அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஞாநி என்னுடைய மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆனந்த விகடனில் வெளிவந்த கண்ணகி சிலை – கரடி பொம்மை கட்டுரையில் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு வாசிக்க ஆரம்பித்தேன். திடீரென ஒருநாள் எனக்கு இன்ப அதிர்ச்சி. நண்பரின் நண்பர் மூலமாக ஞாநியின் வீட்டுக்கு சென்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு பக்கத்தில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது மறக்க முடியாத நிகழ்வு. அடுத்த ஒருவாரத்திற்கு ஒருவித பரவச நிலையிலே தான் இருந்தேன். இன்றும் எனது மொபைலில் அந்த போட்டோவை வைத்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் அவரைப் பற்றி சிலாகிப்பதை அவரே கூட விரும்பமாட்டார். அதுதான் ஞாநி.
அன்பே சிவம் படத்தில் கமல் மண்சோறு சாப்பிடும் பக்தனை மடக்கி, மண்ணும் கடவுள் சோறும் கடவுள் ரெண்டையும் ஏன் குழைச்சு அடிக்கிறன்னு கேக்குற மாதிரி, புத்தக சந்தையில் தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ஒரு இளைஞனை மடக்கி நானும் மனிதன், நீயும் மனிதன். என்னிடம் ஏன் ஆட்டோகிராப் வாங்குற....? என்று கேட்டார். ஒருவேளை அந்த இளைஞன் அவரிடம் அன்று ஆட்டோகிராப் கேட்காமல் இருந்திருந்தால் அவருடைய கேள்வி எனக்கானதாக இருந்திருக்கும். ஏனென்றால் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கையெழுத்து கேட்கலாமா என்று தயங்கியபடியே அருகில் நின்றிருந்தவன் அடியேன்தான்.
சரி, Coming to the matter. ஞாநி சமீபத்தில் எழுதிய ஒய் திஸ் கொலவெறி...? இடுகையிலிருந்து ஒரு பத்தி:
“இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்’ என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். அருண், அகல்யா, ஷோபா லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும்...!”
தொடர்ந்து இந்த இடுகையை படிக்க படிக்க யாரோ என் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவது போலிருந்தது. காரணம் – இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒய் திஸ் கொலவெறி...? பாடலை ரிப்பீட் மோடில் வைத்து கேட்டுக்கொண்டிருப்பதாக என்னுடைய பதிவொன்றில் சிலாகித்திருந்தேன். ஞாநியின் இந்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும். (ஞாநியின் தளத்தில் லாகின் செய்தால் மட்டுமே படிக்க முடியும் என்பதால் வடக்குப்பட்டி ராம்சாமி லிங்க்). இதை படித்ததும் எனக்கு என்ன கேட்க தோன்றியதோ அதையே வாசகர் ஒருவர் கேள்வி கேட்க, அந்த கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தால் நான் என்ன பதில் சொல்லியிருப்பேனோ அதே பதிலை வ.ராம்சாமியும் சொல்லியிருந்தார்.
மேட்டர் இதுதான். எனக்கு அந்த பாடலை பிடித்திருக்கிறது. நான் ரசிக்கிறேன். நாளைக்கு வேறு புதிய பாடல் வந்ததும் இதை மறந்துவிட்டு அதை கேட்பேன். அவ்வளவே. மற்றபடி இந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்த சென்ட்டிமென்ட்டும் கிடையாது, நானும் தனுஷும் ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் கிடையாது. இந்தப்பாடலை ரசிக்கும் பெருவாரியான இளைஞர்களின் கருத்தும் இதுவே. இதை ஏன் ஞாநி இவ்வளவு சீரியஸா சொல்றாரு என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அந்தாளுக்கு வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டு அவங்களோட கலெக்டர் வேலையை கண்டின்யூ பண்ண போயிடுறாங்க.
பாடலை வெறும் பாடலாக எடுத்துக்கொண்டு கடந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அடித்தட்டு ரசிகர்களின் மனது அப்படி இருப்பதில்லை. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை எனது பதிவுகளில் வேதனை பட்டிருப்பேன். என்னுடைய தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள் என்ற இடுகையின் சாரமே இதுதான். இதே கருத்தை ஞாநி தன்னுடைய கட்டுரையிலும் வலியுறுத்தியிருக்கிறார். இதுபோன்ற பாடல்கள், படங்களை கடக்கும் அடித்தட்டு ரசிகர்கள், தனுஷை மாதிரியே அப்பா, அம்மாவை எதிர்த்து பேசுகிறார்கள், பெண்களை கேவலப்படுத்துகிறார்கள், பொறுக்கித்தனம் செய்கிறார்கள், குடித்து சீரழிகிறார்கள். தனுஷ் நிஜவாழ்க்கையில் அவருடைய அப்பாவின் பேச்சை கேட்டு முன்னுக்கு வந்துவிடுவது பாவம் ரசிகனுக்கு தெரிவதில்லை.
இங்கே தனுஷ் என்று குறிப்பிட்டிருப்பது தனுஷ் மட்டுமல்ல. எல்லா மாஸ் ஹீரோக்களும் தான்.
****************************************************
அடுத்ததும் தனுஷ் நடித்த ஒரு படத்தைப் பற்றிதான்.
மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதில் நம் கோலிவுட் இயக்குனர்களுக்கு நிகர் யாருமில்லை. அதாவது, தன் வீட்டில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துக்கொண்டு கருப்பு பணத்தின் தீமைகளை பற்றி படம் எடுப்பார்கள் (ஷங்கரின் சிவாஜி), தான் காப்பி அடித்து படம் எடுத்துவிட்டு காப்பி அடிக்கும் இயக்குனர்களை கிண்டலடிப்பார்கள் (கே.வி.ஆனந்த் – அயன், கோ). இப்போது அந்த வரிசையில் Plagiarism (அறிவுதிருட்டு) பற்றிய ஒரு படத்தை எடுத்திருப்பவர் செல்வராகவன் ஆச்சர்யக்குறி.
நிற்க... இதுவரைக்கும் செல்வராகவன் காப்பியடித்து படமெடுப்பவர் என்று நான் நினைக்கவில்லை. சில பதிவர்களும் பின்னூட்டவாதிகளும் மயக்கம் என்ன படம் “A Beautiful Mind” படத்தின் காப்பி என்று சொல்கிறார்கள். நான் இதுவரைக்கும் அந்த “Beautiful Mind” படத்தை பார்க்கவில்லை. இயக்குனரின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் காட்சிகள் கூட பல படங்களில் இருந்து உருவப்பட்டதாக கூறினர். என்னுடைய தனிப்பட்ட கருத்து, செல்வராகவன் Comparatively Better. கிகுஜிரோவை பிரதி எடுத்த மிஷ்கின், ஐயாம் சாமை காப்பியடித்த இயக்குனர் விஜய் போன்றவர்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் புத்திசாலி திருடன்தான் செல்வராகவன்.
