க வச்சிடீங்க...

நம் தளத்தில் நமக்கு பிடித்ததை எழுதுகிறோம், மற்றவர்களின் விருப்பதிர்காகத்தான் எழுதணும் என்றால் நம் சுயத்தை இழந்து விடுவோம்.

படம் பற்றிய விமர்சனம் தான் இருக்கும் என்று நம்பி வந்துட்டேன் பிரபாகர். :))

உங்க ஸ்டைல போயிட்டே இருங்க .....

சக்தி கல்வி மையம் said...

நல்லா கேட்டீங்க,
நெத்தியடி ....

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

முத்துசிவா said...

//இனி படத்தின் கதைச்சுருக்கத்தை மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். அல்லது விரிவான கதையை வேறொரு கலர் எழுத்துக்களில் வெளியிட்டு கதையை படிக்க விரும்பாதவர்கள் அந்த குறிப்பிட்ட கலர் எழுத்துக்களை படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கலாம் என விரும்புகிறேன்.//

நல்ல முடிவு

பாலா said...

//சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டுமென்று

நண்பரே நாம் எழுதுவதெல்லாம் முதலில் விமர்சனமே அல்ல. விமர்சனம் என்பது அந்த துறையில் ஆழ்ந்த ஞானம் இருப்பவர் எழுதுவது. நாம் எழுதுவது அந்த படம் பற்றி நம் சொந்த கருத்துக்கள். அதை ஸ்பாய்லர் என்று சொல்லலாம். அதாவது படம் பார்க்காதவர்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது.

என்னை பொறுத்தவரை 18+ தேவையற்றது. அப்படி போட்டால் மட்டும் படிக்காமல் விட்டு விடுவார்களா?

பின்னூட்டம் என்பது அவரவர் உரிமை. அதே போல மாடரேசனும். உங்கள் பின்னூட்டம் அந்த பதிவை எழுதியவருக்கு என்றால் அதை மற்றவர்கள் படிக்க தேவை இல்லை. தனக்கு சோம்படிக்கும் பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்றால் அந்த தளத்துக்கு செல்லாமல் இருப்பதே நல்லது.

'பரிவை' சே.குமார் said...

பிரபா...
சில விசயங்களில் பதிவுலகில் திருத்தம் வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதை நம் எழுத்தில் கொண்டு வரலாம்.

சினிமா விமர்சனம் எழுதுபவர்கள் சினிமா சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடில்லை. எல்லாவற்றையும் எழுதும் உரிமை எல்லாருக்கும் இருக்கிறது.

சினிமா குறித்தான் உங்கள் பார்வை பத்திரிக்கை விமர்சனம் போல் படத்தின் கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சொல்லி மீதி வெள்ளித்திரையில் என்று சொல்லாமல்... கதைக்குள் இறங்காமல் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்ற விசயங்களை சொல்ல முடியும் அதை நீங்கள் செய்யலாம்.

மேலும் சமீபத்திய திரைப்படங்களில் வலைப்பதிவர்களின் பார்வையின் தாக்கம் அதிகம் இருக்கின்றது.

பதிவர்கள் நல்ல படம் இல்லை என்று சொன்னால் அந்தப்படம் நல்ல படமாக இருந்தாலும் தியேட்டரில் நிற்கவில்லை என்பதை நம் வலை நண்பர்க்ள் அறிவார்கள்.

ஒருவர் இயக்குநராக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். நாம் சர்வசாதாரணமாக குப்பை என்ற மூன்றெழுத்தை உபயோகித்து அவரது திரையுலக் கனவை சிதைக்கிறோம். அந்தத் தவறை களைந்தெறிவோம்.

கதை குறித்தான விவாதத்துக்கு செல்லாமல் படம் குறித்தான பார்வையை கூர்மையாக்குவோம்.

உங்கள் ஆதங்கமும் கோபமும் புரிகிறது. நீங்கள் ஆதங்கப்படுவது போல் அவரவர் வலையில் அவரவர் எழுத்வும் ஆதங்கப்படவும் உரிமை இருக்கிறது.

தேவையில்லாத பின்னூட்ட தர்க்கத்தை தூக்கியெறிவோம் ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்ப்போம்.

அவரவருக்கென்று ஒரு பாணி இருக்கும் நீங்கள் உங்கள் பாணியில் எழுதுங்கள். யாருக்காகவும் உங்கள் பாணியை மாற்ற வேண்டாம்.

சினிமா பதிவுகளைப் புறக்கணித்தால் நிறைய நட்புக்களை இழக்க நேரிடலாம். நட்பும் முக்கியம்தானே... உங்களைப் போல் நண்பர்களும் முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம்.

சினிமாவாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும் நம்மால் நல்ல பதிவுகளை தரமுடியும். உங்கள் முடிவுக்கு வாழ்த்துக்கள்.

Sivakumar said...

//எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றிவிழா கொண்டாடப்போவதோ அல்லது தோல்வியைத் தழுவப்போவதோ இல்லை//

>>>இல்லை. தற்போது நடுநிலையுடன் பதிவர்கள் எழுதும் விமர்சனங்கள் சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்ததன் விளைவே ‘மந்திரப்புன்னகை’ சிறப்பு காட்சி அழைப்பு, விஜய் டி.வி.யில் நம் சக பதிவர்கள் குரல் ஒலித்தல் போன்றவை. பத்திரிக்கைகள் பல நடுநிலை விமர்சனங்கள் எழுதுவதை குறைத்து வருவதால், எதற்கும் அஞ்சாமல் விமர்சிக்கும் நம் நண்பர்களின் விமர்சனங்களுக்கு மதிப்பு ஏறி வருவது உண்மையே. கேபிள் ஷங்கரின் ‘இளைஞன்’ விமர்சனம் ஒரு உதாரணம். அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது என்று சொல்ல முடியாது. எனவே நீங்கள் நடுநிலையுடன் எழுதப்போகும் விமர்சனங்களுக்கும் மரியாதை இருக்கும்.

