23 January 2013

காரைக்கால் கட்டிங்...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எச்சரிக்கை:
மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடுவிளைவிப்பதாகும்
புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்

நாகூரிலிருந்து காரைக்காலை நோக்கி நடந்துக்கொண்டிருந்தோம். “ம்ம்ம்... வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா... அடுத்தது காரைக்கால் அம்மையார் கோவில்தானே பாஸ்...” என்று அப்பாவியாய் கேட்டவனை கொமட்டில் குத்த வந்தார் மூத்த ஆதினம். அப்படியே வரலாற்று சக்கரத்தில், ப்ரிட்டிஷ், ஃப்ரான்ஸ், பாண்டிச்சேரி, மாஹே என்று ஒரு ரவுண்ட் அடித்து மறுபடியும் காரைக்காலுக்கே கொண்டுவந்து விட்டார். தெளிவடைந்தேன்.

காரைக்கால் எல்லையை தொட்டதும் நிறைய (தாக) சாந்தி நிலையங்கள் கண்ணில் பட்டன. ஆதினமும் நானும் முன்பொருமுறை சிங்கிள் சிட்டிங்கில் முழு பாட்டில் டகீலாவை முடித்துவிட்டு பக்கத்து பில்டிங் வாட்ச்மேனை டார்ச்சர் செய்ததை ஆதினம் மறக்கவே இல்லை. டகீலா மோகம் அவரை பாடாய் படுத்தியது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி டக்கீலா கேட்டார். கெரகம். டக்கீலா புதுச்சேரியில் தான் கிடைக்கும் போல.

நான்கைந்து கடைகளில் டகீலா கேட்டபிறகு எங்கள் கொள்கையை தளர்த்திக்கொள்ள முடிவு செய்தோம். மறுபடியும் முதல் கடைக்கே வந்து பகார்டி கேட்டோம். “ஒங்க ரெண்டு பேருக்கு எதுவும் கிடையாது... மாறி மாறி ஒவ்வொரு கடைக்கு போய் இல்லாத சரக்கை கேக்குறீங்களா... படுவா...” என்று விரட்டியடித்தார் கடைக்காரர். ஹும், கடைக்கா பஞ்சம். எதிரிலிருந்த கடையில் தஞ்சம் புகுந்தோம். பலவண்ண புட்டிகளில் ஸ்மிர்னாப் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு மஞ்சள் நிறத்தவளை அணைத்துக்கொண்டு பாருக்குள் நுழைந்தோம்.



இயற்கையான சூழல் கொண்ட திறந்தவெளி பார். கூட்டம் அதிகமில்லை. எங்களைத்தவிர ஒன்றிரண்டு பேர் அமர்ந்திருந்ததாக ஞாபகம். நாங்கள் சென்றது நட்டநடு மத்தியான வேளை. எனினும் தமிழக டாஸ்மாக்குகள் இதுபோல ஆளரவமின்றி இருப்பது சாத்தியமே இல்லை. மேசை - நாற்காலிகள் வெகு சுத்தமாக இருந்தன. பணியாளர் வந்தார். வழக்கமாக உடும்பு, முயல் இறைச்சி கிடைக்குமென்றும் தற்போது இல்லையென்றும் வருத்தப்பட்டார். நீர்க்கோழி வறுவலை வருத்தத்துடன் வரச்செய்தோம். புட்டிகள் காலியாகின.

இரவுக்கான சாய்ஸ் ஆதினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முழு பாட்டில் பகார்டி டிராகன் பெர்ரியை வாங்கி காலியான பிஸ்லரி பாட்டிலுக்குள் லாவகமாக நிரப்பினார். போலீஸ் சோதனைச் சாவடியை கடக்க வேண்டுமே. பெட்டிக்கடையில் ஆளுக்கொரு சுருட்டு வாங்கி பற்ற வைத்தோம். ச்சே குப்பை லாரி கடந்துசென்ற உணர்வு. கீழே போட்டு மிதித்துவிட்டு, தள்ளுவண்டிக்கடையில் குஸ்கா வாங்கினோம். கருமம் தக்காளி சாதம். காரைக்காலில் சரக்கு தவிர எதுவும் உருப்படி கிடையாது போல.

சாவகாசமாக தண்ணீர் பாட்டிலுடன் சோதனைச் சாவடியை கடந்து பட்டுக்கோட்டைக்கு பேருந்து ஏறினோம். பேருந்தில் ஆதினத்துடைய பார்வை எங்கோ நிலை குத்தியிருந்தது. சில வரிசைக்கு முன்னால் அழகான இஸ்திரி நின்றுக்கொண்டிருந்தாள். ஆதினமும் நோக்கினார். அவளும் நோக்கினார். நானும் நோக்கினேன். கூடவே அவளுடைய அப்பா அம்மாவும் நோக்கியதால் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது. இப்படியாக பயணித்து பட்டுக்கோட்டையை அடைந்தோம்.

