4 April 2011

பிரபா ஒயின்ஷாப் - 04042011

வணக்கம் மக்களே...

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************
ஒரு கடைக்கோடி கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா வெற்றியடைந்ததும், ங்கொய்யால மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடலாமா என்றென்னுமளவிற்கு குறுந்தகவல்கள் குவிந்துக்கொண்டிருந்தன. சில குறுந்தகவல்கள் என்னையும் ரசிக்க வைத்தன. இன்னொருத்தன் அனுப்பியிருந்தான், 1983ம் ஆண்டு ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாம் (இந்தியா உலககோப்பை வென்றது). 1996ம் ஆண்டு ராவணன் சீதையை லவட்டிக்கொண்டு போனானாம் (இலங்கை கோப்பையை வென்றது). 14 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். தக்காளி... யாருடா உங்களுக்கு இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கத்துக்கொடுக்குறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த ராமன் - ராவணன் புராணத்தையே பாடுவீங்க. அந்த குறுந்தகவலை உருவாக்கியவன் மட்டும் என் கையில் கிடைத்தால் @#$%^&*

**************************************************
ஏற்கனவே ஒரு ஒயின்ஷாப் இடுகையில் ஓவியர் இளையராஜா பற்றி சிலாகித்திருந்தேன். மேலும், ஒரு குறிப்பிட்ட ஓவியம் இணையத்தில் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தேன். இப்போது கூகிள் பஸ் பயணிகள் சிலரது உதவியால் அவரது இணையப்பக்கம், மெயில் ஐடி, அலைபேசி எண் என்று சகலமும் கிடைத்திருக்கிறது.
இணையப்பக்கம்: http://www.elayarajaartgallery.com
மெயில் ஐடி: artistilayaraja@gmail.com
அலைபேசி எண்கள்: 98411 70866, 94882 21569

வீட்டு, அலுவலக முகவரி கூட கிடைத்தது. யாருக்காவது அவசியமாக தேவைப்பட்டால் தெரிவிக்கவும், மெயிலுகிறேன்.

**************************************************
இந்த உலகக்கோப்பையின் போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களில் High Definition தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ரொம்பவே டூ மச். அதுவும் கிட்டத்தட்ட எல்லா விளம்பரங்களும் ஒரே தீமில். எது டிவியில காட்டுறாங்க, எது நிஜத்துல நடக்குதுன்னு வித்தியாசமே தெரியாதாமாம். அதிலும் கிரிக்கெட் பந்தில் இருந்து வைரங்கள் தெறிப்பது போல சித்தரிக்கப்பட்ட தோனி தோன்றும் சோனி பிராவியா (என்ன பிராவோ...?) விளம்பரம் ஏகத்தும் எரிச்சலூட்டியது. (ம்ம்ம்... நம்ம வீட்டுல தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி தான்).

**************************************************
தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். என்னையும் மதித்து மெயில் அனுப்பிய Syed Mustafa, மனம் திறந்து... (மதி), LK, Yuva, மாப்ள ஹரிஸ், Jayadev Das, prakash kumar, Pari T Moorthy, பிரகாசு, Rathnavel Natarajan, venkat kumar, modi rizi ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அழகியுடன் பழகிக்கொண்டிருக்கிறேன். மறுபடியும் குறில் - நெடில், வல்லினம் - மெல்லினம் - இடையினம் என சில சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் இதைவிடவும் சிறப்பானதொரு தட்டச்சு மென்பொருள் கிடைக்காதென்றே எண்ணுகிறேன்.

**************************************************
இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

**************************************************
வரலாற்றில் இந்த நாள்:
35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)

**************************************************
ட்வீட் எடு கொண்டாடு:

கருணாநிதியின் கதாநாயகி தேர்தல் அறிக்கையை வில்லனாக வந்த கருத்துக்கணிப்புகள் கதறக் கதறக் கற்பழிப்பதை என்னென்று சொல்ல?!


ஸ்ரீலங்கா அணியில்மட்டும் 22 ஃபீல்டர்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறார் என் மனைவியார் #எல்லாப்பக்கமும் நிக்கறாங்களே

 
உலகக்கோப்பையை இந்தியா வென்ற செய்தியை மட்டும்தான் ஜெயா டிவியும், கலைஞர் டீவியும் ஒரே மாதிரி தெரிவித்தன.

