16 August 2012

அட்டகத்தி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜனவரி ரிலீஸ் என்று விளம்பரப்படுத்திய படம், தட்டுத்தடுமாறி சுதந்திரம் பிறந்து வெளிவந்திருக்கிறது. ஹிட் பாடல்கள் நச் ட்ரைலர் என எதிர்பார்ப்பை எகிற வைத்த அட்டகத்தி, சமீப நாட்களாக பண்பலை, செய்தித்தாள், தொலைக்காட்சி என்று தொடர் மார்கெட்டிங் செய்து ஒருவழியாக திரையரங்கு நுழைய வைத்துவிட்டார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா...???

டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொன்னை காதலி’ன்னுற ஒருவரி கமலுத்துவத்தை நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்...!

“இவருதாங்க நம்ம ஹீரோ” – என்ற வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கும்போதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு நமக்குள் இருந்து நம்மையறியாமல் காற்று பிரிகிறது. எத்தனை பேருடா இதேமாதிரி ஆரம்பிப்பீங்க...!

ஹீரோ பெரும்பான்மை தமிழ் சினிமாக்களில் வருவது போன்ற பொறம்போக்கு பொறுக்கி. ஆனால் நிஜத்தில் சரியான அம்மாஞ்சியாக இருப்பார் போல. அவருடைய தோற்றம் கலைக்கல்லூரி மாணவருக்கு பொருத்தமாக இருப்பினும் டயலாக் டெலிவரி, அசால்ட், கெத்து, சீன் போன்ற அம்சங்களில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. வடசென்னையிலுள்ள மேற்படி பொறுக்கிகள் நான்கு நிமிட பேச்சினூடே நாற்பது ங்கோத்தா போடுவார்கள். அதையெல்லாம் சினிமாவில் காட்டுவது சாத்தியமில்லையே...!

அரை டஜன் ஹீரோயின்கள் அத்தனையும் அடுக்கி வைத்த அல்வாதுண்டூஸ், உருட்டி வைத்த லட்டூஸ். ஆனால் சமயங்களில் எது யாரென்று புரியமாட்டேங்குது. இருக்கட்டுமே அதனாலென்ன...! அத்தனை ஃபிகரிலும் அத்தைப்பெண் அமுதாவாக வருபவர் அட்டகாசமான தேர்வு. கலையான முகம் இன்னமும் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. கடைசி காட்சியில் சிறப்புத்தோற்றம் தருகிறார் மதுபானகடை புகழ் நேற்று பூத்த ரோஜா மொட்டு ஐசுவர்யா. 

அமுதா மட்டுமில்லாமல் ஹீரோவுடைய அம்மா, அப்பா என்று நடிகர் – நடிகையர் தேர்வு கச்சிதம். 

“ரூட்டு தல” பற்றிய பதத்தை விவரிக்கும் பொருட்டு பச்சையப்பாஸ், நந்தனம் கல்லூரி மாணவர்களை பேட்டி எடுத்து ஒரு மினி டாக்குமெண்டரியை படத்தில் சொருகியிருக்கிறார்கள். மாணவர்களுடைய கொண்டாட்ட மனப்பான்மை, ஒற்றுமை ஆகியவற்றை படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர், அவர்கள் செய்யும் பாலியல் சீண்டல்கள், பப்ளிக் நியூசன்ஸ் போன்றவற்றை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்.

எடிட்டிங் என்ற யுக்தி சரியில்லையெனில் படம் எந்த அளவிற்கு மொக்கையாக இருக்குமென்பதற்கு அட்டகத்தி மிகச்சரியான உதா”ரணம்”. ஹீரோவுக்கு டான்ஸ் தெரியும் / வடசென்னை வாழ்க்கை பற்றிய எதார்த்தமான படம் என்று காட்டுவதற்காக திடீரென ஒரு மரண நடனம், அதைத் தொடர்ந்து குடும்ப கானா...! ஹீரோவுடைய நண்பர் போண்டா சாப்பிட்டு முடிக்கும்வரை அடுத்த காட்சி காத்திருப்பது கொடுமை.

தனித்தனி காட்சியாக பார்க்கும்போது அட்டகத்தி பளபளப்பாக இருப்பது போல தோற்றமளிக்கிறது. ஆனால் முழுப்படமாக பார்க்கும்போது டல்லடிக்கிறது...! மொத்தத்தில் படத்தினுடைய டைட்டிலையே அதற்குரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

34 comments:

Philosophy Prabhakaran said...

