20 September 2011

கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் விருதுநகரில் இருந்து வேலை தேடி வந்திருந்தேன். ஏற்கனவே என் பால்ய நண்பன் சரவணன் ஏதோ ஒரு திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருப்பதாக சொல்லி அட்ரஸ் கொடுத்திருந்தான். நானும் அங்கேயே தங்கிக்கொள்வதாக உத்தேசம் செய்திருந்தேன். அந்த மேன்ஷனில் தான் பரந்தாமனை முதல்முறையாக பார்த்தேன். இவனும் இனிமே நம்மளோட தான்டா தங்கப்போறான் என்று பரந்தாமனிடம் என்னை அறிமுகப்படுத்தினான் சரவணன். எந்த ஊர், என்ன படிச்சிருக்கீங்க என்று விசாரிப்புகளோடு அன்றைய பொழுது கழிந்தது. அவன் தமிழகத்தின் ஒரு வடமாவட்டத்தில் இருந்து வந்திருப்பதாகவும், எம்.பி.ஏ படித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிந்துக்கொண்டேன்.

பரந்தமானைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வயது சுமார் 22 அல்லது 23 இருக்கும். ஐந்தே முக்கால் அடி உயரம், சுமாரான நிறம்தான் என்றாலும் ஆள் சினிமா ஹீரோ மாதிரி இருப்பான். பெயர்தான் பரந்தாமன் என்று பழைய பஞ்சாங்கமாக இருந்தாலும் ஆள் செம மாடர்ன். அவன் கட்டம், கோடு போட்ட சட்டையெல்லாம் அணிந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் டீ-ஷர்ட், நெக் பனியன், ஜீன்ஸ் என்று மேலைநாட்டு வகையறாக்கள் தான். ஊரில் லேட்டஸ்ட் ஃபேஷன் என்ன என்பதை அவனைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். யாராவது பரந்தாமன் என்று கூப்பிட்டால் கோபப்படுவான். பரத் என்று அவனே சுருக்கிக்கொண்டேன். 

பரந்தாமனுக்கு, இல்லையில்லை பரத்துக்கு சுத்தம் பற்றிய பழமொழிகள் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குளிக்கிறேன் என்ற பெயரில் தினமும் உடம்பில் தண்ணீர் தெளித்துவிட்டு வருவான். அதுசரி, சென்னையின் தண்ணீர் பிரச்னைக்கு அவன் குளிக்கும் முறைதான் சரியானதும் கூட. ஆனால் சமயங்களில் அதுவும் செய்யமாட்டான். ஹேங்கரில் எந்த டீ-ஷர்ட் பளிச்சென்று தொங்குகிறதோ அதை எடுத்து மாட்டிக்கொள்வான். அது யாருடையது, எத்தனை நாள் துவைக்காதது என்று எதைப் பற்றியும் கவலைப்படமாட்டான்.

மேன்ஷனில் இருந்து வெளியேறுவதற்கு அரைமணிநேரம் முன்பே தயாராகிவிடுவான். அது எதற்கு என்பது அவன் தலை வாரும்போதுதான் புரியும். தலைமுடி கலையாமல் இருக்க வேண்டுமென்று ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொண்டு சிகையலங்காரம் செய்வான். அது கலைந்துவிட்டதா என்று நொடிக்கு நூறுமுறை தொட்டுத்தொட்டு பார்த்துக்கொள்வான். அப்புறம் பவுடர், அதை போட்டு முடித்தபின்பு அவனுடைய கலரே கொஞ்சம் மாறியிருக்கும். இவ்வளவும் முடிந்தபிறகுதான் வெளியே கிளம்புவான். அவனுடைய நடை இருக்கே, “மெல்ல நட... மெல்ல நட...” பாடலில் சிவாஜி கணேசன் ஸ்டைலாக நடந்துவருவாரே அப்படியிருக்கும்.

