9 September 2011

Grotesque – சாடிஸத்தின் உச்சம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

“நாயை மிதிப்பானேன்... எதையோ சுமப்பானேன்...” என்றொரு பழமொழி உண்டு. அப்படித்தான் ஆகிப்போனது என் நிலைமை. ஏதோ எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாருன்னுற மாதிரி நானும் அவ்வப்போது சில உலகப்படங்கள் பார்ப்பேன். ஆனால் அது இப்படி வந்து முடியும் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. ஆமாம், நான் கொஞ்சம் அரைத்த மாவு சினிமாவை தவிர்த்து வித்தியாசமான படங்களை பார்க்க விரும்பவே செய்வேன். அதற்காக இப்படியா...!


- Title: Grotesque
- Tagline: Saw and Hostel were just Appetisers
- Country: Japan
- Language: Japanese
- Year: 2009
- Genre: Splatter, Horror
- Cast: Tsugumi Nagasawa, Hiroaki Kawatsure, Shigeo Ôsako
- Director: Kôji Shiraishi
- Producers: Kazue Udagawa, Kyôsuke Ueno
- Cinematographer: Yôhei Fukuda
- Editor: Tsuyoshi Sone
- Music: Kazuo Satô
- Length: 73 Minutes 


இளம்ஜோடி ஒன்று, ஒருவருக்கொருவர் முதல்முறையாக தங்கள் காதலை பரிமாறிக்கொள்கின்றனர். பின்னர் இருவரும் மனம் ஒத்து கைகோர்த்தபடி சாலையில் நடந்து செல்கின்றனர். அப்போது பின்னாலிருந்து ஒருவன் இருவரையும் சுத்தியலால் தாக்கி கடத்திச்செல்கிறான்.

அதன்பிறகு வரும் அத்தனையும் கோரமான காட்சிகள். இதன் பின்பு வரும் பத்திகளை வெள்ளை நிற எழுத்துருவில் பதிகிறேன். மன தைரியம், சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டும் பின்வரும் பத்திகளை செலக்ட் செய்து படித்துக்கொள்ளவும். மற்றவர்களுக்கு ஒற்றை வரியில், அவர்கள் இருவரும் மிகவும் மோசமான முறையில் கொடுமைப்படுத்தப்பட்டு இறுதியில் கொல்லப்படுகிறார்கள்.

இருவரும் கை, கால் அசைக்கமுடியாதபடி, வாய் திறந்து கூச்சல் போடாத படி கட்டி வைக்கப்படுகின்றனர். முதல் கட்டமாக அந்த இளைஞனின் நாக்கை ஒரு கூர்மையான கம்பியால் குதறுகிறான். அடுத்து அவனுடைய அடிவயிறும் குதறப்படுகிறது. அடுத்தநாள், இருவரும் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மறுநாள், இருவரின் கைவிரல்களும் நறுக்கப்படுகின்றன. அந்த பெண்ணுக்கு கூடுதலாக வலது கையையும், சொல்லவிரும்பாத உறுப்பு ஒன்றினையும் வெட்டுகிறான். இளைஞனின் கைவிரல்களை மாலையாக செய்து பெண்ணின் கழுத்தில் மாட்டுகிறான். Vice Versa. அவர்கள் இருவரும் இறந்துவிடாமல் இருக்க மருத்துவ சிகிச்சையும் அளிக்கிறான். (அவன் ஒரு மருத்துவன்).

அடுத்ததாக, இளைஞனிடம் வந்து அவன் சித்திரவதைகளை எல்லாம் தாங்கிக்கொண்டால் அந்த பெண்ணை சித்தரவதை செய்யாமல் விட்டுவிடுவதாக கூறுகிறான். அவள் மீது கொண்ட காதலால் அவனும் ஒப்புக்கொள்கிறான். அவனுடைய அந்தரங்க உறுப்பின் கீழ் ஆணி அடிக்கிறான். அவனுடைய பிறப்பு உறுப்பை வெட்டி எடுக்கிறான். அதைக் கையில் வைத்துக்கொண்டு தான் திருப்தி அடைந்துவிட்டதாக மகிழ்கிறான். எனவே அவர்கள் இருவரும் குணமடைந்ததும் அவர்களை விடுவித்து விடுவதாக கூறி இருவருக்கும் சிகிச்சை அளிக்கிறான்.

