9 January 2012

பிரபா ஒயின்ஷாப் – 09012012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னை புத்தகக் கண்காட்சியில் “நம்ம சென்னை” என்ற சிற்றிதழ் ஒன்றினை வாங்கினேன். லோக்கல் ஏரியாக்களைப் பற்றிய அரிய செய்திகளை அறியக் கொடுக்கிறது. தியாகராஜ பாகவதர், சென்னையின் திரையரங்குகள் போன்ற கட்டுரைகள் ரசிக்க வைத்தன. முக்கியமாக சென்னைத் தமிழை இழிவு படுத்துவது நியாயமா என்ற கட்டுரையில் செய்திருக்கும் சொல்லாராய்ச்சி சென்னைவாசிகளை தலைநிமிரச் செய்கிறது. மறுபடி ஒருமுறை செல்லும்போது பழைய இதழ்களையும் அள்ளிக்கொண்டு வரவிருக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் நண்பர்கள் தவறவிடாதீர்கள்...!

பதிப்பகத்தார் கவனத்திற்கு:
நண்பன் ஒருவனின் மூலமாக அவனது தாத்தாவும் பழம்பெரும் எழுத்தாளருமான பிலோ. இருதயநாத் (நம்மள மாதிரி சொருகின அடைமொழி இல்லை) அவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நண்பன் சொன்னது போக, கூகிளில் தேடினேன். ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் பற்றி நிறைய ஆராய்ச்சி, பயணக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நான் படித்த சுட்டியின் படி, இதுவரை இவர் 63 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 37 மட்டுமே வெளிவந்த நிலையில் மற்றவை இன்னமும் கையெழுத்து பிரதிகளாக தூங்கிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நரேன் சொன்னதுபோல, பத்ரி அல்லது கே.ஆர்.பி & ஓ.ஆர்.பி குரூப் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொடர்புள்ள சுட்டி: பிலோ. இருதயநாத் பற்றி எஸ்.ரா

ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறேன்... விமல் நிஷா அகர்வால் நடிக்கும் இஷ்டம் படத்தில் ஒரு உதட்டு முத்தக்காட்சி. கதையின் அவசியம் கருதி (!!!) மேற்படி காட்சியில் நடிக்க ஓகேயிருக்கிறார் நடிகை. இதாண்டா சான்ஸ்ன்னு சுமார் பத்துமுறை உதட்டுடன் உதடு பதித்துவிட்டாராம் விமல் (பாவிப்பய). இங்கே இப்படின்னா தெலுங்கில் மகேஷ் பாபு – காஜல் நடிக்கும் பிசினஸ்மேன் படத்தின் கதைக்கும் அதே அவசியம் வந்துவிட மகேஷ் பாபு சமத்துப்பிள்ளையாக (அவ்வ்வ்வ்) அவருடைய மனைவியிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு கிஸ்ஸின்னாராம். நியாயப்படி இந்த ரெண்டு ஹீரோக்களுக்கும் சம்பளமே கொடுக்கக்கூடாது. பூரா காசும் கழிஞ்சிருக்கும்...!

என் வலைப்பூவின் பக்கவாட்டில் புதிதாக உருவெடுத்திருக்கும் “படித்ததில் பிடித்தது” என்ற பகுதியை பார்த்திருப்பீர்கள். (இல்லையென்றால் பார்க்கவும்). அங்கே சமீபத்தில் நான் படித்து அளவுக்கு அதிகமாக ரசித்த இடுகைகளை தொகுத்திருக்கிறேன். அதனினை தொடர்ந்து அப்டேட் செய்வேன் என்றும் நம்புகிறேன். வாசிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

ஜொள்ளு:
உதட்டுக்குள்ளே மதுவின் ரசம் ரசம்...! விழியிரண்டில் மயக்கும் விஷம் விஷம்...!
ட்வீட் எடு கொண்டாடு:
writercsk SaravanakarthikeyanC
உதடு தடித்த பெண்கள் எதிர்பார்ப்புக்கு மாறாய் மிக மென்மையாகவே முத்தமிடுகிறார்கள்..