அப்போது செல்போன் பரவ ஆரம்பித்திருந்த சமயம். நானெல்லாம் செல்போனை கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் பார்ப்பேன். அவன் ஏதோ பிறக்கும்போதே செல்போனுடன் பிறந்ததுபோல நடந்துக்கொள்வான். மாலை நேரங்களில் அவன் போன் பேசாமல் இருந்தால் அது அதிசயம்தான். சில நேரங்களில் போனில் ஊருக்கே கேட்கும்படி சத்தம்போட்டு பேசுவான். பல நேரங்களில் பக்கத்தில் போய் உட்கார்ந்தாலும் கேட்காதபடி கிசுகிசுப்பான். அதுவும் வராந்தாவில் காயப்போட்டிருக்கும் ஜட்டியை நோன்டிக்கொண்டே பேசுவதில் அவனுக்கொரு அலாதிப்பிரியம். ஏதோ நந்தவனத்தில் பூக்களை வருடிக்கொண்டிருப்பதாக கற்பனை செய்துக்கொள்வான் போல. இப்படியெல்லாம் நடந்தால் பெண்தோழியுடன் பேசுகிறான் என்று நாமே புரிந்துக்கொள்வான். ஒரு சின்ன கரெக்ஷன் பெண்தோழி அல்ல பெண்தோழிகள். பேசி முடித்தவுடன் கிண்டலடிக்கும் நோக்கில் யாருடா என்றால் அண்ணி, அத்தை, சித்தி என்று ஏதாவது புளுகுவான்.

இப்படியெல்லாம் அலப்பறை கொடுக்கிறானே, யாரையோ காதலிக்கிறான் போல என்று நினைத்தால் நாம் அடிமுட்டாள்கள். நிறைய பெண்களுடன் நட்பாக பழகுவதாக சொல்லிக்கொள்வான் ஆனால் காதல், கருமாந்திரமெல்லாம் இல்லை. தொட்டு பேசுவான், தோளில் கை போடுவான், கன்னம் கிள்ளுவான் ஆனால் இதெல்லாம் ஜஸ்ட் ஃபிரண்ட்ஷிப்டான்னு கூலா சொல்லுவான். ஏதோ இவனுக்கு பெண்கள் மீது ஈர்ப்பே இல்லாதது போலவும் அவர்கள் வேண்டுமென்றே இவன் பின்னால் அலைவது போலவும் காட்டிக்கொள்வான். சமயங்களில் அந்த பெண்தோழிகளை பற்றி தாறுமாறாக எங்களிடம் புறம் பேசுவான். அந்த பெண்தோழிகளிடம் எங்களைப் பற்றி இப்படித்தான் புறம் பேசுவான் என்று நானும் சரவணனும் புரிந்துக்கொள்வோம்.

பரத்துக்கு கெட்டபழக்கங்கள் என்று சொல்லப்படுபவை எதுவும் கிடையாது. எப்பொழுதாவது எங்களுடன் மதுக்கடைக்கு வருவான். ஆனால் அவன் மினிபீர் தாண்டி நான் பார்த்ததில்லை. அதுக்கே இல்லாத அலப்பறை கொடுப்பான். சில பெண்களிடம், “அல்கஹால்...? நோ நோ நான் அந்தமாதிரி பையன் இல்லைடா...” என்றும், சில பெண்களிடம், “நானெல்லாம் மொடாக்குடிகாரன் தெரியுமா..? ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேன்...” என்றும் ஆளுக்கு தகுந்தாற்போல கதை அளப்பான்.

உள்ளுக்குள்ளே ஆயிரம் அழுக்கு இருந்தாலும், வெளியுலகிற்கு நான் ரொம்ப டீசன்ட்டாக்கும் என்று காட்டிக்கொள்வான். நாட்டுநடப்பை பற்றி எல்லாம் அவன் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. ஏன் அவன் ஊரில் யார் எம்.எல்.ஏ என்றுகூட அவனுக்கு தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவனைச் சுற்றியுள்ள ஒரு குறுகிய வட்டம் மட்டுமே.