 
மின்னலே படமும் துள்ளுவதோ இளமை பாடல்களும் பிடிக்காது என சொல்லும் ஆண் நண்பர்களை இன்னும் சந்திக்கவில்லை., #டிபால்ட் ரசனை போல ;)

**************************************************
பதிவுலகில் புதியவர்:
உரைகல் - ஐ.ரா.ரமேஷ்பாபு
பதிவுலகின் பன்னிரண்டு நாள் குழந்தை. நம்மை சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது இந்தக்குழந்தை. இவருடைய மிஸ்டர்.எக்ஸ் ஜோக்ஸ் படித்து கொஞ்சம் சிரியுங்கள், ஊழல் குறித்த இடுகையை படித்து கொஞ்சம் சிந்தியுங்கள். ஜாக்கியைப் போல உங்களுக்கும் பெண்குழந்தை வேண்டுமென்றால் இதைப் படியுங்கள்.

**************************************************
எனக்குப் பிடித்த பாடல்:
குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தில் "விழிகளிலே விழிகளிலே..." என்றொரு பாடல். ட்ரைலரில் கேட்டபோது கொஞ்சமாக வசீகரித்தது. இப்போது காணொளியாக பார்க்கும்போது ரொம்பவும் பிடித்திருக்கிறது. காதலிக்கும் எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும். ஆனாலும் ரம்யா நம்பீசனை சைட் அடிக்காமல் இருக்க முடியவில்லை. செம ஹோம்லிப்பா...!!!

**************************************************
இந்த வார புகைப்படம்:
கோடைகாலத்திற்கு இதமாக உங்களுக்காக ஒரு தர்பூசணி...!!!

**************************************************
இந்த வார காணொளி:
சென்ற வாரத்தில் ஒருநாள் தெரியாத்தனமாக இந்த காணொளியைப் பார்த்துவிட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நீங்களும் அத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக விரும்பவில்லை. எனினும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் கீழுள்ள இணைப்பை சொடுக்கிப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=f9vty62P2hE

**************************************************
இந்த வார எஸ்.எம்.எஸ்:
"கறை நல்லது..." - கவுதம் கம்பீர்

**************************************************
ஒரு புதிர்க்கேள்வி:
5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????

(விடை சொல்பவருக்கு மட்டும் வடை வழங்கப்படும்...)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

95 comments:

Sukumar said...

வெல்கம் பேக் நண்பா... கடை களை கட்டுது... வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

செம கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார்

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.. ஹா ஹா

Athiban said...

7+2+5=143547

Unknown said...

கடை ரொம்ப நாலு கழிச்சி தெறந்து இருக்கீங்க நண்பா!

பகிர்வுக்கு நன்றி

Philosophy Prabhakaran said...

@ தமிழ்மகன்
உங்கள் விடை சரியானது... எனவே பின்னூட்டத்தை பின்னர் வெளியிடுகிறேன்...

சக்தி கல்வி மையம் said...

1435?? பாதி வடை...
சிறிது நேரத்திற்கு பிறகு முழு வடை வாங்குகிறேன்..

Athiban said...

http://thamizha.com/news/ekalappai-30-released

தமிழ் தட்டச்சிற்கு இதை பயன்படுத்தி பாருங்கள். phonetic keyboard உள்ளது.

முத்துசிவா said...

7+2+5=143547

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் கேள்விக்கான விடை
7+2+5=143547

Unknown said...

வாப்பா ஓனரே வேலை கெடச்சுடுச்சா?

செங்கோவி said...

7+2+5= 143547.......வடையோ சாத்தூர் சீவலோ(வறுவல்) கிடைக்குமா?

Anonymous said...

143545

7*2
7*5
7*2+7*5-2(middle)
rgds/Surya

Ram said...

சப்ப மேட்டரு.. 143547..

Ram said...