v2wit v2wit
500 நண்பர்கள் பேஸ்புக்கில் இருந்து என்ன பிரயோசனம்? கடலை போடணும்னு நினைக்கிறப்போ ஒரு பொண்ணு கூட சாட்ல இல்லியே !

siva_says siva subramani
என் காதல் ஒரு தொறந்த வூடு..நீ நாயா வந்து நொழஞ்சுப் பாரு..! #கழிசடக்கவுத..

itsBritto குழந்தபையன்
பெண் என்றால் பூ போல இருக்கனும் என்று சொல்லுபவர்களுக்கு.. அது சாய்ந்தரம் வாடி விடும் என்பது தெரியாதா???

அறிமுகப்பதிவர்: மனதில் உறுதி வேண்டும்
அஷ்டாவதானி டி.ராஜேந்தர் பற்றிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடுகையில் எனக்கு அறிமுகமானார். சிதறல்கள் என்ற பெயரில் இவர் எழுதிவரும் கலவை இடுகைகள் நைஸ். மனிதருக்கு டி.ஆர் மீதுள்ள பாசத்தை அவரது மற்றொரு இடுகையான ஒரு 'சன் TV நேசனின்' புலம்பல்... பறைசாற்றுகிறது. பெரும்பான்மையினர் கிரிக்கெட் பின்னால் ஓடிக்கொண்டிருக்க இவர் கபடி பற்றி விரிவாக ஓர் இடுகை எழுதியிருக்கிறார். தமிழ் பதிவுலகத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளர் கிடைத்துவிட்டார்.

கொலவெறி – தி சூப்பர்ஸ்டார் வெர்ஷன்
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஒருநாள் எதேச்சையாக பண்பலையில் இந்தப்பாடலை கேட்க நேர்ந்தது. இம்ப்ரஸ் ஆகி யூடியூபில் வீடியோவை தேடிக்கண்டுபிடித்தால் சூப்பர்ஸ்டாரும் லேடி சூப்பர் ஸ்டாரும் அஹ்... கஜகஜா.

இந்தப்பாடலின் கடைசி ஒன்றரை நிமிடங்கள் கேட்க தவறினால் நீங்கள் ஒரு சூப்பர் சிங்கரின் பர்பாமன்ஸை தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்...!

கவுண்டர் & சத்யராஜ் AS எந்திரன்
நடிகர்களை இமிடேட் செய்பவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பொதுவாக சிலரை இமிடேட் செய்வதுண்டு. ஆனால் கவுண்டமணி, சத்யராஜ், கார்த்திக் மாதிரியெல்லாம் எல்லோரும் இமிடேட் செய்துவிட முடியாது. பூம் பூம் ரோபோ பாடலுக்கு கவுண்டரும் சத்யராஜும் ஆடியிருந்தால்...

எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் கலங்க சிரிப்பு வருகிறது... அல்டிமேட்.

காஸ்ட்லி கழிவறை
விலை உயர்ந்த பளிங்கு கற்களால் செய்யப்பட்ட கழிவறை...!
கண்ணதாசன் சொன்னதுங்க:
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத்துவங்குகின்றன...!

டேமேஜர் ஜோக்:
“எங்க மேனேஜர் கங்காரு மாதிரி...!”
“ஏன் மச்சி...?”
“எப்பவும் குட்டியோட தான் இருப்பார்...!”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

50 comments:

நாய் நக்ஸ் said...

NAIGHT-LA PATHIVU POTTU
ENGA THUKKATHA KEDUKKUREENGA...

Anonymous said...

'நம்ம சென்னை' வாங்கணும்.

Anonymous said...

//காஸ்ட்லி கழிவறை//
கக்கூஸ் மேல உனக்கு ஏய்யா இப்படி ஒரு மோகம். ப.ரா.வோட பழகியே இப்படி 'ஆயி'ட்ட!!