Off the records:
சில வாரங்களுக்கு முன்பு கேபிளாரை சந்தித்தபோது அட்டகத்தி நன்றாக இருப்பதாகவும் க்ளைமாக்ஸில் மட்டும் ஒரு சீட்டிங் இருக்குறது... (நம்ம எதிர்பார்ப்பை கூட்டுறாராமாம்...) அதைத்தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை என்றும் சொன்னார்... படம் பார்த்தபிறகு தான் கேபிளார் நல்லா இருக்கு என்று சொன்னதுதான் அந்த சீட்டிங் என்று புரிந்தது...!

பி.பதிவர்கள் பக்க சார்பாக சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள் என்பது மறுபடியும் நிரூபணமாகிவிட்டது.

முதல்முறையாக ஃபேம் திரையரங்கில் படம் பார்த்தேன். கேண்டீனிலும், ஃபுட் கோர்ட்டிலும் மும்மடங்கு கொள்ளை அடிக்கிறார்கள் பொறம்போக்குகள். உதாரணம்: 15ரூ மதிப்புள்ள நிம்பூஸ் விலை 50ரூ.

அனுஷ்யா said...

படம் பாக்கலாம்னு இருந்தேன்... அவசரப்பட்டு இந்த விமர்சனத்த படிச்சுப்புட்டேன் :)

அனுஷ்யா said...

ஆஊன்னா students ன்னா யாருன்னு தெரியுமா? நாங்க மனசு வெச்சா எண்ண ஆகுமுன்னு தெரியுமான்னு... stereotypic ஆ எல்லா கல்லூரி சம்பந்தப்பட்ட படங்களிலும் ஒரு சீன இருக்கும்... எனக்கு " நான் மகான் அல்ல" படம் பிடிக்கலேன்னாலும் அந்த நான்கு மாணவர்களைப் பற்றிய காட்சியமைப்புகள் நிச்சயம் நல்லா இருந்துது... அவ்வாறானவர்களை வில்லானாக காட்டி அவர்கள் அறிதானோர் என்று தமிழ் சினிமா ஒரு மாயை ஏற்படுத்தியுள்ளது...

Prem S said...

நல்லா இருக்குனுலா சொன்னாங்க நீங்க இப்படி சொல்லிபுட்டீக

அனுஷ்யா said...

அப்புறம் இந்த பிரபல பதிவர் சமாசாரம்... நான் சி.பி அவர்களின் அச்சில் கோர்க்க படவேண்டிய முத்துமுத்தான விமர்சனங்களைப் படிப்பதை நிறுத்தி பல வாரங்கள் ஆகிவிட்டது... கேபிள் பக்கம் எப்போதாவது சென்று "ஏன்டா வந்தோம்" ன்னு ஃபீல் ஆவதும் உண்டு... (சமீபத்திய எரிச்சல்- the darkknight rises அவருடைய உலகத்தர விமர்சனம்) மொக்கை படங்களுக்கு சப்பை கட்டுவது, சுமார் படங்களுக்கு அதி மேதாவி தனமாய் குற்றம் சொல்வது, நல்ல படங்களின் டைட்டிலில் உள்ள எழுத்து பிழை வரை சுட்டி காட்டி லாஜிக் இல்லை என சொல்வது.... என விமர்சனங்களை பொறுத்தவரை இவர்கள் 'கால்பந்து போட்டிக்கான கிரிக்கெட் அம்ப்பயர்கள்:"

கோவை நேரம் said...

சரியா விமர்சனம் பண்ணி இருக்கீங்க...இப்போ வரைக்கும் பார்க்கலாம்னு இருந்தேன்..முடிவ மாத்திகிட்டேன்.

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// படம் பாக்கலாம்னு இருந்தேன்... அவசரப்பட்டு இந்த விமர்சனத்த படிச்சுப்புட்டேன் :) //

நான் நேற்று காலையிலேயே பார்த்துவிட்டேன் மயிலன்... பதிவே போட வேண்டாமென்று தான் நினைத்தேன்... கை பரபரவென இருந்ததால் போட்டுபுட்டேன் :)

// ஆஊன்னா students ன்னா யாருன்னு தெரியுமா? நாங்க மனசு வெச்சா எண்ண ஆகுமுன்னு தெரியுமான்னு... stereotypic ஆ எல்லா கல்லூரி சம்பந்தப்பட்ட படங்களிலும் ஒரு சீன இருக்கும்... //

அட்டகத்தியில் அம்மாதிரியான காட்சிகள் இல்லை மயிலன்...