Sivakumar said...

தங்கள் வலைப்பூவில் கமன்ட் மாடரேஷன் வைக்கும் பதிவர்கள் பெரும்பாலும் தங்கள் தளத்தில் கீழ்த்தரமான கமன்ட் வந்து விழுவதை தடுக்கவே அப்படி வைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். சிலர் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். நானும் அவ்வாறே. என்ன கெட்ட வார்த்தை கமன்ட் போட்டாலும் அதற்கு சமமான வார்த்தை போட்டு பதில் அளிப்பது பெரிய விசயமில்லை. ஆனால் நம் வலைப்பூவை படிக்கும் பதிவர்கள் சிலரை முகம் சுளிக்க வைக்கும். அதனால் தான். Hope you understand. Especially About Me. I want My Site to be as pure as possible.

Unknown said...

விருப்ப பட்ட விஷயத்த சொல்றதுக்கான இடம்தான் இந்த தளம். அதே நேரத்துல தனி ஆவர்த்தனம் பண்றதோ, இல்ல எனக்கு தெரிஞ்சது தான் சரி என்றோ கூறாம சொல்ல வந்தத யார் மனசும் கஷ்டப்படாம சொல்ல தெரிஞ்சாவே அந்தப்பதிவரு பெரிய ஆளு என்பது என் கருத்து.

Madhavan Srinivasagopalan said...

சரியான கருத்துக்கள்.. உங்கள் விருப்பம்... படிப்பதும் ,படிக்காததும் எனது விருப்பம்.

அது சரி ஏன் இப்படி பயமுறுத்தறீங்க.. பின்னூட்டம் போடுறதப் பத்திதான் சொன்னேன்.

NKS.ஹாஜா மைதீன் said...

தமிழ்மணத்தில் ஒட்டு போடா முடியவில்லை

NKS.ஹாஜா மைதீன் said...

im also aajar frnd.....

Speed Master said...
This comment has been removed by the author.
Speed Master said...

என்ன ஆச்சு

settaikkaran said...

//நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்//

எல்லாருமே அப்படித்தான் இருக்க வேண்டும். :-)

ஞாஞளஙலாழன் said...

வெளிப்படையான கருத்து.

MEIPPORUL100 said...

//உளறியவன் Philosophy Prabhakaran உளறிய நேரம் 7:39:00 AM
//

உன்னுடைய உளறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கு தம்பி.

ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்காகவும் பதிவு எழுதும் உனக்கெல்லாம் செம்படிக்க யாரும் இல்லை. நீ மற்றவர்களுக்கு செம்படிப்பது எல்லோருக்கும் தெரியும்.

MEIPPORUL100 said...

தம்பி உளறுவாயன், மற்றவர்கள்
வலைத்தளத்தில் சண்டைப்போடும் பின்னூட்டம் போட்டு பிரபலம் ஆக நினைப்பவன் தானே நீங்கள்.

உங்களுடைய உளறல்களை பற்றி புகழ்ந்து எழுதி இருக்கிறோம் வந்து படித்து திருந்துங்கள்.

http://meipporul100.blogspot.com/

உன்னையும் மதித்து ஒட்டு போடுகிறார்கள் என்றால் இவர்கள் செம்படிப்பவர்கல்தான்



நற்கீரனின் குழந்தைகள் நாங்கள்
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் இருப்பின்
சுற்றமாயிருப்பினும்
குற்றத்தை குற்றமென்றுரைப்போம்

வந்துவிட்டோம்....
அனைவரும் பத்திரம் .............

MEIPPORUL100 said...

ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்காகவும் நீங்கள் மற்றவர்கள் தளத்தில் செம்படித்த பின்னூட்டங்களை பார்க்க

http://www.tamilmanam.net/comments/Philosophy%20Prabhakaran


தம்பி உளறுவாயன், நீங்கள் எந்தெந்த தளத்தில் உரண்டை இழுக்குறீர்கள், எதற்க்காக உரண்டை இழுக்குறீர்கள், கருத்துக்களே இல்லாத உங்கள் பதிவுகளுக்கு எப்படி இவ்வளவு ஓட்டுக்களும், பின்னூட்டங்களும் விழுகின்றது போன்றவற்றை எல்லாம் நாங்கள் சேகரித்து வருகிறோம். காந்தியை பற்றி நீங்கள் உளறி பிறகு பதுக்கிய பதிவை எங்கள் வலைத்தளத்தில் மீள்பதிவு செய்ய இருக்கிறோம்.

ஓட்டுக்காக மற்றவர்கள் தளத்தில் பின்னூட்டம் போடவே நீங்கள் பலமணிநேரம் செலவிடுவதை கவனித்து வருகிறோம். விரைவில் உங்களைப்போன்று ஓட்டுக்காக பதிவு எழுதுபவர்களை பற்றிய முழு விபரமும் எங்கள் வலைத்தளத்தில்.

நற்கீரனின் குழந்தைகள் நாங்கள்
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் இருப்பின்
சுற்றமாயிருப்பினும்
குற்றத்தை குற்றமென்றுரைப்போம்

வந்துவிட்டோம்....
அனைவரும் பத்திரம் .............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்//

இதுதான் எனது கருத்தும்... !

செல்வா said...

