28 January 2011

விண்ணைத்தாண்டி வருவாயா – 500 Days of Summer


வணக்கம் மக்களே...

நீண்ட நாட்களுக்கு முன்பே பதிவிறக்கிய படம். கடந்த வாரக்கடைசியில்தான் முழுமையாக பார்க்க முடிந்தது. இந்த படத்தின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கோடைக்காலத்தில் ஒரு 500 நாட்கள் என்று நானே முட்டாள்த்தனமாக தமிழ்ப்படுத்தி வைத்திருந்தேன். அதெப்படி 500 நாட்கள் தொடர்ந்து கோடைக்காலம் வரும் என்றுகூட யோசிக்கவில்லை. படம் பார்த்தபிறகுதான் சம்மர் என்பது நாயகியின் கேரக்டர் பெயர் என்று புரிந்துக்கொண்டேன். இன்னொரு விஷயம், இந்தப்படம் நம்ம கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து உருவப்பட்ட கதை. அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க. நம்மாளுங்க தான் அங்க இருந்து சுட்டு தமிழ்ப்படுத்தி இருக்காங்க.

-          Title: (500) Days of Summer
-          TagLine: This is not a love story. This is a story about love.
-          Country: United States
-          Language: English
-          Year: 2009
-          Genre: Romance, Drama
-          Cast: Joseph Gordon-Levitt, Zooey Deschanel, Minka Kelly
-          Director: Marc Webb
-          Producer: Mason Novick, Jessica Tuchinsky, Mark Waters, Steven J. Wolfe
-          Music: Mychael Danna, Rob Simonsen
-          Cinematographer: Eric Steelberg
-          Editor: Alan Edward Bell
-          Length: 95 minutes

டாம் ஒரு ஆர்க்கிடக்ட், எனினும் வாழ்த்து அட்டைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அவனது அலுவலக பாஸின் பி.ஏவாக சேருகிறாள் சம்மர் எனும் இளம்பெண். டாமுக்கும் சம்மருக்கும் இடையே நடக்கும் 500 நாள் நிகழ்வுகளே கதை.

சந்தித்த சில நாட்களுக்குப் பின்பு ஒரு லிப்டுக்குள் முதல்முறையாக இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவளுக்கு பிடித்த அதே இசைக்கலைஞன் அவனுக்கும் பிடித்திருப்பதாக கூறுகிறாள். இரண்டு சந்திப்புகள் கடந்தபிறகு டாம், சம்மரை காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் அவளிடம் சொல்வதில் தயக்கம். பிறிதொரு நாளில் நடைபெறும் பாட்டுக்கச்சேரி பார்ட்டியில் டாமின் நண்பன் சம்மரிடம் அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் என்று போதையில் உளறிக் கொட்டுகிறான். அதன்பின் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது. அப்படி ஒருநாள் அவர்கள் நெருக்கமாக இருக்கும் வேளையில், தனக்கு காதல், கல்யாணம் போன்ற உறவுகளில் ஈடுபாடு இல்லையென்று சம்மர் கூறுகிறாள். தானொரு சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவதை குறிப்பிடுகிறார். அவர்கள் காதல் எனும் சொல்லை பரிமாறிக்கொள்ளவில்லை, இருப்பினும் காதலிக்கிறார்கள்.

நாட்கள் கடந்தபின்னர், அவர்களுக்குள் முதல்முறையாக வாக்குவாதம் ஏற்படுகிறது. சம்மர், காதல் சிறைக்குளிருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாகிறாள். கூடவே வேலையையும் துறக்கிறாள். அதன்பின்பு டாம் சந்திக்கும் மனப்போரட்டங்கள் சொல்லப்படுகிறது. மீண்டும் சம்மரை சந்திக்கும்போது அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது கண்டு டாம் துடிக்கிறான். அவனும் அவனது வாழ்த்து அட்டை நிறுவன வேலையை துறந்து ஆர்கிட்டக்டாக பணிபுரிய சில அலுவலகங்களில் விண்ணப்பிக்கிறான். 488வது நாளில் இருவரும் கடைசியாக அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். இருவரும் தத்தம் மீது தவறு இருப்பதை உணருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிந்துக்கொள்ளுணர்வு ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துவிட்டு இறுதியாக விடை பெறுகிறார்கள். 500வது நாளில் ஒரு நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள செல்லும் டாம், அங்கே அவளுக்கு போட்டியாக வந்திருக்கும் மற்றொரு பெண்ணை சந்திக்கிறான். அவளது பெயரை கேட்க, அவள் “Autumn” என்று சொல்வதுடன் படம் நிறைவடைகிறது. (அடுத்த சீசன் ஆரம்பிச்சிடுச்சாம்).