நாளடைவில் வடசென்னை பக்கமுள்ள ஒரு மெக்கானிக்கல் நிறுவனத்தில் வேலை கிடைக்க நான் அம்பத்தூரில் குடிபுகுந்துவிட்டேன். சரவணனும் சொந்த ஊருக்கு போய்விட்டான். கடந்தவாரம் நண்பர்கள் வற்புறுத்தியதால் எக்ஸ்பிரஸ் அவன்யூவிற்கு சினிமா பார்க்க சென்றிருந்தேன். அதே பரந்தாமன் தான். யாரோ ஒரு இளம்பெண்ணை இடுப்போடு சேர்த்து அணைத்தபடி சென்றுக்கொண்டிருந்தான். அவனும் என்னைப் பார்த்தது போலதான் இருந்தது, ஆனால் பார்க்காதது போல கடந்துவிட்டான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

38 comments:

Philosophy Prabhakaran said...

மேற்கண்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல...

(புரிஞ்சிக்கோங்க...)

Philosophy Prabhakaran said...

பதிவில் நான் என்று குறிப்பிட்டிருப்பதும் நானல்ல...

kobiraj said...

சூப்பர் .

Unknown said...

appa andha bharath needhannu sollu

சக்தி கல்வி மையம் said...

பதிவில் நான் என்று குறிப்பிட்டிருப்பதும் நானல்ல...///

நம்பிட்டோம்ல...

Unknown said...

kekkurennu thappa nenaikaadhe sari venam adhu vidu thappaana kelvidhaan

Philosophy Prabhakaran said...

@ kobiraj
// சூப்பர் . //

நன்றி...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// appa andha bharath needhannu sollu //

அண்ணே இது சுயசொறிதல் பதிவல்ல...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// நம்பிட்டோம்ல... //

நான் எப்போ விருதுநகர்ல இருந்து வெலை தேடி சென்னைக்கு வந்தேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// kekkurennu thappa nenaikaadhe sari venam adhu vidu thappaana kelvidhaan //

மணி... நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க... கேட்டால்தான் கிடைக்கும்ன்னு கேபிளே சொல்லியிருக்கார்...

Unknown said...

onnum illa bharath iduppa suthi kai pottu kondu pona penin iduppu size enna theriyanum avvalavuthaan

Philosophy Prabhakaran said...

தமிழ்மணம் புட்டுக்குச்சு டோய்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// onnum illa bharath iduppa suthi kai pottu kondu pona penin iduppu size enna theriyanum avvalavuthaan //

ப்பூ இவ்வளவுதானா... சைசெல்லாம் நான் அளந்து பாக்கல... ஆனா இடுப்பு அடுப்பு மாதிரி இல்லாம எடுப்பா தான் இருந்துச்சு...

Unknown said...

ennadhu ivvalavudhaana ? apparam unmaile oru mosamaana kelviyai kettuduven paathukka

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ennadhu ivvalavudhaana ? apparam unmaile oru mosamaana kelviyai kettuduven paathukka //

என்னாது...?

'பரிவை' சே.குமார் said...

பதிவில் நான் என்று குறிப்பிட்டிருப்பது நான் அல்ல - அப்போ இது 'உண்மை'க் கதை இல்லையா?

நாய் நக்ஸ் said...

Ithu true story thane ??

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உங்கள் எழுத்தில் ஒரு வசீகரம் உள்ளது .
வழக்கம் போல காணப்படும் காமெடி
சற்று குறைவு ...மற்றபடி அசத்தல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவில் நான் என்று குறிப்பிட்டிருப்பதும் நானல்ல...////

நீங்கதான் அந்த பரந்தாமன்..ச்சீ.. பரத்னு எங்களுக்கு தெரியாதா? இதெல்லாம் போய் சொல்லிக்கிட்டு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Philosophy Prabhakaran said...
@ நா.மணிவண்ணன்
// onnum illa bharath iduppa suthi kai pottu kondu pona penin iduppu size enna theriyanum avvalavuthaan //

ப்பூ இவ்வளவுதானா... சைசெல்லாம் நான் அளந்து பாக்கல... ஆனா இடுப்பு அடுப்பு மாதிரி இல்லாம எடுப்பா தான் இருந்துச்சு...
///////

எல்லாமே வெளங்கிருச்சு......