நான் இப்பத்தான் முதல் முதலா இங்க கமெண்ட் போடுறேன்னு நினைக்கிறேன் . நமக்கு என்ன பிடிச்சிருக்கோ அத எழுதுவோமே , அத விட்டுட்டு அடுத்தவங்க சொல்லுறாங்க அப்படின்னு வேற எதையும் எழுத முடியாதுல.. விடுங்க..

pavi said...

wat happen just be cool. take the critics in positive sense...

Ponmahes said...

thambi control your emotion.....

Anonymous said...

cool..............

Thenammai Lakshmanan said...

பிரபா.. என்ன கோபம் இது யார் மேல் தெரியவில்லை..

நான் சமீபகாலங்களில் என் வலைத்தளத்தில் உங்கள் வருகையும் பின்னூட்டமும் காண்கிறேன்.. நன்றி..

பெண்கள் பொதுவாக கமெண்ட் மாடரேஷன் வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.. நீங்கள் சண்டையிட்ட பதிவர் யார் என தெரியவில்லை.. ஆனால் ஒட்டு மொத்த பெண் பதிவர்களும் மாடரேஷன் வைத்துத்தான் வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.. யாராவது ஏதாவது கமெண்ட் செய்தால் சட்டென்று சுருங்கிப் போய்விடும் பெண்கள் பின் எழுத முடியாமலே போய் விடும்.

கவிதை பூக்கள் பாலா said...

என் பதிவில் சொன்னது தான் நடக்குது வருத்த பட வேண்டிய நிகழ்வுகள் ( பதிவுகள் யாராக இருந்தாலும் அவரவர் சுய முகந்தை இழக்காதீர்கள் . உங்களை (எழுத்தை) விரைவில் இழந்து விடுவீர்கள்

எழுத்துலகம் தழைக்க, பதிவாளர்கள் கவனிப்பார்களா ? இந்த சிறியவனின் சிறிய கருத்தை....
http://redhillsonline.blogspot.com/2011/01/blog-post_12.html

Anonymous said...

respect yr straight talk

Anonymous said...

Good post! Write whatever you like, but write things in more constructive way!

Movies are made for us, we are the consumers. As long as you pay for and see the movies, I think, you have the right to write your review. It need not be as good as cinema people would write. But as I said, try to be as much as contructive as possible, while at the same time pointing out the mistakes. Whether writing reviews for selective movies that you liked/disliked, or writing a review for everything that you watched, is upto you.

Most of the english movies have 18+ scenes, so don't hesitate to write about them if you think they are worth watching. After all, that happens in every one's life. But do not entertain "purely" adults only movies. This is my suggestion, not order :)

//. நான் உங்க தளத்திற்கு வருகிறேன் என்று பதில் மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் இங்குவந்து போலியாக பின்னூட்டமிட வேண்டாம். //

Good decision. I hope you would follow this as well.

Anonymous said...

//அடையாளம் காட்ட விருப்பமில்லை என்றால் அனானியாக பின்னூட்டமிடுங்கள்.//

இந்த ஒரு வரிக்காக உனது இந்த பதிவுக்கு நான் அனானியாக பின்னூட்டம் இடுகிறேன்.


உன்னுடைய பதிவில் பலவரிகள் வரவேற்க்கத்தக்கது உன்னுடைய இந்த கருத்துக்கு நான் முழுவதும் உடன்படுகிறேன். ஆனால் நீ இறுதியில் சொன்ன வார்த்தை முட்டாள்தனமானது. என்னுடைய வலைத்தளத்தில் நீ தினமும் வந்து பின்னூட்டம் இடுவது நான் உன்னுடைய பதிவுக்கு ஒட்டு போடுவேன் என்றுதான் அப்படி இருக்கும்போது நீ எப்படி பின்னூட்டம் இடுபவர்களை

//நான் உங்க தளத்திற்கு வருகிறேன் என்று பதில் மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் இங்குவந்து போலியாக பின்னூட்டமிட வேண்டாம். அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ரெண்டுபக்கமும் சொம்பு அடிச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க.//

இப்படி சொல்லலாம்?

நீ மற்றவர்கள் வலைத்தளத்துக்கு ஒருவாரம் பின்னூட்டம் இடாமல் இருந்துபார் உன்னுடைய எழுத்துக்களை ஒரு நாய் கூட மதிக்காது. உன்னுடைய முட்டாள்தனமான ஓட்டுக்காக இடப்படும் பதிவுகளுக்கு நான் இத்தனைநாட்கள் ஒட்டு போட்டு மரியாதை செலுத்தியது தவறு என்று நீ உணர்த்திட்ட.

//Good decision. I hope you would follow this as well.//

இதே வரிகள்தான் நான் சொல்ல நினைத்ததும். இனி நீயும் மற்றவர்கள் வலைத்தளத்தில் செம்படிப்பதி நிறுத்து.

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன், எப்பூடி.., ம.தி.சுதா, சி.பி.செந்தில்குமார், talex, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), Ananthi (அன்புடன் ஆனந்தி), ஆதவா, ஜீ..., தமிழ் வாழ்க....., நா.மணிவண்ணன், அஞ்சா சிங்கம், Kousalya, sakthistudycentre-கருன், முத்துசிவா, பாலா, சே.குமார், ! சிவகுமார் !, விக்கி உலகம், Madhavan Srinivasagopalan, NKS.ஹாஜா மைதீன், Speed Master, சேட்டைக்காரன், ஞாஞளஙலாழன், MEIPPORUL100, பன்னிக்குட்டி ராம்சாமி, கோமாளி செல்வா, pavi

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// யார் மேல் இந்த கோபம் ? //

உங்க மேல கூட நிறைய கோபம் இருக்கு... என்னுடைய பதிவுலக வாழ்க்கைக்கே "சத்தியசோதனை" ஏற்படுத்தியது நீங்கதானே பாஸ்... மறக்க முடியுமா...?