சாட்டிலைட் அவார்ட் உட்பட சில விருதுகளை வாங்கிய இந்த திரைப்படம் மேலும் பல விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. 2009 வெளிவந்த தலைசிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்று. அதே ஆண்டில் வெளிவந்த படத்தின் இசைத்தகடும் விற்பனையில் பல சாதனைகளை புரிந்தது.

உனக்கு எல்லாப்படத்திலும் செகன்ட் ஹீரோயின் தான் பிடிக்குமாடான்னு திட்டாதீங்க. அது என்னவோ தெரியல, இந்தப்படத்திலும் இறுதிக் காட்சியில் மட்டும் தலை காட்டும் மிங்கா கெல்லி எனும் நடிகை (தமிழில் சமந்தா நடித்தது போன்ற கேரக்டர்) அநியாயத்துக்கு மனதை கொள்ளையடித்தார். அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கலாம்.

படத்தின் சுவாரஸ்யங்கள் சில...
- டாமும் அவரது தங்கையும் வீடியோ கேமில் டென்னிஸ் விளையாடும்போது ஜாய்ஸ்டிக்கை டென்னிஸ் மட்டையைப் போல சுழற்றிக்கொண்டு விளையாடுவது.
- ஆங்காங்கே ஏற்ற இறக்கங்கள் காட்டும் கதாப்பாத்திரங்களின் டயலாக் டெலிவரி பிரமிக்க வைத்தது.
- நாயகன் பெண்களின் மட்டமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி கமென்ட்டடிக்கும் காட்சி.
- காதலிக்கும் போது காதலியிடம் பிடிப்பதாக நாயகன் கூறும் அதே விஷயங்களை அவளை விட்டு பிரிந்தபின்னர் வெறுக்க ஆரம்பிப்பது.
- எல்லாவற்றையும் விட முக்கியமாக, நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு நாயகியை நாயகன் சந்திக்கும்போது அவன் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருப்பது. (மேலே படம் பார்க்க...)

பதிவிறக்க லிங்குகள்:
டோரன்ட் லிங்க்: (500) Days of Summer DVD RIP
டைரக்ட் லிங்க்: (500) Days of Summer DVD RIP (400MB)
(இரண்டு பதிப்புகளிலும் சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுபோல மென்மையான காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கொண்ட உலகப்படங்கள் பார்க்கும்போது ஏனோ, மனதில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இத்தகைய படங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் சில இருக்கின்றன. மேலை நாட்டவர்கள் வாழ்க்கையை எவ்வளவு ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. காதலில் தோற்றால் வாழ்க்கையையே தொலைத்ததாக கருதுவது, தற்கொலை செய்து கொள்வது, ஏமாற்றிய காதலியை பழி வாங்குவது இதெல்லாம் நம்மூரிலும் நம்மூர் சினிமாக்களில் மட்டும்தான் போல...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

39 comments:

எப்பூடி.. said...

ஒலக சினிமாவா? நான் நெக்ஸ்டு மீட் பண்ணிக்கிறான்.

சுதர்ஷன் said...