ஒரே படத்தில் திருடாமல் பல படங்களில் இருந்து பல காட்சிகளை திருடுவது. சந்தேகமே இல்லாமல் செல்வராகவன் ஒரு புத்திசாலி தான். ஆனால் யோக்கியனா...? Coming back to ஞாநி. ஞாநி அவருடைய அயோக்கியர்களும் முட்டாள்களும் என்ற புத்தகத்தில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் புத்திசாலிகள், ஆனால் அயோக்கியர்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் நல்லவர்களாக இருப்பினும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பார். இதே “அயோக்கியன்-முட்டாள்” சொல்லாடலைத்தான் என்னுடைய கோ படம் பற்றிய கோபமான இடுகையில் பயன்படுத்தியிருந்தேன். அதை தவறாக புரிந்துக்கொண்ட நண்பர்கள் சிலர் யாரை முட்டாள் என்று சொல்கிறாய் என்று கோபம் காட்டினார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்த செல்வராகவன், காப்பியடிக்கும் இயக்குனர்களுக்கு காயடியுங்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதுதான் இந்த கோபத்திற்கு காரணம். ஆயிரத்தில் ஒருவன் படம் வெளிவந்திருந்த சமயம் நான் காப்பியடிப்பதாக நிரூபித்தால் சினிமா எடுப்பதையே நிறுத்திவிடுகிறேன் என்று சவால் விட்டவர். திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கொண்டு இருந்திருக்கலாம். What a beautiful mind...?
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
87 comments:
தமிழ் சினிமாவில் வரும் அனேகப் பாடல்கள், படங்கள் எல்லாமே இதே பாடு தான். வெளிநாட்டில் இருப்பதால் இங்கு பல மொழி பேசுபவர்களின் பாடல்களைக் கேட்டால் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதேன்னு நினைத்தால் நம்ம தமிழ் பாட்டு. அப்படித் தான் படங்களும்... இதை எல்லாம் பார்த்துக் கூடத் திருந்த மாட்டானுங்க.
ஐ... இன்னைக்கும் நான் தான் முதல்...
@ ஷர்மி
// தமிழ் சினிமாவில் வரும் அனேகப் பாடல்கள், படங்கள் எல்லாமே இதே பாடு தான். வெளிநாட்டில் இருப்பதால் இங்கு பல மொழி பேசுபவர்களின் பாடல்களைக் கேட்டால் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதேன்னு நினைத்தால் நம்ம தமிழ் பாட்டு. அப்படித் தான் படங்களும்... இதை எல்லாம் பார்த்துக் கூடத் திருந்த மாட்டானுங்க. //
நான் கூட கேள்விப்பட்டேன் மேடம்... பிபிசியில் ஒலிபரப்புறாங்களாம், வெளிநாட்டுக்காரங்க எல்லாம் லைக் பண்றாங்களாம், லேடி காகா பாட்டுக்கு அடுத்து இதுதானாம், சல்மான் ருஷ்டி ட்வீட் பண்றாராம்... என்ன நடக்குதுன்னே புரியல...
நீங்கள் எழுதியதில் ஒன் ஆப் தி பெஸ்ட்! தொடர்க.
சட்டியில் இருந்தா அகப்பையில் வரும். செல்வராகவன் நான் ஆங்கிலப் படங்கள் பார்த்து இயக்குநர் ஆனவன் என்று சொல்லியிருக்கிறார். அவர் வீட்டில் cd,dvd க்கள் இறைந்து கிடக்கும் என்று அவரே விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். அப்படித்தான் திரைக்கதை கற்றுக் கொண்டிருக்கிறார். வேறு வழியில்லை. காப்பி அடித்துதான் ஆகவேண்டும். இப்போது போட்டியே யார் முதல்ல அடிப்பது எப்படி என்றுதான். அதுவுமில்லாமல் நான் அப்படி இல்லை மத்தவங்கதான் அப்படி என்று வேறு சொல்லிக் கொள்ள வேண்டும். அடுத்து கமல் வருவார் பாருங்கள்...ஆனா அவர் கிரகம் படம் பாதி எடுத்திட்டிருக்கும்போதே எவனாவது ஒருத்தன் அது என் கதைன்னு கேஸைப் போடுவான்...
ஞானி பற்றிய முன்னுரையை ரசித்து படித்தேன்.
@ ! சிவகுமார் !
// நீங்கள் எழுதியதில் ஒன் ஆப் தி பெஸ்ட்! தொடர்க. //
நன்றி...
@ மாயன் : அகமும் புறமும்
மாயன்... நீங்க செல்வராகவனுக்கு சப்போர்ட் பண்றீங்களா இல்ல எதிர்க்குறீங்களான்னு எனக்கு புரியல...
இருந்தாலும் இடுகையில் சேர்க்க தவறிய ஒரு விஷயத்தை பொதுவில் சொல்லிக்கொள்கிறேன்...
Copy, Reference, Inspiration என்று சில வகைப்பாடுகள் உள்ளன...
அதாவது நான் ஒரு பதிவை வேறொருவர் தளத்திலிருந்து அப்படியே காப்பி - பேஸ்ட் செய்தாலோ, அல்லது பிறமொழி தளத்தில் இருந்து அவருடைய அனுமதியின்றி என்னுடைய தளத்தில் தமிழாக்கம் செய்துக்கொண்டாலோ அது Copy... கண்டிப்பாக தவறானது... அதுவே நான் ஒரு பதிவை எழுத சுமார் இருபது தளங்களில் இருந்து தகவல் சேகரித்தேன்... நான் தகவல் சேகரித்த இடுகைகளின் இணைப்பை என்னுடைய இடுகையில் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னால் அது Reference...
Copy அடிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பணம் கொடுத்து Copy Rights வாங்க வேண்டும்... Reference ஆக இருக்கும் பட்சத்தில் "ஆடுகளம்" வெற்றிமாறன் செய்தது போல Credits கொடுக்கலாம்...
Inspiration - அதாவது வெளிநாட்டில் ஒரு இயக்குனர் அவர்கள் நாட்டு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கிறார் என்றால் இங்குள்ள இயக்குனர் அவரது முறையை பின்பற்றி நம்மூர் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது... மூன்றாவதில் எந்த தவறும் இல்லை... ஆனால் மிஷ்கின் கிகுஜிரோவை inspire செய்வதாக பிதற்றுகிறார்...
@ சதீஸ் கண்ணன்
// ஞானி பற்றிய முன்னுரையை ரசித்து படித்தேன். //
நன்றி சதீஸ்... அவர் ஞானியல்ல... ஞாநி...
பிரபா என்னோட பார்வையில் சில:
தன்னை அறிவாளி என்று நினைத்துக்கொள்ளும்(!) ஒருவனால் மட்டுமே அடுத்தவர் செய்யும் விஷயங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்ய முடிகிறது(!)....இது தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களுக்கு சாத்தியப்படாது...அதற்காக அவர்கள் அறிவாளிகள் அல்ல என்று ஆகிவிடாது...விஷயம் தெரிந்தவன் பிதற்ற மாட்டான்...முட்டாள் தனமா தர்க்கம் செய்ய மாட்டான்...
அடுத்து...எந்த மாதிரி படங்களை உங்களைப்போல இளைய தலைமுறை எதிர் பாக்குறீங்க...ஏன்னா அழகையும் ரசிக்கிறீங்க ஆனா குறையும் சொல்றீங்க என்னய்யா ஞாயம்(!)...அதுவுமில்லாம டைரடக்கருங்க எல்லாம் உலக பார்வைய பாத்துட்டு வர்றவங்க என்பது எப்படி சாத்தியம்...DVD பாத்துட்டா மட்டும் படமெடுக்க முடியாது..அதிலிருந்து தன் தனிப்பட்ட சிரத்தைகளை உள் புகுத்தி செய்பவன் அறிவாளி என்பதை ஒத்துக்கொள்ள வேண்டுமே தவிர(எல்லாவற்றையும் அல்ல!)...அதற்காக அவனை இகழ இகழ இன்னும் பல விஷயங்கள் வெளி வராமால் போய்விட வாய்ப்புண்டு...உங்களைப்போல எல்லோரும் உலக சினிமாவை கண்டு வரும் ஆட்கள் அல்ல ஹிஹி!...இவை என் தனிப்பட்ட கருத்துக்கள்..தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்!
