29 March 2014

மரப்பல்லி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அனுபவம் #1
இந்த காலத்து பசங்க குமுதம், ஆனந்த விகடன் தாண்டி எதையும் படிப்பதில்லை என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார் ஒரு பெரியவர். தீவிர இலக்கியமில்லை’ன்னாலும் வாமு கோமு வரைக்குமாவது படிங்கப்பா என்று ஒருநாள் புலம்பினார். அவருடைய கூற்றைக் கொண்டு நவீன இலக்கியத்திற்கான வாசல்படி வாமு கோமு என்று நானாகவே புரிந்துகொண்டேன். அப்போது அவருடைய 'எட்றா வண்டியை' என்ற புத்தகம் இணையத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. அதிலிருந்தே துவங்கலாம் என்று முடிவெடுத்து டிஸ்கவரி புக் பேலஸை புரட்டியபோது எனக்கு அது கிடைக்கவில்லை. 'நாவலல்ல கொண்டாட்டம்' என்ற புத்தகம் கையில் கிடைத்தது. வாங்கிக்கொண்டேன்.  அந்தமான் சென்றபோது கப்பல் பயணத்தில் அந்த புத்தகத்தை பிரித்தேன். தொடர்வதற்கு முன்பு ஒன்றை சொல்லி விடுகிறேன், நான் சுஜாதா நாவல்கள், கிழக்கு வெளியீடுகள் போன்றவற்றை மட்டும் படிக்கும் லைட் ரீடிங் ஆசாமி. ஒரேயொரு முறை எ.பேன்சி பனியனும் படித்துவிட்டு பேயறை வாங்கியவன். அப்படிப்பட்ட நான் கொண்டாட்டத்தை படித்திருக்கக்கூடாது. பெக்குக்கு ஒரு பிராண்ட் மாற்றி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தன அதன் அத்தியாயங்கள். ஒருவேளை பின்நவீனத்துவம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்று வெறுப்புற்றேன். அதன்பிறகு நான் என் பாணி வாசிப்பிற்கு திரும்பிவிட்டேன்.

அனுபவம் #2
புத்தகக்காட்சி உயிர்மை அரங்கில் அனு, அக்கா, ஆண்ட்டி, ஆயா மாதிரி வயது வேறுபாட்டுடன் ஒரு பெண்கள் குழு புடவைக்கடை நினைப்பிலோ என்னவோ புத்தகங்களை புரட்டிப்போட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். நான் கூட என்னவோ சமையல் குறிப்பு புத்தகத்தை தேடுகிறார்களோ ? அதெல்லாம் இங்க கிடைக்காது’ன்னு எடுத்துச் சொல்லலாமா என்று நினைத்தேன். அதற்குள் அந்த அக்கா வாமு கோமுவின் ஒரு புத்தகத்தை எடுத்து ஆண்ட்டியிடம் காட்டினார். ஆண்ட்டி அதன் முகப்பை பார்த்துவிட்டு, ‘வாமு கோமுவா ? அவருது எல்லாம் ஒன்னுபோல இருக்கும்...’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இரு மோசமான அனுபவங்களையும் தாண்டி வாமு கோமுவின் புத்தகங்களை படிக்க வேண்டுமென ஒரு ஆர்வம் ஏனோ என்னிடம் மிச்சமிருந்தது. இருக்கவே இருக்கிறார் ஆபத்பாந்தவன் ஆரூர் மூனா. புத்தகக்காட்சியில் வாமு கோமுவின் ஐந்து புத்தகங்களை வாங்கியிருக்கிறார். முதற்கட்டமாக அதிலிருந்து மரப்பல்லியை உருவி வந்தேன். லெஸ்பியன் உறவு சம்பந்தப்பட்ட கதை என்று கேள்விப்பட்டதால் அதற்கு முன்னுரிமை.

அட்டகாசமாக ஹார்ட் பவுண்ட் செய்யப்பட்டு, புக்மார்க் எல்லாம் வைக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. உண்மையில் மரப்பல்லிக்கு அவை தேவையில்லை. மொத்தம் நூற்றி ஐம்பது பக்கங்கள் மட்டுமே. எழுத்துக்கூட்டி படித்தால் கூட சில மணிநேரங்களில் முடித்துவிடலாம். அப்புறம் ஏன் புக்மார்க் ?