இந்த தெலுங்கு சினிமா ..தன்னோட படத்தை தானே சுடுறது எல்லாத்தையும் விட இது நல்லம் . :) அந்த ஒரு இயக்குனர் தான் மணிக்கு பிறகு தமிழ்ல உருப்படியா பார்க்கிறேன் .. விடுங்க பாஸ் .. நிச்சயம் இந்த படம் பார்க்க கவேண்டும் ..பகிர்ந்தமைக்கு நன்றி .. :-)

pichaikaaran said...

இப்படிபட்ட நல்ல படங்களுக்கு மத்தியில் மன்மதன் அம்பு போன்ற படங்களை சிலர் போற்றுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்ல விண்ணைத்தாண்டிவருவாயா போட்டது கரெக்ட்டான்னு இன்னைக்கு நைட் தெரிஞ்சிடும்... ( என் கணிப்பு அது பார்வையாளர்களிடம் சஸ்பென்சை உடைத்தது போல் )

சி.பி.செந்தில்குமார் said...

>>>Blogger எப்பூடி.. said...

ஒலக சினிமாவா? நான் நெக்ஸ்டு மீட் பண்ணிக்கிறான்

செம நக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>அவர்கள் காதல் எனும் சொல்லை பரிமாறிக்கொள்ளவில்லை, இருப்பினும் காதலிக்கிறார்கள்.

எதேச்சையாக வந்த வரிக்ள் ஆனால் செம

சி.பி.செந்தில்குமார் said...

>>>உனக்கு எல்லாப்படத்திலும் செகன்ட் ஹீரோயின் தான் பிடிக்குமாடான்னு திட்டாதீங்க. அது என்னவோ தெரியல,

நான் திட்டலை.. ஏன்னா நானும் உங்களை மாதிரி தான் ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
- காதலிக்கும் போது காதலியிடம் பிடிப்பதாக நாயகன் கூறும் அதே விஷயங்களை அவளை விட்டு பிரிந்தபின்னர் வெறுக்க ஆரம்பிப்பது.

இந்த சீனுக்கு டைரக்டர் ரொம்ப மெனக்கெட்டிருப்பாரே..( நான் படம் பாக்கல)

ஆதி மனிதன் said...

//மேலை நாட்டவர்கள் வாழ்க்கையை எவ்வளவு ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது.//

அதனால்தானோ என்னவோ அவர்களின் சராசரி வாழும் வயது நம்மை விட அதிகம் போல். நாம் எல்லாத்துக்கும் கவலைபடுவோம். கவலைபடுவதையே ஒரு சந்தோசமான விசயமாகவும் எடுத்துக்கொள்வோம். அதுதான் பிரச்சனையே.

Chitra said...

மேலை நாட்டவர்கள் வாழ்க்கையை எவ்வளவு ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. காதலில் தோற்றால் வாழ்க்கையையே தொலைத்ததாக கருதுவது, தற்கொலை செய்து கொள்வது, ஏமாற்றிய காதலியை பழி வாங்குவது இதெல்லாம் நம்மூரிலும் நம்மூர் சினிமாக்களில் மட்டும்தான் போல...


.....விதிவிலக்குகள் இருந்தாலும், நீங்கள் சொல்வது உண்மைதான்.

ஜில்தண்ணி said...

பாத்துட்டு சொல்றன் :)

settaikkaran said...

நமக்கும் இங்கிலிபீசு படத்துக்கும் தோதுப்பட்டு வர்றதில்லே! (புரியுறதில்லேங்கிறது தான் உண்மை!). எனக்கு வி.தா.வ படமும் பெரிசா பிடிக்கலே! திரிஷா, ரஹ்மான் ரெண்டு பேரும் காப்பாத்துனாங்க! :-)

ஆதவா said...

இந்த படம் நான் லீனியர் முறைப்படி எடுக்கப்பட்டிருக்கும். என்றாலும் மக்களுக்கு ரொம்பவும் எளிதாக புரியும்படி இருக்கும்.. நீங்கள் இந்த படத்தையும் வி.தா.வ வையும் கம்பேர் செய்திருக்கலாம்!!!

