27 August 2012

பதிவர் சந்திப்பு – பரபரப்பான பத்து தலைப்புகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

1. பதிவர் சந்திப்பை நடத்திய பொறுக்கிகள்
பதிவர் சந்திப்பு குழுவினரைப் பற்றி ஒருத்தருக்கு ஒரு பத்தி என்ற விகிதத்தில் மொக்கை போட வேண்டும். இறுதியாக பதிவர் சந்திப்பு முடிந்ததும் விருந்தினர்கள் பயன்படுத்திய பேப்பர் கப், ப்ளேட் போன்ற வஸ்துக்களை விழாக்குழுவினர் “பொறுக்கி” கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.

2. பதிவர் சந்திப்பையும் மதுவையும் பிரிக்க முடியுமா ???
பதிவர் சந்திப்பை பற்றி இரண்டு பத்திகள் மொக்கை, பதிவர் மதுமதியை பற்றி இரண்டு மொக்கை பத்திகள். பின்னர் பதிவர் மதுமதியை நாங்கள் செல்லமாக மது என்றுதான் அழைப்போம். அவரையும் பதிவர் சந்திப்பையும் பிரிக்க முடியுமா என்று கேள்விக்குறியோடு முடிக்க வேண்டும்.

ஒளியூடுருவும் உற்சாக பானத்தை வாட்டர் பாட்டிலில் ஒளித்துவைத்து அருந்தும் மெட்ராஸ் பவனார்...!
3. உற்சாக பானம் அருந்திய மெட்ராஸ் பவனார்...!
முதலில் சிவகுமார் பற்றி இரண்டு பத்திகள். பின்னர் அவருடைய குணத்தைப் பற்றி, அன்னார் ரொம்ப நல்லவர், வல்லவர், பொதுவுடமைவாதி, சீரிய பேச்சாளர், ஒழுக்க சீலர், எச்சச்ச கச்சச்ச. அப்புறம் பதிவர் சந்திப்பன்று காலையிலிருந்து ஓடியாடி உழைத்து சிவகுமார் அயர்வானார். சில மில்லி உற்சாக பானம் குடித்ததும் மீண்டும் தெம்பானார். அந்த உற்சாக பானத்தின் பெயர் H20 என்று முடிக்க வேண்டும்.

4. பதிவர் சந்திப்பிற்கு ஊறுகாயான இஸ்லாமிய பதிவர்கள்...!
பதிவர் சந்திப்பை பற்றியும், மது சர்ச்சைகள் பற்றியும் சில பத்திகள். பின்னர் விழிப்புணர்வு, நடுநிலை, மதநல்லிணக்க (!!!) ஜல்லிகள். அப்புறம் பதிவர் சந்திப்பிற்கு இஸ்லாமிய சகோக்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மதிய உணவின் போது அன்போடு உணவு பரிமாறினார்கள். சகோ. மனிதாபிமானி தான் நண்பர்கள் அனைவர் இலையிலும் ஊறுகாய் வைத்தார் என்று முடிக்க வேண்டும்.

5. தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி யார்...?
முதலில் உங்களுக்கு தெரிந்த பிரபல / பிராப்ள பதிவர்களான கேபிள், ஜாக்கி, லக்கி, கே.ஆர்.பி பற்றி எழுதி மொக்கை போட வேண்டும். பின்னர் கூகுள்காரன் தான் நமக்கு ஓசியில் வலைப்பூ கொடுக்கிறான், அதனால் அவன்தான் தமிழ் பதிவர்களின் அத்தாரிட்டி என்று கோல் போட வேண்டும். பின்னூட்டத்தில் யாராவது வந்து, “வாத்தா... எவன்டா அது என்னைப்பத்தி எழுதினது...” ன்னு கேட்டா, “அண்ணே... ஆக்குசன் நடிகர் ஜாக்கி சான் என்னுடைய வசாகார்... அவரைப்பற்றி தான் சொன்னேன்... நீங்கங்கங்க யாருன்னே எனக்கு தெரியாது...” என்று பல்டியடிக்க வேண்டும்.