இளம்ஜோடியும் தாங்கள் விடுதலையாகப் போவதை எண்ணி ஆறுதலடைகின்றனர். விடுவிக்கப்பட்டதும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கின்றனர். ஆனால், அதற்குள்ளாக சைக்கோ மீண்டும் தன் பழைய நிலைக்கு திரும்புகிறான். கடைசியாக ஒரு சோதனை, இதில் நீ வெற்றி பெற்றால் உன் காதலியை விடுவித்துவிடுவேன் என்று இளைஞனிடம் கூற, அவனும் சம்மதிக்கிறான். அவனுடைய வயிற்றைக் கிழித்து, குடலை உருவி ஒரு சங்கிலியில் பிணைத்துவிட்டு அங்கிருந்து பத்தடி தூரத்தில் இருக்கும் காதலியின் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து விடுமாறு கூறுகிறான். அவனும் உருவிய குடலுடன் மெதுவாக காதலியை நெருங்குகிறான். ஒரு கட்டத்தில் குடல் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதால் அவன் முன்னேற முடியாமல் போக, தன் குடலை தானே அறுத்தெறிந்து விட்டு முன்னேறுகிறான். ஆனால், காதலி கட்டப்பட்டுள்ள கயிற்றை அறுக்கும் முன்பு அவன் உயிரிழந்துவிடுகிறான்.

பின்னர் காதலி அந்த கயவனிடம் மதுரையை எரித்த கண்ணகி மாதிரி ஒரு முழுநீள ரிவஞ்ஜ் டயலாக் பேசுகிறாள். இதைக்கேட்டு கொதிப்படைந்த சைக்கோ அவள் தலையை துண்டாக்குகிறான். திரை இருள்கிறது. மீண்டும் ஒரு இளம்பெண்ணை சைக்கோ கடத்துவதாக காட்டுவதோடு டைட்டில் போடப்படுகிறது.

மேலே சொன்னதெல்லாம் ஒரு இருபது சதவிகிதம் தான். படத்தை பார்த்தால் எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் நொந்துபோய் விடுவார்கள்.

சரி, இந்தப்படத்தில் ஏன் இப்படியொரு கதையமைப்பு. இந்தப்படத்தின் மூலமாக இயக்குனர் சொல்ல விரும்பும் மெசேஜ் என்ன...? இருக்கட்டும், மெசேஜ் எதுவும் தேவையில்லை... குறைந்தபட்சம் படம் பார்ப்பவர்களை கவலைகளை மறந்து சிரிக்க வைத்தாரா...? அல்லது ரசிக்க வைத்தாரா...? என்றால் எதுவுமே இல்லை. இந்தப்படம் குரூர மனப்பான்மை கொண்ட சைக்கோக்களை மட்டுமே திருப்திப்படுத்தும்.

இப்படியொரு படத்தை ஏன் எடுத்தார்கள் என்று சற்றே யோசிக்கும் முன்பு படத்தின் TAG LINEஐ கவனிக்க வேண்டும். “Saw and Hostel were just Appetisers” – அதாவது அமெரிக்க படங்களான Saw மற்றும் Hostel படங்களில் காட்டிய கோரமான காட்சிகளெல்லாம் உணவுக்கு முன்புக்கு பரிமாறப்படும் ஸ்டார்டர்கள் தானாம். இதுதான் மெயின் கோர்ஸாம். ஆக, அந்த அமெரிக்க படங்களுடன் போட்டி போட்டு நீங்க என்னடா படம் எடுக்குறீங்க நாங்க உங்களை விட கோரமாக படம் எடுப்போம் என்று சவால் விட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். (உனக்கு எதுக்கு இந்த வேல...?)

இது ஒரு விழிப்புணர்வு பதிவு. யாரும் இந்தப்படத்தையோ, இந்த மாதிரி படத்தையோ பார்த்துவிடாதீர்கள். உலகப்படங்கள் பார்க்கும் முன்பு IMDBயிலோ விக்கிபீடியாவிலோ ஒருமுறை ஆராய்ந்துவிட்டு பாருங்கள்.

கொசுறு: இந்தப்படத்தின் சில காட்சிகள் யுத்தம் செய் படத்தில் காப்பியடிக்கப்பட்டுள்ளன.
- ஆட்களை கடத்தும் போது அவர்கள் கடந்து செல்லும் வரை காருக்குள் அமைதியாக காத்திருந்து அவர் கடந்தபிறகு பின்னாலிருந்து தாக்குதல்.
- கடத்தியவர்களின் கை / கைவிரல்களை மிஷின் வைத்து அறுப்பது.

