24 February 2012

டிஸ்கவரி புக் பேலஸுக்கு ஒரு விசிட்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

புதுமண தம்பதிகளுக்கு பரிசளிக்க உகந்த புத்தகங்களை பரிந்துரைக்கும்படி கூகிள் கூட்டலிலும் முகமிலியிலும் கேட்டிருந்தேன். ம்ஹூம் ஒரே ஒருத்தரை தவிர யாரும் பதில் சொல்லவில்லை. ப்ளஸ்ஸிலும் ஃபேஸ்புக்கிலும் நமக்கு மருவாதையே இல்லை. (ப்ளாக்கர்ல மட்டும் என்ன வாழுதாம்...?). அதனால் நேரடியாக டிஸ்கவரி புக் பேலஸுக்கே போய் ஒருவழி பண்ணிடலாம் என்று கிளம்பினேன்.

நீண்ட நேர ஆராய்ச்சிக்குப் பிறகு தம்பதிகளுக்காக வாங்கிய புத்தகங்கள்:
1. அன்பு விதிகள் (கிழக்கு பதிப்பகம் – ரிச்சர்ட் டெம்ப்ளேர் தமிழாக்க சீரிஸ்)
அதே ரிச்சர்ட் டெம்ப்ளேருடைய காதல் விதிகள் வாங்க வேண்டும் என்பதே திட்டம் ஆனால் எவ்வளவு தேடியும் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. கடைலயே இல்லையாம்....!

2. இன்ப இல்லறம் (மருத்துவர் அல்போன்ஸ் – தாமரை பதிப்பகம்)

3. 30 நாள் 30 சமையல் (ரேவதி சண்முகம் – விகடன் பிரசுரம்)

4. Why men want sex and women need love (Allan & Barbara)
சுதன் சார், நீங்க சொன்ன Men are from mars and women are from venus புத்தகம் கிடைக்கவில்லை எனினும் இதுவும் அதே வகையறா தான்.

5. ஆளை அசத்தும் அறுபது கலைகள் (மருத்துவர் ஷாலினி – நக்கீரன் பதிப்பகம்)

இவற்றில் 1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பரிசுப்பொருள் தவிர்த்து எனது அறிவு விருத்திக்காக ஏதாவது புத்தகம் வாங்கலாமென்று தேடலானேன். அந்த புத்தகத்தின் மீதான தொடர் நெகடிவ் விமர்சனங்களே என்னை அந்த புத்தகத்தை வாங்க வைத்தது. ஆரம்பத்தில் அந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்குவது சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் ஏமாறுவதற்கு ஈடானது அதனால் யாராவது அப்பாடாக்கர்களிடம் கடன்வாங்கி படித்து சிரிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகம் நம்முடைய கலெக்ஷனில் கட்டாயம் இருக்க வேண்டுமென விரும்பி அந்த கருமத்தை வாங்கித்தொலைத்தேன். எஸ், நீங்க நினைக்கிற அதே புத்தகம்தான்...! (Mr. பிச்சைக்காரன், விமர்சனம் போடச்சொல்லி போன் பண்ணீங்கன்னா கைபர் கனவாய் வழியா லிபியாவுக்கு தப்பிச்சு போயிடுவேன்).

அதாவது இதெல்லாம் வேற ஒரு போதை...! யாருக்குமே புரியாத பின்நவீனத்துவ கவிதைகள், பவர் ஸ்டார் நடிக்கும் படுமொக்கை படங்கள், வில்பர் சற்குணராஜ் பாடல்கள், ஜெட்லி வலைப்பூ இதையெல்லாம் ட்ரை பண்ணிப்பாருங்க லைஃப் நல்லா இருக்கும்.

செம மேட்டர் ஒன்னு சொல்றேன் கேளுங்க,
“இன்று நான்
குடிக்கவில்லை
நிலவை உற்றுப் பார்த்தேன்...”

லூசுப்பய அறுபது ரூவா சரக்கை குடிச்சிட்டு எதையோ உளறுறான்னு நினைக்காதீங்க. இது மிஷ்கின் எழுதிய “நத்தை போன பாதையில்...” என்ற கவிதை தொகுப்பில் இருந்து உருவிய கவிதை. இது சாம்பிள்தான். புத்தகம் முழுவதும் இந்தமாதிரி “ஙே” கவிதைகள் தான். அங்கேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்து கழிந்தேன்.