மொட்டைமாடியில் கொட்டை அடிக்கப்பட்ட ஜோடிபுட்டிகள்...!
6. பதிவர் சந்திப்பில் ஆபாசம் காட்டிய பதிவர்...!
முதலில் விழாக்குழுவில் உள்ள “அந்த” சம்பந்தப்பட்ட பதிவரைப் பற்றி சில பத்திகள். அப்புறம் பதிவர் சந்திப்பின் கண்ணியம் பற்றியும், இந்திய இறையான்மை பற்றியும் சில பத்திகள். பின்னர் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த விருந்தினர்கள் “ஆ...!” என்று ஆச்சர்யப்படும் வகையில் நண்பர் “பாசம்” காட்டினார். அதைத்தான் ஆ...பாசம் என்று சொன்னேன் என்று முடிக்க வேண்டும்.

7. தேசிய கீதத்தை அவமதித்த தமிழ்ப்பதிவர்கள் மாநாடு...!
மறுபடியும் இந்திய இறையான்மை, மகாத்மா (!!!) காந்தி பற்றி சில பத்திகள். முடிந்தால் ராபிந்திரநாத் தாகூர் பற்றியும், அவரது புலமை பற்றியும் சில மொக்கைகள். அப்புறம் தமிழ் பதிவர்கள் தேசிய கீதத்தை தமிழில் தானே பாடியிருக்க வேண்டும். ஏன் வங்காள மொழியில் பாடினார்கள் ??? என்ற வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை முன்வைக்க வேண்டும்.

8. உனா தானா அண்ணாச்சியை அவமதித்த பதிவர் குழுமம்...!
உண்மைத் தமிழன் அண்ணாச்சி உண்மையிலேயே எம்புட்டு நல்லவர் என்று விளக்கிச் சொல்லி சில பத்திகள். நடுநடுவே முருகா, செந்திலாண்டவா இதெல்லாம் போட்டுக்கணும். அப்புறம் அறுபது வயதை கடந்த பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு தந்து மரியாதை செய்தார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அறுபதைக் கடந்த எங்கள் சித்தப்பு உனா.தானாவை மறந்துவிட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.

பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! (அம்புக்குறி இடப்பட்டுள்ளது)
9. தமிழை மறந்த தமிழ்பதிவர்கள்...!
முதலில் தமிழனின் ஒரிஜினல் பெருமை, போதி தருமர், திருவள்ளுவர், கான்ஸ்டான்டியுஸ் ஜோசப் பெஸ்கி பற்றியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டும். பின்னர் பதிவர் சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது மேடையில் வீற்றிருந்த பதிவர் பாடலை மறந்துவிட்டதாகவும், அதை சமாளிக்க கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் கொடுத்ததாகவும் அடித்துவிட வேண்டும். நான் பார்த்தேனே... அப்படியெல்லாம் நடக்கலையே...” என்று மடக்கும் பின்னூட்டவாதிகளுக்கு போலி தமிழ் தேசியவாதிகள், நட்ட நடு சென்டர்கள் போன்ற பட்டங்களை தரவேண்டும்.

10. பதிவர்களில் யார் யார் எந்தெந்த க்ரூப்....? ஒரு நடுநிலை ஆய்(வு)...!
மறுபடியும் பதிவுலகில் மூத்த / பீத்த பதிவர்கள் பற்றி சில பத்திகள். பதிவுலகை நாங்கள் தான் கண்காணித்து, கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற வார்த்தைகள் கொண்ட பத்தி. பின்னர் பதிவர் சந்திப்பின் போது யார் யார் எந்தெந்த ப்ளட் க்ரூப் என்று பேசிக்கொண்டிருந்தோம். கேபிள் ஓ பாசிடிவ் க்ரூப், ஜாக்கி ஓத்தா நெகடிவ் க்ரூப் என்று அடித்துவிட வேண்டும். 

மேற்படி பதிவுகள் போடும்போது பின்னூட்ட மட்டறுத்தல் வைத்துக்கொண்டால் மற்றவர்கள் / உற்றவர்கள் காறி உமிழும்போது உங்கள் முகத்தில் படாமல் தப்பிக்கலாம். முடிந்தால் பின்னூட்டப்பெட்டியை மூடிக்கொண்டு இருக்கலாம்.

யாராவது வந்து இப்படி கெட்டவார்த்தையெல்லாம் போட்டு பதிவு எழுதியிருக்கீங்களே தம்பின்னு கேள்வி கேட்டா, யார் சொன்னது இது பெண்களெல்லாம் படிக்கும் கண்ணியமான வலைப்பூ...! அதனால் “ம” வில் ஆரம்பித்து “ரு” வில் முடியும், நடுவில் “யி” அல்லது “சு” வரக்கூடிய, தலைமுடியை குறிக்கக்கூடிய “அந்த” கெட்டவார்த்தையை எங்கம்மா சத்தியமா நான் பயன்படுத்தவே மாட்டேன் என்று அடித்துக்கூற வேண்டும்.

