27 September 2013

இதழில் எழுதிய கவிதைகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்த இடுகையை என்னுடைய வரைவிலிருந்து ஒருமுறை படித்துப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பேசாமல் எல்லாக் கோட்டையும் அழித்து விடலாமா என்றுகூட யோசித்தேன். இருப்பினும் எவ்வளவு வேண்டுமானாலும் கழுவி கழுவி ஊத்துங்க என்று புத்தக ஆசிரியரே முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் பிரசுரிக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் சில பதிவர்களின் படைப்புகள் புத்தகங்களாக வெளிவந்தபோது அது எனக்கு மிகவும் வியப்பை தருவதாக அமைந்திருந்தது. கொஞ்சம் பொறாமையையும். எப்படியாவது ஒரு புத்தகம் எழுதிவிட வேண்டும் என்பதை என்னுடைய வாழ்நாள் லட்சிய பட்டியலில் சேர்த்திருந்தேன். நாளடைவில் சில உண்மைகள் புரிய ஆரம்பித்தன. பதினைந்தாயிரம் பணம் இருந்தால் யார் வேண்டுமானால் புத்தகம் வெளியிடலாம் என்று தெரிந்துக்கொண்டேன். கிழக்கு பதிப்பக ஃபார்மேட்டில் கொஞ்சம் தரமான தாளில் அச்சிடுவதென்றால் இருபத்தைந்தாயிரம். அவ்வளவுதான் வாழ்க்கை !

அப்படியொரு புத்தகம் இதழில் எழுதிய கவிதைகள் (!!!) என்கிற பெயரோடு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. நல்ல நகைச்சுவை புத்தகம். அணிந்துரையில் இருந்தே நகைச்சுவை துவங்கிவிடுகிறது. சரக்கடிக்க சிறிதளவு சைட் டிஷ் இல்லாதபோழ்து பயன்படுத்தி கொள்ளக்கூடிய பயனுள்ள புத்தகம். நிற்க. மொக்கை விஷயங்களை வைத்து புத்தகம் எழுதுவது, அதனை சொந்தக்காசில் வெளியிடுவது, வெளியீட்டு விழாவிற்கு ‘வைரமுத்து’ ஜிப்பா அணிந்து வருவது, புத்தகக்காட்சியில் போவோர் வருவோரையெல்லாம் கைபிடித்து இழுத்து புத்தகம் வாங்கச்சொல்லி மிரட்டுவது, ஏதோ நண்பர் என்ற முறையில் ஆட்டோகிராப் வாங்கினால் அதற்காக வருடக்கணக்கில் ஃபீல் பண்ணுவது, புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வரியாக எடுத்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் விடுவது – இவை எல்லாமே அவரவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் ‘செய்வன திருந்தச்செய்’ என்றொரு பொன்மொழி இருக்கிறது. அதாவது ‘நாதாரித்தனம் செஞ்சாலும் நாசூக்கா செய்யணும்’. அந்த மாதிரி என்னளவில் தோன்றிய சில விஷயங்களை அடுத்த சில பத்திகளில் பார்க்கலாம்.

சொந்தக்காசில் புத்தகம் வெளியிடுவது என்று முடிவாகிவிட்டது. அதை ஏன் அற்ப தொகைக்கு பாடாவதி தாளில் அச்சிட வேண்டும்...? இதில் பேரம் வேறு பேசி அச்சீட்டாளருக்கு ஏன் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும்...? ஒரு இருபத்தைந்தோ முப்பதோ செலவிட்டு, நல்ல தாளில், கலர் படங்களுடன் வெளியிட்டு தொலைக்கலாம...?

சங்கவி தன்னுடைய புத்தகத்திற்கு “இதழில் எழுதிய கவிதைகள்” என்று மட்டும் தலைப்பிடாமல் இருந்திருந்தால் நிறைய கலாய்ப்புகளை தவிர்த்திருக்கலாம். சுருங்கச் சொல்வதென்றால் கவிதைகள் என்ற சொல்லையே தவிர்த்திருக்க வேண்டும். புத்தக தலைப்பிற்கு என்னுடைய பரிந்துரை: முத்தம் செய்...!