எல்லாம் சேர்த்து பில் போட்டால் ஆயிரம் ரூபாய்க்கு கொஞ்சம் குறைவாக வந்தது. ரவுண்ட் அப் பண்ணுவதற்காக ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்றபோது அந்த புத்தகமா என்னுடைய கண்ணில் படவேண்டும். வாங்கியது – எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்.

இலியானா இடுப்பு சைஸை விட கொஞ்சமே பெரியதாக இருந்த அந்த புத்தகம் வீடு திரும்பியபின் சுமார் இரண்டு மணிநேரம் வரை தாக்குபிடித்தது. புத்தகத்தின் முதல் பாதியை கடந்தபோது எனக்கு ஒரு சினிமா நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்தது.

அதாவது என் பொண்டாட்டி எருமைநாயக்கன்பட்டியா... அவன் அண்ணன் பையனுக்கு பொண்ணு எடுத்தது நெய்க்காரன்பட்டியில... அந்த பொண்ணோட சின்னாத்தாளும் என் பொண்டாட்டியோட ஆத்தாளும் அக்கா தங்கச்சிங்க... அந்த சின்னாத்தாளோட மாமியா ஆயர்குடியிலதான் தான் பொண்ணை கட்டிக்கொடுத்திருக்கு... அதை கட்டிக்கிட்ட பையனுக்கு சேர்மேன் சித்தப்பன் முறை... (செத்தான்டா சேகர்).

தேகம் நாவல் படித்து முடித்தபோது நண்பர் ஒருவர் எப்படி இருந்தது என்று கேட்டார். இந்தமாதிரி இன்னும் இரண்டு நாவல் படித்தால் நான் முழு சைக்கோ ஆகிவிடுவேன் என்றேன். இப்போது இரண்டாவது நாவலை படித்துவிட்டேன், எக்சைலையும் வாங்கிவிட்டேன். கூடிய விரைவில் கீழ்பாக்கம்தான்.

நான் டிஸ்கவரிக்கு போனது காதலர் தினத்திற்கு மூன்று நாட்கள் முன்பு என்பதால் என்னவளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று தேடினேன். ம்ஹூம் அப்படியொரு புத்தகம் கிடைக்கவே இல்லை. வருத்தத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் வந்து, காதல் பற்றிய புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்குதே என்றபடியே அவர் எடுத்துக்காட்டிய புத்தகம் சங்கர நாராயணின் – மீண்டும் ஒரு காதல் கதை...!

யப்பா ஆள விடுங்கடா சாமீ...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

47 comments:

Riyas said...
This comment has been removed by the author.
Riyas said...

மனசு அதிக புத்தகங்கள் வாசிக்க சொல்கிறது..
பொருளாதாரம் முறைத்துப்பார்க்கிறது..

இணையத்தில் ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்..

Sharmmi Jeganmogan said...

நான் நெனைக்கற fairy புத்தகத்தைத் தானே சொல்றீங்க.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. ஹீ..ஹீ..

cheena (சீனா) said...

அட - புத்தகம் வாங்கறதுன்னா இவ்ளோ கஷ்டமா - அதான் நான் வாங்கறதே இல்ல - ஹா ஹா ஹா

பால கணேஷ் said...

பிரபா!
- menas are from mars, womens are from venus நர்மதா பதிப்பகம் வெளியிட்டதுன்னு நினைவு.
- சாருவோட நாவல் ஒண்ணை (தெரியாத் தனமா) படிச்சுட்டு அடுத்த ரெண்டு நாள் கொலவெறியோடதான் நான் திரிஞ்சேன். நீங்க சொன்ன மாதிரி சேர்ந்தாப்போல ரெண்டு கதை படிச்ச நிச்சய சைக்கோதான்!
-காதல்ன்னா சங்கர்நாராயணனா? அடடா... காதலுக்கு மொத்தக் குத்தகைதாரரான தபூ சங்கரோட புக்ஸ் எதுவு்ம் தோணலையாப்பா உங்களுக்கு?

