12 October 2011

IndiBlogger சந்திப்பில் நடந்தது என்ன...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடர்புடைய சுட்டிகள்:

கடந்த ஞாயிறன்று IndiBlogger நடத்திய பதிவர் சந்திப்பிற்கு வருகை தராதவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இடுகைகளுள் எதைப் படித்தாலும் இதுவும் சரிதானே என்று தோன்றக்கூடும். அதில் தவறில்லை, அது மனித இயல்பு மற்றும் எழுதியவர்களின் எழுத்தாற்றலை சார்ந்தது.

பக்கத்தில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் நானும் கொஞ்சம் எனது உதிரிக்கருத்துக்களை உதிர்க்கிறேன்.

இந்த போர்டுதான் பிரச்சனையின் காரணி
இந்த போர்டை பார்த்த நொடியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றலாம். (கேபிள் மொழியில் பர்செப்ஷன்). அந்தமாதிரி இதைப் பார்த்ததும் கேபிளுக்கு தமிழ் பதிவர்களை இழிவுபடுத்துவதாக தோன்றியிருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட நபருடன் வாக்குவாதம் செய்ய, அவர் நாங்கள் அந்தமாதிரி அர்த்தத்தில் போர்டு வைக்கவில்லை என்று மன்னிப்பு கேட்டார். அத்தோடு அந்த பிரச்னையை முடித்திருக்கலாம்.

முடித்தார்களா நம்மவர்கள்...? ஆளுக்கொரு பதிவெழுதி, ஆங்கே கொஞ்சம் தனிநபர் மீதுள்ள வன்மத்தையும் வெளிப்படுத்தி, யார் பதிவர்களின் Authority என்பது வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கேபிள் கிண்டலடிக்கிறாரா அல்லது சீரியஸாக கோபப்படுகிறாரா என்று நிறைய பேருக்கு தெரியாமல்தான் இருந்தது, அந்த போர்டை தூக்கி வந்தவர் உட்பட. போகப்போக கேபிள் சீரியஸாக, இன்னும் சில பதிவர்களும் குரல் கொடுக்க, போர்டை தூக்கி வந்தவர் மன்னிப்பு கேட்டார். அவருக்கும் வேறு வழியில்லை.

இதே கோபம் கவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா...? என்று லக்கி பதிவெழுதிய போது வராதது ஆச்சர்யம்தான். ஏன் அந்த பதிவுக்கு indiblogger பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ள வேண்டுமா என்று தலைப்பு வைத்திருக்கக்கூடாது. தமிழர்களெல்லாம் தேநீர்ச்சட்டைக்கு அலைந்தவர்களா...?

கேபிளுக்கு கோபம் வந்தது, அவர் கேட்டார். கோபம் வராதவர்கள் பேசாமல் இருந்திருக்கலாமே. கேபிள் தமிழ் வலைப்பதிவர்களுக்கு அத்தாரிட்டி போல செயல்படுகிறார் என்று குற்றம் கூறுபவர்கள் நான் அத்தாரிட்டியாக இருக்கிறேன் என்று முன்வரலாமே. 

சில வரிகளை படித்தால் வேடிக்கையாக இருக்கிறது.

// indiblogger.in என்பது இந்திய வலைப்பதிவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டும் ஒரு அமைப்பு. bloggingpassion ஆக கொண்ட வலைப்பதிவர்கள் சிலர், லாபநோக்கமின்றி தொடங்கிய இணைய அமைப்பு. //

லாபநோக்கமின்றி செயல்படுபவன் எப்படி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விழா நடத்த முடியும்.

நமக்கு indiblogger தேவையா...? அல்லது நாம் indibloggerக்கு தேவையா...? என்றால் இரண்டுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம்மை பொறுத்தவரையில் indiblogger பத்தோடு பதினொன்று அவ்வளவுதான். indibloggerக்கு நாமும் அப்படித்தான்.

How can we help you...?
May i help you...?
இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்று சொல்பவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், அதற்குத்தான் போர்டை தாங்கி வந்தவர் மன்னிப்பு கேட்டுவிட்டாரே அப்புறமென்ன. 

இந்த போர்டில் உள்ள “உதவி” – “டெக்னிக்கல் உதவி” என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது கேபிள் கோபப்பட்டு கேட்டதும் போர்டை தூக்கி வந்தவர் கட்டிய சப்பைக்கட்டு என்பது அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அல்லது இன்னொரு மூலையில் டெக்னிக்கல் உதவிக்கான Lounge அமைக்கப்பட்டிருந்தது என்பதை அவர்கள் மறந்திருக்கக்கூடும்.