மத்தபடி பதிவு அருமை பிரபா.. அந்த குழந்தைய நானும் போய் பாக்குறன்.. குழந்தை தாக்கு பிடிக்கிதா இல்ல அப்பீட் ஆகுதான்னு பாக்கலாம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

7+2+5=143547

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.////////

கடை ஏன் ஒன்றரை மாசம் அடைச்சு கெடந்துச்சுன்னு இன்னும் சொல்லவே இல்ல......!

Chitra said...

இந்த வார புகைப்படமும், இளையராஜாவின் ஓவிய gallery வெப்சைட் பகிர்வும், டாப்!!! பகிர்வுக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஏற்கனவே ஒரு ஒயின்ஷாப் இடுகையில் ஓவியர் இளையராஜா பற்றி சிலாகித்திருந்தேன்.////////

உண்மையிலேயே வெகு அற்புதமான ஓவியம்............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அதிலும் கிரிக்கெட் பந்தில் இருந்து வைரங்கள் தெறிப்பது போல சித்தரிக்கப்பட்ட தோனி தோன்றும் சோனி பிராவியா (என்ன பிராவோ...?) விளம்பரம் ஏகத்தும் எரிச்சலூட்டியது.////////

தோனியோட அந்த ஹெலிக்காப்டர் ஷாட் விளம்பரத்த விடவா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். ///////

ரொம்பத்தாமதமாத்தான் அந்த மெயிலைப் பார்த்தேன், நானும் அழகியைத்தான் பரிந்துரைத்திருப்பேன்.....!

Unknown said...

\\answer is 143547

Vadai enakuthan enakuthan.

karunukku pathi vada kuda ila.mulu vadaiyum enakke.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். ///////

இப்ப்டியெல்லாம் அசால்ட்டா இருந்துடாதீங்கப்பு, திடீர்னு எங்கேயாவது வீடியோ கிளிப்பு ரிலீஸ் பண்ணுவாங்க....... அதைத் தடை பண்றதுக்குள்ள கேட்ச் பண்ணிடனும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)//////

யோவ் நானே சிம்ரனுக்கு 35 வயசு ஆயிடுச்சேன்னு கவலைல இருக்கேன்..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார்

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.. ஹா ஹா////////

வரவர சிபிக்கு நமீதாவ தவிர வேற யாரும் புடிக்க மாட்டேங்கிது, வேப்பெல தான் அடிச்சுப் பாக்கோனும்.....!

அஞ்சா சிங்கம் said...

எனக்கு வடையே வேண்டாம் ...............

சமுத்ரா said...

hmm welcome back

Speed Master said...

எனக்கு வடை வேண்டாம்

நாங்களும் கவிதை எழுதுவோம்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html

ரஹீம் கஸ்ஸாலி said...

நடக்கட்டும்....நடக்கட்டும்

Unknown said...

143547

Anonymous said...

/ஒரு கடைக்கோடி கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்//

இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும்... அது என்ன கடைக்கோடி???

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

welcome back the owner

சக்தி கல்வி மையம் said...

143539- கரெக்டா..

சக்தி கல்வி மையம் said...

இப்பதான் எனக்கு கிளாஸ் முடிந்தது..அதனாலதான் லேட்டு ஆன்சர்..

Unknown said...

கரெக்டா தேர்தல் டைமில பார்த்து கடைய திறந்துட்டீங்க! :-)

Unknown said...

நல்ல சரக்கு...

Jayadev Das said...

\\ஒரு புதிர்க்கேள்வி:
5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????\\

143547

Thenappan Udaiyappan said...

the answer is 143547

Jayadev Das said...

\\சென்ற வாரத்தில் ஒருநாள் தெரியாத்தனமாக இந்த காணொளியைப் பார்த்துவிட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.\\ How can I open it after reading this Prabha?

Jayadev Das said...

\இப்போது காணொளியாக பார்க்கும்போது ரொம்பவும் பிடித்திருக்கிறது.\\ What is the Link?

Jayadev Das said...

\\உலகக்கோப்பையை இந்தியா வென்ற செய்தியை மட்டும்தான் ஜெயா டிவியும், கலைஞர் டீவியும் ஒரே மாதிரி தெரிவித்தன.\\ Haa...Ha..Ha.. Super.

Jayadev Das said...

\\35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். \\ Very talented actress of this generation, acting comes very naturally for Simran and she never makes the mistake of overacting. Her slim hips, dance movements and smile in her lips are un chanllenged + points.