Prem S said...

அன்பரே நீங்கள் கேட்ட நான்காவது புத்தகம் இங்கே இருக்கிறது ஆன்லைனில் வாங்கி கொள்ள கிளிக்குங்கள் கீழேFLIPKART

Unknown said...

சாரு பொத்தவம் படிக்காமே நீயெல்லாம் எப்பிடிய்யா எலக்கியவாதி ஆவ முடியுன்றேன் :)))

சாகசன் said...

இப்போது இரண்டாவது நாவலை படித்துவிட்டேன், எக்சைலையும் வாங்கிவிட்டேன் //

அடப்பாவிகளா , கீழ்பாக்கம் போறத இப்பிடியா பப்ளிகுட்டி பண்ணுவீங்க ??

இவற்றில் 1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன //

உன் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு பிரபாகரா

நேரடியாக டிஸ்கவரி புக் பேலஸுக்கே போய் ஒருவழி பண்ணிடலாம் //

உள்ளார விட்டாங்களா ??

கோகுல் said...

1, 4, 5 ஆகிய புத்தகங்கள் எனக்கும் தேவைப்படுகின்றன என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.//

நினைவில் வைச்சிக்கிறோம் பிரபா,எப்ப கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க.அப்புறம் இன்னொரு விஷயம் இதெல்லாம் எனக்கும் சீக்கிரம் தேவைப்படும்.சேந்து திருடுவோமா?

Kumaran said...

எனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் எல்லாம் இல்லிங்க சார்..வாரத்துக்கே நாலு ஐந்து படங்கள்தான் பார்க்கவே முடியுது..நல்ல பகிர்வு..நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

இந்திரா said...

புத்தக போதை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும். எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படிக்கும் சிலர்.. தேர்ந்தெடுத்துப் படிக்கும் சிலர்..
குறிப்பிட்ட வகைகளையே படிக்கும் சிலர்..
இந்த போதை எனக்கும் உண்டு. பயணங்களில் அதிகம் படிப்பேன். கடைசியில் கழுத்து வலி வந்து, கொஞ்ச நாளைக்கு புத்தகத்திற்கு தடா போட வேண்டியாகிவிட்டது.
இப்ப என்ன சொல்ல வரேன்ன்னா.... ம்ம்ம்...
பதிவு நல்லாயிருந்துச்சுங்க.. ஹிஹிஹி..

Anonymous said...

இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை ஆனால் ஒரே பின்னூட்டத்தை 100, 200 முறை காப்பி பேஸ்ட் செய்து தொல்லை கொடுக்காதீர்கள். .......
ayyoooooooo semak comedyyyyyyyyyy///


neengalam padips aa ...bookulaam vaangi padippingalaa...

naangalam paadaputhagame padikka maatomeeeeeeeeeeeeee

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா பவர்ஸ்டார் நடிக்கும் ஆனந்த தொல்லை வந்திடும். அதையே புத்தகமா எழுதி கொடுத்திடலாம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////புதுமண தம்பதிகளுக்கு பரிசளிக்க உகந்த புத்தகங்களை பரிந்துரைக்கும்படி கூகிள் கூட்டலிலும் முகமிலியிலும் கேட்டிருந்தேன். ம்ஹூம் ஒரே ஒருத்தரை தவிர யாரும் பதில் சொல்லவில்லை. //////

அவங்களுக்கு அனேகமா புத்தகம் படிக்கவெல்லாம் நேரம் இருக்காதுன்னுதான் யாரும் சொல்லல போல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வருத்தத்துடன் கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் வந்து, காதல் பற்றிய புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்குதே என்றபடியே அவர் எடுத்துக்காட்டிய புத்தகம் சங்கர நாராயணின் – மீண்டும் ஒரு காதல் கதை...!
//////

இது யாரு சார்?

N.H. Narasimma Prasad said...

ஹா ஹா ஹா. ஒரு புத்தகம் வாங்குறதுக்கு இவ்வளவு அக்கப்போரா?

ஆதவா said...

பாஸ், தமிழ்மகனின் “ஆண்பால் பெண்பால்” வாங்கிக் கொடுங்க... ரெண்டு விஷயம் நடக்கும்...

1. ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுக்குவாங்க
2. விவாகரத்து!! :( அவ்ச்ச்!!

Anonymous said...

menas are from mars, womens are from venus இது இணையத்தில் download செய்து கொள்ளலாம்

Vadakkupatti Raamsami said...

என்னவளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று தேடினேன். ம்ஹூம் அப்படியொரு புத்தகம் கிடைக்கவே இல்லை. ///
.
.
அதான் நம்ம காதல் மன்னன மாமா "பாரு புழுஞ்சுதா" புத்தகம் எதுனா பரிசளிக்க வேண்டியதுதானே?ஹீ ஹீ ஹீ!(சும்மா உம்மா காதலுக்கு வில்லனாகலாம்னு ஒரு நப்பாசைதான்)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அருமை சார். என்ன ஒரு குறைன்னா பக்கா சைவமா இருந்துச்சா... அதான்.

Vijayan Durai said...

15-2-2012 ஆனந்த விகடனில் ஒரு புத்தகம் பற்றிய விமர்சனம் படித்தேன் அது உங்கள் காதல் புத்தகங்கள் பற்றிய தேடலுக்கு தீனியாக அமையும் என்று நம்புகிறேன்"How to make anyone Fall in love with you"85 proven techniques for success
எழுதியது "Leil Lowndes"

pichaikaaran said...

தேகம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை.. ஜெய்மோகனின் காந்தி , அன்ன ஹசாரே புத்தகங்கள் படியுங்கள்.. சாத்வீகமாக , உள்ளொளியை தட்டி, மெய்ஞான தரிசனம் கிடைக்கும்

Philosophy Prabhakaran said...

@ Riyas
// மனசு அதிக புத்தகங்கள் வாசிக்க சொல்கிறது..
பொருளாதாரம் முறைத்துப்பார்க்கிறது..

இணையத்தில் ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்.. //

லைப்ரரிகள் இருக்கிறதே நண்பா...

Philosophy Prabhakaran said...

@ ஷர்மி
// நான் நெனைக்கற fairy புத்தகத்தைத் தானே சொல்றீங்க.. எனக்குப் புரிஞ்சுடுச்சு.. ஹீ..ஹீ.. //

ஆமா மேடம்... அதே புத்தகம் தான்...

Philosophy Prabhakaran said...

@ cheena (சீனா)
// அட - புத்தகம் வாங்கறதுன்னா இவ்ளோ கஷ்டமா - அதான் நான் வாங்கறதே இல்ல - ஹா ஹா ஹா //

நீங்க சும்மாக்காட்டி சொல்றீங்க...

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// menas are from mars, womens are from venus நர்மதா பதிப்பகம் வெளியிட்டதுன்னு நினைவு. //

தமிழ்லயா...

// சாருவோட நாவல் ஒண்ணை (தெரியாத் தனமா) படிச்சுட்டு அடுத்த ரெண்டு நாள் கொலவெறியோடதான் நான் திரிஞ்சேன். நீங்க சொன்ன மாதிரி சேர்ந்தாப்போல ரெண்டு கதை படிச்ச நிச்சய சைக்கோதான்! //

நானும் அப்படித்தான் இருக்கேன்... ஆனாலும் எக்சைல் படிக்கப்போகும் நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்...

// காதல்ன்னா சங்கர்நாராயணனா? அடடா... காதலுக்கு மொத்தக் குத்தகைதாரரான தபூ சங்கரோட புக்ஸ் எதுவு்ம் தோணலையாப்பா உங்களுக்கு? //

அது முதல்முறை ப்ரோபோஸ் பண்ணும்போது தான் பொருத்தும்...

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// அன்பரே நீங்கள் கேட்ட நான்காவது புத்தகம் இங்கே இருக்கிறது ஆன்லைனில் வாங்கி கொள்ள கிளிக்குங்கள் கீழேFLIPKART //

தகவலுக்கு மிக்க நன்றி பிரேம்...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// சாரு பொத்தவம் படிக்காமே நீயெல்லாம் எப்பிடிய்யா எலக்கியவாதி ஆவ முடியுன்றேன் :))) //

ஆகட்டும்ண்ணே... நானும் ஆட்டோவை ஸ்டார்ட் பண்றேன்...