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். நல்ல விமர்சனம். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
கருத்து சொல்றேன் இன்னும் முழுக்க வாசிக்கல
என்னவோ பாஸ் குறையை சொல்லியே பிரபலமாவார் ஞாநி என்பதே என் எண்ணம்
எனக்கு ஞானி பற்றி அதிகம் தெரியாது பிரபா.. இனி தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது.அது மாதிரி பல ஜாம்வான்களின் எழுத்துகளைப் படித்தால்தான் நல்ல எழுத்தாளனாக ஆகமுடியும்ன்னு இப்பதான் தோணுது.
நன்றி...
//மயக்கம் என்ன படம் “A Beautiful Mind” படத்தின் காப்பி என்று சொல்கிறார்கள்//
அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன். நான் 'மயக்கம் என்ன' இன்னும் பார்க்கவில்லை!
A Beautiful Mind அவசியம் பாருங்க பாஸ்!
நண்பா நான் சொல்ல நினைத்ததை விக்கியுலகம் தக்காளி மாப்ள சொல்லிட்டார். மேலும் சில கருத்துக்கள் சொல்கிறேன். இன்ஸ்பைரேஷன் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. நமக்கு பிடித்தவர் அதை செய்யும்போது ஒரு அர்த்தம் கற்பிக்கிறோம். பிடிக்காதவர் செய்யும் போது ஒரு அர்த்தம் கற்பிக்கிறோம். அவ்வளவே.
A Beautiful mind படத்தை அப்படியே ஆட்டைய போட்டிருந்தால் இவர் கண்டிக்கப்பட வேண்டியவரே. அதற்காக கொஞ்சம் அதே சாயல் இருந்தாலும் காப்பி என்று சொல்வது சரியல்ல. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். காதலுக்கு மரியாதை என்ற ஒரு படம் தமிழில் வராமல் கொரிய மொழியில் வந்திருந்தால், விண்ணைதாண்டி வருவாயா அதன் காப்பி என்று சொல்லி இருப்பார்கள்.
ஏதோ மனதில் தோன்றியதை சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சு.
நான் பியுடிபுள் மைன்ட் படம் பார்த்திருக்கேன், மயக்கம் என்ன பார்க்கல, செங்கோவியினதும் உங்களதும் விமர்சனம் படித்தேன், பியுடிபுள் மைண்டுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. ஒருதமிழ் படம் வந்தா அது இந்த ஹாலிவூட் படத்தோட காப்பின்னு சொல்றது இப்போ எல்லாம் பேசனா போச்சு. வந்தா என்னங்க வர முதலே ஆரம்பிச்சிடுராங்களே. எல்லாம் அந்த தெய்வதிருமகள் படுத்திய பாடு. இத பத்தி பேசலாம்ன்னு ஆரம்பிச்சு இடையிலவிட்டிருக்கோம், நேரம் வந்தா கண்டினு பண்ணலாம்.
கொலைவெறி பாட்டு ஹிட்டா இல்லையான்னு எனக்கு தெரியல, ஆனா இங்க அந்த பட்டால நான் படுற அவஸ்த சொல்லி மாளாதது. இன்னைக்கு அது பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.
@ விக்கியுலகம்
// தன்னை அறிவாளி என்று நினைத்துக்கொள்ளும்(!) ஒருவனால் மட்டுமே அடுத்தவர் செய்யும் விஷயங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்ய முடிகிறது(!)....இது தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களுக்கு சாத்தியப்படாது...அதற்காக அவர்கள் அறிவாளிகள் அல்ல என்று ஆகிவிடாது...விஷயம் தெரிந்தவன் பிதற்ற மாட்டான்...முட்டாள் தனமா தர்க்கம் செய்ய மாட்டான்... //
மாம்ஸ்... நீங்க யாரைச் சொல்றீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல... யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்கிறீர்களா...? நானும் ஞாநியும் நாங்களுண்டு எங்கள் வேலையுண்டுன்னு இருக்க நினைக்கிறீர்களா...? உங்க பதிவு மாதிரியே உங்க பின்னூட்டமும் உள்குத்தா இருக்கு... தயவு செஞ்சு தெளிவா சொல்லுங்க... எதிர்கருத்து சொல்றதால கோவிச்சுக்குற ஆள் நான் இல்லை... நீங்க தைரியமா சொல்லலாம்...
@ விக்கியுலகம்
// அடுத்து...எந்த மாதிரி படங்களை உங்களைப்போல இளைய தலைமுறை எதிர் பாக்குறீங்க...ஏன்னா அழகையும் ரசிக்கிறீங்க ஆனா குறையும் சொல்றீங்க என்னய்யா ஞாயம்(!)...அதுவுமில்லாம டைரடக்கருங்க எல்லாம் உலக பார்வைய பாத்துட்டு வர்றவங்க என்பது எப்படி சாத்தியம்...DVD பாத்துட்டா மட்டும் படமெடுக்க முடியாது..அதிலிருந்து தன் தனிப்பட்ட சிரத்தைகளை உள் புகுத்தி செய்பவன் அறிவாளி என்பதை ஒத்துக்கொள்ள வேண்டுமே தவிர(எல்லாவற்றையும் அல்ல!)...அதற்காக அவனை இகழ இகழ இன்னும் பல விஷயங்கள் வெளி வராமால் போய்விட வாய்ப்புண்டு...உங்களைப்போல எல்லோரும் உலக சினிமாவை கண்டு வரும் ஆட்கள் அல்ல ஹிஹி!...இவை என் தனிப்பட்ட கருத்துக்கள்..தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்! //
கரெக்ட்... செல்வா காப்பியடித்து எடுத்தாலும் கூட அவரிடம் ஒரு தனித்திறமை இருக்கிறது... அவரது படங்களை நான் ரசிக்கவே செய்கிறேன்... அவர் புத்திசாலி என்பதைத்தான் பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே... ஆனால் கடைசி பத்தியில் குறிப்பிட்டிருக்கும் படி ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்...? நான் இப்படித்தான் என்று சொல்லிவிட்டு போகலாமே... ஏன் அறிவுதிருட்டு சம்பந்தப்பட்ட கதையை சினிமாவாக எடுக்க வேண்டும்...?
என்னுடைய நேற்றைய இடுகையில் கருங்காலி படத்தைப் பற்றி சில வரிகள் எழுதியிருக்கிறேன்... அதை ஒருமுறை படித்துவிட்டு வரவும்...
@ பாலா
// இன்ஸ்பைரேஷன் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. நமக்கு பிடித்தவர் அதை செய்யும்போது ஒரு அர்த்தம் கற்பிக்கிறோம். பிடிக்காதவர் செய்யும் போது ஒரு அர்த்தம் கற்பிக்கிறோம். அவ்வளவே. //
சொல்லப்போனால் செல்வராகவனும் எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர்... புதுப்பேட்டை என்னுடைய ஆல்-டைம் பேவரிட்... அது சிட்டி ஆஃப் காடின் காப்பி என்று யாராவது சொன்னால் உதைக்க வருவேன்...
