11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 comments:

Anonymous said...

பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன். // எனக்கும் அப் புத்தகத்தை வாசிக்க வேண்டும், இணையத்தில் வாங்க முடியுமா?! மற்ற பகிர்வுகள் மிக அருமை சகோ. குறிப்பாக சுஜாதாவின் நாவல் மற்றும் ரம்யா நம்பீசனின் பாடல் பற்றிய குறிப்பு. அழகான திறமையான பெண்களைப் பார்த்தாலே வியக்கின்றேன், அவர்களைக் கட்டும் கணவான்கள் பெரும்பாடு படுவர், ஈகோ இல்லாத ஆள் எனில் நிச்சயம் அவன் வாழ்க்கை ஜெயமே!!!

வவ்வால் said...

பிரபா,

ஆரம்பம் ...மீண்டுமா? எதையும் தாங்கும் இதயம் அவ்வ்!

நல்லவேளை ஆரம்பம் -ஒரு மீள்ப்பார்வைனு மறுபடியும் விமர்சனம் செய்யாம வுட்டீர் ,தமிழகம் பிழைத்தது :-))
---------------

காமிக்ஸ்லாம் படிக்கிற பழக்கம் உண்டா, இந்த ஜே.கே டைப்ல ஒரு பைலட் -ஜான்னு பேருல முன்னர் தமிழ் மொழிமாற்ற காமிக்ஸ் வரும்.

சத்யராஜ் நடிச்ச ஏர்போர்ட் படம் ,ஒரு மலையாளப்படத்தின் ரிமேக், இயக்குனர் கூட மலையாளி தான்.

Philosophy Prabhakaran said...

விவரணன்,

ஆன்லைனில் அன்னாரின் புத்தகங்களை வாங்க :-
http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=3658

http://www.tamilnool.com/keyboard_search/field_list.php?field=Author&q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D

பதிப்பகத்தாரிடம் Hard Copy இருப்பது சந்தேகம் தான்... முயற்சித்து பார்க்கவும்...

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை... சின்ன வயதில் இரும்புக்கை மாயாவி ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்... அவ்வளவே...

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தேன்...

Ganesh kumar said...

லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. அதே அதே பிரபானா கொக்கா...

பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன். பிரபா..வர்கீஸ் பத்தின படமான தலப்பாவு பார்த்துருங்க...

http://geethappriyan.blogspot.com/2013/01/thalappavu-2008.html

கணேஷ்குமார்.ராஜாராம்.

Prabu M said...

வணக்கம் பிரபா!
நீண்ட நாள் கழித்து உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்!
ஆரம்பம் - குட்கா முகேஷ் வராதது!
கமலின் பல்டி மன்றம்!
மிஷ்கினின் கதை சொல்லும் சீன் என்று நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தையும் ரசித்தேன்.....
நன்றி....

அனுஷ்யா said...

கமல் என்ற நடிகர்தான் மிச்சமிருக்கிறார்... மனிதர், மானஸ்தர் எல்லாம் செத்து நாட்கள் பல ஓடியாகிவிட்டது... விஸ்வரூப சர்ச்சையிலேயே மனிதர் சினிமா தவிர்த்த பொது வாழ்விலும் எவ்வளவு பெரிய நடிகர் என்று அம்பலமானது... அன்றைய நாளில் எழுதிய வரிகளை மீண்டும் இங்கு பிரசுரிக்கிறேன்...

/கமலுக்கு முஸ்லிம்களின் மூக்கை எப்போதும் வலிக்காமல் சுரண்டிப்பார்க்க வேண்டும்.அதற்காகவே கரம்சந்த் லாலாவை புதியதாய் உருவாக்குவார். "அந்த கூட்டத்துல எத்தன லால் கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் இருந்தான்னு எனக்கு தெரியல..ஆனா எந்த கிருஷ்ணனும் முன்னாடி வரவே இல்ல மிஸ்டர் மாறார்" என்று தி வெட்னஸ்டே படத்தில் இல்லாத ஒரு குட்டி கதையை உள்ளே செருகுவார். தர்காவில் தஞ்சம் புகுந்ததால்தான் சுனாமியில் இருந்து தப்பித்ததாய் காட்டுவார்.. தன்னுடைய நாத்திக கருத்து திணிப்பில் இருந்து விலகி மண்டியிட்டு தொழுகை செய்வார்..

ஆனால் அதே படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று காமன்மேன்களின் மனதில் கொதிக்க கொதிக்க எரியும் நெருப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவார். வயது முதிர்ந்த இஸ்லாமிய நாகேஷின் மூத்த மகனாக இவரும் கடைசி மகனாக ஒரு நாலு வயது குழந்தையையும் காட்டுவார்.. கலைத்தாயின் இந்த கடைசி புதல்வன் அமெரிக்கனுக்கு குண்டி கழுவ முல்லா ஓமரையே அமெரிக்க துதிப்பாட வைப்பார். சம்பந்தமே இல்லாமல் ஒரு ரா அதிகாரி MI - 6 ற்கு உயிரை கொடுத்து பணிசெய்து கிடப்பார்.. திடீரென secularism பற்றி பிதற்றுவார். சம்பந்தமே இல்லாமல் போராளிகள் "i support kamalhaasan" என்ற மகா வேள்வியை தொடங்குவார்கள்.. சர்ச்சை விளம்பரமும், இரு துளி கண்ணீர் நாடகமும் நிகழ்த்திவிட்டு படத்தை வெளியிட்டு மூன்று நாளில் கல்லாக்கட்டிவிட்டு அமைதியாவார்.. போராளிகள் மேலும் தொடர்வார்கள். இந்த படத்தை எதிர்ப்பவர்கள்தான் தீவிரவாதிகள் என்று முன்மொழிந்து அவர்களே வழிமொழிவார்கள்..எதிர்ப்பு தெரிவிக்க நினைக்கும் இஸ்லாமியர்களையும் அவர்களது கருத்துக்களையும் கமல்ஹாசனின் கிலேசெரின் காலி செய்துவிடும்.. இஸ்லாமிய நண்பர்கள் இன்னும் அன்னியப்படுவார்கள்..