விசைப்பலகையில் எண்டர் பட்டன் மட்டும் இல்லையென்றால் இது கவிதை புத்தகம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. உள்ளேயிருக்கும் சில வரிகளை படித்தால் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளை போல சப்பென்று இருக்கிறது.

சில உதாரணங்கள் :-

- என்னோடு இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள். இப்போது இல்லத்தரசியாக இருக்கிறாள்.
- என்னவள் அழகு என்று சொல்லிட முடியாது. இல்லை என்று மறுக்கவும் முடியாது.
- உன்னைப் பார்க்க, பேச, கொஞ்ச, சண்டை போட சத்தியமாய் ஆசை இல்லை.

பதின்ம வயதில் காதலிப்பவர்கள் ஏதாவது நான்கைந்து வார்த்தைகளை சேர்த்துப்போட்டு ஃபிகர் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்வார்கள். சங்கவியின் சில கவிதைகளில் வரிகளில் அப்படியொரு தொனி தெரிகிறது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஏதோவொரு சுமார் மூஞ்சி / ஃபேக் ஐடி ஃபிகரை உஷார் செய்யும் நோக்கில் எழுதியது போலவே தோன்றுகிறது. கூடவே சில சம்பவங்களையும் அவதானிக்க முடிகிறது.

சில அவதானிப்புகள் (கவனிக்க: இவை வெறும் கற்பனையே !) :-

- தொலைந்து போ என்று சொல்லிவிட்டாய். எனது மொத்த உலகமும் நீ தான் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (சாட்டில் சு.மூ ‘கெட் லாஸ்ட்’ என்று சொன்னபோது எழுதியது).
- முத்தம் கேட்டேன். நீ மின்னஞ்சலில் அனுப்பினாய். வெட்கத்தில் வேலை செய்ய மறுக்கிறது என் மெயில் ஐடி. (ஃபேக் ஐடியிடம் முத்தம் கேட்டு, அது மெயிலில் ஸ்மைலி அனுப்பி சமாளித்த போது).
- “சரி” என ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லடி. செய்கூலி சேதாரமில்லாமல் உன்னை அற்புதமான அணியாக்குகிறேன். நான் அணிந்துக் கொள்ள. (ஃபேக் ஐடி ஃபிகரு ஓகே சொல்லாமல் சதாய்க்கும் போது எழுதியது).
- கோவைப்பழ இதழில் இடைப்பட்ட ஈரமாய் இருக்க ஆசை. உன் இதழ்சுளை கண்டநாள் முதல். (சு.மூ.வை நேரில் கண்டபிறகு போட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ். இதைப் போட்டுவிட்டு சு.மூவின் உள்டப்பிக்கு போய் உன்னைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்).

கவிதை எழுதும்போது வார்த்தைகளை கூடுமானவரை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். சங்கவி அப்படியொரு குறைந்தபட்ச முயற்சி கூட எடுக்காமல் ஏனோ தானோ என்று எழுதியிருப்பதாக தோன்றுகிறது. ஒரு வாசகனான நான் படிக்கும்போதே சில மாற்றங்கள் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது.

சில மாற்றங்கள் (சிகப்பில் நான் எழுதியது) :-

- உன்னுடன் விளையாடும்போது மட்டும் வேண்டுமென்றே தோற்றுப் போகிறேன். நீ வேண்டும் என்பதற்காக...!

உன்னிடம் மட்டும்
வேண்டுமென்றே தோற்கிறேன்...
நீ வேண்டுமென்றே...!

- கத்தியின்றி ரத்தமின்றி சத்தமில்லா யுத்தமொன்று நடக்குது...! தோல்வியே இல்லாத போர்...!!

கத்தியின்றி 
ரத்தமின்றி
சத்தமின்றி
யுத்தம் – உன் முத்தம்...!