// நான் சி.பி அவர்களின் அச்சில் கோர்க்க படவேண்டிய முத்துமுத்தான விமர்சனங்களைப் படிப்பதை நிறுத்தி பல வாரங்கள் ஆகிவிட்டது... //

எனக்கு தெரிந்து சமீப காலமாக சிபியின் விமர்சனங்களில் தெளிவு இல்லை... படம் பார்க்காதவர்கள் தானே படிக்கிறார்கள் என்று பிழையான தகவல்களை கொடுத்து வருகிறார்... அதாவது அன்னார் இரண்டாம் பாதி தொடங்கியதும் தட்டச்ச ஆரம்பித்துவிடுவதால் திரையில் காட்டியதை குத்துமதிப்பாக அடித்துவிடுகிறார்...

கேபிளாருடைய அட்டகத்தி விமர்சனம் நகைச்சுவை உணர்வு கொண்ட பதிவு... படித்து மகிழ்ந்தேன் :)

Philosophy Prabhakaran said...

@ Prem Kumar.s
// நல்லா இருக்குனுலா சொன்னாங்க நீங்க இப்படி சொல்லிபுட்டீக //

அதுக்கு மேல உங்க இஷ்டம் ப்ரேம்...

Philosophy Prabhakaran said...

@ கோவை நேரம்
// சரியா விமர்சனம் பண்ணி இருக்கீங்க...இப்போ வரைக்கும் பார்க்கலாம்னு இருந்தேன்..முடிவ மாத்திகிட்டேன். //

நன்றி கோ.நே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அட்டகத்தி மொட்டகத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அவருடைய தோற்றம் கலைக்கல்லூரி மாணவருக்கு பொருத்தமாக இருப்பினும் டயலாக் டெலிவரி, அசால்ட், கெத்து, சீன் போன்ற அம்சங்களில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. //////

நடிகன்னா இப்படி நடிக்கனும்.... நல்ல நடிப்பு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அத்தனை ஃபிகரிலும் அத்தைப்பெண் அமுதாவாக வருபவர் அட்டகாசமான தேர்வு. கலையான முகம் இன்னமும் கண்களுக்குள்ளேயே நிற்கிறது.///////

போட்டோ அந்த பிகர்தானா? நல்லாத்தான் இருக்கு..... ஒரு ரவுண்டு வரும் போல....!

முரளிகண்ணன் said...

:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மயிலன் said...
அப்புறம் இந்த பிரபல பதிவர் சமாசாரம்... //////

டோட்டல் டேமேஜ்....!

Katz said...

மொக்கை படத்திற்கான உங்கள் சூப்பர் விமர்சனத்தை எப்போதும் எதிர்பார்த்து...நான்.


சோக்கா எழுதுரப்பா!

//“இவருதாங்க நம்ம ஹீரோ” – என்ற வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கும்போதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸுன்னு நமக்குள் இருந்து நம்மையறியாமல் காற்று பிரிகிறது. எத்தனை பேருடா இதேமாதிரி ஆரம்பிப்பீங்க...!//

:-)

//ஹீரோவுடைய நண்பர் போண்டா சாப்பிட்டு முடிக்கும்வரை அடுத்த காட்சி காத்திருப்பது கொடுமை.//

சூப்பர். ரசித்தேன்.

பி.பதிவர்களின் விமர்சனத்தை விட பு.பதிவர்களின் விமர்சனம் மேல். இருந்தாலும் டெய்லி நியூஸ் பேப்பர் மாதிரி என்னதான் க போட்டு இருக்குன்னு பார்த்துட்டு குளோஸ் பண்ணிடுவேன்.

வவ்வால் said...

பிரபா,

என்ன பாஸ் இப்படி புஸ்ஸுனு காத்த பிரிச்சுப்புட்டிங்க, நான் கூட இன்னொரு தலைவாசல் ரேஞ்சில இருக்கும்னு நினைச்சுட்டேன்... ஹி..ஹி நானும் படிக்கிர காலத்துல கேங்ல அலைஞ்சவன் என்பதால் ஒரு பாசம் :-))

பிரபாகரன்னு பேரு இருந்தாலே தில்லு கூட இருக்கும் போல ...ஹி..ஹி நான் பிராபல்யங்கள் பற்றி எதுவும் பேசவில்லை, அந்த வரிகளைப்படிக்கவும் இல்லை :-))

நேராப்பார்க்கும் வாய்ப்புள்ளவர் எதுக்கும் ஹெல்மெட் கழட்டாமல் பேசவும் ,மண்டையில கொட்டு விழப்போகுது :-))

//எடிட்டிங் என்ற யுக்தி சரியில்லையெனில் படம் எந்த அளவிற்கு மொக்கையாக இருக்குமென்பதற்கு அட்டகத்தி மிகச்சரியான உதா”ரணம்”//