நாய் நக்ஸ் said...

SUNDAY-NA ROOM PODUVOM.... YOSIPPOM ...
INNUM PALA PALA SANGATHIGAL
PARPPOMNA---NEER ENNADAANA
POST POTTUKITTU IRUKKEERU....

Anonymous said...

//
NAAI-NAKKS said...
NAIGHT-LA PATHIVU POTTU
ENGA THUKKATHA KEDUKKUREENGA..//

யாருன்னு தெரியல..பாவம். தனியா கத்திட்டு இருக்காரே. :-)))

நாய் நக்ஸ் said...

YOOOWWW---SIVA...ENNA RENDU PERUM
PESI VAICHIKKITTU ONNA IRUKKEENGALA????

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// NAIGHT-LA PATHIVU POTTU
ENGA THUKKATHA KEDUKKUREENGA... //

நைட்டு தான் போடனும்...

// SUNDAY-NA ROOM PODUVOM.... YOSIPPOM ...
INNUM PALA PALA SANGATHIGAL
PARPPOMNA---NEER ENNADAANA
POST POTTUKITTU IRUKKEERU.... //

இன்னைக்கு சண்டே இல்லை மண்டே...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// கக்கூஸ் மேல உனக்கு ஏய்யா இப்படி ஒரு மோகம். ப.ரா.வோட பழகியே இப்படி 'ஆயி'ட்ட!! //

ப.ரா இல்லை... பட்டாபட்டி... கழிவறை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றினை தயார் செய்துக்கொண்டிருக்கிறேன்...

நாய் நக்ஸ் said...

VARUVEN SIVA...TUESDAY,,...
2 PATHIVODA VARUVEN...
KONJA NAAL
OL
VARALAINA...PECHAI PARU...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// YOOOWWW---SIVA...ENNA RENDU PERUM
PESI VAICHIKKITTU ONNA IRUKKEENGALA???? //

நாங்க ரெண்டு பேரும் ஒரே "குரூப்"...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// VARUVEN SIVA...TUESDAY,,...
2 PATHIVODA VARUVEN... //

நீங்க வருவீங்க... ஆனா கரண்ட் வரணுமே...

நாய் நக்ஸ் said...

BROWSING CENTER POIYACHUM.....
PATHIVODA VARUVEN.....

நாய் நக்ஸ் said...

BYE...GOOD NIGHT...
KAALANKARTHAALA 8.30-KU
THUUNGARA NERATHULA
OFFICE VACHIRUKKAANUGA...PAVINGA...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
நல்லிரவு தல...

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
சுவையாகவும், சூடாகவும் இருக்கிறது ஒயின்ஷாப்.
கூடவே போட்டோ மூலமாகவும், பாடல் மூலமாகவும் லைட்டா சூடு கிளப்புது,

ரஜினி சார் குரலில் இறுதி நேர வரிகள்...ரசித்தேன்.
சென்னை புத்தகம் உங்க ஊருக்கு வரும் போது வாங்கி படிக்க ட்ரை பண்றேன்.
படித்ததில் பிடித்தது நல்ல முயற்சி. தொடர்ந்தும் செய்யுங்க.

டுவிட்ஸ், அறிமுகப் பதிவர் இரண்டும் அருமை.

ஜோக்ஸ் பார்த்திட்டிருக்கேன்.

நிரூபன் said...

ரோபா பாடல் கவுண்டமணி சாரை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

ஜோக்கும் அருமை.

Prem S said...

டேமேஜர் மேனேஜர் ஜோக்ஸ் அருமை .உங்க மேனேஜரும் இப்படியா பாஸ்

Anonymous said...

இன்னா பிரபா பிகர் ஆன்ட்டியாட்டம் இருக்கே, ரசனையை வளர்த்துக்கப்பா. புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லையே.

ஹாலிவுட்ரசிகன் said...