// A Beautiful mind படத்தை அப்படியே ஆட்டைய போட்டிருந்தால் இவர் கண்டிக்கப்பட வேண்டியவரே. அதற்காக கொஞ்சம் அதே சாயல் இருந்தாலும் காப்பி என்று சொல்வது சரியல்ல. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். காதலுக்கு மரியாதை என்ற ஒரு படம் தமிழில் வராமல் கொரிய மொழியில் வந்திருந்தால், விண்ணைதாண்டி வருவாயா அதன் காப்பி என்று சொல்லி இருப்பார்கள். //
ஆமாம் கரெக்ட் தான்... பல படங்களில் இருந்து ஒவ்வொரு காட்சியை சுட்டு எடுத்தால் என்ன சொல்வது...? இதையெல்லாம் செஞ்சிட்டு நான் ரொம்ப நல்லவன்னு பேட்டி கொடுத்தா என்ன அர்த்தம்...? நீங்க 500 days of summer பார்க்கலையா...
தன் வீட்டில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துக்கொண்டு கருப்பு பணத்தின் தீமைகளை பற்றி படம் எடுப்பார்கள் ///
.
.
தைர்யமாக பல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க!அதுக்கு முதல் பாராட்டு!மற்றபடி plagiarism எண்பது தமிழ் சினிமாவின் அங்கங்களில் ஒன்றாகி விட்டது!தனுஸ் நடித்த பொல்லாதவன் படம் The bicycle thieves என்ற காவியத்தின் மிக மலிவான பிரதி!சிலர் தாங்கள் சினிமாவை சிநிமாவாகதான் பாக்குரோம்னு சொல்றாங்க!அப்படி சொல்பவர்கள் யார்?குடும்பஸ்தர்கள் விடலை பருவத்தை தாண்டியவர்களே!விடலை பசங்க அப்படியா செய்யுறாங்க?இல்லையே!சினிமாவை சினிமாவா பார்ப்பதில்லை.பால் அபிஷேகம் பீர் அபிஷேகம் சினிமாவில் நடிகன் எதை செய்தாலும்(நல்லதோ கேட்டதோ) அதை நிஜ வாழ்வில் செய்வது(உம.பெற்றோரை மதிக்காமல் இருப்பது பெருமைன்னு நினைப்பது)இதற்கெல்லாம் மூல காரணம் இத்தகைய சினிமாக்கல்தான்!இதனால்தான் என்னவோ சினிமா காரர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழே தெரியாதபடி பார்த்துகொள்கின்றனரோ?
ஆமாம் கரெக்ட் தான்... பல படங்களில் இருந்து ஒவ்வொரு காட்சியை சுட்டு எடுத்தால் என்ன சொல்வது...? இதையெல்லாம் செஞ்சிட்டு நான் ரொம்ப நல்லவன்னு பேட்டி கொடுத்தா என்ன அர்த்தம்...? நீங்க 500 days of summer பார்க்கலையா...///
.
.
அட உடுங்க பாஸ்!கவுதம் மேனன் எப்பவுமே பர்மா பஜார் சிடி கடையில்தான் நேரத்தை செலவிடுகிராராம்!
there is no lifting from beautiful mind.
i cant think of any parallel to any other holly films as well, that i have seen so far.
ஞாநி எனக்கும் மிகப் பிடித்தவர், பாடல் என்பதை எவ்வளவு கேவலம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்கின்றனர் இப்போது. இதுவும் கடந்து போகும் வகை பாடல்கள் தான் நிறைய இப்போது. ஹாலிவுட் படங்களைப் பார்த்து எடுப்பதில் தவறில்லை, அதை ஒத்துக் கொள்வது தான் உத்தமம். A Beautiful mind படம் பார்க்கவில்லை. ஆனால் செல்வாவே மயக்கம் என்ன படத்தில் ஒரு அறிவுத்திருட்டைப் பற்றி சொல்லி இருக்காரே. அவரும் இது போல் என்றால் கேவலம் தான்.
என்ன செய்ய அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை செய்யுறாங்க!!? எல்லோருமே திருடங்கதான் சொல்லப்போனா குருடங்க தான் பாட்டு தான் ஞாபகம் வருது
பிரபா ..,
அந்த படத்தை நான் கோவத்தின் உச்சிக்கே போய் விட்டேன் ..,A BEAUTIFUL MIND படத்த பாருங்க ..,படத்தின் ஜீவ நாடியை உருவி நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே போட்டு தமிழ் படமா ஆகிட்டாங்க ..,
பிரபா ..,
அந்த படத்தை நான் கோவத்தின் உச்சிக்கே போய் விட்டேன் ..,A BEAUTIFUL MIND படத்த பாருங்க ..,படத்தின் ஜீவ நாடியை உருவி நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே போட்டு தமிழ் படமா ஆகிட்டாங்க ..,
செல்வராகவன் தன் பட விமர்சனத்தையே தாங்கிக்கொள்ள முடியாமல் என் தளத்தில் அனானி கமெண்ட் போட்டிருக்கிறார்.. ட்விட்டரில் லிங்க் குடுப்பவர்கள் அவர் படத்துக்கு சாதகமா இருந்தால் RT செய்யறார்
விக்கி மாம்சின் கருத்தோடு 100% ஒத்துப் போகிறேன், விமர்சனம் செய்வதையே பொழப்பாக செய்பவர்கள் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை, காப்பி பேஸ்ட் பத்தி, இன்ஸ்பிரேசன் பத்தி எல்லாம் பேசுனா தமிழ்சினிமால மொதல்ல கமல்லதான் சொல்லனும், அந்தாளுதான் ஆரம்பிச்சே வச்சான் இந்த கலாச்சாரத்த, ஞானிய பத்தி சொல்ல வேண்டியதே இல்லை, எவன குறை சொல்லலாம்னு திரியற ஆளு, இங்க ஹண்ட்ரட் பர்சன எவனும் யோக்கியன் இல்லை, சும்மா சும்மா இதயும் ஒரு பொழப்பன்னு சொல்லிட்ட்டு திரியறானுங்க, இதுக்கு எவன் என்ன சொல்றானுன்னு நானும் பார்க்குறேன்
அடுத்தவனுக்கு பிறந்த குழந்தைக்கு தான், தான் தந்தை என்று சொல்வது எவ்வளவு கேவலமோ , அவ்வளவு கேவலம் பிறரின் படைப்புகளை திருடுவது ( I MEAN COPY அடிப்பது in other words inspiration ,)திருடிட்டில் என்ன புத்திசாலித்தனமான திருட்டு ? ஒரு சீன் திருடினாலும் திருட்டு , திருட்டுதான் > . அவர்களுக்கு 2.30 மணி நேர படத்தை எப்படியாவது ஒப்பேற்ற வேண்டும் . அது போல் தான் பதிவர்களும் . தனது பதிவை எப்படியாவது , எதையாவது வைத்து ஒப்பேற்ற வேண்டும் . FOR EX UR பிரபா ஓயின் ஷாப் , பார்த்த VIDEO , கேட்ட பாட்டு , என்று எதையாவது copy அடித்து ஒப்பேற்ற வேண்டியது . இதுவும் தப்பு தான் . ALL MOST ALL BLOGGERS doing thaT . Regarding ஞானி , பெயரில் மட்டுமே ஞானத்தை கொண்டவர் . எந்த PRODUCT ம் மக்கள் விருப்பினால் மட்டுமே நிலைக்க முடியும் I MEAN HIT ஆக முடியும் அது SHOE ஆக இருந்தாலும் சரி அல்லது பாட்டாக இருந்தாலும் சரி> CREATE பண்ணும் விசயங்களுக்கு INTIAL HYPE மட்டுமே இருக்கும் AFTER ALL மக்கள் விரும்பினால் மட்டுமே IT WILL BE ஹிட் .
nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com
//ஆனால் மிஷ்கின் கிகுஜிரோவை inspire செய்வதாக பிதற்றுகிறார்...//
யோவ்.. மிஷ்கின் கிகுஜிரோவை இன்ஸ்பயர் செய்யல. இன்ஸ்பயர் ஆனதா சொன்னாரு.
