31 January 2011

பிரபா ஒயின்ஷாப் – 31012011


வணக்கம் மக்களே...

பலத்த எதிர்(பார்)ப்புகளுக்கு மத்தியில் பிரபா ஒயின்ஷாப் தனது பயணத்தை துவங்குகிறது.

டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்கான குரல் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆளாளுக்கு தங்கள் பங்குக்கு டுவீட்டுகளை பொழிந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவற்றில் நான் ரசித்த டுவீட்டுக்கள் சில...

ஐந்து இலட்சமும் வேலையும் தர நாங்க தயார்.கடலில் மீன் பிடிக்க அரசியல்வாதிகள் தயாரா.? #TNfisherman

>>> ஆஸ்திரேலியாவில் மேல்தட்டு மாணவன் அடிபட்டால் அலறும் அரசே, ஆங்கில செய்தி சேனல்களே!! மீனவன் மடிகையில் எதை புடுங்கி கொண்டு இருந்தீர்கள்!!

"பொறுத்தது போதும்! பொங்கி எழு!" இது யார் எழுதிய வசனம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? #tnfisherman

ஸ்பெக்ட்ரம் மறந்துவிட்டது # இப்ப தெரியுதா எதுக்கு இவனுகள எதுக்கு கொல்லச் சொன்னேன்னு - கருணாநிதி # ஐடியா உபயம் நீரா ராடியா #tnfisherman

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் நுங்கம்பாக்கம் விஜய் டிவி அலுவலகம் முன்பு ஒரு சாலை விபத்து. சைக்கிளில் வந்த ஒரு நடுத்தர வயது ஆண், வேகமாக வந்த ஒரு லாரி டயரின் அடியில் சிக்கினார். பலத்த காயத்தோடும், வழியும் ரத்ததோடும் அடிபட்ட நபர் எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் சொன்ன வாக்கியம், ஆள் அவுட்டா.... அரை மயக்க நிலையில், அடிபட்ட நிலையில் உள்ள ஒருவரின் காதில் இது போன்ற வார்த்தைகள் தான் விழ வேண்டுமா...? இப்படி ஒரு வார்த்தையை கேட்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா...? உதவ முடியவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமே...

ரசிக்க வைத்த புகைப்படம்:
தீபாவளி இரவில் சாட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட இந்தியாவின் புகைப்படம்...

வலைப்பூ அறிமுகம்: கொக்கரக்கோ...
மயிலாடுதுறையை சேர்ந்த பதிவர். இந்த மாதம் தான் பதிவுலகிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது வரை பன்னிரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார். அரசியலை நையாண்டி செய்து பதிவெழுதுவதில் வல்லவர். சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும் என்று நக்கலடித்து அருமையாக ஒரு பதிவு எழுதியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் சென்று பாருங்கள்.

எனக்குப் பிடித்த பாடல்:
போன வாரம் முழுவதும் முனுமுனக்க வைத்த பாடல் ஆடுகளம் படத்திலிருந்து ஒத்தச் சொல்லால... எனும் பாடல். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் ஹிட் என்பது தெரிந்த விஷயமே. இப்போது பாடலை படமாக்கிய விதத்திற்காக மேலும் ரசிக்கப்படுகிறது. கும்மாங்குத்தையும் நாட்டுப்புற இசையையும் கலந்த ஒரு பாடல். எப்பேற்பட்ட மனிதனாக இருந்தாலும் ஒரு ஆட்டு ஆட்டிவைக்கும் இசை. எனது வகுப்பில் படிக்கும் நவநாகரிக இளைஞர்கள் இருவர் இந்தப்பாடலை பார்த்தபிறகு லுங்கி (கைலி) வாங்க முன்வந்திருக்கிறார்கள். எதற்கா...? வரிந்துகட்டிக்கொண்டு ஆடத்தான்...

இந்த வார பிலாசபி:
“Take lot of time to improve yourself… Then, obviously there will be no time to criticize others…”
-          Kamalhasan

இந்த வார எஸ்.எம்.எஸ்.:
ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் வருதுன்னு தெரியுமா...?
:
:
:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை ஜப்பான் சென்றிருந்தபோது தனது மொபைலை வைப்ரேஷனில் வைத்தபடி அங்கேயே விட்டுட்டு வந்துட்டாராம்...