//டாமும் அவரது தங்கையும் வீடியோ கேமில் டென்னிஸ் விளையாடும்போது ஜாய்ஸ்டிக்கை டென்னிஸ் மட்டையைப் போல சுழற்றிக்கொண்டு விளையாடுவது.-//

இது Wii என்று சொல்லப்படும் ஒரு கேம் ஸிஸ்டம். ரிமோட் போல இருக்கும். நமது அசைவுக்கு ஏற்ப சிக்னல் பெறப்பட்டு விளையாட்டு ஆடப்படும்!!

நல்ல படம்..

ரஹீம் கஸ்ஸாலி said...

பார்த்து கவுதம் மேனன் டெண்சனாகப் போறாரு

அன்பேசிவம் said...

ம்ம் உண்மைதான் குறிப்பா வி.தா.வவில் நல்ல காட்சியாக ஒத்துக்கொள்ளப்பட்ட பார்க் சீன், இந்த படத்தின் பாதிப்புதான்... வசனங்கள் கூட...

சமுத்ரா said...

உங்க ஒயின் ஷாப் என்ன ஆச்சு ?

சக்தி கல்வி மையம் said...

உங்க நேர்மை எனக்கு பிடித்து இருக்கு..

Speed Master said...

அருமையான விமர்சனம்
VTV பார்த்த பிறகு இந்த படத்தை பார்த்தேன்

நீங்கள் ஏதேனும் தொலைக்காட்சியில் சினி விமர்சகராக சேரலாம்

Umapathy said...

nalla irukku.

Jayadev Das said...

பிரபா, உங்களுக்கும் காதலிக்கும் வயது. நான் அதைத் தாண்டி வந்து விட்டேன். இருந்தாலும் காதல் பத்தி சில விஷயங்களை உங்களுக்கு தெரியப் படுத்தனும்னு நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Love என்று சொல்லும் இந்த வார்த்தையை நமது திரைப் படங்களும், சமுதாயமும், ஊடகங்களும் கொச்சைப் படுத்தி விட்டன. Love அப்படின்னா ஒரு ஆணும் பெண்ணும் புணர்வது சம்பந்தப் பட்டதுன்னு கேட்டா அர்த்தம் கர்ப்பித்து விட்டார்கள். இப்போ நன்பேண்டா என்று ஒருத்தரைச் சொல்கிறோம் என்றால் அதற்க்கு அர்த்தம், அவனிடத்தில் உள்ள குறை நிறைகள் அத்தனையும் தெரிந்திருந்தும் அவனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று யாரை நினைக்கிறோமோ அவனுக்கு மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும். இது ஒரு பெண்ணுக்கும் [அல்லது ஆணுக்கும்] பொருந்தும். ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்றால் எந்த நிலையிலும் அவள் மேல் வெறுப்பே வராது. ஆனால் திரைப் படங்களில் [சில சமயம் நிஜத்திலும்] தான் காதலிக்கும் ஒருத்தி தன்னை காதலிக்க மறுத்தால் ஒன்று அவள் முகத்தில் ஆசிட் ஊற்றுகிறார்கள், அல்லது அவள் நாசமாகப் போகட்டும் என்று எதையாவது செய்கிறார்கள். இது போலச் செய்தால் உண்மையில் அவன் அவளைக் காதலிக்கவே இல்லை என்றுதான் அர்த்தம். தன்னுடைய சுகத்திற்கு [திருமணம் செய்தாலும் அதேதானே] அவள் இணங்குவாளா என்று பார்ப்பதற்கு பெயர் காதல் அல்ல சுயநலம். மேலும் Love என்பது ஆண் பெண்ணுக்கு மட்டுமல்ல, நண்பன், பெற்றோர், பிள்ளைகள், விளையாட்டு நட்சத்திரம், நடிகர், அரசியல் தலைவர் என்று யார் மேல் வேண்டுமானாலும் இருக்கலாம், எல்லோருக்குமே ஒரே அர்த்தம்தான் அது நன்பேண்டா என்று சொல்ல என்ன தகுதியோ அதேதான்!

மனம் திறந்து... (மதி) said...