//
என்னுடைய நேற்றைய இடுகையில் கருங்காலி படத்தைப் பற்றி சில வரிகள் எழுதியிருக்கிறேன்... அதை ஒருமுறை படித்துவிட்டு வரவும்...//
யாராவது கேள்வி கேட்டா 'என் பழைய இடுகையை படிக்கவும்' அப்டின்னு அடிக்கடி சொல்லிட்டு இருக்கீங்க பிரதர். ஆனாலும் உங்களுக்கு ரவுசு ஜாஸ்தி.
@சி.பி.செந்தில்குமார்
வெங்காயம் இயக்குனருக்கு அடுத்து செல்வாவும் உங்கள் பதிவிற்கு வந்துவிட்டாரா? ஆனால் ஸ்பீல் பெர்குக்கு என்ன கொழுப்பு இருந்தால் நீங்கள் டின் கட்டிய டின் டின் விமர்சனத்திற்கு இன்னும் பதில் சொல்லாமல் இருப்பார்? :-)))))))))))))))
ஐயோ பாவம் செல்வராகவனுக்கும் சொந்த சரக்கு இல்லையா கிழிஞ்சது கிருஷ்ணகிரி...!!!
please don't compare mayakkam enna movie with 'The Beautiful Mind'. Both the movie stories are different. Tamil directors ellam beautiful mind mathri movies ellam eppavum yadduka mattainga!...
நான் இரண்டு படத்தையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இரண்டு படத்தையும் சம்பந்தபடுத்துவது இஹும். மயக்கம் என்ன ஒரு crap. Its not a movie. and Selvaragavan is overrated director.
செல்வா வின் படத்தில் யாரேனும் ஒருவரை மெண்டல் ஆக்கிவிடுகிறார்..
கடைசிக்கு பார்க்கரவங்களையவது..............
கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )
கண்டிப்பாக ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒரு காட்சியை உருவி இருந்தாலும் அதுவும் காப்பிதான். மயக்கம் என்ன படத்தின் காட்சிகள் எந்தெந்த படத்தில் இருந்து திருடப்பட்டது என்று கூறுவது சரியாக இருக்கும்.
விண்ணைதாண்டி வருவாயா காப்பி இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஒரு ஒப்புமைக்காக காதலுக்கு மரியாதை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டையும் பயன்படுத்தினேன். மேலோட்டமாக பார்த்தால் இரண்டு படங்களும் ஒரே மாதிரி இருக்கும். அதனால்தான் சொன்னேன்.
mayakkam enna is not a copy of beautiful mind. Thats completely different movie.
முந்தைய தின இரவு பணி முடித்துவிட்டு,செல்வா படம் என்ற ஒரே காரணத்திற்காக முதல் நாள் பகல் காட்சிக்கே சென்று பார்த்துவிட்டேன்...அதற்கு முன் நான் எந்த விமர்சனமோ கதை சுருக்கமோ வாசித்திருக்க வாய்ப்பில்லை...ஆனால் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்வா a beautiful mind படத்தின் inspiration ல் இந்த படத்தைப் படைத்துள்ளார் என மூன்று காட்சிகளில் அழுத்தமாய் புரிந்தது...
1.ஷங்கர் கதாபாத்திரம் யாமினியை 'ஏன் இவன்கூட நீ இருக்கணும்? ' என்று கேட்பது..
2. மனநிலை பாதிக்கப்பட்ட கணவனைப் பிரியாமல் கதாநாயகி வலிகளைப் பொறுத்துக்கொள்வது...
3. விருது வாங்கும் காட்சியில் அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அந்த அழுத்தமான காதலை மேடையில் உரைப்பது...
தனிப்பட்ட முறையில் பெரிய சினிமா அறிவு ஏதுமில்லாத முதல் நாள் டிக்கெட்டிற்கு அடித்துக்கொள்ளும் ஒரு மிக சராசரி இரசிகனான எனக்கே இவ்விரு படங்களின் ஒற்றுமை விளங்குவதால், செல்வாவை புத்திசாலி திருடன் என்று ஒப்புக்கொள்ள இயலவில்லை...
@ பிரபா..
a beautiful mind படம் பாக்க நெனச்சா தயவு செஞ்சு subtitle இல்லாம பாத்துடாதீங்க..russel crowe கொய்யால என்ன பேசுறான்னே புரியாது..செல்வா பாணில சொல்லணும்னா அவன் ஒரு 'ஆய்' வாயன்...:)
கண்ணகி சிலை//
நீங்க யூத்துன்னு அடிச்சு சொல்றீங்க...
நாம எங்க இருந்து காப்பி அடிச்சாலும் நம்ம மொத்த ஆடியன்ச திருப்தி படுத்துறது ஒரு கலைங்க...அது வேற எந்த நாட்டினராலையும் பண்ண முடியாதுங்கறது என் தாழ்மையான கருத்து...
அது சரிப்பா லூசா...(லூஸ் மாதிரி இல்ல)சட்டை போட்டா ஞானியாப்பா
சகோதரா . ஞானி கட்டுரையின் அடிநாதம் என்னவென்றால் பொறுப்பற்றவர்களாக திரையில் நடித்து இளைஞர்களை கெடுக்கிறார்கள் என்பதே .இந்த ஹீரோக்கள் சொந்த வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை . ஷங்கர் தனி வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் , திரையில் நல்ல விஷயத்தைதானே சொன்னார் ? ஆக ஞானி கட்டுரைக்கு ஷங்கர் படத்தை உதாரணமாக காட்ட இயலாது . சொந்த வாழ்க்கையில் நேர்மையான ஆளாக இருந்து , கறுப்பு பணத்தை ஆதரிக்கும் படம் எடுத்தால் , அதுதான் தவறு . அதைத்தான் ஞானி சொல்கிறார்
வெளி ஊர்ல இருக்கேன் ப்ரபாகர் படம் பாக்கல இன்னும் பார்த்தபிறகு தான் ஒழுங்கான பின்னூட்டம் இட இயலும் என நினைக்கிறேன்.
'முத்து படம் ஜப்பானில் ஓடியதே மீனாவுக்காகத்தான்' இப்படிச் சொன்ன ஞாநியை எனக்கென்னவோ நேர்மையான மனிதராகத் தெரியவில்லை பிரபா.