இல்லை போர்டில் உதவி என்று குறிப்பிட்டிருப்பது “பணம் சம்பாதிப்பது எப்படி...?” என்ற உதவி என்று சொன்னால், அதற்கு ஆங்கிலத்தில் வேறு வாக்கியங்கள் உள்ளன. அதில் தமிழ் பதிவர்கள், ஆங்கிலப்பதிவர்கள் என்ற பாகுபாடும் அவசியமற்றது.

தங்களுடைய தளத்தை தமிழிலும் தருவதற்கு தமிழ் பதிவர்களிடம் உதவி கேட்பதாக போர்டை தூக்கி வந்தவர் மறுபடியும் சப்பைக்கட்டு கட்டினார். பின்னூட்டத்தில் தன்னை அந்த பதிவர் சந்திப்பின் ஹோஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட Anoop Johnson கூட இதையே தான் சொன்னார். ஆனால் போர்டு வாசகம் அதைத்தான் சொல்கிறதா...? அல்லது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லையா...?

தமிழ், தமிழ் என்று பொங்குபவர்களுக்கு பின்னூட்டத்தில் சிவகாசி மாப்பிள்ளை சொன்னது...

உங்க ப்ளாக்கே cablesankar.blogspot.com என்று போட்டாத்தான் ஓப்பன் ஆகுது,,,
முதல்ல கேபிள்சங்கர்.பிளாக்ஸ்பாட்.காம் என்று போட்டா ஓப்பன் ஆகனும்னு தீக்குளிங்க தல...

இந்த பதிவை வைத்துக்கொண்டு நான் கேபிள் ஆள், ஜாக்கி ஆள், லக்கி ஆள் என்று வகைப்படுத்த வேண்டாம். நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

Romeoboy said...

Guys don't argue more to fire up on both side :)

Unknown said...

மாப்ள உங்க பார்வையில் சொல்லி இருக்கீங்க...பகிர்வுக்கு நன்றி!

அப்பாதுரை said...

பிரச்சினை என்ன? சுத்தமா புரியலிங்களே? அந்த போர்டில் அப்படி என்ன இருக்கிறது சொல்லுங்களேன்?

அப்பாதுரை said...

கொஞ்சம் லேட்டாச்சுங்க புரிய :)
'how we can help'க்கும் 'how can we help'க்கும் நிறைய வேறுபாடு உண்டு. 'how we can help'ல் அகௌரவம் இல்லை.

Philosophy Prabhakaran said...

@ அப்பாதுரை
// 'how we can help'க்கும் 'how can we help'க்கும் நிறைய வேறுபாடு உண்டு. 'how we can help'ல் அகௌரவம் இல்லை. //

இப்ப நீங்க சொல்றதுதான் தல சுத்தமா புரியல...

Philosophy Prabhakaran said...

@ அருண்மொழித்தேவன்
// Guys don't argue more to fire up on both side :) //

ஹி... ஹி... ஹி... சரிதான்... நீங்க கூட ரெஜிஸ்டர் பண்ணியிருந்தீங்க போல... ஏன் வரலை...?

settaikkaran said...

எப்படியாக இருந்தாலும் மன்னிப்புக் கேட்ட பிறகும் தொடர்ந்து தாக்கி எழுதுவதைத் தவிர்க்கலாம்.

Anonymous said...

என்னப்பா பிரபாகரா, சில நாட்களாக பார்க்க முடியவில்லையே, ரொம்ப பிஸியோ. நான் தினமும் உங்களது வலைப்பூவுக்கு வந்து என்னடா சில நாட்களாக எழுதவில்லையே என்று பார்த்து செல்கிறேன். இன்று தான் பதிவை கண்டேன். மிக்க மகிழ்ச்சி.
நேற்று பிரச்சனை கேபிள் சங்கரி்ன் பார்வையில் ஒன்றாக தெரிந்தது. இன்று உங்களது பார்வையில் வேறொன்றாக தெரிகிறதே. யாரில் பார்வையில் கண்டது உண்மை

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

வை கும்பளிங் கும்பளிங்? ஆமா எங்க போயிருந்த இம்புட்டு நாளா? உன்ன காணோம் காணோம்னு தேடி எல்லாரும் என்ன பைத்தியம்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

அப்பாதுரை said...

லேசுல புரியற மாதிரி எழுத வராமாட்டேங்குதே..:)

how we can help என்பது உதவ முன்வருவதைக் குறிக்கிறது
how can we help என்பது உதவலாமா எனும் கேள்வி - சுலபத்தில் offensiveஆக எண்ணக்கூடிய கேள்வியைக் குறிக்கிறது.