அட அட அட ... சூப்பர் ஸ்டாரின் அந்தப் பாட்டுக்கு முதலில் தனியா ஒரு தாங்க்ஸ். இன்னக்கி தான் கேட்கிறேன். யார் குரல் கொடுத்தது?

வொயின்ஷாப் சில்லுன்னு கிக்கா இருக்கு.

ஹாலிவுட்ரசிகன் said...

அருமையான ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி.

டீ.ஆர் கட்டுரை கலக்கல்.

சமுத்ரா said...

சினிமாவைக் குறைக்கவும்.
சினிமா இல்லை என்றால் நிறைய பேர் படிக்க மாட்டார்கள் என்பது தெரியும்.
இருந்தாலும் சினிமா விட்டு நிறைய விஷயங்களை எழுதவும்,

Anonymous said...

பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html

Unknown said...

ரோபோ சங்கர் டாப்..

இந்திரா said...

அந்த கழிசடக்கவுத..

உண்மையிலேயே கழிசட தான்..

MANO நாஞ்சில் மனோ said...

நியாயப்படி இந்த ரெண்டு ஹீரோக்களுக்கும் சம்பளமே கொடுக்கக்கூடாது. பூரா காசும் கழிஞ்சிருக்கும்...!//

உங்க நேர்மையை பார்த்து கண்ணுல தண்ணியா கொட்டுது ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

நமக்குதான் புஸ்தகம் வாங்கி படிக்க ஒரு புத்தக நிலையமும் இங்கே இல்லை, நீங்க எல்லாரும் வாங்கி படியுங்க நான் சென்னை வரும்போது எனக்கு பரிசா ஓசியில தரனும் ஓக்கேவா...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது யாரு நிஷா அகர்வால்? படம் போட்டிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ! சிவகுமார் ! said...
//காஸ்ட்லி கழிவறை//
கக்கூஸ் மேல உனக்கு ஏய்யா இப்படி ஒரு மோகம். ப.ரா.வோட பழகியே இப்படி 'ஆயி'ட்ட!!//////

யோவ் அந்த கக்கூஸ் படத்த போனவாரமே நாங்க g+ல போட்டுட்டோம்....... ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// கக்கூஸ் மேல உனக்கு ஏய்யா இப்படி ஒரு மோகம். ப.ரா.வோட பழகியே இப்படி 'ஆயி'ட்ட!! //

ப.ரா இல்லை... பட்டாபட்டி... கழிவறை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றினை தயார் செய்துக்கொண்டிருக்கிறேன்...///////

வெளங்கிரும்..... அந்த கழிவறை.... (ஆராய்ச்சி எப்படி, வில்பர் சர்குணராஜ் மாதிரியா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீடியோக்கள்லாம் அப்புறமா பார்க்கிறேன்.....!

கடம்பவன குயில் said...

செலக்டட் ட்விட்ஸ் சிரிக்க வைத்தது. ரோபோ பாடலுக்கு கவுண்டரும் சத்தியராஜ் மாதிரியும் அச்சுஅசலாக செய்து காட்டி அசத்திவிட்டார்கள்.

கலவையான ரசனை.

Yoga.S. said...

Jollu sooppar!I like it!!!

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
மிக்க நன்றி நிரூபன்... எப்போ சென்னை வர்றீங்க...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// டேமேஜர் மேனேஜர் ஜோக்ஸ் அருமை .உங்க மேனேஜரும் இப்படியா பாஸ் //

இல்லைங்கோ... அது வெறும் சோக் மட்டும்தான்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// இன்னா பிரபா பிகர் ஆன்ட்டியாட்டம் இருக்கே, ரசனையை வளர்த்துக்கப்பா. புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லையே. //

உங்க ரசனையை தான் டிங்கரிங் பண்ணனும் தல... அவங்களுக்கு என்ன குறைச்சல்...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// இன்னக்கி தான் கேட்கிறேன். யார் குரல் கொடுத்தது? //

என்னது யாரு பாடினதா...??? உங்களுக்கு யார் இப்படியெல்லாம் கேட்க சொல்லி கொடுக்குறது... அது ரஜினியின் சொந்தக்குரல்...