- முத்தமிழில் கை தேர்ந்தவள் என்றிருந்தேன். உன் முத்தத்திற்கு பின்தான் தெரிந்தது. நீ முத்தத்தமிழும் அறிந்தவள் என்று...!

முத்தமிழ் அறிந்தவள் நீ ! 
உன் முத்தத்தமிழ் அறிந்தவன் நான் !!

- மழை பெய்து ஓயலாம்... ஆனால், உனக்கான என் முத்த மழை ஓயாத அலை...

மழையில் முத்தமிடத் துவங்கினோம்... 
சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது !
மழை மட்டும் !

மொத்த புத்தகத்திலும் ஒரேயொரு கவிதை மட்டும்தான் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருப்பதாக தோன்றியது. அந்த ஒரு உருப்படி :-

உன்னை  
மகிழ்ச்சியாக வைத்திருக்க
வாழ்வில்
பாதி தொலைத்த
பைத்தியக்காரன் நான்...!
பிறகுதான் தெரியும்
என்னை
சந்தோஷமாக வைத்திருக்க
நீ
பைத்தியக்காரியானாய் என்று...!!

இதைக்கூட இன்னும் கொஞ்சம் மடக்கி எழுதியிருக்கலாம். இது தவிர்த்து ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், சுமாரான பேப்பர் குவாலிட்டி, சம்பந்தமில்லா புகைப்பட தேர்வுகள். சிலவற்றிற்கு சங்கவி காரணமில்லை என்றாலும் கூட ஒரு மேற்பார்வையாவது பார்த்து சரி செய்திருக்கலாம்.

இனியாவது புத்தகம் வெளியிடும் பதிவர்கள் கொஞ்சம் அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதழில் எழுதிய கவிதைகள்
சங்கவி
அகவொளி பதிப்பகம்
விலை ரூ.70

ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 comments:

Philosophy Prabhakaran said...

ஒரு சிறிய விளக்கம்: சொந்தக்காசில் புத்தகம் போடுபவர்களை விமர்சிக்கும் வரிகள் திருவாளர் சேட்டைக்கு பொருந்தாது என்பதையும், அன்னாரின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத்த புத்தகத்திலும் ஒரேயொரு கவிதை மட்டும்தான் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருப்பதாக தோன்றியது.////

அடடே...!!!

sathishsangkavi.blogspot.com said...

மச்சி நன்றாக கிழித்திருக்கிறாய் என அனைவரும் நினைப்பர்.

நான் அப்படி நினைக்கவில்லை இருக்கும் தவறை சுட்டிக்காட்டி உள்ளாய்.

அடுத்த புத்தகத்தில் இதை சரி செய்திடலாம்..

அப்புறம் புத்தகம் வெளியீட்டு செலவு மொத்தம் 25 ஆயிரம் ஆகிடுச்சுப்பா.. வந்து போன காசை எல்லாம் சேர்த்தா 28 ஆகிறது... கிட்டத்தட்ட 1 மாதம் சம்பளம் சரியாகிடுச்சு... அடுத்த முறை வரும் தாவணிக்கனவுகள் நல்ல பேப்பரில் அச்சிட்டு விடலாம்...

அப்புறம் இந்த உள்டப்பில் நடந்ததெல்லாம் உனக்கெப்படியா தெரிஞ்சுது...

Unknown said...

முதலில் சங்கவி என்னிடம் ஒரு பி.டி.எப் பார்மெட் அனுப்பியிருந்தார் (கவிதை)வரிகள் சுமாராக இருப்பினும் டிசைன் அருமையாக இருந்தது.

பின்னர் எப்படி இப்படி மொக்கையான ஒரு பார்மட்டை தேர்ந்தெடுத்தார் என்று வியப்பாக இருக்கின்றது.

கவிதைக்கு தகுந்த படங்கள் கருப்பு வெள்ளை படம் எனில் ஓவியமாக இருப்பின் நல்லது. கலரில் அச்சிடும் போது மட்டுமே போட்டோகிராபி அழகாக இருக்கும். அப்படியே கருப்பு வெள்ளை புகைப் படங்கள் எனின் நல்ல தரமான தாளில் மட்டுமே புகைப்படம் தெளிவாக இருக்கும். அதுவும் உறுத்தாத எப்பக்டை கொடுக்கக் கூடாது.

பார்த்திபனின் கிறுக்கல்கள், லிங்குவின் லிங்கூவும் (கவிதை) வரிகளை விட வடிவமைப்பே வாங்கத் தூண்டியது. காசு செலவு செய்து புத்தகம் போடுபவர்கள் இதைப் போன்ற விசயங்களை அச்சுத் துறையில் இருக்கும் சிலரை ஆலோசிப்பது நல்லது.ஏன் இப்படி பணத்தை வீணாக்குகின்றார்களோ..?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுஜாதா சில பிரபலங்களின் கவிதை வரிகளை இப்படி இருக்கலாம் என்று கூறி விமர்சித்திருப்பார். அது போலவே திருத்தப் பட்ட கவிதைகள் கொடுத்தது விமர்சித்தது சுப்பர். ஒரு முறை இது போல் கேபிளின் ஒரு கவிதை ஒன்றை நான் மாற்றி அமைத்தேன்.

உஷா அன்பரசு said...

புத்தகம் போடுபவர்களை பற்றிய விமர்சனம்... ஹா... ஹா..!

வார்த்தைக்காக பாராட்டாமல் உண்மையாக விமர்சித்த உங்களுக்கும் அதை இயல்பாய் ஏற்று கொண்ட சங்கவி அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விமர்சனத்தை கோபப் படாமல் ஏற்றுக் கொண்ட சங்கவிக்கு பாராட்டுக்கள்.
என்னதான் கோபப் படாவிட்டாலும் முதல் இரண்டு பத்திகள் சற்று கடுமையாகவே இருக்கிறது.

அஞ்சா சிங்கம் said...

யோவ் ..யோவ்.. கொஞ்சம் ரெஸ்ட் குடுயா .....

இந்திரா said...

செம விமர்சனம்.
அருமை.. சூப்பர்னு பத்தோடு பதினொன்றாக பாராட்டாமல், வெளிப்படையாய் தவறுகளை சுட்டிக்காட்டியதுக்கு உங்களை நிஜமாவே பாராட்டணும் பிரபா.
நா அவருடைய புத்தகம் படிக்கல. ஆனா முகநூல்ல சில வரிகளைப் படிச்சதுண்டு.
அடுத்த புத்தகத்திலாவது இதுபோன்ற பிழைகளை சரிசெய்யுங்கள் சங்கவி.

வால்பையன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

:) நடுநிலையான விமர்சனம்.

(இதுல என்ன சைடு போட்டு அவுக்குதுங்கிறிங்களா)

ராஜி said...

ஸ்ஸ்ஸ் ஒரு புத்தகத்துக்கு ரெண்டு பதிவா!? என்னமோ சதி நடக்குது!!

வால்பையன் said...

//அடுத்த முறை வரும் தாவணிக்கனவுகள் //

திரும்பவும் முதல்ல இருந்தா

அவ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//அடுத்த புத்தகத்திலாவது இதுபோன்ற பிழைகளை சரிசெய்யுங்கள் சங்கவி. //

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே......

கலாகுமரன் said...

ஒரு கவிதையை இப்படி இருக்கலாம்...என பட்டை தீட்டுவது சுலபம்..

கார்த்திக் சரவணன் said...

என்னதான் கழுவி ஊத்துற மாதிரி இருந்தாலும் கடைசியில வர்ற திருத்தப்பட்ட கவிதைகளைப் படிக்கும்போது பிரபா சொல்றது கரெக்ட் தான்னு தோணவைக்குது...