வாமு கோமுவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் என்று யாராவது எழுதினால் மறக்காமல் ‘பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிக்கப்படும்’ என்ற அடைமொழியை சேர்த்துவிடுகிறார்கள். அவ்வாறு அடைமொழி கொடுத்துவிடுவதால் அவரை பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிப்பது தவறான கருத்து என்று நிறுவ முனைகிறார்கள். 

நான் படித்த பிரதியின் உரிமையாளர் உப்புநாய்களை பற்றி எழுதும்போது சேர்த்துக்கொண்ட வரிகள் :-
காமம் கலந்து நாசூக்காகவும் கிளர்ச்சியாகவும் எழுதுவது வேறு. சரோஜாதேவி டைப் புத்தகங்களை தாண்டும் அளவுக்கு வக்கிரம் புடித்து எழுதுவது வேறு. அரைகுறை எழுத்தாளர்கள் வாமுகோமுவைப் பார்த்து எப்படி பட்டும்படாமலும் எழுதுவதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தகத்தை படித்து முடித்ததும் எனக்கு மேற்கண்ட வரிகள் நினைவுக்கு வந்தன. உண்மையைச் சொன்னால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. 

ஆறாவது அத்தியாய முடிவிலிருந்து சில வரிகள்:
மணிபாரதியின் கீழ் உதட்டை சப்பி எடுத்தவளை அப்படியே கட்டிக்கொண்டு தூக்கியபடி படுக்கையறைக்கு நுழைந்தான். நாமெல்லாம் காத்தாடி சுத்துவதை உன்னிப்பாக கவனிக்கிறோம். காத்தாடியை காட்டிய கேமரா கீழே இறங்கி படுக்கையில் கிடக்கும் ஜோடியை காட்டுமா என்று ஆவலுடன் இருக்கிறோம்.

ஒருவேளை ஆரூர் மூனா இதுபோன்ற வரிகள் எதையாவது படித்துவிட்டு அடடா பச்சையாக எல்லாவற்றையும் விவரிக்காமல் காட்சியை கட் செய்திருக்கிறார் என்று நினைத்திருக்கக்கூடும். அப்படி நினைத்திருந்தால் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது ஒருவகை, கொச்சையான கதையம்சம் வைத்து எழுதுவது இன்னொரு வகை. வாமு கோமுவுடையது இரண்டாவது.

பி-கிரேடு படங்கள் பார்த்திருக்கிறீர்களா ? பெரும்பலான பி-கிரேடு படங்கள் ஒரு நாயகன் – மூன்று நாயகிகள் என்ற கோட்பாட்டை தழுவி எடுக்கப்பட்டிருக்கும். ஒரே நாயகியை காட்டிக்கொண்டிருந்தால் போரடிக்கும் என்பதால் மாற்றி மாற்றி சீன் காட்டுவார்கள். சமீபத்தில் அசைவம் என்ற பி-கிரேடு படம் பார்க்க கிடைத்தது. அதன் பிரதான நாயகி செம ஃபிகர். கதை இதுதான். நாயகன் நாயகியை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு திருமணம் செய்துகொள்கிறான். அதன்பிறகு ஒரு வல்லிய சந்தர்ப்பத்தில் நாயகியின் தங்கையை அனுபவிக்கிறான். ஒரு கட்டத்தில் நாயகியின் அம்மாவையும் பலவந்தப்படுத்தி அனுபவிக்கிறான். கடைசியில் எல்லோரும் எல்லாரையும் பழி வாங்கிக்கொண்டு சாகிறார்கள். 

கிட்டத்தட்ட அதே பாணி கதைதான் மரப்பல்லி. மணிபாரதி என்பவன் நாயகன். அவனுடைய மனைவி இறந்துவிட்டாள். அவனுக்கு பக்கத்து வீட்டில் கணவனிடம் சுகம் கிடைக்காமல் தாய் வீட்டில் வந்து அண்டியிருக்கும் ஒருத்தி, அவளுடைய திருமணமாகாத தங்கை, மணிபாரதியின் மகளுடைய ‘கணவனை பிரிந்து வாழும்’ டீச்சர். மாறி மாறி பிட்டுக்கள். இடையே ஒரு லெஸ்பியன் பிட்டு. அவ்வளவுதான் மரப்பல்லி.