நீதி: ச்சும்மா அதிருதுல்ல....இந்த வார காணொளி:
கட்டழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையை பற்றி பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைகழக மாணவர்கள் செய்த ஒரு சிறிய நகைச்சுவையான ஆராய்ச்சி...


18+
தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா உட்பட மற்றும் பல சகோதரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

73 comments:

எல் கே said...

//18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

வரவேற்கிறேன்

Unknown said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு நண்பரே

வாழ்த்துக்கள்

Unknown said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு நண்பரே

வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

இந்தியா ஃபோட்டோ அருமை..ஆள் அவுட்டா கமெண்ட் ஓவர்.. பாவம் அந்தாளு..

மீனவ ட்விட்டர்கள் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

>>>தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா

3 பேருக்கும் எனது கண்டனங்கள் ஹா ஹ ஹா

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்னைக்கும் நமக்குத்தான் கட்டிங்கா?

ரஹீம் கஸ்ஸாலி said...

காக்டெயிலா கொடுத்து கலக்கிட்டீங்க பிரபா...

pichaikaaran said...

என் கருத்துக்களைவிட மெட்ராஸ் பவன் சிவகுமார் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் . ஏன் இந்த ஓர வஞ்சனை ?

மாணவன் said...

நல்லாயிருக்கு நண்பரே,

தொடருங்கள்.....

வைகை said...

நல்ல தொடக்கம்.....இன்னும் மெருகேற்றுங்கள்,

க ரா said...

மிகஸிங் சூப்பர் :)

settaikkaran said...

//தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா உட்பட மற்றும் பல சகோதரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

Hats off to them & to YOU

Jackiesekar said...

பிரபாஒயின்ஷாப் நிறைய சரக்கு அடித்து விட்டு கொத்து போடாமல் அளவாய் சான்ட்வெஜ் சாப்பிட்டு விட்டு கமுக்கமாய் இருந்து பெயர் எடுக்க வாழ்த்துக்கள்...

இரவு நேர இந்திய சேட்டிலைட் போட்டோவை நான் ரசித்தேன்..

பாலா said...

ஆரம்பமே கிக்காத்தான் இருக்கு...

டுவீட்டுகள் சூப்பர்.

Prabu M said...

துவக்கவிழா அருமை பிரபா... :)

//18+
தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா உட்பட மற்றும் பல சகோதரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

ரொம்ப நல்ல விஷயம்..... வாழ்த்துக்கள் நண்பா...

இந்திய தீபாவளி ஃபோட்டோ அருமை...

ட்வீட்டுகள் ஷார்ப்...

கிளியோபாட்ரா காணொளி புதுமை...

ரஜினி ஜோக் ஏற்கெனவே கேட்டதுதான்....
(மும்பையில் தமிழ்ப்படங்களை மிகவும் கேவலமாக நினைத்துக்கொண்டு ரஜினி ஜோக்ஸ் அது இது என்று பரப்புகிறார்கள்.... (சிவாஜி,ரோபோ வெற்றியின் ஆற்றாமை) நம்மளும் அதையே செய்யணுமா??)


பிலாச‌ஃபி பிர‌பாக‌ர‌னின் ஒயின்ஷாப்பில் இம்போர்ட‌ட் ஃபிலாச‌ஃபியா?!! அடுத்த‌ வார‌ம் உங்க‌ ஃபிலாச‌ஃபியையும் சேர்த்துக் கொடுக்க‌வும்!! :)

ந‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம் ந‌ண்பா... க‌ல‌க்குங்க‌....

செங்கோவி said...

அளவாக நச் என்று ஊற்றியுள்ளீர்கள்..நன்றி..

Chitra said...

கலக்கல்! களை கட்டியிருச்சு! Super!!!!

KEEP ROCKING!!!

Ponchandar said...

நிறைய குடிமகன்கள் ப்ரபா ஒயின் ஷாப்-பில் ப்யனடைய வாழ்த்துகிறேன்....வ்ந்தாச்சு ஒரு கட்டிங் போட்டாச்சு......

Speed Master said...

அருமை தொடர்ந்து எழுதுங்கள்

////18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

பாரட்டுக்கள்

சக்தி கல்வி மையம் said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு நண்பரே
வாழ்த்துக்கள் ...

Unknown said...

என்னது 18 + சமாச்சாரம் இல்லியா ? ம்ம்ம்ம்ம்ம் வருத்தத்துடன் ஏற்றுகொள்கிறேன்

Unknown said...