(ஜாலியாதான் சொல்றேன்... சீரியஸா எடுத்துக்காதீங்க...)

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// இந்த கருத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, விமர்சனங்கள் நிச்சயமாக படத்தின் வசூலில் முக்கிய பங்களிப்பை செய்பவை என்பது எனது எண்ணம். //

வலைப்பதிவர்களின் விமர்சனம், அதிலும் சுமார் முன்னூறு அல்லது நானூறு பேர் மட்டும் படிக்கும் எனது விமர்சனம் மட்டும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது தானே...

// இது தேவையில்லையோ என நினைக்கிறேன் //

அப்படியா... சரி அதுகுறித்து மறுபரிசீலனை செய்கிறேன்...

// நீங்களே சொல்கிறீர்கள் 'சில'பேர் என்று; சிலபேரை விட்டுவிட்டு 'பல'பேருக்காக நீங்கள் விமர்சனம் எழுதுங்கள். //

அந்த சில பேருக்கும் பதில் சொல்வது எனது கடமை என்று கருதினேன்...

// அனானியின்னா அவளவு கேவலமா? :-)))))) //

ச்சே ச்சே... அப்படியில்லை... அந்த வார்த்தைக்கு வேறொரு அர்த்தமும் இருக்கிறது... உங்களுக்கு எப்படி விளக்குவது என்று புரியவில்லை... ஆங்கிலத்தில் they too என்று பொருள்படும்படியே அந்த வார்த்தையை எழுதினேன்...

// உங்களை இந்த பதிவை எழுத தூண்டிய அந்த வலைப்பதிவர் / வலைப்பதிவு யார் சார்? (பப்ளிக்கில சொல்ல முடியாவிட்டாலும் மின்னஞ்சலில் ஆவது தெரிவியுங்கள், நாங்களும் அலேட்டா இருப்பமெல்ல!!! ) //

இந்தப் பதிவின் பின்னூட்டங்களை படித்தால் உங்களுக்கே புரியும்...

// உங்கள் வலைத்தளத்திற்கு பெண்களும் வருவதால் இவ்வாறான சொற்பதங்களை பாவிக்காமல் தவிர்க்கலாமே (தவிருங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை, அதற்க்கு எனக்கு உரிமை இல்லை but அனானிக்கிருக்கும் அதே கருத்து கூறும் உரிமையில்தான் கூருகிறேன்) //

தவிர்க்கிறேன்... தவிர்க்கிறேன்னு நிறைய பேர் கிட்ட சொல்லிட்டேன்... ஆனா இந்தமாதிரி கோபமா பதிவெழுதும் போது அத்தகைய வார்த்தைகள் தன்னால வருது... ஆக்சுவல்லி, இதுவே சென்சார் செய்யப்பட வரிகள்தான்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// ஹா ஹா ஹா கேபிள் சங்கர் சார் கூட இதையெதான் சொன்னார்.. //

அப்படிங்களா... ஜாக்கி கூட இதே வரிகளை சொன்னதாக ஞாபகம்...

Philosophy Prabhakaran said...

@ talex
// இது நீங்கள் பேட்டி எடுத்த கி.பி.வெந்தகுமாருக்கு 100% பொருந்தும் //

இதற்கு அவரே பதில் சொல்லியிருக்கிறார்... ஆனால் நான் அவரை குறிப்பிட்டு அந்த வரிகளை எழுதவில்லை...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// thoppi thoppi meethu thaan ayyaavukku kaandu //

காண்டு என்ற சொற்பதம் கொஞ்சம் டூ மச்... அவர் சமூக சீர்திருத்த எண்ணத்தோடு பதிவெழுதுகிறார் என்றால் எப்போதுமே அவருக்கு எனது ஆதரவு உண்டு... ஆனால் மற்ற பதிவர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடக் கூடாது... தவிர மாற்றுக்கருத்துக்களை ஏற்க விரும்பாதவர்கள், பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லத் தெரியாதவர்கள் மூடிட்டு போகலாமே... (பின்னூட்டப் பெட்டியை சொன்னேன்...)

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// நண்பரே, சினிமா விமர்சனங்களைப் பொறுத்தவரையிலும் இறுதி காட்சியின் முடிச்சவிழ்க்காத எந்த விமர்சனமும் நல்ல விமர்சனமே... உங்கள் முடிவின் படி கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிட்டு படத்தின் டெக்னிகல் மற்றும் பாதித்த விஷயங்கள் போன்றவற்றை எழுதலாம். உங்களது சில விமர்சனங்கள் படித்தேன். நன்றாக இருந்தன. //

என்னுடைய ஒரு சில விமர்சனங்கள் (உதாரணம்: விண்ணைத் தாண்டி வருவாயா) க்ளைமாக்ஸ் காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறேன்... இனி அதுபோல நடக்காது...

Philosophy Prabhakaran said...

@ தமிழ் வாழ்க.....
// இவரி கருத்து வரவேற்க பட வேண்டியது தான் என்றாலும்......பிரபாகரனுக்கு ஆதரவாக கருத்து சொல்வதும், மற்ற பதிவர்களை பகைத்து கொள்வதும் வீண். நாளைக்கே....தெரியாமல் இந்த பதிவை வெளியிட்டுவிட்டேன். இந்த பாலகனை மன்னித்து விடுங்கள் என்று இந்த பதிவையே தூக்கிவிட்டு நம் முகத்தில் கரி பூசுவார் இவர். இவர் விஷயத்தில் நான் பட்டு தெளிந்தவன். //

என்ன நண்பரே இப்படி சொல்லிட்டீங்க... மேற்படி சம்பவம் நடைபெற்ற போது நான் உங்களுக்கு தனியாக மெயில் அனுப்பி என்னுடைய நிலையை விளக்கியிருந்தேனே... நீங்களும் அந்த பதிலில் திருப்தி அடைந்தீர்கள் தானே... மறுபடி ஏன் இப்படி ஒரு பின்னூட்டம்...

