1 October 2011

வாகை சூட வா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரே ஒரு பாடலால் ஈர்க்கப்பட்டு இந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். மற்றபடி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பெல்லாம் வைத்திருக்கவில்லை. இயக்குனரின் முந்தய படைப்பான களவாணி கூட சுவாரஸ்யமான பொழுதுபோக்கு படம் என்று சொல்லலாமே தவிர நல்ல படம் என்று சொல்வதற்கில்லை. இதுவும் அதேபோல இன்னொரு கிராமத்து சப்ஜெக்ட் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது நேற்று படம் பார்க்கும் வரை.

1966ம் ஆண்டில் கதை ஆரம்பிக்கிறது. ஒரு சமூக சேவை அமைப்பு  கண்டெடுத்தான் காடு என்ற செம்மண் புழுதி கிராமத்திற்கு விமலை வாத்தியாராக அனுப்ப, வேண்டாவெறுப்பாக அங்கே செல்கிறார் விமல். ஆண்கள் வீட்டைக் கூட்டி பெருக்கக் கூடாது, வாத்தியார் என்றாலே அடிப்பார் என்றெல்லாம் அபத்தங்கள் நிறைந்த அறியாமை ஊர். இதுமட்டுமல்ல இன்னும் பல அபத்தங்கள். இவ்வாறே படிப்பறிவு இல்லாமலும் படிப்பறிவை விரும்பாமலும் வாழும் அந்த கிராம குழந்தைகளுக்காக விமல் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை. இதற்கிடையே மகனை அரசாங்க வேளையில் சேர்த்து அழகுப்பார்க்க துடிக்கும் தந்தை பாக்யராஜ், அராத்து பண்ணுவதில் ஆரம்பித்து ஆசையில் முடிந்து விமலையே சுற்றிச் சுற்றி வரும் அறிமுக நாயகி இனியா.

பீரியட் படம் என்றால் தெருவில் பழைய பட போஸ்டர் ஒட்டியிருப்பது, ரோட்டில் நடந்து செல்பவர்கள் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் அப்போதுதான் ரிலீஸான முதல் மரியாதை படத்தைப் பற்றி பேசுவது என்று சில காட்சிகளை வலிந்து திணித்திருப்பார்கள். ஆனால் இங்கே மக்களின் வாழ்க்கை முறைகளையும், அறியாமையும் மட்டுமே காட்டி நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்று உணர வைக்கிறார் இயக்குனர். உதாரணமாக திரையில் நம்பியார் எம்.ஜி.ஆரை அடிப்பதை பார்த்து திரையை சுடும் குருவிக்காரன் பாத்திரம். (ஒரே ஒரு காட்சியில் மட்டும் பழைய ஆனந்த விகடனை காட்டுகிறார்கள்).

விமல் – அப்பாவி, அடப்பாவி என்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் அல்வா சாப்பிடுகிறார். இதில் அப்பாவி.  எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். இனியா – அறிமுகம், இனிய அறிமுகம். அசினுக்கு கசின் மாதிரி இருக்கிறார். அநியாயத்திற்கு நடிக்கவும் செய்கிறார். குறிப்பாக வெட்கப்படும் காட்சிகளில் அடடா அற்புதம்.

படத்தில் பல கேரக்டர்கள் வலம் வருகிறது. அவற்றுள் பாக்யராஜ், தம்பி ராமையா, பொன்வண்ணன் போன்ற கேரக்டர்களை குறிப்பிட்டு சொல்லலாம். “கிக்கிக்கி...” என்று நமுட்டுச்சிரிப்பு சிரித்து கணக்குப்புதிர் போடும் தம்பி ராமையா ரசிக்க வைக்கிறார்.

அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சரசர சாரக்காத்து அட்டகாசம். செங்கச்சூளைக்காரா, போறானே போறானே பாடல்களும் மனதில் சம்மணமிட்டு அமர்கின்றன. ஒரு செங்கல்சூளை கிராமத்தையே உருவாக்கிய ஆர்ட் டைரக்டர் சீனுவும், அதை திரையில் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒரு படம் ஹிட்டானால் அதையே டெம்ப்ளேட்டாக வைத்துக்கொண்டு வதவதன்னு படங்களை எடுத்துத்தள்ளும் இயக்குனர்களுக்கு மத்தியில் ஓடிவந்து நல்ல இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினேன். குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் கல்வியின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நல்ல கருத்தைச் சொல்லும் படத்தில் தப்பு, சரி கண்டுபிடித்து மார்க் போடும் வேலையை செய்ய விரும்பவில்லை. ஆம், படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனாலென்ன, வாகை சூட வா என் மனதில் வாகை சூடி விட்டது.

