18 June 2012

பிரபா ஒயின்ஷாப் – 18062012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மான்குட்டி மான்சி பரேக் என்னுடைய கனவில் தொடர்ந்து லீலைகள் செய்துவந்ததால் லீலை படத்தை பார்த்தேன். வழக்கமான தமிழ் சினிமா, ஹீரோ ஹீரோயினை flirt செய்தால் நம்மையும் ஹீரோவுடன் சேர்ந்து பொறம்போக்குத்தனமாய் யோசிக்க வைக்கும். ஆனால் லீலை ஆரம்பத்திலிருந்தே கருணை மலரின் கோணத்தில் இருந்தே பயணிப்பதால் ஹீரோ கதாப்பாத்திரம் மீது கோபம் மட்டும் தான் மிஞ்சுகிறது. ஒருவேளை அழகு தேவதையாக காட்சியளிக்கும் மான்சிக்கு ஷேவிங் க்ரீம் விளம்பர மாடல் மாதிரியான ஆசாமி ஜோடியானது கூட கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்.

கடந்த ஒருவாரமாகவே எனக்கும் செண்பகத்துக்கும் பயங்கர சண்டை. இது வழக்கமாக நடக்கும் கூத்துதான். இருந்தாலும் இந்தமுறை கோபம் கொஞ்சம் அதிகமாகி நீ உங்க அம்மா வீட்டுக்கே போயிடு... நான் வேற ஆளை பாத்துக்குறேன்’னு வார்த்தையை விட்டுவிட்டேன். செண்பகத்திற்கு முகமே வாடிவிட்டது. அப்புறம் செண்பகத்தின் தாவாங்கொட்டையை பிடித்துக்கொண்டு “என் ராஜாத்தி... என் புஜ்ஜூக்குட்டி... நான் உன்னை விட்டுட்டு எப்படிடா இருப்பேன்... இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இனி என் உயிர் இருக்குற வரைக்கும் என் அம்முக்குட்டியை பிரியவே மாட்டேன்.... என்று எதை எதையோ சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதாகிவிட்டது. P.S: செண்பகம் என் வீட்டு கம்ப்யூட்டர்.

ஞாயிறு மாலைகள் சிங்காரச்சென்னையின் பொழுதுபோக்கு தளங்களுடனே கழிகிறது. கடந்தவார விஜயம் சிட்டி சென்டர். நேராக, நண்பர் மோகன் குமார் பரிந்துரைத்த Dude தமிழா டி-ஷர்ட் கடைக்கு சென்றேன். வாசகங்கள் கிரியேட்டிவாக இருந்தாலும் கூட நூறு ரூபாய்க்கு பெறாத டி-ஷர்ட்டை நானூறு, ஐநூறு என்று விற்பது பகல்கொள்ளை. அதுசரி, பெருநகர மால்களில் அது அது அப்படி அப்படி தான். நல்லா இருங்கப்பா என்று கடைக்காரரை வாழ்த்திவிட்டு நகர்ந்தேன். சிட்டி சென்டர் மொட்டைமாடி சென்னையின் ரம்மியமான இடங்களுள் ஒன்றாக இருக்கிறது. அதுவும் KFC அல்லது McDonaldல் இருந்து கோழிக்கறியை வாங்கிக்கொண்டு மொட்டைமாடியில் அமர்ந்து சாப்பிடும் சுகமே தனி.

இருபத்தி நான்கு வயது நிரம்பிய இளைஞன் ஒருவனுக்கு பைக் ஓட்டத்தெரியவில்லை என்று சொன்னால் இந்த சமூகம் அவனை எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறது தெரியுமா...? சரி, எவமானமோ என்று விட்டுத்தொலைக்கவும் முடியாதபடி பைக் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிடும் போல தெரிகிறது. எனவேதான் பைக் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற விபரீதமான முடிவினை எடுத்தேன். இதை அமுக்கு, அதை முறுக்கு, கீழே இருக்குறத மீதி என அப்பப்பா பைக் ஓட்டுவதுதான் எவ்வளவு கடினமான வேலை. இனி சிகப்பு சிக்னல் சமயத்தில் இண்டு இடுக்குகளில் புகுந்து அட்ராசிட்டி பண்ணும் பைக் ஓட்டுனர்களை நிச்சயமாக திட்டமாட்டேன். தெய்வம் சார் நீங்க...!

