28 April 2013

யாருடா மதன் ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சமகாலத்தில் வித்தியாசமாக ட்ரைலர் கட் பண்ணுவதே வாடிக்கையாக மாறிவிட்டது. யாருடா மகேஷ் ?, சொன்னா புரியாது, ஹாய் டா போன்ற படங்களின் ட்ரைலர் ஒரே மாதிரி இருந்து தொலைத்து குழப்படி செய்கிறது. அந்த குழப்படியை கண்டுணர்ந்த பின்னும் யாருடா மகேஷை பார்க்க முடிவு செய்ததற்கு காரணம், ஸோ சிம்பிள் - ஹீரோயின் டிம்பிள்.

கதையின் முதல் வரியில் ஹீரோ வழக்கம் போல பொறம்போக்கு பொறுக்கி என்று எழுதி எனக்கே போரடித்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக ஹீரோயின் மட்டும் அரைலுஸாக இல்லாமல் செம சார்ப்பு ! இருவரும் சேர்ந்து காதல், கலவி, கல்யாணம் மூன்றையும் முறையே செய்கிறார்கள். ஒரு மகனும் இருக்கிறார். அந்த மகன் ஹீரோவுடன் செய்த இரண்டாவது ‘க'வில் பிறக்கவில்லை, மகேஷ் என்கிற வேறொருவருக்கு பிறந்தவன் என்று ஹீரோவுக்கு தெரிய வருகிறது. யாருடா அந்த மகேஷ் ? என்பதே பேதிக்கதை.


படத்தின் துவக்கத்தில் சில காட்சிகள் ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்திருந்தன. சொல்லப் போனால் ட்ரைலரில் பாதி முதல் சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் கூட ஏதோ ஆங்காங்கே பெய்யும் லேசான தூரலை போல சிரிப்பு மூண்டது. சனா ஒபராய் உரித்த கோழி மாதிரி தோன்றி சூடேற்றினார். டிம்பிளும் தான். நாயகனும் நாயகியும் கலவி கொள்ளும் காட்சி ஒன்று உள்ளது. நல்லது. ஆனால் அந்த காட்சிக்குப்பின் கலவிக்குப்பின் துவண்டுபோன தசைபிடிப்பை போல படமும் துவண்டு விடுகிறது. பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை. ஒரு எழவும் இல்லை.


கலவி காட்சிக்குப்பின் நாயகி Im virgin. This is my old t-shirt என்கிற வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருக்கிறார். நாயகனுடையதில் Atlast i did it என்று பொறிக்கப்பட்டுள்ளது. எண்பதுகளின் சினிமாக்களில் இருமலர்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் குறியீடு நினைவுக்கு வருகிறது.


சாப்பிடத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் என்கிற பழமொழியை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் நாயகன் சந்தீப். ஆந்திர வாடை திரையரங்கின் கடைசி இருக்கை வரை பரவுகிறது. அதிகபட்சம் நான்கைந்து சுமார் மூஞ்சிகள் ரசிகைகளாக கிடைக்கலாம்.

டிம்பிள் சோப்பேட் - சிரித்தால் கன்னத்தில் குழி விழுமே அதற்கு ஆங்கிலத்தில் டிம்பிள் என்று பெயர். அதன்பொருட்டு அன்றே அம்மையாருக்கு டிம்பிள் என்று பெயர் சூட்டிய அவருடைய பெற்றோரை பாராட்டியே தீர வேண்டும். டிம்பிளின் போதையேற்றும் கண்களும், முக சாயல் கொஞ்சமும் டிஸ்கோ சாந்தியை நினைவூட்டுகின்றன. டிம்பிளின் மேலுதடு சாறு நிரம்பிய சாத்துக்குடி சுளையைப் போல கிண்ணென்று இருக்கிறது. மேலுதடே இப்படியென்றால் கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.


நண்டு ஜெகனை எனக்கு பிடிக்கும். பொதுவாக விஜய் டிவி வளர்த்துவிட்டவர்கள் எல்லோருமே ரசிக்க வைப்பார்கள். ஆனால் வாய்ப்பிருந்தும் கூட ஜகன் பெரிதாக எடுபடவில்லை. லொள்ளு சபா சுவாமிநாதன், ரோபோ சங்கர், ஸ்ரீநாத் என்று நிறைய மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அந்த சமயத்தில் வெளியே எழுந்து தம்மடிக்க செல்பவர்களை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஓஓடும் உனக்கிது ரொம்ப ரொம்ப புதுசு என்கிற பாடல் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது. அதனை பாடியுள்ள அன்னா காத்தரீனா என்கிற மலையாள பாடகி தன்னை கூகிளில் தேட வைத்து வெற்றி பெற்றுள்ளார்.