அய்யா: நானு டுபுக்கார் கழகத்திலே அப்ரண்டிசு. உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்து, சுவைத்து இருக்கிறேன்! இனி கமெண்டும் பண்ணுவேன்! நானு, புதுசாக் கடை போட்டிருக்கேன்.

நம்ம கடைப் பக்கம் ஒரு விசிட்டு குடுங்கோ! டுபுக்கு தல, கேடியக்கா, பாவை இவங்கல்லாம் வந்து வாழ்த்திட்டு போயிட்டாகளே!

இன்னைக்கே வந்தா எல்லாருக்கும் வடை உண்டு...உண்டு...உண்டு!

கடை விலாசம் (என் முதல் பதிவு) இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html

Sivakumar said...

>>>பார்த்துட வேண்டியதுதான்.

//இதுபோல மென்மையான காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கொண்ட உலகப்படங்கள் பார்க்கும்போது ஏனோ, மனதில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.//

>>>புரியுது. நடத்துங்க...வாழ்த்துகள்!!

Unknown said...

நான் பதிவை படிக்கவே இல்லை , பின்னூட்டத்தைதான் படித்தேன் செம காமெடியா இருக்கு பிரபா . உங்களுக்கு எதிரிகள் அதிகமாகி கொண்டே போகிறார்கள்

வழிப்போக்கன் said...

500 Days of Summer நல்ல படம் தான் தல. ஆனா வி.தா.வ இந்த கதையின் உருவல் எல்லாம் இல்லையே. இரண்டும் இரு வேறு மாதிரியான திரைப்படங்கள்.

சுவாரஸ்யமான திரைப்படத்திற்கு சுவாரஸ்யமில்லாத விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். மேலோட்டமான விஷயங்களை மட்டும் பதிவு செய்து விட்டு Climax-ஐ கூட எழுதி இருக்கிறீர்களே நண்பா?

புத்தக வாசிப்பை அதிகமாக்குங்கள். அடுத்த விமர்சனமாவது சுவாரஸ்யமாகவும், கதையின் அடிப்படை சாரத்தை உணர்த்துவதாகவும் இருக்கட்டும். Please no more climax spoilers.

RAJESH said...

ஆங்கிலப்படம் விமர்சனம்னா அதில் பயன்படுத்திய தொழில்நுட்பம், கதை களம், லொக்கேஷன், அக்டிங், ஸ்க்ரீன்ப்ளே போன்றவற்றை பற்றி ஓரளவுக்காவது அறிவு இருக்கவேண்டும். சும்மா கதையை மட்டும் தமிழில் எழுதினால் அதற்க்கு பெயர் ஆங்கிலப்பட விமர்சனம் இல்லை.


நேரம் இருக்கும்போது ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் போன்றவர்களின் ஆங்கில பட விமர்சனத்தை படிக்கவும். முதல் முயற்சி செய்யும்போது சின்னத்திரை சீரியல்களை விமர்சனம் செய்து பழகுங்கள். எடுத்த எடுப்பில் ஆங்கிலப்படம் விமர்சனம் எழுதும் அளவுக்கு உங்களுக்கு சினிமா அறிவு இல்லை. படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் எழுதமுடியும் என்றால் விமர்சனம் என்பதற்கு இருக்கும் மரியாதையே போய்விடும்.

Riyas said...

நீங்க சொன்ன மாதிரி செகண்ட் ஹீரோயின் அழகுதான்.. பதிவை விட கமெண்ட்ஸ் நல்லாருக்கே

NKS.ஹாஜா மைதீன் said...

உள்ளேன் நண்பா...

Anonymous said...

Prabha - I think it is time for you to enable comment moderation, and remove anonymous option. Use google account only if you still want to narrow. You can even mark spam for filthious persons. They are making fun of you, as well as your readers and followers.