கேட்ட கதையோ புனைவோ இல்லை..... என் நெருங்கிய நண்பன் இஸ்லாமியன் என்ற காரணத்தால் கோவையில் தங்க இடம் கிடைக்காமல் சுற்றியதை விவரித்த அழுத்தம் இன்றும் அகலவில்லை.. பாபர் மசூதியை இடிப்பை மையப்படுத்தி ஹிந்து வெறியர்களை தோலுரிக்க இந்த so called boldmanற்கு திராணி இருக்கிறதா? திராணி இருந்தாலும் எண்ணம் இல்லை.. ஏனெனில் கமல் ஒரு சந்தர்ப்பவாத நாத்திகவாதி..மனதில் இன்னும் அவருடைய வெள்ளை நூல் இன்னும் இறுக்கமாக குறுக்கே தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது.. "மாயா, த்தேவனா இருக்கிறதா?இல்ல மனுஷனா இருக்கிறதா?ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ" எனும் வசனத்தை யோசிக்காமல் எழுதுபவரல்ல கமல். தானும் தன்னுடைய படைப்புகளும் அணுஅணுவாய் கவனிக்கப்படுவதை நன்கு உணர்ந்தவர் என்பதாலேயே சில விஷயங்களை நாசூக்காக சொல்லி பழக்கப்பட்டுவிட்டார்.. துளியும் சமுதாய சிந்தனையும் பொறுப்பும் இல்லாத ஒரு கோணங்கியான கமலை பார்த்துக்கொண்டு ஒரு மழுங்கிய ரசினாக "வாவ் வாவ்" என்றோ 'ஸ்லீக்கான ஸ்டோரி டெல்லிங்" என்றோ கொண்டாட முடியவில்லை...//

அனுஷ்யா said...

ஓநாயிலும் முகேஷ் வரவில்லை பிரபா.. கொடூரமான வில்லன் என்ற சித்தரிப்பிறு சிகரட் அவசியம் என்ற சினிமா இலக்கணம் இப்படிதான் உடைபட வேண்டும்...

அனுஷ்யா said...

ஜேகே அறிமுகத்திற்கு நன்றி... தலைவரை வாசிப்பதற்குள்ளேயே வயசாயிடும் போல...

ஜீவன் சுப்பு said...

// ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !//

நிச்சயமாக . ஒருவேளை கமல் நடித்திருந்தால் அது ஓவர் ஆக்டிங்காக ஆவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு .

அனுஷ்யா said...

kamal may be an exception..

surely vikram and surya,the two commonly portrayed as the good actors of the current era, ll fail at that... ajith and vijay are miles away.. dhanush probably cud come closer

Ponmahes said...

அதான் பட்டிமன்றத்தோட கடைசில விஸ்வரூபம்-2 ஐ commercialize பண்ணுறதுக்குத் தான் இந்த பட்டிமன்றம் ன்னு ஒத்துகிட்டார் ..ல..அப்பறம் என்ன....அத ஜெயா டிவி ல பேசுனா என்ன ...கலைஞர் டிவி ல பேசுனா என்ன....???

Philosophy Prabhakaran said...

நன்றி கணேஷ்...

தலப்பாவு பதிவு ரொம்ப பெருசா இருக்கு பொறவு படிக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

நன்றி பிரபு...

Philosophy Prabhakaran said...

மயிலன்,

விஸ்வரூபம் குறித்த உங்கள் கட்டுரையை நான் அப்போதே வாசித்திருந்தேன்... அதில் எனக்கு கொஞ்சம் உடன்பாடு இல்லையென்பதால் (அப்போது) கருத்து சொல்லாமல் விட்டுவிட்டேன்... இப்போதும் சில விஷயங்களில் உடன்பாடு இல்லைதான்... இருப்பினும் கமலுக்காக எல்லாம் தம் கட்டுவதில் விருப்பமில்லை...

Philosophy Prabhakaran said...

நன்றி ஜீவன் சுப்பு...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ்,

நான் பட்டி மன்றம் முழுமையாக பார்க்கவில்லை... ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு எரிச்சல் தாங்காமல் மாற்றிவிட்டேன்...

'பரிவை' சே.குமார் said...

பிரபா ஒயின்ஷாப் தூக்கலாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்.

கோகுல் said...

லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை./// என்னாலும் தான் ,அதான் இப்படி ஸ்டேட்டஸ் போட்டேன்,\\\லட்சுமிமேனனை இன்னும் இரண்டு வருடம் அல்லது ஐந்தாறு படங்களிலாவது பார்த்தாக வேண்டியிருக்கிறது தமிழ் ரசிகனுக்கு\\\
அப்றமா கொஞ்ச நேரம் கழிச்சுதான் தோணுச்சு லட்சுமிமேனனையெல்லாம் னு போட்டிருக்கனுமென

Philosophy Prabhakaran said...

கோகுல்,

லட்சுமி மேனனை போடணும்'ன்னு தோணாம இருந்தா சரி...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அஜித் நல்ல சாய்ஸ், மிஷ்கினின் பாத்திரம் விக்ரமுக்கு பொருந்தும் நினைக்கிறேன்.