7 December 2012

ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணி. கோயம்பேடு பேருந்து நிலையம் கபளீகரமாக இருக்கிறது. எக்கச்சக்க கைகளில் பயணப்பைகள் இடம்பெற்றிருக்கின்றன. வருகிற பேருந்துகளையெல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்த முன்ஜாக்கிரதை முத்தன்னாக்கள் ரொப்பி விடுகிறார்கள். “சார்... தஞ்சாவூர் போற பஸ் இங்கதான நிக்கும்...” என்று கேட்பவரின் சட்டையைப் பிடித்து உலுக்கி நாலு அப்பு அப்பலாம் போல தோன்றுகிறது. அஞ்சாசிங்கம் வேறு போனில் “இந்தா அரும்பாக்கம் வந்துட்டேன்... இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்...” என்று அப்டேட்டுகிறார். மனிதர் சமயங்களில் அரக்கோணத்தில் இருந்துக்கொண்டு அரும்பாக்கம் வந்துட்டேன் என்று கதை விடுவார். வெரி டேஞ்சரஸ் ஃபெலோ. பேருந்துகள் உள்ளே நுழையும்போதே சீட் பிடிக்கும் ஆசாமிகள் எதை எதையோ தூக்கி உள்ளே போடுகிறார்கள். பேசாமல் சிங்கம் வரும் வரைக்கும் டைம்பாஸை புரட்டலாம் என்று முடிவெடுத்தேன்.


மூத்த ஆதினம் வந்தபோது மணி பத்தாக பத்து நிமிடங்கள் இருந்தன. வந்ததும் வராததுமாக மனிதர் நம்மை துரிதப்படுத்தினார். கடையை சாத்திடுவாங்களாம். யோசித்துப் பாருங்கள், பேருந்து நிலையத்திற்குள் இருப்பவர்கள் பத்து நிமிடத்திற்குள் வெளியே வந்து டாஸ்மாக்கை தேடி உள்ளே நுழைய வேண்டும். அய்யகோ, டைட்டானிக் கப்பலை பிடிக்க ஜேக் ஓடியது போல முடியை சிலுப்பிக்கொண்டு டைட்டு டானிக் தேடி ஓடினோம். பேருந்து நிலைய வாசலில் டைடல் பார்க் ரக வாலிபர் ஒருவர் நம்மை மடக்கி நிறுத்தினார். “சார்... நான் கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... நான் நிறைய படிச்சிருக்கேன்... வீட்டுல இருந்து கோவிச்சிக்கிட்டு வந்துட்டேன்... பஸ்ஸுக்கு காசில்லை...” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே “போடா ங்கொய்யாங்கோ...” என்று சிதறி ஓடினேன். அந்த படிச்ச தம்பி மருந்து உள்ளே சென்றதும் நம்மிடம் சிக்காதது அவர் செய்த பூர்வ ஜென்மத்து புண்ணியம்.

அதோ டாஸ்மாக். கவுன்ட்டரை சுற்றி கூட்டமாக வாலிப, வயோதிக அன்பர்கள். அத்தனை கூட்டத்திலும் துள்ளி குதித்து உள்ளே தலையை சொருகினேன். ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதில்தான் எத்தனை வசதி. கடை மூடும் நேரம், ஒசத்தியான சரக்கு எதுவும் கிடைக்காத கவலையுடன் ஹாஃப் எரிஸ்டாபை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

“எரிஸ்டாப் ஒன்னும் எரியாதுடா...” ஆறுதலூட்டுகிறார் ஆதினம்.

சிங்கத்தின் கூற்றில் உள்ள உண்மையை உள்ளத்தால் உணர்ந்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் செல்வின் அந்த உண்மையைச் சொன்னார், “அது என்னன்னே தெரியல.... வருஷாவருஷம் தவறாம வேளாங்கன்னிக்கு போயிடுவேன்... எனக்கு அது ஒரு செண்டிமெண்ட்...”. எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ரைட்டு. பெரியவருக்கு திருவண்ணாமலை, சிங்கத்துக்கு வேளாங்கன்னி. எல்லாம் ஒரு "மார்க்கமா" தான் திரியிறாய்ங்க. எரிஸ்டாப் தன்னுடைய வேலையை காட்டிக்கொண்டிருந்து. வெளியே வந்து வண்டிக்கடை அக்காவிடம் இட்லியும், பீப் ப்ரையும் சாப்பிட்டோம். டிவைன்.