செல்வராகவன் படத்துல, கல்லூரியில படிக்கும் பையனும் பொண்ணும் பரீக்ஷைக்குப் படிக்கிராங்களாம். எங்கே? அந்த பெண்ணோட வீட்டு மாடியில, கதவை சாத்திகிட்டு, நாடு ராத்திரியில. அவங்க அப்பா ஹார்லிக்ஸ் கலந்து ரெண்டு பேத்துக்கும் குடுத்திட்டு கதவை சாத்திட்டு நல்லா படிங்கன்னு சொல்லிட்டு போயிடறாராம். இந்த மாதிரி படம் எடுத்தவன் வீட்டுப் பெண்களை, அவர்கள் ஆண் நண்பர்களுடன் இந்த மாதிரி இருக்க விடுவானுங்களா? யாருக்கு இந்த மாதிரி படம் எடுக்கிறானுங்க? சமூகம் உருப்படுவதாற்க்கா? இவன் எடுக்கிற எல்லா படத்திலும் இப்படியேதான் கொக்கு மாக்காகவே எடுக்கிறான். இவனுங்களை சைக்கோ என்று பலர் சொல்கிறார்கள், அது தவறே இல்லை என்று தோன்றுகிறது.
A beautiful mind is a biography of john forbes nash. And its a real life story. Even when i was watching, mayakkam enna i didnt think abt this movie. Anyway selvaraghavan wud hav copied the concept but the screenplay wise its different.
தைர்யமாக பல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க!அதுக்கு முதல் பாராட்டு, மேல் மட்ட மக்களிடம் நடக்கும் ஒரு சில விஷயங்களை விலாவரியாக திரை படம் எடுத்து காசு சம்பாதித்து , நடுத்தர மக்களை ( இளைஞ்சர்களை ) படாய்படுத்தும் இந்த செல்வராகவன் போன்றோர் . அதன் விளைவுகளை நினைத்து பார்ப்பதில்லை . எல்லாமே அப்படிதான்னு எல்லாரையும் நினைக்க வைத்து தவறு செய்ய தூண்டுவதாகவே இருக்கிறது . தவறு என்று நினைபவனையும் தவறு இல்லை என்பதாக நினைக வைக்கின்றது இன்றைய படங்கள் .
ம்ம்ம் ஞானிய பத்தி எனக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது, அதனால இதுல கருத்து சொன்னா நல்லாவும் இருக்காது, நெக்ஸ்டு மீட் பண்ணலாம்
நிற்க... இதுவரைக்கும் செல்வராகவன் காப்பியடித்து படமெடுப்பவர் என்று நான் நினைக்கவில்லை//
.
.
கிளாடியேட்டர் 300 அபோகலிப்டோ போன்ற படங்களின் மிக்ஸ் தான் ஆயிரத்தில் ஒருவன்!
*
காதல் கொண்டேன் குணா பட உல்டா!
*
துள்ளுவதோ இளமை எல்லா சகிலா படங்களின் கலவை!
*
புதுபேட்டை city of god
@சி.பி.செந்தில்குமார்
// செல்வராகவன் தன் பட விமர்சனத்தையே தாங்கிக்கொள்ள முடியாமல் என் தளத்தில் அனானி கமெண்ட் போட்டிருக்கிறார்.. ட்விட்டரில் லிங்க் குடுப்பவர்கள் அவர் படத்துக்கு சாதகமா இருந்தால் RT செய்யறார் //
ஹி... ஹி... இதெல்லாம் வேற நடக்குதா... அனானியா கமெண்ட் போட்டவர் அவர்தான் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்...
@ROSHAN , MUMBAI
// தனது பதிவை எப்படியாவது , எதையாவது வைத்து ஒப்பேற்ற வேண்டும் . FOR EX UR பிரபா ஓயின் ஷாப் , பார்த்த VIDEO , கேட்ட பாட்டு , என்று எதையாவது copy அடித்து ஒப்பேற்ற வேண்டியது . இதுவும் தப்பு தான் . ALL MOST ALL BLOGGERS doing thaT //
ரொம்ப அபத்தமா இருக்கு... என்னுடைய பிரபா ஒயின்ஷாப்பிலோ அல்லது மற்ற பதிவர்களின் கலவை பதிவுகளிலோ மற்றவர்கள் படைப்பை காப்பியடித்து இது என்னுடைய படைப்பு என்று போட்டுக்கொள்வதில்லை... காசு கொடுத்து சந்தாதாரராகும் இணையதளங்களில் இருந்து கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்வதுமில்லை... ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களில் வெளிவரும் செய்திகளை படைப்புகளை அவரவர் நேரடி பெயர்களோடு இணைப்புகளோடு தானே வெளியிடுகிறோம்...
@ROSHAN , MUMBAI
// Regarding ஞானி , பெயரில் மட்டுமே ஞானத்தை கொண்டவர் . //
அவருடைய புனைப்பெயர் ஞாநி... ஞானி அல்ல...
இதென்ன ஜீன்ஸ் படத்தில் வரும் மாதேஷ் மாதிரி ஒவ்வொருத்தரிடமும் சொல்ல வேண்டி இருக்கிறது...
@ROSHAN , MUMBAI
// எந்த PRODUCT ம் மக்கள் விருப்பினால் மட்டுமே நிலைக்க முடியும் I MEAN HIT ஆக முடியும் அது SHOE ஆக இருந்தாலும் சரி அல்லது பாட்டாக இருந்தாலும் சரி> CREATE பண்ணும் விசயங்களுக்கு INTIAL HYPE மட்டுமே இருக்கும் AFTER ALL மக்கள் விரும்பினால் மட்டுமே IT WILL BE ஹிட் . //
இந்த விஷயம் ஷூக்களுக்கு வேண்டுமானால் செட்டாகலாம்... சினிமாக்களுக்கு அல்ல... இப்பொழுதெல்லாம் ட்ரைலர், விளம்பரங்கள், பேட்டிகள், இந்தமாதிரியான பாடல்கள் போன்றவற்றின் மூலம் இனிஷியல் ஹைப் கொடுத்துவிட்டாலே போதும் முதல் மூன்று நாட்களில் போட்ட பணத்தை எடுத்துவிடுவார்கள்...
@வினோத்
// nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com //
வினோத்... நீங்க ப்ளீஸ் எல்லாம் சொல்றதுக்கு முன்னாடியே நான் உங்க ப்ளாக்கை பார்த்துட்டேன்... எனக்கும் உங்கள் Genreக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் பாலோயராக இணையவில்லை...
@! சிவகுமார் !
// யோவ்.. மிஷ்கின் கிகுஜிரோவை இன்ஸ்பயர் செய்யல. இன்ஸ்பயர் ஆனதா சொன்னாரு. //
மொழி பிதுங்கிவிட்டது...
// யாராவது கேள்வி கேட்டா 'என் பழைய இடுகையை படிக்கவும்' அப்டின்னு அடிக்கடி சொல்லிட்டு இருக்கீங்க பிரதர். ஆனாலும் உங்களுக்கு ரவுசு ஜாஸ்தி. //
திரும்பத்திரும்ப சொல்றதுக்கு கடுப்பா இருக்கு...
@பாலா
// கண்டிப்பாக ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒரு காட்சியை உருவி இருந்தாலும் அதுவும் காப்பிதான். மயக்கம் என்ன படத்தின் காட்சிகள் எந்தெந்த படத்தில் இருந்து திருடப்பட்டது என்று கூறுவது சரியாக இருக்கும். //
மயக்கம் என்ன படத்தைப் பொறுத்தவரையில் இதுவரைக்கும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை...
ஆயிரத்தில் ஒருவன் படம் எங்கெங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறதென பின்னூட்டத்திலேயே ஒருவர் சொல்லியிருக்கிறார்....