உண்மையில் படத்தின் இயக்குனர் கூட தன்னை தேட வைத்திருக்கிறார். யாருடா மதன் ? என்று கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கிறேன். மதன் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துவிட்டு இன்னமும் அரியர்ஸ் க்ளியர் செய்யாத மக்கு மாணவனாக இருக்கக்கூடும். அதனால் தான் பாஸ்கர், வாத் த டக் ? போன்ற அரதப்பழசான கல்லூரி மாணவர்கள் ஸ்லாங்கை பயன்படுத்தியுள்ளார். படத்தின் மிக மொக்கையான காட்சியொன்றில் ஒரு கதாபாத்திரம் பார்ப்பவர்களை எல்லாம் பீர் பாட்டிலால் மண்டையை உடைக்கிறது. சர்வ நிச்சயமாக அது இயக்குனர் மதனாகத்தான் இருக்க வேண்டும். ஒருவேளை நான் மதனை சந்தித்தால் கேட்க விரும்பும் கேள்வி: ஏன் சார் எஸ்.ஓ.யூ.டி.எச் மாதிரி படம் எடுத்திருக்கீங்க ?


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 comments:

கோவை நேரம் said...

விமர்சனம் செம.அதைவிட டிம்பிள் வர்ணனை செம..மொக்கை படத்துக்கும் இப்படி அருமையான விமர்சனம் சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ said...

சரி இப்போ படம் பார்க்கனுமா வேணாமா அதை சொல்லுய்யா...

Prem S said...

//பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை../

??????????????

Unknown said...

பாஸ் அது என்ன எஸ்.ஓ.யூ.டி.எச்

சீனு said...

அப்போ ஒய்.ஒ.யு.டி.ஹச் படம் இல்லையா... பார்க்கனும்ன்னு நினைச்சேன்... தப்பிச்சேன்

கும்மாச்சி said...

அப்போ டிம்பிள் உதட்டுக்காக படத்தை டவுன்லோட் பண்ணலாமா?

ஜீவன் சுப்பு said...

// இருவரும் சேர்ந்து காதல், கலவி, கல்யாணம் மூன்றையும் முறையே செய்கிறார்கள். // முறையே இல்ல முறைதவறி செய்கிறார்கள்...!

//ஆனால் அந்த காட்சிக்குப்பின் கலவிக்குப்பின் துவண்டுபோன தசைபிடிப்பை போல படமும் துவண்டு விடுகிறது. பிரச்சனை என்னவென்றால் படம் முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை. ஒரு எழவும் இல்லை.//

டைலர் உம்மைக் கேட்ட கேவி ரெம்ப சரிதாம்ப்பா ...!

ஏன் சார் எஸ்.ஓ.யூ.டி.எச் னா என்னா ? சொல்லுங்கப்பா சொல்லுங்க தெரியாட்டி தலையே வெடிச்சுடும் ..!

Anonymous said...

தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாய் இருக்கிறது..

Anonymous said...

அப்ப தமிழ் பிட்டு படம்னு சொல்லுங்க

வவ்வால் said...

பிரபா,

//முடியும்வரையில் கூட துவண்டு போனது எழவே இல்லை//

வாலிப,வயோதிக அன்பர்களேனு கூப்பிடுற டாக்குடரைப்பார்க்கவும் :-))

// கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். //

கீழ இருக்கிறதை தானே சொல்றீர்...கற்பனை கன்னாப்பின்னான்னு போவுதே அவ்வ் :-))

//ஏன் சார் எஸ்.ஓ.யூ.டி.எச் மாதிரி படம் எடுத்திருக்கீங்க ? //

"south" கிண்ணுனு எடுப்பாவும் இருக்குமே , அப்போ படம் கிண்ணுனு இருக்கா இல்லை சப்பையா இருக்கானே புரியாத மாதிரி சொல்லி கன்பியூசாக்கிட்டீரே அவ்வ்!

aavee said...

// கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். //

padaththil than avvalavu irattai artha vimarsanam endraal vimarsanaththilumaa??

Philosophy Prabhakaran said...

@ சக்கர கட்டி, ஜீவன் சுப்பு, வவ்வால்

S-O-U-T-H என்னவென்று தெரிந்துக்கொள்ள யாருடா மகேஷ் ட்ரைலர் பார்க்கவும்...

http://www.youtube.com/watch?v=GREMtCDmlG0

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சாப்பிடத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் ///

இப்பல்லாம் ஜாமும் சேர்த்து கிடைக்குதுங்கோ....

Ponmahes said...

விமர்சனம் கொஞ்சம் கிளுகிளுப்பு ....

அனுஷ்யா said...

த.ம 1087

பாலா said...

படத்தில் உருப்படியான ஒரே விஷயம் டிம்பிள் மட்டுமே. அவரைப்பற்றி குறைவாக எழுதியதற்கு கண்டனங்கள்....

Anbazhagan Ramalingam said...

//மேலுதடு சாறு நிரம்பிய சாத்துக்குடி சுளையைப் போல கிண்ணென்று இருக்கிறது. மேலுதடே இப்படியென்றால் கீழுதடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.// ??????????????????