என்னதான் கழுவி ஊத்தினாலும் குறைகளை சரி செய்துட்டு அடுத்த புத்தக வெளியீடு பத்தி யோசிக்கிற சங்கவியோட தன்னம்பிக்கை "அட" போட வைக்குது...

இந்திரா said...

//இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே......//

என்ன இப்டி சொல்லிட்டீங்க தல??
அவர் எவ்ளோ பெரிய கவிஞர்..
ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் எல்லாம் வேணும்னா முன்பதிவு செய்யனும் தெரியும்ல..
கவிஞர் சங்கவி வாழ்க..!!

இந்திரா said...

“தாவணிக் கனவுகள்“

நீ கலக்கு மச்சீ..

வால்பையன் said...

//ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் எல்லாம் வேணும்னா//

அன்னைக்கு எங்களுக்கு ஒரு வாட்டர்கப் கூட வாங்கி தரலையாம்.

வால்பையன் said...

//“தாவணிக் கனவுகள்“

நீ கலக்கு மச்சீ.. //


அந்தியூர் பக்கமே சுத்தும் போதே நினைச்சேன், அடுத்து இந்த மாதிரி குண்டு தான் வந்து விழும்னு

நடந்துருச்சே, சொக்காஆஆஆஆ!

வால்பையன் said...

//கலாகுமரன் said...

ஒரு கவிதையை இப்படி இருக்கலாம்...என பட்டை தீட்டுவது சுலபம்..
//

சரியா சொன்னிங்க
பட்டை தீட்டுறது சுலபம்.

பட்டை காச்சுறது தான் கஷ்டம்

அதுல எங்காள் சங்கவி டாக்டரேட் பண்ணியிருக்கார்

சாய்ரோஸ் said...

பிழைகளை சுட்டிக்காட்டியிருப்பதும், அதை சங்கவி ஏற்றுக்கொண்டிருப்பதும் ஆரோக்கியமான விஷயங்களே...
எதிர்காலத்தில் புத்தகம் வெளியிட நினைப்போரும் இதை கவனத்தில் கொள்ளலாம்...

கோகுல் said...

மொக்கை விஷயங்களை வைத்து புத்தகம் எழுதுவது, அதனை சொந்தக்காசில் வெளியிடுவது, வெளியீட்டு விழாவிற்கு ‘வைரமுத்து’ ஜிப்பா அணிந்து வருவது, புத்தகக்காட்சியில் போவோர் வருவோரையெல்லாம் கைபிடித்து இழுத்து புத்தகம் வாங்கச்சொல்லி மிரட்டுவது, ஏதோ நண்பர் என்ற முறையில் ஆட்டோகிராப் வாங்கினால் அதற்காக வருடக்கணக்கில் ஃபீல் பண்ணுவது, புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வரியாக எடுத்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் விடுவது –//இதையெல்லாம் தொகுத்து புத்தகம் வெளியிடுவோர் செய்யக்கூடியவை,கூடாதவை என ஒரு புத்தகம் வெளியிடலாமே!!!

கோகுல் said...

அடுத்த முறை வரும் தாவணிக்கனவுகள்

:-)

Unknown said...

திருத்தி எழுதிய கவிதைகள் என்று நீங்களே ஒரு தொ'குப்பை' வெளியிட்டால் நன்றாக இருக்குமே !

கேரளாக்காரன் said...

:D

தனிமரம் said...

பிழைகளை சுட்டிக்காட்டியிருப்பதும், அதை சங்கவி ஏற்றுக்கொண்டிருப்பதும் ஆரோக்கியமான கருத்துக்கள் புத்தக வெளியீட்டுக்கு!

கலியபெருமாள் புதுச்சேரி said...

குறைகளை யாருக்கும் குந்தகம் இல்லாமல் சொல்லலாமே...

Ponmahes said...

ஏன் இந்த கொலவெறி ல....

திருத்தி அமைத்த கவிதைகள் அருமை...நீயும் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டால் நாங்களும் கழுவி ஊத்துவோம்ல.....விரைவில் எதிர் பார்க்கிறோம்...