மணமகன் மயிலன் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அறையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு சூரியன் ஓய்ந்ததும், எங்கள் சிறப்பு வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு டாஸ்மாக்குக்கு கிளம்பினோம். சென்னையைத் தவிர வெளியூர் டாஸ்மாக்குகளில் கொய்யாப்பழம், ஆரஞ்சுபழம், வாழைப்பழம் போன்றவை சகஜமாக கிடைப்பது வியப்பளிக்கிறது. பானத்தை பருகியபடி சினிமாவைப் பற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். எதிரிலிருந்த மேசையில் ஒரு வாலிபர் நம்மையே குறுகுறுவென பார்த்தபடி அமர்ந்திருந்தார். நீண்ட நேரம் தொடர்ந்தது.

பின்னர் தயங்கியபடியே எங்கள் எதிரில் வந்து அமர்ந்தார். “நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன்... நீங்க சினிமாக்காரங்க மாதிரி தெரியுறீங்க... எனக்கு ஏதாவது சினிமா சான்ஸ் வாங்கித் தர முடியுமா ?” என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். எனக்கு முழு ஆட்டுத்தொடையை வறுத்தெடுத்து முன்னால் வைத்தது போல இருந்தது. ஆதினம் அவரை ஆத்து ஆத்து என ஆத்திக்கொண்டிருந்தார். அவர் ஏதோ சினிமா இயக்குனர்களின் கார் சிக்னலில் நிற்கும்போது கண்ணாடி துடைத்துவிட்டு சல்யூட் அடித்தால் அசிஸ்டென்டாக சேர்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பிலேயே பேசிக்கொண்டிருந்தார். திரை இருள ஆரம்பித்தது.


கண்திறந்து பார்த்தபோது அறையில் செருப்பைக்கூட கழட்டாமல் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தேன். மேஜை மீது மூன்று மார்பிஸ் புட்டிகள், கூடவே வேர்க்கடலை பர்பி. என்னடா இது சோதனை ? மயிலன் இவ்வளவு நல்லவராக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

முந்தய பகுதிகள்:
ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்
வேளாங்கண்ணி தேவாலயம்
நாகூர் தர்கா


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

37 comments:

முத்தரசு said...

//டகீலா மோகம் அவரை பாடாய் படுத்தியது.//

எழுத்து பிழை எதுவும் இல்லையே....ஹி ஹி ஹி

arasan said...

எனக்கு ஏதாவது சினிமா சான்ஸ் வாங்கித் தர முடியுமா ?” என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். எனக்கு முழு ஆட்டுத்தொடையை வறுத்தெடுத்து முன்னால் வைத்தது போல இருந்தது. //

இங்க தான் பிரபா உங்க டச் தனியா தெரியுது ... இரண்டும் பெரிய அருவா என்று தெரியாமலே ஆடு வந்து கழுத்த நீட்டி இருக்குது ..

arasan said...

எச்சரிக்கை:
மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடுவிளைவிப்பதாகும்
புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்//

யோவ் ஏன் இப்படி ....
முடியல

Philosophy Prabhakaran said...

நன்றி முத்தரசு மாம்ஸ்... எழுத்துப்பிழை இல்லை :)

Philosophy Prabhakaran said...

நன்றி அரசன்... பதிவை படிப்பதற்கு முன்பு அந்த இரு வரிகளை பதினைந்து நொடிகளுக்கு குறுகுறுவென படிக்க வேண்டுமாம்...

சீனு said...

//மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடுவிளைவிப்பதாகும்
புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்// ஏகப்பட்ட படம் பார்த்து மனபாடம் பன்னிருகீங்க போல

Philosophy Prabhakaran said...

இல்லை சீனு... டவுன்லோட் செய்து வைத்திருந்த ஒரு படத்தைப் பார்த்து டைப்படித்தேன்...

semmalai akash said...

எச்சரிகை எல்லாம் கொடுத்து அருமையா எழுதிருக்கிங்க, மிகவும் ரசித்தேன் நண்பா.

Philosophy Prabhakaran said...

நன்றி செம்மலை ஆகாஷ்...

அஞ்சா சிங்கம் said...

திருத்தணி படத்திற்கு போயியே தீரவேண்டும் என்று அடம்பிடித்தது எல்லாம் அவுட் ஆப் போக்கஸா ..........

Unknown said...

கனபாடிகள் நிகழ்த்திய யாகத்தில் பல பாட்டில்கள் கழுத்து திருகப்பட்டது போல.....! செப்பல் கூட கழட்டாமல் உறங்கிய அடியார் படித்திருந்தது பக்கத்து அறையில் என்று கேள்விப்பட்டேன்! உண்மையா...? பகாட்டியா ச்சே..பிரபாகரா..!அவ்வ்வ்வ்வ்

முத்தரசு said...

சர்ரி.............மூன்று மார்பிஸ் அது என்னாச்சி சொல்லவே இல்ல

Philosophy Prabhakaran said...

