Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

4 January 2013

THE MAN FROM THE DEEP RIVER

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கேணிபல் படங்களின் தந்தை என்று கருதப்படும் ருஜ்ஜெரோ தியோதாதோ (Ruggero Deodato) ஜங்கிள் ஹோலோகொஸ்ட் படத்தினை 1975ல் வெளியிட்டார். அதற்கும் முன்பே உம்பெர்தோ லென்சி (Umberto Lenzi) 1972ல் இயக்கிய படம்தான் The Man From The Deep River. எனினும் இதனை நேரடி கேணிபல் படமாக கருத இயலாது. படத்தில் காட்டப்படும் பிரதான காட்டுவாசி இனத்தினர் நரமாமிசம் உண்பதில்லை. நரமாமிசம் சாப்பிடும் அவர்களின் எதிரணியினரை மையப்படுத்தி கதை நகரவில்லை. மற்றபடி கேணிபல் என்ற பதத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்திய படம் என்று இதனை எடுத்துக்கொள்ளலாம்.



Il paese del sesso selvaggio என்ற இத்தாலிய தலைப்பு கொண்ட திரைப்படம் Deep River Savages, Sacrifice, Mondo Cannibale என்கிற பெயர்களாலும் அறியப்படுகிறது. அதிகப்படியான வன்முறைக்காட்சிகள் நிறைந்திருந்தாலும் ஒரு மெல்லிய காதல் கதையுடன் பயணிக்கிறது.

தாய்லாந்து - பர்மா எல்லைப்பகுதியில் இன்னமும் நாகரிக உலகுடன் தொடர்பில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காட்டுவாசிகளின் வாழ்வியல். படத்தின் கதை உண்மையல்ல எனினும் அம்மக்களின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் அத்தனையும் உண்மையே என்ற செய்தியுடன் படம் துவங்குகிறது.

ப்ராட்லி, ப்ரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக்கலைஞர். தன் பணியின் பகுதியாக தாய்லாந்துக்கு வருகை தந்திருக்கிறான். சிறிய படகொன்றில் தன்னுடைய வழிகாட்டியுடன் தாய்லாந்து மழைக்காடுகளுக்குள் பயணிக்கிறான். இரு நாட்கள் பயணம் தொடர்கிறது. இனியும் தொடர்வது ஆபத்து என்று வழிகாட்டி எச்சரிக்கிறான். ப்ராட்லியும் இசைந்து மறுநாள் காலை திரும்பிவிட முடிவெடுக்கிறார்கள்.

காலையில் வழிகாட்டி பிணமாக ஒதுங்கியிருக்கிறான். அவனருகில் நெருங்கும் ப்ராட்லி காட்டுவாசிகளால் சிறைபிடிக்கப்படுகிறான். அவர்கள் அவனை ஏதோ கடல்வாழ் உயிரினம் என்றே பாவிக்கிறார்கள். காட்டுவாசி பிரிவினருக்கும் கேணிபல் பிரிவினருக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. தலைவர் மகள் மராயா ப்ராட்லியின் பால் ஈர்க்கப்படுகிறாள். அவன் மராயா குடும்பத்தின் அடிமையாக நடத்தப்படுகிறான். மராயாவின் தாய் தைமாவிற்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. சில நாட்களில் கேரன் - மராயா திருமணம் நடைபெறவிருக்கிறது அதன்பிறகு உன்னை விடுவித்துவிடுவார்கள் என்று நம்பிக்கையூட்டுகிறாள். எனினும் காட்டுவாசிகள் அசந்த சமயம் தப்பிக்க முயல்கிறான் ப்ராட்லி. அப்போது நடைபெறும் மோதலில் கேரனை கொன்றுவிடுகிறான் ப்ராட்லி.

அதன்பிறகு ப்ராட்லிக்கு ஒரு வெற்றியாளனுக்குரிய மரியாதை கிடைக்கிறது. அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயார்படுத்தி தங்களுள் ஒருவனாக இணைத்துக்கொள்கிறார்கள். மராயாவின் மனம் கவர்ந்து மணம் கொள்கிறான். மராயா கருவுருகிறாள். இந்நிலையில் அவளது உடல்நிலை மோசமாகி, கண்பார்வை பறிபோகிறது. அவளை காப்பாற்றும் நோக்கில் நாகரிக உலகிற்கு அழைத்துவர முற்படுகிறான் ப்ராட்லி. எனினும் காட்டுவாசி குழுவினர் அனுமதிக்கவில்லை. மராயா ஆண்குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மறைகிறாள். ப்ராட்லி முற்றிலும் காட்டுவாசியாக மாறி,அவர்களை கேணிபல்களிடம் இருந்து பாதுகாத்து வாழ்வதோடு படம் நிறைவடைகிறது.

பிற்காலத்தில் மேலும் சில கேணிபல் படங்களில் தோன்றிய இவான் ரசிமோவ், பர்மிய நடிகை மீ மீ லாய் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மற்ற கேணிபல் படங்கள் போலில்லாமல் மீ மீ லாய், மிக அழகாக தோன்றி பரவசமூட்டுகிறார்.