Jayadev Das said...

\\இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். \\ Ippadiyellaam vera aasaiyaa ungalukku!! Don't take it literally Prabha! To make it a point that she do anything for her country she told like that.

Jayadev Das said...

\\தமிழில் தட்டச்சு செய்வது குறித்து உதவி கேட்டிருந்தேன். \\ Are you familiar with the conventional Tamil keyboard?? If yes, let me search out.

Jayadev Das said...

\\14 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். \\ Tomato, in between Australian captured four times, what is it compared with, Tomato??

N.H. Narasimma Prasad said...

Hai பிரபா, எப்படியிருக்கிங்க? என்னை ஆச்சி? ரொம்ப நாளா ஆளையே காணோம்? Enyway. Welcome Back நண்பரே.

vadivel said...

7+2+5=143547

மனம் திறந்து... (மதி) said...

வாங்க...வாங்க! என்ன இருந்தாலும் நீங்க படு புத்திசாலிங்க! சரியான நேரத்திலே மதுக் கடையை மீண்டும் திறந்திருக்கீங்க பாருங்க! அரசியல் கட்சிங்களே மொத்தத்தையும் அள்ளிட்டுப் போய்டுமே, சில்லறையில் விக்கறதுக்கு சரக்கு ஏதாவது மீறுதா? எதுக்கும் முன்னாடி ஷட்டரைக் கொஞ்சம் மூடி வச்சே யாவாரம் பண்ணுங்க! இந்த போலீசு, தேர்தல் அதிகாரிங்க தொல்லை கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது! பின்னாடிக் கதவைத் தொறந்து வச்சாலே போதுமே! யாவாரம் பிச்சிகிட்டு போவுமே!

Anonymous said...

143547

Unknown said...

யோவ் எங்கையா என் பதில

Busy said...

ANS = 143547 !!!

VADAI

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வுகள். இளையராஜா ஓவியங்கள் சான்ஸே இல்லை. வசீகரிக்கிறார் மனிதர்.

Anonymous said...

/////////ஒரு புதிர்க்கேள்வி:
5+3+2=151022
9+2+4=183652
8+6+3=482466
5+4+5=202541
அப்படின்னா 7+2+5=???????////


விடை - 143547 ......எப்பூடி )))

Anonymous said...

103543

Unknown said...

சரக்கு சூப்பரா இருக்கு மாமே.:-)

Anonymous said...

143547

அன்பரசன் said...

//35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார்.//

இதை முதல்லயே போட்டிருந்திருக்கலாம்...

aavee said...

143547 -eppudi??

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இளையராஜாவின் கேலரிக்கு வழிகாட்டியதற்கு நன்றி!

Philosophy Prabhakaran said...

@ Sukumar Swaminathan, சி.பி.செந்தில்குமார், தமிழ் மகன், விக்கி உலகம், !* வேடந்தாங்கல் - கருன் *!, முத்துசிவா, தோழி பிரஷா, கே.ஆர்.பி.செந்தில், செங்கோவி, தம்பி கூர்மதியன், பன்னிக்குட்டி ராம்சாமி, Chitra, Arun Kumar, அஞ்சா சிங்கம், சமுத்ரா, Speed Master, ரஹீம் கஸாலி, நா.மணிவண்ணன், ! சிவகுமார் !, ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி, ஜீ..., யோவ், Jayadev Das, Thenappan Udaiyappan, N.H.பிரசாத், vadivel, மனம் திறந்து... (மதி), Busy, செ.சரவணக்குமார், கந்தசாமி., இரவு வானம், prabhakaran, அன்பரசன், கோவை ஆவி, எல் போர்ட்.. பீ சீரியஸ்..