ரொம்ப கிரிஸ்ப்பான எடிட்டிங்க்குன்னு சொன்னாரே அதுவா ? என்னைய்யா கொஞ்சம் கூட பக்கத்தில வர மாதிரியே இல்லை, எனக்கு உடனே ஒரு சோடா வேணும் :-))

//: 15ரூ மதிப்புள்ள நிம்பூஸ் விலை 50ரூ.//

இதுக்கு தான் நான் இப்போ எல்லாம் தியேட்டருக்கே போறதில்லை படம் மொக்கையா இருந்தால் கூட பொறுத்துக்கலாம் போல இருக்கு இவனுங்க பகல் கொள்ளை தாங்க முடியலை, இதை வாங்க வேற செம கூட்டம் அங்கே இருக்கு, என்ன கொடுமை சார் இது!


காபிக்கூட 50 ரூபான்னு ஒருத்தர் சொன்னார் உண்மையா?
--------

மயிலன் கூட ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கார் போல :-))

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அப்போ அட்டகத்தி மொட்டகத்தியா? //

ஆமாம் ப.ரா...

// நடிகன்னா இப்படி நடிக்கனும்.... நல்ல நடிப்பு.....! //

என்ன சொல்றீங்க... ஒன்னும் வெளங்கலை...

// போட்டோ அந்த பிகர்தானா? நல்லாத்தான் இருக்கு..... ஒரு ரவுண்டு வரும் போல....! //

ஆமாம்... ஆனா ரவுண்டேல்லாம் வர்றது கஷ்டம்தான்... ஏன்னா அம்மணிக்கு தமிழ் தெரியுமே... ராசு மதுரவன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ முரளிகண்ணன்
// :-)) //

ஓ ப்ளஸ் பயனாளர்...! நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ Katz
// மொக்கை படத்திற்கான உங்கள் சூப்பர் விமர்சனத்தை எப்போதும் எதிர்பார்த்து...நான்.


சோக்கா எழுதுரப்பா! //

மிக்க நன்றி Katz...

Philosophy Prabhakaran said...

@ வவ்வால்
// நேராப்பார்க்கும் வாய்ப்புள்ளவர் எதுக்கும் ஹெல்மெட் கழட்டாமல் பேசவும் ,மண்டையில கொட்டு விழப்போகுது :-)) //

அந்தமாதிரியெல்லாம் பண்ண மாட்டார் வவ்வால்... போனமுறை நேரில் பார்த்தபோதே உன்னையெல்லாம் நான் மதிக்குறதே இல்லை'ன்னு சொல்லிட்டார்... அதனால் தைரியமாக ஹெல்மெட் இல்லாமல் போகலாம்...

// ரொம்ப கிரிஸ்ப்பான எடிட்டிங்க்குன்னு சொன்னாரே அதுவா ? என்னைய்யா கொஞ்சம் கூட பக்கத்தில வர மாதிரியே இல்லை, எனக்கு உடனே ஒரு சோடா வேணும் :-)) //

டோட்டலா அந்த பதிவே காமெடி தான்... அதுல உச்சகட்டம் அந்த வரி... தயாரிப்பாளரோ, இயக்குனரோ தலைவருக்கு வேண்டப்பட்டவர் போல...

// காபிக்கூட 50 ரூபான்னு ஒருத்தர் சொன்னார் உண்மையா? //

இருக்கலாம்... ரெண்டு சமோசா ஐம்பது ரூபாய் இருக்கும்போது காபியும் ஐம்பது இருந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை...

Philosophy Prabhakaran said...

@ வவ்வால்
காரமாக ஒரு தன்னிலை விளக்க பதிவு போடுவதாக இருந்தேன்...

நம்ம நட்புதான் நம்முடைய பெயரை நேரடியாக குறிப்பிடும் வரை அடக்கி வாசிக்கச்சொன்னார்...

நான் இப்போது பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்த ஃப்ரோபைலை தவிர வேறெந்த ப்ரோபைலிளும் எழுதுவதில்லை... (சாம் மார்த்தாண்டனில் நான் எழுதியது ஒரே ஒரு பதிவு... அதையும் இதே ப்ரோபைலை பயன்படுத்தி தான் எழுதினேன்...)

கண்ட கண்ட பெயரை வைத்துக்கொண்டு உள்குத்து வெளிக்குத்து பதிவு போடுவதற்கு நான் பொட்டைப்பயல் அல்ல...

Jayadev Das said...