குறிப்பிட்ட அந்த தாய்லாந்து - பர்மா காட்டுவாசி இனத்தினரின் வாழ்க்கைமுறைகளை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார்கள். கணவன் இறந்து இறுதிசடங்குகள் முடிந்ததும், சிதை எரிந்துமுடிந்த இடத்தில் மனைவியை படுக்கவைத்து வேண்டியவர்கள் புணர்ந்துக்கொள்ளலாம் என்பது ஒரு சான்று. அதேபோல திருமண வயதை அடைந்த பெண், துளையிடப்பட்ட ஒலைக்குடிசையினுள் அமர்த்தப்படுகிறாள். திருமணத்திற்கு தயாராய் இருக்கும் ஆண்கள் ஒவ்வொருவராக துளைக்குள் கையை நுழைத்து மணமகளை தொடலாம். யாருடைய தொடுதல் அவளுக்கு பிடித்திருக்கிறதோ அவனே மணமகன். பாம்பின் விஷம் தொய்த்த அம்புகளை தயார் செய்வது போன்ற நல்ல உதாரனங்களும் இருக்கின்றன.

கேணிபல் படங்கள் என்றாலே கீறி - பாம்பு சண்டையை கட்டாயம் காட்ட வேண்டுமென்ற செண்டிமெண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. பன்றி, முதலை, உடும்பு வேட்
டைகளும் வழக்கம் போல தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன.

கேணிபல் படங்களை பார்க்க விரும்பும், அதே சமயம் இளகிய மனமுடையவர்கள் இந்த படத்தை ஓர் ஆரம்பமாக கருதி பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர்:



தொடர்புடைய சுட்டிகள்:
Cannibal Holocaust
Cannibal Ferox
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 May 2012

Cannibal Ferox – யார் காட்டுமிராண்டிகள்...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முன்குறிப்பு: வன்முறையை விரும்பாதவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.

சில நாட்களுக்கு முன்பு என்னுடைய Cannibal Holocaust பற்றிய பதிவை படித்துவிட்டு ஆண் காளை (!!!) என்ற புதிய நண்பர் மெயிலியிருந்தார். வதை, வாதை போன்றவற்றை எழுத்தில் படித்தாலே அவர் பரவசநிலை அடைந்துவிடுவாராம். மேலும் கழுமரம் ஏற்றுவது, எண்ணைக்கொப்பறையில் பொறிப்பது, அவ்வாறு பொறிக்கும்போது காட்டுவாசிகள் கூடி கும்மாளம் போடுவது என்று அவர் சொல்வது எல்லாமே எனக்கே ராவாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் கூட சிலருடைய ரசனை இருந்து தொலைக்கிறது. Well, ரசனையே இல்லாத ஜடங்களாக இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

அவருடைய மெயிலை படித்ததும் மீண்டும் வெறியேறி இணையத்தில் தேடிக்கண்டுபிடித்தது தான் 1981ல் வெளிவந்த Cannibal Ferox. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் Cannibal படங்களின் புகழ் உச்சத்தில் இருந்திருக்கிறது. முதல்முறையாக 1972ம் ஆண்டில் Man from the deep river படத்தின் மூலமாக Umberto Lenzi என்ற இயக்குனர்தான் Cannibal ஆட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் 1977ம் ஆண்டு Ruggero Deodata இயக்கிய Last Cannibal World வெளிவந்ததும் ட்ரெண்ட் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இரு இயக்குனர்களும் Cannibal படைப்புகளின் அப்பாட்டாக்கர்கள். 1980ம் ஆண்டு Ruggero இயக்கிய Cannibal Holocaust பிரபலத்திலும் பிராப்ளத்திலும் சாதனை படைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே Umberto இயக்கியதுதான் இந்த Cannibal Forex.

“உண்மையிலேயே உலகத்தில் Cannibalism என்ற யிசம் இல்லவே இல்லை. அது ஐரோப்பியர்கள் தங்கள் காலணி ஆதிக்கத்தை செலுத்தவேண்டி பரப்பிய கட்டுக்கதை...” என்பது Cannibals பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை தயாரிக்கும் மாணவி க்ளோரியாவின் கருத்து. அதனினை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் பொருட்டு தன்னுடைய அண்ணனையும் தோழியையும் அழைத்துக்கொண்டு பராகுவே நாட்டைக் கடந்து அமேஸான் காடுகளுக்குள் நுழைகிறார்கள். வழக்கமான திகில் படங்களில் வருவது போலவே, ஆ... அந்த இடமா... அங்க போகாதீங்க... அங்க போனவங்க திரும்பி வந்ததே இல்லைன்னு எச்சரிக்கிறார்கள் லோக்கல் மக்கள். அதையும் மீறி நுழைபவர்கள் ஏற்கனவே அங்கே வைர, கஞ்சா வியாபார ஆசையில் காட்டுக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களை சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் உண்மையில் யார்...? உண்மையிலேயே Cannibalism இருக்கிறதா...? என்பதெல்லாம் மீதிக்கதை.

