1 April 2011

லத்திகா - "போட்ராமொக்க" விமர்சனம்

வணக்கம் மக்களே... 

சின்னத்திரையில் போடும் குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரையில் வெளியாகும் குறும்புப்படம் வரை எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக விமர்சனம் எழுதும் "பதிவுலக பாக்யராஜ்" சி.பி.செந்தில்குமார் திடீரென ஓலகப்படம் லத்திகாவிற்கு விமர்சனம் எழுதாமல் போக, பதிவுலகமே அதிர்ந்து போயிருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்பான பதிவுலக சூழ்நிலையில் சிபியை தொடர்புக்கொண்டோம். மனிதர் சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகாததால் கவலையுடன் கட்டிங் அடித்துக்கொண்டிருந்தார். லத்திகா விவகாரம் குறித்து விசாரித்தபோது "அந்த ஹீரோவின் முகத்தை பார்த்தாலே வாமிட் வருது" என்று கருத்து தெரிவித்தார். (ம்ம்ம்... அமைதி அமைதி பவர் ஸ்டார் ரசிகர்கள் கோபம் கொள்ள வேண்டாம்). அவருக்கே அந்த நிலையென்றால் நமக்கு...!!! இருப்பினும் தொடர்ச்சியாக அரசியல் தோசையை தின்றுக்கொண்டிருக்கும் பதிவுலக வாசகர்களுக்கு கொஞ்சம் காமெடி காராசேவு தேவையல்லவா. எனவே அத்தகைய சமூகப்பருப்பை சுமந்துக்கொண்டு திரையரங்கிற்கு சென்றேன்.

ஆத்தா... பையன் பயப்படுறான் ஆத்தா...
தியேட்டர் நொறுக்ஸ்
- பல வருடங்களுக்குப்பின் சென்னை அபிராமி திரையரங்கம் சென்றிருந்தேன். ஒவ்வொரு திரையரங்கமும் ஒவ்வொரு தீமில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற திரையரங்கம் சீன வடிவமைப்பை கொண்டிருந்தது.

- நேற்றைய முந்தயநாள் செய்தித்தாளில் லத்திகாவிற்கு "காதலர்கள் கொண்டாடும் கண்ணியமான படம்" என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். அது நூறு சதவிகிதம் உண்மை. நிறைய பேர் ஜோடியாக வந்திருந்து இறுதி இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தனர்.

- இடைவேளையின் போது யதார்த்தமாக திரும்பிப்பார்த்தால் ஒரு ஜோடி பதார்த்தமாக ரொமான்ஸ் செய்துக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் விலகிக்கொண்டனர். (இன்னும் எத்தனை ஜென்மத்துக்கு பாவம் சுத்தி அடிக்கப்போகுதோ...!!!)

- அநேகமாக பவர் ஸ்டாரின் சொந்தபந்தம் என்றெண்ணுகிறேன், சுமார் 20 பேர் ஓசி டிக்கெட்டில் உள்ளே நுழைந்திருந்தனர். நான் 110 ரூபாயை வீணடித்ததை நினைத்து வயிரெரிந்துக்கொண்டிருந்தேன்.

- விவரம் தெரியாமல் உள்ளே நுழைந்திருந்த சிலர் இடைவேளையின் போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினார்கள்.

கதைச்சுருக்கம்:
ஒரு கட்டிட கட்டுமான நிறுவனம் வைத்திருக்கிறார் பவர் ஸ்டார். ஊரே போற்றிப்புகழும் அவரின் வாழ்வில் திடீரென புயல் வீசுகிறது. அவர் குழந்தையையும், மனைவியையும் யாரோ கடத்திவிட தலைவர் அவர்களை மீட்கிறாரா...? இல்லையா...? என்பதை வெண்திரையில் பார்த்து வெந்து சாவுங்கள்.

பவர் ஸ்டார் சீனிவாசன் - இரண்டாவது படமென்றே சொல்ல முடியவில்லை. ரொமான்ஸ், சென்டிமன்ட், ஆக்ஷன், டான்ஸ் என்று மிரட்டியிருக்கிறார். ஒப்பனிங் சாங் முடியும்போதே டிக்கெட் எடுத்த 110 ரூபாய் கழிந்துவிட்டது, கூடவே நானும் கழிந்துவிட்டேன். தலைவர் ஓடிவரும் ஸ்டைலைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். பெருச்சாளி பொந்துக்குள்ள ஓடுமே அதே போன்றதொரு  ஓட்டம். கிட்டத்தட்ட பாதி படத்துக்கு ஓட மட்டும்தான் செய்கிறார்.