உங்களுக்கு தனி மெயிலில் அனுப்பியதை பொதுவெளியில் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... ஆனால் மறுபடி ஒரு வெட்டுக்குத்து ஆரம்பிக்கும்... அது நமக்கு தேவையா...?

தவிர எனக்கு ஆதரவாக நீங்கள் ஒருவர் மட்டுமே இருந்த நிலையில் என்னை என்னதான் செய்யச் சொல்லுகிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ஆஹா ஜாலி இனி கொஞ்ச நாள் நல்ல பொழுது போகும்னு நெனைக்கிறேன் //

dangerous fellow...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// யோவ்................ அவரு ஒரு ஆளுன்னு அவருக்கு பதில் சொல்லி பதிவு எல்லாம் போட்டுக்கிட்டு ........
அவரு பெரிய மண்டையன்னு எல்லாரும் சொல்லணுமாம் ........
பின்னூட்டத்த எதிர்கொள்ள முடியாத கோழை . வேண்டாத பின்னூட்டத்த எல்லாம் ஸ்பாம் செய்துட்டு இருக்கிறவருக்கு போயி ஒரு பதிவ போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்களே ................. //

நீங்கள், நான் உட்பட மேலும் சில பதிவர்கள் இந்த உண்மையை புரிந்துக்கொண்டார்கள்... மற்றவர்களும் புரிந்துக்கொள்ள வேண்டுமே...

Philosophy Prabhakaran said...

@ Kousalya
// இப்ப என்ன கமெண்ட் போடுறதுன்னு யோசிக்க வச்சிடீங்க... //

உங்க மனசுல என்ன தோணுதோ அதை அப்பட்டமா போடுங்க மேடம்.. இதையே தான் எல்லார்கிட்டயும் சொல்றேன்...

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre-கருன்
// நல்லா கேட்டீங்க,
நெத்தியடி .... //

சத்தியமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்... நீங்க நடத்துங்க...

வழக்கமா நான் ஓட்டு போட்டுட்டேன்... நீங்க போடலையான்னு ஒரு வாக்கியத்தை சேர்ப்பீங்களே... அதை மறந்துட்டீங்களா...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// நண்பரே நாம் எழுதுவதெல்லாம் முதலில் விமர்சனமே அல்ல. விமர்சனம் என்பது அந்த துறையில் ஆழ்ந்த ஞானம் இருப்பவர் எழுதுவது. நாம் எழுதுவது அந்த படம் பற்றி நம் சொந்த கருத்துக்கள். அதை ஸ்பாய்லர் என்று சொல்லலாம். அதாவது படம் பார்க்காதவர்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது. //

ம்ம்ம்... எப்படியோ சினிமா சம்பந்தப்பட்ட இடுகைகள் எழுத நமக்கு உரிமை இருக்குதானே...

// என்னை பொறுத்தவரை 18+ தேவையற்றது. அப்படி போட்டால் மட்டும் படிக்காமல் விட்டு விடுவார்களா? //

முற்றிலும் சரியே... நான் 18+ பதிவுகள் போடும்போது தற்காலிகமாக எனது வலைப்பூவிற்கு adult content warning set செய்வேன்... ஆனாலும் அதையே தேடி வந்து படிக்கிறாங்க (பார்க்க: popular posts)...

// பின்னூட்டம் என்பது அவரவர் உரிமை. அதே போல மாடரேசனும். உங்கள் பின்னூட்டம் அந்த பதிவை எழுதியவருக்கு என்றால் அதை மற்றவர்கள் படிக்க தேவை இல்லை. தனக்கு சோம்படிக்கும் பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்றால் அந்த தளத்துக்கு செல்லாமல் இருப்பதே நல்லது. //

பின்னூட்டம் அவருக்கு மட்டுமல்ல அந்தப் பதிவை அந்த விவாதத்தை உற்று நோக்கிவரும் வலையுலக பெருமக்களுக்காகவும் தான்... நானும் இனி அவரது தளத்திற்கு போவதாக இல்லை...

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
// சினிமா குறித்தான் உங்கள் பார்வை பத்திரிக்கை விமர்சனம் போல் படத்தின் கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சொல்லி மீதி வெள்ளித்திரையில் என்று சொல்லாமல்... கதைக்குள் இறங்காமல் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்ற விசயங்களை சொல்ல முடியும் அதை நீங்கள் செய்யலாம். //

சரி நண்பரே... உங்களுடைய கருத்துக்களை பரிசீலிக்கிறேன்...

// ஒருவர் இயக்குநராக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். நாம் சர்வசாதாரணமாக குப்பை என்ற மூன்றெழுத்தை உபயோகித்து அவரது திரையுலக் கனவை சிதைக்கிறோம். அந்தத் தவறை களைந்தெறிவோம். //

இதையே தான் நானும் சொல்ல வந்தேன்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// தங்கள் வலைப்பூவில் கமன்ட் மாடரேஷன் வைக்கும் பதிவர்கள் பெரும்பாலும் தங்கள் தளத்தில் கீழ்த்தரமான கமன்ட் வந்து விழுவதை தடுக்கவே அப்படி வைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். சிலர் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். நானும் அவ்வாறே. என்ன கெட்ட வார்த்தை கமன்ட் போட்டாலும் அதற்கு சமமான வார்த்தை போட்டு பதில் அளிப்பது பெரிய விசயமில்லை. ஆனால் நம் வலைப்பூவை படிக்கும் பதிவர்கள் சிலரை முகம் சுளிக்க வைக்கும். அதனால் தான். Hope you understand. Especially About Me. I want My Site to be as pure as possible. //