அந்த தீபாவளி சாட்டிலைட் புகைப்படம் நல்லா இருக்கு

Thirumalai Kandasami said...

//18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

I appreciate.

ராஜகோபால் said...

தீபாவளி புகைப்படம் அருமை

Unknown said...

சூப்பர் மிழ்சிங்! (மிக்சிங்) வாழ்த்துக்கள்! :-)

அஞ்சா சிங்கம் said...

கலக்கல் காக்டெயில் ..................

மிக்சிங் சரியா இருந்தா ஓகே .........
ராவா மட்டும் ஊத்திடாதீங்க ................

Anonymous said...

என் வலைத்தளத்தைப் பற்றி தங்கள் தளத்தில் எழுதியதற்காக நன்றியும், நல்லவிதமாக எழுதியதற்கு மிக்க நன்றியும்! கூறு(வு)கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு.

ஜி.ராஜ்மோகன் said...

ஒரு க்வாட்டரும் கட்டிங்கும் சாப்பிட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்

ஜி.ராஜ்மோகன் said...

ஒரு க்வாட்டரும் கட்டிங்கும் சாப்பிட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்

ஆதவா said...

நல்ல துவக்கம். கலந்து கட்டி அடிக்கிரீங்க, 18 + இல்லாட்டி என்னங்க -18 க்குள்ள வரமாதிரி நல்ல ஜோக்ஸ் சொல்லலாமே??? தீபாவளி இரவு இந்தியா உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது 18+ இல்லியா? சரி சரி, அப்போ 28+ ஆவது போடுங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////18+தம்பி கூர்மதியான், மெட்ராஸ் பவன் சிவகுமார், சித்ராக்கா உட்பட மற்றும் பல சகோதரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 18+ சமாச்சாரம் எனது இடுகையில் இடம் பெறாது என்பதை கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//////

கொஞ்ச நஞ்ச வருத்தமா இது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

18+ இல்லேன்னாலும் காக்டெயில் கிக்காவே இருக்கு... !

எப்பூடி.. said...

முதல் கட்டிங் நல்லாயிருக்கு, அடுத்தடுத்த கட்டிங்குகள் சிறக்க வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அசத்தலாக இருக்கு நண்பரே! கமலின் சிந்தனை சூப்பர்!!

வந்தியத்தேவன் said...

நல்ல காக்டெயில்.
இந்தியா ஒளிர்கின்றது.
இனி எப்போ கடை திறப்பீர்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

kalakkal!

எஸ்.கே said...

நல்லா தொகுத்திருக்கீங்க! தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

Pari T Moorthy said...

வாழ்த்துக்கள் பிரபா...குறிப்பாக 18+ முடிவிற்காக....

Anonymous said...

“Take lot of time to improve yourself… Then, obviously there will be no time to criticize others…”

>>> கமல் சொன்னா ரைட்டு!!

Anonymous said...

>>> கடை செம கல்லா கட்ட வாழ்த்துகள். என்னை கூட மதிச்சி அடிக்கடி எழுதுறீங்க, எனக்கு வெக்க வெக்கமா வருது.

Anonymous said...

பார்வையாளன் said..
// என் கருத்துக்களைவிட மெட்ராஸ் பவன் சிவகுமார் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் . ஏன் இந்த ஓர வஞ்சனை ? //

>>> அதானே, யார் இந்த மெட்ராஸ்பவன் சிவகுமார்? ராஸ்கல்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒயின் ஷாப் சும்மா கலக்கலா எல்லாவித சரக்குகளையும் கலந்து வச்சிருக்கிங்க. அடுத்த கடைய எப்போ தோறப்பிங்க

Ram said...

அந்த விபத்த வேடிக்கை மட்டும் பாத்துட்டு வந்துட்டீங்களா பிரபா.???

மத்ததெல்லாம் ஓ.கே.,

வரலாறு பற்றி கேட்டிருந்தேனே.!! இணைக்கவில்லையா.???

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலக்கல்... தொடரட்டும் வாழ்த்துக்கள்..

Murugavel said...

தீபாவளி போட்டோவில் கெரகம் புடிச்ச கேரளா மட்டும் இருட்டா தெரியுதே ஏன் தெரியுமா, அவனுக இந்தியாவிலேயே அழுக்கு புடிச்ச மனசு பசங்க, மொத்த இந்தியாவும் தீபாவளி கொண்டாடும்போது இவணுக மட்டும் தனியா இருப்பானுஙக‌

நிகழ்காலத்தில்... said...