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ தமிழ் மகன், முத்துசிவா, தோழி பிரஷா, செங்கோவி, தம்பி கூர்மதியன், பன்னிக்குட்டி ராம்சாமி, Arun Kumar, நா.மணிவண்ணன், Jayadev Das, Thenappan Udaiyappan, vadivel, Busy, கந்தசாமி., prabhakaran, கோவை ஆவி

143547 என்ற உங்கள் விடை சரியானது... ரொம்பவும் சுலபமான கேள்வியைக் கேட்டுவிட்டேனோ...??? இருக்கட்டும்... விடை சொன்ன பதினைந்து பேருக்கும் ஏதாவதொரு மின் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Arun Kumar, vadivel, Busy, கந்தசாமி., கோவை ஆவி

மின் புத்தக பரிசைப் பெற உங்கள் மெயில் ஐடியை தெரியப்படுத்தவும்...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!, Surya

மன்னிக்கவும் உங்கள் விடை தவறானது...

Philosophy Prabhakaran said...

@ தமிழ் மகன்
// தமிழ் தட்டச்சிற்கு இதை பயன்படுத்தி பாருங்கள். phonetic keyboard உள்ளது. //

ஏற்கனவே ஈ-கலப்பையை முயற்சித்துப் பார்த்தேன்... எனது கணினியில் உள்ள சில சிக்கல்களால் அதைப் பயன்படுத்த முடியவில்லை...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// வாப்பா ஓனரே வேலை கெடச்சுடுச்சா? //

கிட்டத்தட்ட...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// அந்த குழந்தைய நானும் போய் பாக்குறன்.. குழந்தை தாக்கு பிடிக்கிதா இல்ல அப்பீட் ஆகுதான்னு பாக்கலாம்.. //

அந்தக்குழந்தையை பத்தியும் பதிவு போட்டுறாதீங்க... கொஞ்ச நாளாவது விட்டு வைப்போமே...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// கடை ஏன் ஒன்றரை மாசம் அடைச்சு கெடந்துச்சுன்னு இன்னும் சொல்லவே இல்ல......! //

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்... அது வந்ததும் சொல்கிறேன்...

// தோனியோட அந்த ஹெலிக்காப்டர் ஷாட் விளம்பரத்த விடவா....? //

அதென்னவோ அடிக்கடி போட்டது போல தெரியல...

// இப்ப்டியெல்லாம் அசால்ட்டா இருந்துடாதீங்கப்பு, திடீர்னு எங்கேயாவது வீடியோ கிளிப்பு ரிலீஸ் பண்ணுவாங்க....... அதைத் தடை பண்றதுக்குள்ள கேட்ச் பண்ணிடனும்.....! //

நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை... ஒரு தகவல் சொல்லிவிடுங்க பறந்து வந்துடுவேன்...

// யோவ் நானே சிம்ரனுக்கு 35 வயசு ஆயிடுச்சேன்னு கவலைல இருக்கேன்..... ! //

அண்ணே... சிம்ரனுக்கு 45 வயசு ஆனாலும் நல்லா தான் இருந்திருப்பாங்க... இப்போ அது மேட்டர் இல்லை... அவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டதால தான் இப்படி டேமேஜ் ஆயிட்டாங்க...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும்... அது என்ன கடைக்கோடி??? //

சொல்லிட்டாப்போச்சு... முகத்தில் மூவர்ணத்தை பூசிக்கொண்டு, கொடியசைத்து, கடுங்கூச்சல் எழுப்பி ஆரவாரங்கள் எல்லாம் செய்யாமல் இந்தியா ஜெயித்தால் நல்லா இருக்குமே என்று மனதின் ஓரத்தில் கொஞ்சூண்டு ஆசையை தேக்கி வைத்திருப்பவனே இந்த கடைக்கோடி ரசிகன்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// கரெக்டா தேர்தல் டைமில பார்த்து கடைய திறந்துட்டீங்க! :-) //

ஆனாலும் நம்ம கடையில அரசியல் மேட்டர் அதிகம் வராது...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// How can I open it after reading this Prabha? //

புரியுது சார்... நான் வீடியோவை பார்த்த பின்பு இரண்டு நாட்களுக்கு யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தேன்... அதன்பின்னர் சில நண்பர்களிடம் பகிர்ந்துக்கொண்டபோது என் மனபாரம் குறைந்தது போல இருந்தது... பதிவில் பகிர்ந்தால் அந்த பாரம் மேலும் குறையும் என்றொரு நம்பிக்கை... அவ்வளவே... அனால் பாருங்க, உங்க நிலைமையை புரிந்துக்கொண்டு யூடியூபே அந்த வீடியோவை நீக்கிவிட்டனர்...