ஸோரா என்ற அழகான நடிகை இரண்டு காட்சிகளில் ஜோராக நிர்வாண தரிசனம் தருகிறார். ஆனால் அவற்றில் இரண்டாவது காட்சியை மட்டும் ரசிக்க முடியவில்லை. காரணம் பின்னர்...

இது, Cannibal Holocaust படத்தின் அப்பட்டமான நகல் என்றே சொல்லலாம். அதிகபட்சம் ஏழு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியாது. அதே கதை, அதே கருத்து, காட்சிகள் கூட கிட்டத்தட்ட அதேதான், அதை திரையில் காட்டிய விதத்தில் மட்டுமே Cannibal Ferox வேறுபடுகிறது. Cannibal Holocaustல் எப்பேர்பட்ட கொடூரமான காட்சியையும் கூச்சப்படாமல் காட்டுவார்கள். இந்த படத்தில் சில கொடூரமான காட்சிகளில், அந்த கொடூரத்தை அரங்கேற்றும் நபரின் முகபாவனையை மட்டும் காட்டுகிறார்கள். 

படத்திலிருந்து சில “ஸ்வாரஸ்யமான” காட்சிகள்:
- பாம்பு கீரியையும், சிறுத்தை குரங்கையும், உடும்பு பாம்பையும் சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள்.
- காட்டுவாசி ஒருவர் நல்லா ராஜ்கிரண் வக்கணையாக உட்கார்ந்து எலும்பு கடிப்பது போல அமர்ந்துக்கொண்டு பூ... சைஸில் இருக்கும் பெரிய புழுக்களை பிடித்து சாப்பிடுகிறார்.
- ஆமையொன்றை அப்படியே எரிகின்ற நெருப்பின் மீது குப்புற படுக்க வைத்து அதன் கை, கால், தலையை துடிதுடிக்க அறுத்தும் எரித்தும் கொள்கிறார்கள்.
- காட்டுவாசி ஒருவனை கட்டிவைத்து அவனுடைய கண்ணை நொண்டி, லுல்லாவையும் கதம் செய்கிறார்கள். இதே காட்சி பிற்பகுதியில் ஹீரோவுக்கு நடக்கிறது. அதாவது பழிக்கு பழி.
- ஒரு மனிதனுடைய நெஞ்சைக்கிழித்து உள்ளிருக்கும் பாகங்களை தங்களுக்குள் சண்டையில்லாமல் சமரசமாக பகிர்ந்து சாப்பிடுகிறார்கள்.
- நம்ம நிர்வாண நடிகை ஸோராவின் நிலைமை அதைவிட கொடுமையானது, அவருடைய இரண்டு முலைக்காம்புகளிலும் கொக்கி மாட்டி தொங்கவிட்டே சாகடிக்கிறார்கள்.
- இறுதியாக ஹீரோவின் தலையை சும்மா இளநீர் சீவுவது மாதிரி சீவி, தலைக்குள் இருக்கும் லொட்டு, லொசுக்கு சாமான்களை என்னவோ மலேசியாவில் அத்தோ சாப்பிடுவது போலவே சாப்பிடுகிறார்கள்.

இத்தனையையும் செய்துவிட்டு இறுதியாக, Cannibals என்பவர்கள் உண்மையிலேயே சகமனிதர்களையே கொன்று தின்னும் அளவிற்கு மோசமானவர்கள் அல்ல. ஆனால் அவர்களை அத்தகைய மூர்க்கநிலைக்கு ஆளாக்கியது நாகரீக மக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் என்ற கருத்தோடு படம் நிறைவுபெறுகிறது.

31 நாடுகளில் தடை செய்யப்பட்ட Cannibal Ferox நீங்கள் மட்டும் ஸ்பெஷலாக பார்ப்பதற்கு பதிவிறக்க இணைப்புகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 November 2011

போதி தர்மர் – தி ஒரிஜினல் வெர்ஷன்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதற்கண் போதி தர்மனை அறிமுகம் செய்து வைத்து மிஸ்டர்.முருகதாஸுக்கும் இப்படி ஒரு சீனப்படம் இருப்பதாக தகவல் சொன்ன பதிவர் டம்பி மேவி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

Da Mo Zu Shi (அ) Master of Zen என்ற இந்த திரைப்படம் 1994ம் ஆண்டு வெளிவந்த ஒரு சீன திரைப்படம். ஒன்றரை மணி நேர திரைப்படம் போதி தருமரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கிறது. Infact, Da Mo Zu Shi என்ற சொல் “போதி தர்மர்” என்ற பெயரின் சீன மொழிபெயர்ப்பே.

தென் இந்தியாவின் மன்னர் ஒருவரின் மூன்றாவது மகன்தான் போதி தாரா. மன்னர் மரணபடுக்கையில் இருக்க, மூத்த இளவரசர்கள் போதி தாராவை கொல்ல முயல்கின்றனர். காரணம் மன்னர் போதி தாராவை தனது வாரிசாக முன்னரே அறிவித்திருக்கிறார். மூத்த இளவரசர்களின் முயற்சி தோல்வியில் முடிகிறது. அப்போது அரண்மனைக்கு பெளத்த துறவி பிரஜ்ன தாரா வருகை தருகிறார். அவருடைய போதனைகள் போதி தாராவை கவர்ந்துவிட, அவருடைய ஆசிரமத்திற்கு சென்று அவருடைய சீடராக விரும்புவதாக தெரிவிக்கிறார். சிலபல சோதனைகளுக்குப்பின் போதி தாராவை தனது சீடராக ஏற்றுக்கொள்கிறார் பிரஜ்ன தாரா. மேலும் அவருக்கு போதி தர்மா என்று பெயர் சூட்டுகிறார். அவர் இறந்து 67 ஆண்டுகளுக்குப்பின் போதி தர்மர் சீனாவிற்கு செல்ல வேண்டுமென்று கூறுகிறார்.