எந்த கடவுளின் கருணை என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் போகக்கூடிய பேருந்தில் கடைசி இரண்டு இருக்கைகள் எங்களுக்காகவே காலியாக இருந்தன. இரவு ஏறத்தாழ பதினொன்றரை மணிக்கு எங்களுடைய சுற்றுப்பயணம் இனிதே தொடங்கியது.

காலை ஏழு மணியளவில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு டீக்கடையில் பேருந்து நின்றிருந்தது. அதுவரை தூங்கிக்கொண்டு வந்தவர்கள் முனக ஆரம்பித்தார்கள், “நைட்டுல இருந்து உருட்டிக்கிட்டே வர்றான்”, “இந்நேரம் ஊருக்கே போயி சேர்ந்திருக்கலாம்”, “வண்டி வச்சிருக்குறான் பாரு ஓட்ட வண்டி". எப்போதோ ஒருமுறை SETCயில் பயணிக்கிற நானே மேற்படி வசனங்களை எல்லாம் வாடிக்கையாக கேட்கிறேன். அடிக்கடி ஊருக்கு போகும் நண்பர்கள் பாவம். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் ஒட்டுனருடைய தாயின் கற்பை பழிக்கிறார்கள்.

நாகப்பட்டினத்தை சென்றடைந்தோம். பேருந்து நிலையங்களுக்கு அருகிலிருக்கும் கட்டண கழிப்பறைகளை பயன்படுத்தியிருக்கிறீர்களா ? மாட்டுசாணம், பொதுவாக எனக்கு வீட்டு கழிப்பறை தவிர வேறு எங்கு அமர்ந்தாலும் வராது. கடமைக்காக கனநேரம் அமர்ந்துவிட்டு எழுந்தேன். குளியலறையில்  தாழ்ப்பாள் இல்லை. மற்றபடி ஓகே. எதிரிலிருந்த உணவகத்தில் சிற்றுண்டி முடித்துவிட்டு மணமகன் மயிலனுக்கு போன் அடித்தேன். அண்ணன்... தங்குறதுக்கு நீங்க எங்க ஏற்பாடு பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்கச் சொன்னாருன்னு குழைந்தேன். இடவசதி உறுதிபடுத்தப்பட்டது.

ஆன்மிக சுற்றுப்பயணத்தின் முதல் அடியை வேளாங்கன்னியை நோக்கி எடுத்து வைத்தோம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

Unknown said...

//// எங்கு அமர்ந்தாலும் வராது.////


பாவம் பயபுள்ளைக்கு பைல்ஸ் போல

சரவணகுமரன் said...

வரிக்கு வரி ’பட்டை’யை கிளப்பியிருக்கீங்க!!! :-)

Ponmahes said...

//சிங்கத்தின் கூற்றில் உள்ள உண்மையை உள்ளத்தால் உணர்ந்துக்கொண்டிருந்தேன்.

உள்ளத்தால் உணர்ந்த மாதிரி தெரியலியே தம்பி ..அனுபவத்தால் உணர்ந்த மாதிரியல்லவா தெரிகிறது..........

சுகன்யா மேடம் கொஞ்சம் தம்பிய கவனிக்கவும் ......

//எந்த கடவுளின் கருணை என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் போகக்கூடிய பேருந்தில் கடைசி இரண்டு இருக்கைகள் எங்களுக்காகவே காலியாக இருந்தன.

ஒரு வேளை மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவோட அருளா கூட இருக்கலாம்

Unknown said...

டைட் டானிக்....ஓவரானா லூஸ் டானிக்கா ஆப்பாயில் ஆகும்....!

Unknown said...

“எரிஸ்டாப் ஒன்னும் எரியாதுடா...” ஆறுதலூட்டுகிறார் ஆதினம்.
//////////////////////////
அட்ரா சக்க......!அட்ரா சக்க......!அட்ரா சக்க......!அட்ரா சக்க......!

Unknown said...

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் ஒட்டுனருடைய தாயின் கற்பை பழிக்கிறார்கள்.
/////////////////////////////
அடப்பாவிகளா....!

Unknown said...

கட்டண கழிப்பறைகளை பயன்படுத்தியிருக்கிறீர்களா ?
///////////////////////////////
ரஜினிய வெச்சு அடிச்சாலும் ஆத்தாட்ட குடிச்ச பாலு வேனா வரும் ஆனா ஆய் வராது...!கெட்ட மன கழிப்பறைன்னு பேரை மாத்ததனும்!