தமிழ் சினிமா தன்னுடைய பொக்கிஷங்களுள் ஒன்றினை தொலைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மூன்று தலைமுறையை பார்த்த மூத்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து அஜித், விஜய் என்று ஜெயம் ரவி வரைக்கும் இவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். தேவர் மகன், உன்னைத்தேடி, வசூல்ராஜா போன்ற படங்களில் தாத்தாவுடைய நடிப்பை யாரும் மறந்துவிட முடியாது. அவர் வடிவேலுவுடன் சேர்ந்து செய்த “ராக்காயி” காமெடி என்னுடைய ஆல்-டைம் ஃபேவரைட்களுள் ஒன்று. வசூல்ராஜா கமல் மாதிரி யாராவது தாத்தாவை தொடர்ந்து கேரம் போர்டு ஆட வைத்திருக்கலாம் :(

ட்வீட் எடு கொண்டாடு:
நேற்று அவள் நெற்றியில் மென் முத்தம் கொடுத்தேன்.. இன்று ஹை-ஹீல்ஸ் போட்டு வந்தாள் அவள்..!

செக்ஸிலும் ஸ்னூஸ் வைக்க ஒரு கண்டுபிடிப்பாளன் தேவை.

தூங்குவது போல் நடித்து கனவை ஏமாற்றமுடிந்தால் கனவுகள் மறக்காமல் இருக்கும் !

ஒவ்வொரு முறை கமல் படங்கள் வெளிவரும்போது “கையை பிடிச்சு இழுத்தியா...!” ரக பஞ்சாயத்துகள் நடப்பது ஜகஜம். இந்தமுறை பச்சை நிற பதர்களிடம் செம உண்டை வாங்கப்போகிறாரோ என்று பதற வைக்கிறது ட்ரைலர். அதற்குள்ளாகவே கருஞ்சட்டை தோழர் ஆரம்பித்துவிட்டார். ஸ்டார்ட் மியூஜிக்...!

முரசு என்றொரு சேனல் ஆரம்பித்ததும் பத்தோடு பதினொன்று என்று நினைத்திருந்தேன். நேற்று செண்பகத்தை கொஞ்சிக்கொண்டிருந்த சமயம் காதல் ஜோதி படத்திலிருந்து மேற்கண்ட அரிய பாடல் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பல அரிய பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன.

மீண்டும் சாம் ஆண்டர்சன் என்று உற்சாகத்தோடு இருந்த என் போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கடைசி காட்சியில் வரும் சின்னூண்டு டிவிஸ்டை தவிர்த்துப் பார்த்தால் சூரமொக்கை. சத்தியமா சிரிப்பே வரலை. மறுபடியும் ஒரு அருமையான resource வீணடிக்கப்பட்டுவிட்டது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

41 comments:

Prem S said...

உங்க அக்மார்க் ஜொள்ளு இப்போது வருவதில்லையே ஏன் ?

செண்பகம் மேட்டர் கலக்கல் அவ்வளவு அடிபட்டுட்டா உங்கட்ட

முத்தரசு said...

காக்டெயில் ரசம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருய்யா அது மான்சி........ ஒரு டீசண்ட்(?) படமாவது போட்டிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// P.S: செண்பகம் என் வீட்டு கம்ப்யூட்டர்./////

விட்டா ஒரு சொம்பு எடுத்துட்டு போயி செண்பகமே செண்பகமேனு ஆரம்பிச்சிடுவாரு போல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வாசகங்கள் கிரியேட்டிவாக இருந்தாலும் கூட நூறு ரூபாய்க்கு பெறாத டி-ஷர்ட்டை நானூறு, ஐநூறு என்று விற்பது பகல்கொள்ளை. அதுசரி, பெருநகர மால்களில் அது அது அப்படி அப்படி தான். //////////

எனக்குத் தெரிஞ்சி இந்த மாதிரி மால்கள்ல போய் பொருள் எதுவும் வாங்குன ஞாபகமே இல்ல, போய் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு, சாப்புட்டு கெளம்பிடுறது....... நிறைய பேரு இப்படித்தான்னு நினைக்கிறேன், அப்புறம் எப்படி வண்டி ஓடுது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இதை அமுக்கு, அதை முறுக்கு, கீழே இருக்குறத மீதி என அப்பப்பா பைக் ஓட்டுவதுதான் எவ்வளவு கடினமான வேலை.///////

உண்மைதான், சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா ஈசிம்பாங்க, பட் அப்படி இல்லை. அப்புறம் பழகிட்டா நீங்களே மாத்தி சொல்லுவீங்க பாருங்க......!