திருவள்ளூர் “வாசி”கள் மட்டும் தங்களுடைய பதிவின் தலைப்பில், ”அந்த”, “அது”, அதேதான்” போன்ற சங்கேத வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்ள பெசல் அனுமதி உண்டு...!


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

41 comments:

Philosophy Prabhakaran said...

Off the records:
மேற்படி பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...! யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றெல்லாம் நான் பொய் சொல்லமாட்டேன்.

ஏனென்றால், பிரபல முன்னாள் முகமூடி பதிவர், இடையழகி ஸ்ரேயாவின் தீவிர ரசிகர் நேற்றைய பதிவர் சந்திப்பில் என்னிடம் உதிர்த்த தத்துவம்,
“யார் மீதாவது கோபம் வந்தால் கட்டுப்படுத்திக்கொள், அதற்கு மாறாக அவர்களை கலாய்த்து விடு பாப்பா...! அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா...!”

Anonymous said...

யாரையும் விடுறதா இல்லை ... இப்படியல்லாம் கூட கலாய்க்கலாமா என்பதை உங்களிடம் தான் பழக வேண்டும் !!!

நல்லப் பதிவு

Crazy Blogger said...

பயபுள்ள...!!! ஒரே பதிவுல எம்புட்டு பேரை கலாய்ச்சு உள்குத்து (!!!) போட்டிருக்கு...!

பின்னூட்டத்துல வேற என்னைய (வெண்ணைய) !!! கலாய்ச்சிருக்கு...!

ரைட்டு............. நடக்கட்டும்.......

Philosophy Prabhakaran said...

@ இக்பால் செல்வன்
// யாரையும் விடுறதா இல்லை ... இப்படியல்லாம் கூட கலாய்க்கலாமா என்பதை உங்களிடம் தான் பழக வேண்டும் !!!

நல்லப் பதிவு //

இக்பால்ஜி... வர முடியவில்லை என்ற ஏக்கம் உங்கள் பதிவில் அதிகம் தெரிகிறதே... என்ன காரணம்...? யார் செய்த தாமதம்...??

அனுஷ்யா said...

மாப்ள... பட்டாசு பதிவு... :)

முக்கியமா அந்த ஊறுகா, ஆபாச, மற்றும் கஞ்சா இழுக்கும் ஸ்டைல்... :)

வவ்வால் said...

பிரபா,

எல்லாரையும் கலாய்ச்சுட்டாராம் ...ஹா ..ஹா ..ஹா

அப்படின்னு ஒரு பின்னூட்டம் கூடவா வராம போகப்போவுதுன்னு சொல்ல வந்தேன் :-))

என்ன 10 தலைப்பு 11 வச்சா குடும்பக்கட்டுப்பாடு ஆபிசர் ஒத்துக்க மாட்டாரா ?

பதினொராவது தலைப்பு...

பதிவர் சந்திப்பை உளவு பார்த்த வவ்வால்!!!!

வவ்வால் ரொம்ப நல்லவர், நேர்மையானவர் ரிசர்வ் பேன்க் கவர்னர் வேலை கூட வேண்டாம்னு வந்த தியாகி, அப்படியே எக்ஸ்ட்ராவா கூகிளவிட வேகமானவர்னு சொன்னால் கூட கோச்சுக்கமாட்டார்னு எதாவது அடித்துவிட்டு ... கடைசியில் மாநாடு நடந்த மண்டபக்கூறையில் ஒரு வவ்வால் தலைக்கீழாக தொங்கிக்கொண்டிருந்தது என முடிக்கவும்!


செம ஹிட்ஸ் அள்ளும்...நிறைய பேரு என்னோட ரசிகர்கள் தேடி வந்து தாறுமாறாக பாராட்டுவாங்க என்ப்தை சொல்லவும் வேண்டுமோ :-))

ஹி...ஹி பெனால்டி கார்னர்லவே கோல் போடுவேன் ஃப்ரீ கிக் கிடைச்சா விடுவேனா ... :-))

துளசி கோபால் said...