சிவா... நான் உங்களைப் பற்றி குறிப்பிடவில்லை... மேலும் பதிவுலகில் பாதி பேர் கமென்ட் மாடரேஷன் வைக்கவே செய்கிறார்கள்... நான் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிடவில்லை... நான் எப்படி பின்னூட்டம் போடுவேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்... அப்படி நான் நாகரிகமாக நியாயமாக போட்ட பின்னூட்டங்கள் அநியாயமாக நீக்கப்படும்போது கோபம் வருகிறது... வேறொன்றுமில்லை...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// விருப்ப பட்ட விஷயத்த சொல்றதுக்கான இடம்தான் இந்த தளம். அதே நேரத்துல தனி ஆவர்த்தனம் பண்றதோ, இல்ல எனக்கு தெரிஞ்சது தான் சரி என்றோ கூறாம சொல்ல வந்தத யார் மனசும் கஷ்டப்படாம சொல்ல தெரிஞ்சாவே அந்தப்பதிவரு பெரிய ஆளு என்பது என் கருத்து. //

என்ன இது...? கமல் மாதிரி புரியாமலே பேசுறீங்க... என்னுடைய மனசு கஷ்டப்படாத வண்ணம் பின்னூட்டம் போடுறீங்க... அப்படித்தானே... புரிஞ்சுக்கிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// தமிழ்மணத்தில் ஒட்டு போடா முடியவில்லை //

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யாததால் தற்காலிகமாக கழற்றி எறிந்தேன்... மாலையில் தான் இணைத்தேன்...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
நண்பா... சம்பந்தப்பட்ட அந்த விவாதத்திற்கு நீங்கள் தான் ஒரே சாட்சி... அப்படி இருக்கும்போது ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

@ MEIPPORUL100
// ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்காகவும் பதிவு எழுதும் உனக்கெல்லாம் செம்படிக்க யாரும் இல்லை. நீ மற்றவர்களுக்கு செம்படிப்பது எல்லோருக்கும் தெரியும். //

நண்பா... பதிவுலகில் 90% பேர் ஓட்டுக்கள் வருவதையும் பின்னூட்டங்கள் வருவதையும் விரும்புகின்றனர்... ஆனால் யாரும் ஓட்டுக்காக மட்டும் எழுதுவதில்லை... நானும் அப்படித்தான்... ஏன் நீங்களும் அப்படித்தான்... பிறகு ஏன் உங்கள் வலைப்பூவில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை வைத்திருக்கிறீர்கள்...

// தம்பி உளறுவாயன், மற்றவர்கள்
வலைத்தளத்தில் சண்டைப்போடும் பின்னூட்டம் போட்டு பிரபலம் ஆக நினைப்பவன் தானே நீங்கள். //

சரிதான்... ஏனெனில் நான் சொம்படிப்பது இல்லை... நான் நினைப்பதை நினைத்தபடி பின்னூட்டமிடுகிறேன்... சிலபேர் அதை சண்டையாக மாற்றிவிடுகிறார்கள்... பிரபலமாவதற்கு பல வழிகள் இருக்கும்போது அப்படி ஒரு வழியை தேர்ந்தெடுக்க எனக்கு அவசியமில்லை...

// உங்களுடைய உளறல்களை பற்றி புகழ்ந்து எழுதி இருக்கிறோம் வந்து படித்து திருந்துங்கள்.

http://meipporul100.blogspot.com/ //

மிக்க நன்றி...

// உன்னையும் மதித்து ஒட்டு போடுகிறார்கள் என்றால் இவர்கள் செம்படிப்பவர்கல்தான் //

என்னுடைய வாசகர்களைக் கேவலப்படுத்தும் போதும் நான் அதே நாகரிகத்துடன் நடந்துக்கொள்வேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்...

// ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்காகவும் நீங்கள் மற்றவர்கள் தளத்தில் செம்படித்த பின்னூட்டங்களை பார்க்க

http://www.tamilmanam.net/comments/Philosophy%20Prabhakaran //

இந்த இணைப்பை கொடுத்ததற்கு நன்றி... மற்றவர்களும் பார்த்துப் புரிந்துக்கொள்ளட்டும் நான் சொம்படித்திருக்கிறேனா இல்லையா என்று...

// தம்பி உளறுவாயன், நீங்கள் எந்தெந்த தளத்தில் உரண்டை இழுக்குறீர்கள், எதற்க்காக உரண்டை இழுக்குறீர்கள், கருத்துக்களே இல்லாத உங்கள் பதிவுகளுக்கு எப்படி இவ்வளவு ஓட்டுக்களும், பின்னூட்டங்களும் விழுகின்றது போன்றவற்றை எல்லாம் நாங்கள் சேகரித்து வருகிறோம். காந்தியை பற்றி நீங்கள் உளறி பிறகு பதுக்கிய பதிவை எங்கள் வலைத்தளத்தில் மீள்பதிவு செய்ய இருக்கிறோம். //

ஆச்சர்யமாக இருக்கிறது... அந்தப்பதிவு இருந்தால் தயவு செய்து அதை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு (nrflyingtaurus@gmail.com) அனுப்பவும் அல்லது நீங்கள் குறிப்பட்டது போலவே உங்கள் தளத்தில் மீள்பதிவாக வெளியிடுங்கள்... என்னுடைய நண்பர் ஒருவர் அந்தப்பதிவும் அதன் பின்னூட்டங்களும் தனக்கு தேவைப்படுவதாக கேட்டிருந்தார்...

