அன்புள்ள வலைப்பூவிற்கு,
கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில், அல்லது பொதுவாகவே வட சென்னை வழித்தடங்களில் செய்யும் பப்ளிக் நியுசன்ஸை பார்க்கும்போதெல்லாம் வெறுப்பாக இருக்கும். மாஸ் ஹீரோக்களின் படங்களில் வருவது போல யாராவது வந்து நாலு சாத்து சாத்த மாட்டார்களா என்று தோன்றும். உண்மையில் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, முனைந்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அப்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றல் வீணாக போகிறதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அது வீணாகவில்லை என்று சமீபத்திய நிகழ்வுகள் சொல்கின்றன. அந்த மாணவர்களை தலை வணங்குகிறேன் !
என்னுடைய மாணவப் பருவத்தில் மொக்கையான ஃபிகர்களை ஏற்றிவிட்டதை தவிர வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறேனா என்று யோசித்துப்பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த சமயம், இறுதியாண்டு மாணவனை மூன்றாம் ஆண்டு மாணவன் கத்தியால் குத்திவிட்டான். இருவரும் பொறுக்கிகள் தான். ஏதோ பெண்கள் சமாச்சாரம். கத்திக்குத்து வாங்கியவன் செங்கல்பட்டு மருத்துவமனையில். குத்தியவனை வெளியே விட்டால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று பாதுகாப்பாக வைத்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இயல்பிலேயே எங்களுடைய வகுப்பு மட்டும் மிகவும் கண்டிப்பானது என்பதால் நாங்கள் மட்டும் வகுப்பறைகளில் அமர்ந்துக்கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென, எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்த மற்றொரு வகுப்பை சேர்ந்த மாணவன், “த்தா... நீங்கள்லாம் உள்ளேயே இருந்து கிளாஸை கவனிங்கடா பொட்டைங்களா...” என்று ஷங்கர் பட பொதுஜனம் மாதிரி கத்திவிட்டு போனான். அப்போது வந்ததே என் சகாக்களுக்கு ரோஷம். எல்லோருமாக சேர்ந்து வகுப்பறையை விட்டு வெளியேறினோம். அப்புறம் எல்லோருமா சேர்ந்து கம்பியூட்டர் லேபை அடித்து நொறுக்கியது, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுத்து எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியது, டாடா சுமோவில் அடியாட்கள் துரத்தியது எல்லாம் வரலாறு. த்தூ...! ஆனால் அன்றைக்கு எல்லோருடன் சேர்ந்து நானும் வகுப்பறையை விட்டு வெளியே வந்திருக்கக்கூடாது. அட் லாஸ்ட் நானும் அந்த பொறுக்கி, பன்னாடை கூட்டத்தில் ஒருவன்தான் என்பதை மிகுந்த அவமானத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.
இந்த வார மொக்கைக்கு ஆச்சு'ன்னு தான் கருட பார்வை படம் பார்க்க போனேன். அருமையான கதைக்கரு. தேசிய நெடுஞ்சாலையில் ‘சாலை விடுதி' என்ற லாட்ஜ் அமைந்திருக்கிறது. ஒரு பெருமழையிரவிற்காக சிலர் அங்கே தங்கிட நேருகிறது. மொத்தம் பதிமூன்று பேர். ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். சிறுவன் உட்பட சிலருடைய சடலங்களும் காணாமல் போகின்றன. எஞ்சியவர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுகின்றனர். கடைசியாக சமூக சேவகி மட்டும் ஒரு காரில் தப்பிக்கிறார். போலீஸ் விசாரணை துவங்குகிறது; பதினோரு சடலங்கள் கிடைக்கின்றன. சிறுவன் உயிரோடு இருக்கிறான்; சமூக சேவகியை கொல்வதற்காக அவளுடைய வீட்டுக்கு செல்கிறான். கொன்றானா ? எதற்காக எல்லோரையும் கொல்கிறான் ? என்பதைச் சொல்லி இரண்டாம் பாகத்திற்கு வழியமைத்து விட்டு படத்தை முடிக்கிறார். சூப்பர் படம் என்று சொல்ல முடியாது. லோ-பட்ஜெட் படங்களுக்கென்றே உரித்தான மொக்கையான நடிகர்கள், காட்சியமைப்புகள் என்று நிறைய குறைகள் இருக்கின்றன. பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியில் எல்லாப் பிணங்களின் கண் இமைகளிலும் அசைவு தெரிகிறது. எனினும் மற்ற லோ-பட்ஜெட் குப்பைகளோடு ஒப்பிடும்போது ஓகே ரகம்.
பழைய ஆனால் சூடான செய்தி. சதீஷ் நாராயணன்’னு நம்மாளு ஒருத்தரு. ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்தவர். அவருடைய மனைவியின் பெயர் ரஜினி (பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல !). ரஜினிக்கு கணவர் மீது சந்தேகம். கணவர் தனக்கு சொந்தமான பொருளை மற்றவருக்காக உபயோகித்து விடக்கூடாது என்றெண்ணிய ரஜினி, வாழைப்பழத்தில் தீ வைத்துவிட்டார். விளைவு - வாழை தோப்பே எரிஞ்சுடுத்து ! இருபது நாட்கள் உயிருக்கு போராடிய சதீஷ், உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது அது மட்டும்தான் எரியும்'ன்னு நெனச்சேன் என்று அப்பாவியாக பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி.
இந்த சம்பவத்தை கேள்விப்படும்போது எனக்கு ஒரு பாரதியார் கவிதை நினைவுக்கு வருகிறது,
அப்புறம் நடந்ததுதான் டுவிஸ்ட். இரண்டு ஆண்டுகள் கழித்து, வழக்கு அது பாட்டுக்கு ஒரு பாதையில் போய் கடைசியில் சதீஷ் இருபது வருடங்களாக மனைவியை டார்ச்சர் (தினத்தந்தி பாஷையில் செக்ஸ் கொடுமை) செய்தார். அதன் விளைவாக தான் மனைவி தீ மூட்டினார் என்று கேஸ் முடிக்கப்பட்டு, ரஜினி ரிலீஸ் ஆகிவிட்டார்.
கற்றது தமிழ் வணிகரீதியாக தோற்றதால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராம் மீண்டு(ம்) வந்திருக்கிறார். என்னதான் பீட்டர் விட்டாலும் ராம் மற்றும் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் கெளதம் மேனனை பாராட்டியே ஆகவேண்டும்.
அடுத்து வருவது: பரதேசி

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் !
வெந்து தணிந்தது காடு- தழல்
மூப்பினில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
அப்புறம் நடந்ததுதான் டுவிஸ்ட். இரண்டு ஆண்டுகள் கழித்து, வழக்கு அது பாட்டுக்கு ஒரு பாதையில் போய் கடைசியில் சதீஷ் இருபது வருடங்களாக மனைவியை டார்ச்சர் (தினத்தந்தி பாஷையில் செக்ஸ் கொடுமை) செய்தார். அதன் விளைவாக தான் மனைவி தீ மூட்டினார் என்று கேஸ் முடிக்கப்பட்டு, ரஜினி ரிலீஸ் ஆகிவிட்டார்.
கற்றது தமிழ் வணிகரீதியாக தோற்றதால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராம் மீண்டு(ம்) வந்திருக்கிறார். என்னதான் பீட்டர் விட்டாலும் ராம் மற்றும் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் கெளதம் மேனனை பாராட்டியே ஆகவேண்டும்.
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று...!
அடுத்து வருவது: பரதேசி
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|