Philosophy Prabhakaran said...

@ சாகசன்
// அடப்பாவிகளா , கீழ்பாக்கம் போறத இப்பிடியா பப்ளிகுட்டி பண்ணுவீங்க ?? //

கீழ்பாக்கமெல்லாம் கிடையாது நேரா ஏர்வாடி தான்...

// உன் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு பிரபாகரா //

க.க.க.போ...

// உள்ளார விட்டாங்களா ?? //

ராஜ மரியாதை...

Philosophy Prabhakaran said...

@ கோகுல்
// நினைவில் வைச்சிக்கிறோம் பிரபா,எப்ப கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க.அப்புறம் இன்னொரு விஷயம் இதெல்லாம் எனக்கும் சீக்கிரம் தேவைப்படும்.சேந்து திருடுவோமா? //

உங்களுக்கும் வேணும்ன்னா சீக்கிரமா திருமணம் பண்ணிக்கோங்க... ஏற்கனவே ஆகியிருந்தால் இன்னொரு முறை பண்ணிக்கோங்க...

Philosophy Prabhakaran said...

@ Kumaran
// எனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் எல்லாம் இல்லிங்க சார்..வாரத்துக்கே நாலு ஐந்து படங்கள்தான் பார்க்கவே முடியுது..நல்ல பகிர்வு..நன்றி. //

வாரத்துக்கு நாலஞ்சு படம்ன்னு சொல்றீங்க... ஆனா ரொம்ப நாளா சீக்ரட் விண்டோ விளம்பரம் தான் போடுறீங்க...

Philosophy Prabhakaran said...

@ இந்திரா
// புத்தக போதை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும். எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படிக்கும் சிலர்.. தேர்ந்தெடுத்துப் படிக்கும் சிலர்..
குறிப்பிட்ட வகைகளையே படிக்கும் சிலர்..
இந்த போதை எனக்கும் உண்டு. பயணங்களில் அதிகம் படிப்பேன். கடைசியில் கழுத்து வலி வந்து, கொஞ்ச நாளைக்கு புத்தகத்திற்கு தடா போட வேண்டியாகிவிட்டது. //

ஆமாம் மேடம்... மனசு சந்தோஷமா இருந்தா எந்தமாதிரியான புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்கலாம்...

// இப்ப என்ன சொல்ல வரேன்ன்னா.... ம்ம்ம்...
பதிவு நல்லாயிருந்துச்சுங்க.. ஹிஹிஹி.. //

நன்றி மேடம்...

Philosophy Prabhakaran said...

@ கலை
// ayyoooooooo semak comedyyyyyyyyyy //

மேடம் நீங்க என்னை வச்சு பயங்கர காமெடி பண்றீங்க... இதுக்கு அனானிகளே பரவாயில்லை...

// neengalam padips aa ...bookulaam vaangi padippingalaa...

naangalam paadaputhagame padikka maatomeeeeeeeeeeeeee //

நாங்களும் பாட புத்தகங்களை படிச்சதில்லை...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா பவர்ஸ்டார் நடிக்கும் ஆனந்த தொல்லை வந்திடும். அதையே புத்தகமா எழுதி கொடுத்திடலாம்........ //

சூப்பர் ஐடியா... ஆனா ஒன்னு, க்ளைமாக்ஸை ஆரம்பத்துலயும் ஹீரோ இன்ட்ரோவை கடைசியாவும் எழுதணும்... அப்பத்தான் கிறுக்குபயலுவ பின்நவீனத்துவம்ன்னு ஒத்துக்குவாங்க...

// அவங்களுக்கு அனேகமா புத்தகம் படிக்கவெல்லாம் நேரம் இருக்காதுன்னுதான் யாரும் சொல்லல போல...... //

அதுவும் சரிதான்... ஆனா ஒரு அறுபது நாளைக்கு அப்புறம் படிப்பாங்க...

// இது யாரு சார்? //

யாரோ புது எழுத்தாளராம்... இப்பதான் ஆளாளுக்கு புக் போட ஆரம்பிச்சிட்டாங்களே...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// ஹா ஹா ஹா. ஒரு புத்தகம் வாங்குறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? //

ஆமாம் தல...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// பாஸ், தமிழ்மகனின் “ஆண்பால் பெண்பால்” வாங்கிக் கொடுங்க... ரெண்டு விஷயம் நடக்கும்...

1. ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுக்குவாங்க
2. விவாகரத்து!! :( அவ்ச்ச்!! //

வாங்கிடுறேன்... ஒரு புத்தகமெல்லாம் என் காதலை பிரிக்க முடியாது...

Philosophy Prabhakaran said...

@ Chilled Beers
// menas are from mars, womens are from venus இது இணையத்தில் download செய்து கொள்ளலாம் //

ஆமாம் ஆங்கில புத்தகங்கள் பெரும்பாலும் இணையத்திலே கிடைக்கின்றன...

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// அதான் நம்ம காதல் மன்னன மாமா "பாரு புழுஞ்சுதா" புத்தகம் எதுனா பரிசளிக்க வேண்டியதுதானே?ஹீ ஹீ ஹீ!(சும்மா உம்மா காதலுக்கு வில்லனாகலாம்னு ஒரு நப்பாசைதான்) //

தல... நான் லவ் பண்றதுக்கு கேட்டேன்... எதுத்த வீட்டு ஆண்ட்டியை உஷார் பண்றதுக்கு கேட்கலை...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// என்ன ஒரு குறைன்னா பக்கா சைவமா இருந்துச்சா... அதான். //

வாரத்துல ஏழு நாளும் அசைவம் சாப்பிட்டா நல்லா இருக்காது தல...

Philosophy Prabhakaran said...

@ விஜயன்
// 15-2-2012 ஆனந்த விகடனில் ஒரு புத்தகம் பற்றிய விமர்சனம் படித்தேன் அது உங்கள் காதல் புத்தகங்கள் பற்றிய தேடலுக்கு தீனியாக அமையும் என்று நம்புகிறேன்"How to make anyone Fall in love with you"85 proven techniques for success
எழுதியது "Leil Lowndes" //

பரிந்துரை செய்தது மட்டுமில்லாமல் மெயிலாகவும் அனுப்பிவிட்டீர்கள்... மிக்க நன்றி விஜயன்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// தேகம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை.. ஜெய்மோகனின் காந்தி , அன்ன ஹசாரே புத்தகங்கள் படியுங்கள்.. சாத்வீகமாக , உள்ளொளியை தட்டி, மெய்ஞான தரிசனம் கிடைக்கும் //

பதிவின் கடைசி வரியை படிக்கவும்...

Vijayan Durai said...

தற்காலத்தில் புத்தக பிரியர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டாதாக தோன்றுகிறது அண்ணா...தங்களை போன்ற வாசிப்பை நேசிக்கிற ஒருவரை சந்திததில் மகிழ்ச்சி,(சில புத்தகங்களை வாசிக்க மனமிருக்கு, வாங்க பணமில்லை என்ன பண்றது... :-)

சம்பத்குமார் said...

உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்

பல்சுவை பதிவர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் சாமீ...!

துரைடேனியல் said...

நான் ஒரு புத்தகப்பழு பிரபா! என்னுடைய வாழ்க்கையில் பெரும்பகுதி லைப்ரரியிலேயே கழிந்திருக்கிறது. பொழுதுபோக்குகள் என்றால் முதல் இடம் புத்தகங்கள்தான் எனக்கு. என்னுடைய மிகச்சிறந்த நண்பர்கள் என்னுடைய அலமாரியில்தான் இருக்கிறார்கள். யோவ் பதிவுக் கமெண்ட் போடாம சுயபுராணமான்னு நீங்க முறைக்கிறதுது தெரியுது. உங்க டேஸ்டுடலாம் பார்த்து ஆச்சர்யா இருக்குது தல. (?!!!!...!)

pshychic pshychartist said...

konjam kuda yosikama...unakku aal irukkunu sollita parthiya I lik dat positive thinkin of ur's :)

pshychic pshychartist said...
This comment has been removed by the author.