CS. Mohan Kumar said...

செம ! அப்படியே பாதியில் விட்டுட்டு போயிடாம முழுசா எழுதி முடிங்க !

Anonymous said...

//எனக்கு வீட்டு கழிப்பறை தவிர வேறு எங்கு அமர்ந்தாலும் வராது. கடமைக்காக கனநேரம் அமர்ந்துவிட்டு எழுந்தேன். //

'ஆயிரம் வசதிகள் வீட்ல இருந்தாலும் இந்த அவுட்டர்ல போற சுகமே தனிதான்'

'என்ன சித்தப்பு சாப்டீங்களா?'

aavee said...

டைட்டு டானிக்கா.. சரக்குக்கு ஸ்டைலான பேரு.. பின்னறீங்க..

Anonymous said...

செம செம .. என் கல்லூரிக் கால நினைவுகளை மீட்டியது போல் இருந்தது. கட்டணக் கழிப்பறை, நரகம். வேளாங்கண்ணி முடித்து காரைக்கால் தானே... Tight Tonic ...

arasan said...

தலைப்பு பார்த்து மிரண்டேன், உள்ளே படித்ததும் கொஞ்சம் நிம்மதியானது.

Philosophy Prabhakaran said...

@ சரவணகுமரன்
// வரிக்கு வரி ’பட்டை’யை கிளப்பியிருக்கீங்க!!! :-) //

நன்றி நண்பா...

@ Ponmahes
// உள்ளத்தால் உணர்ந்த மாதிரி தெரியலியே தம்பி ..அனுபவத்தால் உணர்ந்த மாதிரியல்லவா தெரிகிறது.......... //

தல... நீங்க இன்னும் வளரனும்... உள்ளத்தால் உணர்ந்துக்கொண்டிருந்தேன் என்றால் சரக்கு நெஞ்சுக்குழியை தாண்டியது, ஆனால் எரியவே இல்லை என்று பொருள்...

@ மோகன் குமார்
// செம ! அப்படியே பாதியில் விட்டுட்டு போயிடாம முழுசா எழுதி முடிங்க ! //

நன்றி சார்...

@ கோவை ஆவி
// டைட்டு டானிக்கா.. சரக்குக்கு ஸ்டைலான பேரு.. பின்னறீங்க.. //

டைட்டு டானிக் என்பது சொந்த சரக்கில்லை ஆவி... ஏதோவொரு சினிமாவில் கேட்ட ஞாபகம்...

@ இக்பால் செல்வன்
// செம செம .. என் கல்லூரிக் கால நினைவுகளை மீட்டியது போல் இருந்தது. கட்டணக் கழிப்பறை, நரகம். வேளாங்கண்ணி முடித்து காரைக்கால் தானே... Tight Tonic ... //

நன்றி இக்பால்... வேளாங்கன்னிக்கும் காரைக்காலுக்கும் இடையே முக்கியமான ஒரு சம்பவம் நடந்தது...

MANO நாஞ்சில் மனோ said...

நைட்டுல இருந்து உருட்டிக்கிட்டே வர்றான்//

நம்ம அவசரம் டிரைவருக்கு புரியலையே ஹி ஹி...

நாய் நக்ஸ் said...

சிவகுமார் ! said...
//எனக்கு வீட்டு கழிப்பறை தவிர வேறு எங்கு அமர்ந்தாலும் வராது. கடமைக்காக கனநேரம் அமர்ந்துவிட்டு எழுந்தேன். //

'ஆயிரம் வசதிகள் வீட்ல இருந்தாலும் இந்த அவுட்டர்ல போற சுகமே தனிதான்'

'என்ன சித்தப்பு சாப்டீங்களா?'///////////////////

யோவ்வ்வ்வ்வ்வ் சிவா............!!!!!!!!!!!!!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்! நான் வயித்தை சொல்லலை?!!

சாய்ரோஸ் said...

நல்லாத்தான்யா இருக்கு உங்க ஆன்மீக சுற்றுப்பயணத்தின் ஆரம்பம்... அடுத்த தபா கோயம்பேடு வந்தா ஒரு தகவல் குடுங்க பிரபா... உங்க அமிர்தபானத்தில நானும் கலந்துக்கிட்டு உங்களை வழியனுப்பி வைக்கிறேன்... By the by... நீங்க இருக்கிறது திருவெற்றியூர்னு நினைக்கிறேன்... நம்ம வசிப்பிடம் மணலிதான் பிரதர்...