\\தனித்தனி காட்சியாக பார்க்கும்போது அட்டகத்தி பளபளப்பாக இருப்பது போல தோற்றமளிக்கிறது. ஆனால் முழுப்படமாக பார்க்கும்போது டல்லடிக்கிறது...! \\

அப்ப 2 நிமிஷம் 3 நிமிஷம் பிட்டு பிட்டா யூ-டியூப்ல போடுவது போல போட்டா பார்க்க நல்லா இருக்கும் போல. [ஐயையோ நான் அந்த பிட்ட சொல்லலைப்பா.....]


\\மொத்தத்தில் படத்தினுடைய டைட்டிலையே அதற்குரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம்.\\


சின்ன திருத்தம், மொக்க கத்தி.......... ஒ.கே.வா.......?

வவ்வால் said...

பிரபாகரன்,


//காரமாக ஒரு தன்னிலை விளக்க பதிவு போடுவதாக இருந்தேன்...//

யாருக்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தீர்கள்?

எனக்கானது இல்லை என நினைக்கிறேன்,ஏன் எனில் உங்களை திட்டிவிட்டு அடுத்து என்னை குறிவைத்து திட்டுவதாக, எனதுப்பதிவில் யார் யாரோ வந்து பின்னூட்டமிட்டு செல்கிறார்கள், நான் மாடரேஷன் வைப்பதில்லை, மேலும் ஆபாசமில்லாத அனைத்தையும் அனுமதிப்பேன், எனவே அனைத்தும் இருக்கிறது.

எனவே உங்கள் சார்பாக ஏதேனும் சொல்வதாக இருந்தால் சொல்லலாம்.

உங்களுக்கு அடுத்து ஏன் என்னை குறிவைக்கிறார்கள் என்பதாவது தெரிந்துக்கொள்வேன் :-))

Unknown said...

கேபிள் சிபி போன்றோருடன் ஒப்பிடுவது தவறு...! ஒருத்தருக்கு ஜிலேபி பிடிக்கும்! ஒருத்தருக்கு பிடிக்காது...!அதிமேதாவிதனமாக இல்லாமல் ஒரு படம் பார்த்ததுவிட்டு நண்பனிடம் படத்தை பற்றி நாம் சொல்வது போன்ற விமர்சனம் அனைவருக்கும் (எனக்கும்)பிடிக்கும். அதை பிலாசபி கச்சிதமாக செய்கின்றார் என நான் நம்புகிறேன்!

Anonymous said...

பரட்ட தலையும் பரதேசி மூஞ்சும் இருந்தா அந்த படத்தை பருத்திவீரன் ரேஞ்சுக்கு எடுத்துட வேண்டியது. இவனுகளுக்கு வேற கதையே இல்லேன்னா சும்மா இருக்க வேண்டியது தான.

தேன் நிலா said...

பிரபாவின் "பரபர" விமர்சனம்..

தேன் நிலா said...

ஏம்ப்பா "ஜிவுக்கு" இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் படம் எடுத்தவன் பரலோகம் போயிடமாட்டான்.. கொஞ்சம் பார்த்து கொத்துங்க மாமு.. உசிராவது பொழைக்கட்டும்...! ஹி...ஹி..ஈஈஈஈஈ..

”தளிர் சுரேஷ்” said...

அட!முதல் முறையா இந்த படம் நல்லா இல்லைன்னு படிக்கறேன்! உண்மையை சொன்னதுக்கு நன்றி!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




Sathish said...

@மயிலன் - வெல் செட் - படு மொக்கை

Sathish said...

படம்

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம்

இரா.மாடசாமி said...

\\மாணவர்களுடைய கொண்டாட்ட மனப்பான்மை, ஒற்றுமை ஆகியவற்றை படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர், அவர்கள் செய்யும் பாலியல் சீண்டல்கள், பப்ளிக் நியூசன்ஸ் போன்றவற்றை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்\\

மிக மிக சரியாக சொன்னீர்கள்!
பஸ் டே வில் மாணவர்கள் பண்ணும் அலப்பறை அருவெறுக்க தக்கதாக இருக்கும்! அதில் பாதிக்க பட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன்!

இரா.மாடசாமி said...

உங்களுடைய தளத்தை என்னுடைய தளத்தில் குறிப்பிட்டிருக்கிறேன் ! ஒரு முறை தளத்திற்கு வந்து ஆலோசனை சொல்லவும் ! நன்றி !

http://vaanavilmadasamy.blogspot.com/

Unknown said...

அந்த போண்டா சீன் வரும் போது நீங்க குனிஞ்சி பாப்கார்ன் சாப்டுட்டு இருந்தீங்களா? அந்த சீனுக்கு அந்த நீளம் தேவை. ஏதோ எழுதும்னு எழுதாதீங்க.