அப்படி சொன்ன பிரஜ்ன தாரா அப்போதே இறந்துவிடுகிறாரா என்று சொல்லப்படவில்லை. ஆனால் 67 ஆண்டுகளுக்குப்பின் என்ற ஸ்லைடோடு அடுத்த காட்சி தொடங்குகிறது. அப்போது போதி தருமரின் அண்ணன் மகன் அந்த இடத்தை ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறான். அவன் பெளத்த துறவிகளை துன்புறுத்துகிறான் (தசாவதாரம் நெப்போலியன் போல). அப்போது ஒரு பெளத்த துறவி சொல்லும் படிப்பினைகளை கேட்டு அவன் மனம் திருந்தி தனது சித்தப்பாவான போதி தருமரை காணச் செல்கிறான். அவரை சீனா செல்ல வேண்டாமென வலியுறுத்துகிறான். அவர் மனம் மாறாத காரணத்தினால் குறைந்தபட்சம் அவருக்கு மரியாதை செய்யும்பொருட்டு சீன மன்னருக்கு போதி தருமரை தகுந்த மரியாதையுடன் உபசரிக்கச் சொல்லி ஓலை அனுப்புகிறான்.

சீனாவிற்கு செல்லும் போதி தர்மருக்கு ராஜ மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால் அவர் எளிமையாக இருக்கவே விரும்புகிறார். சிலகாலம் அங்குள்ள துறவிகளுக்கு போதிக்கிறார். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரு மலைக்குகையில் தவம் செய்ய ஆரம்பிக்கிறார். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுமார் ஒன்பது ஆண்டுகள் அங்கேயே அமர்ந்து தவம் செய்கிறார். வாய்வழி பிரச்சாரமாக பலர் போதி தர்மர் பற்றி கேள்விப்பட்டு அவரை வழிபட தொடங்குகிறார்கள். அது ஒரு வழிபாட்டு தலமாகவே மாறுகிறது. இவருடைய பெருமைகளை அறிந்து குகை வாசல் முன்பு அமர்ந்து மூன்று நாட்களாக கொட்டும் பனியில் தவம் செய்கிறான் ஒரு இளைஞன். இவனுடைய தவத்தை கண்டு மெச்சி, ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் கண் திறக்கிறார் போதி தர்மர்.

இளைஞன் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி போதி தருமரிடம் மன்றாடுகிறான். தன்னுடைய ஒரு கையை வெட்டி போதி தருமரிடம் கொடுத்து தன்னுடைய அர்ப்பணிப்பை காட்டுகிறான். போதி தர்மரும் அவனை அவரது சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு WEI HO என்று பெயர் சூட்டுகிறார். மேலும் அவனுக்கு Second Master of Zen என்ற பட்டத்தையும் கொடுக்கிறார். தன்னுடைய இறுதிக்காலத்தில் அங்குள்ளவர்களுக்கு குங்பூ கலையை கற்றுக்கொடுக்கிறார்.

ஒருநாள் வியாபாரி ஒருவர் தான் போதி தருமரை ஒற்றை செருப்புடன் பார்த்ததாக மற்றொருவனிடம் கூறுகிறான். அவனோ போதி தர்மர் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக கூறுகிறான். போதி தருமரை புதைத்த இடத்தை தோண்டிப்பார்க்கும்போது அங்கே ஒற்றை செருப்பு மட்டுமே இருக்கிறது. படம் நிறைவடைகிறது.

இதற்கும் ஏழாம் அறிவு படத்தில் காட்டிய இருபது நிமிடங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள்.
- போதி தர்மர் பிறந்த ஊர் தென் இந்தியா என்று மட்டுமே படத்தில் குறிப்பிடப்படுகிறது. தமிழகம் என்றோ காஞ்சிபுரம் என்றோ, பல்லவ இளவரசன் என்றோ குறிப்பிடவில்லை.
- போதி தர்மர் சீனாவை நோக்கி புறப்படும்போது அவருடைய வயது என்பதிற்கும் மேல். மேலும் அவர் கடல்வழி பயணமாகவே சீனா சென்றதாக கூறப்படுகிறது. போதி தர்மர் இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டு கடைசியாக சீனா சென்றடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
- போதி தர்மர் மருத்துவர் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் புத்த மத போதகர் என்றும் இறுதிக்காலத்தில் தற்காப்பு கலையை பயிற்றுவித்தார் என்று மட்டுமே கூறப்படுகிறது.
- உச்சக்கட்டமாக போதி தருமரை சீனர்கள் விஷம் வைத்து கொன்றதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்த மாதிரி ஒரு சமாச்சாரத்தை சீன மக்களிடம் சொன்னால் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸுக்கு (போதி) ‘தர்ம’ அடி கொடுக்கக்கூடும்.