Philosophy Prabhakaran said...

சாய்ரோஸ்... குடிக்கிறதுக்காக கோயம்பேடு வரை போகணுமா ? வார இறுதிகளில் நடைபெறும் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டாலே போதுமானது...

அஞ்சா சிங்கம் said...

ஆரம்பமே அமர்களமா இருக்குதே ...........ஹ்ம்ம் அடிச்சி கேட்டாலும் அந்த விஷியத்தை மட்டும் சொல்லிடாதீங்க ...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

கடைசில ட்விஸ்ட்டா? வித்தியாசமான பயணகட்டுரையா இருக்கே!!

வவ்வால் said...

பிரபா,

கிழக்கு கடற்கரை மார்க்கமாக ஞானப்பயணம் செய்பவர்கள் யாரும் நேராக நாகப்பட்டிணம் பேருந்தில் ஏறமாட்டார்கள்,முன்கூட்டியே திட்டமிட்டு புதுவையில் கரை ஒதுங்குவது வழக்கம் :-))

புதுவையில் இருந்து இரவில் ஒரு மணிக்கு ஒரு பேருந்து, காரை,நாகை, வேளாங்கண்ணிக்கு உண்டு.

12,12.30 என இரவில் பேருந்து உண்டு.

கோகுல் said...

கும்பகோணம் கோட்ட பேருந்துகள் பெரும்பாலும் யாரோ ஏப்பா டிரைவர் உருட்டுவியாயாயாம்யானு சொன்ன மாதிரி தான் ஓடும்,சிதம்பரம் -காரைக்கால் ,கும்பகோணம்-காரைக்கால் ஒருமுறை போய் வந்தால் போதும் பிறந்தற்கான பிறவிப்பயனை அடைந்து விடலாம்.

Anonymous said...


very little Sports routines Wagering Method fool showcases are actual. Quite a few people essentially do not include the enterprise, many individuals in no way understand are generally home-based small enterprise possibility, designed for very little good reason a timely way for you to extremely brief achievement. most individuals contemplate given that they become a member of Physical activities Actively playing Technique, they'll immediately start making revenue. A standard notion within people are generally stepping into towards Sports entertainment Casino Solution can make these folks victorious.We have to diet plan: Fabio Capello's resignation just about explicitly all 5 many months so that you can the other day United kingdom will likely have Portugal on their opening complement could be a wreckage. Unlike almost every other leader as a result of that Euro next might have a two-year acquiring trained plan as considering using this type of function, Capello's heir will have a relatively a lot of friendlies to master which usually supplement to cooperate with and which consumers to guidance depend on.For information and facts head to gamblingcommission.gov.english

Visit [url=http://www.bonus-betting-offers.com]betting offers[/url]

By Gary Lester: niceguy44@talktalk.net

Anonymous said...


As a way to locale ones gambles which means you could have maximum risk of great, you will need to know it's quite possible. You've got to be great at examining the likelyhood that will be sure you could easily quote chances without establishing any sort of glitches approximately perception. Swiftness in just studying the chance are likewise imperative that you make certain you can potentially neighborhood varieties choices prior to the potent likelihood improve. Reasonable that gambling on likelihood go by primarily all precise rendering is always that your sporting activities ebooks should certainly offer very much information on the internet in an exceedingly minimal degree of living room they usually imagine an individual's gamers to grasp that this choices indicated.

Visit [url=http://www.bonus-betting-offers.com]betting offers[/url]

By Gary Lester: niceguy44@talktalk.net

Anonymous said...


That allows you to destination a person's craps bets therefore you might have strongest prospects for superior, you will need to master there's every chance. You want to be efficient at checking the likelyhood to help make certain you can possibly determine the likelyhood free of developing any sort of error all-around knowledge. Speed in just examining the reality are usually vital that you ensure that you can community ones gambles prior to the solid percentages transform. A good reason in which bets likelihood remain faithful to primarily all exact rendering is the fact the actual athletics ebooks might present as well much information on the internet in an exceedingly lowered wide variety of room in your home plus they presume ones own gamers to understand how an selections depicted.

Visit [url=http://www.bonus-betting-offers.com]betting offers[/url]

By Gary Lester: niceguy44@talktalk.net