Philosophy Prabhakaran said...

@ சமுத்ரா
// சினிமாவைக் குறைக்கவும்.
சினிமா இல்லை என்றால் நிறைய பேர் படிக்க மாட்டார்கள் என்பது தெரியும்.
இருந்தாலும் சினிமா விட்டு நிறைய விஷயங்களை எழுதவும் //

எனக்கும் அந்த ஆசை இருக்கிறது தல... அதற்கு உழைப்பும் நேரமும் அதிகம் தேவைப்படுகிறது... ஒயின்ஷாப் படிப்படியாக மாற்றம் பெறும் என்று நீங்கள் நம்பலாம்...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// ரோபோ சங்கர் டாப்.. //

அப்ப பிலோ.இருதயநாத்...???

Philosophy Prabhakaran said...

@ இந்திரா
// அந்த கழிசடக்கவுத..

உண்மையிலேயே கழிசட தான்.. //

ஹி... ஹி... நல்லவேளை நான் எழுதலை...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// நான் சென்னை வரும்போது எனக்கு பரிசா ஓசியில தரனும் ஓக்கேவா...!!! //

கண்டிப்பா தருவேன் தல... நீங்க வந்தா மட்டும் போதும்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அது யாரு நிஷா அகர்வால்? படம் போட்டிருக்கலாம்ல? //

ஏற்கனவே ஒருமுறை ஜொள்ளு விட்டோமே... காஜல் அகர்வாலின் தங்கை...

// யோவ் அந்த கக்கூஸ் படத்த போனவாரமே நாங்க g+ல போட்டுட்டோம்....... ஹி...ஹி....! //

அப்ப நான் லேட்டா... So sad...

// வெளங்கிரும்..... அந்த கழிவறை.... (ஆராய்ச்சி எப்படி, வில்பர் சர்குணராஜ் மாதிரியா?) //

இல்லை சீரியஸான ஆராய்ச்சி...

Philosophy Prabhakaran said...

@ கடம்பவன குயில்
// செலக்டட் ட்விட்ஸ் சிரிக்க வைத்தது. ரோபோ பாடலுக்கு கவுண்டரும் சத்தியராஜ் மாதிரியும் அச்சுஅசலாக செய்து காட்டி அசத்திவிட்டார்கள். //

நன்றி குயிலு...

Philosophy Prabhakaran said...

@ Yoga.S.FR
// Jollu sooppar!I like it!!! //

நன்றி யோகா... நானும் லைக் பண்றேன்...

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

டுவிட்ஸ் அருமை...
Joke -:)

வாழ்த்துக்கள்...

Anonymous said...

விமல் விஷயம் நானும் கேள்விப்பட்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது.

என் வலையில் ;
அஞ்சலி அல்லது பவர்கட் - சுஜாதா
ராதிகா - சீரியல் ரஜினி

Sharmmi Jeganmogan said...

ஹலோ பிலோ.. எப்படி இருக்கிறீங்க.. வழமையா நல்ல அழகான பொண்ணுங்க போட்டா போடுவீங்க இந்த வாட்டி என்ன ஆச்சு?

Anonymous said...

\\கண்ணதாசன் சொன்னதுங்க:
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத்துவங்குகின்றன...!//


உங்களை நக்கல் விட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கீங்க பிரபா.

சமுத்ரா said...

புத்தாண்டில் ஒயின் ஷாப் இன்னும் விற்பனையிலும்
கற்பனையிலும் வளரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

பி.அமல்ராஜ் said...

வயின் ஷாப் சூப்பர் அண்ணா.. கலக்கலாக இருக்கிறது பதிவு. வாழ்த்துக்கள்.

N.H. Narasimma Prasad said...

இந்த வார 'சரக்கு' சூப்பர் பிரபா. பகிர்வுக்கு நன்றி.