அவர்கள் எழுதியிருக்கும் 'how we can help' என்பதில் எந்தவித offensive contextம் இல்லை என்று நினைக்கிறேன். அதை 'how can we help'னு படிச்சு தப்பா எடுத்திட்டிருக்கலாம்னு தோணுது

இப்பவும் புரியலின்னா தப்பு என் பேர்ல தாங்க.

வவ்வால் said...

அப்பா துரை சரியா தான் சொல்லி இருக்கார், போர்ட் வச்சவனுக்கு ஆங்கில அறிவு இல்லை என்பது எப்படியோ அப்படியே இந்த பதிவரும் என நினைக்க வைக்கிறது உமது பதிவு!
how can we help you = we cant help you !
இப்படி கடைசி நேரத்தில வந்து நிக்கிறயே நான் எப்படி உனக்கு ஹெல்ப் பண்ன முடியும்! அப்படினு பேசுறோம் இல்லையா அப்படிதான்!(ஹி ஹி எல்லாம் ஒரு கேள்வி ஞானம்ம்தேன்)
இப்போ அதுவே how we can help you உதவி செய்ற நோக்கத்தோட அவங்க தேவைய கேட்பதாக பொருள் வரும்!
பொதுவா could, may இப்படி தான் போட்டு இருக்கணும் இது மே மாசம் இல்லைனு மே போடாம விட்டு இருப்பாங்க போல!

மனசாலி said...

\\\இதே கோபம் கவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா...? என்று லக்கி பதிவெழுதிய போது வராதது ஆச்சர்யம்தான்\\\

நான் கோபப் படவில்லை . ஆனாலும் லக்கிக்கு இவ்வாறு மறுமொழிந்திருந்தேன். ***MANASAALI said...

மதுரை டூ சென்னை ஒரு நாள் வந்து போகும் செலவை விட தேநீர் சட்டையையும் உயர் ரக தேநீரையும் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்,***

ஆரம்பத்தில் இருந்தே எனக்கு indiblogger.in ஐ பிடிக்கிவில்லை. என் ப்ளாகில் நான் எதை எழுதுவது என்பது என் விருப்பம். SAMSUNG MOBILE PHONE பற்றி எழுது காசு தர்றேன் FIAT பற்றி எழுது காரே தர்றேன்னு சொல்றது எல்லாம் ஓவர். இதுவும் கிட்டத்தட்ட ஒரு ஏமாற்று வேலையே . லக்கி சொல்வது போல லாப நோக்கம் இல்லாதவர்கள் செய்ய கூடிய செயலா இது?

நாய் நக்ஸ் said...

Thala......innum ethanai konam
varapogutho......
Innum 3 days virunthu than..
He...he.....

R. Gopi said...

@அப்பாதுரை, you have lost it completely:-))

It's not about 'how we can' or 'how can we'.

It's all about the next line in the board, 'Tamil bloggers'.

Question(s) raised is (are)

'Why are you singling us out?'

'Who are you to help us out? We are no way inferior to you'

Please read cable Sankar's post as well.

(Sorry for commenting in English. No Tamil font in this laptap at the moment).

Unknown said...

என்ன பிரபாகரன், ரொம்ப நாளைக்குப் பிறகு அனல் பறக்கும் விவாதத்தோடு...

rajamelaiyur said...

//

லாபநோக்கமின்றி செயல்படுபவன் எப்படி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விழா நடத்த முடியும்.
//
நல்ல கேள்வி

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

MANO நாஞ்சில் மனோ said...

அப்பாடா செம சண்டை நடந்துருக்கும் போல....???

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு...

Anonymous said...

எதோ யூனியன் போல...எஸ்கேப்...

கவிதை பூக்கள் பாலா said...

எல்லாம் சரி என்ன ஏன்பா தம்பிகளா கூப்பிடல போங்கப்பா உங்க டீலிகே சரி இல்லை ஹோ பிரபல பதிவர் சந்திப்போ ( என்னமோ போங்க ) கொஞ்சம் வருத்தம் தான் ( எனக்கு தெரியாம போச்சி ) பிரபா மேல கோவம் தான்

ம.தி.சுதா said...

p.p என்ன நடக்குதண்ணே புரியல... நானும் அந்த திரட்டியில் இணைவமா என இணைந்தேன். ஒப்சனில் தமிழுக்குமிடமிருந்தது கொடுத்தேன் அதன் பின் ஓரிரு நாளில் மெயிலை பார்த்தால் என்னை நிராகரித்து விட்டதாக பதில் வந்துள்ளது...

கார்த்தி said...

என்ன நடக்குதையா ? ஒண்ணுமா விளங்கல