@மயிலன்
// தனிப்பட்ட முறையில் பெரிய சினிமா அறிவு ஏதுமில்லாத முதல் நாள் டிக்கெட்டிற்கு அடித்துக்கொள்ளும் ஒரு மிக சராசரி இரசிகனான எனக்கே இவ்விரு படங்களின் ஒற்றுமை விளங்குவதால், செல்வாவை புத்திசாலி திருடன் என்று ஒப்புக்கொள்ள இயலவில்லை... //
உங்க தன்னடக்கம் எனக்கு பிடிச்சிருக்கு...
// a beautiful mind படம் பாக்க நெனச்சா தயவு செஞ்சு subtitle இல்லாம பாத்துடாதீங்க..russel crowe கொய்யால என்ன பேசுறான்னே புரியாது..செல்வா பாணில சொல்லணும்னா அவன் ஒரு 'ஆய்' வாயன்...:) //
ஹி... ஹி... இப்போதைக்கு பாக்குறதா இல்லை... ஏற்கனவே நிறைய படங்கள் லிஸ்டில் இருக்கின்றன...
@பார்வையாளன்
// சகோதரா . ஞானி கட்டுரையின் அடிநாதம் என்னவென்றால் பொறுப்பற்றவர்களாக திரையில் நடித்து இளைஞர்களை கெடுக்கிறார்கள் என்பதே .இந்த ஹீரோக்கள் சொந்த வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை . ஷங்கர் தனி வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் , திரையில் நல்ல விஷயத்தைதானே சொன்னார் ? ஆக ஞானி கட்டுரைக்கு ஷங்கர் படத்தை உதாரணமாக காட்ட இயலாது . சொந்த வாழ்க்கையில் நேர்மையான ஆளாக இருந்து , கறுப்பு பணத்தை ஆதரிக்கும் படம் எடுத்தால் , அதுதான் தவறு . அதைத்தான் ஞானி சொல்கிறார் //
நீங்க கட்டுரையின் முதல் பாதியையும் இரண்டாவது பாதியையும் குழப்பிக்கிட்டு என்னையும் நல்லா குழப்பி இருக்கீங்க...
அதாவது ஹீரோக்கள் பொறுப்பற்றவர்களாக நடித்து இளைஞர்களை கெடுக்கிறார்கள் - இது முதல் பாதி...
ஷங்கர் போன்ற இயக்குனர்கள் ஊருக்கெல்லாம் மட்டும் உபதேசம் செய்துவிட்டு அவர் அந்த உபதேசங்களை பின்பற்றுவது பற்றி சிறிதும் யோசிக்காமல் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்...
இது குறித்து அயோக்கியர்களும் முட்டாள்களும் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட வேண்டும்... ஆனால் அந்த புத்தகத்தை யாருக்கு இரவலாக கொடுத்துவிட்டேன்... #its a coincidence damid
FYI, ஞாநி குறிப்பிடும் அந்த அயோக்கியர்கள் லிஸ்டில் உங்க தலைவரும் இருக்கிறார்...
@Jayadev Das
// 'முத்து படம் ஜப்பானில் ஓடியதே மீனாவுக்காகத்தான்' இப்படிச் சொன்ன ஞாநியை எனக்கென்னவோ நேர்மையான மனிதராகத் தெரியவில்லை பிரபா. //
அவர் அப்படிச்சொன்ன கட்டுரையின் இணைப்பு இருந்தால் தரவும்...
@வடக்குபட்டி ராமசாமி
// புதுபேட்டை city of god //
இதை மட்டும் தயவு செய்து சொல்லாதீங்க ப்ளீஸ்...
@பார்வையாளன்
ஞாநியின் அந்த புத்தகத்தில் இருந்து ஷங்கர், சுஜாதா, பாய்ஸ் பற்றிய எழுதிய ஒரு கட்டுரை மட்டும் இணையத்தில் கிடைத்தது...
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203101010&format=print&edition_id=20031010
///// நானும் மனிதன், நீயும் மனிதன். என்னிடம் ஏன் ஆட்டோகிராப் வாங்குற....? என்று கேட்டார். /////
நீங்க தப்பீட்டிங்க போல... நாங்கள் அவர் எழுத்துக்களில் மட்டுமே முகத்தை பார்க்க வேண்டியது தான்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
WHEN ENTHIRAN RELEASED , NDTV HINDU CHANNEL ORGANISED A DEBATE Reg Enthiran . ஞாநி & சுதாங்கன் ( IND EXP GROUP ) SPEAK ABOUT MUTHU SUCESS STORY IN JAPAN . KINDLY SEE THE LINK OR GO TO YOU TUBE & SEARCH THERE .
http://www.youtube.com/watch?v=MBGuFKMXvwk
REG ஞாநி குறிப்பிடும் அந்த அயோக்கியர்கள் லிஸ்டில் உங்க தலைவரும் இருக்கிறார் : மஞ்சள் காமாலை வந்தவனுக்கு , பார்ப்பது எல்லாம் மஞ்சள் ஆக தான் தெரியும் , அது போல் தான் இவருக்கும் .
REG இந்த விஷயம் ஷூக்களுக்கு வேண்டுமானால் செட்டாகலாம்... சினிமாக்களுக்கு அல்ல... . I ALSO SAID THE SAME . இனிஷியல் ஹைப் கொடுத்துவிட்டாலே போதும் முதல் மூன்று நாட்களில் போட்ட பணத்தை எடுக்கலாம் , ஆனால் PROFIT IE HIT OR SUPER HIT OR SUPER DUBER HIT OR BLOCK BUSTER will BE DECIDED , WHEN PEOPLE LIKES IT .
என்ன நண்பா காட்டுக்குள் எடுத்தால் அபோகலிப்டோ, போர்க்கள காட்சி என்றால் 300, கிளாடியேட்டர் என்றால் என்ன செய்வது? இவை எல்லாம் அந்த படங்களில் இருந்து இன்ஸ்பைர் ஆனது என்று சொல்லலாமே? அப்படியே உருவிய காட்சிகள் எதுவும் உண்டா?
ஒரே ஒரு கேள்வி. நீங்கள் பிரபு நடித்த வியட்நாம் காலனி படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது அப்படியே அவதார் படத்தோடு ஒத்துப்போகும். சரிதானே? இப்போ கேமரூன் காப்பி அடித்தார் என்பீர்களா?
ROSHAN , MUMBAI சொன்ன வீடியோவில 12 வது நிமிடத்தில் ஞாநி "Muthu was a hit in Japan, let us not hide the fact, because of Meena....." அப்படின்னு சொல்லுறாரு பிரபா. அது சரி ஊருக்கே தெரிஞ்ச இந்த மேட்டர் உனக்கு எப்படி தெரியாமப் போச்சி?
http://www.youtube.com/watch?v=MBGuFKMXvwk
முத்து ஜப்பானில் ஓடியதே மீனாவுக்காகத்தனாம். ரம்யா கிருஷ்ணன் மட்டும் இல்லாம இருந்திருந்தா படையப்பா ஓடியே இருக்காதாம். இந்த மாதிரி ஸ்டிராங் பொம்பிளை கேரக்டர் இல்லாத ரஜினி படங்கள் சரியா ஓடுறதே இல்லியாம். என்னதான் ஒரு மனுஷன் மேல காண்டு இருந்தாலும் இப்படி கேனத்தனமாவா ஒருத்தர் பேசுவாரு? இந்த மாதிரி இருக்கிறவங்க சொல்லும் சமாசாரங்களை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிக்கணும்... :(
"ஷங்கர் போன்ற இயக்குனர்கள் ஊருக்கெல்லாம் மட்டும் உபதேசம் செய்துவிட்டு "
சினிமாவில் சொல்வதை நிஜ வாழ்க்கையில் எதிர்பார்ப்பது எம்ஜியார் காலத்தோடு வழக்கொழிந்து விட்டதே?! சுய நலவாதியாக மங்காத்தாவில் அஜித் நடித்தார்.. ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு , தானே பிரியாணி செய்து கொடுத்தார்.. நிஜ வாழ்க்கை வேறு. சினிமா வேறு நண்பா..