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி.., S.Sudharshan, பார்வையாளன், சி.பி.செந்தில்குமார், ஆதி மனிதன், Chitra, ஜில்தண்ணி - யோகேஷ், சேட்டைக்காரன், ஆதவா, ரஹீம் கஸாலி, முரளிகுமார் பத்மநாபன், Samudra, sakthistudycentre-கருன், Speed Master, உமாபதி, Jayadev Das, மனம் திறந்து... (மதி), ! சிவகுமார் ! , நா.மணிவண்ணன், Riyas, NKS.ஹாஜா மைதீன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ MEIPPORUL100
தைரியமிருந்தால் நேரில் வரவும்...

828, T.H.Road,
Thiruvotriyur,
Chennai 600019.
Ph No.: +918015899828

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
நண்பரே... நடந்த சம்பவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... ஓரிரு நாட்களில் உங்களை ஜிடாக்கில் தொடர்பு கொள்கிறேன்... நிறைய பேச வேண்டும்...

Anonymous said...

நா.மணிவண்ணன் said.. //நான் பதிவை படிக்கவே இல்லை , பின்னூட்டத்தைதான் படித்தேன் செம காமெடியா இருக்கு பிரபா //

மணி, உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி. மதுரைல அழகிரிக்கு எதிரா உங்களை நிக்க வைக்க போறேன். வர்ற தேர்தல்ல.

ஜி.ராஜ்மோகன் said...

போங்க பாஸ் இவிங்க எப்போதுமே இப்படித்தான் ! என்ன நடக்குதுனே புரியலையே !

Anonymous said...

///828, T.H.Road,
Thiruvotriyur,
Chennai 600019.
Ph No.: +918015899828//

Super....

ADMIN said...

???காதலில் தோற்றால் வாழ்க்கையையே தொலைத்ததாக கருதுவது, தற்கொலை செய்து கொள்வது, ஏமாற்றிய காதலியை பழி வாங்குவது இதெல்லாம் நம்மூரிலும் நம்மூர் சினிமாக்களில் மட்டும்தான் போல...??? தங்கள் வார்த்தைகளிலிருந்து தொடங்குகிறேன்.. பிளாசபி.. இதிலிருந்து தாங்கள் அறியவில்லையா சினிமா இளைய சமுதாயத்தை எதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்று? தங்களுக்கு நல்ல எழுத்து நடை இருக்கிறது.. சிறப்பாகவும் இருக்கிறது.. சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் சில பதிவுகளையாவது இடலாமே.. உபயோகமாக இருக்கும்..!(சினிமாவைத் தவிர்த்து)

ADMIN said...

குறை காண்பதென்றால் ஒவ்வொரு குறையுடனே இருக்கிறார்கள்.. ஏதாவது ஒரு வகையில்.. நமக்குத் தேவை என்ன என்பதையே பார்க்கவேண்டும்..தேவையில்லா கசடை எடுத்து தேன் பருக கற்றுக்கொள்ளவேண்டும்.. தங்களுக்கு இன்னும் தேவை அனுபவம்..

Jayadev Das said...

//தங்களுக்கு நல்ல எழுத்து நடை இருக்கிறது.. சிறப்பாகவும் இருக்கிறது.. சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் சில பதிவுகளையாவது இடலாமே.. உபயோகமாக இருக்கும்..!// ஏம்பா எல்லோரும் சமுதாயத்தை காப்பாத்த போயிட்டா அப்புறம் என்ன மாதிரி குடிகாரப் பசங்க கதி என்னாவது, ஏதோ இப்பத்தான் பிரபா ஒயின் ஷாப் திறக்கப்போறேன்னு சொல்லியிருக்காறேன்னு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன், அதுல மண்ணை வாரிப் போடுறீங்களே, இது நியாயமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கும் இங்கிலிபீசு படத்துக்கும் எப்பவும் ஒத்து வர்ரதில்லீங்க... நாம பாக்கற இங்கிலீசு படமே வேற.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்ட கண்ட தெலுங்கு படத்த ரீமேக்குன்னு வாந்தி எடுக்கறதுக்கு, இந்த மாதிரி படங்களை காப்பி அடிக்கறது எவ்வளவோ தேவலை.....!