முதல் பாதி முழுக்க திகட்ட திகட்ட திணிக்கப்பட்ட ஹீரோயிசம் இரண்டாம் பாதியில் இம்மியளவு கூட இல்லை. ஹீரோ அழுது அழுதே சாகடிக்கிறார்.

இரண்டு கதாநாயகிகள். இருவருமே எப்பொழுதும் இரவாடையுடனேயே தரிசனம் தருகின்றனர். இருப்பினும் நமக்கு தப்பாவே பார்க்கத் தோணலை.(அவ்வளவு நல்லவனாடா நீ...? என்று சந்தேகிக்க வேண்டாம். இரண்டுமே மொக்கை பிகருங்க). இந்த லட்சணத்தில் போஸ்டர்களில் பிட்டுப்பட ரேஞ்சுக்கு போஸ் வேறு கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர சம்பந்தமே இல்லாமல் ரகுமானை அடிக்கடி காட்டுகிறார்கள். (சஸ்பென்ஸாமாம்....)

படத்தில் இரண்டு பாடல்கள் அருமையாக இருந்தன. ஒன்று "இதயக்கனி" படத்தில் இடம்பெற்ற "நீங்க நல்லா இருக்கோணும்" என்ற பாடல். மற்றொன்று "டாக்டர் சிவா" படத்தில் இடம்பெற்ற "மலரே குறிஞ்சி மலரே..." என்ற பாடல். இது இல்லாம இன்னும் நாலஞ்சு பாடல் இருக்கு. எல்லாமே ஸ்பூப் ரகம். அதிலும் இரண்டாம் பாதியில் படம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும்போது கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு ராப் பாடல். தலைவரைச் சுற்றி பத்து அழகிகள் தொட்டுத்தொட்டு ஆட தலைவர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் அசால்ட்டாக கடந்துபோகிறார்.

படம் ஆரம்பிக்கும்போது அய்யன் திருவள்ளுவருக்கு நன்றி கார்டு போட்டார்கள். அது ஏனென்றால், நம்ம பவர் ஸ்டாரின் பர்ஸ்ட் நைட் பாடலில் ஒரு குறளை பாடல் வரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அது காமத்துப்பால் என்று சந்தேகிக்க வேண்டாம். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதே அந்தக்குறள். ங்கொய்யால அதை ஏன் பர்ஸ்ட் நைட்டுல பாடுறாருன்னுதான் எனக்கு புரியவே இல்லை.

மேலும், கிளைமாக்ஸுக்கு முன்பு வரும் ஒரு சோகப்பாடலில் "இது என் விதி என்பதா... இறைவன் செய்த சதி என்பதா... எவரோ நமக்கு செய்த கதி என்பதா..." என்று நம் நிலைமையைப் பற்றி அவரே பாடுகிறார்.

ஆங்... தொழில்நுட்பத்தைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே. கார் கண்ணாடியில் காட்சிகள் தெரியும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்துல ஏகப்பட்ட கருத்து சொல்லியிருக்காங்க...
- அனாவசியமாக மனைவியின் மீது சந்தேகப்படக்கூடாது.
- வீட்டில் மனைவியை வைத்துக்கொண்டு பி.ஏவிடம் ஜொள்ளு விடக்கூடாது.
- முக்கியமா, இந்தமாதிரி படத்தை இனி பார்க்கக்கூடாது.

ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்க பார்ப்போம்
சூப்பர்ஸ்டாரின் பாபா, இளையதளபதியின் சிவகாசி, சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்னி போன்ற படங்களை கம்பேர் செய்யும்போது இந்தப்படத்தில் ஹியூமர் ரொம்பவே கம்மிதான். இருப்பினும் இந்தப்படத்தை ஒருமுறை பார்த்தால் எப்பேர்ப்பட்ட மொக்கை படத்தையும் பார்க்கக்கூடிய ஒரு அபார தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.

எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 62 (முன்னாடி ஒரு மைனஸ் சிம்பல் போட்டுக்கோங்க...)
எதிர்ப்பார்க்கப்படும் குமுதம் ரேட்டிங்: த்தூ...!!! (இது புது ரேட்டிங்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

88 comments:

Suthershan said...

சூப்பர்... பார்த்தே ஆகணும்... ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

சி.பி.செந்தில்குமார் said...