டிஸ்கி: இந்த ஆப்பு நானாக தேடிப்போய் வாங்கியதல்ல. யாரோ ஒரு பெரிய மனுஷன் இது நல்ல படம்ன்னு அவருடைய பதிவில் சொன்னதாக ஞாபகம். அநேகமாக அவர் “டெனிம்” மோகன் என்று நினைக்கிறேன். அவரைத்தான் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

காரிகன் said...

seed என்று ஒரு ஆங்கில படம் இருக்கிறது அதையும் பாருங்கள். ரொம்ப நன்றாக பொழுது போகும்.

சதீஷ் மாஸ் said...

தொப்பி தொப்பி... இதுக்கு தான் நா எந்த ஒ(உ)லக படமும் பாக்கறாது இல்லை....

ஆனால் விமர்சனமும், அதை மறைத்த விதமும் அருமை...

மறைக்கப்பட்ட எழுத்துகள் பயங்கரமாக இருப்பதால் பெண்கள் முயற்சி செய்ய வேண்டாம்....

சதீஷ் மாஸ் said...

@karlmarx said: //seed என்று ஒரு ஆங்கில படம் இருக்கிறது அதையும் பாருங்கள். ரொம்ப நன்றாக பொழுது போகும்.//

சதீஷ் : அப்ப அடுத்தும் இதே போல் ஒரு விமர்சனத்தை எதிபாக்கலாம்...

Carfire said...

///“Saw and Hostel were just Appetisers”////

முதல் பத்தியை படிக்கும் போதே இது புரிந்துவிட்டது மச்சி.... என்ன ஒரு ரசனை அந்த இயக்குனருக்கு.....

////யாரும் இந்தப்படத்தையோ, இந்த மாதிரி படத்தையோ பார்த்துவிடாதீர்கள். உலகப்படங்கள் பார்க்கும் முன்பு IMDBயிலோ விக்கிபீடியாவிலோ ஒருமுறை ஆராய்ந்துவிட்டு பாருங்கள்.//////

ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து விட்டு பின் பார்க்கலாம்....


ஆனா நீங்க எந்த கொலை வெறில முழுப்படத்தையும் பார்த்திங்க??

அஞ்சா சிங்கம் said...

நமக்கு எதுக்கு இந்த உலக படம் எல்லாம் .......?
ஒரு விளம்பரம் .........................

சரி சரி ..இது விஜய் படத்தை விட பயங்கரமா இருக்கும் போல ........................

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// பகிர்வுக்கு நன்றி! //

கருத்துக்கு நன்றி!

Philosophy Prabhakaran said...

@ karlmarx
// seed என்று ஒரு ஆங்கில படம் இருக்கிறது அதையும் பாருங்கள். ரொம்ப நன்றாக பொழுது போகும். //

இப்போதான் விக்கிபீடியாவில் பார்த்தேன்... நான் இந்த ஆட்டத்துக்கு வரலை...

Philosophy Prabhakaran said...

@ சதீஷ் மாஸ்
// மறைக்கப்பட்ட எழுத்துகள் பயங்கரமாக இருப்பதால் பெண்கள் முயற்சி செய்ய வேண்டாம்.... //

தம்பி... இந்தமாதிரி ஏதாவது சொல்லி பல்ப் வாங்காதே... நான் ஏற்கனவே இதுமாதிரி ஒருமுறை சொல்லி "பிரசவ வலியை" தாங்கும் பெண்கள் இதை தாங்கிக் கொள்ள மாட்டார்களா என்று ஒரு பெண் பதிவர் கேட்டார்... நியாயம்தானே...?

Philosophy Prabhakaran said...

@ சதீஷ் மாஸ்
// அப்ப அடுத்தும் இதே போல் ஒரு விமர்சனத்தை எதிபாக்கலாம்... //

ஏற்கனவே Cannibal Holocaust என்றொரு காவியத்தை பதிவிறக்கி வைத்திருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Carfire
// ஆனா நீங்க எந்த கொலை வெறில முழுப்படத்தையும் பார்த்திங்க?? //

நல்ல கேள்வி...? படத்தின் இறுதியில் ஏதாவது knot வைத்திருப்பார்கள், அந்த சைக்கோ ஏன் இப்படி எல்லாம் செய்கிறான் என்று ஏதேனும் நியாயம் கற்பிக்கவோ அல்லது படம் பார்ப்பவர்களுக்கு இந்த படத்தின் மூலம் கூற வருவது என்ன என்று ஏதாவது மெசேஜ் இருக்கவோ செய்யும் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் ஒரு கருமாந்திரமும் இல்லை... தமிழில் நடுநிசி நாய்கள் பார்த்தபோது கடைசியாக child abuse பற்றி ஒரு ஸ்லைடு போட்டார்கள்... அதுகூட இந்த படத்தில் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// சரி சரி ..இது விஜய் படத்தை விட பயங்கரமா இருக்கும் போல ........................ //

விஜயை கலாய்க்கறதில்லைன்னு மங்காத்தா மேல சத்தியம் பண்ணியிருக்கேன்... என் வாயை கிண்டாதீங்க...