தீபாவளி இந்தியா போட்டோ அருமை

எம் அப்துல் காதர் said...

பிரபா ஒயின் ஷாப்பில் கலக்கல் அருமை!

விட்டா 18 வேணாம் விட்டா 28 வேணாம் என்று சொன்னா, பின்ன என்ன தான் போடுவீங்க பாஸ்!! 81-வது ஹி..ஹி..

ரொம்ப படுத்தாதீங்க!!

கவிதை பூக்கள் பாலா said...

மிகஸிங் அருமை , மயக்கம் போட்டு வாந்தி எடுக்காத அளவுக்கு சரக்கு
நல்லாயிருக்கு நண்பரே

கார்த்தி said...

தீபாவாளி சட்டிலைட் படம் சுப்பர்! எனக்கும் ஒத்த சொல்லாலேயில் தனுஸ் ஆடிய ஆட்டத்த பாத்த பிறகு மேலும் அந்த பாடல் பிடித்துப்போனது!
இன்னும் இந்தியஅரவியல்வாதிகளை நம்பியிருந்தால் மீனவர்களின் வாழ்வு தொடர்ந்து கேள்விக்குறிதான்

Philosophy Prabhakaran said...

@ எல் கே, சி.பி.செந்தில்குமார், விக்கி உலகம், ரஹீம் கஸாலி, பார்வையாளன், மாணவன், வைகை, இராமசாமி, சேட்டைக்காரன், ஜாக்கி சேகர், பாலா, பிரபு எம், செங்கோவி, Chitra, Ponchandar, Speed Master, sakthistudycentre-கருன், நா.மணிவண்ணன், Thirumalai Kandasami, ராஜகோபால், ஜீ..., அஞ்சா சிங்கம், கொக்கரகோ..., சே.குமார், ஜி.ராஜ்மோகன், ஆதவா, Samudra, பன்னிக்குட்டி ராம்சாமி, எப்பூடி.., மாத்தி யோசி, வந்தியத்தேவன், எஸ்.கே, ! சிவகுமார் !, தமிழ்வாசி - Prakash, தம்பி கூர்மதியன், தோழி பிரஷா, Murugavel, நிகழ்காலத்தில்..., எம் அப்துல் காதர், bala, கார்த்தி

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் தவறாமல் கடைக்கு வந்து உங்கள் பேராதரவை தர வேண்டுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// என் கருத்துக்களைவிட மெட்ராஸ் பவன் சிவகுமார் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் . ஏன் இந்த ஓர வஞ்சனை ? //

நாங்க ரெண்டு பேரும் யூத்து என்பது கூட காரணமாக இருக்கலாம் :)

Philosophy Prabhakaran said...

@ ஜாக்கி சேகர்
// கொத்து போடாமல் அளவாய் சான்ட்வெஜ் சாப்பிட்டு //

ஜாக்கிஜி... இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்...? ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே...

Philosophy Prabhakaran said...

@ பிரபு எம்
// ரஜினி ஜோக் ஏற்கெனவே கேட்டதுதான்....
(மும்பையில் தமிழ்ப்படங்களை மிகவும் கேவலமாக நினைத்துக்கொண்டு ரஜினி ஜோக்ஸ் அது இது என்று பரப்புகிறார்கள்.... (சிவாஜி,ரோபோ வெற்றியின் ஆற்றாமை) நம்மளும் அதையே செய்யணுமா??) //

என்ன சொல்றீங்க...? தலைவரை பெருமைப்படுத்தும் ஜோக் தானே அது...

// பிலாச‌ஃபி பிர‌பாக‌ர‌னின் ஒயின்ஷாப்பில் இம்போர்ட‌ட் ஃபிலாச‌ஃபியா?!! அடுத்த‌ வார‌ம் உங்க‌ ஃபிலாச‌ஃபியையும் சேர்த்துக் கொடுக்க‌வும்!! :) //

சுட்ட பிலாசபிக்குத்தான் கிக்கு அதிகம்...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// சூப்பர் மிழ்சிங்! (மிக்சிங்) வாழ்த்துக்கள்! :-) //

என பாஸ்... வாய் குளறுது... ஹேய்... ஹேய்... பேசிக்கிட்டிருக்கும்போது ஹாப் பாயில் எல்லாம் போடக்கூடாது...

Philosophy Prabhakaran said...