படம் அருமையாக இருக்கிறது – ஆனால் சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.

டிஸ்கி: யாராவது முரண் படம் பார்க்கலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருந்தா இந்த பதிவை படிச்சு செலவை மிச்சம் பண்ணுங்க.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

39 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் ரசிகன்

சி.பி.செந்தில்குமார் said...

>>
படம் அருமையாக இருக்கிறது – ஆனால் சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.

ஹா ஹா தமிழன் என்னைக்கு திருந்தி இருக்கான்?

Anonymous said...

படத்தைப்பற்றி நல்லதொரு கருத்தோட்டம். இந்த பதிவை விட, கேபிளின் பதிவில் நீங்களிட்ட ஒரு வரி மறுமொழி படத்தைப்பற்றிய உங்கள் எண்ணத்தைச் சொல்கிறது!

சி.பி.செந்தில்குமார் said...

>>இப்படிப்பட்ட நல்ல கருத்தைச் சொல்லும் படத்தில் தப்பு, சரி கண்டுபிடித்து மார்க் போடும் வேலையை செய்ய விரும்பவில்லை.

ஹா ஹா சொல்லிக்காட்டினால்தான் குற்றம், சுட்டிக்காட்டினால் குற்றம் இல்லை!!!

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லியில் ஓட்டுப்போட முடியவில்லை

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// படத்தைப்பற்றி நல்லதொரு கருத்தோட்டம். இந்த பதிவை விட, கேபிளின் பதிவில் நீங்களிட்ட ஒரு வரி மறுமொழி படத்தைப்பற்றிய உங்கள் எண்ணத்தைச் சொல்கிறது! //

புரிந்துக்கொண்டமைக்கு நன்றி... இதற்கு ஏன் முகமூடி...???

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// இண்ட்லியில் ஓட்டுப்போட முடியவில்லை //

கொஞ்ச நாளா அப்படித்தான்... இன்ட்லியில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுகின்றன...

settaikkaran said...

இன்னும் எங்கேயும் எப்போதும் கூட பார்க்கலை. அப்புறம் ’வெடி’ பார்க்கணும்(சமீரா). அதுக்கப்புறம் இதையும் பார்க்கணும். ஒரு மனுசனுக்கு ஆனாலும் இம்புட்டுப் பிரச்சினை இருக்கக் கூடாது. :-)

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// இன்னும் எங்கேயும் எப்போதும் கூட பார்க்கலை //

நான் பார்க்கலை...

// அப்புறம் ’வெடி’ பார்க்கணும்(சமீரா) //

அதையெல்லாம் பார்த்துடாதீங்க சேட்டை... பின்னால வருத்தப்படுவீங்க...

maruthamooran said...

////படம் அருமையாக இருக்கிறது – ஆனால் சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.////

ம்ம்ம். யதார்த்தமான உண்மை.

ரைட்டர் நட்சத்திரா said...

அப்ப படம் ஒடாதுங்களா ?

middleclassmadhavi said...

thanks!

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நல்ல படம், நல்ல விமர்சனம்.. நன்றிகளும் வாழ்த்துக்களும்..

சக்தி கல்வி மையம் said...

நல்லபடம். கண்டிப்பாக ஓடாது..
நல்ல விமர்சனம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சமூக அக்கறையுள்ள படத்தில் குறைகாண வேணாம் என்ற உங்கள் முடிவிற்கு ஒரு சல்யூட்...!

Unknown said...

நல்லது - பார்த்து விடுகிறேன்.
அப்புறம் இந்த இன்ட்லிலயும் தமிழ் மனத்திளையும் எப்படி ஒட்டு போடுறதுன்னே தெரியலை.
அதைப் பத்தி சொன்னா ஓட்டும் போடா வசதியா இருக்கும்.

குடிமகன் said...

அருமையான விமர்சனம்.. சீக்கிரமா பார்க்கிறேன்!!

Riyas said...

நல்ல விமர்சனம் பிரபா,,

//படம் அருமையாக இருக்கிறது – ஆனால் சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.//

இது காலத்தால் அழிக்க முடியாத விதி,, நாமாவது இதை மாற்றுவோம்,, முயற்சிப்போம்,,

MANO நாஞ்சில் மனோ said...

படம் அருமையாக இருக்கிறது – ஆனால் சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.//

மக்களுக்கு தேவையான கதையை சொன்ன [[ப்பூப்ப்]] கரகாட்டகாரன் ஓடலையா....???

N.H. Narasimma Prasad said...

அருமையான விமர்சனம் பிரபா. இது போன்ற படங்களை நம் 'ரசிகன்' புரிந்து கொள்வானா என்பது சந்தேகமே.

Philosophy Prabhakaran said...