இந்தப் படத்தின் பதிவிறக்க லிங்குகள் இணையத்தில் எளிதாக கிடைக்கவில்லை. யூடியூபில் மட்டுமே கிடைத்தது. 

யூடியூப் லிங்குகள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 November 2011

Cannibal Holocaust – பிணம்தின்னும் மனிதர்கள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

Cannibal என்றால் தம் இனத்தை தானே கொன்று உண்ணும் விலங்கினம் என்று அர்த்தம் சொல்கிறது இணையம். அதாவது, இங்கே சக மனிதர்களையே கொன்று தின்னும் மனிதர்கள். So called காட்டுவாசிகள். கூகுளில் Cannibal movies என்று டைப்படித்து தேடினால் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அந்த லிஸ்டில் அதிமுக்கியமான ஒரு படம்தான் இந்த Cannibal Holocaust.

- Title: Cannibal Holocaust
- Country: Italy
- Language: English, Spanish
- Year: 1980
- Genre: Horror, Adventure
- Cast: Robert Kerman, Carl Gabriel Yorke, Francesca Ciardi, Perry Pirkanen, Luca Barbareschi
- Director: Ruggero Deodato
- Cinematographer: Sergio D'Offizi
- Editor: Vincenzo Tomassi
- Music: Riz Ortolani
- Producer: Franco Palaggi
- Length: 96 Minutes

ஒரு இயக்குனர், அவனுடைய காதலி, இரண்டு கேமரா மேன்கள் ஆகிய நான்கு பேர் கொண்ட ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கும் குழு காட்டுவாசிகளைப் பற்றி படம் எடுப்பதற்காக அமேசான் காடுகளை நோக்கி பயணிக்கிறது. போனவர்கள் இரண்டு மாதங்களாகியும் திரும்பாததால், ஒரு பேராசிரியர் தலைமையிலான குழு அங்கே அனுப்பப்படுகிறது. பேராசிரியர் குழு, ஒரு காட்டுவாசியை பிணைக்கைதியாக பிடித்து அவன் உதவியுடன் காட்டுவாசிகள் வாழும் இடத்திற்கு செல்கின்றனர். ஆரம்பத்தில் இவர்களை நம்பாமல் பயந்து பயந்து பழகும் காட்டுவாசியினர், ஒரு எதிர்குழு காட்டுவாசிகளுடனான சண்டையில் பேராசிரியர் குழுவின் உதவி கிடைக்க, அவர்களை நம்பத்தொடங்குகின்றனர். காட்டுவாசிகள் இவர்களை விருந்தினர் போல உபசரிக்கும் அதே சமயத்தில் பேராசிரியர் இறந்துபோன படக்குழுவினரின் எலும்புக்கூடுகளை காண நேரிடுகிறது. அப்படியென்றால் அவர்களிடம் இருந்த கேமரா...??? அதிலிருந்த வீடியோ டேப்...???

ஆழ்ந்த யோசனைக்குப்பின் ஒரு முடிவெடுக்கும் பேராசிரியர் தன்னிடம் இருக்கும் ட்ரான்ஸிஸ்டரை காட்டுவாசிகளிடம் கொடுத்து அவர்களிடம் இருக்கும் படக்குழுவினரின் டேப்பை கைப்பற்றுகிறார். இனி அந்த வீடியோ டேப்பில்...

படக்குழுவினர் நால்வரும் ஒரு உதவியாளருடன் காட்டுக்குள் நுழைகின்றனர். சிறிது தூரம் கடந்ததுமே, பாம்பு கடித்து உதவியாளர் இறந்துவிட, நால்வர் மட்டும் வேறு வழியின்றி பயணத்தை தொடர்கின்றனர். ஒரு காட்டுவாசியை பின்தொடர்ந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு செல்பவர்கள், தங்களின் டாகுமென்டரியின் ரியாலிட்டிக்காக காட்டுவாசி மக்கள் பலரையும் தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்கின்றனர். இது மட்டுமில்லாமல், ஒரு காட்டுவாசி பெண்ணை குழுவாக வன்புணர்கின்றனர். இவர்களை பழி வாங்கும்பொருட்டு காட்டுவாசி கும்பல் இவர்களை விரட்டுகிறார்கள். இவர்களில் ஒருவன் காட்டுவாசி கும்பலிடம் சிக்கிக்கொள்ள அவனை காப்பாற்றுவதை விட்டுவிட்டு அவனைக் கொல்வதையும் படம் பிடிக்கிறார்கள். அடுத்து இயக்குனரின் காதலி, காட்டுவாசிகளிடம் சிக்க, வேறென்ன... கேங் ரேப்தான். அதையும் படம் பிடித்து தொலைக்கிறான் ஒருவன். கடைசியில் படம் பிடித்தவனும் காட்டுவாசிகளுக்கு இரையாக, அவர்களுடைய இந்த டாகுமென்டரி நிறைவடைகிறது.