செல்வின், மாலையில் திருத்தணி போஸ்டர் பார்த்து போகவேண்டும் என்று பேசிக்கொண்டது நினைவிருக்கிறது... இரவில் அவுட் ஆப் போகஸ்...

Philosophy Prabhakaran said...

மாம்ஸ்... எங்கள் அறைக்கே வந்துவிட்டோம்... பகார்டியா பெயர் சிறப்பாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

நல்ல கேள்வி முத்தரசு மாம்ஸ்... நான் பழுப்பு நிற சரக்குகளை தொடுவதில்லை என்று சபதமெடுத்திருக்கிறேன்... மூன்றில் ஒன்றை அரசனுக்கு கொடுத்துவிட்டோம்... இரண்டாவதை செல்வின் மறுநாள் மாலை முடித்தார்... கடைக்குட்டியை செல்வின் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்...

Anonymous said...

//இரவுக்கான சாய்ஸ் ஆதினத்திடம் ஒப்படைக்கப்பட்டது.//

சம்பவத்தோட டர்னிங் பாய்ன்ட் இதான் இருக்குமாட்ருக்கு!!

Philosophy Prabhakaran said...

சிவா, சுஜாதாவின் படிப்பது எப்படி ? படிச்சிருக்கீங்க போல தெரியுது...

Anonymous said...


//சில வரிசைக்கு முன்னால் அழகான இஸ்திரி நின்றுக்கொண்டிருந்தாள். ஆதினமும் நோக்கினார். அவளும் நோக்கினார். நானும் நோக்கினேன். கூடவே அவளுடைய அப்பா அம்மாவும் நோக்கியதால் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது//

'அஞ்சாசிங்கம்' பம்முனதை போட்டோ எடுத்திருக்கணும்

Anonymous said...

பர்பி பாக்கெட் பேரு காமராஜ். வாட்டர் பாட்டில் பேரு பகவான். அருமைய்யா!!

rajamelaiyur said...

பிரபா. . காரைகால் போகும் வழியில் தான் எங்கள் வீடு.. தெரிந்து இருந்தால் அழைத்து இருப்பேன்..

Ponmahes said...

ஆதினங்களின் சுற்றுப் பயணம் முடிந்ததா இல்ல இன்னும் இருக்கா ..........

முடிவ சொல்லலியே பிரபா .........

முத்தரசு said...

// Philosophy Prabhakaran said...
நல்ல கேள்வி முத்தரசு மாம்ஸ்... நான் பழுப்பு நிற சரக்குகளை தொடுவதில்லை என்று சபதமெடுத்திருக்கிறேன்... //

அட... நம்மாளு......(என்னை போல் ஒருவன்)

கோகுல் said...

காரைக்கால் எல்லையோட திரும்பிட்டீங்களா?

மதுரை அழகு said...

டகீலா என்ன விலை?

கவியாழி said...

ரசிக்கும்படி இருந்தது.

ராஜ் said...

செம நரேஷன் பிரபா...உங்க எழுத்துல 10000 பாலகுமாரனை பார்கிறேன் (!!!!) சூப்பர் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
இந்த எல்லாம் நான் சென்னை வந்து இருந்த அப்ப அரசன் வாயால கேட்டேன்

aavee said...

ஒயின்ஷாப் களை கட்டுது போங்க..!

Philosophy Prabhakaran said...

// பர்பி பாக்கெட் பேரு காமராஜ். வாட்டர் பாட்டில் பேரு பகவான். அருமைய்யா!! //

அடடா... என்ன ஒரு டீடெயிலிங்...

Philosophy Prabhakaran said...

ராஜபாட்டை ராஜா... நாங்கள் காரைக்கால் எல்லை வரைக்கும்தான் வந்தோம்... அங்கே தான் உங்கள் வீடென்றால் எங்களை அழைக்காமலிருந்ததே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ்... சுற்றுப்பயணத்தின் நிறைவுப்பகுதியாக தஞ்சை கோவிலைப் பற்றிய பதிவு இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

// காரைக்கால் எல்லையோட திரும்பிட்டீங்களா? //

ஆமாம் கோகுல்...

Philosophy Prabhakaran said...

மதுரை அழகு, பாண்டிச்சேரியில் டகீலா ஒரு ஃபுல் 650ரூபாய்...

Philosophy Prabhakaran said...

// ரசிக்கும்படி இருந்தது. //

நன்றி கவியாழி சார்...

Philosophy Prabhakaran said...

ராஜ்... பாராட்டுக்கு மிக்க நன்றி... இருந்தாலும் டூ மச் என்று உங்கள் ஆச்சர்யக்குறிகள் சொல்கின்றன... அரசன் மறுநாள் காலை தான் வந்தார்... கேள்வியறிவு...

Philosophy Prabhakaran said...

நன்றி கோவை ஆவி...

காட்டான் said...

டஹீலாவை அணைக்கும் சீசீ குடிக்கும் ஆசையை தூண்டிவிட்டீரே..!

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... மப்புல இருந்தாலும் அருமையா எழுதியிருக்கீங்க....