@ middleclassmadhavi
// உங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்! //

ஹி ஹி ஹி பார்த்தேன் மேடம்... மூத்த பதிவாராம்ல... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ அப்பு
// நல்லது - பார்த்து விடுகிறேன்.
அப்புறம் இந்த இன்ட்லிலயும் தமிழ் மனத்திளையும் எப்படி ஒட்டு போடுறதுன்னே தெரியலை.
அதைப் பத்தி சொன்னா ஓட்டும் போடா வசதியா இருக்கும். //

அண்ணே இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு... தவிர இண்ட்லி கொஞ்சம் சிக்கலில் இருக்கிறது... இப்போதைக்கு ஓட்டு போட இயலாது...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// அருமையான விமர்சனம் பிரபா. இது போன்ற படங்களை நம் 'ரசிகன்' புரிந்து கொள்வானா என்பது சந்தேகமே. //

புரிந்துக்கொள்ள முடியாமல் போக இதென்ன இன்ஸெப்ஷனா... அதெல்லாம் நல்லா புரியும்... ஆனால் கமர்ஷியல் மேட்டரையே பார்க்க விரும்புகிறார்கள்...

Unknown said...

நம்மாளுங்களுக்கு வெடிதான் புடிக்கும், என்னை மாதிரி போய் பல்பு வாங்கினாத்தான் சந்தோசம், உங்க விமர்சனமும் நீட்டா இருக்கு

Unknown said...

நம்மாளுங்களுக்கு வெடிதான் புடிக்கும், என்னை மாதிரி போய் பல்பு வாங்கினாத்தான் சந்தோசம், உங்க விமர்சனமும் நீட்டா இருக்கு

Anonymous said...

///ஆனால் சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.// இது தான் மேட்டர் ))

Sivakumar said...

//செங்கச்சூளைக்காரா, போறானே போறானே பாடல்களும் மனதில் சம்மணமிட்டு அமர்கின்றன.//

பார்ரா....

Sivakumar said...

நாளைக்கி பாக்கறேன்.

கும்மாச்சி said...

பிரபாகரன் உங்கள் விமர்சனத்தை வைத்து இந்த வாரம் பார்க்கவேண்டிய படம் "வாகை சூட வா", அப்புறம் எங்கேயும் எப்போதும்".

விமர்சனம் நன்றாக உள்ளது.

கவிதை பூக்கள் பாலா said...

எப்படியா ? உன்னால ரெகுலரா படம் பார்க்க முடியுது அல்லது வலிய போய் பாக்குறீரா சொல்லு பா ஆனால் சினிமா எடுத்தவனுக்கு வந்துள்ள புளியும், பாக்க போறவனுக்கு கொஞ்சம் எச்சரிக்கை மணியையும் தரீர் நலம் . நல்ல படம் ( பார்த்து சொல்றேன் )

நிரூபன் said...

இனிய இரவு வண்க்கம் பாஸ்,

விமர்சனம் சுவையாக இருக்கிறது,

இந்தப் படத்தினை நானும் பார்க்க ட்ரை பண்றேன்.

Anonymous said...

நல்ல விமர்சனம்..நல்ல படம்...சீக்கிரமா பார்க்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

படத்தைப்பற்றி நல்லதொரு கருத்தோட்டம்.

Anonymous said...

Prabha kutti... Ennullum vaagai sooda va...

Anonymous said...

என்னண்ணே ரெண்டு நாளா நம்ம பிளாக் பக்கம் காணோம். உங்களுக்காகவே பிரியாணி பகுதி 3 போட்டிருக்கேன் அண்ணே

Selmadmoi gir said...

((சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்.)) super lol

Anonymous said...

/// Philosophy Prabhakaran said...

ஃபுல் டைட்டுல பதிவெழுதினா எப்படி இருக்கும்ன்னு இதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

http://philosophyprabhakaran.blogspot.com/2011/04/18.html ///

பதிவை படிச்சிட்டேன் அண்ணே, மூலக்காரணம் தெரிந்த பிறகு படிப்பதனால் மிகவும் பயங்கரமாக சிரித்து சிரித்து படித்தேன். காரணம் தெரியாமல் பலரின் சீரியஸான பின்னூட்டமும், அதற்கு பதிலடியாக உண்மையை மட்டும் கூறாமல் உங்களது சமாளிப்பும், நிஜமாகவே பதிவுலகில் நீங்க எனக்கு அண்ணன் தான்.

தக்குடு said...

//சத்தியமாக ஓடாது. நல்ல படம் என்னைக்கு ஓடியிருக்குங்கறேன்// lols :) நியாயமான ஆதங்கம். இந்த வாரம் நானும் இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்!

கார்த்தி said...

இன்னும் பாக்கல பாத்திட்டு வாறன்!