:-))))))))))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

:-)))

ரொம்பவே நொந்து போயி இருக்கீங்கன்னு புரியுது..! நானும்தான்..!

நான் ஒரு 'ஹிட் தலைப்பு' தருகிறேன்..!

"(பதிவர் பெயர் போட்டு) - நீ சாகனும்டா" என்று தலைப்பு வைக்கணும்..!

அடப்பாவின்னு.... உள்ளே போயி பார்த்தா... "நீ நல்லா பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நல்லா இருக்கனும்... 'நீ சாகனும்னுடா' என்று உன் எதிரி கூட நினைக்க மாட்டான்..! 'நீ என் நன்பேண்டா'..." என்று முடிக்கனும்..!

இப்படித்தான்... 'பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம்' என்று எதிர்மறை தலைப்பு வைத்து ஹிட்ஸ் அள்ளுறது கூட ஃபேஷன் ஆகிருச்சு..! இது ஒரு நோய்..!

இவரிடம் இருந்து பாடம் படிச்சது மாதிரி... ஒருத்தர் இன்னிக்கு 'பதிவர் சந்திப்பு புகைப்படங்கள்' என்று போட்டு உலகை ஏமாற்றிவிட்டு... பின்னர் தவறு சுட்டிக்காட்டப்பட்டவுடன் அந்த பதிவை நீக்கி அதிலேயே தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்..!

தேவையா இதெல்லாம்..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//சிராஜுதீன்....//

இதில் என்ன சொல்ல வறீங்கன்னு புரியலை..! அவர் 'சாப்பாடு வேண்டாம்னு' புறக்கணிச்சிட்டாரா..? அப்புறம், எதுக்கு ஐஸ் கிரீம் மட்டும் சாபிடுறாராம்..? அதுக்கு மட்டும் நாக்கு ஊறுதோ..? :-)))

வவ்வால் said...

//இதில் என்ன சொல்ல வறீங்கன்னு புரியலை..! அவர் 'சாப்பாடு வேண்டாம்னு' புறக்கணிச்சிட்டாரா..? அப்புறம், எதுக்கு ஐஸ் கிரீம் மட்டும் சாபிடுறாராம்..? அதுக்கு மட்டும் நாக்கு ஊறுதோ..? :-)))
//

வெங்காயம் அரேபியக்காரனுக்கு பொறந்த மாதியே பேசுறான் :-))

யோவ் எலையை எதிர்பக்கமா சாப்டு மடிச்சா மீண்டும் இந்த விருந்து/ சாப்பாடு / உறவு வேண்டாம்னு நினைப்பதாக தமிழக கலாச்சாரம்.

அதைத்தான் எலையை மடிச்ச விதம் வச்சு கலாய்ச்சு இருக்கார் பிரபா?

தமிழ் நாட்டுல பொண்ணு பார்க்கப்போனால் சாப்பாடு போட்டு சாபிடும் போது எலையை எதிர்பக்கம மடக்கினால் பொண்ணு பிடிக்கலைனு சொன்னதா அர்த்தம், அப்புறம் கருமாதி எனப்படும் 16 ஆம் நாளுக்கு அப்புறம் போடும் சாப்பாட்டில் எல்லாரும் எலையை எதிர்ப்பக்கமாக மடிக்கணும் அர்த்தம் இது போல் துக்க சாப்பாடு சாப்பிட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பது.


இதன் அடிப்படையில் போட்டோவில் அம்புக்குறியிட்டு இருக்கார், ஆனால் அதுக்கூட தெரியாமல் பினாதிக்கிட்டு :-))

Anonymous said...

//இக்பால்ஜி... வர முடியவில்லை என்ற ஏக்கம் உங்கள் பதிவில் அதிகம் தெரிகிறதே... என்ன காரணம்...? யார் செய்த தாமதம்...??//

சில பெர்சனல் காரணங்களுக்காக வரமுடியவில்லை. வருங்காலங்களில் கண்டிப்பாக இணைந்திருப்பேன் .....

Anonymous said...

//இப்படித்தான்... 'பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம்' என்று எதிர்மறை தலைப்பு வைத்து ஹிட்ஸ் அள்ளுறது கூட ஃபேஷன் ஆகிருச்சு..! இது ஒரு நோய்..!//

பாவம் ! ரொம்ப சந்தோசமாக பதிவினை நோக்கி வந்தவர்கள் பலர் நொந்துப் போய்விட்டதன் எதிரொலி வார்த்தைகளில் தெரிகின்றது !!!