// What is the Link? //

லிங்க் இல்லை... இசையருவியில் மணிக்கொரு முறை ஒளிபரப்புவார்கள் பாருங்கள்...

// Very talented actress of this generation, acting comes very naturally for Simran and she never makes the mistake of overacting. Her slim hips, dance movements and smile in her lips are un chanllenged + points. //

அநியாயத்துக்கு சிலாக்கிறீர்களே... இருங்க தங்கமணி மேடத்திடம் போட்டு கொடுக்கிறேன்...

// Ippadiyellaam vera aasaiyaa ungalukku!! Don't take it literally Prabha! To make it a point that she do anything for her country she told like that. //

ம்ம்ம்... ரஜினிகாந்த் மைனா படத்துல நடிக்கிறேன்னு சொன்ன கதையா இருக்கு...

// Are you familiar with the conventional Tamil keyboard?? If yes, let me search out. //

பரிச்சயம் இல்லை...

// Tomato, in between Australian captured four times, what is it compared with, Tomato?? //

ஒருவேளை ஆஸ்திரேலியாக்காரன் சீதையை ஒரு பன்னிரண்டு வருஷம் வச்சிருந்திருப்பான் போல...

என்ன இந்தமுறை ஒரே ஆங்கில பின்னூட்டங்கள்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// யோவ் எங்கையா என் பதில //

யோவ் புதிருக்கான விடையெல்லாம் கடைசியா தான் வெளியிடப்படும்... புரிஞ்சதா...

Anonymous said...

Preethi:
ans fr ur puzzle: 143547

டக்கால்டி said...

Nice

Unknown said...

\\@ Arun Kumar, vadivel, Busy, கந்தசாமி., கோவை ஆவி

மின் புத்தக பரிசைப் பெற உங்கள் மெயில் ஐடியை தெரியப்படுத்தவும்...\\

மெயில் ஐடி:arunkumar.rbr@gmail.com

ஆதவா said...

கலக்கல்ல்ஸ்ஸ்!!! ராமர் எஸ்.எம்ஸ் எனக்கும் வந்தது... இடையில் மூன்று தடவை ஆஸி தட்டியபொழுது எங்க போச்சாம் என்று ரிப்ளை அனுப்பினேன்... பதில் வரவில்லை!!

ட்வீட்ஸ் கலக்கல்!!!
ஓவியமும் மிக அருமை!!

அரட்டை அருண் said...

Ans 143547

அரட்டை அருண் said...

Ans 143547

நிரூபன் said...

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப்பின் பிரபா ஒயின்ஷாப்பை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.//

வணக்கம் சகோதரம், ஏனுங்க உங்க கடையினை வருமான வரித்துறை சீல் வைச்சு மூடிக்கிட்டாங்களா?

நிரூபன் said...

4 வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போது ராமன் சீதையை மீட்டு வந்துள்ளானாம். தக்காளி... யாருடா உங்களுக்கு இந்தமாதிரி எல்லாம் யோசிக்கக் கத்துக்கொடுக்குறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த ராமன் - ராவணன் புராணத்தையே பாடுவீங்க. அந்த குறுந்தகவலை உருவாக்கியவன் மட்டும் என் கையில் கிடைத்தால் @#$%^&*//

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க, பார்த்தீங்களா?

நிரூபன் said...

ஓவியரின் கை வண்ணம், அழகாக அந்தப் பெண்ணினூடாக வெளிப்பட்டிருக்கிறது சகோ

நிரூபன் said...

ம்ம்ம்... நம்ம வீட்டுல தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி தான்).//

இலவசமா கொடுக்கும் போது யாராச்சு, இமய மலை றேஞ்சிலை உள்ள விலையிலை டீவி வாங்குவாங்களா?

நிரூபன் said...

இந்தியா உலககோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கைவிட்ட பூனம் பாண்டே அநேகமாக நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்//

அடடா, அடடா, எல்லோரும் ஒரு எதிர்பார்ப்போடு தான் இருக்கிறீங்க போல இருக்கு.

நிரூபன் said...