@ கொக்கரகோ...
// கூறு(வு)கிறேன் //

அடடா... என்ன ஒரு கிரியேட்டிவிட்டி... நல்ல கூவுங்க...

Philosophy Prabhakaran said...

@ ஜி.ராஜ்மோகன்
// ஒரு க்வாட்டரும் கட்டிங்கும் சாப்பிட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள் //

அதை ஏன் திரும்பத்திரும்ப சொல்றீங்க தலைவா... போதை ஏறிடுச்சா...?

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// 18 + இல்லாட்டி என்னங்க -18 க்குள்ள வரமாதிரி நல்ல ஜோக்ஸ் சொல்லலாமே??? //

நல்ல யோசனைதான்... ஆனா, நான் எழுதுற ஜோக்குக்கு சிரிப்பு வருமா வராதான்னு ஒரு சந்தேகம்... அடுத்த வாரம் முயற்சி செய்கிறேன்...

// தீபாவளி இரவு இந்தியா உண்மையா? //

ஆமாம்... உண்மையேதான்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// என்னது 18+ இல்லியா? சரி சரி, அப்போ 28+ ஆவது போடுங்கப்பு! //

இந்த + சமாச்சாரமே நமக்கு வேணாம்ப்பா...

// கொஞ்ச நஞ்ச வருத்தமா இது.....? //

ஐயோ... see the feelings, great the feelings...

Philosophy Prabhakaran said...

@ வந்தியத்தேவன்
// இனி எப்போ கடை திறப்பீர்கள். //

ஒவ்வொரு திங்கட்கிழமையும் கடை திறக்கப்படும்...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// என்னை கூட மதிச்சி அடிக்கடி எழுதுறீங்க //

நண்பேன்டா...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி - Prakash
// அடுத்த கடைய எப்போ தோறப்பிங்க //

ஒவ்வொரு திங்கட்கிழமையும் கடை திறக்கப்படும்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// அந்த விபத்த வேடிக்கை மட்டும் பாத்துட்டு வந்துட்டீங்களா பிரபா.??? //

களப்பணி எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தேன் என்றாலும் அந்த நபரை ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் செல்லும் வரையில் அங்கேயே தான் நின்றிருந்தேன்...

// வரலாறு பற்றி கேட்டிருந்தேனே.!! இணைக்கவில்லையா.??? //

கிளியோபாட்ரா வீடியோ பார்க்கவில்லையா... ஆனாலும் அது வரலாறு என்று திட்டமிட்டு இணைக்கவில்லை... எதேச்சையாக அமைந்தது...

Philosophy Prabhakaran said...

@ Murugavel
// தீபாவளி போட்டோவில் கெரகம் புடிச்ச கேரளா மட்டும் இருட்டா தெரியுதே ஏன் தெரியுமா, அவனுக இந்தியாவிலேயே அழுக்கு புடிச்ச மனசு பசங்க, மொத்த இந்தியாவும் தீபாவளி கொண்டாடும்போது இவணுக மட்டும் தனியா இருப்பானுஙக‌ //

உங்கள் பின்னூட்டத்தை ஒருவித தயக்கத்துடனேயே வெளியிட்டேன்... முடிந்தவரைக்கும் மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் கமெண்டலாமே...

Philosophy Prabhakaran said...

@ எம் அப்துல் காதர்
// விட்டா 18 வேணாம் விட்டா 28 வேணாம் என்று சொன்னா, பின்ன என்ன தான் போடுவீங்க பாஸ்!! 81-வது ஹி..ஹி.. //

ஆணியே புடுங்க வேணாம்...

டக்கால்டி said...

Kick...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice summary of facts and thoughts... informative too... thanks

aavee said...

சூப்பரப்பு !!!

vanathy said...

எல்லாமே அருமை. இந்தியப் படம் அழகா இருக்கு.

jayaramprakash said...

congrats prabha.

Unknown said...

நல்ல தொடக்கம்...

Anonymous said...

[url=http://www.christianlouboutintosale.co.uk]christian louboutin outlet online[/url] Mili. [url=http://www.vanesabrunosacparis.fr/]vanessa bruno athe[/url] Uwvgbvubi [url=http://www.oakleysunglassessforcheap.com/]oakley sunglass stores[/url]
lboiuc 894910 [url=http://www.oakleyssunglassessoutlet.com/]sunglass oakley[/url] 553289 [url=http://www.cheapsoakleysunglassess.com/]http://www.cheapsoakleysunglassess.com/[/url]