மேலே குறிப்பிட்ட இரண்டு வன்புணர்வு காட்சிகள் தவிர இன்னொரு பாலுறவு காட்சியும் உண்டு. இதுதவிர காட்டுவாசி ஒருவன் தனக்கு துரோகம் செய்யும் மனைவியை அவர்களின் பாரம்பரிய முறைப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொள்ளும் காட்சி ஒன்றும் உண்டு. கர்ப்பிணி பெண் ஒருவரை நிற்க வைத்து பிரசவம் பார்த்து குழந்தை பிறந்த அடுத்த நொடியே அதை மண்ணில் போட்டு புதைக்கும் கொடூர காட்சியும் உண்டு. நிறைய மிருகங்களை கொலை செய்வதாக காட்டுகிறார்கள். அதிலும் ஆமை ஒன்றை துடிக்கத்துடிக்க கொள்ளும் காட்சி ரொம்ப மோசம். இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வன்முறைக்காட்சி, செங்குத்தாக நட்டுவைக்கப்பட்டிருக்கும் ஒரு ஈட்டியில் காட்டுவாசி பெண் ஒருத்தியின் ஆசன வாயை நுழைத்து ஈட்டியை வாய் வழியாக வெளியே எடுக்கிறார்கள். பார்க்க படம்.

ஒவ்வொரு முறை வன்முறை காட்சி நடக்கும்போதும் பேக்ரவுண்டில் கேட்கும் “உர்ர்ர்ர்ர்ர்... டூ.........ம்ம்ம்ம்... டூ...... டூ.... ம்ம்ம்ம்...” இசை செம.

நாகரிக மக்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் காட்டுவாசிகளை விட அநாகரிகமாக நடந்துக்கொள்கிறார்கள் என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்துகிறது. 1980ல் வெளியான இந்தப்படம், வெளிவந்த பத்து நாட்களில் தடை செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக சுமார் பத்து மடங்கு லாபம் பார்த்துவிட்டது. 

உபரித்தகவல்:
இந்தப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு இதில் நடித்த நடிகர்கள் யாரும் மீடியா முன் தோன்றக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார் இயக்குனர். அதாவது, அவர்கள் நிஜமாகவே இறந்துபோனதாக காட்டி படத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துவதே அவரது நோக்கம். ஆனால், விஷயம் போலீஸ், கேஸ், கைது என்று விவகாரமாகிவிட, வேறு வழியில்லாமல் நடிகர்களை மீடியா முன் தோன்ற வைத்திருக்கிறார்.

பதிவிறக்க லிங்குகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 October 2011

Paranormal Activity 3 - புதுசு ஆனா பழசு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

படம் பார்க்க சில நண்பர்களை அழைத்தேன். பகலில் பார்ப்பதாக இருந்தால் நான் வருகிறேன் என்று சிலர் நட்புக்கரம் நீட்டினார்கள். போங்கடா நீங்களும் உங்க பகல் காட்சியும்ன்னு சொல்லிட்டு தன்னந்தனியாக புறப்பட்டேன். அபோகேலிப்டோ படத்திற்கு பிறகு இப்போதுதான் பிறமொழி படத்தை திரையரங்கில் பார்க்கிறேன். தேவி பாலா திரையரங்கம். அடித்தளத்தில் அமைந்திருந்த திரையரங்கிற்குள் சென்று அமர்வதற்கே திகிலாக இருந்தது. ஆரம்பத்தில் ஒரு இருபது பேர் இருந்தார்கள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் கிட்டத்தட்ட பாதி திரையரங்கம் நிறைந்துவிட்டது.

முதல், இரண்டாவது பாக கதைகளுக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள். முதல் பாகத்தில் வந்த கேட்டி, இரண்டாம் பாகத்தில் வந்த கிறிஸ்டி இருவரும் சிறுமிகளாக,. இவர்களுடைய பெற்றோர் ஜூலி – டென்னிஸ். சிறுமிகளுடன் invisible கதாப்பாத்திரம் டோபி. ஜூலியும் டென்னிஸும் தங்களது பலான காட்சியை படமெடுக்க நினைக்கிறார்கள். அப்போது நிலநடுக்கம் வந்து சீனை கெடுத்துவிடுகிறது. பதிவான வீடியோவை பின்னர் போட்டுப் பார்க்க, அதில் ஏதோ ஒரு உருவம் இருப்பதாக தெரிகிறது. வழக்கம் போல வீட்டில் கேமராக்கள் நிறுவப்படுகின்றன. தனியாக பேசுவது தூக்கத்தில் நடப்பது என சிறுமி கிரிஸ்டியின் நடவடிக்கைகள் விந்தையாக இருக்கின்றன. அதுபற்றி கேட்கும்போது தன் நண்பன் டோபியிடம் பேசியதாக கூறுகிறாள். தொடர்ந்து இன்னும் பல விசித்திர நிகழ்வுகள் நடக்க, அனைவரும் குடும்பத்துடன் பாட்டி வீட்டுக்கு (ஜூலியின் தாய்) செல்கின்றனர். அங்கேயும் கேமராக்கள். அங்கே நிலைமை இதைவிட மோசம், அதிலும் பாட்டியே பேயாக... இறுதியில் என்ன நடக்கிறது என்பதை கடைசி பத்து நிமிடங்களில் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கமெண்ட் அடிக்கும் கம்முனாட்டிகள் தொல்லை தாங்க முடியவில்லை. சத்யம் தியேட்டரில் பார்க்கலாம்ன்னு சொன்னேன் கேட்டியா... கேட்டியான்னு என்னை நானே திட்டிக்கொண்டேன். ஆமாம், தேவி தியேட்டர் ரசிகர்களுக்கும் சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் இன்றுதான் வித்தியாசம் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஓயாமால் கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தவர்களையும் கடைசி பத்து நிமிடங்கள் பொத்திக்கொண்டு படம் பார்க்க வைத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

படம் முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் சுமார். இரண்டாம் பாகத்துடன் ஒப்பிட்டால் சூப்பர். ஜாலியாக ஜல்லியடித்துக்கொண்டு படம் பார்க்க விரும்புபவர்கள் தேவி திரையரங்கிலும், படத்தின் திகிலை அனுபவித்து பார்க்க விரும்புபவர்கள் சத்யம் திரையரங்கிலும் பாருங்கள். இரண்டையும் விட பதிவிறக்கம் செய்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது சிறந்த ஆப்ஷன்.

நைட் ஷோ பார்த்துவிட்டு மவுண்ட் ரோடிலிருந்து திருவொற்றியூர் வரை தனியாக பயணம் செய்த அனுபவம் இருக்கே... ப்ச்... உடம்பில் கால் மட்டும் வெளியே தெரியும்படி முழுக்க போர்த்திப் படுத்திருக்கும் பிளாட்பார வாசி, மூர்க்கமான பார்வையுடன் குப்பை சேகரிக்கும் தொழிலாளி, குடித்துவிட்டு ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி சொறிந்துக்கொண்டே புலம்பும் தெருவோரக்குடிகாரன், சவாரிக்காக நம்மையே குறுகுறுவென்று பார்க்கும் ஆட்டோக்காரன், இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்கும் தொனியில் நம்மருகே வந்து முகர்ந்துபார்க்கும் நடுநிசி நாய்கள். இதையெல்லாம் விட வேறென்ன சார் த்ரில் வேணும்...???

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 October 2011

Paranormal Activity 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த மாதம் Paranormal Activity படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இந்தப்படம் அதன் prequel. அதாவது முந்தய படத்தின் கதைக்கு முன்பே நடந்த சம்பவங்களின் தொகுப்பு. கிறிஸ்டி – டேனியல் தம்பதிகள், அவர்களுடைய கைக்குழந்தை, டேனியலின் பதின்ம வயது மகள் (மூத்த தாரத்து வாரிசு போல), கூடவே ஒரு நாய் இவர்கள் ஒரு பங்களாவில் வசிக்கின்றனர். கிரிஸ்டியின் தங்கையாக முதல் பாகத்தில் வரும் கேட்டி அக்காளுக்காக ஆசையாக ஒரு நெக்லஸ் வாங்கித்தருகிறார். திடீரென வீட்டில் இருந்து அந்த நெக்லஸ் காணாமல் போய்விட கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திகில் ஸ்டார்ட்ஸ்....

முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது ரொம்பவே பொறுமையை சோதிக்கிறார்கள். ஆரம்பித்து இருபது நிமிடம் வரை ரொம்ப போர். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக விஜய் டிவி பாஷையில் அமானுஷ்ய சம்வங்கள் நிகழ்கின்றன. வேலைக்காரப்பெண் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துக்கொள்கிறார். ஆனால் டேனியல் அதை நம்ப மறுத்து அவளை வெளியேற்றுகிறார். முதல் பாகத்தைப் போலவே திகில் ஒவ்வொரு இரவிலும் கூடிக்கொண்டே போகிறது. இரவில் குழந்தைக்கு துணையாக இருக்கும் நாய் ஒருநாள் மூர்க்கமாக தாக்கப்படுகிறது. டேனியலும் அவரது மகளும் நாயை நள்ளிரவில் மருத்துவனைக்கு அழைத்துச்செல்ல, வீட்டில் கிறிஸ்டியும் கைக்குழந்தையும் தனியாக... இதற்கு மேல் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே சமயத்தில் வெளியான இந்தப்படம் வெறும் மூன்று மில்லியன் செலவில் தயாராகி நூற்றியைம்பது மில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் முதல் பாகம் அளவிற்கு மிரட்டவில்லை. ஒருவேளை வேறு இயக்குனர் இயக்கியது கூட காரணமாக இருக்கலாம். அல்லது அதிக கேரக்டர்களை உலவ விட்டதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இரவு தனியாக பார்த்தால் குறைந்தபட்ச பயம் தொற்றிக்கொள்ளும் என்பது உறுதி. 