கோவி said...

இனிமையான சந்திப்பை முடித்து வீடு வந்து சேர்ந்தாச்சு..

Unknown said...

”பிலாசபி பிரபாகரனை திட்டிய ஆன்மீக பதிவர்”

பந்தியில் சாப்பிடும் போது பிரபாகரன் சாப்பாடு போதும் என்றார் நல்ல தெம்பா சாப்பிட்டு உடம்பை தேத்த வேண்டாமா...?என்று திட்டினார் என்று முடிக்க வேண்டும்.

”முகமது ஆசிக்கும் நக்கீரனும் நடந்தது என்ன?”

ஆசிக்கை அறிமுகப்படுத்தியதும் நக்கீரன் கட்டிப்பிடித்து அன்பை பொழிந்தார் என்று முடிக்க வேண்டும்.

Unknown said...

சில பல காரணங்களால் வர இயலவில்லை...!நேரடி ஒளிபரப்பில் கண்டேன் மிக அருமையாக சந்திப்பு! இதை நடத்திய அனைவரையும் வரலாறு பேசும்!

கோவை நேரம் said...

செம///

Anonymous said...

Excellent creativity. அதுவும் சகோ டாட் மனிதாபிமானி ஊறுகா வச்சது, ஜாக்கி ப்ளட் க்ரூப், சத்தமாகச் சிரித்துவிட்டேன் :)

உண்மைத் தமிழனை கலாய்த்தது மட்டும் சற்று வருத்தியது.

Prem S said...

கீர்த்தி சிறிதினும் மூர்த்தி பெரிது உங்களுக்கு நகைச்சுவை உங்களுக்கு கை வந்த கலை போல

Anonymous said...

எனக்கு வலைப்பூவும் இல்ல பதிவர் சந்திப்புக்கும் நான் வரல....சூப்பர இருக்குங்க பதிவு...... செமயா உள்குத்து குத்துறீங்க......ஒவ்வொரு தலைப்பும் செம...

//“ஆ...!” என்று ஆச்சர்யப்படும் வகையில் நண்பர் “பாசம்” காட்டினார். அதைத்தான் ஆ...பாசம் என்று சொன்னேன்//

அட அட அட.......

////பதிவர் சந்திப்பு முடிந்ததும் விருந்தினர்கள் பயன்படுத்திய பேப்பர் கப், ப்ளேட் போன்ற வஸ்துக்களை விழாக்குழுவினர் “பொறுக்கி” கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டார்கள் என்று முடிக்க வேண்டும்.
////

கலக்குறீங்க....பிரபாகரன்....மறுபடியும் டெல்லிங் எனக்கு வலைபூவும் இல்ல பதிவர்கள் நண்பர்களாகவும் இல்ல...அதான் டவுட்டு...இப்டிஎல்ல்லாம் போட்டா எதிர்ப்பு வராதா எப்படி சமாளிக்கறீங்க......

பிரபாவை புறக்கணிப்போம் னு ஒரு கூட்டம் பொங்கி எழோனுமே.......இல்லடி ஆட்டம் சூடு பிடிக்காது ........

----Dhileepan

பட்டிகாட்டான் Jey said...

ஹஹஹஹா... டேய்.. பல பேர் வயித்தெரிச்சல ஏண்டா கொட்டிக்கிறே..., இப்ப அவங்கதலைப்புக்கு எங்க போவாங்க...

பத்தோட நிறுத்தி ... பலபேர் வயித்துல பால் வார்த்ததால... உனக்கு என்ன பட்டம் குடுக்கலாம்னு.... தனியா ஒரு ஆலோசனைக் கூட்டத்த டிஸ்கவரி புக் பேலஸ்ல நடத்தி முடிவெடுக்கச் சொல்லலாம்...

இந்திரா said...

”ஆ...பாசம்” சூப்பர் ஐடியாங்க!!
ம்ம்ம்ம்முடியல..

தமிழ்வாசி பிரகாஷ் said...

உடல் மண்ணுக்கு...
உயிர் தமிழுக்கு.....



இது என்ன பொன்மொழி சொல்றேன்னு பாக்கறிங்களா?


பிலாசபி மேடையில் உதிர்த்த வார்த்தைகள் இவை...

UNMAIKAL said...