அசைவமாக எழுதுவதோ அதை வாசிப்பதோ எனக்கு பிரச்சனை இல்லை. உண்மையில் நான் அதனை விரும்புகிறேன். ஆனால் இந்த புத்தகத்தில் மனித உணர்வுகள், குறிப்பாக பெண்ணின் உணர்வுகள் படுகேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதே என் வருத்தம். போதாத குறைக்கு ஓரினச்சேர்க்கையை பற்றி எந்தவித புரிந்துகொள்ளுணர்வும் இல்லாமல், மறைமுகமாக அதனை எதிர்த்தும் எழுதியிருக்கிறார் வாமு கோமு. ஒருபால் உறவெல்லாம் பேத்தல். பெண்களுக்கு சுகம் வேண்டுமென்றால் at last ஒரு ஆணிடம் தான் பெண் வரவேண்டும் என்று சொல்கிறார். மரப்பல்லியை படித்தால் ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் ஓழுக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக கடைசி சில அத்தியாயங்கள் வக்கிரம். ப்ரியா மனிபாரதியை பிறந்ததிலிருந்து அண்ணா என்றே அழைத்திருக்கிறாள். திடீரென ஒரு சமயத்தில் மணிபாரதி ப்ரியாவை கட்டிப்பிடித்து, உதட்டை கடித்து, பின்புறத்தை பிசைந்ததும் ப்ரியா ஒத்துழைக்கிறாள்.

மரப்பல்லி இனத்தில் ஒருபால் உணர்வு உண்டு என்பதால் குறிப்பாக அப்பெயர் சூட்டியதாக திலீபன் எழுதியிருக்கிறார், எனக்கு வேறு மாதிரியான அர்த்தம் தோன்றுகிறது. ஒருபால் உறவு என்பது மரத்தால் செய்யப்பட்ட உயிரற்ற பல்லியை போன்றது என்று அர்த்தத்தில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. 

நல்ல விஷயங்கள் என்று சொல்வதானால், வாமு கோமுவின் வட்டார பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை. அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைதான். ஐந்தாவது அத்தியாயத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட ப்ரியா தன்னுடைய காதலி ஜெனிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். க்ளாஸ். பேசாமல் அதை மட்டும் ஒரு சிறுகதையாகவோ அல்லது அதனை மையக்கருவாக வைத்து ஒரு நாவலோ எழுதியிருந்தால் பிரமாதம் என்றிருக்கலாம்.

மரப்பல்லி
வா.மு.கோமு
எதிர் வெளியீடு
160 பக்கங்கள்
ரூ.150

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

”தளிர் சுரேஷ்” said...

என்னுடைய வாசிப்பும், சுஜாதா, சாண்டில்யன் கல்கின்னு இருக்கிறதாலே இதெல்லாம் படிக்க நோ சான்ஸ்! வலைப்பூவில் கூட சில எழுத்துக்கள் ரொம்ப புரியவில்லை என்றால் சட்டென தாண்டிவிடுவேன்! ரொம்ப மெனக்கெடுவதில்லை!

வெளங்காதவன்™ said...

நான் இன்னும் 'மரப்பல்லி' வாசிக்கவில்லை. வாசித்தவுடன் பதிலிடுகிறேன். ;-)

Anonymous said...

ஜாக்கி சேகர் கூட உன்னை விட திறமையாக எழுதுவார். இப்படி கேவலமாக மொக்கை போடுவதை விட்டு ஏதாச்சும் ரசிக்கும்படி எழுதினால் நல்லது

Philosophy Prabhakaran said...

என்ன வோய் சொல்றீரு... புத்தகத்தையே உமக்காகத்தான் சமர்பிச்சிருக்காரு...

கும்மாச்சி said...

பிரபா புத்தக விமர்சனம் வெளிப்படையாக இருந்தது.

இன்னும் இதுமாதிரி நவீன சரோஜாதேவி புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றனவா?

ARUN said...