பித்தனின் வாக்கு said...

nan padathai parthirunthal kandippaka kumattalil vanthi eduththu iruppen.

Unknown said...

நல்ல வேளை - உலகப் படம் தேடிப் பார்க்கிற அளவுக்கு ஆசை இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தாலும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க மாட்டேன்.

Anonymous said...

வாசிக்கும் போதே இவ்வளவு கொடூரமாய் இருக்கே .........(

Anonymous said...

//அஞ்சா சிங்கம் said...
நமக்கு எதுக்கு இந்த உலக படம் எல்லாம் .......?
ஒரு விளம்பரம் ....//

உலக சரித்திரத்தையே பிரிச்சி மேயிற செல்வினுக்கு உலகப்படமெல்லாம் எம்மாத்திரம்....

N.H. Narasimma Prasad said...

ஏன் பிரபா நமக்கு இந்த வேலை? நாம் என்ன உலகசினிமா ரசிகரா? தேவையா இந்த 'ஆப்பு'?

Anonymous said...

விஜய் படத்திற்கு முன்பு இந்த படம் ஜுஜுபி. ஹா ஹா ஹாஹா

மஹாராஜா

Unknown said...

நல்ல நினைப்புயா உமக்கு!!??

நல்ல வேளை நான் உலக படம் எல்லாம் பாக்குறது இல்லை!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையிலேயே கொடூரம்தான், படிச்சி முடிக்க முடியலை........ நிச்சயமா படிக்க கூடாத ஒண்ணுதான்!

N.Manivannan said...

கில்மா சீன் ஒண்ணுமே இல்லையா ?

சதீஷ் மாஸ் said...

@ சதீஷ் மாஸ்
// மறைக்கப்பட்ட எழுத்துகள் பயங்கரமாக இருப்பதால் பெண்கள் முயற்சி செய்ய வேண்டாம்.... //

தம்பி... இந்தமாதிரி ஏதாவது சொல்லி பல்ப் வாங்காதே... நான் ஏற்கனவே இதுமாதிரி ஒருமுறை சொல்லி "பிரசவ வலியை" தாங்கும் பெண்கள் இதை தாங்கிக் கொள்ள மாட்டார்களா என்று ஒரு பெண் பதிவர் கேட்டார்... நியாயம்தானே...? //

இப்பலாம் பிரசவ வலினா என்னனு யாருக்காவது தெரியுமா? எல்லாம் ஆப்ரேஷன் தான்...

பிரசவ வலி என்பது வேற உணர்வு.. அதற்க்கும் இந்த பதிவின் திகிலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்...

Anonymous said...

வாய்ப்பு கிடைத்தாலும் இந்தப் படத்தை பார்க்க மாட்டேன்...

”தளிர் சுரேஷ்” said...

படிக்கவே பயங்கரமா இருக்கே? எப்படி பார்த்தீங்க? கொடுமைடா சாமி!

Unknown said...

விமர்சனம் படித்துவிட்டு படம் பார்ப்பதன் ,நன்மை இப்பதான் புரியுது.
ஆள விடுடா சாமி.
பாஸ்,நீங்க மோசமானவங்களிலே முக்கியமானவரு.lol

sarujan said...

((உலகப்படங்கள் பார்க்கும் முன்பு IMDBயிலோ விக்கிபீடியாவில.....))
உண்மைதான்

Philosophy Prabhakaran said...

@ பித்தனின் வாக்கு
// nan padathai parthirunthal kandippaka kumattalil vanthi eduththu iruppen. //

ம்ம்ம்ம்... இந்த படம் பார்த்தபிறகு என் கழுத்தை நானே தொட்டுப் பார்த்தால் கூட ஒருமாதிரியாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ அப்பு
// நல்ல வேளை - உலகப் படம் தேடிப் பார்க்கிற அளவுக்கு ஆசை இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தாலும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க மாட்டேன். //

ஆமாப்பு... பார்த்துடாதீங்கப்பு...

Philosophy Prabhakaran said...