போட்றா முத மொக்கையை

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலிலேயே ஏதோ உள் குத்து இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

>>>மனிதர் சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகாததால் கவலையுடன் கட்டிங் அடித்துக்கொண்டிருந்தார்

என் இமேஜை டேமேஜ் பண்றதுலு என்ன ஒரு சந்தோஷம் பிரபாவுக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

>>
- இடைவேளையின் போது யதார்த்தமாக திரும்பிப்பார்த்தால் ஒரு ஜோடி பதார்த்தமாக ரொமான்ஸ் செய்துக்கொண்டிருந்தனர்.


யோவ்.. இடைவேளை வரை படத்தை பார்த்ததுக்கு இங்கே பார்த்திருக்கலாம்

ம.தி.சுதா said...

பொறுங்க படிச்சிட்டு வரட்டுமா ?


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

சி.பி.செந்தில்குமார் said...

பிரபாவுக்கு மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா

ம.தி.சுதா said...

ஃஃஃஃமுதல் பாதி முழுக்க திகட்ட திகட்ட திணிக்கப்பட்ட ஹீரோயிசம் இரண்டாம் பாதியில் இம்மியளவு கூட இல்லை. ஹீரோ அழுது அழுதே சாகடிக்கிறார்.ஃஃஃ

அடடா அப்ப இது தமிழ் சினிமாவா சரி சரி சந்தர்ப்பம் வரும் போது பார்ப்போம்...

சேலம் தேவா said...

//இது என் விதி என்பதா... இறைவன் செய்த சதி என்பதா... எவரோ நமக்கு செய்த கதி என்பதா..." என்று நம் நிலைமையைப் பற்றி அவரே பாடுகிறார்.//
//இருப்பினும் இந்தப்படத்தை ஒருமுறை பார்த்தால் எப்பேர்ப்பட்ட மொக்கை படத்தையும் பார்க்கக்கூடிய ஒரு அபார தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.//

பிரபாகர்..ரீஎன்ட்ரி அட்டகாசமான நகைச்சுவையோடு வந்திருக்கீங்க..சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.:))))

ம.தி.சுதா said...

ஆனால் உங்க எழுத்து நடை எதை எழுதினாலும் கவருதப்பா அருமை அருமை...

ம.தி.சுதா said...

ஆனால் உங்க எழுத்து நடை எதை எழுதினாலும் கவருதப்பா அருமை அருமை...

நிரூபன் said...

சின்னத்திரையில் போடும் குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரையில் வெளியாகும் குறும்புப்படம் வரை எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக விமர்சனம் எழுதும் "பதிவுலக பாக்யராஜ்" சி.பி.செந்தில்குமார் திடீரென ஓலகப்படம் லத்திகாவிற்கு விமர்சனம் எழுதாமல் போக, பதிவுலகமே அதிர்ந்து போயிருக்கிறது.//

வணக்கம் சகோதரம், நலமா?
இன்று தான் உங்களின் வலைப் பக்கம் நோக்கி முதல் வருகை.

சிபி இன்னும் ஒரு சில படங்கள் வரவில்லை எனும் காரணத்தால் மௌன விரதம் இருப்பதாக கேள்வி. உண்மையா?

நிரூபன் said...

இப்படிப்பட்ட பரபரப்பான பதிவுலக சூழ்நிலையில் சிபியை தொடர்புக்கொண்டோம். மனிதர் சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகாததால் கவலையுடன் கட்டிங் அடித்துக்கொண்டிருந்தார்.//

இதனைத் தான் சகோ சொல்லுவதோ,

படம் பார்க்காத நெஞ்சை பவர் விட்டு ஆற்று என்று.

நிரூபன் said...

நேற்றைய முந்தயநாள் செய்தித்தாளில் லத்திகாவிற்கு "காதலர்கள் கொண்டாடும் கண்ணியமான படம்" என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். அது நூறு சதவிகிதம் உண்மை. நிறைய பேர் ஜோடியாக வந்திருந்து இறுதி இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தனர்.//

அஃதே...அஃதே...

அப்ப நீங்களும் ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமே?
ச்...சும்மா ஒரு காமெடியா சொன்னேன்.

ஏதோ ஒரு சீன் படத்தை சமூக அந்தஸ்தோடை கூட்டமாகப் பார்க்கிற நோக்கத்திலை எல்லோரும் வந்திருப்பாங்க என்று நினைக்கிறேன்

நிரூபன் said...

முதல் பாதி முழுக்க திகட்ட திகட்ட திணிக்கப்பட்ட ஹீரோயிசம் இரண்டாம் பாதியில் இம்மியளவு கூட இல்லை. ஹீரோ அழுது அழுதே சாகடிக்கிறார்.//

அப்போ கொடுத்த காசு வேஸ்ரு.