வா.மு.கோமுவின் புத்தகங்களில் நான் இதுவரை படித்தது 'எட்றா வண்டிய' மட்டுமே. பெரும்பாலான அத்தியாயங்களில் எதாவது இரு கேரக்டர்களின் நீண்ட உரையாடல் மட்டுமே இருந்தது. வள வள வென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் செக்ஸ் பற்றியே அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இறுதி வரை எதை நோக்கி கதை சொல்கிறது and இந்த புத்தகம் எதை சொல்ல வருகிறது என்று ஒரு புண்ணாக்கும் புரியவில்லை. இதில் உச்சமாக கிளைமாக்ஸில் தன் நண்பனின் அம்மாவுடன் மவுத் கிஸ் புரிகிறான் நாயகன். எனக்கு வாந்தி வராத குறை. ஒருவேளை எனக்கு தான் இந்த மாதிரி புத்தகங்கள் புரிய/பிடிக்கவில்லையோ என நினைத்தேன். இப்போது அந்த கவலை நீங்கியது. நன்றி பிரபா.

-- அருண், சென்னை.

Anonymous said...

உனக்கு என் கையப்புடிச்சி இழுக்காட்டி தின்ன சோறு செமிக்காதா.

Anonymous said...

செக்ஸ் எண்ணங்கள் என்பது யாருக்கும் வரலாம். அதனை எழுதும் எழுத்தாளர் ஒரு கட்டம் வரைக்கும் இழுத்துச் சென்று விட்டு அதன் பின்பு நடப்பவைகளை நம் கற்பனைக்கே விட்டு விட வேண்டும். எனக்கு அது போல் தான் பிடிக்கும். உப்பு நாய்களிலோ ராஜீவ்காந்தி சாலையிலோ அப்படி இல்லை, கையைப் பிடித்து இருட்டு அறைக்குள் அழைத்துச் சென்று தடவிக் காண்பித்து இது இப்படித்தான் இருக்கும் என்பது தான் வேண்டாம் என்கிறேன். அதற்கு பச்சையான செக்ஸ் புத்தகங்கள் இருக்கிறது. மக்களின் பார்வையிலும் கண்காட்சியிலும் வைக்கப்படும் புத்தகங்கள் அந்த வேலையை செய்யக் கூடாது.

Anonymous said...

வாமு.கோமு எல்லாம் எழுத்தாளர் லிஸ்டிலேயே சேர்த்தியில்லை. கிசு கிசு + காமம் எழுதுவதில் சாருவின் பின் வருபவர் இவர். சாருவாவது விஷய ஞானம் உள்ளவர். இது ’குப்பை’ தேறாத கேஸ். காசுக்குப் பிடித்த கேடு இவரது புத்தகங்கள்.

உண்மையை வெளிப்படையாகச் சொல்வதற்குமன்னிக்கவும். வேறு வழியில்லை.

ஒரே வார்த்தை விமர்சனம் சொல்வதென்றால் “உவ்வே..”

சீனு said...

//ஓழுக்காக // முதலில் ஒழுக்கமாக என்று படித்துத் தொலைத்துவிட்டேன்.. லுகரம் தானே வரணும்...

// ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் ஓழுக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.// கிட்டதட்ட ரா.கா.சாலை கூட இதனை தொட்டு செல்லும்..

உங்களின் மூன்றாவது பத்தி மனநிலையில் இருந்தேன்.. இருந்தும் இவரது ஏதாவதொரு நாவலை வாசித்தே தீர வேண்டும் என முடிவு செய்துள்ளேன் :-)

வவ்வால் said...

பிரபா,

ஆங்கிலத்தில் எரோடிக் நாவல் என தேடினால் இதுப்போல பல கிடைக்கும், அவற்றை உருவி வட்டார நடையில் ,உள்ளூராக்கி எழுதிவிடுகிறார்கள்,சாரு கூட அதான் செய்றாப்படி :-))

ஹி...ஹி ஃப்ரியா மின்னூல்களாக நிறையக்கிடைக்குது,நான் அதெல்லாம் முழுசா படிக்க மாட்டேன் சும்மா ஒர் நாலுப்பக்கம் மட்டும் சாம்பிளுக்கு படிப்பேன்,இதுல பேய் எரோடிக் கதைகள் ,பிளாக் மேஜிக் வகைலாம் இருக்கு :-))