35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மும்பை மாநகரில் இடையழகி சிம்ரன் பிறந்தார். துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர். (என்ன பன்னிக்குட்டி சிம்ரனோமேனியா பார்ட் டூ ரெடியா...???)//

பாட்டு றெடியா இல்லை பார்ட் டூ றெடியா.......செமையாகத் தான் பட்டையைக் கிளப்புறீங்க.

நிரூபன் said...

ஸ்ரீலங்கா அணியில்மட்டும் 22 ஃபீல்டர்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறார் என் மனைவியார் #எல்லாப்பக்கமும் நிக்கறாங்களே//

இது செம கிண்டல்

நிரூபன் said...

This video has been removed as a violation of YouTube's policy on shocking and disgusting content.
Sorry about that//

வீடியோவை கிளிக் பண்ணினால் படதிற்கு பதிலாக, வீடியோ நீக்கி விட்டார்கள் என்று மெசேஜ் வருகிறது.

நிரூபன் said...

பிரபா வயின் ஷாப், ஓவியம், சினிமா, கிறிக்கற், இசை, வீடியோ, புதிர் என்ப பல சுவைகளையும் ஒருங்கு சேர வெளிப்படுத்தி நிற்கிறது. வையின் செம டேஸ்டு சகோ.

Sakthi Prakash said...

answer is 143549

Jayadev Das said...

மாப்பு, முன்ன ராகினிஸ்ரீ ன்னு AirTel Super siger ல பாடினாள் என்று சொன்னேனே, [நீ கூட தெரியாதுன்னு சொன்னியே, அதே ராகினிஸ்ரீ தான்!!] அவ போட்டி கிடைச்சிருக்கு. மாமி எப்படின்னு பாரு. [சும்மா பாரு!!].
http://3.bp.blogspot.com/_WDGPARU8qt8/Sb1MXVQOMpI/AAAAAAAAAls/V7SL9DVN24E/s1600-h/Rahini+Sri.bmp

Jayadev Das said...

Mappu Enjoy pannu:
Rahinisri:

http://www.youtube.com/watch?v=b65scEbql3M&feature=related

http://www.youtube.com/watch?v=VeEvCu9kvlo

http://www.youtube.com/watch?v=UXMRE9a_q84&feature=related

http://www.youtube.com/watch?v=u9hgo9bxk6o&feature=related

http://www.youtube.com/watch?v=XDaLksavGOM&feature=related

Jayadev Das said...

My Faviurite of mami Rahinisri.

http://www.youtube.com/watch?v=9kuGPQHWKcY&feature=related

ம.தி.சுதா said...

பிரபா பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்... அந்த ஓவியம் என்னை கட்டிப் போட்டு விட்டது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிரபாகரன், மார்ச் 30 தேதியிட்ட ஆனந்தவிகடன்ல ஒரு சிறுகதைக்கு இளையராஜா ஓவியம் போட்டிருக்காங்க,அது ஓவியம்னு என்னால இதுவரை நம்ப் முடிய்ல, போட்டோவ விட நல்லாருக்கு....!

Unknown said...

தமிழ் தட்டச்சு செய்ய சில எளிய வழிமுறைகள் உண்டு. மைக்ரோ சாப்ட்- ன் "Indic பசகஜ்" டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் பண்ணிக்குங்க. language bar - ல தமிழ்/இங்கிலீஷ் ரெண்டும் தெரியும் எங்கே தமிழ் வேணுமோ அங்கே தமிழ் செலக்ட் பண்ணிகோங்க. இல்லாட்டி எபிக் ப்ரௌசெர் இன்ஸ்டால் பண்ணிக்குங்க, அங்கே indic language சைடு பார்-ல வரும். அங்கே தமிழ் மட்டுமில்ல 19 language -ல டைப் பண்ணலாம். இப்ப கூட நான் EPIC -ல இருந்து தான் இந்த கமெண்ட் போடுறேன்.

Unknown said...

என்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணே.

Unknown said...

ஓவியர் இளையராஜாவின் ரசிகை....அவரை பற்றின தகவலுக்கு நன்றிங்க...

ஹாஹஹஹா....ராமன் - சீதா...:இந்தியா-இலங்கை...அருமை...!