Vadakkupatti Raamsami said...

எனவேதான் பைக் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற விபரீதமான முடிவினை எடுத்தேன்.///
.
.
யோவ் உனக்கு பைக் மட்டும்தான் ஓட்ட தெரியாதா சைக்கிள்,மொபெட் ஒட்டுவியா?

Vadakkupatti Raamsami said...

நானே இம்புட்டு வருஷம் மொபெட் ஓட்டிட்டு நேரா ஷோரூமுக்கு போய் பைக் செலக்ட் செய்தேன் ஆனால் எனக்கு பைக் ஒட்டி பழக்கமே இல்லை.நான் ஊரில் இல்லை என்று சொல்லி இன்னொருவரை டெலிவரி எடுத்து வீட்டில் விட சொன்னேன்.அப்பால நாலு நாள் ஜனக் சக் என்று வண்டி முதல் கியர் போட்டவுடநேயே எகிறி விடும்.நாலாவது நாள் பைக்கை அடக்கி விட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மீண்டும் சாம் ஆண்டர்சன் என்று உற்சாகத்தோடு இருந்த என் போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கடைசி காட்சியில் வரும் சின்னூண்டு டிவிஸ்டை தவிர்த்துப் பார்த்தால் சூரமொக்கை. சத்தியமா சிரிப்பே வரலை. மறுபடியும் ஒரு அருமையான resource வீணடிக்கப்பட்டுவிட்டது.///////


சாம் ஆண்டர்சன் வசனம் பேசுற அழகுலேயே விடிய விடிய உக்காந்து சிரிக்கலாமே? தனியா வேற காமெடி வேணுமா?

CS. Mohan Kumar said...

//KFC அல்லது McDonaldல் இருந்து கோழிக்கறியை வாங்கிக்கொண்டு மொட்டைமாடியில் அமர்ந்து சாப்பிடும் சுகமே தனி.//

சாப்பிட்டு கொண்டே "அக்கம் பக்கம்" பார்ப்பதால் தானே?

சரி பைக் இப்போ ஓட்ட ஆரம்பிச்சாச்சா ?

வவ்வால் said...

பிளாட் பார்ம் கடையிலே அது போல வாசகம் போட்ட தேநீர் சட்டை 100-200 க்கு கிடைக்குது என்ன ஒன்னு தேடணும்.

கியர் வச்ச வண்டி ஒட்ட எனக்கு மட்டும் வரலைனு நினைச்சேன்,கம்பெனிக்கு ஆள் இருக்குபா ,மீ ஸ்கூட்டர்.

டிவிஎஸ் ஜைவ் ஈசியா இருக்கும், கிளட்ச் இல்லையாம், கியரும் ஸ்ட்ரக் ஆகாதுன்னு சொல்லிக்கிறாங்க, முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.

வெளங்காதவன்™ said...

ஜார்!

நீ இன்னாமோ பெர்சு பெர்சா எயுதுவன்னு வந்து இஸ்த பச்சா......

மொக்கையா இருக்கு ஜார்!!!

#நாசமா போகக் கடவது...

:-)

வவ்வால் said...

பழம் பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் மறைவு தமிழ் திரைக்கு இழப்பே, வருத்தமான நிகழ்வு.

Anonymous said...

அடுத்த வாரம் சன் டி.வி.யில் ரெண்டு பொண்டாட்டிக்காரன் திரை வரிசை.

ஜேகே said...

//மீண்டும் சாம் ஆண்டர்சன் என்று உற்சாகத்தோடு இருந்த என் போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.//

ஆனாலும் தல கலக்கியிருக்கு தான்!