// ஓட்டுக்காக மற்றவர்கள் தளத்தில் பின்னூட்டம் போடவே நீங்கள் பலமணிநேரம் செலவிடுவதை கவனித்து வருகிறோம். விரைவில் உங்களைப்போன்று ஓட்டுக்காக பதிவு எழுதுபவர்களை பற்றிய முழு விபரமும் எங்கள் வலைத்தளத்தில். //

ஆம், பலமணிநேரம் செலவு செய்கிறேன்... அது வெறும் ஓட்டுக்காக மட்டுமே என்று நீங்களாக எப்படி முடிவு செய்துக்கொள்ளலாம்...

// பாக்காதவங்களுக்காக;

http://2.bp.blogspot.com/_UFnSMe4g2sA/TOxGf45A-WI/AAAAAAAAAUo/uJMSjL9rM20/s1600/Image016.jpg

உங்கள் வாய் உண்மையில் உளறுவாய் போல் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ என்று பெரிதாகத்தான் இருக்கிறது அந்த படத்தில். //

எல்லை மீறி போயிட்டே இருக்கீங்க... எனிவே, நீங்கள் செய்யும் அசிங்கங்களை எல்லாம் பதிவுலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்...

இதுவரைக்கும் நான் கேடயத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்... தேவையில்லாமல் வாள்வீச்சை பார்க்க ஆசைப்படுகிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

@ கோமாளி செல்வா
// நான் இப்பத்தான் முதல் முதலா இங்க கமெண்ட் போடுறேன்னு நினைக்கிறேன் . நமக்கு என்ன பிடிச்சிருக்கோ அத எழுதுவோமே , அத விட்டுட்டு அடுத்தவங்க சொல்லுறாங்க அப்படின்னு வேற எதையும் எழுத முடியாதுல.. விடுங்க.. //

முதல் பின்னூட்டமாக இருந்தாலும் முத்தான பின்னூட்டத்தை இட்டிருக்கிறீர்கள்... நன்றி...

உங்களை எனது தளத்தில் பார்க்கும்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது... நான் எழுதிய சூப்பர்ஸ்டாரின் சூப்பர் டென் தொடர்பதிவில் உங்களைப் பற்றி ஒரு வரி எழுதியிருந்தேன்...

// “கமல் ரசிகனொருவன் பார்வையில்...” என்றுதான் தலைப்பில் போட நினைத்தேன். ஆனால் ஏற்கனவே ஒரு “கோமாளி” (அட... இதுவும் பதிவர் பெயர்தான்) எழுதிவிட்டதால் அதை தவிர்த்துவிட்டேன். //

அதை நீங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் தான் எழுதினேன்... ஆனால் உங்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை... ஒருவேளை சீரியசாக எடுத்துக்கொண்டீர்களோ என்னவோ...? அப்படி இருப்பின் மன்னிக்கவும்...

Philosophy Prabhakaran said...

@ தேனம்மை லெக்ஷ்மணன்
// பெண்கள் பொதுவாக கமெண்ட் மாடரேஷன் வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.. நீங்கள் சண்டையிட்ட பதிவர் யார் என தெரியவில்லை.. ஆனால் ஒட்டு மொத்த பெண் பதிவர்களும் மாடரேஷன் வைத்துத்தான் வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.. யாராவது ஏதாவது கமெண்ட் செய்தால் சட்டென்று சுருங்கிப் போய்விடும் பெண்கள் பின் எழுத முடியாமலே போய் விடும். //

மேடம் நீங்கள் சொல்வது நியாயம்தான்... நான் கமென்ட் மாடரேஷன் வைத்திருக்கும் அனைவரையும் குறிப்பிடவில்லை... நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

Philosophy Prabhakaran said...

@ bala
// எழுத்துலகம் தழைக்க, பதிவாளர்கள் கவனிப்பார்களா ? இந்த சிறியவனின் சிறிய கருத்தை....
http://redhillsonline.blogspot.com/2011/01/blog-post_12.html //

உங்களுடைய அந்தப்பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்... எல்லாம் சரிதான்... பிரச்சனை இருந்தால் தனிப்பட்ட முறையில் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தீர்கள்... அந்த குறிப்பிட்ட பதிவர் தனிப்பட்ட முறையில் பேசும்போது நாகரிகமற்ற முறையில் பேசுகிறார்... அவரிடம் எல்லாம் பேசித் தீர்க்க முடியாது...

Philosophy Prabhakaran said...

@ Anonymous (January 27, 2011 11:49 PM)
// Most of the english movies have 18+ scenes, so don't hesitate to write about them if you think they are worth watching. After all, that happens in every one's life. But do not entertain "purely" adults only movies. This is my suggestion, not order :) //

நீங்கள் மற்றும் பலர் தெரிவித்த கருத்துகளுக்காக இனி 18+ படங்களைப் பற்றி எழுதுவதை தவிர்க்கிறேன்... அதைத் தவிர எத்தனையோ நல்ல படங்கள் இருப்பதை உணர்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Anonymous (January 28, 2011 12:10 AM)
// இதே வரிகள்தான் நான் சொல்ல நினைத்ததும். இனி நீயும் மற்றவர்கள் வலைத்தளத்தில் செம்படிப்பதி நிறுத்து. //

நான் ஓட்டுக்காக பின்னூட்டம் இடுகிறேன் என்றே இருக்கட்டும்... ஆனால் நான் போலியாக யாரையும் புகழ்வதில்லையே... எனக்கு பிடிக்காததை பிடிக்கவில்லை என்றுதானே சொல்கிறேன்... ஏன் எனக்கு உடன்பாடில்லாத (உதாரணம் ஆன்மிகம்) இடுகைகள் உடன்பாடில்லாத பதிவர்கள் தளத்திற்கு நான் செல்வதில்லையே...

Jayadev Das said...

//எந்தவொரு படத்தையும் இனி ஜஸ்ட் லைக் தட் குப்பை என்று சொல்லிவிட வேண்டாமென்று நினைக்கிறேன். // குப்பையை குப்பை என்று சொல்வதில் தப்பேயில்லை. படம் நிஜமாவே குப்பை என்றால் அதைத் தயங்காமல் சொல்லுங்கள்.
//படத்தின் நிறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு குறைகளை மேலோட்டமாக அல்லது நாசூக்காக குறிப்பிடலாம் என்பது என் எண்ணம்.// நிறைகளுக்கு கொடுக்கும் அதே அழுத்தம் குறைகளுக்கும் கொடுக்கப் பட வேண்டும், இல்லை என்றால் அது நடுவு நிலை ஆகாது.
//அதனால் இனி படத்தின் கதைச்சுருக்கத்தை மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். // இந்த விஷயத்தில் முன்னணி பத்திரிகைகள் [விகடன் மாதிரி] என்ன செய்கின்றன என்று பார்த்து அதை நீங்களும் பின் பற்றலாமே!

Jayadev Das said...

//சில பேர், ஏன் சினிமா பின்னாடியே ஓடுகிறீர்கள், நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள் என்று கூறுகிறார்கள்.// ஹா...ஹா....ஹா.... ஒருத்தன் கடப்பாறையை விழுங்கிவிட்டு ஜீரணம் ஆகவில்லையே என்று சுக்கு கஷாயம் போட்டு குடித்தானாம். நம்ம நாடு, குறிப்பாக நம் மாநிலம் இருக்கும் நிலையம் இப்படித்தான். பதிவு போட்டெல்லாம் திருத்தும் நிலையில் நம்மவர்கள் இல்லை. வேண்டுமென்றால் பதிவுகள் மூலம் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம், மற்றபடி பெரிய மாற்றத்தையெல்லாம் எற்ப்படுத்திவிட முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்க விடாமல் கூமுட்டைகளாக சனத்தை மாற்றி வைத்துள்ளார்கள்.

Jayadev Das said...

//தவிர, நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல. அதை எழுதலாமே என்று ஆலோசனை தெரிவிக்க இங்கே அனானிக்கும் உரிமை உண்டு என்ற போதிலும் அதைப்பற்றி தான் எழுத வேண்டுமென்று அதிகாரம் பண்ண யாருக்கும் உரிமையில்லை.// 100 % சரி.

Jayadev Das said...

//சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டுமென்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.// இதை விடக் கேனத்தனம் வேறென்ன இருக்க முடியும்? இப்படிப் பார்த்தால் எந்த பத்திரிகையும் நடத்த முடியாது, எந்த தொலைக்காட்சி சேனலும் ஆரம்பிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் 24 மணி நேரமும் அரசியல்வாதி, சினிமாக்காரன், தொழிலதிபர் என யாரையாவது விமர்சனம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள், அரசியலிலோ, சினிமாவிலோ பெரும்பாலும் இருப்பதில்லை. வெளிநாட்டு வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்பது தப்பு என்று சொல்ல பாரதப் பிரதமராகப் பதவி வகித்தவரால் மட்டும்தான் முடியுமா? இலங்கையில் இனைப் படுகொலை நடந்தது தப்பு என்று சொல்ல இலங்கை அதிபராக இருந்தால் மட்டுமே முடியுமா? சினிமா நன்றாக இல்லை என்று சொல்ல நூறு படம் நடித்தவரால் மட்டும்தான் முடியுமா? என்ன பேத்தல் இது? சாப்பாடு நன்றாக இல்லை என்று சொல்ல சமைக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை, சாப்பிடுபவர்கள் எல்லோராலும் சொல்ல முடியும், அதற்காக நீயே வந்து கரண்டி பிடி என்று சொல்வதை விட சமையல் காரன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்.

Jayadev Das said...

//எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றிவிழா கொண்டாடப்போவதோ அல்லது தோல்வியைத் தழுவப்போவதோ இல்லை.// 100 % சரி. உதாரணத்திற்கு சென்னை 28 என்ற படத்தை குப்பை என்று சொல்லிவிட்டு விநியோகஸ்தர்கள் எல்லோரும் துண்டை உதறி தொழில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டனர், வாங்க யாருமே முன்வராத நிலையில் தயாரிப்பலரே சொந்தமாக ரிலீஸ் செய்தார், படம் பின்னர் வெற்றியடைந்தது. இதே மாதிரி, பாலைவனச் சோலை, ஒருதலை ராகம், பூவே பூச்சூடவா, முந்தானை முடிச்சு போன்ற படங்கள் ரிலீஸ் ஆனா ஓரிரு வாரங்கள் வரை படம் ஊத்திக் கொண்டது என்றே நினைத்தார்கள். ஆனால் இவை அத்தைனையுமே தமிழ் சினிமாவில் மைல் கற்கள் என்று சொல்லுமளவுக்கு சக்கை போடு போட்ட படங்கள். நீங்கள் என்னதான் விளம்பரம் செய்தாலும், விமர்சனம் செய்தாலும் இறுதியில் படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது அங்கே போய் உட்கார்ந்தது பார்க்கும் சனத்துக்கு அந்தப் படம் திருப்தியைக் கொடுக்கிறதா, இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளதா என்பது மட்டுமே. ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, நல்ல படத்தை எந்த விமர்சனமும் ஒன்றும் செய்வதில்லை. அதே சமயம் விமர்சனம் என்பது அந்தப் படத்தைப் பற்றிய தங்களுடைய பார்வை, அது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம், இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது உங்கள் உரிமை. அதை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள்.