சொடுக்கி >>> பதிவர்கள் நட்பை விரும்பாத சிராஜுதீன்...! 'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்? <<< படிக்கவும்

MARI The Great said...

சிரிச்சு மாலல :D :D :D

சிராஜ் said...

வவ்வால்...

//வெங்காயம் அரேபியக்காரனுக்கு பொறந்த மாதியே பேசுறான் :-))//

உங்கள் தகுதியை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்...

சில்லறைகளை தவிர வேறு எந்த நன்மக்களும் இதை ரசிக்க மாட்டார்கள்... காரி உமிழ்வார்கள்...

சொல்வது என் கடமை.. கேட்பது உங்கள் உரிமை...

இதில் நீங்கள் சிட்டிசனை கேவலபடுத்துவதாக நினைத்துக் கொண்டு, உங்களை கேவல படுத்திக்கொண்டீர்கள்....

சிராஜ் said...

பிரபா...

எவன்பா இத போட்டோ எடுத்தது???? இலைய கூட இஸ்டத்துக்கு மடிக்க விட மாட்டேங்கிறீங்களே????

arasan said...

நேற்று பேச்சை சுருக்காமாக முடித்தது இந்த மாதிரி பதிவு எழுத தானா ? நடத்துங்கையா நடத்துங்க...
ரசித்தேன் நண்பா

R.Puratchimani said...

என்ன பிலாசபி இப்படி

செம சூப்பரு :)

வவ்வால் said...

சிராஜ்,

வாங்க,வணக்கம்,

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நாகரீகம், அல்லது கண்னியம் இல்லாத ஒருவரை அவரை விட மோசமாக பேசும் அளவுக்கே எனது தகுதி இருக்கு.

நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்.

எனவே எனது தகுதியை நீங்கள் எல்லாம் எடைப்போட முயலவேண்டாம், அதற்கான தராசு உங்களிடம் இல்லை :-))

//சில்லறைகளை தவிர வேறு எந்த நன்மக்களும் இதை ரசிக்க மாட்டார்கள்... காரி உமிழ்வார்கள்...//

அது எப்படி சில்லறை, நன்மக்கள் எல்லாம் யார் என கண்டுப்பிடித்து, முடிவு செய்து முத்திரைக்குத்தும் பொறுப்பில் இருக்கிங்களா :-))

மேலும் பிரபா ஒரு தமாஷுக்காத்தான் புகைப்படம் போட்டார் என்பது எங்களுக்கு புரிகிறது, ஆனால் அதனை சாப்பாடு வேண்டாம் ஐஸ்கிரீம் திங்க நாக்கு ஊறுதோ என வேறு தொணியில் சொன்னதாலே நான் அப்படி விளக்கினேன்.

மற்றபடி இதில் மேற்கொண்டு பேச ஏதும் இல்லை, மேலும் பேசுவது திசை திருப்பும், வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். நன்றி!

anubavi raja anubavi said...

Asathal pathiu

அருள் said...

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.ஹா... உங்கள் பாணியில் கலக்கிட்டீங்க சார்... நன்றி...

அருணா செல்வம் said...

நல்ல நல்ல தத்துவ தலைப்புக்கள்!!!!!

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

கிராமத்து காக்கை said...

வாழ்த்துக்கள் நண்பா

Jayadev Das said...

\\ஜாக்கி ஓத்தா நெகடிவ் க்ரூப் என்று அடித்துவிட வேண்டும். \\ ...ங்கோத்தா என்று மாற்றி விடவும் பிளீஸ்.........

முரளிகண்ணன் said...

:-)))))

முட்டாப்பையன் said...

டேய்.நீ எல்லாம் பகுத்தறிவாதி.போய் சரண்டர் ஆகி கால்ல விழுந்துக்கிட்டு.எங்களின் இன்றைய பதிவை படித்துவிட்டு உன்னை நீயே எதால் வேண்டுமானாலும் அடித்துக்கொள்.
அஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சமுத்ரா said...

நல்ல தலைப்புகள் :)

Anonymous said...

when is your next post? i am visiting your site twice a day....
pls post atleast 3 articles per week.
Your articles were interesting...

Easy (EZ) Editorial Calendar said...

என்ன தான் சொல்ல வாரிங்க...எப்படியோ யாரையும் விடுறதா இல்லை....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

This is an interesting information..... Keep updating your blog. Thanks a lot for the share.... Thanks! yard sale sign