நிரூபன் said...

படத்தின் குறை நிறைகளைச் சுட்டிக் காட்டிய உங்கள் விமர்சனம் அருமை.

ஆறு வித்தியாசங்கள்:

விஜய் காலுக்கு வெள்ளை கலரு சூ போட்டிருக்கிறார்.
பவர் ஸ்டார் கறுப்பு கலர்...

விஜய் கழுத்திலை றோஸ் மாலை

பவர் ஸ்டார் கழுத்திலை சிகப்பு மாலை

நிரூபன் said...

விஜய் கைகளை முன்னும் பின்னும் வைத்திருக்கிறார்
பவர் ஸ்டார் கைகளை முன்னுக்கு வைத்திருக்கிறார்

நிரூபன் said...

விஜய் சால்வை போட்டிருக்கார்
பவர் ஸ்டார் சால்வையே போடலை

நிரூபன் said...

விஜய் வெள்ளை வேட்டி,
பவர் ஸ்டார் மாறு கரை உள்ள வேட்டி அணிந்திருக்கார்

நிரூபன் said...

விஜய் கண்ணாடி போடலை..
பவர் ஸ்டார் கூலிங் கிளார் மாட்டியிருக்கிறார்

ஆறு வித்தியாசங்கள் அல்ல. ஆறிற்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

முத்துசிவா said...

பதிவு போடுறதுக்காக உயிர பனையம் வைக்கிறீங்களே... நம்ம பவர் ஸ்டாருக்கு இன்னும் ஒரு 5 படம் லைன்ல இருக்கு... இந்த படத்தோட போஸ்டர பாக்கவே வாந்தி வருது. எப்புடித்தான் முழு படத்தையும் பாத்தீங்களோ.... ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிப்பா...

Unknown said...

நண்பா உங்க இதயம் எதால் செய்யப்பட்டது விளக்கவும் ஹிஹி!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

குறுகிய இடைவெளிக்கும் மீண்டும் வந்துள்ளீர்கள் வாருங்கள் வாருங்கள்...

அருமை

சக்தி கல்வி மையம் said...

இந்தப் போட்டோ... பயமாயிர்க்கே...

சக்தி கல்வி மையம் said...

எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 62 (முன்னாடி ஒரு மைனஸ் சிம்பல் போட்டுக்கோங்க...)
எதிர்ப்பார்க்கப்படும் குமுதம் ரேட்டிங்: த்தூ...!!! (இது புது ரேட்டிங்)---------
இது கலக்கலோ கலக்கல்..

Unknown said...

எப்புடிய்யா????

கோவை நேரம் said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி ...அருமையான விமர்சனம் ...ரொம்ப காமெடி யான பதிவு ...

Speed Master said...

சத்தியமா சொல்றேன் நீங்க இனிமேல் படவிமர்சன் போட்டா வரவே மாட்டேன்

கருமம் கருமம் காலங்காத்தல இவன் முகத்துல

ஐயோ ராமா!!!!!!!!!!

shortfilmindia.com said...

நானே யோசிச்சிட்டு இருக்கிறப்ப ஆனாலும் ரொம்பத்தான் தைரியம்யா..

Chitra said...

மேலும், கிளைமாக்ஸுக்கு முன்பு வரும் ஒரு சோகப்பாடலில் "இது என் விதி என்பதா... இறைவன் செய்த சதி என்பதா... எவரோ நமக்கு செய்த கதி என்பதா..." என்று நம் நிலைமையைப் பற்றி அவரே பாடுகிறார்.


.... ha,ha,ha,ha,ha,ha.... :-)))))

மனசாலி said...

படம் இன்னும் ஒடுதா?

மனசாலி said...

என்னா ரொம்ப நாள் ஆளக் கானாம்?

செங்கோவி said...

//இது என் விதி என்பதா... இறைவன் செய்த சதி என்பதா... எவரோ நமக்கு செய்த கதி என்பதா..// ரிப்பீட்டேய்!

பொன் மாலை பொழுது said...

எப்படி சென்று உட்காருகிரீர்களோ ? என்ன மன வலிமை உங்களுக்கு!

ஆதி மனிதன் said...

படத்தை பார்த்திருந்தால் நிச்சயம் அழுதிருப்பேன். ஆனால் உங்கள் விமர்சனம் படித்ததினால் விழுந்து விழுந்து சிரித்தேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாந்தி படம் ரிலீசாக வேண்டி சிபி உண்ணாவிரதம். ஈரோடு பரபரப்பு...

Ashok said...

hahahhaha... த.உ.பு.சி. (தரையில் உருண்டு புரண்டு சிரிக்கிறேன்)

Sivakumar said...

"ஹல்லோ...பவர் ஸ்டார் அண்ணனா..கொஞ்சம் திருவொற்றியூர் வந்துட்டு போங்க. ஆமா, ஆமா... பேரு பிரபாகரன்."

அஞ்சா சிங்கம் said...

யோவ் உமக்கு பார்க்க இன்னொரு படம் வந்திருக்கு (இதயத்தில் ஒருவன் )மேலோடி தியேட்டரில் ஓடுது ..
கதாநாயகன் நாமக்கல் எம்.ஜி.ஆர். நடித்திருக்கார் . தில் இருந்தால் அதை பார்த்துட்டு வந்து விமர்சனம் எழுதுங்க ......

Unknown said...

நல்ல விமர்சனம் இன்னும் விளக்கமா எழுதி இருந்தால் சந்தோசப்பட்டிருப்பார்... (நம்ம பவர் ஸ்டார் -அ சொன்னேன்)

Unknown said...

படத்த அஸ்கர்க்கு அனுப்பலாமா ?

Unknown said...

நல்லவேளை நான் ஒருத்தந்தான் படம் பார்த்தேன்னு நினைச்சேன், எனக்கு இன்னொரு கம்பெனியும் இருக்கு, பவர் ஸ்டார் வாழ்க வாழ்க :-)

Unknown said...

காலையில் கே .டிவியில் வீராசாமி படம்பார்த்தேன் .இரண்டொரு காட்சி தான் பார்த்தேன் அதற்கே எனக்கு ஒவ்வாமை ஆகிவிட்டது ,நீர் என்னவென்றால் இந்த படத்திற்கு சென்று மீண்டு திரும்பி வந்திருக்கிறாயே ,ஆச்சிரியம்தான்

Sivakumar said...

//அஞ்சா சிங்கம் said...
யோவ் உமக்கு பார்க்க இன்னொரு படம் வந்திருக்கு (இதயத்தில் ஒருவன் )மேலோடி தியேட்டரில் ஓடுது ..
கதாநாயகன் நாமக்கல் எம்.ஜி.ஆர். நடித்திருக்கார் . தில் இருந்தால் அதை பார்த்துட்டு வந்து விமர்சனம் எழுதுங்க ......//

பிரபா செல்வினை மடக்கி போடுங்க..எஸ்கேப் ஆவக்கூடாது. அடுத்த ஆடு அவர்தான்.

yeskha said...

யோவ்... எப்படியய்யா இந்த மாதிரி படத்தையெல்லாம் தைரியமா போயி பார்க்குறீங்க... நாமல்லாம் கமல், ரஜினி, மணிரத்னம், ஏ.ஆர். முருகதாஸ் கோஷ்டிகளுக்கே கரெக்ஷன் சொல்ற ஆளுகளாச்சே...

ஆனா சாமி... போட்டோஸை பார்த்துகிட்டே விமர்சனத்தை படிச்சா அது பட்டையைக்கிளப்புது போங்க..

Ram said...

பதிவை போடாதய்யானு சொன்னா போட்டு கடுப்பேத்துறியே மக்கா.!!

aavee said...

விமர்சனம் தூள் கிளப்பிருச்சு!! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது!!
ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது உண்மைதான்!

அன்பரசன் said...

ஹா ஹா...
:)

அமுதா கிருஷ்ணா said...

கமலா தியேட்டரில் ஓசியில் படம் பார்க்க போற வரவங்களை பிடிக்கிறார்கள் என்று 3 நாட்கள் முன்னாடியே என் பதிவில் எழுதி இருந்தேனே. அதை படிச்சுட்டு, அங்க போயிருக்கலாம்.110 ரூபாயாவது மிச்சம்.விதி கொடியது.

Suthershan said...

மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!

Anonymous said...

yov.superstar baba-va idhoda compare pannittiye..

sarujan said...

(இந்த லட்சணத்தில் போஸ்டர்களில் பிட்டுப்பட ரேஞ்சுக்கு போஸ் வேறு கொடுத்திருக்கிறார்கள்.)@¨இது சூப்பர் விமர்சனம்

Philosophy Prabhakaran said...

@ Suthershan, சி.பி.செந்தில்குமார், ♔ம.தி.சுதா♔, சேலம் தேவா, நிரூபன், முத்துசிவா, விக்கி உலகம், தோழி பிரஷா, !* வேடந்தாங்கல் - கருன் *!, கே.ஆர்.பி.செந்தில், கோவை நேரம், Speed Master, Cable Sankar, Chitra, MANASAALI, செங்கோவி, கக்கு - மாணிக்கம், ஆதி மனிதன், ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), Don Ashok, ! சிவகுமார் !, அஞ்சா சிங்கம், ஜ.ரா.ரமேஷ் பாபு, இரவு வானம், நா.மணிவண்ணன், yeskha, தம்பி கூர்மதியன், கோவை ஆவி, அன்பரசன், அமுதா கிருஷ்ணா, sarujan

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Suthershan
// சூப்பர்... பார்த்தே ஆகணும்... ஹ ஹா ஹ ஹா ஹ ஹா //

முந்துங்கள்... படத்தை திரையரங்கிலிருந்து தூக்கிவிடப் போகிறார்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// டைட்டிலிலேயே ஏதோ உள் குத்து இருக்கே? //

கண்டுபிடிச்சிட்டீங்களா...

// யோவ்.. இடைவேளை வரை படத்தை பார்த்ததுக்கு இங்கே பார்த்திருக்கலாம் //

நீங்க வேற...., இதுக்கே பாவம் சுத்திக்கப்போகுதுன்னு நான் பயந்துட்டு இருக்கேன்...

// பிரபாவுக்கு மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா //

உங்க ஆசையை யாரோ ஒருத்தர் நிறைவேத்திட்டார்... சந்தோஷமா...

Philosophy Prabhakaran said...

@ ♔ம.தி.சுதா♔
// அடடா அப்ப இது தமிழ் சினிமாவா சரி சரி சந்தர்ப்பம் வரும் போது பார்ப்போம்... //

சீரியஸா புரிஞ்சிக்கிட்டீங்க போல... சரி, பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// வணக்கம் சகோதரம், நலமா?
இன்று தான் உங்களின் வலைப் பக்கம் நோக்கி முதல் வருகை. //

நலம்... முதல் வருகைக்கு பூச்செண்டு...

// சிபி இன்னும் ஒரு சில படங்கள் வரவில்லை எனும் காரணத்தால் மௌன விரதம் இருப்பதாக கேள்வி. உண்மையா? //

உண்மைதான்... போன் நம்பர் தருகிறேன்... நீங்களே கேட்டுப் பாருங்களேன்...

// அப்ப நீங்களும் ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமே? //

ம்ம்ம் கூட்டிட்டு போயிருக்கலாம்... ஆனா அப்படி கூட்டிட்டு போனா படத்தை ரசிக்க முடியாதே...

// ஆறு வித்தியாசங்கள் அல்ல. ஆறிற்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. //

ஆஹா இப்படி முரட்டுத்தனமா கண்டுபிடிக்கிறீங்களே...

Philosophy Prabhakaran said...

@ முத்துசிவா
// நம்ம பவர் ஸ்டாருக்கு இன்னும் ஒரு 5 படம் லைன்ல இருக்கு... //

ஆமாம் விகடனில் தலைவர் பேட்டி படித்தேன்... ஆனந்ததொல்லையில் தமிழ் சினிமாவே பார்க்காத புது வில்லன் கேரக்டராம்... திருமாவில் ஆறு கெட்டப்பாம்....

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// நண்பா உங்க இதயம் எதால் செய்யப்பட்டது விளக்கவும் //

எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா...

Philosophy Prabhakaran said...

@ Speed Master
// சத்தியமா சொல்றேன் நீங்க இனிமேல் படவிமர்சன் போட்டா வரவே மாட்டேன் //

அப்படி எல்லாம் சொல்லப்பிடாது... அடுத்த வாரம் நாமக்கல் எம்.ஜி.ஆர் போடுறேன்... தயாரா இருங்க...

Philosophy Prabhakaran said...

@ Cable Sankar
// நானே யோசிச்சிட்டு இருக்கிறப்ப ஆனாலும் ரொம்பத்தான் தைரியம்யா.. //

இதைத்தான் பதிவுலையே போடணும்னு நினைச்சேன்... நீங்க, ஜாக்கிஎல்லாம் இந்த படத்தை கண்டிப்பா பார்க்கணும்... அப்பத்தானே எப்படியெல்லாம் ஒரு படம் எடுக்கக்கூடாதுன்னு கத்துக்க முடியும்... என்ன நான் சொல்றது...?

Philosophy Prabhakaran said...

@ MANASAALI
// படம் இன்னும் ஒடுதா? //

இல்லை.... இப்போ தூக்கியிருப்பாங்க...

// என்னா ரொம்ப நாள் ஆளக் கானாம்? //

அது தனிக்கதை... வேறொரு இடுகையில் விளக்குகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆதி மனிதன்
// படத்தை பார்த்திருந்தால் நிச்சயம் அழுதிருப்பேன். ஆனால் உங்கள் விமர்சனம் படித்ததினால் விழுந்து விழுந்து சிரித்தேன். //

எனக்கும் ஒரு கட்டத்தில் அழுகை வந்தது... என்ன பாக்குறீங்க...? ஆனந்தக்கண்ணீர்...

Philosophy Prabhakaran said...

@ Don Ashok
// த.உ.பு.சி. (தரையில் உருண்டு புரண்டு சிரிக்கிறேன்) //

அடடே Rolling On The Floor (ROFL) என்னும் ஆங்கில பதத்தை தமிழில் மொழிப்பெயர்த்த நீவிர் வாழ்க...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// "ஹல்லோ...பவர் ஸ்டார் அண்ணனா..கொஞ்சம் திருவொற்றியூர் வந்துட்டு போங்க. ஆமா, ஆமா... பேரு பிரபாகரன்." //

வரச்சொல்லுங்க... நானும் அந்த ஜீவனை நேரில் பார்க்க வேண்டும்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// யோவ் உமக்கு பார்க்க இன்னொரு படம் வந்திருக்கு (இதயத்தில் ஒருவன் )மேலோடி தியேட்டரில் ஓடுது .. //

மெலோடியா, சைதை ராஜ் ஆ...? சரியா சொல்லுங்க... முடிஞ்சா வர்ற ஞாயிறு பார்க்கிறேன்...

// கதாநாயகன் நாமக்கல் எம்.ஜி.ஆர். நடித்திருக்கார் . //

நான் ரொம்ப நாளாவே அவரோட விசிறி தெரியுமோ...???

// தில் இருந்தால் அதை பார்த்துட்டு வந்து விமர்சனம் எழுதுங்க ...... //

லத்திகாவையே பார்த்தாச்சு... அப்புறமென்ன...

Philosophy Prabhakaran said...

@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// இன்னும் விளக்கமா எழுதி இருந்தால் சந்தோசப்பட்டிருப்பார்... //

பதிவர்கள் வாயில நுரை தள்ளியிருக்கும்... பரவாயில்லையா...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// நல்லவேளை நான் ஒருத்தந்தான் படம் பார்த்தேன்னு நினைச்சேன், எனக்கு இன்னொரு கம்பெனியும் இருக்கு, பவர் ஸ்டார் வாழ்க வாழ்க :-) //

உங்களைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்... அடுத்தமுறை சென்னை வந்தால் தவறாமல் தரிசனம் தரவும்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// காலையில் கே .டிவியில் வீராசாமி படம்பார்த்தேன் //

நான் இங்கே லேட்டாக எழுந்துவிட்டு தவறவிட்டதை எண்ணி வருந்திக்கொண்டிருந்தேன்...

Philosophy Prabhakaran said...

@ yeskha
// யோவ்... எப்படியய்யா இந்த மாதிரி படத்தையெல்லாம் தைரியமா போயி பார்க்குறீங்க... //

Confidence...!!!

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// பதிவை போடாதய்யானு சொன்னா போட்டு கடுப்பேத்துறியே மக்கா.!! //

அப்புறம் பதிவுலகிற்கு யார் பதில் சொல்றது...

Philosophy Prabhakaran said...

@ அமுதா கிருஷ்ணா
// கமலா தியேட்டரில் ஓசியில் படம் பார்க்க போற வரவங்களை பிடிக்கிறார்கள் என்று 3 நாட்கள் முன்னாடியே என் பதிவில் எழுதி இருந்தேனே. அதை படிச்சுட்டு, அங்க போயிருக்கலாம்.110 ரூபாயாவது மிச்சம். //

நான்தான் அதுக்கு முன்னாடியே படத்தை பார்த்துட்டேனே...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// yov.superstar baba-va idhoda compare pannittiye.. //

நினைச்சேன்... யாராவது ஒருத்தர் கண்டிப்பா கேட்பாங்கன்னு... சரி விடுங்க ஃபீல் பண்ணாதீங்க...

Thamira said...

பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். நீங்கள் ஒரு தியாகி பாஸ்.!

மனம் திறந்து... (மதி) said...

//"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதே அந்தக்குறள். ங்கொய்யால அதை ஏன் பர்ஸ்ட் நைட்டுல பாடுறாருன்னுதான் எனக்கு புரியவே இல்லை.//

நீங்க கல்யாணமாகாத/ விவரமறியாத சின்னப் பையன் போலிருக்கு! அதான் இப்படிப் பேசுறீங்க! எனக்கு என்னவோ இது ரொம்பவும் பொருத்தமான நேரத்திலே நினைவூட்டப்பட்ட சரியான அறிவுரையாத்தான் தோணுது! :-))) நம்பலேன்னா,"சி.பி.செ" கிட்ட வேணும்னா கேட்டுப் பாருங்களேன்!

சாமக்கோடங்கி said...

அந்த டிக்கட்டுக்கு செலவு பண்ண காச விட அதிகமா டாக்டருக்கு செலவு பண்ண வேண்டி வந்திருக்குமே..?? இதுக்கு பேசாம, நூறு பிச்சைக் காரர்களுக்கு தானம் செய்திருக்கலாம்.. புண்ணியமாவது மிச்ச்சமாயிருக்கும்.. இப்போது புண் மட்டுமே மிச்சம்..

ganesh said...

இந்த மாதிரி படம் தயாரிச்ச பணத்தை படிக்க வசதியில்லாத மாணவர்களை தத்தெடுத்து படிக்க வச்சுருந்தா சமுதாயம் முன்னெறும்...

ம்ம்ம்...கரடியா கத்துனாலும் இவனுங்க திருந்தவே மாட்டானுங்க...
"என்ன கொடுமை சார் இது"

(நான் டிவி ல டிரெய்லர் தான் பார்த்தேன்)தப்பிச்சேன் டா சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி...!நன்றி...!நன்றி...!
எங்கள் தானைத்தலைவன் பவர்ஸ்டாரின் படத்தை பார்த்து முடித்து விமர்சனம் எழுத முடியும் என்று நிரூபித்ததற்கு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இப்படிப்பட்ட பரபரப்பான பதிவுலக சூழ்நிலையில் சிபியை தொடர்புக்கொண்டோம். மனிதர் சாந்தி அப்புறம் நித்யா ரிலீஸ் ஆகாததால் கவலையுடன் கட்டிங் அடித்துக்கொண்டிருந்தார். /////

இதுக்கு பேசாம அவரே படம் எடுத்துடலாம்........ எத்தன தடவ நம்பி நம்பி ஏமாறுரது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>>
- இடைவேளையின் போது யதார்த்தமாக திரும்பிப்பார்த்தால் ஒரு ஜோடி பதார்த்தமாக ரொமான்ஸ் செய்துக்கொண்டிருந்தனர்.


யோவ்.. இடைவேளை வரை படத்தை பார்த்ததுக்கு இங்கே பார்த்திருக்கலாம்///////

சிபி இன்னும் பச்ச புள்ளையாவே இருக்காரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////லத்திகா விவகாரம் குறித்து விசாரித்தபோது "அந்த ஹீரோவின் முகத்தை பார்த்தாலே வாமிட் வருது" என்று கருத்து தெரிவித்தார். //////

பாவம் விடுங்க, நாளைக்கே பவர் ஸ்டாரோட அப்பாயின்மெண்ட்டுக்காக கியூவுல நிக்க வேண்டி வரும் பாருங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////(ம்ம்ம்... அமைதி அமைதி பவர் ஸ்டார் ரசிகர்கள் கோபம் கொள்ள வேண்டாம்). அவருக்கே அந்த நிலையென்றால் நமக்கு...!!! ////////

நமக்கென்ன... புடுங்கல்தான்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தலைவர் ஓடிவரும் ஸ்டைலைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். பெருச்சாளி பொந்துக்குள்ள ஓடுமே அதே போன்றதொரு ஓட்டம்.///////

ஆஹா என்ன ஒரு ஸ்டைல்..... ஒரு மஹா நடிகனின் அடையாளத்தை காண்கிறேன்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இரண்டு கதாநாயகிகள். இருவருமே எப்பொழுதும் இரவாடையுடனேயே தரிசனம் தருகின்றனர். இருப்பினும் நமக்கு தப்பாவே பார்க்கத் தோணலை.(அவ்வளவு நல்லவனாடா நீ...? என்று சந்தேகிக்க வேண்டாம். இரண்டுமே மொக்கை பிகருங்க). ////////

அட.. படத்துல இதுகூட பாக்கமுடியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு மேல முடியலீங்கோ....

GTR said...

Goa is better than Tamil Padam!!
1. Endhiran
2. VTV
3. Raavan
4. Aaiyathil Oruvan
5. Boss E Baskaran(Only for Santhanam)

கவிதை பூக்கள் பாலா said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

Anonymous said...

varumkala super hero......varunkal pm .....varunkala cm........