@ கந்தசாமி.
// வாசிக்கும் போதே இவ்வளவு கொடூரமாய் இருக்கே .........( //

வாசிப்பில் இருபது சதவிகிதம் மட்டுமே... மற்றவை "வன்" திரையில்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// உலக சரித்திரத்தையே பிரிச்சி மேயிற செல்வினுக்கு உலகப்படமெல்லாம் எம்மாத்திரம்.... //

அவரே சும்மா இருக்காரு... நீ வேற ஏன்யா அவரை கிரேக்க வரலாற்றிற்கு இழுத்துட்டு போற...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// ஏன் பிரபா நமக்கு இந்த வேலை? நாம் என்ன உலகசினிமா ரசிகரா? தேவையா இந்த 'ஆப்பு'? //

Necrophilia பற்றிய ஆராய்ச்சி பதிவு போட்ட நீங்களா பிரசாத் இப்படி சொல்கிறீர்கள்...?

Philosophy Prabhakaran said...

@ மஹாராஜா
// விஜய் படத்திற்கு முன்பு இந்த படம் ஜுஜுபி. ஹா ஹா ஹாஹா //

வேணாம்ங்க... விட்ருங்க...

Philosophy Prabhakaran said...

@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// நல்ல நினைப்புயா உமக்கு!!??

நல்ல வேளை நான் உலக படம் எல்லாம் பாக்குறது இல்லை!! //

தமிழ்ப்படங்கள் கூட உலகத்தில் தான் எடுக்குறாங்களாம் தலைவரே...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// உண்மையிலேயே கொடூரம்தான், படிச்சி முடிக்க முடியலை........ நிச்சயமா படிக்க கூடாத ஒண்ணுதான்! //

சில வார்த்தைகளை எழுத முடியாமல் தவிர்த்திருக்கிறேன்... இதற்கே இப்படியா...?

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// கில்மா சீன் ஒண்ணுமே இல்லையா ? //

இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா...? படத்தில் அரை நிர்வாண காட்சிகள் இருந்தும் துளியளவு கூட ரசிக்க முடியவில்லை...

Philosophy Prabhakaran said...

@ சதீஷ் மாஸ்
// இப்பலாம் பிரசவ வலினா என்னனு யாருக்காவது தெரியுமா? எல்லாம் ஆப்ரேஷன் தான்...

பிரசவ வலி என்பது வேற உணர்வு.. அதற்க்கும் இந்த பதிவின் திகிலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்... //

இதை பிள்ளை பெற்ற பெண்கள் யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// வாய்ப்பு கிடைத்தாலும் இந்தப் படத்தை பார்க்க மாட்டேன்... //

அதேதான்...

Philosophy Prabhakaran said...

@ thalir
// படிக்கவே பயங்கரமா இருக்கே? எப்படி பார்த்தீங்க? கொடுமைடா சாமி! //

கஷ்டம்தான்...

Philosophy Prabhakaran said...

@ malgudi
// பாஸ்,நீங்க மோசமானவங்களிலே முக்கியமானவரு //

என்னய்யா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட...

Philosophy Prabhakaran said...

@ sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
// உண்மைதான் //

நன்றி சாருஜன்...

ஜெய்லானி said...

நான் ஹாஸ்டல் படம் பார்த்திலிருந்தே நொந்துதான் போயிருக்கிறேன் ..இதையும் பார்த்தால்......அவ்வ்வ்வ்


சரியா சொன்னீங்க ஏன் இவனுங்களுக்கு இந்த வேண்டாத வேலை ...!!!!

Rajkumar said...

There are some one who likes these kind of pictures...What you say about there interests..

பாலா said...

ஏற்கனவே Saw 3 பாகங்கள் பார்த்த தைரியத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.. Saw படத்திலாவது அடிநாதமாக ஒரு கதை இருக்கும்.. இங்க ஒரே கொலவெறி மட்டும்தான்.... கொடூரம். IMDBல் தேடிப்பார்த்தால் இது போல நிறைய ஜப்பானியப் படங்கள் மாட்டுகிறது.

Philosophy Prabhakaran said...

@ பாலா
// ஏற்கனவே Saw 3 பாகங்கள் பார்த்த தைரியத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.. Saw படத்திலாவது அடிநாதமாக ஒரு கதை இருக்கும்.. இங்க ஒரே கொலவெறி மட்டும்தான்.... கொடூரம். IMDBல் தேடிப்பார்த்தால் இது போல நிறைய ஜப்பானியப் படங்கள் மாட்டுகிறது. //

அட என் பதிவுகளையும் படித்துவிட்டு படத்தை பதிவிறக்கி பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்களா... ஆச்சர்யமாக இருக்கிறது... உங்களுடைய இந்த ஊக்கம் என்னை மென்மேலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை அறிமுகப்படுத்தச் சொல்லி தூண்டுகிறது... மிக்க நன்றி...

பாலா said...

அவசியம் பகிருங்கள்...