//இந்தமுறை பச்சை நிற பதர்களிடம் செம உண்டை வாங்கப்போகிறாரோ என்று பதற வைக்கிறது ட்ரைலர்.//

இது கமலே விரும்பி புகுத்தும் விளையாட்டு என்று நினைக்கிறன் பாஸ்!

N.H. Narasimma Prasad said...

Nice. Thanks for Sharing.

அனுஷ்யா said...

விஸ்வரூபம் யாருக்கு எதிராய்? உங்களின் படித்ததில் பிடித்தது அதிலேயே முதலில் வாசிச்சுட்டேன்.. அப்பறம் தான் ஒயின் ஷாப்க்கு வந்தேன்..கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமான ஆரூடமாக தோன்றியது அந்த கட்டுரை.. படம் வேறு கோணத்தில் இருக்கலாம்.. இன்னும் மொக்கையாய் கூட..

இருந்தாலும் முதல் நாள் முதல் ஷோ...:)

அனுஷ்யா said...

கார் ஓட்ட பழகியாச்சா? அது இன்னும் கூத்து... மிரர் பாக்கவே வராது... இப்போதான் நான் பழகிட்டு இருக்கேன்...

அனுஷ்யா said...

யாராச்சும் மொக்க சொன்னாலும் வம்படியா போயி அத பாக்குற பழக்கம் எப்ப மாறும்ன்னு தெரியல... அந்த short film...ஸாமி...முடியல்ல்ல...

'பரிவை' சே.குமார் said...

பகிர்வு அருமை.
சாம் ஆண்டர்சன் இதுக்கு மேல என்ன செய்ய முடியும்... விடுங்க அவரை கோபிநாத் பார்த்துக் கொள்வார்.

Jayadev Das said...

\\P.S: செண்பகம் என் வீட்டு கம்ப்யூட்டர்.\\ அதான பார்த்தேன், என்னடா மாப்பு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டனான்னு, அதுவும் வேற ஏதோ name போடவும் இன்னமும் குழப்பம். மாப்பு அடுத்த பதிவுல இதே பேர யூஸ் பண்ணி P.S:குறிப்பு போடாம விட்டுட்ட மக்கள் ஒரு முடிவே பண்ணிடுவாங்க. செண்பகம் மேட்டரை இத்தோட குளோஸ் பண்ணிடு.

Jayadev Das said...

\\இருபத்தி நான்கு வயது நிரம்பிய இளைஞன் ஒருவனுக்கு பைக் ஓட்டத்தெரியவில்லை என்று சொன்னால் இந்த சமூகம் அவனை எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறது தெரியுமா...? \\ சென்னையில பிறந்திட்டு இன்னமும் மாப்பு உனக்கு பைக் ஓட்டத் தெரியாதா!! ஆங்..... இப்பத்தான் காரணம் புரியுது. நீ பிகரை கரெக்ட் பண்ணவேண்டிய அவசியம் உனக்கில்லை. அதான் இப்படி இருந்திருக்கே.

\\இனி சிகப்பு சிக்னல் சமயத்தில் இண்டு இடுக்குகளில் புகுந்து அட்ராசிட்டி பண்ணும் பைக் ஓட்டுனர்களை நிச்சயமாக திட்டமாட்டேன். தெய்வம் சார் நீங்க...!\\
ஐய.......... மாப்பு தொடர்ந்து ஓட்டு, இன்னும் ரெண்டு மாசத்துல நீயும் அந்த மாதிரி தெய்வமாயிடுவே!!

Jayadev Das said...

\\சத்தியமா சிரிப்பே வரலை. மறுபடியும் ஒரு அருமையான resource வீணடிக்கப்பட்டுவிட்டது.\\ மாப்பு இப்படி நீ சொனதுக்கப்புரமும் நான் அதை பார்ப் போறேன்னு நினைக்கிரே.... ஹா...ஹா... விடு ஜூட்...

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// உங்க அக்மார்க் ஜொள்ளு இப்போது வருவதில்லையே ஏன் ? //

அலுவலகத்தில் படிப்பவர்களுக்கு இடையூறாக இருக்கிறதாம் ப்ரேம்... உங்கள் கவலையை போக்கும்படி அடுத்த பதிவு இன்னும் சில மணிநேரங்களில்...

// செண்பகம் மேட்டர் கலக்கல் அவ்வளவு அடிபட்டுட்டா உங்கட்ட //

ஆமாம் தல... செண்பகம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறாள்...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி™
// காக்டெயில் ரசம் //

நன்றி மனசாட்சி...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யாருய்யா அது மான்சி........ ஒரு டீசண்ட்(?) படமாவது போட்டிருக்கலாம்ல? //

இதுக்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுறீங்க...

இந்தாங்க லிங்க்ஸ்:
http://2.bp.blogspot.com/-_nwjD2QFnbs/Tl_DqqCe0iI/AAAAAAAACEQ/j-GCmLc-TOQ/s1600/109535-mansi-parekh.jpg

http://img.india-forums.com/wallpapers/1280x800/181597-manasi-parekh.jpg

// விட்டா ஒரு சொம்பு எடுத்துட்டு போயி செண்பகமே செண்பகமேனு ஆரம்பிச்சிடுவாரு போல...... //

என் செண்பகம் பால் எல்லாம் தரமாட்டா ப.ரா...

// எனக்குத் தெரிஞ்சி இந்த மாதிரி மால்கள்ல போய் பொருள் எதுவும் வாங்குன ஞாபகமே இல்ல, போய் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு, சாப்புட்டு கெளம்பிடுறது....... நிறைய பேரு இப்படித்தான்னு நினைக்கிறேன், அப்புறம் எப்படி வண்டி ஓடுது? //

நானும் அப்படித்தான் தல... ஒரு ஆர்வத்தில் தான் விலை கேட்டேன்...

// உண்மைதான், சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா ஈசிம்பாங்க, பட் அப்படி இல்லை. அப்புறம் பழகிட்டா நீங்களே மாத்தி சொல்லுவீங்க பாருங்க......! //

கூடிய சீக்கிரம் செண்பகம் மாதிரி ஒரு பெயர் சூட்டி அவளுடனும் சண்டை போடுவேன் பாருங்கள்...

// சாம் ஆண்டர்சன் வசனம் பேசுற அழகுலேயே விடிய விடிய உக்காந்து சிரிக்கலாமே? தனியா வேற காமெடி வேணுமா? //

படத்துல தலைவருக்கு வேற யாரோ டப்பிங் கொடுத்திருக்காங்க... தலைவருக்கு காட்சிகளே இல்லை...

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// யோவ் உனக்கு பைக் மட்டும்தான் ஓட்ட தெரியாதா சைக்கிள்,மொபெட் ஒட்டுவியா? //

சைக்கிள் ஓட்டுவதில் நான் கில்லாடி... மொபெட் ஓட்டி ரொம்ப நாளாகிவிட்டது... பைக்கில் க்ளட்ச், கியர் என நிறைய சமாச்சாரங்கள் இருப்பதால் கடினமாக இருக்கிறது...

// நானே இம்புட்டு வருஷம் மொபெட் ஓட்டிட்டு நேரா ஷோரூமுக்கு போய் பைக் செலக்ட் செய்தேன் ஆனால் எனக்கு பைக் ஒட்டி பழக்கமே இல்லை.நான் ஊரில் இல்லை என்று சொல்லி இன்னொருவரை டெலிவரி எடுத்து வீட்டில் விட சொன்னேன்.அப்பால நாலு நாள் ஜனக் சக் என்று வண்டி முதல் கியர் போட்டவுடநேயே எகிறி விடும்.நாலாவது நாள் பைக்கை அடக்கி விட்டேன். //

பரவாயில்லை... உங்கள் பின்னூட்டம் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது... விரைவில் பரமசிவன் க்ளைமாக்ஸ் அஜித் மாதிரி ஓட்டுறேன் பாருங்க :)

Philosophy Prabhakaran said...

@ மோகன் குமார்
// சாப்பிட்டு கொண்டே "அக்கம் பக்கம்" பார்ப்பதால் தானே? //

ஆமாம் தல... கோழி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் தானே...

// சரி பைக் இப்போ ஓட்ட ஆரம்பிச்சாச்சா ? //

இன்னும் நாள் இருக்கு தல...

Philosophy Prabhakaran said...

@ வவ்வால்
வவ்வால் வந்தாச்சா... சில நாட்களுக்கு முன்பு தான் மோகன் குமார் தளத்தில் லக்கி உங்களைப் பற்றி சொன்னதை படித்தேன்... ம்ஹூம் எனக்கும் ஏழரை ஸ்டார்ட் ஆயிடுச்சு போல :)

// பிளாட் பார்ம் கடையிலே அது போல வாசகம் போட்ட தேநீர் சட்டை 100-200 க்கு கிடைக்குது என்ன ஒன்னு தேடணும். //

தமிழ் வாசகங்களா... ம்ஹூம் கஷ்டம் தான்... அப்படியே கிடைத்தாலும் என் சைஸுக்கு கிடைக்காது...

// கியர் வச்ச வண்டி ஒட்ட எனக்கு மட்டும் வரலைனு நினைச்சேன்,கம்பெனிக்கு ஆள் இருக்குபா ,மீ ஸ்கூட்டர்.

டிவிஎஸ் ஜைவ் ஈசியா இருக்கும், கிளட்ச் இல்லையாம், கியரும் ஸ்ட்ரக் ஆகாதுன்னு சொல்லிக்கிறாங்க, முயற்சி செய்யலாம்னு இருக்கேன். //

நல்ல யோசனை தான்... ஆனால் பைக் ஓட்டத்தெரியவில்லை என்றால் யூத்துகள் நம்மை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்... அதனால் கண்டிப்பாக கற்றுக்கொள்வேன்...

Philosophy Prabhakaran said...

@ வெளங்காதவன்™
// ஜார்!

நீ இன்னாமோ பெர்சு பெர்சா எயுதுவன்னு வந்து இஸ்த பச்சா......

மொக்கையா இருக்கு ஜார்!!!

#நாசமா போகக் கடவது...

:-) //

ஏன் இவ்வளவு கோபம்... மட்டமான சரக்கோ...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// அடுத்த வாரம் சன் டி.வி.யில் ரெண்டு பொண்டாட்டிக்காரன் திரை வரிசை. //

அடுத்த வாரம் மட்டுமல்ல... இனி வாழ்க்கையே அப்படித்தான்...

Philosophy Prabhakaran said...

@ ஜேகே
// ஆனாலும் தல கலக்கியிருக்கு தான்! //

என்னத்தச் சொல்ல...

// இது கமலே விரும்பி புகுத்தும் விளையாட்டு என்று நினைக்கிறன் பாஸ்! //

இருந்தாலும் இருக்கும்... கமல் வெவகாரம் புடிச்ச ஆளுதான்...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// Nice. Thanks for Sharing. //

நன்றி நண்பா...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// விஸ்வரூபம் யாருக்கு எதிராய்? உங்களின் படித்ததில் பிடித்தது அதிலேயே முதலில் வாசிச்சுட்டேன்.. அப்பறம் தான் ஒயின் ஷாப்க்கு வந்தேன்.. //

ஓ அதையெல்லாம் கூட கவனித்து படிக்கிறீர்களா... மகிழ்ச்சி...

// கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமான ஆரூடமாக தோன்றியது அந்த கட்டுரை.. படம் வேறு கோணத்தில் இருக்கலாம்.. இன்னும் மொக்கையாய் கூட.. //

மதிமாறன் போன்றவர்கள் எதிலுமே நூற்றுக்கு நூறு பர்பெக்ஷன் எதிர்ப்பார்ப்பவர்கள்... மேலும் கமல் மாதிரி ஆட்கள் எப்படி படமெடுத்தாலும் அவர்களுக்கு பிடிக்காது...

// இருந்தாலும் முதல் நாள் முதல் ஷோ...:) //

இங்கேயும் அதே தான்... பார்க்கலைன்னா தலையே வெடிச்சிடும்...

// கார் ஓட்ட பழகியாச்சா? அது இன்னும் கூத்து... மிரர் பாக்கவே வராது... இப்போதான் நான் பழகிட்டு இருக்கேன்... //

நான் அந்தளவுக்கு வொர்த் இல்லைங்க...

Philosophy Prabhakaran said...

@ சே. குமார்
// பகிர்வு அருமை.
சாம் ஆண்டர்சன் இதுக்கு மேல என்ன செய்ய முடியும்... விடுங்க அவரை கோபிநாத் பார்த்துக் கொள்வார். //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// அதான பார்த்தேன், என்னடா மாப்பு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டனான்னு, அதுவும் வேற ஏதோ name போடவும் இன்னமும் குழப்பம். மாப்பு அடுத்த பதிவுல இதே பேர யூஸ் பண்ணி P.S:குறிப்பு போடாம விட்டுட்ட மக்கள் ஒரு முடிவே பண்ணிடுவாங்க. செண்பகம் மேட்டரை இத்தோட குளோஸ் பண்ணிடு. //

தல... அடுத்தவாரம் கிளி ஜோசியக்காரன் வீடியோவை அப்லோடு செய்கிறேன்... காத்திருங்கள்...

// சென்னையில பிறந்திட்டு இன்னமும் மாப்பு உனக்கு பைக் ஓட்டத் தெரியாதா!! ஆங்..... இப்பத்தான் காரணம் புரியுது. நீ பிகரை கரெக்ட் பண்ணவேண்டிய அவசியம் உனக்கில்லை. அதான் இப்படி இருந்திருக்கே. //

அதே அதே... பைக்கே இல்லாமல் ஃபிகரு கரெக்ட் பண்ண கைவசம் நிறைய ஐடியாக்கள் உள்ளன...

// ஐய.......... மாப்பு தொடர்ந்து ஓட்டு, இன்னும் ரெண்டு மாசத்துல நீயும் அந்த மாதிரி தெய்வமாயிடுவே!! //

கண்டிப்பா கத்துக்குவேன்...

ஷர்புதீன் said...

as usual, little spice need more

நம்பள்கி said...

ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com

திண்டுக்கல் தனபாலன் said...

பல்சுவை பதிவு ! நன்றி நண்பா !

காப்பிகாரன் said...

இந்தமுறை பச்சை நிற பதர்களிடம் செம உண்டை வாங்கப்போகிறாரோ {இந்த வரி சரியாய் இல்ல }

வவ்வால் said...

பிரபா,

//@ வவ்வால்
வவ்வால் வந்தாச்சா... சில நாட்களுக்கு முன்பு தான் மோகன் குமார் தளத்தில் லக்கி உங்களைப் பற்றி சொன்னதை படித்தேன்... ம்ஹூம் எனக்கும் ஏழரை ஸ்டார்ட் ஆயிடுச்சு போல :)
//

பிளாக் & ஒயிட் காலத்திலவே பில்லா அஜித் போல கோட்டு சூட்டு, கூலிங்க் கிளாஸ் போட்டு கலக்கின எம்.ஆர் ராதா படம் போட்டுக்கிட்டு ஏழரை ,எட்டரைனு பேசிக்கிட்டு,

இதை மட்டும் எம்.ஆர்.ராதா இப்போ இருந்து பார்த்தா என்ன சொல்லி இருப்பார் தெரியுமா?

என்னா மேன் 9 மணிக்குள்ள ஆபீஸ் போகணும்னா 71/2 க்கு கிளம்பினா தான் சரியா இருக்கும், எவனோ குடுமி வச்சவன் ஏழரைனு சொல்லிட்டான்னு எட்டரைக்கு கிளம்பினா உன் முதலாளி கழுத்துல ஒன்னு போட்டு காவாய்ல தள்ளுவான் ,ஆனா உனக்கு ஏழரை சொன்னவன் மட்டும் கரெக்ட்டா டைம்முக்கு போய் நல்லப்பேரு வாங்கிடுவான் ...ம்ம் பொழைக்க தெரிஞ்சவனுங்க... இன்னுமா நீயெல்லாம் ஏழரைய நம்புற ...க்காஹா க்க்ஹா ... (ஆட்டோ ஸ்டார்ட் பன்றாப்போல் சிரிப்பார்)இதுல என் படம் வேற அதை மாத்து மேன் ,அப்படினு சொல்லி இருப்பார் :-))