சினிமாவில் சொல்வதை நிஜ வாழ்க்கையில் எதிர்பார்ப்பது எம்ஜியார் காலத்தோடு வழக்கொழிந்து விட்டதே?!//
.
.
அது முழுக்க உண்மை!நடிகரின் படங்களை பார்க்கலாம்!அதோடு நிருத்திகனும்!ஒட்டு போட க்யூவில் நின்னார் அதனால் அவர் மாமனிதன் பிரியாணி போட்டார் அதனால் மனித நேய பண்பாலர்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்!
*************************************
// யோவ்.. மிஷ்கின் கிகுஜிரோவை இன்ஸ்பயர் செய்யல. இன்ஸ்பயர் ஆனதா சொன்னாரு. //
மொழி பிதுங்கிவிட்டது...
*
*
ஹா ஹா !செம நெத்தியடி!
*******************************
// புதுபேட்டை city of god //
இதை மட்டும் தயவு செய்து சொல்லாதீங்க ப்ளீஸ்...
*
*
சாரி!இப்படிதான் சொல்லிக்கிட்டு திரியுறாங்க!அந்த படத்தை கேவலபடுத்தும் படி ஆகிவிட்டது போல!
*******************************
அவர் அப்படிச்சொன்ன கட்டுரையின் இணைப்பு இருந்தால் தரவும்....////
.
.
நம்மாளுங்க ஆதாரம் கேட்டா ஜகாதான்!
\\நம்மாளுங்க ஆதாரம் கேட்டா ஜகாதான்! \\ஞாநி பேசிய வீடியோவின் லிங்க் தரப்பட்டுள்ளது, ஆதாரமில்லாமல் சும்மா அள்ளி விடும் வேலையை நாம் செய்வதில்லை நண்பரே, பின்னூட்டங்களைப் படிக்காமலேயே குற்றம் சுமத்த வேண்டாம்.
ஐயோ தெய்வ குத்தம் ஆகி போச்சா!சமூகம் என்னை மன்னிக்கணும்!
யாரும் உங்களை குற்றம் சொல்லவில்லை, கமெண்டுகளைப் படிச்சுகிட்டு வந்த நீங்க முதல் சிலவற்றை மட்டும் படிச்சிட்டு ஜம்ப் பண்ணாம கடைசி வரைக்கும் படிச்சிட்டு உங்க குற்றச் சாட்டை வைத்திருக்கலாம்னுதான் சொன்னேன்.
latest postஎன்னுதுல உங்க பதிவின் ஒரு படத்தை உபயோகிச்சிருக்கேன் நன்றி:)
ஞானி நல்ல எழுத்தாளர் தான் என்பதில் சந்தேகமில்லை , அதற்காக அவர் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமும் இல்லை..." கொலவெறி " பப்ளிசிட்டி என்றால் ஞானியும் அதே பப்ளிசிடிக்காக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விசயத்தை அனாவசியமாக திட்டி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்பதும் நிஜம் ... அதே போல் மயக்கம் என்ன அரை மயக்கமாய் இருந்தாலும் செல்வராகவன் ' A BEAUTIFUL MIND " இல் இருந்து சுட்டார் என்று சொல்வதெல்லாம் ஓவர்...'கோடம்பாக்கம் " என்ற ஒரு படமும் மற்றும் பல விக்ரமன் படங்களுள் இதே படத்தோடு ஒத்துபோவதால் அதிலிருந்து சுட்டார் என்று சொல்லலாமா ?...கார்த்திக் , யாமினி கேரக்டர்களை மனதில் பதிய வைத்தற்காகவே அவரை பாராட்டலாம் ... செல்வாவின் மேகிங்கே தனி ரகம் ...மயக்கம் என்ன - அரை மயக்கம் ...http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.
* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.
* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.
* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
கொலவெறி " பப்ளிசிட்டி என்றால் ஞானியும் அதே பப்ளிசிடிக்காக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விசயத்தை அனாவசியமாக திட்டி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்பதும் நிஜம் .///
.
.
ஆமா தமிழ்நாட்டில் எழுத்தாளர் நிலை உங்களுக்கு தெரியலைன்னு விளங்குது!அய்யா தனுசு இப்படி செய்தால் ஏழு கோடி சம்பளம் மற்றும் பிற பட ஒப்பந்தங்கள் மேலும் பாடுவதற்கு,பாடு எழுதுவதற்கு என்று தனி தனியாக இனி காசு வாங்குவார்!ஞாநிக்கு அப்படி எதுவும் கிடைக்காது என்பதே உண்மை!அது அவருக்கும் தெரியும்!எழுத்தாளனுக்கும் நடிகருக்கும் வித்யாசம் தெரிந்து கொள்ளவும்!
பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.///
.
.
செம காமெடி கட்டுரை!
வணக்கம் நண்பா,
நலமா?’
வேலை பிசியால் தங்கள் வலைப் பக்கம் வர முடியலை.
மன்னிக்கவும்.
தமிழ்சினிமாவின் யதார்த்தத்தினைச் சொல்லுகின்ற அருமையான கட்டுரையினைத் தந்திருக்கிறீங்க.
ஞானி கூறும் பாடல்கள், படம் மூலம் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் உண்மையே.
ஒரு சின்னப் பையன் சின்னப் பொண்ணைப் பார்த்து டாடி மம்மி வீட்டில் இல்லை தட போட யாரும் இல்லே என்று இடுப்பில் கை வைத்து பெரிய ரகளை பண்ணியதாக எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளோர் சொல்ல அறிந்திருக்கிறேன். ஹே..ஹே...
இதுவும் சினிமாவின் விளைவு தானே.
செல்வராகவனின் படம் நான் பார்க்கவில்லை. ஆனாலும் காப்பி பேஸ்ட் என்பது தவறு தான்!
கேரளத்தான் கடையை அடித்து நொறுக்குவது வேஸ்ட்!அவன் கடைகளை மொத்தமாக புறக்கணிக்கவும்#இதை நண்பர்களுக்கும் சொல்லுங்க
http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
நன்றி பிரபா, என்ன கொஞ்ச நாட்களாக எழுதவில்லையே, அலுவலகப்பணி தான் காரணமா?
இதெல்லாம் தடுக்க மக்கள்தான் மாறனும் மக்கா!...
நல்ல அலசல்
நீங்கள் சொல்வது போல தெளிவானவர்கள்
எதை எங்கு வைப்பது என்பதை புரிந்து கொண்டு
கடந்து விடுகிறார்கள்.ஆனால் பெரும்பாலானவர்கள்தான்
அதிகம் பாதிக்கப்பட்டுப் போகிறார்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment