அன்புள்ள வலைப்பூவிற்கு,
நம்மூரில் மழை வேண்டி கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்வது போல ஜிம்பாப்வே நாட்டில் ஒரு சடங்கு. அதாவது ஆண்களின் விந்துவினை வைத்து சடங்கு செய்தால் வாழ்க்கையில் வெற்றி கிட்டுமென்றும் பணம் கொழிக்கும் என்றும் ஒரு நம்பிக்கை. கடந்த வாரம் காரில் சென்றுக்கொண்டிருந்த அப்பாவி இளைஞர் ஒருவரை மூன்று இளம்பெண்கள் மடக்கி அவருடன் வலுக்கட்டாயமாக உறவுகொண்டு அவரது விந்தினை ஆணுறையில் சேமித்துக்கொண்டு சென்றார்களாம். மேலே சொன்னது ஒரு சாம்பிள் சம்பவம்தான். ஜிம்பாப்வேயில் ஆங்காங்கே அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றதாம். உச்சக்கட்டமாக ஒருவர் தான் கற்பழிக்கப்பட்டதை தன் மனைவியிடம் சொல்ல, அவர் விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டாராம். ம்ஹூம் வெண்ணிற ஆடை மூர்த்தி தலைமையில் ஆ.பா.ச (ஆண்கள் பாதுகாப்பு சங்கம்) ஆரம்ப விழா ஒன்னு செய்யணும்.
கடந்த வாரத்தில் ஒருநாள் நைட்டு மிட்நைட் மசாலா பார்த்துவிட்டு மிகவும் தாமதமாக தூங்கியதன் விளைவாக காலையில் கண் எரிச்சல் அதிகமாக இருந்தது. அவ்வப்போது கைகளை கண்களில் வைத்து கலவரம் செய்ய அலுவலகத்திற்குள் நுழையும்போது கண்கள் கேப்டனாக மாறியிருந்தது. அவ்வளவுதான்... உள்ளே சென்றதும் ஆளாளுக்கு என்னை பார்க்காதே, என்கிட்ட வராதேன்னு தவிக்கிறார்கள். எனக்கு மெட்ராஸ் ஐ-யாம் அது அவங்களுக்கும் பரவிடுமாம். அடப்பதறுகளா, அம்பேத்கர் கூட இப்படியொரு தீண்டாமையை கடந்து வந்திருக்கமாட்டார். நான் சத்தியம் செய்யாத குறையாக எனக்கு மெட்ராஸ் ஐ இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை. மேனேஜர் தெய்வாதீனமாக, தம்பி நீங்க தயவு செய்து வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொன்னார். அதுக்கு மேல நம்ம என்ன செய்ய முடியும்... கேட்காமல் கிடைத்தது ஒருநாள் விடுமுறை...!
சாம் மார்த்தாண்டன், புரட்சிக்காரன், மங்காத்தாடா, பரதேசித்தமிழன், நாய் சேகர் நீங்கள்லாம் யாருங்க...??? நீங்க யாரா வேணும்ன்னா இருந்துட்டு போங்க. நீங்க பெயர் போட்டு எழுதுறதும் போடாம எழுதுறதும் உங்களோட தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிடுவதற்கில்லை. ஆனால் யாருடன் சாட்டுக்கு போனாலும் “உண்மையைச் சொல்லு... நீ தானே மங்காத்தா... நீ தானே புரட்சிக்காரன்...” என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். யோவ் நான் இல்லைய்யா நம்புங்கன்னு சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை. அவனவன் பத்து பதினஞ்சு ப்ளாக் வச்சிட்டு சந்தோஷமா இருக்கான்... ஒரே ஒரு ப்ளாக்கை வச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... அய்யுய்யுய்யுய்யோ....!!!
இந்தியாவே ஆரவாரமாக இருந்திருக்கும். ஷேவாக் நூற்றியைம்பது ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். நிச்சயம் இருநூறை தாண்டி விடுவார் என்றே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கோ உள்ளூர ஒரு எண்ணம் சச்சின் சாதனை முறியடிக்கப் படக்கூடாதென்று. கடைசியில் அது நடந்தேவிட்டது. ப்ச்... வடை போச்சே...!
கொலவெறி பாடலின் கொலவெறித்தனமான வெற்றியை அடுத்து அந்த பாடலுக்கு எப்படி நடனமைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம் படக்குழுவினர். எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் ஜஸ்ட் லைக் தட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்லிடுவாங்க ரசிகர்கள். பாடலின் மீதுள்ள எதிர்பார்ப்பு. அநேகமாக ஏதோவொரு பண்பலையின் வாயிலாக கொலவெறி பாடலுக்கு நடனம் அமைக்கும் போட்டி நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்.
ஜொள்ளு:
கண்ணுல காதல் கேமரா...! கொண்டு வந்தாளே சூப்பரா...!! |
ட்வீட் எடு கொண்டாடு:
sanakannan Sa.Na. Kannan
தமிழ் இன்னமும் வாழ்வது ஊடகங்களில்தான் என்று கொலைவெறி பாடல் விவாதத்தில் சொன்னார் புதிய தலைமுறையின் தொகுப்பாளர்.
gpradeesh Pradeesh
நல்லவன்னு பேர் எடுக்க 2 எளியவழிகள்! காமம் பிடிச்சாலும், பிடிக்காத மாதிரியும்,பக்தி பிடிக்கலைனாலும் பிடிச்ச மாதிரியும் நடிக்கணும்!
udanpirappe ரவி சங்கர்
தக்காளி சுட்டே புடுவேன் -சிம்பு .. பாவிப்பய சொன்னமாதிரியே செஞ்சுத் தொலைச்சிட்டானே #osthi
krpthiru தமிழ் திரு
நாம் சைட் அடிப்பது தெரிஞ்சதும் அழகான பொண்ணுங்க வெட்கப்படுது ...சுமாரான பொண்ணுங்க பந்தா காமிக்குது .. #கன்பீசிங் கேள்ஸ்
Dhevadhai Verified Account
சேவாக் டெஸ்ட்டுல 319, ஒன் டேல 219.. #இதுக்கு காரணம் சச்சின் 19 வயசுல மொதல் செஞ்சுரி அடிச்சது தான் #இன்னும் கெளப்பலயா?
அறிமுகப்பதிவர்: ருத்ரா
நுழைந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பதிவர். அதற்குள் உண்மைத்தமிழன் போன்ற சீனியர் பதிவரின் கடைக்கண் பார்வை கிடைத்திருப்பது இவருக்கு ஸ்பெஷல் பூச்செண்டு. தமிழ்நாட்டில் பிறந்து பணி நிமித்தமாக குஜாராத்தில் வசித்துவரும் இவருடைய சுய புராணத்தை படித்துவிட்டு தொடருங்கள். நல்லவேளை நாம குஜராத்ல பிறக்கல என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார். அடுத்ததாக அகமதாபாத்தில் தன்னுடைய சிலிர்ப்பான அனுபவங்களை தொடராகவும் எழுதி வருகிறார்.
கேட்ட பாடல்: கொலைகாரா...!
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கொலகாரா... கொலகாரி... என்று கொலவெறி ஏதுமில்லாத ஒரு ரம்மியமான பாடல் கடந்த ஒருவாரமாக என்னை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
பாடல்வரிகளில் மிகவும் நுட்பமாக காமத்துப்பால் கலக்கப்பட்டிருப்பது அருமை. “பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பிச்செல்லும் மூடா... முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா...”, “ஆச வச்ச பொம்பளைக்கு அஞ்சுநாளா தூக்கமில்ல... மீச வச்ச ஆம்பிளைக்கு மெத்த வாங்க நேரமில்லை...” போன்ற வரிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கா.பால் சாம்பிள்கள். வீடியோவுடன் பார்க்கும்போது அஞ்சலி இருப்பது இன்னும் ஸ்பெஷல். ஆனால் கரண் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ்... அடங்கப்பா மனசுக்குள்ள பலே பாண்டியா சிவாஜி கணேசன்னு நெனப்பு...!
பார்த்த காணொளி:
திரும்பத் திரும்ப தலபுராணம் பாடுவது எனக்கே கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இந்த காணொளியை பார்த்த மாத்திரத்தில் நிச்சயம் இதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. BTW, காணொளியில் தோன்றும் விமர்சகர் யாரென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ரசித்த புகைப்படம்:
பசங்க வாழ்க்கையை காலி பண்ணும் அந்த ஒரு பார்வை...! |
பொன்மொழி:
ஒருபோதும் தவறு செய்யாதவன், ஒன்றும் செய்ய லாயக்கில்லாதவன்.
தத்துபித்துவம்:
Rivers never go reverse...! – வாழ்க்கையைப் போலவே
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு ரஜினி ஜோக்:
ரஜினி ஏன் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் தெரியுமா...?
ஒருமுறை ரஜினிக்கும் அவருடைய மனைவிக்கும் சண்டை வந்ததாம். அதுலயே ரஜினி ஜெயிச்சிட்டாராம்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
48 comments:
நாதான் மொதல் ஆளு...:)
//அம்பேத்கர் கூட இப்படியொரு தீண்டாமையை கடந்து வந்திருக்கமாட்டார். //
//உள்ளூர ஒரு எண்ணம் சச்சின் சாதனை முறியடிக்கப் படக்கூடாதென்று. கடைசியில் அது நடந்தேவிட்டது. ப்ச்.//
இதெல்லாம் நான் இரசிச்சாலும்...மனசுக்குள்ள ஜிம்பாப்வே ஆச வந்த்ருச்சு...ஸ்ஸ்ஸபா
பிரபா வாசிக்க .....குறும்(பு)படம்
அன்புள்ள பிரபாகரனுக்கு,
என்னுடைய வலை பூவை பற்றி தங்கள் பதிவில் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி
நேசமுடன்,
ருத்ரா
அன்புள்ள பிரபாகரனுக்கு,
என்னுடைய வலை பூவை பற்றி தங்கள் பதிவில் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி
நேசமுடன்,
ருத்ரா
நன்றி மயிலன், Ruthra... இப்படி நட்ட நடுராத்திரில கண்ணு முழிச்சு என் பதிவை படிக்கிறீங்கன்னு நினைக்கும்போது என் கண்ணெல்லாம் கலங்குது...
//“உண்மையைச் சொல்லு... நீ தானே மங்காத்தா... நீ தானே புரட்சிக்காரன்...” என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். //
ஐயோ ஐயோ Philo... நீங்க ஆள்தோட்ட பூபதின்னு இவைங்களுக்குத் தெரியாதா?
எனக்கும் தலை தான் பிடித்த மனிதர். அவர் நல்ல குணங்களைப் படம் பிடித்துக் காட்டும் அந்த மனிதருக்கும், அதை இங்கே ஒளி பரப்பிய தங்களுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள்.
பல் சுவை பதிவுக்கு நன்றிங்க...உங்க ஸ்டைல் அப்படி இருக்கு போல!..நீங்க ஒரு பிரபலம்ங்கரதால(!) அப்படி நெனைக்கிறாங்க போல...விடுங்க உங்க அளவுக்கு யாருக்கு இங்க தில் இருக்கு(!)....பாருங்க கடைசில ஒரு ஷொட்டு வச்சி இருக்கீங்க...நடக்கட்டும் நன்றி!
கொலை காரா பாட்டு கொஞ்ச நாள் முன்னாடியே நீங்க பகிர்ந்த ஞாபகம். ரொம்ப நாளா பதிவு ஒன்னும் காணுமேன்னு பார்த்தேன். தொடருங்கள்
தல பற்றிய காணொளி எங்க ஆஃபிஸ் ஃபயர் வால் புண்ணியத்துல பார்க்க முடியல தல... அதோட you tube லிங்க் கொடுத்தீங்கன்னா ஏதாவது ப்ராக்ஸி யூஸ் பண்ணி நானும் பாத்துக்கிடுவேன்...
ரஜினி பிறந்த நாளுக்கு உங்களிடம் இருந்து தனி பதிவு ஒன்று எதிர்பார்த்தேன்...
அடங்கப்பா மனசுக்குள்ள பலே பாண்டியா சிவாஜி கணேசன்னு நெனப்பு...!///
.
.
சரி உடுங்க தனுசு போல நடிக்க முடியமா எவனாலும்?ஆஸ்கர் விருது வாங்க போறார் சீக்கிரமே!படுக்கைய்ல் fart செய்ததால் ஆஸ்கர் விருது நிச்சயமாம்!ஏற்கெனவே நடு ரோட்டில் லுங்கியை தூக்கி காட்டி ஆடியதுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
*
*
*
திரும்பத் திரும்ப தலபுராணம் பாடுவது எனக்கே கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. ///..
.
.
கொசு தனுசை தவிர எவன் புராணம் வேணும்னாலும் பாடு!
அந்த பொன்மொழி இருக்கே...அங்க நிக்கறீங்க நீங்க!
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கொலகாரா... கொலகாரி... என்று கொலவெறி ஏதுமில்லாத ஒரு ரம்மியமான பாடல்///
.
.
யோவ எத்தன தபா இதே பாட்டை பத்தி எழுதுவ?போரடிக்குது!
*
*
தல பத்தி எழுதி போரடிக்குதா?எங்களுக்கு எப்படி இருக்கும் பாத்துக்க!
எங்க தலைவர் பிரசாந்த் பத்தி தப்பா எழுதிருக்கே!மன்னிப்பு கேள்!இல்லன்னா விளைவுகள் மோசமா இருக்கும்!
@ ஷர்மி
// நீங்க ஆள்தோட்ட பூபதின்னு இவைங்களுக்குத் தெரியாதா? //
அவர் யாரு மேடம்... லிங்க் இருந்தா கொடுங்க... படிக்கிறேன்...
@ விக்கியுலகம்
// நீங்க ஒரு பிரபலம்ங்கரதால(!) அப்படி நெனைக்கிறாங்க போல... //
பிரபலம்ங்கிரதால நினைக்கிறாங்கன்னு நியாயப்படி லக்கி, ஜாக்கி, விக்கி (!) போன்ற "க்கி" பதிவர்களைத் தானே சந்தேகப்படனும்... மேட்டர் அதில்ல, படிக்கிற பதிவுக்கெல்லாம் சூப்பர், நன்று, ஹி ஹி பகிர்வுக்கு நன்றி மாப்ள (!), சவுக்கடி பதிவு, சவுக்கார்பேட்டை பதிவுன்னு பின்னோட்டம் போட்டுட்டு வந்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது....
// விடுங்க உங்க அளவுக்கு யாருக்கு இங்க தில் இருக்கு(!).... //
அடிக்கடி சொல்றீங்களே... என்னா மேட்டர்...
@ மோகன் குமார்
// கொலை காரா பாட்டு கொஞ்ச நாள் முன்னாடியே நீங்க பகிர்ந்த ஞாபகம். //
ஆமாம் தல... நீங்க சொன்னதும் தான் ஞாபகம் வருது... கடந்த ஒயின்ஷாப் பதிவிலேயே போட்டிருந்தேன்...
@ "ராஜா"
// தல பற்றிய காணொளி எங்க ஆஃபிஸ் ஃபயர் வால் புண்ணியத்துல பார்க்க முடியல தல... அதோட you tube லிங்க் கொடுத்தீங்கன்னா ஏதாவது ப்ராக்ஸி யூஸ் பண்ணி நானும் பாத்துக்கிடுவேன்... //
அடுத்தமுறைல இருந்து தர்றேன்...
// ரஜினி பிறந்த நாளுக்கு உங்களிடம் இருந்து தனி பதிவு ஒன்று எதிர்பார்த்தேன்... //
உள்ளே போ... உள்ளே போ...
@ வடக்குபட்டி ராம்சாமி
// சரி உடுங்க தனுசு போல நடிக்க முடியமா எவனாலும்?ஆஸ்கர் விருது வாங்க போறார் சீக்கிரமே!படுக்கைய்ல் fart செய்ததால் ஆஸ்கர் விருது நிச்சயமாம்!ஏற்கெனவே நடு ரோட்டில் லுங்கியை தூக்கி காட்டி ஆடியதுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது! //
என்ன நான் கரணையும் அஜித்தையும் பத்தி எழுதுனா நீங்க தனுஷை போட்டு இந்த கிழி கிழிக்கிறீங்க... ஏன் இந்த கொலவெறி...???
@ ! சிவகுமார் !
// அந்த பொன்மொழி இருக்கே...அங்க நிக்கறீங்க நீங்க! //
எல்லாம் ஒரு சமாளிஃபிகேஷன் தான்... ஒரு பொன்மொழி புத்தகம் கிடைச்சிருக்கு... இனி வாராவாரம் நீங்க செத்தீங்க...
@ மனித புத்திரன்
// யோவ எத்தன தபா இதே பாட்டை பத்தி எழுதுவ?போரடிக்குது!
*
*
தல பத்தி எழுதி போரடிக்குதா?எங்களுக்கு எப்படி இருக்கும் பாத்துக்க! //
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா... அதேசமயம் இந்த அளவிற்கு என்னை கூர்ந்து படிக்கிறீர்கள் என்று நினைக்கும்போது புல்லரிக்கிறது... நன்றி...
@ ராஜராஜன்
// எங்க தலைவர் பிரசாந்த் பத்தி தப்பா எழுதிருக்கே!மன்னிப்பு கேள்!இல்லன்னா விளைவுகள் மோசமா இருக்கும்! //
உங்க தலைவரைப் பத்தி நான் எதுவும் எழுதலை... பதிவை ஒழுங்கா படிங்க...
\\கடந்த வாரம் காரில் சென்றுக்கொண்டிருந்த அப்பாவி இளைஞர் ஒருவரை மூன்று இளம்பெண்கள் மடக்கி அவருடன் வலுக்கட்டாயமாக உறவுகொண்டு அவரது விந்தினை ஆணுறையில் சேமித்துக்கொண்டு சென்றார்களாம்.\\ கண்ணா மூணு லட்டு திங்க ஆசையா!!
\\ஜிம்பாப்வேயில் ஆங்காங்கே அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றதாம்.\\ ம்ம்மம்மம்ம்ம்ம்..... [அந்த ஊர் ஆண்களை நினைச்சு பெருமூச்சுதான் விடமுடியும். ஹா..ஹா..ஹா...]
\\உள்ளே சென்றதும் ஆளாளுக்கு என்னை பார்க்காதே, என்கிட்ட வராதேன்னு தவிக்கிறார்கள்.\\ அப்பப்போ Sun Glass போட்டுக்கினு ஆபீஸ் போ மச்சி. இந்த மாதிரி சமயத்துல உதவும்.
\\ஆனால் யாருடன் சாட்டுக்கு போனாலும் “உண்மையைச் சொல்லு... நீ தானே மங்காத்தா... நீ தானே புரட்சிக்காரன்...” என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள்.\\ பேரு, போட்டோ, அட்ரஸ், போன் நம்பர்........ இத்தனையும் கொடுத்த பின்னரும் "கோடு போட்ட டவுசர்", நரி, புலி என்ற போலி பேர்ல வரும் டுபாக்கூருங்க இந்த பாடு படுத்துதுங்களா....
\\எனக்கோ உள்ளூர ஒரு எண்ணம் சச்சின் சாதனை முறியடிக்கப் படக்கூடாதென்று. கடைசியில் அது நடந்தேவிட்டது. ப்ச்... வடை போச்சே...!\\ சாதனை எனபதே முறியடிக்கப் படத்தானே மச்சி!!
\\எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் ஜஸ்ட் லைக் தட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லைன்னு சொல்லிடுவாங்க ரசிகர்கள். பாடலின் மீதுள்ள எதிர்பார்ப்பு. \\ இதை நானும் எதிர்பார்த்தேன். அந்த அளவுக்கு இது ஹிட் ஆயிடுச்சு!!
\\ரஜினி ஜோக்:\\ ரஜினி ரசிகர்கள் இதைப் படித்தால் ...... will be very upset.... ஹா..ஹா...ஹா...
பல்சுவையாக கலக்கி இருக்கீங்க வாழ்த்துக்கள், நீங்கள் ரசித்த போட்டோவை நானும் ரசித்தேன்...!!!
இந்த வார சரக்கு சூப்பர் பிரபா. பகிர்வுக்கு நன்றி.
http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html
நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001
அனைத்தையும் ரசித்துப்படித்தேன்.
சூப்பர் ஸ்டார் ஜோக் சூப்பர்.
ஹா ஹா ஹா.உங்க ரிப்ளை படிச்சு செம காமெடி!!!சமயம் கிடைக்கும்போது அவனை போட்டு தாக்க வேண்டியதுதான்!சமயம் கிடைக்கலைன்னா நாங்களே உருவாக்கிகுவோமில்ல!
//எனக்கோ உள்ளூர ஒரு எண்ணம் சச்சின் சாதனை முறியடிக்கப் படக்கூடாதென்று. கடைசியில் அது நடந்தேவிட்டது// ஏன் பாஸ் இந்த கொலைவெறி
ஜொள்ளு பழசு ஏன்
@Philosophy Prabhakaran
கண் சிவந்து இருந்தா இன்னொரு நாள் மானேஜர் லீவு குடுப்பாரா?
ரஜினி ஜோக் சூப்பர்.
Kalakkal Sago. Vasagar Viruppam mattera naan innum marakkala. Sorry for delay. I am very busy with my duty. Just wait for few days.
என்ன பார்வை உந்த பார்வை.கலக்கல் போட்டோ!
@ Jayadev Das
// அந்த ஊர் ஆண்களை நினைச்சு பெருமூச்சுதான் விடமுடியும். ஹா..ஹா..ஹா... //
சார் இதெல்லாம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கும்... ஆனா ஒரு லெவலுக்கு அப்புறம் யாரா இருந்தாலும் ரத்தம்தான் வரும்... Be Careful...
// அப்பப்போ Sun Glass போட்டுக்கினு ஆபீஸ் போ மச்சி. இந்த மாதிரி சமயத்துல உதவும். //
அப்படின்னா என் கீ-போர்டுல கை வைக்காத... அந்த கிளாஸ்ல தண்ணி குடிக்காதன்னு சொல்வாங்களே... அதுக்கெல்லாம் என்ன பண்றது...
// சாதனை எனபதே முறியடிக்கப் படத்தானே மச்சி!! //
இது சாதா சாதனை அல்ல... சச்சின் சாதனை...
// ரஜினி ரசிகர்கள் இதைப் படித்தால் ...... will be very upset.... ஹா..ஹா...ஹா... //
Actually, அந்த ஜோக்கில் ரஜினியை கலாய்க்கவே இல்லை... மனைவிகளைத் தான் கலாய்த்திருக்கிறார்கள்...
நாம் சைட் அடிப்பது தெரிஞ்சதும் அழகான பொண்ணுங்க வெட்கப்படுது ...சுமாரான பொண்ணுங்க பந்தா காமிக்குது .. #கன்பீசிங் கேள்ஸ்
>>
இந்த பொண்ணுங்களேஏ இப்படிதான் குத்துங்க எஜமான் குத்துங்க
@ நாய் சேகர்
// நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001 //
படிச்சேன் தலைவரே... அன்புக்கு நன்றி...
@ சி.பிரேம் குமார்
// ஜொள்ளு பழசு ஏன் //
இதுவே பழசுன்னா நான் டி,ஆர்,ராஜகுமாரி, எம்.என்.ராஜம் ஸ்டில் எல்லாம் போட்டா என்ன சொல்லுவீங்க...
@ அப்பு
// கண் சிவந்து இருந்தா இன்னொரு நாள் மானேஜர் லீவு குடுப்பாரா? //
கண்டிப்பா கொடுப்பார்... ஆனால் கொடுத்த லீவுக்கெல்லாம் சேர்த்துவைத்து ஒருநாள் ரிவீட் அடிப்பார்...
@ துரைடேனியல்
// Vasagar Viruppam mattera naan innum marakkala. Sorry for delay. I am very busy with my duty. Just wait for few days. //
நானும் மறக்கலை... பொழப்பு தான் முக்கியம்... பொறுமையா முடிச்சிட்டு அருமையா எழுதுங்க...
good..'ஜொள்ளு' பகுதியை மட்டும் இனிமேல் நீக்கிவிடவும்
Post a Comment