அஞ்சா சிங்கம் said...

என்ன அவ்ளோதானா?
முடிஞ்சிரிச்சா?
தொடரும் போட மறந்துட்டீங்களா?

அஞ்சா சிங்கம் said...

இப்படி நிறைய பரத் இருக்காங்க .....
ஊரு ஊருக்கு ஒரு சின்னத்தம்பி இருக்கிற மாதிரி ..................

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
// பதிவில் நான் என்று குறிப்பிட்டிருப்பது நான் அல்ல - அப்போ இது 'உண்மை'க் கதை இல்லையா? //

புனைவு... கொஞ்சம் உண்மையும் இருக்கு...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Ithu true story thane ?? //

குமாருக்கு அளித்த பதிலை படித்துக்கொள்ளவும்...

Philosophy Prabhakaran said...

@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// வழக்கம் போல காணப்படும் காமெடி
சற்று குறைவு ...மற்றபடி அசத்தல் //

அடடே so sad...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நீங்கதான் அந்த பரந்தாமன்..ச்சீ.. பரத்னு எங்களுக்கு தெரியாதா? இதெல்லாம் போய் சொல்லிக்கிட்டு.... //

பேசாம நானே உண்மையை சொல்லிடுறேன்... நான் அவன் இல்லை... இது என்னுடைய நண்பனைப் பற்றியது... அவனுடைய பெயரைக் குறிப்பிட்டால் வருத்தப்படக்கூடும் என்று அடக்கி வாசித்தேன்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// என்ன அவ்ளோதானா?
முடிஞ்சிரிச்சா?
தொடரும் போட மறந்துட்டீங்களா? //

பதிவர் சந்திப்பில் கள்ளி சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு இப்பொழுதெல்லாம் பதிவின் அளவை குறைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// இப்படி நிறைய பரத் இருக்காங்க .....
ஊரு ஊருக்கு ஒரு சின்னத்தம்பி இருக்கிற மாதிரி .................. //

சின்னதம்பின்னு என்னைத்தானே சொல்றீங்க...

Philosophy Prabhakaran said...

யோவ்... என்னய்யா இத்தனை பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்க ஆனா தமிழ்மணத்துல ஓட்டே விழலை... ஒருவேளை பதிவு அவ்வளவு மொக்கையா இருக்கா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Philosophy Prabhakaran said...
யோவ்... என்னய்யா இத்தனை பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்க ஆனா தமிழ்மணத்துல ஓட்டே விழலை... ஒருவேளை பதிவு அவ்வளவு மொக்கையா இருக்கா...?//////

பிரபாகரன், தமிழ்மணத்துல பிரச்சனை இருக்கு போல, ஓட்டு திடீர்னு ரீசெட் ஆகிடுது, அதாவது 1-க்கு போய்டுது.... அந்த மாதிரி ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

இந்த கதையில் சின்ன டாக்குட்டர் நடிச்சா அமோக வெற்றி கிடைக்கும் ஹி ஹி எப்பூடீ....

Anonymous said...

ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் நீங்கள் சொல்வது போல ஒரு ப்ளே பாய் இருக்கத்தான் செய்கிறார்கள்

Anonymous said...

ஹஹஹா பரந்தாமன் பற்றிய வர்ணனைகள் அருமை )))

அந்த பையன் இதை வாசிப்பானா )))

Sivakumar said...

சுயசரிதை பாகம் இரண்டு விரைவில் வரட்டும். 'அதை' மறக்காம எழுதுங்க.

Unknown said...

நல்ல கதையும்; நல்லா கதையும் எழுதுறீங்க பிரபாகரன்.

Prem S said...

சிறுகதை நடை அருமையாக வருகிறது அன்பரே உங்களுக்கு கதை எழுதலாமே !உங்கள் கதை என்பதாலா!

middleclassmadhavi said...

இயல்பான நகைச்சுவையான நடை! வாழ்த்துகள்!

Anonymous said...

கற்பனை?

நம்பிட்டோம்...-:)