படத்தின் இறுதியில் கதையை முதல் பாகத்தொடு முடிச்சு போட்டிருக்கிறார்கள். முந்தய பாகத்தின்படி October 9, 2006 இரவு பத்து மணிக்கே போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் பெண் அதே இரவு பன்னிரண்டு மணியருகில் உயிரோடு வருவதாகவும், குழந்தையை தூக்கிக்கொண்டு மறைவதாகவும் காட்டப்படுகிறது. அப்படியென்றால் வருவது உயிரற்ற பெண்ணா...? பேயா...? அவளும் அவள் எடுத்துச் சென்ற கைக்குழந்தையும் எங்கே...? இதுபோன்ற கேள்விகளுக்கு இன்று வெளியாகும் Paranormal Activity 3 பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

இன்று இரவு தேவி திரையரங்கில் Paranormal Activity 3 படம் பார்க்க இருக்கிறேன். பதிவர்கள் யாராவது (பயப்படாமல்) உடன் வர விரும்பினால் அழைக்கவும் – 80158 99828.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 October 2011

21 Grams

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழில் வானம், ஆரண்ய காண்டம் படங்கள் வெளிவந்தபோது அவை நான்-லீனியர் படங்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் உண்மையில் நான்-லீனியர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன படம் இதுதான்.

- கிறிஸ்டினா தன்னுடைய கணவனையும், இரண்டு குழந்தைகளையும் ஒரு கார் விபத்தில் பறிகொடுக்கிறாள்.
- ஜேக் ஒருநாள் கார் ஓட்டிப்போகும்போது ஒரு ஆளையும் இரண்டு குழந்தைகளையும் இடித்து, அவர்கள் இறந்துவிடுகிரார்கள்.
- பால் இதய நோயால் மரணத்திற்கு அருகிலிருப்பவன். அவனுக்கு கார் விபத்தில் பலியான ஒருவனின் இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.

இந்த மூன்று வெவ்வேறு கதைகளையும் ஒரே கதையாக சேர்த்து பிசைந்து சுழட்டியடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இதற்கிடையே பால் – அவரது முன்னாள் மனைவியுடனான காதல், ஜேக் – கர்த்தர் காயடித்துவிட்டார் என்று புலம்புவது, கிறிஸ்டினாவின் போதைப்பழக்கம் என்று இன்னும் நிறைய கிளைக்கதைகள். சிகரெட், மது, கஞ்சாவெல்லாம் சர்வசாதாரணமாக புழங்குகிறது. தொண்ணூறாவது நிமிடத்தில் ஒரு காமத்துப்பால் காட்சியும் உண்டு.

ஆங்கிலப்படங்களில் குடும்பம், பாசம் என்று நெகிழ வைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவே. அந்த குறைவான எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.

இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஸீன் பென். அதாங்க ஐயாம் சாம் படத்தில் விக்ரம் மாதிரியே நடிக்க முயற்சி பண்ணாரே, அவரேதான். ஹீரோயினாக நடித்திருப்பவர் நவோமி வாட்ஸ். ஒரு காட்சியில் ஆவேசமாக முத்தம் கொடுத்துவிட்டு, அடுத்த நொடியே ஆத்திரம் கொண்டு அடிப்பது என்று அடேங்கப்பா என்னா நடிப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் பெனிசியோ டெல் டொரோ. இவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக, நகைச்சுவையுடன் கடைசி பத்தியில்.

2003ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இருபது மில்லியன் செலவில் அறுபது மில்லியன் வசூலை குவித்திருக்கிறது. நவோமியும், பெனிசியோவும் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதவிர பல்வேறு விருதுகளையும் வாங்கிஇருக்கிறது.

இந்தப்படத்தை இயக்கிய அலெக்சாண்டர் (அதுக்கு மேல வாயில நுழையல... சர் நேமாம்...) திரைக்கதையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அமெரோஸ் பெரோஸ் படத்தை இயக்கியவர்.

21 Grams – பொறுமையாக பார்த்தால் அருமையாக ரசிக்கலாம்.

பதிவிறக்க லிங்குகள்:
நேரடி லிங்குகள்: பாகம் 1, 2, 3, 4

பெனிசியோ டெல் டொரோ... இந்த நடிகரைப் பார்த்ததும், அட நம்ம கே.ஆர்,பி.செந்தில் அவருடைய ப்ரோபைல் போட்டோவில் இருப்பது போலவே இருக்கிறாரே என்று கொஞ்சம் வியந்தேன். மேலும் தெரிந்துக்கொள்ள கூகிளினேன். மேலும் ஆச்சர்யம், இவர் சே குவேரா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சே குவேராவாக நடித்திருக்கிறார். என்னுடைய தீர்க்க தரிசனத்தை மெச்சிக்கொண்டேன். இன்னும் கொஞ்சம் புகைப்படங்களை கூகிளி பார்த்தேன், அப்போதுதான் தெரிந்தது. நம்மவர்கள் நிறைய பேர் ப்ரோபைல் படத்தில் இருப்பது சே குவேரா அல்ல. இவர்தான். சே குவேரா புகைப்படம் கிடைக்காத பட்சத்தில் சில ஓவியர்கள் இவரை மாடலாக வைத்து சே குவேராவை வரைந்திருக்கிறார்கள். ச்சே.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment